World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US financial system faced collapse, bank regulators tell Senate hearing on Bear Stearns bailout

Bear Stearns பிணையெடுக்கப்பட்டது பற்றிய செனட் விசாரணையில் வங்கிக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அமெரிக்க நிதிய முறை பொறிவை எதிர்நோக்கியது என்று கூறினர்

By Barry Grey
4 April 2008

Use this version to print | Send this link by email | Email the author

வியாழனன்று செனட்டின் வங்கிக் குழு விசாரணையின்போது, உயர்மட்ட நிதியக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கி வாரியத்தால் Bear Stearns முதலீட்டு வங்கி தோல்வி அடையாமல் தடுப்பதற்காக கடந்த மாதம் எடுக்கப்பட்ட முன்னோடியில்லாத நடவடிக்கைகள் முழு அமெரிக்க நிதிய முறையின் பொறிவையும் அகற்றுவதற்காக எடுக்கப்பட்டன என்று கூறினர்.

அமெரிக்க மத்திய றிசேர்வ் வங்கி வாரியத் தலைவர் பென் பெர்னன்கே, நியூ யோர்க் மத்திய வங்கியின் தலைவர் டிமோதி கீத்னெர், பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைக்குழு (SEC) தலைவர் கிறிஸ்டோபர் காக்ஸ், உள்நாட்டு நிதித்துறை உதவிச் செயலர் ரோபர்ட் கே. ஸ்டீல் ஆகியோர் அரசாங்கம் Bear Stearns இனை பிணையெடுக்க உதவிய நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்தும், அனைத்து முக்கிய அமெரிக்க முதலீட்டு வங்கிகளுக்கும் மத்திய றிசேர்வ் வங்கி நிதியங்களின் கடன் வழங்கப்படும் என்ற முடிவையும் வோல் ஸ்ட்ரீட்டின் பெருகிய பீதி ஏற்படலை தொடர்ந்து எடுக்கப்பட்ட அவசரகால நடவடிக்கைகள் என்றும், அந்த பீதி JP Morgan Chase நிறுவனம் Bear Stearns ஐ அரசாங்க உதவியுடன் எடுத்துக் கொள்ளுவதற்கு சில நாட்கள் முன்பு உச்சக் கட்டத்தை அடைந்திருந்தது என்றும் கூறினர்.

வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்களை முட்டுக் கொடுத்து நிறுத்துவதற்கு வரிசெலுத்துவோரின் பல பில்லியன் டாலர்களை ஒதுக்குவதை நியாயப்படுத்துவதில் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எதிர்கொள்ளும் நெருக்கடி பற்றி ஆபத்து நிறைந்த சித்திரத்தை கொடுப்பதில் அக்கறை கொண்டிருந்தனர் என்றாலும் மார்ச் 14-17 வார இறுதியில் காணப்பட்ட பேரழிவுத் தன்மை நிறைந்த காட்சி மிகவும் உண்மையான தன்மையைத்தான் கொண்டிருந்தது. ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் "ஒரு கடினப் பகுதி" என்று அழைத்திருந்த வரலாற்றுத் தன்மை கொண்ட நிதிய நெருக்கடி இருந்தது ஒப்புக் கொள்ளப்பட்டதே ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் என்ற உண்மையானது பொருளாதார நெருக்கடியின் ஆழ்ந்த பாதிப்பு பற்றிய அசாதாரணமான சான்று ஆகும்.

அதிகாரிகளில் எவரும், செனட்டர்களின் வங்கிக் குழுவில் எவரும் தொடாத கருத்து என்னவென்றால் இத்தகைய பேரழிவுத் திறன் இருக்கக் கூடிய நெருக்கடியின் வளர்ச்சியானது, அமெரிக்க முதலாளித்துவத்தின் நிலைமை, தன்மை பற்றியும், வோல் ஸ்ட்ரீட்டில் இருக்கும் தலைமை நிர்வாக அதிகாரிகள் அவர்களிடத்தில் இருப்பதாகக் கூறப்படும் மாற்ற முடியாத நிபுணத்துவ தன்மையை பல மில்லியன் டாலர் ஊதியம் வாங்குவதற்கு நியாயப்படுத்தும் போலிப் பொறுப்பு பற்றியும் என்ன சொல்கிறது என்பதாகும்.

Bear Stearns மீட்பு மற்றும் மத்திய வங்கியால் எடுக்கப்பட்ட தொடர்ந்த நடவடிக்கைகள் நெருக்கடியை தீர்த்துவிட்டன என்பதற்கு பதிலாக, குழுவிசாரணையில் உயர்மட்ட குடியரசுக் கட்சி தலைவரான அலபாமாவின் ரிச்சர்ட் ஷெல்பியால் எழுப்பப்பட்ட, இத்தகைய மற்றொரு நெருக்கடிக்கு பிணையெடுத்தல் வருவதற்கான வாய்ப்புக்கள் எப்படி உள்ளன என்ற வினாவிற்கு உதவிச்செயலாளர் ஸ்டீல் "மற்றொரு பிரச்சினை வராது எனத் தான் கூறுவதற்கில்லை" என்றார்.

குழுவில் இருந்த மூத்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் தலைமையில் தங்களையே பாராட்டிக் கொள்ளும் தன்மையில் இருந்த செனட்டர்களின் நடத்தை உண்மையில் அமெரிக்காவில் யார் அதிகாரம் செலுத்துகின்றனர் என்பது பற்றி சந்தேகத்திற்கு விடவில்லை. நிதியத் தவறுகள், ஊகங்கள், கடன்வாங்கப்பட்ட பணத்தில் இருந்து முன்னோடியில்லாத அளவில் சூதாட்டம் நடத்தியது, இவற்றால் மில்லியன் கணக்கான அமெரிக்க குடும்பங்களுக்கு சமூகப் பேரழிவு விளைந்தது ஆகியவற்றை கண்காணித்து எளிமைப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிரே அமர்ந்திருந்த பெரும்பாலான செனட் உறுப்பினர்கள் நிதிய உயரடுக்கிற்கு தங்கள் மரியாதையை புலப்படுத்த கூடியிருந்த கட்டுப்பாட்டு அதிகாரிகளின் நிரூபணச் செயலை பெரிதும் பாராட்டினர்.

விசாரணைக் குழுவின் தலைவரான ஜனநாயகக் கட்சி செனட்டர் கனக்டிக்கட்டின் கிறிஸ்தோபர் டோட் தன்னுடைய தொடக்க உரையில் பல முறை Bear Stearns பிணையெடுக்கப்பட்டது மற்றும் நிதிய சந்தைகள் பிணையெடுக்கப்பட்டது ஆகியவை "சரியான திசையில்" எடுக்கப்பட்ட முடிவுகள் என்றார். பெர்னன்கேயையும் மற்ற அதிகாரிகளுக்கும் சட்டமன்றம் தொகுத்தளித்த வினாக்களுக்கு விடையளிப்பதில் அவர்கள் காட்டிய "பொறுமைக்கும்" பெரிதும் நன்றி செலுத்தினார்.

அவருடைய ஒரே குறைகூறல் அமெரிக்க மத்திய றிசேர்வ் வங்கி தன்னுடைய தள்ளுபடிதரும் ஜன்னலில் இருந்து வோல் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கிகளுக்கு சற்று முன்னதாகவே பணத்தை கடனாக அள்ளித் தந்திருக்கலாம் என்பதுதான்.

நியூ யோர்க்கின் ஜனநாயகக் கட்சி செனட்டர் சார்ல்ஸ் ஷ்யூமர் கூறினார்: "மத்திய றிசேர்வ் வங்கிக்கு வேறு விருப்பம் இல்லை, இது செய்யப்பட்டே ஆகவேண்டும் என்பது பற்றி அனைவரும் உடன்பட்டுள்ளனர்." டிலாவரில் இருக்கும் ஜனநாயகக் கட்சி செனட்டர் டாம் கார்ப்பெர், "மத்திய றிசேர்வ் வங்கி செய்தது ஒப்புக் கொள்ள வேண்டியதுதான் என்பது நாளின் இறுதி முடிவாகும்" என்றார். இந்தியானாவின் ஈவான் பேய் அறிவித்தார்: "நீங்கள் சரியான முடிவு எடுத்தீர்கள்." ரோட் ஐலண்டின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜாக் ரீட், "ஒரு பெரிய நெருக்கடியில் இருந்து அகற்றியதற்காக உங்களுக்கு நன்றி; அது பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கக் கூடும்." என்றார்.

கென்டக்கியின் வலதுசாரி குடியரசுக் கட்சி செனட்டர் ஜிம் பன்னிங்தான் பேர்ஸ்டேர்ன்ஸ் பிணையெடுக்கப்பட்டதை சுதந்திர சந்தை முறைக்குக்கும் "சோசலிச" வடிவத்திற்கும் ஒரு அவமதிப்பு, என்று வர்ணித்த ஒரே முரண்பாடான குரல் ஆகும்.

மத்திய றிசேர்வ் வங்கி தலைவர் பெர்னன்கே தன்னுடைய சாட்சியத்தை தற்போதைய நிதி நிலைமை பற்றி கவலைதரும் சித்திரத்துடன் தொடங்கினார். "சமீபத்தில் ஓரளவு நிலைமை முன்னேற்றம் அடைந்துள்ளது என்றாலும், நிதியச் சந்தைகள் கணிசமான அழுத்தத்தில் உள்ளன. குறுகிய கால நிதிகள் சந்தையில் உள்ள அழுத்தங்கள் கடந்த ஆண்டு கடைசியில் தொங்கியதைவிடச் சற்று குறைந்திருந்தவை, மீண்டும் அதிகமாகிவிட்டன."

"மாற்றுத் தரப்பினருக்கு கடன் கொடுப்பவர்கள் கடன் கொடுக்கப் பெரிதும் தயக்கம் காட்டுகின்றனர்; குறிப்பாக பிறவற்றிற்கு சகாயம் செய்யும் முதலீட்டாளர்களுக்கு; அதே போல் குறுகிய கால பத்திரங்களுக்கு பணம் கொடுக்கும் உடன்பாடுகளுக்கு தேவையான இணை அடைமான ஆதரவிற்கான பணத்தை அதிகப்படுத்தவும் தயங்குகின்றனர். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற, முதலீட்டாளர்கள் தங்கள் சகாயம் செய்யும் மற்றும் பத்திரங்களின் இலகுவில் பணமாக்க கூடிய தரங்களையும் குறைக்க வேண்டியுள்ளது; இது பத்திரங்களின் விலைகள் மீது கீழ்நோக்கும் அழுத்தங்களை கூடுதலாக கொடுக்கிறது."

"கடன் கிடைத்தல் என்பதும் தடைக்கு உட்பட்டுள்ளது; ஏனெனில் சில பெரிய நிதிய நிறுவனங்கள், வணிக, முதலீட்டு, அரசாங்க ஆதரவுடைய நிறுவனங்கள் உட்பட, கணிசமான இழப்புக்கள், தள்ளுபடி ஆகியவற்றை செய்து தாங்கள் கொடுக்கக்கூடிய மூலதனத்தை பெருகிய கடனுக்கு ஆதரவாகக் கொடுக்க முடியவில்லை. சில முக்கிய பத்திரப்பிரிவு சந்தைகள், முறைசாரா அடைமானங்கள் உட்பட, மிக மோசமான நிலையில்தான் செயல்படுகின்றன."

நிதியச் சந்தைகளில் மகத்தான பணத்தை கொடுத்த நடவடிக்கைகள் பற்றி அவர் கோடிட்டுக்காட்டி மத்திய வங்கி செய்துள்ள வட்டிவிகிதத்தில் அதிக வெட்டுக்கள் என்பது வீடுகள் மற்றும் கடன் சந்தைகள் நெருக்கடியை எதிர்கொள்ளும் முயற்சிகள் என்று கூறினார். மார்ச் 13ம் தேதி இந்தப் பின்னணியில்தான் Bear Stearns, அடுத்த சில நாட்களில் அரசாங்கம் தலையிடவில்லை என்றால் தான் திவாலை பதிவு செய்ய நேரிடும் என்பதைக் கூறியது என்றார் அவர்.

Bear Stearns சரிவு என்னும் நிலை "ஒரு நிறுவனத்தின் விதி என்பதற்கு மிகவும் அப்பால் பல பிரச்சினைகளை எழுப்பியது" என்று அவர் தொடர்ந்தார். "Bear Stearns திடீரென தோற்றது என்பது சந்தைகளில் பெரும் குழப்பங்கள் தரக்கூடிய நிலைமைகளை ஏற்படுத்தி நம்பிக்கையை கடுமையாக அதிர்விற்கு உட்படுத்தியிருக்கும். நிறுவனத்தில் தோல்வி Bear Stearns இன் ஆயிரக்கணக்கான மாற்றுச் செயற்பாடுகளின் நிதிய நிலைமை பற்றியும் சந்தேகம் எழுப்பியிருக்கும்; இதே போன்ற செயல்களில் ஈடுபட்ட மற்ற நிறுவனங்களின் நம்பகத்தன்மை பற்றியும் வினாக்களை எழுப்பியிருக்கும்" என்று இதைப்பற்றிய பாதிப்பை அடிக்கோடிட்டுக் கூறினார்.

"உலகப் பொருளாதாரம், நிதிய முறை இவற்றில் இருக்கும் அசாதாரண அழுத்தங்களை காணும்போது, பேர் Bear Stearns இன் பிழை கட்டுப்படுத்த முடியாமல் மிகவும் கடுமையாக போயிருக்க கூடும். மேலும் பிழையின் எதிர் பாதிப்பு நிதிய முறையோடு நின்றிருக்காமல் சொத்துக்கள் மதிப்புக்கள், கடன்கள் கிடைக்கும் தன்மையில் அதன் பாதிப்புக்கள் மூலமாக உண்மையான பொருளாதாரத்திலும் பரந்த அளவில் உணரப்பட்டிருக்கும்."

வினா-விடை நேரத்தில், மத்திய றிசேர்வ் வங்கி நடவடிக்கைகள் Bear Stearns ஐ பிணையில் எடுக்கும் முயற்சிகள் என்று வர்ணிக்கப்படுவது பற்றி பெர்னன்கே எதிர்ப்பு தெரிவித்தார். நிறுவனத்தில் பங்குதாரர்கள் மகத்தான இழப்புக்களை அடைந்துள்ளனர் என்றும் கூறினார். இப்பிரச்சினை நிதிய முறைக்கு பரந்த அச்சுறுத்தல் பற்றியது என்று அவர் வலியுறுத்தினார். "மற்ற நிறுவனங்கள், சந்தைகள் பற்றி நான் கவலைப்பட்டுள்ளேன்; பொதுவாக சந்தைகளை காப்பாற்றுகிறோம் என்று நீங்கள் கூறினால், அது சரியாக இருக்கும் என்று நான் நினைப்பேன்" என்றார் அவர்.

ஒரு முதலீட்டு வங்கியின் தோல்வி முழு நிதிய முறையையும் எப்படிச் சரிவடையச் செய்ய முடியும் என்ற வினாவிற்கு விடையிறுக்கையில், பெர்னன்கே இந்த நெருக்கடி, "நெருக்கடி செழுமையின்" விளைவினால் ஏற்பட்டது என்றும், அதில் மகத்தான முறையில் கடன் பெருக்கம் இருந்தது, "மிக அதிகமான முறையில் ஆபத்து எடுத்துக்கொள்ளுதல்", மற்றும் "பங்குகள் மதிப்பை எடுத்துக் கொள்ளுவதில் சரிவை எடுத்துக் கொள்ளுதல்" போன்றவை இருந்ததாகக் கூறினார்.

முக்கிய வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்களின் தலைமைகளை, வங்கி முறையை ஒரு மாபெரும் காசினோ முறையைப் போல் பயன்படுத்தியதற்காக ஏன் பொறுப்பு ஏற்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தக் கூடாது என்று எந்த செனட்டரும் ஆலோசனையை தெரிவிக்கவில்லை.

இப்படி வரவிருக்கும் தவிர்க்க முடியாத பேரிடர் என்ற பல்லவிதான் மற்ற சாட்சிகளாலும் கூறப்பட்டது. SEC தலைவர் காக்ஸ் கூறினார்: "இந்நிகழ்ச்சிகளின் மையத்தில், மத்திய றிசேர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் --குறிப்பாக தள்ளுபடி வழி மூலம் உதவி பெறலாம் என்பது Bear Stearns க்கு மட்டுமில்லாமல் முக்கிய முதலீட்டு வங்கிகளுக்கும் என்றது--வருங்காலத்தில் வங்கிகளை நோக்கி பணத்தை எடுப்பதற்காக அனைவரும் நாடுவதைத் தவிர்க்கும் வகையில் அமைந்திருந்தது."

நிதியச் சந்தைகளில் ஏற்பட்டிருந்த நம்பகத்தன்மை நெருக்கடி மிகத் தீவிரமான கட்டத்தை மார்ச் 13ம் தேதி அடைந்தது; Bear Stearns "தன்னுடைய உயர்தர இணை அடைமானச் சொத்தை காட்டிக்கூட" கடன் வாங்க முடியவில்லை; "இது ஒரு முன்னோடியில்லாத நிகழ்வு ஆகும்." என்று அவர் குறிப்பிட்டார்.

நியூ யோர்க் மத்திய றிசேர்வ் வங்கித் தலைவர் கீத்நெர், Bear Stearns இன் எச்சரிக்கையான திவால் அறிவிக்கப்பட இருந்தது, மோர்கன் சேஸ் மார்ச் 16 அன்று முதலீட்டு வங்கியை எடுத்துக் கொள்ளப் போவது என்பதற்கிடையிலான, மத்திய றிசேர்வ் வங்கி, நிதித்துறை, SEC, Bear Stearns, ஜே.பி. மோர்கன் சேஸ் ஆகியவை சம்பந்தப்பட்ட 96 மணி நேரத்தில் இடைவிடாமல் நாட்கள் முழுவதும் நடந்த பேச்சுவார்த்தைகளை சற்று விரிவாக கோடிட்டுக் காட்டினார்.

மத்திய கட்டுப்பாட்டு அதிகாரிகள் அமெரிக்க நேரம் ஞாயிறு இரவு ஆசிய சந்தைகள் திறக்கப்படுவதற்கு முன்னர் ஒரு உடன்பாடு காணவேண்டும் என்று நம்பியதாக தெளிவுபடுத்தினார்; அப்பொழுதுதான் முழு அளவு பெரும் பீதி தவிர்க்கப்பட்டிருக்க முடியும். Bear Stearns எடுத்துக் கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வந்த பின்னரும் கட்டுப்பாட்டு அதிகாரிகள், பிற முதலீட்டு வங்கிகளும் திங்களன்று காலை சந்தை திறந்தவுடன் தோல்வி அடையலாம் என்று கருதியதாக தெரிவித்தார். இதுதான் மத்திய வங்கி தள்ளுபடி வழி அனைத்து முதலீட்டு வங்கிகளுக்கும் அனுமதிக்கப்படும் என்று கூற உந்துதல் கொடுத்தது, இது பொருளாதார பெருமந்தநிலை காலத்திற்கு பின்னர் இப்பொழுதுதான் அவ்வாறு நடைபெறுகிறது என்றார்.

இதன்பின் அவர் வருங்காலத்தை பற்றிய உறுதியான, நிதானமான முன்கண்டறிதலை அளித்தார். "நிதிய நெருக்கடி முறை ஏற்படக்கூடிய ஆபத்தை குறைத்த அளவில், மத்திய றிசேர்வ் வங்கி மார்ச் 14, அதற்கு பின்னர் எடுத்த நடவடிக்கைகள் பொருளாதரத்திற்கு கடுமையான சேதத்தை தவிர்க்க உதவின; அவை தற்காலிக அமைதித்தன்மையை உலக நிதியச் சந்தைகளுக்கு கொண்டுவந்துள்ளன.... ஆயினும்கூட சந்தைகளில் இருக்கும் இலகுவில் பணமாக்ககூடிய நிலைமைகள் இன்னும் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளன; மறுபடியும் ஊக்கம் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டு வருகின்றன. இது அமெரிக்கா மற்றும் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்ளும் எதிர்க்காற்றை விரிவுபடுத்தும்."