World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Colin Powell endorses Obama

Growing ruling class consensus behind Democratic candidate

ஒபாமாவிற்கு கொலின் பவல் ஒப்புதல் கொடுக்கிறார்

ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்குப் பின்னால் ஆளும் வர்க்கத்தின் பெருகிய ஒருமித்த உணர்வு

By Barry Grey
20 October 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஞாயிறன்று பாரக் ஒபாமாவிற்கு ஓய்வு பெற்ற தளபதி கொலின் பவல் கொடுத்துள்ள ஒப்புதல், நவம்பர் 4ம் தேதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆளும் உயரடுக்கு அண்மையில் கொடுத்துள்ள தொடர்ச்சியான ஆதரவு அறிக்கைகளில் மிகவும் கூடுதலான அரசியல் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

NBC செய்தி நிகழ்வான "பத்திரிகை சந்திப்பு" நிகழ்ச்சியில் பேசிய, 1991ம் ஆண்டு பாரசீக வளைகுடாப் போரில் படைகளின் கூட்டுத் தலைவராகவும் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் முதல் பதவிக்காலத்தில் வெளிவிவகார அமைச்சராகவும் இருந்த பவல், தான் ஒபாமாவிற்கு வாக்குப் போட இருப்பதாகக் கூறினார்; இவருடைய குடியரசுப் போட்டியாளர் செனட்டர் ஜோன் மக்கெயினை விட இல்லிநோயின் செனட்டர் கூடுதலான திறைமை வாய்ந்தவர் என்றும், "எமது பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கும்", "ஒரு நோக்கு, நம்ம்பிக்கை உணர்வு ஆகியவற்றை அமெரிக்க மக்களிடையே மீட்பதற்கும் அமெரிக்காவிலுள்ள சர்வதேச சமூகத்திடையே மீட்பதற்கும்" இவர் தேர்ந்தவர் என்றார் பவல்.

தனது கட்சி வேட்பாளரைக் காட்டிலும் ஒபாமாவிற்கு பவல் கொடுத்துள்ள ஆதரவு வாஷிங்டன் போஸ்ட், லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், நியூ யோர்க் டெய்லி டைம்ஸ், சிகாகோ டிரிபியூன் ஆகிய முக்கிய நாளேடுகள் உட்பட தொடர்ந்த பல செய்தித்தாட்கள் கொடுத்துள்ள ஆதரவைத் தொடர்ந்து வருகிறது. டிரிபியூன் கொடுத்துள்ள ஒப்புதல் குறிப்பிடத்தக்க வகையில் முக்கியமானது ஆகும். 161 ஆண்டு வரலாற்றில் இந்த கன்சர்வேடிவ் குடியரசு நாளேடு ஜனாதிபதி பதவிக்கு முதல் முதலாக ஒரு ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது.

இந்த ஒப்புதல்கள், ஒபாமா பிரச்சாரம் செப்டம்பர் மாதத்தில் தான் திகைப்படைய வைக்கும் வகையில் $150 மில்லியன் வசூல் செய்துள்ளது என்று வெள்ளியன்று கொடுத்த அறிவிப்புடன் இணைந்து வந்துள்ளன. இது ஆகஸ்ட் மாதம் பெரும் குவிப்பாக $66 மில்லியன் திரட்டிய சான்றையும் முறியடித்து விட்டது. ஒபாமாவின் பிரச்சார நிதிப் பொதியை இது $600 மில்லியனுக்கும் மேலாக கொண்டுவருகிறது; இது புஷ் 2000, 2004ம் ஆண்டுகளில் திரட்டிய பணத்தைவிட மிகக் கூடுதல் ஆகும்.

ஒபாமாவிற்கு பெரு வணிகத்தின் வெள்ளம் போல் வந்துள்ள இந்த நிதி, மக்கெயின் திரட்டியதைவிட கணிசமாக அதிகமானது, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மிகுந்த செல்வாக்கு வாய்ந்துள்ள பிரிவுகளில் இவருக்கு இருக்கும் ஆதரவை பிழைக்கு இடமின்றி குறிக்கும் மற்றொரு நிகழ்வு ஆகும்.

ஈராக் போருக்கு ஒரு முக்கிய நபராக இருந்த பவல் ஒபாமாவிற்கு ஒப்புதல் கொடுத்தது, மற்றும் அந்நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்ததற்கு உறுதியாக ஆதரவு கொடுத்த செய்தித்தாட்களும் ஒபமாவிற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது, அவருடைய பிரச்சாரத்தில் இருக்கும் போலித்தனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாதத்தின் ஆதரவாளர்களான இவர்களுக்கு, பொதுவாக மக்களுடைய போர் எதிர்ப்பு உணர்விற்கு முறையிட்டு, அவருடைய முக்கிய போட்டியாளரான செனட்டர் ஹில்லாரி கிளின்டனை 2002 அக்டோபரில் ஈராக் போருக்கு ஒப்புதல் கொடுத்ததற்காக தாக்கிய ஒரு வேட்பாளருக்கு, ஒப்புதல் கொடுப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

ஜூன் மாதம் ஜனநாயகக் கட்சியின் வேட்பு நியமனத்தை பெற்றதில் இருந்து ஒபாமா தன்னுடைய போருக்கு எதிரான அலங்காரச் சொற்கள் மற்றும் "மாறுதல்" என்ற பிரச்சார கோஷம் ஆகியவை ஒரு புறம் இருக்க, ஒரு ஒபாமா நிர்வாகம் என்பது ஆளும் உயரடுக்கின் வர்க்க நலன்களை காக்கும் என்பதில் உறுதியாக இருக்கும் என்பதை உத்தரவாதம் செய்யும் முயற்சிகளில் குவிப்பு காட்டியுள்ளார். இது, "போரிடும் படைகளை" நிறுத்திய பின்னர் அமெரிக்க இராணுவத்தில் கணிசமான பகுதியை தொடர்ந்து வைத்திருப்பார், மற்றும் இராணுவ கொமாண்டர் கேட்டுக்கொண்டால் போரிடும் துருப்புக்களை திரும்பப்பெறுவதற்கான அவரது காலக்கெடுவை நீட்டிப்பதற்கு தயார் செய்யப்பட்டிருப்பார் என்ற உறுதிமொழிகள் உட்பட, உள்நாட்டுக்கொள்கை, வெளிநாட்டுக்கொள்கை இரண்டிலும் வலது புறத்திற்கான ஊசலாடலை தவிர்க்க முடியாததாக ஆக்கி இருக்கிறது.

அதே நேரத்தில் ஒபாமா ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்களை அதிகரிக்கவும் பாக்கிஸ்தான் மீதான இராணுவத் தாக்குதல்களை விரிவுபடுத்துதலையும் தன்னுடைய பிரச்சாரத்தின் மையமாகவும் கொண்டிருந்தார்.

அமெரிக்காவிற்குள் மக்கள் அதிருப்தியை அதிகரித்து சர்வதேச அளவில் அமெரிக்க செல்வாக்கு கெளரவம் ஆகியவற்வறை குறைத்துள்ள வரலாற்றுப் பரிமாணம் வாய்ந்த நிதிய நெருக்கடிச் சூழ்நிலையில், நிதிய பெருநிறுவன உயரடுக்கிற்காக ஒபாமா காட்டிய நேசம் நல்ல பலனைக் கொடுத்துள்ளது.

ஒபாமாவிற்கு ஒப்புதல் அளிக்கும் பவலுடைய பேட்டி மற்றும் தலையங்க அறிக்கைகளில் இருக்கும் பொதுக் கருத்து மிகப் பெரிய முறையில் ஒபாமா அவருடைய இனம் மற்றும் ஒப்புமையில் இளமையாக இருக்கும் தன்மையில் உலகம் முழுவதும் அமெரிக்காவின் தோற்றத்தை முன்னேற்றுவிப்பார் என்றும் அமெரிக்க மக்களிடையேயும் இவ்வித வளர்ச்சியை அவர் கொண்டுவருவார் என்றும், ஒரு கன்சர்வேடிவ் வகையில் உள்நாட்டு செயற்பட்டியலைத் தொடர அவரை நம்ப முடியும் என்றும், சர்வதேச அளவில் ஏகாதிபத்தியக் கொள்கையின் அடிப்படை உந்துதல் தொடரும் என்ற உணர்வும் வெளிப்பட்டுள்ளன.

பேரழிவுகரமான புஷ் ஆண்டுகளை அடுத்து அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை இன்னும் புத்திசாலித்தனத்துடனும் திறமையுடனும் காப்பதற்கு ஒரு ஜனாதிபதி தேவை என்பதை இந்த ஒப்புதல்கள் வலியுறுத்தியுள்ளன.

தன்னுடைய பேட்டியில் பவல் அமெரிக்காவை எதிர்கொண்டுள்ள நெருக்கடி பற்றி ஒரு நிதானமான மதிப்பீட்டை அளித்துள்ளார். ஒபாமா நடைமுறைக்கு ஒப்புதல் கொடுத்துள்ள பலரைப் போல், இவரும் கடந்த இரு மாதங்களாக வெடித்து எழுந்துள்ள அமெரிக்க நிதிய நெருக்கடி ஜனநாயக வேட்பாளருக்கு தான் ஆதரவு கொடுப்பதற்கான முக்கிய காரணி என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

வங்கிகளை அரசாங்கம் பிணை எடுப்பு நடத்தியதற்கு குழப்பத்திற்கு இடமின்றி ஆதரவு கொடுத்த வகையில் தன்னுடைய போட்டியாளரை விட சிறந்த முறையில் வெளிப்பட்டுள்ளார் என்று ஆளும் உயரடுக்கு ஒபாமா பற்றி பரந்த முறையில் கொண்டுள்ள ஒருமித்த உணர்வை பவலும் எதிரொலித்தார். "குறிப்பாக கடந்த ஆறு அல்லது ஏழு வாரங்களாக நான் கவனித்து வந்துள்ளேன்; இவர்கள் இருவரும் இந்த பொருளாதார நெருக்கடி தொடர்பாக உண்மையில் தங்கள் இறுதி தேர்வை எழுதியுள்ள காலம் இது" என்றார் அவர்.

அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்கொண்டுள்ள நெருக்கடி பற்றி கடுமையான விதத்தில் சிக்காகோ ட்ரிபியூன், "கடந்த 80 ஆண்டுகளில் உலப் பொருளாதார முறைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்" என்று எழுதியுள்ளது. இதற்கு "நம்மை இந்த ஆபத்தான காலத்தில் வழிநடத்தவும்," "நாம் எதிர்கொள்ளும் தீவிர உள்நாட்டு, வெளிநாட்டு நெருக்கடிகளை கடக்க வழிநடத்தவும்" எமக்கு ஒரு ஜனாதிபதி தேவை என்று அது கூறியுள்ளது.

தம் "தலையங்கப் பக்கம் பழமைவாத கோட்பாடுகளைத்தான் கூறிவரும்" என்று அறிவித்த செய்தித்தாள், சிக்காகோ ஜனநாயக கட்சி அரசியல் மூலம் அரசியலில் நுழைந்த ஒபாமா, ஒரு பழமைவாத போக்கைத்தான் தொடர்வார் என்பதற்கு "சில உத்தரவாதம் அளிக்க" முடியும் என்று கூறியது. அது எழுதியதாவது: "12 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் ஒபாமா நுழைந்ததில் இருந்து நாம் அவரை அறிந்துள்ளோம். நாங்கள் அவரை கண்காணித்தோம், அவருடன் பணியாற்றியுள்ளோம், ஒரு திறமையான மாநில செனட்டர் தகுதியில் இருந்து ஒரு ஊக்கம் கொடுக்கும் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக அவர் மலரும் வரை அவருடன் வாதிக்கவும் செய்துள்ளோம்."

"அவருடைய அறிவுத் திறன், அறநெறி பரப்பு மற்றும் சரியான, சித்திக்கப்பட்ட, கவனமான முடிவுகள் எடுக்கும் அவருடைய திறமை பற்றியும் நாங்கள் மகத்தான நம்பிக்கை கொண்டுள்ளோம்......"

"மக்கள் பலரும் எதிர்பார்க்கும் ஒரு நடைமுறை மையவாதியைவிடக் கூடுதலான முறையில் ஒபாமா ஆட்சி நடத்துவார்" என்று தான் நம்புவதாக ட்ரிபூன் கூறியுள்ளது; "சிக்காகோ பல்கலைக்கழக ஜனநாயகவாதி" என்று அவர் அழைக்கப்படுவதையும் பெருமையாகச் சுட்டிக் காட்டியது -- இந்த குறிப்பு சந்தைகளில் நம்பிக்கை வைக்கும் சிக்காகோ பொருளாதாரப் பயிலகத்தின் புகழ்பெற்ற தடையற்ற சந்தை பற்றிய குறிப்பாகும்.

இந்த நடைமுறை அரசியலின் செய்தித் தொடர்பாளர்களின் நிதானமான தீர்ப்புரையை ஒப்பிடுதல் பயனுடையது ஆகும்; இவர்கள் தங்கள் முடிவுகளை தங்கள் வர்க்க நலன்களை ஒட்டி தெளிவான கண்களுடன் பாரட்டும் அடிப்படையை கொண்டவர்கள்; இதை ஒபாமாவில் தாராளவாத அறிவுஜீவிகள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் தாராளவாத பிரிவுகளின் சிதைந்த கூற்றுக்களுடன் ஒப்பிட்டுக்காண வேண்டும்.

New York Review of Books இன் சமீபத்திய பதிப்பு, ஒரு தொடர்ச்சியான கட்டுரைகளை ஒபாமா மீது பல கட்டுரையாளர்கள் எழுதியுள்ளதை வெளியிட்டுள்ளது; இதன் தலைப்பு "ஒரு முக்கியமான தேர்தல்" என்பதாகும். Joan Didion என்னும் கட்டுரையாளரை தவிர மற்றவர்கள் ஒபமா வெற்றி புதிய சமூக முன்னேற்றத்திற்கு கட்டியம் கூறும் என்றும் ஒரு வரலாற்று மைல்கல் என்றும் கூறியுள்ளார்; ஆனால் ஜோன் டிடியனோ ஒபாமா பிரச்சாரம் மரபார்ந்த வகையில் அமெரிக்க முதலாளித்துவ அரசியலில் இருந்து ஒரு முன்னேற்ற மாறுதலைப் பிரதிபலிக்கிறது என்ற கருத்தை நிராகரிப்பதுடன், இந்த போட்டியில் "அமெரிக்க வாழ்வில் வர்க்கம்தான் உண்மையான பிரச்சினை" அதை மறைக்க இனம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குறிப்பையும் கூறியுள்ளார்.

அநேகமாக அனைத்துக் கட்டுரைகளும் இனம் பற்றி மிக அதிக அளவு அக்கறையை காட்டியுள்ளன. கட்டுரையாளர் Mak Danner, "பராக் ஒபாமாவின் முற்போக்குத்தனம் அவருடைய கொள்கைகளில் என்று இல்லாமல் அவருடைய முகத்தில் உள்ளது" என்று அறிவிக்கிறார். "இனம் பற்றிய பேசப்படாத மையக் கருத்து, அமெரிக்க அரசியலின் நீண்ட நாள் பாவப் பிணைப்பு" பற்றியும் அவர் குறிப்பிடுகிறார் பின்னர் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுவது "ஒரு உண்மையான புரட்சியைக் குறிக்கும்" என்று முடிக்கிறார்.

கொலம்பிய பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரூ டெல்பங்கோ "ஒரு உறுதியாக்கப்பட்ட தாராளவாதி, இவருடைய உள்நாட்டுக் கொள்கைகள் தெளிவற்றவை போல் தோன்றும்" என்பதை ஒப்புக் கொண்டாலும், "இருந்தபோதிலும் கறுப்பராக இருக்கிறார் என்ற நிலையில் ஒபாமா ஏற்கனவே எமது பண்பாட்டை மாற்றிவிட்டார், ஆழ்ந்த முறையில் மாற்றிவிட்டார்..." என்று அறிவிக்கிறார்.

நோபல் பரிசு வாங்கியுள்ள பொருளாதார வல்லுனரும் நியூ யோர்க் டைம்ஸின் கட்டுரையாளருமான போல் க்ருக்மன் முன்பு குடியரசுக் கட்சிக்காரர்கள் "இன எதிர்ப்பு உணர்வை சுரண்டிய முறையில்" முன்பு தேர்தல்களில் வெற்றிபெற முடிந்தது என்று உறுதியாகக் கூறுகிறார். ஆனால் இம்முறை இது வேறுவிதமாக இருக்கும் என்றும் "ஒரு புதிய உடன்பாட்டிற்கான வருங்காலம் மீண்டும் நம்பிக்கை கொடுப்பதாக உள்ளது" என்று முடிக்கிறார்.

புஷ்ஷின் சட்டவிரோத உள்நாட்டு ஒற்றுமுறைக்கு ஒபாமா வாக்களித்ததையும் மேலும் ஒபாமா ஒரு போலீஸ் அரசாங்கத்தைக் கொண்டுவரக்கூடிய சட்டங்களான Patriot Act, Homlan Security Department, Northern Command ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்ததையும் அலட்சியப்படுத்திவிட்டு, வரலாற்றாளர் Garry Wills அடுத்த ஜனாதிபதி தலைமை நீதிமன்றத்தை உருவாக்கும் திறன், இத்தேர்தல் எதிர்கொள்ளும் பணியை "திகைப்படைய செய்கிறது என்று வாதிடுவார்.

பெரும்பாலும் இந்த அறிவாளிகளும் கல்வியாளர்களும் நல்லது ஏதோ நடக்கக் கூடும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ள விதத்தில், உவந்த நம்பிக்கையற்ற தன்மையை நிறுத்தி வைத்துள்ளனர். இப்படிக் கூறினாலும், அவர்கள் மக்கள் எதிர்ப்பிற்கு தீர்ப்பு கூறும் வகையில் எழுதாமல், நடைமுறையின் அடுக்குகளுடைய பிரதிநிதிகள் போல்தான் எழுதியுள்ளனர்.

Nation இதழைப் பொறுத்தவரையில், நினைத்து நடக்கும் என்ற மனச்சிதைவு உடைய மக்கள் போல் நடந்து கொள்ளுவதை காண்கிறோமே அன்றி ஜனநாயகக் கட்சியில் இருக்கும் அரசியல் போலித் தோற்றங்களை காண்பிப்பவர்கள் என்று இல்லை. தற்போதைய பதிப்பின் தலையங்கம் வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பு அரசியல் நடைமுறைக்குள் ஒரு இடது என்ற மாற்றத்தை அடையாளம் காட்டுகிறது என்று தெரிவிக்கிறது. அரசாங்கம் மோசமான அடைமானங்களை வாங்க வேண்டும் என்னும் மக்கெயினின் திட்டத்தை மேற்கோளிட்டு, ஒபாமாவின் அழைப்பான வீடுகள் முன்கூட்டி எடுக்கப்படுவது 90 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்பதையும் மேற்கோளிட்டு, Nation இந்த நெருக்கடி "மையத்தை ஒரு முன்னேற்ற திசையில் தள்ளியுள்ளது" என்று எழுதியுள்ளது.

பிணை எடுப்பு பற்றிய ஒரு கட்டுரையில் William Greider எழுதுகிறார்: "அதிருஷ்டவசமாக, புஷ்ஷும் போல்சனும் நொண்டி வாத்துக்களாக உள்ளனர். இவர்கள் விரைவில் (ஆர்வத்துடன் நம்புகிறோம் பாரக் ஒபாமாவால் அகற்றப்படக்கூடும். இவர் குடியரசுக் கட்சியினர் எப்பொழுதும் புறக்கணிக்கும் ஒரு புறத்தை --அதாவது மக்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதை ஆராய்கிறார். ஒபாமா தன்னுடைய செயற்பட்டியலை திருத்தி, விரிவாக்கியுள்ளார்; ஜனவரி வரை காத்திருக்க அவர் விரும்பவில்லை."

இதன் பின் தொழிலாள வர்க்கத்தை சூழ்ந்துள்ள பெரிய சமூக பேரழவை எதிர்கொள்ளுகையில் ஒபாமா முன்வைத்துள்ள பெயரளவு நடவடிக்கைகளை மேற்கோளிடுகிறார்: அதன் பின் பரபரப்புடன் கூறுகிறார்; "பொருளாதாரக் கொந்தளிப்பு அரசியலில் ஒரு ஆக்கபூர்வமான நிகழ்வை பதியவைத்துள்ளது; இதில் வாக்காளர்களும் அடங்குவர்; ஒரு புதியதளம் தயாராகிறது. வரவிருக்கும் மாதங்களில் நாம் இன்னும் பெரிய மாறுதல்களைக் காணக் கூடும். நிதி மந்திரி திணறுகிறார். ஒபாமா இரண்டாவது வாய்ப்பைப் பெறுவதுபோல் காணப்படுகிறார்."

புறநிலை நிகழ்வுகளும் மக்கள் கருத்து என்ற அழுத்தமும் வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒபாமாவை இடதிற்குத் தள்ளும் என்ற கருத்தை Nation தீவிரமாக கூறுகிறது. வேட்புத்தன்மை பெற்றதில் இருந்து ஒபாமா போர் எதிர்ப்பு உணர்விற்கு விடையிறுக்காமல், மக்களிடையே உள்ள பெருநிறுவன எதிர்ப்பு உணர்விற்கு விடையிறுக்காமல், அவருடைய பெருநிறுவன ஆதரவாளர்கள் நன்கொடையாளர்களுக்குதான் விடையிறுக்கிறார் என்ற மறுக்க முடியாத உண்மை கவனிக்கப்படவில்லை. தேர்தலுக்கு பின் ஏன் இத்தகைய திடீரென்ற மாற்றம் என்பதை Nation விளக்கவில்லை.

ஒபாமா தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவார் என்று இருக்கக் கூடிய பெருகிய வாய்ப்பில், கொலின் பவல் மற்றும் முதலாளித்துவ செய்தி ஊடகத்தின் முக்கிய கருவிகளும் ஏற்கனவே புஷ்ஷின் பிற்போக்குத்தன நிர்வாகத்தின் உந்துதல் அதன் அடிப்படைகள் பலவற்றுடன் தொடரும் என்பதைக் கண்டு பிடிக்க அதிக நேரம் ஆகவில்லை. New York Review of Books இன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் அறிவாளிகள், இன்னும் பரந்த அளவில் ஆப்கானிஸ்தான் போர் அல்லது பாக்கிஸ்தானிற்குள் விரிவாக்கம், அல்லது ஈரான், ரஷ்யாவுடனான போருக்கு எப்படி விடையிறுப்பர்?

Nation ஐப் பொறுத்த வரையில், இத்தகைய அபிவிருத்திகள் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் மற்றும் சோசலிச இயக்க வளர்ச்சியை எதிர்ப்பதன் மூலம் அரசியல் நடைமுறையின் "இடது" பிரிவாக சேவையாற்றும் அதன் உறுதிப்பாட்டை மாற்றும் என்று நம்புவதற்குக் காரணம் ஏதும் இல்லை.