World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

Japan sinks into recession

ஜப்பான் பொருளாதார பின்னடைவில் மூழ்குகிறது

By Peter Symonds
19 November 2008

Use this version to print | Send this link by email | Email the author

திங்களன்று வெளிவந்த புள்ளிவிவரங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாம் காலாண்டிலும் எதிர்மறை வளர்ச்சியை காட்டிய வகையில், ஜப்பானின் பொருளாதாரம் உத்தியோகபூர்வமாக 2001ல் இருந்து முதல் தடவையாக பொருளாதார பின்னடைவிற்குள் நுழைந்தது. தரவுகள் ஜூலை செப்டம்பர் காலத்தில் ஆண்டுவிகிதத்தில் 0.4 சதவிகித குறைப்பை காட்டியுள்ளது மட்டுமின்றி, ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான திருத்தப்பட்ட குறைப்பாக 3 சதவீதத்தில் இருந்து 3.6 சதவீதமாக செய்துள்ளது.

உலகின் இரண்டாம் பெரிய பொருளாதாரமான ஜப்பான் இத்தகைய பொருளாதாரப் பின்னடைவிற்குள் நுழையும் சமீபத்திய நாடு ஆகும். கடந்த வாரம் ஹாங்காங், ஜேர்மனி, இத்தாலி மற்றும் யூரோப் பகுதிகள் அனைத்தும் இரண்டாம் காலாண்டில் தொடர்ச்சியாக எதிர்மறை வளர்ச்சியை அறிவித்தன. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 2008 கடைசிக் காலாண்டில் இத்தகைய வேதனைதரக்கூடிய சித்திரத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானிய அரசாங்கம், பொருளாதாரப் பகுப்பாய்வாளர்கள் மற்றும் IMF, உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புக்கள் அனைத்தும் அடுத்த ஆண்டும் பொருளாதாரப் பின்னடைவு தொடரும் என்றுதான் கணித்துக் கூறியுள்ளன. பொருளாதார மற்றும் நிதிக் கொள்கை மந்திரியான Kaoru Tosano நேற்று செய்தி ஊடகத்திடம் ஏப்ரல் 2009ல் தொடங்க இருக்கும் நிதியாண்டு பற்றி தான் "அதிக நம்பிக்கை" கொண்டிருக்கவில்லை என்று கூறினார். "உள்நாட்டிலோ, வெளிநாடுகளிலோ வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் சாதகக் காரணிகள் எதையும் நான் காணவில்லை" என்று அவர் கூறினார்.

Dai-ichi Life Research Institute ல் தலைமைப் பொருளாதார வல்லுனராக இருக்கும் Hideo Kumano நியூ யோர்க் டைம்ஸிடம் தெரிவித்தார்: "உண்மையில் இருண்ட காலம் நம்மை இன்னும் வந்தடையவில்லை. பங்குச் சந்தைகள் ஒரு உறையவைக்கும் விளைவை ஏற்படுத்த உள்ளன. ஆண்டு இறுதி சில்லறை விற்பனை மிகப் பரிதாபமாக இருக்கும்." அக்டோபர் மாதம் சர்வதேச நிதிய நெருக்கடியின் முழு பாதிப்பு இனிதான் உத்தியோகபூர்வ பொருளாதாரத் தகவல்களில் பிரதிபலிக்கும்.

பொருளாதாரத்தில் மிக ஊக்கம் வாய்ந்த பிரிவாக இருக்கும் ஜப்பானிய ஏற்றுமதி நிறுவனங்கள் சீனா, அமெரிக்க, ஐரோப்பா ஆகியவற்றில் குறைந்துவரும் பொருளாதாரத் தன்மையினாலும் யென் மதிப்பு கூடுதலினாலும் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக செப்டம்பர் இறுதியில் இருந்து யென் 9.4 சதவிகிதம் கூடுதலான மதிப்பை அடைந்துள்ளது.

உத்தியோகபூர்வ புள்ளி விவரங்களின்படி, ஜப்பானிய ஏற்றுமதிகள் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் முந்தைய காலாண்டில் 2.6 சதவிகிதம் உயர்ந்ததையும்விட 0.7 சதவிகிதம் அதிகமாயிற்று. ஆனால் அக்டோபர் மாதம் முதல் 20 நாட்களுக்கான ஏற்றுமதி துவக்கப் புள்ளிவிவரங்கள் முந்தை ஆண்டு இதே காலத்தோடு ஒப்பிடும்போது 9.9 சதவிகிதம் தீவிரச் சரிவைக் காட்டியுள்ளன.

முக்கிய கார் மற்றும் மின்னணு நிறுவனங்கள் இந்த ஆண்டிற்கான தங்கள் இலாபக் கணிப்பை திருத்திக் குறைத்துள்ளன. இம்மாதத் துவக்கத்தில் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான டோயோடோ அடுத்த மார்ச் மாதம் முடியவிருக்கும் நிதி ஆண்டில் நிகர இலாபங்களில் 74 சதவிகிதம் குறையக்கூடும் என்று முன்கணித்துக் கூறியுள்ளது. உள்நாட்டு, உலக விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்நிலை தோன்றியுள்ளது.

பெருநிறுவன மூலதனச் செலவு --வணிக உணர்வின் ஒரு அடையாளம்-- கடைசிக் காலாண்டில், மூன்றாவது தொடர்ச்சியான சரிவு என்ற விதத்தில் 1.7 சதவிகிதம் குறைந்தது.

கடந்த வாரம் பொருளாதாரம் மெதுவாக இயங்குவதைப் பற்றிக் காட்டிய மற்ற குறிப்புக்களில் machine tool orders எனப்படும் இயந்திர கருவிகளுக்கான தேவைகளில் 40.4 சதவிகித சரிவும், அக்டோபர் மாதம் பெருநிறுவன திவால்களில் 13.4 சதவிகித அதிகரிப்பும் அடங்கும். அக்டோபர் மாதம் பட்டியிலிடப்பட்ட நிறுவனங்களில் எட்டு திவாலாயின. இவற்றுள் ஏழு நிறுவனங்கள் சொத்துக்கள் மற்றும் கட்டுமானத் துறைகளில் இருப்பவை ஆகும். டோக்கியோவில் புதிய வணிக கட்டிடங்களின் வாடகை ஆறு ஆண்டுகளில் முதல் தடவையாக வீழ்ச்சியுற்றன.

ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 சதவிகிதம் என்று இருக்கும் நுகர்வோர் செலவினம் ஜூலை செப்டம்பர் மாதத்தில் தொடர்ந்து கூடுதலாயிற்று; ஆனால் இது 0.3 சதவிகிதம் என்றுதான் இருந்தது. வருங்காலத்தைப் பற்றிய அச்சத்தில், தொழிலாளர்கள் செலவழிப்பதற்குத் தயக்கம் காட்டுகின்றனர்.

"மிக மோசமான குறைந்த நிலையில்" இருக்கும் நுகர்வோர் நம்பிக்கை "ஒரு ஆழ்ந்த அவநம்பிக்கைத் தன்மையை" காட்டுகிறது என்று Time சுட்டிக்காட்டியுள்ளது. "பல மாதங்களாக செய்தித்தாள்கள் "வீடுகளுக்கும் திரும்பலாம்" என்பதற்கான பல வழிவகைகளை நுகர்வோருக்குக் கூறும் வகையிலும், பொருளாதார கீழ்நோக்குத் தன்மையில் இருந்து அவர்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் கூறிவருகின்றன; இந்த ஆலோசனைகளில் இத்தாலிய உணவுவிடுதிக்கு செல்வதற்குப் பதிலாக pasta தயாரிக்கும் இயந்திரத்தை வாங்குதல், குடும்பத்தோடு வெளியே சென்றுவருவதைவிட வீட்டிலேயே சிறுவிளையாட்டுக்களில் ஈடுபடுவது ஆகியவை உள்ளன" என்று ஏடு எழுதியுள்ளது.

வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் மேற்கு ஜப்பானில் இருக்கும் ஒரு இல்லத்தரசியான Kaori Inouse இடம் உரையாடியது; அவ்வம்மையார் தன்னுடைய கணவரின் வருமானம் பல ஆண்டுகளாக வளர்ச்சி அடையவில்லை என்றும் இதையொட்டி சிறு குழந்தைகள் பெரிதாக வளர்ந்துள்ளமையினால் பொருட்களை வாங்குவது அதிக செலவைக் கொடுக்கிறது என்றார். பயன்பாட்டுக் கட்டணங்களில் சேமிப்பு நடத்துவதற்காக தான் பழைய நீரைப் பயன்படுத்தி துணிகளை வெளுப்பதாகவும், மிகக் குறைவான விலையில் மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு மூன்று பெரிய கடைகளில் அலைவதாகவும் கூறினார்.

"எங்களின் சேமிப்புக்கள் உள்ளன என்பது உண்மையே; ஆனால் இல்லை என்று பாசாங்கு செய்கிறேன்; ஏனெனில் என்ன நடக்கும் என்று கூறுவதற்கு இல்லை. இப்பொழுது பொருளாதாரம் மீண்டும் மோசமாகிவிட்டது. எனவே இன்னும் அதிகம்தான் சேமிக்க முயல்கிறோம்."
பரந்த அளவில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கைத்தன்மை 1990 களில் பங்குகள் மற்றும் சொத்துக்களின் உயர் ஏற்ற நிலை சரிந்ததை அடுத்து பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்ட காலத்தின் விளைவாக உள்ளது. பல நேரமும் 1990 களின் இழந்த தசாப்தக் காலம் என்ற பலமுறையும் குறிக்கப்படுவதில் ஜப்பான் பொருளாதாரப் பின்னடைவு நிலைக்கும் நீண்ட கால குன்றிய வளர்ச்சிக்காலத்திற்கும் இடையே ஊசலாடியது. 2001ல் இருந்து குறைந்த விரிவாக்கம் என்பது ஜப்பானில் தற்பொழுதைய மிகப் பெரிய வணிகப் பங்காளியான அண்டை நாடான சீனாவின் விரைவான பொருளாதார வளர்ச்சியால் உந்துதல் பெற்றது.

OECD கணிப்புக்களை ஒட்டி, கடந்த மாதம் வேலையின்மை விகிதம் 4.1 சதவிகிதம் என்று இருந்தது. வேலையின்மை பற்றி ஜப்பானின் கடுமையான வரையறை கருத்திற்கொள்ளப்பட்டால், உண்மையில் வேலையின்மை பற்றிய புள்ளிவிவரம் அதிகமாகத்தான் இருக்கும், வரவிருக்கும் மாதங்களில் இன்னும் அதிகமாகும் என்றுதான் கூறவேண்டும்.

இம்மாதத்தின் முற்பகுதியில் டோயோடோ தான் 3,000 ஒப்பந்தத் தொழிலாளர்களை மார்ச் கடைசியில் இருந்து பணிக்கு வரவேண்டாம் எனக் கூறவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. தான் 1,500 தற்காலிக வேலைகளை வெட்டிவிட இருப்பதாக நிசான் கூறியுள்ளது. வணிகச் செய்தி ஏடான Nihon Keizai துறையில் 10,000க்கும் மேற்பட்ட வேலைக் குறைப்புக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் இருக்கும் என்று கூறியுள்ளது. ஜப்பானிய செமி-கண்டக்டர் தயாரிப்பாளரான Rohm நவம்பர் 7ம் தேதி தன்னுடைய தொழிலாளர் தொகுப்பில் இந்த நிதியாண்டில் 5 சதவிகிதம் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக, அதாவது 1,000 வேலைகளை நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளியன்று சுகாதார, தொழிலாளர் மற்றும் பாதுகாப்பு நல அமைச்சரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் கடந்த 16 மாதங்களில் முதல் தடவையாக ஏராளமான மக்கள் வேலையின்மை காப்பீட்டு நலன்களைப் பெறுவதில் ஏற்றம் இருப்பதைக் காட்டியுள்ளது. இப்பொழுது அதன் மொத்த எண்ணிக்கை 606,000 என்று செப்டம்பரில் உள்ளது --இது ஆகஸ்ட்டை விட 2.6 சதவிகிதம் அதிகமாகும். அமைச்சரகம் 10 மில்லியன் தொழிலாளர்கள் வரை நலன்களுக்கு உரிமை உடையவர்கள் என்றும் ஆனால் அவர்கள் பதிவு செய்யவில்லை என்றும் கூறியுள்ளது.

வேலையின்மை அதிகரிப்பு என்பது ஏற்கனவே இளைஞர்களிடையே பரந்த விதத்தில் உள்ள விரோதப் போக்கு, பெரும் ஏமாற்றம் ஆகியவற்றைத் தீவிரமாக்கும். கடந்த இரு தசாப்தங்களில் ஜப்பானின் வாழ்நாள் வேலை முறை என்பது மோசமாக அரிக்கப்பட்டு, குறைந்த, பகுதி நேர, மற்றும் தற்காலிக வேலைகளில் ஏராளமான இளைஞர்கள் ஈடுபட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட Asahi Shimbun கருத்தாய்வு நாட்டின் உயர்ந்த 100 நிறுவனங்கள் அடுத்த ஆண்டு தாங்கள் தேர்நெடுக்க இருக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கையைக் குறைவாக அல்லது வெறுமே தக்கவைத்துக் கொள்ள இருப்பதாகத்தான் தெரிவித்துள்ளன என்று கூறியுள்ளது; இது இன்னும் அதிக இளைஞர்களை வேறிடங்களில் வேலை நாடுமாறு கட்டாயப்படுத்தும்.

பொருளாதாரச் சரிவு என்பது ஏற்கனவே பிரதம மந்திரி டாரோ அசோ எதிர்கொண்டுள்ள அரசியல் பிரச்சினைகளைக் கூட்டியுள்ளது. செப்டம்பர் மாதம் தாராண்மை ஜனநாயக கட்சி(LDP) தலைவர் பொறுப்பை அவர் எடுத்துக் கொண்டு, பொருளாதாரத்தைச் சரிபடுத்துவதாக உறுதியளித்தார். ஆனால் நிதியக் கொந்தளிப்பிற்கு இடையே அவர் பாராளுமன்றக் கீழ்ப்பிரிவின் முன்கூட்டிய தேர்தல் திட்டங்களை ஒதுக்கி வைக்க வேண்டியதாயிற்று. Asahi Shimbun கருத்துக் கணிப்பு ஒன்று இவருடைய செல்வாக்கு 29.6 சதவிகிதம் சரிந்துவிட்டது என்பதைக் காட்டியுள்ளது; இது கடந்த மாதத்தில் இருந்ததைவிட 13 சதவிகிதம் குறைவாகும்.

பொருளாதாரத்திற்கு ஏற்றம் கொடுக்கும் முயற்சியாக அரசாங்கம் இரண்டாம் ஊக்கப் பொதி ஒன்றை கடந்த மாதம் 5 டிரில்லியன் யென்னிற்கு (அமெரிக்க$ 51 பில்லியனுக்கு) அறிவித்தது. அதே நேரத்தில் ஜப்பானிய வங்கி அக்டோபர் 31ம் தேதி வட்டிவிகிதத்தை குறைந்த அளவான 0.5 சதவிகிதத்தில் இருந்து 0.3 சதவிகிதம் என்று குறைத்தது. நிதி மந்திரி Shoichi Nakagawa செய்தி ஊடகத்திடம் நேற்று அரசாங்கம் இன்னும் அதிக ஊக்கம் தரும் நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்று கூறினார்.

ஊக்கப் பொதி ஏற்கனவே எதிர்க்கட்சியான ஜப்பானிய ஜனநாயகக் கட்சி (DPJ) தற்பொழுதைய பொருளாதாரத்தைப் முன்கூட்டிய தேர்தல்களுக்கு பயன்படுத்த இருப்பதாகக் கூறியதையடுத்து எழுந்துள்ள பூசல்களைக் கொண்டு வந்துள்ளது. மன்றத்தில் மேலவையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கும் DPJ இரண்டு முக்கிய சட்டவரைவுகள் இயற்றப்படுவதை தாமதப் படுத்திக் கொண்டு வருகிறது; இடர்பாடுகளுக்கு உட்பட்டுள்ள வட்டார வங்கிகளுக்குப் பொருளாதார உதவி கொடுப்பது மற்றும் ஜப்பானிய இராணுவ உதவி ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கத் துருப்புக்களுக்கு இராணுவ உதவி அளித்தல் என்பவையே அவை. முதல் ஊக்கப் பொதியை வெற்றிகரமாக துவக்கத்தில் எதிர்த்த முறையில் இப்பொழுது DPJ முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டு, அரசாங்கம் இரண்டாவது கருத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேணடும் என்று வலியுறுத்துகிறது

ஒரு முன்கூட்டிய தேர்தல் வருவதைத் தவிர்க்கவும் தன்னுடைய பொருளாதார நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் வெற்றியடைந்தாலும், அசோ ஆழ்ந்த பொருளாதார அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ளுகிறார். நிக்கேயின் பங்கு குறியீடு மற்றும் ஒரு 2.28 சதவிகிதம் நேற்று சரிந்தது--இந்த ஆண்டு மொத்த இழப்புக்கள் 44 சதவிகிதத்திற்கு மேல் என்று உள்ளன. பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள் மற்றும் இரு காலாண்டுக்காலத்தில் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையில்தான் இருக்கும் என்று கணித்துள்ளனர்; மற்றும் சிலர் இன்னும் கூடுதலான அவநம்பிக்கைத்தன்மையைக் காட்டியுள்ளனர்.

Royal Bank of Scotland இன் தலைமை பொருளாதார வல்லுநராக இருக்கும் Junko Nishioka, டைம் ஏட்டிடம் தான் குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகள் எதிர்மறை வளர்ச்சியைத்தான் எதிர்பார்ப்பதா கூறினார். வலுவிழந்த ஏற்றுமதி, இறக்குமதி தேவைகள் இருக்கையில், "ஜப்பானிய பொருளாதாரத்தில் இரண்டு ஆண்டு என்று தொடுவானத்தை எடுத்துக் கொண்டால் சாதக உந்துதல் ஏதும் இல்லை" என்றார் அவர்.