World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் 

France: Hundreds of thousands strike and march against education cuts

பிரான்ஸ்: கல்வித்துறைக்கான செலவினக் குறைப்பை எதிர்த்து நூறாயிரக்கணக்கானவர்கள் வேலைநிறுத்தம் செய்து அணிவகுப்பு நடத்தினர்

By our reporters
22 November 2008

Use this version to print | Send this link by email | Email the author

பிரான்சிலிலுள்ள அனைத்து ஆசிரியர்களில் அரைவாசிப்பகுதியினர், அதாவது தேசிய பாடசாலை அமைப்பில் உள்ள கிட்டத்தட்ட 400,000 பேர் வேலைநிறுத்தம் செய்தனர்; இவர்களில் 200,000 பேர் கடந்த வியாழனன்று இரண்டு மாதங்களில் நான்காம் நாள் நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான நகரங்களில் தெருவுக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சில தனியார் பிரிவு ஆசிரியர்களும் இதில் பங்கு கொண்டனர்.

French education protests

ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி அரசாங்கம், ஆசிரியர்கள் பதவிகளை குறைப்பது உட்பட பலவற்றில் ஈடுபட்டு கல்வித்துறைக்கான செலவினங்களை வெட்டியிருப்பதை எதிர்த்து கல்வித்துறை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இவர்களுடன் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

2008ம் ஆண்டில் 11,200 ஆசிரியர் பதவிகளை நீக்கியபின், கல்வி மந்திரி Xavier Darcos மற்றும் ஒரு 13,500 பதவிகளை 2009ல் குறைக்கத் திட்டமிட்டுள்ளார். RASED (Les Reseaux d'Aides Specialisees aux Eleves e Difficulte-- சிரமத்தில் உள்ள மாணவர்களுக்கு உதவிசெய்யும் பணி) ல் உள்ள 3,000 ஆசிரியர்களை நீக்கியுள்ளது. குறிப்பாக ஆரம்ப கல்வி ஆசிரியர்களை சீற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. உயர்நிலை பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் பல பாடத்திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள கற்பிக்கும் நேரத்தை குறைத்தது பற்றி கவலை கொண்டுள்ளனர்; இதையொட்டி அரசாங்கம் பதவிகளை அகற்றியுள்ளது.

மிக அதிக ஆசிரியர்கள் அதிக பயிற்சி இல்லாமல் வேலையில் இருக்கிறார்கள் என்ற உட்குறிப்பை காட்டும் வகையில் டார்க்கோஸ் தொடர்ச்சியான அறிக்கைகளை கொடுத்துள்ளார். மழலையர் பள்ளிகளில் பராமரிப்பதற்கு பல்கலைக் கழகப் பயிற்சிக்கு பிறகும் எவ்வித பயிற்சியும் தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்; அங்கு இலவச கல்வி இரண்டு வயதிற்கு முன்பே தொடங்கி விடுகிறது. "உயர்நிலைப்பள்ளி (+2 அல்லது A/L) படிப்பிற்கு பின்னர் குழந்தைகள் தூங்குவதை கண்காணிப்பது, நாப்பிகளை மாற்றுவது ஆகியவற்றிற்கு ஆசிரியர்களுக்கு ஒன்றும் ஐந்து ஆண்டு பயிற்சி தேவையில்லை" என்று அவர் அறிவித்தார்

வியாழக்கிழமை ஆத்திரமூட்டும் வகையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "அங்கு எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர் என்பது பிரச்சினை இல்லை, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் பிரச்சினை. எனக்கு முக்கியமானது ஆசிரியர்களின் எண்ணிக்கை அல்ல, முடிவுகள் என்ன என்பதுதான்" என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

இத்தகைய அறிக்கைகள் சார்க்கோசியின் கொள்கைகளுடன் இயைந்து உள்ளன; 2007ல் ஆசிரியர்களுக்கு வரைந்த கடிதம் ஒன்றில் அவர் எழுதியது: "எண்ணிக்கையை விட தரம் முன்னுரிமை பெற்றிருக்க வேண்டும் என்று நான் நினைக்கும் கல்வித் துறையில், குறைந்த வகுப்பு நேரங்கள் இருக்கும் இருப்புக்களில் ஆசிரியர்களால் சிறந்த முறையில் பயன்படுத்தப்படும், ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்க மாட்டார்கள்."

நடவடிக்கை தினத்தன்று நடந்த தீய கூறுபாடு வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளூர் குழுக்களில் மேற்பார்வைக்கு செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ள சட்டத்தை செயல்படுத்துவதை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி ஆகும் --SMA எனப்படும் (குறைந்த பட்ச மேற்பார்வைப் பணி) முக்கியம் எனப்பட்டது. சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மைகளால் நடத்தப்படும் உள்ளூர்க் குழுக்கள் பெரும்பாலும் இப்பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டன. இணங்காத குழுக்கள்மீது பொருளாதார நடவடிக்கைகள் கொண்டுவரப்படும் என்று டார்க்கோஸ் அச்சுறுத்தினார். ஆனால் உள்ளூர் அதிகாரிகள் குழுக்கள் மீது எடுக்க விரும்பிய சட்டபூர்வ நடவடிக்கைகள் இதுவரை நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டன. UMP கட்சியின் பெரும்பான்மை இருக்கும் உள்ளூர் குழுக்கள் பணியைத் தொடர இளம் குழந்தைகளை கவனிக்கும் தகுதி இல்லாத ஊழியர்களை கொண்டு பணியை நடத்தின.

கடந்த தசாப்தத்தில் மகத்தான இயக்கங்கள், தொடர்ந்து ஒன்றன்பின் பதவிக்கு வந்த அரசாங்கங்ககள் கல்வித்துறை மீது நடத்திய தாக்குதல்களை எதிர்த்து நடந்துள்ளன. தொழிற்சங்கங்கள் இந்த இயக்கங்களை நெரிக்க, தனிமைப்படுத்த மற்றும் சிதைக்கத்தான் செயல்பட்டுள்ளன; இதில்தான் Claude Allègre (லியோனல் ஜோஸ்பனுடைய பன்முக இடது அரசாங்கத்தில் கல்வி மந்திரியாக இருந்தவர்) "பெரிய விலங்கின் கொழுப்பைக் குறைக்க வேண்டும்" என்ற தன்னுடைய திட்டத்தின்கீழ், 2003ல் நடந்த ஆறு வார கால வேலைநிறுத்தத்தை தோற்கடிக்கும் வகையில் நடந்து கொண்டார்; அந்த வேலைநிறுத்தம் ஓய்வூதியத் தொகைகள் காக்கப்பட வேண்டும் என்பதற்காக நடந்தது; 2006ல் முதல் வேலை ஒப்பந்தம் எனப்பட்ட சம வாய்ப்புக்கள் சட்டத்திற்கு எதிரான எதிர்ப்புக்களை காட்டிய வேலைநிறுத்தம் மற்றும் மே 2007ல் சார்க்கோசி தேர்தலுக்கு பின் தனித்தனி நாட்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டங்கள் ஆகியவையும் முறியடிக்கப்பட்டன.

முக்கிய தொழிற்சங்க அமைப்பான FSU (Unitary Union Federation) என்பது, கம்யூனிஸ்ட் கட்சியுடன் (PCF) தொடர்புகளை கொண்டுள்ளது; நடந்ததற்கான முக்கிய பொறுப்பு அதைத்தான் சாரும்; இத்துடன் CGT தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு, PCF க்கு நெருக்கமாக இருப்பது), CDFT (பிரான்சின் ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு, சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக இருப்பது) மற்றும் UNSA (சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக இருக்கும் தேசிய தன்னாட்சி தொழிற்சங்கம்) ஆகியவையும் சேர்ந்து செயல்பட்டன.
NPA
(புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி) ஒலிவியே பெசன்ஸநோவின் அமைப்பு பொருளாதார நெருக்கடியில் தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்பு பற்றி எஃவிதக் குறிப்பும் காட்டாமல் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டது; முதலாளித்துவ முறை அகற்றப்படுவதற்காக எவ்வித சோசலிச முன்னோக்கையும் கொடுக்கவில்லை. நவம்பர் 20ம் தேதி வேலைநிறுத்தம் "ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே ஒரு இணைந்த கட்டமைப்பான நடவடிக்கைக்கான வாய்ப்பை, பொதுப்பணிப்பாதுகாப்பிற்காக அளிக்க வேண்டும்" என்று மட்டும் கூறியது.

தொழிற்சங்கங்கள் அனைத்தும் மிக நெருக்கமாக சார்க்கோசி, அவருடைய மந்திரிகளுடன் தேர்தல் முடிந்ததில் இருந்து ஒத்துழைத்து வருகின்றன. இச்சமீபத்திய வேலைநிறுத்தம் அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றுபட்ட இயக்கமாக பல வேலைநிறுத்தப் போராட்டங்கள் இணைந்து ஒன்று சேர்ந்துவிடமால் இருக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு கவனத்துடன் தொடர்ச்சியான தனியான, நீண்ட எதிர்ப்புக்கள் கொண்டுவரப்பட்டதில் ஒன்றாகும்.

இந்த வாரம் இதற்கு ஒரு முக்கிய உதாரணமாகும். திங்களன்று Air France ன் விமான ஓட்டிகள் தங்கள் ஓய்வுதிய வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்துவதற்கு எதிராக நடத்திய வேலைநிறுத்தத்தில் நான்காம், கடைசி நாள் போராட்டத்தில் இருந்தனர். சனிக்கிழமையன்று அஞ்சல் துறைத் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கப்படல், மூடல்கள் மற்றும் சரியும் பணி நிலைமைகள் ஆகியவற்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

செவ்வாயன்று இரயில் டிரைவர்களில் ஒரு பிரிவினர் சரக்குப் பிரிவில் பணி நிலைமைகள் தாக்கப்பட்டுள்ளதற்கு எதிராக ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்; அத்தகைய நடவடிக்கை தனியார்மயமாக்கப்படலுக்கான தயாரிப்பு என்பதுடன் முழு தேசிய இரயில் பணிகளையும் பிரிக்கும் முயற்சியும் ஆகும். இது பேச்சுவார்த்தைகளை கருத்திற்கொண்டு வெள்ளி வரை ஒத்திப் போடப்பட்டுள்ளது.

மற்றய இரயில் சாரதிகளின் தொழிற்சங்கங்களும் இப்பிரச்சினை பற்றிய வேலைநிறுத்தத்திற்காக ஞாயிறன்று அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் தொழிற்சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்த அழைப்புக்களை, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பாதிக்கப்பட்ட எல்லோரும் சேர வேண்டும் என்பதற்கு பதிலாக சாரதிகளுடன் மட்டும் நிறுத்திக் கொண்டு அனைத்து 160,000 இரயில்வே தொழிலாளர்களுக்கும் அழைப்புவிடவில்லை.

வியாழக்கிழமை நடந்த நடவடிக்கைக்கு கிடைத்த பெரிய ஆதரவு மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சீற்றத்தின் ஒரு அடையாளம் ஆகும். அவர்கள் அணிவகுத்துச் சென்றபோது உலகம் முழுவதும் இருக்கும் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைக் கண்டன; பிரெஞ்சு CAC-40 அதன் மதிப்பில் 5 சதவிகிதத்திற்கு மேல் இழந்தது. மிகப் பரந்த முறையில் பல மூடுவிழாக்கள், பணிநீக்கங்கள் என்று கார்த்தொழில், எஃகுத் துறை, சாலைப் போக்குவரத்து இன்னும் பல தொழில்துறைகளில் நடப்பதைத்தான் பிரான்ஸ் கண்டுவருகிறது.

ஆளும் வர்க்கம் விரைந்து செயல்பட்டு தன்னுடைய செல்வத்தை தக்க வைத்துக் கொள்ளுவதற்கு தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்கள்மீது தாக்குதலை ஆழப்படுத்தும் கட்டாயத்தில் உள்ளது. 59 பில்லியன் செலவினம் கொண்ட கல்வித்துறைக்கு நிதி இல்லை என்று அரசாங்கம் மறுக்கையில், இதனிடம் வங்கிகள் மற்றும் பெரு வணிகங்களை காப்பாற்ற பிணை எடுப்பிற்கு 360 பில்லியன் திரட்டுவதற்கு வசதி உள்ளது.

உலக சோசலிச வலைத் தளத்தில் இருந்து நிருபர் குழுக்கள் பாரிசிலும் அமியானிலும் ஆர்ப்பாட்டத்தில் தலையீடு செய்தனர்.

பாரிசில் முக்கியமாக ஆசிரியர்கள், பள்ளி, பல்கலைக்கழக மாணவர்களின் கணிசமான பிரிவுகள் இணைந்த அளவில் டார்க்கோசின் சீர்திருத்த திட்டம் திரும்பப் பெறவேண்டும் என்று 40,000 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Newton Lycée ல் இருந்து வந்த ஆசிரியர்கள் "டார்க்கோஸ் சீர்திருத்தம் = சமவாய்ப்பின் முடிவு" என்று அறிவித்த பதாகையின் கீழ் அணிவகுத்து நடந்தனர். ஒரு பக்கம் பதாகையை ஏந்தியிருந்த பிராங்க் கூறினார்: கடந்த ஆறு ஆண்டுகளில் 90,000 பணிகள் நசுக்கப்பட்டதை எதிர்த்து நான் இங்குள்ளேன்."

French education protest marchers in Paris

தன்னுடய பள்ளியில் ஒய்வு பெற்ற எட்டு ஆசிரியர்களுக்கு பதிலாக புதிய நியமனங்கள் இல்லை என்பது பற்றி அவர் கூறினார். மாணவர்கள் அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேரவேண்டும் என்று வலியுறுத்திய விதத்தில் சில பகுதிகளில் பள்ளிகள் எடுக்கப்பட்ட விதத்தில், இவருடைய பள்ளியும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. நிறைய மாணவர்கள் ஏற்கனவே சேர்ந்துவிட்ட அருகாமைப் பகுதி பள்ளியில் சேர விரும்பிய முப்பது மாணவர்களுக்கும் இடம் கொடுக்கப்படவில்லை. இவருடைய பள்ளி அவர்களை சேர்த்துக் கொண்டதின் விளைவாக ஏற்கனவே அதிக மாணவர்கள் நிறைந்திருக்கும் வகுப்பறைகள் இன்னும் கூடுதலான எண்ணிக்கையை கொண்டிருந்தன.

"2003 முதல் அனைத்துமே கீழ்ச்சரிவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இடது மற்றும் வலது என்று அனைத்துமே சந்தை விதிகளுக்கு உட்பட்டுள்ளன. பொருளாதாரம் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பொருளாதாரத்தை மீட்கும் அனைத்துத் திட்டங்களும் பரந்த அளவில் பணத்தைக் கொள்ளை அடிப்பது ஆகும்."

பாரிஸில் Maurice Ravel Lycée ல் முதலாம் ஆண்டு மாணவர்களாக இருக்கும் எம்மிய் மற்றும் அவருடைய நண்பிகளும், இளைஞர்களுடைய வருங்காலம் மிகவும் இருண்டதாக இருக்கும் என்று நினைப்பதாகக் கூறினர். "படிப்புப் பட்டங்கள் நாளுக்கு நாள் மதிப்பை இழந்துள்ளன. இது அமெரிக்க மாதிரி என்கின்றனர். எங்களுக்கு ஒரு நல்ல பொதுக் கல்வி வேண்டும். இருவிதமான உயர்நிலைப்பள்ளிகளை இச்சீர்திருத்தம் ஏற்படுத்தும் --ஒன்று நல்ல பள்ளிகள், மற்றயது மோசமானவை ஆகும்."

"இந்த நெருக்கடி வங்கியாளர்களை தாக்க வேண்டுமே ஒழிய சாதாரண மக்களை அல்ல" என்று இந்தப் பெண் கூறினார்.

MathieuParis 2 பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஈவா மற்றும் அனிதா இருவரும் ஆசிரியர் குறைப்பு பற்றி மிகவும் கவலைப்பட்டனர் ஈவா கூறியது: "இடது மற்றும் வலது அரசாங்கங்கள் தங்கள் கொள்கைகளை இயற்றுகின்றன; ஆனால் இலாப முறையை அடிப்படையாக கொண்ட முதலாளித்துவ முறை பற்றி எதிர்த்துக் கேட்பவர் ஒருவரும் இல்லை. இந்த முறையைத்தான் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்."

இத்துடன் இணைந்த வகையில் அனிதா கூறினார்; "இதற்கு பதிலாக எதைக் கொண்டுவரமுடியும் என்று நாங்கள் சிந்திக்கப் போகிறோம்."

அமியானில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 3,000 பேர் பங்கு பெற்றனர்.

இந்த ஆண்டு 6,000 ஆசிரியர்கள் பதவி இழப்பு ஏற்பட்டதை கண்டித்த NPA துண்டுப் பிரசுரம் ஒன்று இதைப் பற்றி அரசியல் கோரிக்கைகள் எதையும் முன்வைக்கவில்லை; "வேலைநிறுத்தம் தொடர்வதற்கு வாக்களியுங்கள்... மற்ற பிரிவுகளும் தொடர்பு கொள்ளும் வரையில் வலிமைக்கான சோதனை தொடரட்டும்." என்று மட்டும் கோரப்பட்டது.

Eddyசிறப்புத் தேவைகள் உடைய குழந்தைகளுக்கான ஆசிரியர் Mathieu பின்தங்கிய பகுதிகளில் இருக்கும் அத்தகைய குழந்தைகள் ஆசிரியர் பணிகள் நீக்கப்படுவதால் ஆபத்திற்கு உட்படுகின்றன என்றார். "நான் எந்த தொழிற்சங்கத்திலும் சேர்ந்திருக்கவில்லை; ஆனால் முதலாளித்துவத்தின் பொருளாதார நெருக்கடி பற்றி மார்க்ஸ் கூறியது சரியே. பலரும் இதை உணர்ந்துள்ளனர் என்று நினைக்கிறேன். அரசியல் மாற்றத்திற்கு முன் ஒரு உண்மைப் பொருளாதார மாற்றம் தேவை."

Lycée Michelis என்று அமியானில் இருக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவரான எட்டி கூறியது: "வேலைகளை பாதுகாப்பதற்காக பிரெஞ்சு மக்கள் திரண்டு எழ வேண்டும்; நிறுவனங்கள் இலாபம் பெறுவதற்காக வேலைகளை நீக்குவது தடை செய்யப்பட வேண்டும். பங்கு இலாபங்கள் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். உத்தியோகம் கொடுப்பவர்களுக்கு இணையாக ஊதியங்களும் உயர்த்தப்பட வேண்டும்."

EmilienLycée Delambre ல் இருந்து வந்துள்ள Emilien கூறியது: இந்த அரசாங்கத்தை வெளியேற்ற நாம் ஒரு கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும். ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் என்பது ஏற்பதற்கில்லை. இது முதலாளித்துவ முறை, சோசலிசக் கட்சி உடைந்து கொண்டிருக்கிறது, PCF ஒன்றும் உருப்படியாக எதையும் செய்யவில்லை. ஒலிவியே பெசன்ஸநோவை பொறுத்தவரையில் அவரிடம் நம்பகத்தன்மை இல்லை. நெருக்கடியில் வெளிநாட்டினர்தான் சமூகப் பிரச்சினைகளுக்கு பலி ஆடுகளாக செய்யப்படுதவதால் நாம் ஒன்று சேரவேண்டும்."