World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: LCR leader Daniel Bensaïd reassures Socialist Party of his collaboration

பிரான்ஸ்: LCR தலைவர் டானியல் பென்சாய்ட் சோசலிஸ்ட் கட்சிக்கு தன்னுடைய ஒத்துழைப்பை மீள உறுதிப்படுத்துகிறார்

By Antoine Lerougetel
17 March 2008

Use this version to print | Send this link by email | Email the author

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (LCR) டானியல் பென்சாய்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) ஹென்ரி வேபரும் பெப்ரவரி 28ம் தேதி சோசலிஸ்ட் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற விவாத அரங்கு ஒன்றில் இரு முக்கிய பேச்சாளர்களாக இருந்தனர். இந்த விவாத அரங்கு கடந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் PS சந்தித்த தோல்விகளுக்கு பின்னர் அதைப் புதுப்பிப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டத் தொடர்களின் ஒரு பகுதியாகும்.

ஹென்ரி வேபரும் டானியல் பென்சாய்டும், அலன் கிரிவினுடன் இணைந்து 1969ல் LCR ஐ நிறுவியவர்கள் ஆவர். வேபர், LCR ன் மாதாந்திர ஏடான Rouge, அதன் சஞ்சிகை Critique communiste ஆகியவற்றிற்கு பதிப்பாளராக, ஆசிரியராக இருந்தார். 1986ல் அவர் சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1995ல் அவர் சோசலிஸ்ட் கட்சி சார்பில் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார்; 2004ல் ஐரோப்பிய பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்பொழுது அவர் சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவின் உறுப்பினராக உள்ளார்; பல்கலைக் கழகங்கள் பற்றிய பொறுப்பை கொண்டுள்ளார்; Revue Socialiste என்ற ஏட்டின் இயக்குனரும் ஆவார். பாரிஸ் VIII பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பேராசிரியராக இருக்கும் பென்சாய்ட் LCR ன் முக்கிய தத்துவார்த்தவாதிகளில் ஒருவராகவும் LCR இணைந்துள்ள பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் முக்கிய உறுப்பினரும் ஆவார்.

சோசலிஸ்ட் கட்சியில் இருந்து சுயாதீனமானதும், அதன் புதிய தாராள கொள்கைகள் மீது விரோதம் காட்டக் கூடிய ஒரு புதிய "முதலாளித்துவ-எதிர்ப்பு" கட்சி ஒன்றைக் கட்ட இருப்பதாக LCR கூறுகிறது. சோசலிஸ்ட் கட்சி தலைமையகத்தில் இக்கூட்டம் நடந்ததானது அக்கூற்று ஒரு மோசடித்தனம் என்பதை அம்பலப்படுத்துகிறது. இது ஒன்றும் அரசியல் விரோதிகளிடையேயான பூசல் அல்ல, மாறாக வேலைப் பகுப்பை கையாளும்போது கடக்க முடியாத வேறுபாடுகள் ஒன்றையும் கொண்டிருக்காத, தனிப்பட்ட மற்றும் அரசியல் நண்பர்களிடையேயான உரையாடல் என்பதை காட்டுகிறது.

ஆரம்பத்தில் இருந்து முழுநேரமும், பங்கேற்றவர்கள் ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக இருந்தனர்; மற்றவர்களுடைய நகைச் சுவைக்கு எளிதில் சிரித்துப் பாராட்டினர்; ஒருவரை ஒருவர் "Tu" (நீ) என ஒருமையில் விளித்து சில சமயம் தோழரே என்றும் கூப்பிட்டுக் கொண்டனர். இவ்விதத்தில் முதலாளித்துவ முறையின் வெட்கம் கெட்ட இரு பாதுகாவலர்களான, Weber மற்றும் Alain Bergougneux மற்றும் மேடையில் இருந்த இன்னொரு முக்கிய PS உறுப்பினர் தன்னை இவ்விதம் அழைத்தபோது பென்சாய்ட் எவ்வித சங்கடத்தையும் உணரவில்லை.

"21ம் நூற்றாண்டில் புரட்சி சிந்தனை" என்ற தலைப்பின் கீழான இந்த விவாத அரங்கம் PS மற்றும் LCR இரண்டும் வளரும் சமூக, அரசியல் எழுச்சிக் காலகட்டத்தில் எப்படி ஒத்துழைக்கலாம் என்பதற்கான வேலையை வடிவமைக்க கூட்டப்பட்ட கூட்டம் என்று வெளிப்படையாக தெரிந்தது. வலதுசாரி நிக்கோலோ சார்க்கோசி ஓய்வூதியங்களின் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கு PS ஆதரவு பற்றிய பிரச்சினை விவாதத்தில் இருந்தபோது, பன்முக இடது அதிகாரத்தில் இருந்தபோது தனியார்மயம் பற்றிய விவாதம் நடந்தபோதும், முறுகல் வரும் என்று கருதியபோது, பென்சாய்ட் "நாம் ஒன்றும் அரசியல் சர்ச்சை பற்றி விவாதம் நடத்தவில்லை; கூட்டத்தின் சூழல் நோக்கம் அது அல்ல" என்றார்.

LCR இன் சந்தர்ப்பவாத பள்ளியில் படித்து, மேலே செல்லும் திறன் படைத்த, தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் தன்னை வளப்படுத்திக் கொள்ளும் உயரடுக்கில் சேர்ந்துள்ள பலருள் வேபரும் ஒருவராவார். ஓடுகாலிகள் என்று நிராகரிக்கப்படுவதிலிருந்து விலகி, இந்த நிகழ்வு காட்டியவாறு, LCR தலைமை இந்த பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் இதயத்தானத்தில் இருக்கும் அடுக்கிடம் வலுவான நட்பு, ஒருவருக்கு ஒருவர் உதவும் பிணைப்பு ஆகியவற்றை தக்க வைத்துக் கொண்டுள்ளதென்பதை காட்டியது. செய்தி ஊடகத்தில் LCR தலைவர்கள் மிக ஆதரவாக நடத்தப்பட்டது பற்றி பெரிய அளவுக்கு இது நன்கு விளக்குகிறது.

கடந்த ஆண்டு வேபர் தன்னுடன் 34 ஆண்டுகள் பங்காளியாக இருக்கும் Fabienne Servan-Schreiber ஐ திருமணம் செய்து கொண்டு ஒரு ஆடம்பரமான 800 விருந்தாளிகள் கொண்ட நிகழ்ச்சியை Cirque d'hiver ல் நடத்தினார்; இது அரசியல் இடதுகளின் பல அணிவகுப்புக்களை கண்ணட இடமாகும். இதற்கு வருகை தந்தோரில் முன்னாள் PS பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன், 2007 தேர்தலில் PS ன் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த செகோலென் ரோயால் மற்றும் பேர்னார்ட் குஷ்நெர் ஆகியோர் இருந்தனர்; கடைசி நபர் சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்பட்ட பின் PS ஐ விட்டு நீங்கி இப்பொழுது அவருடைய வெளியுறவு மந்திரியாக பணி புரிகிறார்.

இதில் சமூகமளித்திருந்த மற்ற இரு PS தலைவர்கள், சார்க்கோசி நிர்வாகத்தில் சேர்ந்தவர்கள், அவர்கள் வருமாறு: Martin Hirsch, Jean-Pierre Jouet. அக்டோபர் 2, 2007ல் Le Monde வங்கியாளர்கள் Bruno Roger (Lazard's), Philippe Lagayette (JP Morgan) மற்றும் L'Oreal உடைய தலைவரான லிண்சே ஓவன் ஜோன்ஸ் ஆகியோர் வருகை பற்றி அறிவித்திருந்தது. புகழ் பெற்ற விருந்தாளிகள் பட்டியலில் முன்னாள் மாடல் அழகியும் பாடகியுமான கார்லா புரூனி இருந்தார்; இவர் இப்பொழுது பிரெஞ்சு ஜனாதிபதியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த அரங்கத்தில் வேபருடைய முக்கிய பங்களிப்பு சந்தை சக்திகளுக்கு புகழாரம் பாடுவது ஆகும்; இது முதலாளித்துவத்தை இடக்கரடக்கலாக வேறு பெயரில் அழைப்பதாகும். 1933ல் இயற்றியதாக கூறப்படும் ஒரு ஸ்வீடிஷ் சமூக ஜனநாயக மூதுரையின் அடிப்படையில், "சந்தை என்பது நல்ல வேலைக்காரன், ஆனால் மோசமான எஜமானன்" என்ற அடிப்படையில், வேபர் பெரும் ஆரவாரத்துடன் கூறினார்: "இது முக்கிய நவீன உற்பத்தி சக்தி, முன்முயற்சிக்கான சுதந்திரம், தொழிலதிபராக இருக்கும் சுதந்திரம், புதிதாக கண்டுபிடிக்கும் சுதந்திரம், மேலாண்மை, பரிவர்த்தனை ஆகியவற்றில் சுதந்திரம்; எனவே இது ஒரு நல்ல வேலைக்காரனாக அதை உழைக்கச் செய்பவர்களுக்கு இருக்கும்; அவ்வாறு செய்பவர்கள் தங்களை பாராட்டிக் கொள்ளலாம்."

பென்சாய்ட்டின் பழைய நண்பர் புரட்சிகர சோசலிசத்திற்கு எதிரான கடிந்துரையுடன் தொடர்ந்தார்: "கடந்த நூற்றாண்டில் சமூக ஜனநாயகத்தின் முழு வரலாற்றுப் புதுமையும் சந்தை சக்திகளை நன்கு அறிதல் ஆகும். அதுதான் எங்களுக்கும் டானியல் பென்சாய்ட் இன் நண்பர்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடாகும், அதுதான் நூற்றாண்டுகாலமாக புரட்சியாளர்களுடன் எங்களது பூசலாகவும் இருந்து வருகிறது... பொருளாதாரத்தை நன்கு அறிவதற்கு பொருளாதார சுதந்திரங்களை அழித்தல் தேவையில்லை; கூட்டு வணிகங்களை அழித்தல் தேவையில்லை; திட்டத்திற்காக சந்தையை அழிக்க வேண்டிய தேவையில்லை... ஒவ்வொரு முறையும் இவ்வாறு செய்தபோது பேரழிவுதான் வந்துள்ளது."

இத்தகைய மார்க்சிச சோசலிசத்தின் மீதான தாக்குதலில் Alain ergougneux ம் அது வன்முறையை மன்னிக்கின்றது என்று அரங்கிற்கு பங்களிப்பு செய்தார்.

இத்தகைய நயமற்ற வரலாற்றுச் சிதைவுகளுக்கு விடையிறுக்காமலேயே பென்சாய்ட் விட்டுவிட்டார். இருபதாம் நூற்றாண்டில் சீர்திருத்தவாத சமூக ஜனநாயகத்தின் சமூக அரசியல் குற்றங்களை அம்பலப்படுத்தும் அறைகூவலில் அவர் இறங்கவில்லை. முதல் உலகப் போர் என்ற படுகொலை களத்திற்கு தொழிலாள வர்க்கத்தை ஐரோப்பிய சமூக ஜனநாயகம் இட்டுச் சென்றது என அவர் கூறியிருக்கலாம்; ஜேர்மனிய சமூக ஜனநாயகவாதிகள் புரட்சிகர சோசலிஸ்டுகளான ரோசோ லுக்சம்பேர்க் மற்றும் கார்ல் லீப்நெக்ட் ஆகியோரை படுகொலை செய்ததற்கு உடந்தை என்று கூறியிருக்கலாம். இன்னும் சமீபத்திய காலத்தில் பிரான்சுவா மித்திரோன் மற்றும் சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரி Guy Mollet காலனித்துவ அடக்குமுறைக்கு எதிரான அல்ஜீரிய எழுச்சியை மிருகத்தனமாக நசுக்கலில் கொண்ட பங்கைப் பற்றி கூறியிருக்கலாம். அல்லது பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கி, வேலைகளை அழித்ததில் லியோனல் ஜோஸ்பன்னுடைய இழிவான பங்கைப் பற்றி பேசியிருக்கலாம்.

சோசலிஸ்ட் கட்சி இப்பொழுது ஐரோப்பிய இராணுவ மயமாதலுக்கு ஆதரவு கொடுத்திருப்பது, பிரான்சின் இராணுவ சக்திகள் கட்டமைக்கப்படுவது, அணுவாயுத நவீனப்படுத்தல் ஆகியவற்றை பற்றியும் பென்சாய்ட் பேசாமல் இருந்தார்; அதேபோல் உலகம் முழுவதும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக இராணுவம் பயன்படுத்தப்படுவது பற்றியும் பேசவில்லை. ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு சோசலிஸ்ட் கட்சி கொடுத்த ஆதரவைப் பற்றி அவர் குறைகூறவில்லை; ஆப்கானிஸ்தானில் நேட்டோ ஆக்கிரமிப்பின்கீழ் பிரெஞ்சு படைகள் பங்கு கொண்டது பற்றியும் கூறவில்லை; ஈரானுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு கொடுக்கும் ஆதரவு பற்றியும் கூறவில்லை. ஒரு இராணுவத் தலையீட்டில் பிரான்ஸ் கலந்து கொள்ளத் தயாராக இருக்கலாம் என்ற கருத்தை பேர்னார்ட் குஷ்நெர் கூறியுள்ளார். மக்களிடம் இருந்து எண்ணெய், எரிவாயு நிலங்கள் ஆசியா, மத்திய கிழக்கில் உள்ளவை, இயற்கை இருப்புக்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்படுவதற்கு பெரும் சக்திகள் கொண்டுள்ள புதிய காலனித்துவ உந்துதலுக்கு PS முற்றிலும் உடந்தையாகத்தான் இருக்கிறது.

இந்த நிருபர் நேரடியாக பென்சாய்ட்டிடம் சோசலிஸ்ட் கட்சி பற்றிய LCR ன் அணுகுமுறை பற்றிக் கேட்டார். இதற்கு விரிவான உரை வியாக்கியானத்தை பென்செய்ட் செய்ய மேற்கோண்டார்: "அது சோசலிஸ்ட் கட்சியுடனான உறவுகள் பற்றிய நேரடி அரசியல் வினா. உங்களுக்கு சூத்திரம் தெரியும்: குட்டிச்சாத்தானுடன் உண்பதற்கு உங்களுக்கு நீண்ட கரண்டி தேவைப்படும்; PS ஒரு குட்டிச் சாத்தானாக இருந்தாலும், தற்போது கரண்டி பெரிதாக இல்லை. அதற்காக நாங்கள் ஒன்றாக உண்ண மாட்டோம் என்ற பொருள் கிடையாது; ஆனால் முதலில் எந்த கரண்டி என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும்; பின்னர் சக்திகளின் மாறுபட்ட உறவுகளின் தன்மையில், சுதந்திரம் பற்றி நாம் பேசுவது தெளிவாக இருக்கும் [அதாவது PS இடம் இருந்து]; தற்போது அரசியல் பொறுப்புக்களில் பங்கு பெறமாட்டோம் என்பதுதான் பொருள். செயலில் ஒற்றுமை, இது வேறு விஷயம்; அது போர் பற்றியோ ஆவணமற்ற குடியேறுபவர்களை பற்றியோ ஏதாவது செய்யவதாக இருந்தால்.. நாம் தயாராக இருக்கிறோம்...

இது நயமற்ற முறையில் PS ஐ மூடி மறைப்பதாகும்; பிரெஞ்சு, ஐரோப்பிய இராணுவவாதத்திற்கு எதிராக இயக்கத்தை இது திரட்டும் என்பதற்கே இடமில்லை; தற்போதைய மத்திய கிழக்கு, மத்திய ஆசியா செயற்பாடுகள் பற்றியும் இதே நிலைதான். மேலும் PS ன் தேர்தல் வேலைத்திட்டம், பொறுக்கி எடுத்து குடியேற்றத்தை அனுமதிப்பது என்பது LCR ன் எந்தப் பிரச்சாரத்திலும் கண்டிக்கப்படவில்லை. இதுதான் ஒருவேளை "கரண்டியில்" மாற்றங்கள் செய்வதற்கு தடை போலும்; அது LCR ஐ ஒரு வருங்கால பன்முக இடது அரசாங்கத்திற்கு இடது மறைப்புக் கொடுக்க பங்கு கொடுக்கும்.

பென்சாய்ட் தொடர்ந்தார்: "பிரோடியை பொறுத்த வரையில், Rifondazione Comunista ஒரு மறைப்பு கொடுத்த நிலையைப் போல் நாங்கள் இருக்க விரும்பவில்லை". LCR ன் இத்தாலிய தோழமைக் கட்சியான Rifondaizione Comunista 2006ல் ரோமனோ பிரோடியின் முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்து ஓய்வுதிய உரிமைகள் தாக்குதல், இத்தாலிய படைகள் ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பிவைக்கப்படுதல், இத்தாலியில் அமெரிக்க இராணுவ தளங்கள் வலுப்படுத்தப்படுதல் ஆகியவற்றை முழுமையாக ஆதரித்தது.

ஆனால் தன்னுடைய PS பார்வையாளர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பென்சாய்ட் அத்தகைய கருத்துக்கள், வருங்கால அரசியல் உடன்பாடுகளை அவர்களுடைய கட்சியுடன் கொள்ளுவதற்கு தடையாக இருக்காது என்றார். "இப்பொழுதுள்ள நிலையில், உடனடியான வருங்காலத்தில், விஷயங்கள் மாறும் வரை, நட்புமுறையில் பேச்சுவார்த்தைகளை தொடர விரும்புகிறோம் அதற்கு மேல் செல்ல மாட்டோம்."

"நகரசபை தேர்தல்கள் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் இரண்டாம் சுற்று சென்று, எங்களுக்கு 5 சதவிகிதத்திற்கு மேல் கிடைத்தால் சில இடங்களில் முதல் சுற்று முடிவின் படி பட்டியலில் விகித முறைப்படி இணைக்க வேண்டும் என்று நாங்கள் முன்மொழியும் சில நிலைமைகள் இருக்கும். இப்பொழுது நாங்கள் அறிந்துள்ளபடி, MoDem [பிரான்சுவா பேய்ரூவின் மைய-வலது கட்சி] முன்னுரிமையை கொண்டுள்ளது [பார்வையாளர்களிடம் இருந்து எதிர்ப்புக்கள் முணுமுணுத்து வருகின்றன]" என்று அவர் மேலும் கூறினார்.

சோசலிஸ்ட் கட்சியின் அழைக்கப்பட்ட விருந்தாளி என்ற முறையில் பென்சாய்ட், LCR இடம் இருபத்தியோராம் நூற்றாண்டிற்கு புரட்சிகர முன்னோக்குகள் இல்லை என்ற உத்தரவாதம் கொடுப்பதுதான். தான் ட்ரொட்ஸ்கிஸ்ட் என்பதை விட லெனினிசவாதி என்று கருதிக் கொள்ளுவதாக பார்வையாளர்களிடம் கூறினார்; லெனினை ஒரு இழிந்த சந்தர்ப்பவாதியாக, அன்றைய அரசியல் நிலைமையில் கருத்து உடையவராக மட்டுமே குறைக்கவும் முற்பட்டார். "ட்ரொட்ஸ்கியுடன் ஒரு வரலாற்று வழிவகை இருந்தது; லெனினிடம் அது இல்லை" என்று குறிப்பிட்ட அவர் மேலும் கூறியது: "ட்ரொட்ஸ்கி தன்னை வருங்காலத்திலும் நிலைநிறுத்துகிறார்; லெனினைப் பொறுத்தவரையில் அவருடைய அரசியல் மைய மூலோபாயம் நிகழ்காலம்தான்."

தேசியப் பொருளாதாரங்கள் முற்றிலும் உலகப் பொருளாதாரத்துடன் இணைந்துவிட்டன என்று வேபர் சுட்டிக் காட்டியதற்கு, தேசிய-அரசிற்கு ஆதரவு கொடுத்த பென்சாய்ட் ஒரு சீர்திருத்த, கீன்சிய பொருளாதாரக் கொள்கைதான் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்க உதவும் என்றார். பிரெஞ்சு வலது, இடது அரசாங்கங்களை அவர் கடிந்து கொண்டற்குக் காரணம், "அவை அரசு அதிகாரம், சந்தை இவற்றிற்கு இடையே மையநிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் சந்தை செயற்பாடுகளுக்கு உறுதி கொடுத்தனர். அங்குதான் நாங்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளோம். கீன்சிய வழிவகையை ஒழுங்காக நிர்வகித்தால், அது முடிந்தால், நாம் ஒரே பாதையில் செல்ல முடியும்."

ஐரோப்பாவை பொறுத்த வரையில் பென்சாய்ட்டின் விழைவுகள் மிகக் குறைவாகத்தான் இருந்தன; "நாங்கள் எதிர்க்கவும் இல்லை, விரோதப் போக்கும் காட்டவில்லை; ஆனால் சமூக, நிதிய ஒழுங்கு முறை வேண்டும், சமன்படுத்துதல் முன்னிபந்தனை என்று நாங்கள் காணவில்லை" என்றார். வெனிசுூலாவின் முதலாளித்துவ தேசியவாதிகள் வழிகாட்டியுள்ளனர் என்றும் நாடு என்பது ஐரோப்பிய பொருளாதார தாராளவாதத்திற்கு எதிரான இயக்கங்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார்.

உலகந்தழுவிய உற்பத்திமுறை உலகத் தொழிலாளர் சந்தை ஆகியவை சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சக்தியாக உருவாகும் தளத்தை கொண்டிருக்கிறது என்ற கருத்தில் இருந்து மிகத் தொலைவாகத்தான் பென்செய்ட் உள்ளார். அவருடைய அவநம்பிக்கைத்தன்மை நிறைந்த, குட்டி முதலாளித்துவ சமூகப் பார்வை மிகவும் தெளிவாக ஆசியா, பிற இடங்களில் மில்லியன் கணக்கானவர்கள் தொழிலாளர் தொகுப்பில் சேர்வது பற்றிக் கூறுவதில் இருந்தது; நீண்ட காலத்திற்கு ஒரு சமூகப் புரட்சி வர வாய்ப்பில்லை என்ற காரணியாகத்தான் அதை அவர் கருதுகிறார்.

"விடுதலை அரசியலுக்கு பெரிய வரலாற்று தோல்வியுடன் இருபதாம் நூற்றாண்டு முடிந்துவிட்டது. இதைக் கூறுவது பெரும் ஏமாற்றத்துடன்தான். எளிதில் இந்தத் தோல்வியில் இருந்து நகர்ந்துவிட முடியாது. ஒருவேளை நாங்கள் நகரக்கூடும்; ஆனால் எவரும் உறுதியளிக்க முடியாது; எப்படிப்பார்த்தாலும் உலகந்தழுவிய சந்தையில் நூறாயிரக்கணக்கான மில்லியன் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு இல்லாமல், சமூக உரிமைகள் இல்லாமல் நுழைவது என்பது பெரிய பிரச்சினையாக இருந்து அடிப்படை வாழ்க்கை தரங்கள், பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றை கீழ் நோக்காக செலுத்தும்" என்றார் அவர்.

இறுதியில் தன்னுடைய PS பார்வையாளர்களுக்கு உறுதி கூறும் வகையில் LCR மார்க்சிச தத்துவத்தில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் விருப்பத்தை கொண்டிருக்கவில்லை என்றார்; உண்மையில் அதற்கு விரோதமாகத்தான் உள்ளது. "பெசன்ஸநோ தலைமுறை லூபென்னுக்கு எதிரானது; அவர்களுக்கு சோசலிச கட்சி நல்ல கட்சி இல்லை என்ற நினைப்பு; அவர்கள் போஸ்ட்மேனுக்காகத்தான் [பெசன்ஸ்நோ] உள்ளனர்; அதற்காக போராடத் தயார்; மற்றவையெல்லாம் பின்னர் கவனிக்கப்படும்... அவர்களுக்கு ரஷ்ய புரட்சி பற்றி வகுப்பு எடுத்தால், பெரும் களைப்பு அடைந்துவிடுவர்."

பென்சாய்டின் பங்கு மற்றும் அவருடைய கட்சியின் பங்கு தொழிலாள வர்க்கத்தை சமூக ஜனநாயக, ஸ்ராலினிச, தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் பிணைத்து அவை உண்மையான புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியாக பிரான்சில் தோன்றாமல் தடுத்து நிறுத்துவது ஆகும்.