World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Sarkozy strives to establish French-British axis

சார்க்கோசி பிரெஞ்சு-பிரிட்டிஷ் அச்சை நிறுவ கடுமுயற்சி செய்கிறார்

By Peter Schwarz
31 March 2008

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வாரம் இரு தினங்கள் பிரிட்டனுக்கு விஜயம் செய்திருந்த பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான கூட்டுக்காக உழைத்தார்.

ஒரு நாட்டின் தலைவர் என்னும் முறையில் இங்கிலாந்திற்கு வருகை புரிந்த சார்க்கோசியும் அவருடைய மனைவி கார்லா புருனியும் பிரிட்டிஷ் விருந்தோம்புவர்களால் பெரும் கெளரவங்களுடன் வரவேற்கப்பட்டனர்; இதில் லண்டன் வழியே இராணியாருடன் குதிரை கோச் வண்டிப் பயணமும், வின்சர் கோட்டையில் இரவு தங்குதலும் அடங்கியிருந்தன. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் இரு பிரிவுகளுக்கும் சார்க்கோசி உரையாற்றி தன்னுடைய உரையை "இருபத்தியோராம் நூற்றாண்டில் ஒரு புதிய பிரான்ஸ்-பிரிட்டிஷ் சகோதரத்துவம்" மலர்வதற்காக பயன்படுத்திக் கொண்டார்.

பிரெஞ்சு ஜனாதிபதி, தன் உரையைக் கேட்பவர்கள் மீது புகழாரம் சூட்டினார்; பிரான்சிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே இருந்த நெருக்கமான பிணைப்பின் நீண்ட வரலாற்றுத் தன்மையை சுட்டிக் காட்டினார். முந்தைய காலங்களில் இங்கிலாந்தும், பிரான்சும் அடிக்கடி போரில் ஈடுபட்டதை கூட நெருக்கமான பிணைப்பிற்கு பயன்படுத்திக் கொண்டார். "பல நூற்றாண்டுகள் பிரான்சும் இங்கிலாந்தும் ஒன்றோடொன்று போராடின. மற்றதை எதிர்த்து ஒவ்வொன்றும் தன் அடையாளத்தை உறுதி செய்யப் பார்த்தது; ஒரேமாதிரியாக இருந்ததால்தான் அவர்கள் போரிட்டனரே அன்றி, பெரும் வேறுபாடுகளை ஒட்டி அல்ல" என்றும் கூறிப்பிட்டார்.

இதன் பின் சார்க்கோசி 1904ம் ஆண்டு பிரான்சும் இங்கிலாந்தும் வட ஆபிரிக்க குடியேற்றங்கள் மற்றும் குறிப்பிட்ட குடியேற்றங்களை இரு நாடுகளுக்கு இடையே பிரித்தல் பற்றிய நட்பு உடன்பாட்டை விவரித்தார். எப்படி இந்த உடன்பாடு முதலாம் உலகப் போரின் போது அவர்கள் கொண்டிருந்த இராணுவ ஒப்பந்தத்திற்கு அடிப்படையாயிற்று என்றும் விளக்கினார். இந்த நட்பு உடன்பாடு இப்பொழுது சீரிய நட்பு உடன்பாடாக வளர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார். இத்தகைய உடன்படிக்கை ஐரோப்பிய ஒன்றியத்திலும் உலகிலும் பிரான்ஸ், இங்கிலாந்தின் உயர்ந்த தன்மையை வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

இரண்டாம் உலகப் போரின்போது பிரான்சிற்கு இங்கிலாந்து அளித்த ஆதரவு பற்றியும் நாடக பாணியில் பிரெஞ்சு ஜனாதிபதி கருத்துக் கூறினார். "ஆங்கில, ஸ்கொட்டிஷ், வேல்ஷ், ஐரிஷ் இரத்தங்கள் எப்படி பிரெஞ்சு இரத்தத்துடன் நிலவறை பதுங்கு குழிகளில் கலந்தன என்பதை பிரான்ஸ் ஒரு போதும் மறக்காது" என்று அறிவித்தார்: "இரு சகோதரர்கள் போல் பிரெஞ்சு மக்களும் பிரிட்டிஷ் மக்களும் தனியாக செயல்படுவதை காட்டிலும் ஒன்றாக மிக அதிகம் சாதிக்க முடியும் என்பதை கடந்த நூற்றாண்டின் போர்கள் காட்டியுள்ளன" என்று நிறைவு செய்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே வருங்காலத்தில் இராணுவரீதியாக வரக்கூடிய ஒத்துழைப்பு பற்றியும் சார்க்கோசி கூறினார்: "இங்கிலாந்தும், பிரான்சும் முக்கிய பங்கைக் கொள்ள உள்ளன" என்று இரு நாடுகளும் உலகம் முழுவதும் இராணுவத்தினர்களை நிறுத்தியிருக்கும் தற்போதைய நிலைமையை குறித்து அறிவித்தார்.

"நாம் இருவரும் எமது பொறுப்புக்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்; கைகளில் ஆயுதம் ஏந்தி சமாதானத்தின் பணியில் நிற்போம். கிட்டத்தட்ட 15,000 பிரெஞ்சு துருப்புகளும் 15,000 பிரிட்டிஷ் துருப்புகளும் உலகின் செயற்பாட்டு போர்க்களங்களில் உள்ளனர். எமது இரு நாடுகளும், நம் கருத்துக்கள் உலகம் முழுவதும் கேட்கப்பட வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளன. சுருங்கக் கூறின், விரும்பினால் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று இணக்கமான முறையில் செயல்படும்."

ஒரு வலுவான உடன்பாட்டை பாராட்டிய சார்க்கோசி முழு உலகிற்கும் இது ஒரு நல்லாசி போல் ஆகும் என்றார். "நம்மைப் போன்ற இரு பழைய நாடுகள் உலகிற்கு தேவையாகும்; நீண்ட காலம் முன்பு வெற்றி கொள்ளுதல், மேலாதிக்கம் செலுத்துதல் என்ற கனவுகளை நாம் கைவிட்டுவிட்டோம்; ஆனால் நீண்ட கால அனுபவத்தை ஒட்டி உலகைப் பற்றி ஒப்புமையில்லா அறிவை தக்கவைத்துள்ளோம்." என்று அறிவித்த அவர், "இங்கிலாந்தும் பிரான்சும் ஒன்றாக இன்னும் கூடுதலான நியாயத்தை விரும்பினால் உலகம் இன்னும் நியாயமாக இருக்கும். இங்கிலாந்தும் பிரான்சும் சேர்ந்து சமாதானத்திற்கு போரிட்டால், உலகம் இன்னும் கூடுதலான முறையில் அமைதியாக இருக்கும்."

ஒரு புதிய மூலோபாய நோக்குநிலை

சில வர்ணனையாளர்கள் லண்டனில் சார்க்கோசி வருகை பற்றி ஐரோப்பாவில் அரசியல் உறவுகளில் அடிப்படை மாற்றத்திற்கு இது ஒரு முன்னோடி எனக் விபரித்துள்ளனர். ஜேர்மனிய-பிரெஞ்சு அச்சில் இருந்து பிரான்ஸ் நகர்ந்துள்ளது பற்றி அவர்கள் குறிப்பிடுகின்றனர்; அதுதான் முன்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பின்னால் இருந்த உந்து சக்தியாக இருந்தது; இங்கிலாந்தின் பால் ஒரு புதிய நோக்குநிலை, மற்றும் மறைமுகமாக அமெரிக்காவுடனும் என்பது, பொருளாதாரத்தில் வலுவாக இருக்கும் ஜேர்மனியை சற்று தள்ளிவைக்கும் நோக்கத்தை இலக்காகக் கொண்டுள்ளது.

குறிப்பாக பல ஜேர்மனிய வர்ணனையாளர்கள் இணக்க ஒப்பந்தம் பற்றிய சார்க்கோசியின் குறிப்புக்கள், இரு உலகப் போர் பற்றிய குறிப்புக்கள் ஆகியவற்றை லண்டனுடன் நெருக்கமான உறவு என்பது பற்றிய அவர் அழைப்பு ஒரு ஜேர்மனிய எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளதற்கு சான்றாக கூறுகின்றனர். Suddeutschen Zeitung TM Rudolph Chimelli எழுதினார்: "பூசல்கள் நிறைந்த வரலாறுகளை கொண்டிருந்த போதிலும், இரு திறத்தாரும் ஜேர்மனி இல்லாத ஒரு புதிய ஐரோப்பிய அச்சை நிறுவ முற்பட்டுள்ளனர்."

அவர் தொடர்ந்தார்: "கால்வாய்க்கு இரு புறத்திலும் ஒரு புதிய விழிப்புணர்வு தோன்றியுள்ளது வெளிப்படையாகும்; இது ஐரோப்பாவில் பழைய பிரச்சினை ஒன்றை புதுப்பிக்கிறது. ஒரு மேலாதிக்கத்திற்கு ஜேர்மனி சிறிய பகுதி என்றாலும் --உலக அரசியலில் விழைவுகள் இல்லாவிடினும்கூட-- சமமானவர்களுக்கு இடையே இருக்கும் செழிப்பான உறவிற்கு அது மிகப் பெரிதாக உள்ளது. ஐரோப்பிய பெருக்கம் என்பது அவருக்கு பிடிக்காத வகையில் பிரான்சின் செல்வாக்கை குறைக்கக்கூடும் என்பதை சார்க்கோசி ஒன்றும் இரகசியமாக வைத்திருக்கவில்லை; ஜேர்மனியின் புவியியல் வகையிலான நடுவிலிருக்கும் நிலைமையில் மாற்றம் ஏதும் இல்லை."

மற்ற வர்ணனையாளர்கள் சார்க்கோசியின் வருகையை இன்னும் அமைதியான முறையில் மதிப்பீடு செய்துள்ளனர். மிக அதிக ஆர்வத்துடன் மேற்கொள்ளப்படும் அவருடைய முன்முயற்சிகள் இறுதியில் எந்த முடிவிற்கும் வருவதில்லை, விரைவில் மறக்கப்பட்டுவிடுகின்றன என்பதை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். Frankfurter Allgemeine Zeitung இன் FAZ இணைய வலைத் தளம் "தீவிர செயற்பாடு உடைய ஜனாதிபதியின் அரசியல் பாணி" பற்றிக் குறிப்பிடுகையில், "சார்க்கோசி ஒரு உரையில் 20 கருத்துக்களை அளிப்பார்; விரைவில் 18 ஐ திரும்பப் பெற்றுக் கொண்டுவிடுவார்" என்றது.

பிரெஞ்சு ஜனாதிபதி அறிவித்துள்ள முன்முயற்சிகளில் நடைமுறை விளைவுகள் உண்மையில் மிகுந்த நிதானமாகத்தான் உள்ளன. மேலும் பிரிட்டிஷ் தரப்பில் அதற்கு விடையிறுப்பு மெளனமாக இல்லை என்றாலும், ஒப்புமையில் சற்று தயக்கத்துடன்தான் உள்ளது.

ஆயினும்கூட, சார்க்கோசியின் லண்டன் பயணம் ஐரோப்பாவிற்குள் உறவுகள் எப்படி அழுத்தமாக இருக்கிறது, பிரான்சிலும் ஐரோப்பாவிலும் ஆளும் உயரடுக்குகள் மகத்தான பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றன என்பதை தெளிவாக்கியது.

சார்க்கோசியின் உத்தியோகபூர்வ விஜயம் 1930 களுக்கு பின்னர் மிகப் பெரிய அளவில் சர்வதேச நிதிய முறையில் வந்துள்ள நெருக்கடியின் பின்னணியில் வந்துள்ளது. பிரான்ஸ், பெரிய பிரித்தானியா இரண்டுமே பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன; இன்னமும் முழுமையாக நெருக்கடியின் பாதிப்புக்கள் உணரப்படவில்லை. ஆயினும் கூட சார்க்கோசி, லண்டனில் நடந்த நிதிய நெருக்கடி பற்றி ஒரு சொல் கூடக் கூறவில்லை.

பிரெஞ்சு ஜனாதிபதியின் பகட்டான விஜயத்தை சுழ்ந்திருந்த உண்மையற்ற ஒளி வட்டத்தின் தன்மை சில நேரம் விந்தையான வடிவங்களை கொண்டது. இங்கிலாந்தை ஒரு பொருளாதார முன்மாதிரி என்று சார்க்கோசி பாராட்டி, "உலகப் பொருளாதாரத்தில் வலுவான வளர்ச்சி, முழு வேலை நிலை, ஒற்றுமை ஆகிவற்றை அடைய வழி உள்ளது என்பதை இது காட்டியுள்ளது." என்றார். மேலும், "இப்பாதை முயற்சியின் மதிப்பை மீட்டு புதுமையான கண்டுபிடிப்புக்களை ஊக்குவித்தல், நிறுவனத்தின் உணர்வு, சொந்தப் பொறுப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் சீர்திருத்த தன்மையையை காட்டுகிறது" என்றும் கூறினார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் திவாலாய்போன Northern Rock அடைமான வங்கியை இப்பொழுதுதான் தேசியமயமாக்கியது என்பது பற்றி சார்க்கோசி அறியாதவர் அல்ல; பொதுமக்கள் நிதியில் இருந்து கிட்டத்தட்ட 110 பில்லியன் பவுண்டுகள் அவ்வங்கியின் ஊகச் செயற்பாடுகளுக்காக உறுதியாக கொடுக்கப்பட்டுள்ளன என்பதையும் அறிவார்.

பிரெஞ்சு வங்கிகளும் நிதிய நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளன; அமெரிக்க டாலரின் குறைந்த மதிப்பு பிரெஞ்சு தொழில்துறைக்கு இடர்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பிரான்ஸ் அதிக வணிகப் பற்றாக் குறையை கொண்டுள்ளது. ரைனுக்கு அப்பால் உள்ள அதன் அண்டை நாடு, ஒருகாலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பிரான்சின் முக்கிய பங்காளியாக இருந்தது, பாரிசில் கூடுதலான வகையில் ஒரு போட்டி நாடாகத்தான் கருதப்படுகிறது.

இதைத்தவிர, ஜேர்மனி, பெரிய பிரித்தானியா இவற்றிற்கு மாறாக, பிரான்ஸ் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் விகிதத்தில் பொதுச் செலவினங்களை குறைப்பதில் வெற்றி அடையவில்லை. அதுதான் அதன் உலக போட்டித் தன்மைக்கும் மகத்தான தடையாக உள்ளது. சமூகப் பணிகள் செலவுகளை குறைக்கும் முயற்சிகள் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை தொடர்ந்து சந்திக்கின்றன. பிரான்சில் பொதுச் செலவினங்கள் இப்பொழுது 53.5 சதவீதம் என மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிக்கும் மேல் ஆகும்; ஜேர்மனியில் இது 46 ஆகவும் பெரிய பிரித்தானியாவில் 44 சதவீதமாகவும் உள்ளது.

பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் உடன்பாடு என்ற அளிப்பைக் கொடுக்கையில், சார்க்கோசி இப்பிரச்சினைகளை ஒரு நடைமுறை மற்றும் சரியான முறையில் கலக்கப்படாத மூலோபாய இலக்குகள், பொருளாதார அரசியல் முயற்சிகள் என்பவற்றுடன் தீர்க்க முயல்கிறார். ஒரு விஷயத்திலேனும் பிரிட்டிஷ் பிரதமருடன் இவர் ஒற்றுமையை கொண்டிருக்கிறார்: வாக்காளர்களிடைய இருவரும் புகழ் பெற்றிருக்கவில்லை. சார்க்கோசியும் கோர்டன் பிரெளனும் கருத்துக் கணிப்பில் வரலாறு காணாத அளவு குறைமதிப்பில் உள்ளனர்.

ஜேர்மனியுடன் போட்டி

சார்க்கோசியின் லண்டனுடன் நெருக்கமான ஒத்துழைப்பு என்பதற்கு மிக முக்கியமான காரணம் ஜேர்மனியுடன் பிரான்ஸ் கொண்டுள்ள போட்டி தீவிரமாகிக் கொண்டிருப்பதுதான். பனிப்போர் காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டமைப்பை பயன்படுத்திக் கொண்டு பிரான்ஸ் அதன் வலுவான பொருளாதாரத்தையுடைய அண்டை நாட்டை அரசியலில் மேலாதிக்கம் பெற முடியாமல் பார்த்துக் கொள்ள முடிந்தது. ஜேர்மனிய-பிரெஞ்சு பங்காளித்தனத்தின் சீரிய காலம் என்று அது கூறப்பட்டது. ஆனால் ஜேர்மனி மறு ஐக்கியம் அடைந்த பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு விரிவாக்கம் கண்ட பின்னர், பிரான்சின் நிலைமை மாறிவிட்டது.

ஜேர்மனி இன்னும் பெரிதாகவும் செல்வாக்கு மிகுந்ததாகவும் மாறிவிட்டது. 82 மில்லியன் மக்கட் தொகையை அது கொண்டுள்ளது; பிரான்சில் 64 மில்லியன்தான் உள்ளனர். உள்நாட்டு மொத்த உற்பத்தி ஜேர்மனியில் 2.3 டிரில்லியன் யூரோ; இது பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 520 பில்லியன் அதிகமாகும். அதன் புவியியல் நிலைப்பாடு மற்றும் ஏற்றுமதி அடிப்படைப் பொருளாதாரத்தினால் ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு விரிவாக்கம் பெற்றதில் கூடுதலான நலன்களை கொண்டுள்ளது. புதிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் ஜேர்மனியின் வணிகம் 10 சதவீதம் என்றுள்ளது; பிரான்சுக்கு ஒப்புமையில் 4 சதவீதம்தான் உள்ளது. மேலும் ஜேர்மனிக்கு பொருட்களை விற்கும் கட்டாயத்தில் பிரான்ஸ் உள்ளது; அந்த நிர்ப்பந்தம் ஜேர்மனிக்கு இல்லை. பிரான்சின் ஏற்றுமதிகளில் பதினைந்து சதவீதம் ரைன் கடந்து ஜேர்மனிக்கு செல்லுகிறது; ஆனால் ஜேர்மனியில் இருந்து பிரான்சுக்கான ஏற்றுமதிகள் 10 சதவீதம்தான்.

உலகச் சந்தையிலும் ஜேர்மனி ஒரு வலுவான நிலையில் உள்ளது. ஜேர்மனியின் வணிகத்தில் பாதி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு புறத்தே உள்ளது; பிரான்சிற்கு இந்த சதவீதம் 40 ஆகும். ஜேர்மனி வணிக உபரியை 200 பில்லியன் யூரோக்கள் என்று கொண்டுள்ளது, பிரான்சோ 40 பில்லியன் யூரோக்கள் பற்றாக்குறையில் இருக்கிறது.

ஜேர்மனியின் மேன்மையை குறைக்கும் பிரெஞ்சு முயற்சிகள் பேர்லினால் எதிர்க்கப்படுகின்றன. சமீபத்தில் ஜேர்மனிய அதிபரான அங்கேலா மேர்க்கெல் சார்க்கோசி கூறியிருந்த மத்தியதரைக் கடல் ஒன்றிய திட்டத்தை தகர்த்தார். பிரான்சின் தலைமையில் அந்த ஒன்றியம் மத்தியதரக் கடல் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளையும் தழுவி ஜேர்மனிய மேலாதிக்கத்தில் இருக்கும் கிழக்கு ஐரோப்பாவிற்கு எதிர் கனத்தை அளித்திருக்கும். மார்ச் மாதத் தொடக்கத்தில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய மாநாடு ஒன்று மிகவும் நீர்த்த திட்டத்திற்கு உடன்பட்டது; அதில் முதல் திட்டத்தின் பெயர் மட்டும்தான் எஞ்சி இருக்கிறது. பழைய "பார்சிலோனா வழிவகையை" அது மாற்றுகிறது; பிரான்சுக்கு ஒன்றியத்தில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறதோ அதே அளவு செல்வாக்கை ஜேர்மனியும் கொண்டுள்ளது.

ஐரோப்பிய மத்திய வங்கியின் சுதந்திரத்தை குறைக்கும் பிரான்சின் திட்டங்களையும் ஜேர்மனி வீழ்த்திவிட்டது; அவ்வங்கிதான் யூரோவின் உறுதித் தன்மைக்கு பொறுப்பை கொண்டுள்ளது.

சார்க்கோசியின் லண்டன் உரை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இங்கிலாந்திற்கு அவர் கூடுதலான பங்கைக் காண்கிறார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இப்பிரச்சினை குறித்து அவர் பல முறை பேசினார். ஒரு ஐக்கியப்பட்ட ஐரோப்பாவிற்கு வின்ஸ்டன் சேர்ச்சில் அழைப்பு விடுத்ததைப் பற்றி சார்க்கோசி குறிப்பிட்டார். ஐரோப்பாதான் "எமது பொது எதிர்காலம்" என்று அறிவித்த அவர் இங்கிலாந்துடன் நெருக்கமான ஒத்துழைப்பிற்கு முறையிட்டார்; இந்த ஆண்டின் இரண்டாம் பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை பிரான்ஸ் மேற்கொள்ளும்.

இராணுவரீதியான ஒத்துழைப்பு

பெரிய பிரித்தானியாவுடன் இன்னும் நெருக்கமான இராணுவ பிணைப்புக்களுக்கும் சார்க்கோசி அழைப்பு விடுத்தார். 1998ல் அப்பொழுது பிரெஞ்சு ஜனாதிபதியாக இருந்த ஜாக் சிராக்கும் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த டோனி பிளேயரும் செயின்ட் மாலோவில் கொண்ட உடன்படிக்கை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று இவர் விரும்புகிறார். இந்த உடன்பாடு ஐரோப்பிய பாதுகாப்புக் கொள்கையின் தன்னாட்சி தொடக்கமாக, பிரிட்டிஷ்-பிரெஞ்சு தலைமையில் இருந்திருக்கும். ஆனால் இது செயல்படுத்தப்படவில்லை; ஏனெனில் ஐரோப்பிய அரசாங்கங்கள் அதற்கு தேவையான வளங்களை கொடுக்கவில்லை; லண்டன் பலமுறையும் அமெரிக்கா, மற்றும் அமெரிக்க ஆதிக்கத்திற்கு உட்பட்ட நேட்டோவின் பக்கம் செயல்பட்டது.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு ஆற்றிய உரையில் சார்க்கோசி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அணுவாயுத சக்திகளாக இருத்தல், ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் தடுப்பதிகார அந்தஸ்து பெற்றுள்ளது ஆகியவை பற்றி வெளிப்படையாகவே குறிப்பிட்டார். "நாம் ஒன்றாக விவாதிப்போம், ஒன்றாக முடிவெடுப்போம், ஒன்றாகச் செயல்படுவோம். அனைத்தும் அதை நியாயப்படுத்தும்: அதாவது எம்முடைய பொது அந்தஸ்து பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர்கள், அணுவாயுத சக்தி என்ற நம் பொறுப்பான தன்மை, உலகின் பகுதிகளில் நாம் செலுத்தும் செல்வாக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தில் நாம் கொண்டிருக்கும் பொது உறுப்பினர் தன்மை, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றிற்கு நாம் கொண்டுள்ள உறுதிப்பாடு ஆகியவையே அவை."

"பிரான்சும் இங்கிலாந்தும் எமது ஐரோப்பிய பங்காளி 25 நாடுகள் செலவழிக்கும் பாதுகாப்பு தொகையில் மூன்றில் இருபங்குகளை கொண்டுள்ளோம்; அவர்களுடைய ஆய்வு முயற்சிகளைப் போல் இரு மடங்கு கொண்டுள்ளோம்" என்று அவர் வலியுறுத்தினார்.

இங்கிலாந்து, அமெரிக்காவுடன் நெருக்கமான பங்காளித்தனத்தை அடையும் வகையில், சார்க்கோசி பிரான்சை மீண்டும் நேட்டோ கட்டுப்பாட்டு அமைப்புக்களுடன் இணைத்துக் கொள்ள தயாராக இருக்கிறார்; அதில் இருந்து 1966ம் ஆண்டு பிரெஞ்சு ஜனாதிபதி சார்ல்ஸ் டு கோல் பிரான்சை நீக்கியிருந்தார்.

ஆப்கானிஸ்தானத்திற்கு தற்போதைய நேட்டோ படைகளுக்கு ஊக்கம் கொடுக்க கூடுதலாக 1,000 துருப்புக்களை அனுப்புவதாக சார்க்கோசி உறுதியளித்தார். பிரான்சில் வேறு எவருடனும் இது பற்றி சார்க்கோசி கலந்தாலோசித்தாக தெரியவில்லை.

அமெரிக்காவும் இங்கிலாந்தும் நீண்ட காலமாகவே மற்ற நேட்டோ உறுப்பு நாடுகள் கூடுதலான படைகளை அனுப்ப வேண்டும் என்று முறையிட்டு வந்துள்ளன. வல்லுனர்களின் கருத்தின்படி நேட்டோவின் தலைவிதியே ஆப்கானிஸ்தானில் அது பெறும் வெற்றி மற்றும் தோல்வியை பொறுத்துத்தான் உள்ளது.

நேட்டோவின் பங்கு பற்றிய பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் கருத்துக்கள் ஒரு ஐக்கியப்பட்ட தன்மையை காட்டுபவையாக இல்லை. ஐரோப்பாவின் இராணுவ வலிமையை வலுப்படுத்துவது பற்றி இராணுவ உடன்பாடு ஒரு வழிவகை என்னும் சார்க்கோசியின் கருத்து அமெரிக்காவின் சக்திக்கு உறுதியான தடை என செயல்படும்; அதுவோ நேட்டோவின் கட்டுப்பாட்டு அமைப்பை கடக்கும் முறையில் அதன் "உடன்படும் கூட்டணிகளை" கொண்டுள்ளது. பிந்தைய கொள்கையோ இங்கிலாந்தின் ஆதரவிற்கு உட்பட்டது ஆகும்.

அணுசக்தியும் சமூக "சீர்திருத்தங்களும்"

இங்கிலாந்துடன் இராணுவ பிணைப்புக்களுடன், சார்க்கோசி அணுசக்தி தொழில்நுட்ப வளர்ச்சி பகிர்வு பற்றி நெருக்கமான ஒத்துழைப்பை விரும்புகிறார். இரு நாடுகளும் அவற்றின் தற்போதைய, வருங்கால ஆற்றல்தேவைகளை அணுசக்தி உலைக்கூடங்களின்மீது கொண்டுள்ளன; அவற்றை சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வழிவகையாகவும் காண்கின்றன. இங்கிலாந்தின் ஆற்றல் நுகர்வில் 20 சதவிகிதம் அணுசக்தி ஆலைகளில் இருந்து வருகின்றன; அவற்றில் சில முதுமை அடைந்துவிட்டன; அவற்றிற்கு பதிலாக புதிய ஆலைகள் கட்டப்பட வேண்டும். பிரான்சில் இந்த சதவீதம் 80 ஆகும்.

இங்கிலாந்தின் புதிய அணுசக்தி ஆலைகள் கட்டமைக்கப்படுதல் என்பது பிரான்சின் பல மில்லியன் யூரோ ஒப்பந்தங்களை பிரெஞ்சு தொழில்துறைக்கு கொடுத்து அதற்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை உலகம் முழுவதற்கும் விற்கும் வாய்ப்பையும் அதிகரிக்கும். இத்துறையில் பிரான்ஸ் ஜேர்மனியின் இழப்பில் ஆதாயத்தை பெறும்; ஜேர்மனி முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக் கட்சிக் கூட்டணி அரசாங்கம் இயற்றிய புதிய அணுசக்தி ஆலைகள் தடுப்புச் சட்டத்தினால் பாதிப்பில் உள்ளது.

இறுதியாக, சார்க்கோசி பிரிட்டிஷ் தொழிற் கட்சியின் பிரதம மந்திரி பிரெளனிடம் இருந்து சமூக "சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கு" ஆதரவைப் பெறும் நம்பிக்கையை கொண்டுள்ளார். பிரெஞ்சு மக்களின் உறுதியான எதிர்ப்பில் அது அகப்பட்டுக் கொண்டுள்ளது. பிரிட்டிஷ் பொருளாதாரக் கொள்கைகளை முன்மாதிரி என்று அவர் பாராட்டி, கூடியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியளிக்கும் வகையில் கூறினார்: "இன்னும் கூடுதலான உறுதிப்பாட்டுடன் விரைவாக பிரான்ஸ் சீர்திருத்தங்களை செய்யும்; ஏனெனில் பல காலம் தள்ளிப்போட்டதால், அதிகம் இனி நாங்கள் காத்திருக்க முடியாது. இவ்விதத்தில் என்னுடைய முழு உறுதியை நீங்கள் நம்பலாம்."