World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: LCR congress decides to found new party

பிரான்ஸ்: LCR பேரவை ஒரு புதிய கட்சியை ஸ்தாபிக்க முடிவெடுக்கிறது

By Peter Schwarz
5 March 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஜனவரி மாதம் நடைபெற்ற அதன் 17வது பேரவையில், பிரான்சின் (Ligue Communiste Revolutionnaire) LCR ஒரு புதிய "முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியை" ஆண்டு இறுதிக்குள் ஸ்தாபிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளது. 40 ஆண்டுகளாக இருக்கும் LCR, அதன் பின்னர் புதிய கட்சியில் தன்னை கரைத்துக் கொண்டுவிடும்.

புதிய கட்சிக்கு ஒரு பெயரோ அல்லது ஒரு திட்டத்தையோ முடிவெடுப்பதில் பேரவை தோல்வியுற்றது. இந்த வழிவகை இந்த ஆண்டிற்குள் நடைபெறலாம். ஆனால் அமைப்பு தனிச் சிறப்பு மிகுந்த வரலாற்று மரபுகள் அல்லது கோட்பாடுகளின் அடிப்படையில் இருக்காது என்பதுதான் இப்பொழுது தெளிவாக உள்ளது. பெயரளவிற்கு ட்ரொட்ஸ்கிசத்துடன் தொடர்பு கொண்டிருந்த, மூடப்பட இருக்கும் LCR க்கு எதிரிடையாக, அமைப்பின் வலைத் தளத்தில் LCR இன் முக்கிய செய்தித் தொடர்பாளர் ஒலிவியே பெசன்ஸெநோ "ட்ரொட்ஸ்கிசம் பற்றிய எந்த குறிப்பிட்ட வரலாறும் புதிய கட்சியின் அடையாள பெயர் என்பதில் சுமத்தப்பட மாட்டாது" என்று எழுதியுள்ளார்.

"முதலாளித்துவ எதிர்ப்புடன் சுற்றுச்சூழலுக்கான போராட்டத்தை இணைத்து மகளிரில் தொடங்கி ஒவ்வொரு வகை சுதந்திரத்திற்கும்" புதிய அமைப்பு வாதிடும் என்றும் "இளைஞர்கள், தங்கள் பழைய கட்சியின் தலைமை எடுத்த போக்கு பற்றி வெறுப்பு அடைந்துள்ள அரசியல் கட்சிகளின் முன்னாள் உறுப்பினர்கள், ஆலைகளில் இருக்கும் தொழிற்சங்கச் செயலர்கள், அனைத்து தலைமுறை மகளிர் உரிமை வாதிடுபவர்கள், தாராளவாதத்தை எதிர்ப்பவர்கள் [அதாவது தடையற்ற சந்தையை எதிர்ப்பவர்கள்] என்று சமூக தாராளவாதத்துடன் தங்கள் நம்பிக்கை பிணைப்புக்களை கைவிடத்தயாராக இருப்பவர்கள்", மற்றும் "முதன்முறையாக தீவிரமாக செயலாற்ற விரும்புபவர்கள்" அனைவரையும் புதிய அமைப்பு இணைத்துச் செல்லும் என்று கூறப்படுகிறது.

மற்ற அரசியல் போக்குகள் இத்திட்டத்தில் பங்கு பெறுமாறு அழைக்கப்படுகின்றனர்; பெசன்ஸெநோ அதில் Lutte Ouvrière (தொழிலாளர் போராட்டம் -LO), "அராஜகவாதிகள், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் தாராளவாத எதிர்ப்பாளர்கள்" ஆகியோரை பட்டியல் இடுகிறார்.

பலபுறத்திலும் சாயும், விளங்கா கருத்துக்களை கொண்ட ஒரு கட்சியை நிறுவுதல், கோட்பாட்டிற்கு கட்டுப்பட்டிருக்கும் தன்மையை விரும்பாதிருத்தல் என்ற வகையில் ஒரு கட்சியை அமைப்பது என்பது பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் ஒரு அடிப்படைத் தேவையை ஒத்திருக்கிறது. பழைய, அதிகாரத்துவ சீர்திருத்த, ஸ்ராலினிச அமைப்புக்கள் (சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள்) ஆழமாக மதிப்பிழந்திருக்கையில் (தீவிர இழிவிற்கு உட்பட்டிருக்கையில்), சமூக நெருக்கடிக்கு ஒரு சீர்திருத்தவாத தீர்வில் நம்பிக்கை இழந்திருக்கும் மற்றும் தீவிரமயமாக்கப்பட்டுவரும் அதிகரித்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வழிவிலகச் செய்யவும் தடம்புரளச் செய்யவும் அத்தகைய ஒரு ஒரு புதிய கட்சி தேவைப்படுகிறது.

LCR புதிய கட்சியை "முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி" என்று அழைக்கிறது. ஆனால் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு தொடர்ந்த போராட்டம் நடத்துவதற்கு நிலையான அஸ்திவாரங்களை மார்க்சிச இயக்கத்தின் வரலாற்று மரபில் இருக்கும் நடைமுறைகள், கொள்கைகள் இவற்றில் உறுதியாக இருக்கும் கட்சி ஒன்றினால்தான் முடியும்; அதுதான் முதலாளித்துவ பொதுக் கருத்தில் இருந்து விளையும் அழுத்தத்திற்கு எதிர்ப்புக் கொடுக்க முடியும். LCR இத்தகைய நடைமுறை, கோட்பாட்டு அடிப்படைகளுக்கு உட்படுவதை நிராகரிக்கிறது. காற்றில் மிதக்கும் ஒரு கட்சி, கொள்கைகளினால் கட்டுண்டிராத ஒரு கட்சி, இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்பட நடந்து கொள்ளும் ஒரு கட்சியைத்தான் அது விரும்புகிறது. இத்தகைய கட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் தேவைகளுக்கு ஏற்ப எளிதில் திரித்தலுக்கு உட்படுத்தப்படமுடியும்

இப்படி எத்தகைய உறுதியான திட்டத்தையும் கைவிடுதலை பெசன்ஸெநோ முழுமையான காரியாளர்களின் ஜனநாயகம் என்று சித்திரிக்க முயல்கிறார். LCR என்று இல்லாமல் வருங்கால உறுப்பினர்கள் கட்சியின் வேலைத்திட்டத்தையும் வடிவமைப்பையும் நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் அறிவித்தார். அந்த அமைப்பில் பங்கு பெற எவர் விரும்பினாலும், "அதை ஜனநாயக முறைப்படி ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை" செய்யவேண்டும். இப்படிக் கூறுவது எல்லாம் அப்பட்டமான பிதற்றலாகும். தலைமை முதல், உறுப்பினர்கள் வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான, தெளிவான கோட்பாடுகள் இல்லாமல், கட்சித் தலைமை ஜனநாயகக் கட்டுப்பாட்டில் இயங்க முடியாது. அனைவரும் எதையும் அவரவர் விரும்பியபடி செய்யலாம் என்று இருந்தால், தலைமையும் கட்டுப்படுத்த முடியாது என்றுதான் பொருள்.

இவ்விதத்தில் ஜேர்மனிய பசுமைக் கட்சி ஒரு படிப்பினை கொடுக்கும் உதாரணம் ஆகும். 30 ஆண்டுகளுக்கு முன்பு பசுமைக் கட்சி ஆரம்பித்தபோது (அந்த நேரத்தில் LCR இன் ஜேர்மனிய ஆதரவாளர்கள் பெரும் உற்சாகத்துடன் வரவேற்றனர்), அந்த அமைப்பு காரியாளர்கள் கருத்தின்படியான ஜனநாயகம் இருக்கும் என்பதை வலியுறுத்தியிருந்தது. புதிய கட்சியின் தெளிவற்ற இலக்குகளை ஆதரித்த எவரும் கட்சிக்கு வரவேற்கப்பட்டனர் -- சமூக ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள், மாவோயிஸ்ட்டுகள், சமாதானவாதிகள், குடியுரிமை ஆர்வலர்கள், ஏன் "குருதியும் மண்ணும்" என்று ஆவேசத்துடன் இருந்த சிந்தனையாளர்களும் வரவேற்கப்பட்டனர்.

காரியாளர்களிடம் இருந்து தலைமை தன்னை தனியாக வைத்துக் கொள்வதை தவிர்ப்பதற்காக பசுமை வாதிகள், தலைமையிடங்கள் சுழற்சி முறையில் வரவேண்டும் என்ற கோட்பாடு, இரு பதவிகள் வழங்குவதை தவிர்த்தல் போன்ற சில சிறப்பு விதிகளை இயற்றினர். ஆனால் இது முற்றிலும் போலித்தனமாகும். கட்டுப்படுத்தக்கூடிய வேலைத்திட்ட அடிப்படை ஏதும் இல்லாத நிலையில், ஒரு சில நியமிக்கப்பட்ட தலைவர்கள் கட்சியை தங்கள் விருப்பப்படி திரிப்பதற்கு முடிந்தது. எந்தக் கட்சி பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிராத ஜோஷ்கா பிஷர் கட்சியை பயன்படுத்தி தான் ஜேர்மனிய வெளியுறவு மந்திரிப் பதவியை பெற முடிந்தது; இதனால் அவர் பசுமைவாதிகளை முதலாளித்துவ அரசியல் நடைமுறையின் இதயத்தானத்தில் இருத்தினார்.

LCR வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்

40 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதில் இருந்து LCR, முதலாளித்துவ சமுதாயத்தை பேணுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களை கீழ்ப்படுத்தும், சீர்திருத்தவாத மற்றும் ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிற்கு ஒரு இடது மூடிமறைப்பாய் இருக்கும் பங்கைத்தான் தொடர்ந்து செய்துவருகிறது. இப்பங்கை எப்பொழுதும் நியாயப்படுத்தும் வகையில் LCR இவ்வமைப்புக்கள், அவற்றின் சில பிரிவுகளேனும், கீழிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு தொழிலாளர்கள் நலன்களுக்கான கொள்கைகளை செயல்படுத்த முடியும் என்றும் ஒரு சோசலிச முன்னோக்கு வெற்றி அடையப்படலாம் என்றும் கூறிவந்துள்ளது. இப்பொழுது முதல் தடவையாக LCR ஒரு முன்முயற்சி எடுத்து வர்க்கப் பூசல்கள் ஒரு புரட்சிகர பரிமாணம் எடுப்பதை தடுக்கும் நோக்கத்துடன் ஒரு கட்சியையே கட்டமைக்க முயலுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தன்னுடைய 16வது மாநாட்டில், ஒரு பெரிய பெரும்பான்மை மூலம் LCR ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகள், அமைப்புக்களையும் 2005 வாக்கெடுப்பில் ஒன்றுபடுத்த ஒரு பரந்த திரட்டை அமைக்க முயன்றது. இதில் LCR உடன், முதலில் கம்யூனிஸ்ட் கட்சி (PCF) இருந்ததுடன் சோசலிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவு, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சில பிரிவுகள், பூகோளமயமாக்கல் எதிர்ப்பு வினையாளர்கள், சமூக முன்முயற்சியாளர்களின் பலவகைப்பட்ட கலவைகள் மற்றும் இயக்கங்கள் ஆகியன உள்ளடங்குவன. அந்த நேரத்தில் LCR மற்றும் PCF இரண்டும் நெருக்கமாக ஒத்துழைத்து தலைமை மட்டத்தில் ஆலோசனைகளை நடத்தின. உள்ளூர் மட்டத்தில் பல ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்புச் செயல்பாட்டார்களும் "கூட்டுக்கள்" என்ற அழைக்கப்பட்ட விதத்தில் ஒத்துழைத்து ஒரு புதிய இயக்கத்திற்குத் தளமாக இருந்தனர்.

ஆனால் 2006ம் ஆண்டு இரண்டாம் பகுதியில் இத்திட்டம் சரிந்தது; இதற்குக் காரணம் தொழிலாள வர்க்கத்திற்கும் LCR இன் நண்பர்களுக்கும் இடையே பெருகிய பிளவு ஆகும். "முதலாளித்துவ எதிர்ப்பு" இயக்கம் ஒன்றை "இடது பன்முகத்தின்" காரியாளர்கள் நிறையப் பேரை கொள்வதால் தக்கவைக்க முடியாது என்பது தெரிந்தது; ஏனெனில் பிந்தையது 1997ல் இருந்து 2002 வரை லியோனல் ஜோஸ்பன் தலைமையில் இருந்த அரசாங்கத்திற்கு ஆதரவைப் பெரிதும் கொடுத்தது.

செகோலென் ரோயால் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட அளவில், சோசலிஸ்ட் கட்சி நன்கு புலனாகும்படி வலதிற்கு மாற்றத்தை கண்டது. "இடதின் ஐக்கியம்" என்று பிரான்சுவா மித்திரோன் 1970 களின் முற்பகுதியில் முதல் தடவையாக தொடக்கியதில் இருந்து, ரோயால் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பசுமைவாதிகளுடன் ஒரு "இடது" கூட்டணியை அமைக்க விரும்பவில்லை; மாறாக ஒரு இடது-மையக் கூட்டணியை பிரான்சுவா பேய்ரூ தலைமையிலான Democratic Movement (MoDem) உடன் அமைப்பதை ஆதரித்தார்.

ஒருகாலத்தில் நாட்டின் பெரிய கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி சிறிதும் பொருட்படுத்த தேவையில்லை என்ற அளவிற்கு சுருங்கிவிட்டது. "கூட்டுக்களில்" அது பங்கு பெற்றது என்றாலும் சோசலிஸ்ட் கட்சியுடன் --அதன் நட்புக் கட்சியாக மூன்று தசாப்தங்களாக இருப்பதுடன்-- முறித்துக் கொள்ள தயாராக இல்லை. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியானது அனைத்து சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கங்களிலும் மந்திரி பதவிகளை நிரப்பியிருந்ததோடு அதன் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புக்களில் அதிகாரங்களை தக்கவைக்க பிந்தையதில் தொடர்ந்து தங்கி இருந்தது.

இறுதியில் LCR கூட்டுக்களில் இருந்து பின்வாங்கி, 2007 ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் பொது "இடது" வேட்பாளர்களை நிறுத்தும் முயற்சியில் தோல்வியுற்றது. இதை François Sabado கீழ்க்கண்ட விதத்தில் நியாயப்படுத்தினார்: "சமூக ஜனநாயகத்தின் சமூக தாராளக் கொள்கைகள் மற்றும் PCF, பசுமைவாதிகள் ஆகியோர் உண்மையான சுயாதீன சோசலிச சக்தியை பிரதிபலிக்கும் மாற்றீட்டை பெற்றிராத இயலாத தன்மை PCF மற்றும் Bové current (உலகந்தழுவிய முறைக்கு எதிர்ப்பாளர்கள்) தலைமை உட்பட தாராளவாத எதிர்ப்பு இடது ஒரு ஐக்கியத்தை காணமுடியும் என்ற கருத்தைக் காலம் கடந்ததாக ஆக்கிவிட்டது."

இதே போன்று மற்ற நாடுகளில் இருக்கும் பரந்த இடது இயக்கங்கள், LCR க்கு முன்மாதிரியாக திகழ்ந்தவையும் இழிவான முறையில் சரிவுற்றன. இத்தாலியின் ரோமனோ பிரோடியின் அரசாங்கத்தில் கம்யூனிஸ்ட் ரிபெளண்டேஷன் (Rifondazione Comunista) சேர்ந்தது பரந்த முறையில் முதலாளித்துவ வர்க்க மரியாதையை நோக்கிய ஒரு அமைப்பின் இறுதி அடி எடுப்பாக பார்க்கப்பட்டது. லூலாவின் தலைமையில் இருக்கும் பிரேசிலிய தொழிலாளர்கள் கட்சி சர்வதேச நிதிய வட்டங்களால் சில காலத்திற்கு மதிப்புடைய வாடிக்கைக் கட்சி என்று கொள்ளப்பட்டது. இரு நாடுகளிலும் LCR உடைய சக சிந்தனையாளர்கள் இக்கட்சிகளில் இருந்து பல ஆண்டுகள் விசுவாசமாக ஒத்துழைத்த பின் வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டனர்.

ஒரு புதிய கட்சிக்கான முன்முயற்சியை எடுக்கையில், LCR தொழிலாள வர்க்கத்திற்கும் அதன் பழைய அமைப்புக்களுக்கும் இடையே வந்துள்ள ஆழ்ந்த இடைவெளியை எதிர்கொள்ள முற்படுகிறது. சீர்திருத்தவாத அதிகாரத்துவத்தினர் பெருகிய முறையில் மகத்தான வேலைநிறுத்தங்கள், எதிர்ப்பு இயக்கங்கள் என்று அவ்வப்பொழுது தோன்றுபவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை; அவை (வேலை நிறுத்தங்களும், எதிர்ப்பு இயக்கங்களும்) பிரான்சில் இருக்கும் தொழிலாளர்களின் பரந்த அடுக்குகள் மற்றும் இளைஞர்களுடைய உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. அதுவும் குறிப்பாக முதல் வேலை ஒப்பந்தம் (CPE) க்கு எதிராக மாபெரும் எண்ணிக்கையில் தெருக்களுக்கு வந்த இளைஞர்கள், 2006ல் புறநகரில் எழுச்சி செய்த இளைஞர்கள் ஆர்ப்பாட்டங்களில் சோசலிஸ்ட் கட்சி, PCF மற்ற தொழிற்சங்கங்கள் எவ்வித செல்வாக்கையும் கொண்டிருக்கவில்லை. ஒரு அரசியல் வெற்றிடம் வந்துள்ளது; இதில் புரட்சிகரக் கருத்துக்கள் பரப்பப்படலாம் --வேறு ஏதும் அதை இட்டு நிரப்பவில்லை என்றால்.

இத்தகைய புரட்சிகர வளர்ச்சிக்கு எதிரிடையான வகையில்தான் LCR தன்னுடைய புதிய கட்சியை நிறுவுகிறது. பழைய அமைப்புக்களை பாதிக்கும் நெருக்கடி பற்றி இது நன்கு அறியும். 17வது காங்கிரசில் ஏற்கப்பட்ட "அரசியல் கருத்தாய்வுகளின்படி" தேசிய மற்றும் சர்வதேச நிலைமை, "இரு அடிப்படைப் போக்குகள் நிறைந்தவையாக உள்ளன: தடையற்ற சந்தை முதலாளித்துவ முறையின் தாக்குதலும் தொழிலாளர்கள் இயக்கத்தின் மரபார்ந்த கட்சிகளின் சரிவு/மாற்றம்" என்ற தன்மையில் உள்ளது. முதலாளித்துவ தாக்குதல் சமூக எதிர்ப்பை தூண்டுகிறது; "மரபார்ந்த தொழிலாளர்கள் இயக்கத்தின் தலைவர்கள் தடையற்ற சந்தையின் முன்னுரிமைகளை ஏற்கும்" நிலையைக் கொடுத்து "பெருகிய முறையில் இடதுசாரி கட்சிகளுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள பிளவை அதிகரிக்கிறது" என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இதற்கிடையில் முழு பிரெஞ்சு அரசியல் முறையும் ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது. முந்தைய "பன்முக இடது" தீவிரமாக பிளவுற்று கடந்த தேர்தல்களில் பெற்ற தோல்வியில் இருந்து மீளவில்லை என்ற நிலையில், ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஒரு புதிய சக்தி வாய்ந்த தலைவர் என்று பாராட்டப்பட்டவர் இப்பொழுது மக்கள் செல்வாக்கில் மிகக் குறைந்த இடத்திற்கு போய்விட்டார்; அவருடைய UMP அவரைப் பின்பற்ற மறுக்கிறது.

வர்க்கப் போராட்டம் அதிகரித்தால் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்திற்கு ஒரு புதிய "இடது" கட்சி நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக தேவைப்படுகிறது. அது வரலாற்று அனுபவத்தை இவ்விதத்தில் கணிசமாகச் சேகரித்துள்ளது. 1936 ல் அது பொது வேலை நிறுத்தத்தை திணறடித்தது; அப்பொழுது அது லியோன் புளூம் தலைமையில் இருந்த மக்கள் முன்னணி முதலாளித்துவ ஆட்சியை அச்சுறுத்தியிருந்தது. பொது வேலைநிறுத்தத்திற்கு விடையிறுக்கும் வகையில் 1968ம் ஆண்டு பிரான்சுவா மித்திரோன் சோசலிஸ்ட் கட்சியின் தலைமையை எடுத்துக் கொண்டு பல இடதுசாரி இயக்கங்களை ஒன்று சேர்த்தும் PCF ஸ்ராலினிஸ்ட்டுக்களுடன் உடன்பாட்டைக் கண்ட வகையிலும் செயல்பட்டார். இவ்விதத்தில் அவர் முதலாளித்துவ ஒழுங்கை மீள ஸ்திரப்படுத்தும் ஆற்றலுள்ள ஒரு கருவியை உருவாக்கினார்.

அந்த நேரத்தில் ஏற்கனவே ஒரு முக்கியமான பங்கு LCR ஐப் போல் ட்ரொட்ஸ்கிசத்திற்கு தவறாக தன்னுடைய விசுவாசத்தைத் தெரிவித்த கட்சியால் செய்யப்பட்டது: அதுதான் OCI எனப்பட்ட (Organisation Communiste Internationalist) பியர் லம்பேர்ட் (Pierre Lambert) இன் தலைமையில் இருந்த கட்சியாகும். OCI தன்னுடைய உறுப்பினர்கள் பலரை மித்திரோனுக்கு ஆதரவு கொடுப்பதற்காக அவருடைய கட்சிக்கு அனுப்பிவைத்தது. இந்த உறுப்பினர்களில் ஒருவரான லியோனல் ஜோஸ்பன்தான் பின்னர் பிரெஞ்சு பிரதம மந்திரியானார்.

இறுக்கமான அரசியல், சமூக நிலைமையில் LCR இன் "முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி --அது உயிர்பெற்று வருமேயானால்-- விரைவில் அரசியல் பொறுப்பை எடுத்துக் கொள்ள முடியும் அல்லது ஒரு கூட்டணி அரசாங்கத்தில் ஒரு பங்கைப் பெற முடியும். இந்த அமைப்பு தான் "அரசாங்கம் அல்லது பாராளுமன்ற கூட்டணியில்" சமூக ஜனநாயக வாதிகளுடன் பங்கு பெறாது என வலியுறுத்துவது அப்படியே எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய தேவையில்லை.

அத்தகைய வாய்ப்பு வருமேயானால், மற்றொரு வாதம் முன்வைக்கப்படும்: "வலதிற்கு எதிரான ஐக்கியம்". இந்த அடிப்படையில் LCR 2002 தேர்தலில் கோலிச ஜாக் சிராக்கிற்கு வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது; அப்படிச் செய்தால் தீவிர வலதின் தேசிய முன்னணி வேட்பாளர் Jean Marie Le Pen ஜனாதிபதியாக கூடாது என்பதற்காக அப்படிக் கூறப்பட்டது. இதே வாதத்தை ஒட்டி ஒரு வருங்கால LCR பிரதிநிதிகளும் சோசலிஸ்ட் தலைமை நிர்வாகத்திற்கு ஆதரவு கொடுத்து UMP அரசாங்கம் அமைக்கப்படுவதை தடுக்கும். இத்தகைய ஆதரவில் இருந்து அரசாங்கத்தில் பங்கு பெறுவது என்பது ஒரு சிறு அடி எடுப்புதான்.

நன்கு ஸ்தாபிக்கப்பட்ட சந்தர்ப்பவாத போக்கு

பிரெஞ்சு ஆளும் வர்க்கம் வெற்றுத்தனமான "இடது" அலங்காரச் சொற்களுக்கும் புரட்சிகர அரசியலுக்கும் இடையில் நன்கு வேறுபடுத்தி அறியக்கூடியதாக இருக்கிறது. அது ஒன்றும் முதலாளித்துவ எதிர்ப்பு வாடிக்கைச் சொற்கள் பெசன்ஸெநோவால் அல்லது அலன் கிறிவின் போன்ற கட்சித் தலைவர்கள் வலியுறத்துவது பற்றி கலங்கி தூக்கத்தை இழக்கப் போவதில்லை. செய்தி ஊடகமும் LCR பற்றி நன்கு பழக்கமுள்ளதாக இருப்பதுடன், அவ்வமைப்பானது அதன் நியமிக்கப்பட்ட பாத்திரத்திற்காக முயற்சிப்பதுடன் பொருத்தமாகவும் இருந்து வந்திருக்கிறது.

LCR முதலாளித்துவ உயரடுக்குடன் வலைபோன்ற அடர்த்தியான தொடர்புகளால் பிணைந்துள்ளது. அதனுடைய 40 ஆண்டு காலத்தில், ஆயிரக்கணக்கானவர்கள் LCR இன் சந்தர்ப்பவாத பள்ளியில் பயின்று அரசியல், செய்தி ஊடகம், பொருளாதாரம், கல்விக்கூடம் ஆகிய துறைகளில் முக்கிய பதவிகளை பெற்றுள்ளனர். இந்த உறவுகள் இளகிய தன்மைய உடையவை, பல முன்னாள் உறுப்பினர்கள் தங்களுடைய LCR தோழர்களுடன் தங்கள் உறவுகளை துண்டித்துக் கொண்டதே கிடையாது.

பியர் பிராங்கின் தலைமையில் இருந்த பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் பிரெஞ்சுப் பகுதி மற்றும் PCF ல் இருந்து வெளியேற்றப்பட்ட கிறிவின் தலைமையில் இருந்த கம்யூனிஸ்ட் மாணவர் கூட்டமைப்புடன் கலந்திணைந்ததன் மூலம், LCR ஆனது 1960 களின் கடைசிப் பகுதியில், நிறுவப்பட்டது.

1950 களின் ஆரம்பத்திலேயே ஐக்கிய செயலகம் ட்ரொட்ஸ்கியின் முன்னோக்கான தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான மார்க்சிச கட்சிகளை கட்டுவதை கைவிட்டு, தவிர்க்க முடியாமல் வெகுஜனங்களை காட்டிக்கொடுத்த அனைத்து வகையான பாட்டாளி வர்க்கமல்லாத போக்குகளுக்கு புரட்சிகர பங்கை கொடுத்தது. ஸ்ராலினிஸ்ட்டுக்கள், குட்டி முதலாளித்துவ தேசிய வாதிகள், இடது சமூக ஜனநாயக வாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் ஆகியோர் ஏதேனும் ஒரு கட்டத்தில் பப்லோவாதிகளால் போற்றப்பட்டனர்; இப்பட்டியல் உண்மையில் முடிவற்றதாக இருக்கிறது. பெயர் குறிப்பிடுவதானால், அல்ஜீரிய தேசிய முன்னணி, மாவோ சேதுங், பிடல் காஸ்ட்ரோ, நிகரகுவாவின் சான்டினிஸ்டா, முன்னாள் சோவியத் தலைவர் மிக்கைல் கோர்ப்பஷேவ், தற்போதைய வெனிஜூலாவின் தலைவர் ஹ்யூகோ ஷாவேஸ் ஆகியோர் இப்பட்டியலில் சிலராவர்.

ஒரு மாணவர் தலைவராக 1968ல் செல்வாக்கை ஏற்படுத்திக் கொண்ட கிறிவின் சமீபத்தில் வெளிவந்த அருடைய சுய சரிதையில், அந்த நேரத்தில் தனது அதி புரட்சிகர காட்டிக்கொள்ளல் இருப்பினும், தான் ஒருபோதும் புரட்சியின் சாத்தியத்தை பார்த்ததில்லை என்றார். "[மே-ஜூன் 1968] இயக்கம் எந்த அளவிற்குச் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் எங்கு செல்லாது என்பது பற்றி நன்கு தெரியும். இது ஒரு முன்னோடியில்லாத பரிமாணம் பெற்ற இயக்கம் ஆகும்; ஆனால் அது ஒரு புரட்சி அல்ல: ஒரு வேலைத்திட்டமோ நம்பகத் தன்மை உடைய அமைப்புக்களோ அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தயாரிக்கப்படவில்லை." தன்னுடைய பங்கிற்கு LCR மாணவர்களை புதிய புரட்சியின் முன்னணிப் படை என்று பெருமைப்படுத்தி பின்தங்கிய நாடுகளில் நடக்கும் கொரில்லா போராட்டங்களையும் புகழ்ந்தார்; ஆனால் ஸ்ராலினிச PCF ற்கு அறைகூவல் விடத் தயாராக இருக்கவில்லை; அது இறுதியில் பொது வேலைநிறுத்தத்தை விற்று, தளபதி சார்ல்ஸ் டு கோல் ஆட்சியை காப்பாற்றியது.

1970கள், 1980 களில் LCR, PCF க்கு எதிராக திரும்பி பல எதிர்ப்பு போக்குகளுடன் ஊடாடியது; ஆனால் வெற்றிபெவில்லை; ஏனெனில் பல "புதுப்பிக்கப்பட்டவர்கள்" விரைவில் வலதிற்கு சென்று மறைந்துவிட்டனர். பப்லோவாத அமைப்புக்கள் பலவற்றைப் போல் LCR ம் சோவியத் ஒன்றியம் உடைந்தபோது பெரிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது.

1990 களின் கடைசியில்தான் பிரான்சில் இருக்கும் தீவிர அமைப்புக்கள் மீண்டும் ஆதரவை பெறத் தொடங்கின; இதற்குக் காரணம் சோசலிச, கம்யூனிஸ்ட் கட்சிகளின் சரிவு ஆகும். இதில் முதல் இலாபம் அடைந்தவர் Lutte Ouvrière ஐ சேர்ந்த ஆர்லெட் லாகியே ஆவார்; இவர் ஜனாதிபதி தேர்தல்களில் கணிசமான வாக்குகளை பெற்றார். இதற்கு விடையிறுக்கும் வகையில் LCR ஒலிவியே பெசன்ஸெநோவிற்கு உருக்கொடுத்தது. இந்த சொல்லாற்றல் மிகுந்த வரலாற்று மாணவர், மத்தியதர வகுப்பு பின்னணி கொண்டவர், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், குறிப்பிடத்தக்க வகையில் இளைஞர்களின் வாக்குகளை சிறப்பாகப் பெற்றார் --1.5 மில்லியன் வாக்குகள். இவருக்கு ஆதரவு கொடுத்தவர்களில் பாதிபேர் 34 வயதிற்கும் குறைந்தவர்கள் ஆவர்.

இளைஞர்களின் அரசியல் அனுபவமின்மையை LCR பயன்படுத்துகிறது; அவர்கள் பெசன்ஸெநோவினால் ஈர்க்கப்படுகின்றனர் அவர்களுக்கு அரசியல் பயிற்சி கொடுப்பதற்கு பதிலாக LCR தொழிலாளர்கள் இயக்கத்தின் வரலாற்றுத் தன்மை நிறைந்த மரபுகள் பற்றி இகழ்வுணர்வை ஊக்குவித்து அவர்களுக்கு பொறுப்பற்ற சந்தர்ப்பவாதிகளாக இருக்கும் பயிற்சியை கொடுக்கிறது. தான் ஒரு பொழுதும் ட்ரொட்ஸ்கிசவாதியாக இருந்ததில்லை என்று பெசன்ஸெநோ பீற்றிக் கொள்ளுகிறார். உண்மையில் அவருக்கு முன்மாதிரி சேகுவாரா ஆவார். சமீபத்தில் அவர் ஆர்ஜன்டினாவில் பிறந்த அரசியல் சாகசவாதியின் ஒரு சுயசரிதையை வெளியிட்டார்; அவர் கிராமப்புறத்தை அடித்தளமாகக் கொண்ட தனது கொரில்லாப் போராட்ட முன்னோக்கால் எண்ணற்ற இளைஞர்களை நகர்ப்புற தொழிலாள வர்க்கத்திற்கு முதுகை திருப்பிக்கொண்டு நம்பிக்கையற்ற, பெரும்பாலும் பேராபத்தான விளைவுகளுடன் கூடிய அரசியல் சாகசங்களில் இறங்க ஊக்குவித்தார்.

இந்த உண்மைகள் அனைத்தையும் கருத்திற்கொண்டால், LCR ன் 17வது காங்கிரசில் ஜனவரி 24-26ல் பங்கேற்ற 313 பேராளர்களில் ஒருவரும் LCR ஐ கலைத்து உருவமற்ற "முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியாக" அதை மாற்றுவதற்கும் பெயரளவு உறவு ட்ரொட்ஸ்கிசத்துடன் இருப்பதைத் தூக்கி எறியவும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் என்பது முன்னறியக் கூடியதாக இருந்தது.

இந்த மாநாட்டில் ஒரே எதிர்ப்பு வலதில் இருந்துதான் வந்தது. சிறுபான்மைப் போக்கு Unitarire பொறுத்தவரை கலைப்புவாத வழிவகை போதவில்லை. அது PCF உடனும் சோசலிசக் கட்சியின் கிளையுடனும் நோக்குநிலையைப் பராமரிக்க விரும்புகிறது. புதிய கட்சி "ஒரு புதிய பார்வை கொண்ட தீவிர இடதுதான்" என்றும் குறைகூறுகிறது. Unitaire உடைய செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியான் பிக்கே, கிறிவின் மற்றும் பெசன்ஸெநோவின் தலைமையில் இருக்கும் பெரும்பான்மை ஒரு "போலித்தோற்றத்தை" துரத்திக்கொண்டு செல்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்; ஏனெனில் அது இருக்கும் LCR தளத்தைத்தான் நம்பியிருக்கிறது; அதுவோ "புரட்சியாளர்களிடம்" பிரத்தியேகமாக திருப்பிக் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி முதல் சோசலிஸ்ட் கட்சியில் உள்ள இடதுகள் ஊடாக மாற்றீடுகள்வரை "மற்ற இடங்களில் இருக்கும் புதிய தாராளக் கொள்கை உணர்வு எதிர்ப்பை புறக்கணிக்கிறது... உண்மையில் நாங்கள் பங்காளிகளாக வரும் சிறு குழுக்கள்தான். இடது மீதான PS ன் மேலாதிக்கத்திற்கு சவால் விடுவதற்கு தேவையான எண்ணிக்கையை பெறுவதற்கு நீண்டு பயணிக்க வேண்டும்" என்றார் அவர்.

மாநாட்டில் சிறுபான்மை, பேராளர்களில் 14 சதவிகித வாக்குகளையும் பெரும்பான்மை 83 சதவிகிதத்தையும் பெற்றது. ஒரு அட்டவணையை காங்கிரஸ் ஏற்றுள்ளது; இதில் வரவிருக்கும் வாரங்களிலும், மாதங்களிலும் "முன்முயற்சிக் குழுக்கள்" ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவை புதிய கட்சிக்கான தளம் பற்றி விவாதிக்க வேண்டும், கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் அவை ஆரம்ப தேசிய கூட்டத்திற்காக கூட உள்ளன; அது "பன்முகக் கட்டுப்பாட்டுக் குழு" ஒன்றை தேர்ந்தெடுக்கும்; அது புதிய கட்சிக்கான ஸ்தாபக அறிக்கையை தயாரிக்கும். LCR-ä கலைப்பதும் புதிய கட்சியின் ஸ்தாபித மாநாட்டை நடத்துவதும் ஆண்டின் இறுதிக்கு திட்டமிடப்பட்டுள்ளன.