World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government slashes public spending

பிரெஞ்சு அரசாங்கம் பொது நலச் செலவினங்களை பெரிதும் குறைக்கிறது

By Kumaran Ira and Pierre Mabut
14 April 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஏப்ரல் 4ம் தேதி பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி 2007ம் ஆண்டின் பொதுப் பற்றாக்குறையான 50.3 பில்லியன் யூரோக்களை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீதம் இருந்ததை, குறைக்கும் நோக்கத்துடன் ஒரு சிக்கனமான வரவு-செலவு திட்டத்தை அறிவித்தார். பொது நலச் செலவினங்களை வெட்டுதலை, திறமையான அரசாங்கத்திற்கு தேவையான சீர்திருத்தங்கள் என்று கூறி சூழ்ச்சியாய் ஏமாற்றிச் செயற்படுத்த முற்பட்டுள்ள அதேவேளை, வலதுசாரி முதலாளித்துவ செய்தி ஊடகம் உட்பட அனைவரும் இந்த வரவு-செலவு திட்டத்தை சாதாரண மக்கள் வாழ்க்கைத் தரங்களை தகர்க்கும் ஒரு வழிவகையாகத்தான் கண்டுள்ளனர்.

2011 க்குள் அடையப்பட வேண்டிய 7 பில்லியன் யூரோக்கள் வெட்டை அறிவித்த வகையில் சார்க்கோசி அனைத்தும் கட்டுப்பாட்டில் இருப்பதாக காண்பித்துக் கொள்ள முயற்சித்தார்: "சேமிப்புக்கள் சீர்திருத்தங்களை கொண்டு வருவதில்லை; மாறாக சீர்திருத்தம்தான் சேமிப்பை அனுமதிக்கின்றன" என்றார். ஜூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை பிரான்ஸ் எடுத்துக் கொள்கிறது; தன்னுடைய பொதுப் பற்றாக்குறை 2012க்குள் ஏதும் இருக்காது என்ற உறுதிமொழியை கூறியுள்ளது; இந்த இலக்கு சமூக நலன்களை தாக்காவிடின் அடையப்பட முடியாதது ஆகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 53.4 சதவிகிதம் பொதுச் செலவினங்களுக்கு என்று பிரான்ஸ் கொண்டுள்ளது; இது யூரோ பகுதியிலேயே மிக அதிகமானது ஆகும். ஐரோப்பிய நிதி மந்திரிகளின் சமீபத்திய மாநாடு ஒன்று பிரான்ஸ் தன்னுடைய பற்றாக்குறையை குறைத்து பொதுச் செலவினங்களை சீர்திருத்தம் செய்வதை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. 2010 க்குள் பற்றாக்குறை இல்லாத சீரான வரவு-செலவு திட்டம் இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியக் குழு கோரியுள்ளது; பிரான்ஸ் இந்த தேதியை 2012 ல் இருந்து வரவேண்டும் என்று கூறியுள்ளது. 2008ம் ஆண்டின் முதல் இரு மாதங்களில் மட்டும் பற்றாக்குறை 22.7 பில்லியன் யூரோக்கள் என்று இருந்தது. வரவு-செலவு திட்ட மந்திரி எரிக் வோர்த் ஏப்ரல் 6ம் தேதி புதிய சேமிப்புக்கள் பற்றிய திட்டங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்றும் அது சமூக மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு செலவினம் பற்றிய தணிக்கை முடிந்தவுடன் வரும் என்றும் கூறினார்.

தற்பொழுது பிரான்ஸ் மற்ற ஐரோப்பிய அரசுகளில் இருந்து பின்தங்கி, வணிக பற்றாக்குறையை 40 பில்லியன் யூரோக்கள் என்ற அளவிற்கு கொண்டுள்ளது (இதில் பெரும்பகுதி ஜேர்மனிக்கு கொடுக்கப்பட வேண்டியது ஆகும்). இதன் பொருளாதார வளர்ச்சி 2008ல் 1.5 முதல் 1.7 சதவிகிதமாக இருக்கக் கூடும் என்றும் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் சார்க்கோசி பதவியை எடுத்துக் கொள்ளும்போது உறுதியளித்திருந்த அதிகம் பேசப்பட்ட 2.5 ஆக இல்லை என்றும் தெரியவந்துள்ளது. சர்வதேச நிதிய நெருக்கடி மற்றும் யூரோவின் மதிப்பு உயர்ந்துள்ளமை சார்க்கோசியின் கணிப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டன. எனவே மே மாதம் பொதுக் கொள்கையை நவீனப்படுத்தும் குழுவின் (Modernising Council for Public Policy) கூட்டம் வரவு-செலவு திட்டத்தில் தேவையான வெட்டுக்களை அதிகரிப்பதற்காக கூட இருக்கிறது.

"பிரான்ஸ் திவாலாகிவிட்டது" என்பதை பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன் சில மாதங்களுக்கு முன்னரே தெளிவாக்கிவிட்டார். எனவே இந்த நடவடிக்கைகள் கடந்த காலத்தில் பிரெஞ்சு முதலாளித்துவம் உலகப் போட்டியை எதிர்கொள்வதற்கு முயற்சித்த பிரச்சினைகளைத்தான் உயர்த்திக் காட்டுகிறது. 2008-09 க்கான உலக மந்தநிலை பற்றிய கணிப்பு பிரான்சிற்கு எத்தகைய விளைவுகளை கொடுக்கும் என்பது இனிமேல்தான் ஆராயப்பட வேண்டும்.

தற்போதைய வெட்டுக்களின் பட்டியல் (166 எண்ணிக்கையில்), வரவிருக்கும் நிகழ்வுகளை பற்றிய ஒரு பார்வைதான். அரசாங்கத் துறையில் 35,000 வேலை வெட்டுக்கள் என்பது நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கும் (அதாவது 2009ல் இருந்து இருவர் ஓய்வு பெற்றால், புதிதாக ஒருவர் மட்டும்தான் நியமிக்கப்படுவார்.)" ஊதிய வகையில் மிச்சம் ஆகும் சேமிப்புக்கள் எஞ்சியிருக்கும் ஊழியர்களுக்கு மறு பகிர்வு செய்து கொடுக்கப்படும்.

ஒப்புமையில் அதிக ஊதியம் பெற்ற தொழிலாளர்கள் குறைந்த செலவில் கட்டப்பட்ட நகர சபை வீடுகள் தொகுப்பில் (HLM) இருந்தால், அவர்களுடைய ஊதியங்களின் உச்ச வரம்பு 10 சதவிகிதம் குறைக்கப்படும்; அவர்கள் கொடுக்கும் வாடகையில் இது கணக்கிடப்படும், இதையொட்டி வாடகை உயர்வுகள் ஏற்படும். இதன் நோக்கம் கட்டுப்படுத்தப்பட்ட வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையை 70ல் இருந்து 60 சதவீதமாகக் குறைப்பது ஆகும்; இதனால் மத்தியதர வர்க்கத்தின் கீழ் பிரிவில் இருக்கும் மக்கள் தனியார் துறைக்கும் திவால்தன்மைக்கும் தள்ளப்படுவர். அரசு உதவி பெறும் முன்கூட்டியே ஓய்வு பெற தொழிலாளர்களை அனுமதிக்கும் நிலவுகின்ற நிதிய நடவடிக்கைகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன.

RSA (Active Solidarity Revenu) கொள்கை மூலம் வேலை கிடைப்பதற்கு நிதிய உதவியை நாடுபவர்கள் மீது கடுமையான வரம்பு விதிக்கப்படும்; இது Actve Solidarity இன் உயர் கமிசனராக இருக்கும் Martin Hirsch ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகாறும் அவர் சார்க்கோசியின் புதிய தாராளக் கொள்கை செயற்பட்டியலுக்கு மனிதாபிமான வகை மறைப்பு என்று அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டுள்ளார். குறைந்த சமூக நல உதவித் தொகையான மாதத்திற்கு 447 யூரோக்களில் வாழ்வதற்கு பதிலாக ஒரு வேலையை தேடுவதற்கு ஏழையை நிர்பந்திக்கும் பாத்திரத்தை எடுப்பதற்கு Emmaus அறக்கட்டளை அமைப்பின் இயக்குனர் என்ற பதவியில் இருந்து Hirsch இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். RSA மாதம் ஒன்றுக்கு 2 முதல் 3 பில்லியன் செயல்படுத்த என்று ஆகியிருக்கும்; ஆனால் இப்பொழுது எது இயலுமோ அது செய்யப்படவேண்டும் "என்ற உந்துதலின்" விளைவாக கைவிடப்படும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது.

ஒரு துடிப்புடன் இதற்கு விடையிறுக்கும் வகையில் Hirsch கூறியதாவது: "நான் ஒரு திட்டத்துடன் வந்தேன்; தொழிற்சங்கஙங்கள், உள்ளூர் அமைப்புகள், சமூகப் பங்காளிகள் [முதலாளிகள்], தேர்ந்தெடுக்கப்பட்ட வலது மற்றும் இடது அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் கூட்டான முயற்சியின் பலனாக இத்திட்டத்தை கொண்டு வந்தேன். நான்தான் திட்டத்தின் காப்பாளர்; வழிவகை தெளிவாக உள்ளது... RSA கைவிடப்பட்டால் வறுமையை அகற்றும் அனைத்து நடவடிக்கைகளும் சமநிலையை இழந்துவிடும்." பிரதம மந்திரி பிய்யோன் இத்திட்டம் ஒன்றும் "புதைக்கப்படவில்லை", தற்சமயம் "அதிக செலவை கொடுக்கிறது" என்று கூறினார்.

சமூகப் பாதுகாப்பு மோசடி, மருத்துவ மனைகள் செலவுகளில் சேமிப்பு, மற்றும் சுற்றுச் சூழலை காக்க உதவுவதற்கு என விதிக்கப்படும் வரிகள் இவற்றிற்கு எதிரான ஒரு சூனிய வேட்டையும் சிக்கன நடவடிக்கைத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. "எந்த அமைச்சரகமும் சீர்திருத்தத்திற்கு தேவையான திட்டங்களில் இருந்து விதிவிலக்கு பெறாது" என்று சார்க்கோசி அறிவித்துள்ளார். கல்வி அமைச்சரகம் ஏற்கனவே 11,200 ஆசிரியர்கள் பதவிகள் செப்டம்பர் 2008 க்குள் அகற்றப்படும் என்று கூறியுள்ளது. இந்த மோதலை உண்டாக்கும் பிரச்சினையை பற்றி சார்க்கோசி குறிப்பிடவில்லை; இது ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கடந்த வாரம் மிகப் பெருகிய முறையில் தெருக்க்களில் ஆர்ப்பாட்டங்களுக்கு கொண்டுவந்து விட்டது.

சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் Francois Hollande இதற்கு விடையிறுக்கும் வகையில், "வாங்கும் திறனை கூட்டும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் நிக்கோலோ சார்க்கோசி இருந்தார்; இப்பொழுது அவர் சிக்கன நடவடிக்கை கொண்டுவரும் ஜனாதிபதியாக இருப்பார்."

சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதம மந்திரி Laurent Fabius சார்க்கோசியை ஆண்டின் ஆரம்பத்தில் செல்வந்தர்களுக்கு 15 பில்லியன் யூரோ வரிச் சலுகைகளைக் கொடுத்தற்கு குறை கூறியுள்ளார். "ஒவ்வொரு ஆண்டும் 15 பில்லியன் யூரோக்களை அரசாங்கம் இழப்பு இருட்டில் தள்ளிவிட்டது; பின் இதை எப்படி நிரப்புவது என்று கேட்கிறது?" என்றார். "இதில் பெரும்பகுதியை நாம் மீட்க வேண்டும். சிறு வணிகங்கள் குறைவூதியம் பெறுவோர், குறைந்த ஓய்வூதியம் பெறவோர் இவர்களுக்கு உதவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்றும் கூறினார். ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனின் கீழ் 1984ல் இவருடைய சிக்கன நடவடிக்கைகள் எப்படி தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை சரித்தன என்பதை இவர் வசதியாக மறந்துவிட்டார்.

தங்கள் உறுப்பினர்கள்மீது ஏற்படுத்தக் கூடிய பாதிப்பிற்காகவும் தங்களை ஆலோசிக்கவில்லை என்பதற்காகவும் தொழிற்சங்கங்களும் சிக்கன நடவடிக்கைகளை குறைகூறியுள்ளன. ஸ்ராலினிச கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் General Confederation of Workers எனப்படும் CGT யின் Jean-Christophe Le Duigou அனைத்து தொழிற்சங்க தலைவர்களின் உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் கூறினார்: "பொதுமக்களோ, குடிமக்களோ, பொதுத்துறை தொழிலாளர்களோ, தொழிற்சங்கங்களோ இந்த சீர்திருத்தங்களின் விரிவாக்கத்துடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை... இது தவறான கோணத்தில் இருந்து இது பார்க்கும் ஒரு தொழில்நுட்பவாதியின் அணுகுமுறை ஆகும்;; சேமிப்புக்களில் தொடங்குகிறோம், அதன் பின் ஒருவேளை பொது நலன்கள் பற்றி விவாதிப்போம் போலும்"

ஆலோசனை வழிவகைகளில் தொடர்பு கொள்ளப்படாததற்கான வருத்தம் நிறைந்த குரல் சார்க்கோசியின் கொள்கைகளுக்கு இதுவரை ஏற்று நடந்த தொழிற்சங்கங்கள் அனைத்தின் தன்மையையும் பற்றி நிறையக் கூறுகின்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரயில் தொழிலாளர்களுடைய சிறப்பு ஓய்வூதிய உரிமைகள் போராட்டத்தை காட்டிக் கொடுத்த தொழிற்சங்க பேச்சுவார்த்தை நடத்தியவர்களில் Le Duigou வும் ஒருவராவார்.

சார்க்கோசியின் வரவு- செலவுத் திட்ட குறைப்புக்கள் தொழில்நுட்ப வகையைச் சேர்ந்தவை அல்ல. அவை அரசியல் அளவில் தொழிலாளர் வர்க்கத்தை தாக்கும் நோக்கத்தைக் கொண்டவை ஆகும். FSU பொதுத் துறை தொழிலாளர்கள் சங்கம் சிக்கன நடவடிக்கைத் திட்டம் "என்பது முழு மக்களுடைய நாளாந்த சமூக, தொழில் வாழ்வில் இன்னும் கூடுதலான சரிவு என்ற பொருளைத்தான், அதிலும் குறிப்பாக நலிந்த, சலுகைகளற்ற பிரிவினருக்குக் கிடைக்கும் என்ற பொருளைத்தான் தருகிறது" என்று ஒப்புக் கொண்டுள்ளது.