World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

United Arab Emirates: Over 600 construction workers arrested after protest

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: போராட்டத்தைத் தொடர்ந்து 600க்கும் மேலான கட்டுமானத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டார்கள்

By Bill Van Auken
4 April 2008

Use this version to print | Send this link by email | Email the author

புதனன்று, 625 தெற்காசிய கட்டுமான தொழிலாளர்களும் மற்றும் பிறரும் பணியிடத்தில் தங்களின் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, கட்டுமான சாமான்களுடன் சாலை மறியலில் இறங்கி கலக தடுப்பு பொலிசாருடன் சண்டையில் இறங்கியதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர்.

சுமார் 800 தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்குபற்றினர். கற்கள், செங்கற்கள் மற்றும் இதர கட்டிட சாமான்களை பொலீசாருக்கு எதிராக எறிந்து அவர்கள் சண்டையிட்டார்கள். அவர்களில் குறைந்தபட்சம் 15 நபர்களும், பல போலீசாரும் இதில் காயமடைந்ததால், அவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

துபாய்க்கு அருகில், எமிரேட்ஸில் உள்ள பகுதி சுயாட்சி பெற்ற ஏழு மாகாணங்களில் மூன்றாவது மிகப் பெரிய மாகாணமான ஷார்ஜாவிலுள்ள அல்-நாஹ்தா மாவட்டத்தில் இந்த மோதல் வெடித்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இந்திய, பாக்கிஸ்தானிய, பங்காளி மற்றும் ஆப்கானிஸ்தானிய ஒப்பந்த தொழிலாளர்களை ஒடுக்க துபாயிலிருந்தும், எமிரேட்டின் பிற பகுதிகளில் இருந்தும் போலீஸ் வரவழைக்கப்பட்டது.

தொழிலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வீட்டு வசதிகள் மறுக்கப்பட்டு அவர்கள் கட்டுமான இடங்களிலேயே உறங்க பலவந்தப்படுத்தப்பட்டதால் இந்த போராட்டம் வெடித்ததாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைகுலைக்கும் நடவடிக்கையின் மூலத்தைக் கண்டுபிடிக்க இந்த கலகத்தில் கலந்து கொண்ட டஜன் கணக்கான தொழிலாளர்களை போலீஸ் விசாரணை செய்ததாக ஐக்கிய அரபு எமிரேட்டின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான WAM, வியாழனன்று அறிவித்தது.

"இந்த கலக நடவடிக்கை" "எவ்வித தொழிற் பிரச்சனையும் தீர்க்காது" என ஷார்ஜா போலீஸ் படையின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் ஹூமைத் மொஹமத் அல்-ஹூதைதி குற்றஞ்சாட்டினார்.

ஜெனரல் மேலும் தெரிவித்ததாவது: "எந்த தனிநபரும் அல்லது குழுவும் நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு படை அனுமதிக்காது என்பதுடன் யார் அவ்வாறு செய்ய தூண்டினாலும் மற்றும் சட்டத்தை மீறினாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்." எனத் தெரிவித்தார்.

இந்த தொழிலாளர்களின் தொழில்வழங்குனரின் பெயர் Tiger Contracting âù WAM ஆல் கண்டறியப்பட்டது. இந்த நிறுவனம் பெப்ரவரியில் மாத ஊதியத்தை 750 திர்ஹாமிலிருந்து (204 அமெரிக்க டாலர்) 850 திர்ஹாமாக (231 அமெரிக்க டாலர்) உயர்த்தி இருப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்டின் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்தது.

வாரத்திற்கு 60 அமெரிக்க டாலருக்கும் குறைவான இந்த உயர்வானது, உத்தியோகபூர்வமாக 10 சதவீதம் என அறிவிக்கப்பட்டும், ஆனால் கணிசமாக அதற்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படும் பணவீக்க விகிதத்தின் பாதிப்பிற்காக அளிக்கப்பட்ட வெறும் கண்துடைப்பாகவே அமைகிறது.

ஐக்கிய அரபு எமிரேட் தொழிலாளர்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முழுமையாக 95 சதவீதம் பங்கு வகிக்கிறார்கள். 2005ல், சுமார் 600,000 த்திற்கும் மேலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், எண்ணெய் வருவாயால் உயர்ந்து வரும் கட்டுமானத்துறையில் (அதுமட்டுமே இதுவரை உயர்ந்திருக்கிறது) மட்டும் பணியாற்றி வருவதாக கணக்கிடப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்டில் ஒருவரின் சராசரி தனிமனித வருமானத்தின் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே சராசரியாக இந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதுடன் அவர்கள் அரசியல் அடக்குமுறை மற்றும் கொடூர சுரண்டலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். அரை நிலப்பிரபுத்துவத்துவ ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கம் வேலைநிறுத்தம் மற்றும் தொழிற்சங்கங்களை நிராகரிப்பதன் மூலம் தொழிலாளர்களை, அவர்களின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யும் மற்றும் குறைவான கூலி அளிக்கும் மற்றும் அவர்களின் நாடுகளில் அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டதை விட மோசமான நிலைகளில் வைத்திருக்க தொழிலாளர்களை ஒப்பந்ததாரர்களின் தயவில் விட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிற பிராந்தியங்களில் கிடைக்கும் வேலைகளின் மூலம் தொழிலாளர்கள், அவர்களின் நாடுகளில் அவர்களின் குடும்பங்களுக்கு உதவியாக வீட்டு செலவுகளுக்கான பணம் அனுப்ப வேண்டி இருப்பதால், இந்த ஒடுக்குமுறையை அவர்கள் சகித்துக் கொள்கிறார்கள். சான்றாக, கணக்கிடப்பட்ட வரையில், வளைகுடாவில் பணியாற்றும் 5 மில்லியன் இந்தியர்கள், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேலாக தங்களின் வீடுகளுக்கு பணம் அனுப்பி வருகிறார்கள்.

ஆனால் அமெரிக்க கடன் சந்தையை மையமாகக் கொண்ட சர்வதேச நிதி நெருக்கடியானது தங்கள் குடும்பங்களுக்கு உதவி வரும் இந்த தொழிலாளர்களின் இயலுமையை குழி தோண்டி புதைத்து வருவதுடன் அவர்கள் பணிபுரிந்து வரும் இடங்களில் சகிக்க முடியாத நிலைமைக்கு அவர்களை தள்ளி விட்டிருக்கிறது.

டாலரின் திடீர் வீழ்ச்சியானது குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற வளைகுடா நாடுகளில் ஒரு கடுமையான விளைவை ஏற்படுத்தி இருக்கிறது. எண்ணெய் சந்தை பரிவர்த்தனையில் முக்கிய மூலமாக உள்ள டாலருடன் இணைக்கப்படுவதால் இந்நாடுகளின் செலாவணிகள் அதனால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. டாலரின் வீழ்ச்சி என்பது தெற்கு ஆசிய தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பும் தொகையின் வீழ்ச்சியாக அமைகிறது.

குறிப்பாக ரூபாயின் மதிப்பு பலமாக இருக்கும் இந்தியாவிற்கு இது மிகவும் பொருந்தும். அரேபியன் பிசினஸ் வலைத்தளத்தின் செய்திப்படி, இந்த மாத இறுதியில் இந்திய ரிசேர்வ் வங்கி மேலும் வட்டி விகிதங்களை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அந்நாட்டு தேசிய செலாவணியின் மதிப்பை மேலும் உயர்த்தும் என்பதால், இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் சம்பளங்களின் மதிப்பு மேலும் குறையும் என்பதையே இது குறிக்கிறது.

"அடிப்படையில் அது இந்தியாவை மேலும் விலைவாசி அதிகமானதாக உருவாக்கும் என்பதுடன், வளைகுடாவில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டிற்கு பணம் அனுப்புவதையும் மிகவும் சிக்கலாக்கும்." என துபாயிலுள்ள ஸ்டாண்டர்ட் சார்டர்டு வங்கியின் ஆய்வுத்துறைக்கான பிராந்திய தலைவர் மேரியோஸ் மாராத்திப்டிஸ் வலை தளத்திற்கு தெரிவித்தார்.

இந்த நிலைமைகள், வேலைநிறுத்தம் மற்றும் தொழிற்சங்கங்களை அனுமதிக்காத மற்றும் கருணையில்லாமல் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தொழிலாளர்களிடையே அமைதியின்மையை அதிகரித்திருக்கிறது.

புதனன்று ஷார்ஜாவில் நடந்த மோதல்கள் இரண்டு வாரங்களுக்குள் நடந்திருக்கும் இரண்டாவது இது போன்ற சம்பவமாகும். கடந்த மாதம், சுமார் 1,500 தொழிலாளர்கள் தங்களுக்கு அளிக்கப்படாத ஊதியத்திற்காகவும் மற்றும் தங்களின் உண்மையான வருமானத்தில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிக்காகவும் அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஒரு பொறியியல் ஒப்பந்தகாரருக்கு எதிராக நிறுவனத்தின் அலுவலகங்களை மற்றும் கார்களை தாக்கியும், எரித்தும் போராடினார்கள்.

இறுதியாக, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இதே போன்ற போராட்டங்களில் துபாயில் பங்கு பெற்றனர். சில தொழிலாளர்களை கைது செய்து சிறையில் அடைத்ததன் மூலமாகவும், நூற்றுக்கணக்கானவர்களை நாட்டை விட்டு அனுப்பியதன் மூலமாகவும் அரசாங்கம் இதற்கு பதிலளித்தது.

தொழிலாளர்களின் அமைதியின்மை மற்றும் உயர்ந்து வரும் பணவீக்கமானது வளைகுடா நாடுகளின் செலாவணி தொடர்ந்து டாலருடன் இணைக்கப்பட்டுள்ளது குறித்து ஆளும் ஐக்கிய அரபு எமிரேட் மேற்தட்டுக்களுக்குள் கேள்விகளை எழுப்பியுள்ளது.

"பணவீக்கம் பல வெளிநாட்டு தொழிலாளர்களை, நுகர்வோரை மற்றும் வர்த்தகரை பாதித்திருக்கிறது." என ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறும் தேசிய கூட்டமைப்பு மன்றத்தின் ஓர் உறுப்பினரான அமீர் அல்-பஹீம் செவ்வாயன்று ராய்ட்டரிடம் தெரிவித்தார்.

பஹீம் மேலும் தெரிவித்ததாவது: "பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் ஒரு சிறந்த கருவி தான், ஆனால் திர்ஹம் டாலருடன் இணைக்கப்பட்டிருப்பதால் ஐக்கிய அரபு எமிரேட்டால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை" எனத் தெரிவித்தார். பின்னடைவை சரிப்படுத்தும் நோக்கில் அளிக்கப்படும் தொடர்ச்சியான அமெரிக்க வட்டி விகித வெட்டுகள் ஐக்கிய அரபு எமிரேட்டிலும் மற்றும் வளைகுடாவின் பிற பகுதிகளிலும் பணவீக்கத்தை அதிகரித்திருக்கிறது, இதன்கீழ் எண்ணெய் விலைகள் கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது. டாலரை சார்ந்திருக்கும் தன்மையானது, விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் போது, அமெரிக்க மத்திய வங்கி கூட்டமைப்பு வட்டிவிகித வெட்டுகளையே அப்பிராந்திய மத்திய வங்கிகளும் பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளி இருக்கிறது. யூரோவை நாணயமாக கொண்டிருக்கும் நாடுகளுடனான அதிகரித்துவரும் வர்த்தகம் மட்டுமே இந்த நெருக்கடியிலிருந்து வெளிவரும் பாதையாக பயன்படுத்தப்படுகின்றது.

ஏப்ரல் 8ல் செலாவணியின் டாலருடனான 30 வருட இணைப்பு குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிதியமைச்சர் உபைத் அல்-தயார் ஆலோசனை குழுவின் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டிய நிலையிலுள்ளார். டாலருடனான இணைப்புக்கான மாற்றீட்டை கண்டறிய ஒரு குழு அமைக்கப்படும் என ஐக்கிய அரபு எமிரேட் பிரதம மந்திரி ஷேக் மொஹம்மது பின் ரஷீத் அல்-மக்டெளம் தெரிவித்தார். ஆனால் இந்த இணைப்பு தற்காலிகமாக பேணப்படவுள்ளது.

ஒரு கூட்டு செலாவணிக்குள் மாறியதன் மூலம் கடந்த மே மாதம் டாலர் கட்டுப்பாட்டை உடைத்த முதல் அரபு ஷேக் ஆட்சி, குவைத் மட்டுமே ஆகும். பிற வளைகுடா நாடுகளால் நூறு பில்லியன் டாலர் மதிப்பிலான டாலர் குறியீட்டில் உள்ள சொத்துக்களின் விலை சரியும் என்பதால் பெரியளவில் டாலர் மீதான நடவடிக்கை எடுக்க இந்நாடுகள் அஞ்சி முன்னெச்சரிக்கையுடன் இருக்கின்றன. ஷேக் ஆட்சிகளுக்கான அமெரிக்காவின் இராணுவ பாதுகாப்புக்காக டாலரின் ஆதரவை தொடர்புபடுத்தி அமெரிக்காவால் அரசியல் அழுத்தமும் அளிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், இந்த நாடுகளுக்குள் அதிகரித்து வரும் சமூக மற்றும் பொருளாதார பதட்டங்கள் டாலரின் கட்டுப்பாட்டிலிருந்து அவர்களின் செலாவணிகளை மீட்டெடுக்க அவர்களை மேலும் உந்தித் தள்ளும். இது டாலரின் சேமிப்பு செலாவணி நிலையை தீவிரமாக இல்லாதொழித்து மற்றும் படிப்படியாக அமெரிக்கா மற்றும் சர்வதேச முதலாளித்தனத்தின் நெருக்கடியையும் தீவிரப்படுத்தும்.