World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Acrimonious feuding inside JVP as party's support slides

இலங்கை: கட்சியின் ஆதரவு சரியும் நிலையில் ஜே.வி.பி. யினுள் நச்சுத்தனமான வெட்டுக் குத்துக்கள்

By K. Ratnayake
22 April 2008

Use this version to print | Send this link by email | Email the author

மக்கள் விடுதலை முன்னணியினுள் (ஜே.வி.பி.) கடுமையான உள் முரண்பாடுகள் வெடித்துள்ளன. ஜே.வி.பி. இலங்கையில் சிங்கள இனவாதத்துடன் மக்கள்வாத வாய்வீச்சுக்களையும் கலவையாக்கி செயற்படுவதோடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை தீவிரமாக ஆதரிக்கும் கட்சியாகும். இந்த பிளவில் தனிப்பட்ட அவதூறுகள், அமைப்பு ரீதியான சூழ்ச்சித் திட்டங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகளும் ஆதிக்கம் செலுத்தும் அதே வேளை, இந்த பதட்ட நிலைமை முழுத் தீவையும் ஆட்டிப்படைக்கும் ஆழமடைந்துவரும் அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளையே பிரதிபலிக்கின்றது.

ஏப்பிரல் 8 அன்று, ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் கட்சியின் தலைமைத்துவத்தின் மீது கசப்பான குற்றச்சாட்டுக்களை சுமத்திய போதே இந்த முரண்பாடுகள் அம்பலத்துக்கு வந்தன. கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் தூண்டுதலில், கடந்த மாதம் வீரவன்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஜே.வி.பி.யின் தலைமைத்துவம் முன்னெடுத்துள்ளதாக தெரிய வருகின்றது. மேலும் ஒன்பது ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் வீரவன்சவுக்கு ஆதரவளிப்பதோடு தனது அரசியல் குறிக்கோள்களுக்கான வாகனமாக தேசபக்த முன்னணியொன்றை அவர் அமைத்துள்ளார்.

கட்சி வெளிப்படையான பிளவை நோக்கி துரிதமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. கடந்த இரு வாரங்களில், கருத்து வேறுபாடு கொண்ட இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குச் சொந்தமான வாகனங்கள் அபகரிக்கப்பட்டு கட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அவர்கள் பாராளுமன்ற பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து, ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த வீரசேகரவும் மேலும் இருவரும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஜே.வி.பி. குண்டர்கள் என சொல்லப்படுபவர்களால் இன்னுமொரு கருத்து வேறுபாடு கொண்ட பாராளுமன்ற உறுப்பினரான சமன்சிறி ஹேரத்தின் வீடு தாக்கப்பட்டுள்ளது. வீரவன்சவுக்கு ஆதரவானது என சொல்லப்படும் ஜே.வி.பி. யின் முன்னணி அமைப்பான தேசபக்தி தேசிய இயக்கத்தின் இரு அமைப்பாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

ஆளும் கூட்டணியில் சேர்ந்துகொள்வதா அல்லது எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துகொள்வதா என்ற அரசாங்கம் பற்றிய கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவே இந்தப் பிளவின் பின்னணியில் உள்ள உடனடி விவகாரமாகும். 2005 நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த இராஜபக்ஷ குறுகிய வெற்றியைப் பெறுவதற்கு தீர்க்கமான சேவையாற்றிய ஜே.வி.பி, தீவை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளுவதில் தாம் கருவியாய் செயற்பட்டதாகவும் பெருமை பாராட்டிக்கொள்கிறது. அதே சமயம், இராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பங்குபற்றாமல் தம்மை தூர வைத்துக்கொள்ளவே அது முடிவு செய்தது.

உத்தியோகபூர்வமாக எதிரணியில் இருந்தாலும் கூட, ஆட்டங்கண்டு போயுள்ள அரசாங்கத்துக்கு முண்டு கொடுப்பதில் ஜே.வி.பி. தீர்க்கமான பாத்திரம் வகித்துள்ளது. 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களை நடத்தவும் ஜனவரியில் உடன்படிக்கையை முற்றாக இரத்துச் செய்யவும் ஜே.வி.பி.யின் 37 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளித்தனர். அரசாங்கத்தின் கொடூரமான அவசரகாலச் சட்டங்களை விரிவுபடுத்த வாக்களித்த அவர்கள், ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களை அங்கீகரித்ததுடன் உழைக்கும் மக்கள் மீது யுத்தத்தின் பொருளாதார சுமைகளை திணித்துள்ள வரவுசெலவுத் திட்டத்திற்கும் ஆதரவளித்தனர். யுத்தம் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான தாக்கத்தின் காரணமாக வெடித்துள்ள பரந்த வெகுஜன எதிர்ப்பானது அரசாங்கத்திற்கான வெகுஜன ஆதரவை மட்டுமன்றி ஜே.வி.பி.யின் மக்கள் ஆதரவையும் சரியச் செய்தது.

வீரவன்சவும் அவரது ஆதரவாளர்களும் இராஜபக்ஷ அரசாங்கத்துடன் இணைவதற்கு நெருக்கி வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பெருமளவில் குறைந்துவரும் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது எப்படி என்பது பற்றி ஜே.வி.பி. தலைமைத்துவம் கலந்துரையாடி வந்துள்ளதாக, ஞாயிற்றுக் கிழமை அவர் தெரன தொலைக் காட்சி சேவையில் விளக்கினார். "அரசாங்கத்தில் இணைந்து மக்களுக்கு நெருக்கமாக சில வேலைகளை செய்தால் வெகுஜன ஆதரவை தக்க வைத்துக்கொள்ள இயலும் என்பதே எனது கருத்தாக இருந்தது. நாங்கள் அரசாங்கத்தில் இருந்து பிரிந்து செயற்பட்டால், யுத்தத்தை புதுப்பிப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்த பின்னர், நாங்கள் வெளியில் இருக்க புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் வெற்றிகளில் மஹிந்த இராஜபக்ஷவே நன்மை பெறுவார் என்பதே எனது விவாதமாக இருந்தது," என வீரவன்ச தெரிவித்தார்.

யுத்தத்தின் தீவிர ஆதரவாளராக பேர் போன வீரவன்ச, இராஜபக்ஷவின் அமைச்சரவையில் தனக்கு ஒரு அந்தஸ்த்தை எதிர்பார்ப்பது தெளிவு. இராஜபக்ஷ தனது கூட்டணியில் உள்ளவர்களின் ஆதரவை தக்கவைத்துக்கொள்வதன் பேரில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு உத்தியோகபூர்வ பதவியை வழங்கத் தள்ளப்பட்டுள்ள நிலையில், வீரவன்சவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கான வாக்குறுதிகள் ஏறத்தாள உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.

ஏப்பிரல் 8ம் திகதி பாராளுமன்றத்தில் வழங்கிய அறிக்கையில், தனது பதவிகளில் இருந்து தன்னை இறக்குவதற்கு கட்சியினுள் "சதி" நடப்பதாக குற்றஞ்சாட்டிய வீரவன்ச, "ஏகாதிபத்திய நிகழ்ச்சித் திட்டத்தைக் கொண்டுள்ள" எதிரிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இரிதா திவயின பத்திரிகைக்கு இந்த கருப்பொருளை அபிவிருத்தி செய்து பேட்டியளித்த அவர், கட்சிக்குள் உள்ள "சதிகாரர்கள் (எதிர்க் கட்சியான) ஐக்கிய தேசியக் கட்சியுடனும் (யூ.என்.பி.) மேற்கத்தைய சக்திகளுடனும் கைகோர்த்துக் கொண்டுள்ளனர்" என குற்றஞ்சாட்டினார். கட்சியின் தலைமைத்துவம் "யூ.என்.பி. யை ஆட்சிக்கு கொண்டுவரும் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை பின்பற்றுகிறது" என அவர் பிரகடனம் செய்தார்.

வீரவன்சவின் வசைமாரிகள் யுத்தத்தின் அதி தீவிர ஆதரவாளர்களின் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றது. இவர்கள் இராணுவத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் மற்றும் அட்டூழியங்களைப் பற்றிய எந்தவொரு மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனத்தையும் கூட தேசத்துரோகமாக கருதுகின்றனர். யதார்த்தத்தில், 1983ல் நீண்ட உள்நாட்டு யுத்தத்தை ஆரம்பித்து வைத்தமைக்குப் பொறுப்பளியான வலதுசாரி யூ.என்.பி, 2006 ஜூலையில் இருந்து இராணுவத் தாக்குதல்களுக்கு முழுமையாக ஆதரவளிக்கின்றது. இராணுவத்தின் வெளிப்படையான துஷ்பிரயோகங்கள் பற்றிய ஊமைத்தனமான விமர்சனங்கள் ஒரு பக்கமிருக்க, அமெரிக்க மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகள் அரசாங்கத்தின் யுத்தத்திற்கு மெளனமாக ஆதரவளிப்பதோடு 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்ததைப் பற்றியும் அவை அக்கறை செலுத்தவில்லை.

வீரவன்ச புதிய அரசியல் முன்னணியை முன்னெடுப்பதற்கான தனது திட்டத்திற்காக பெளத்த உயர் பீடாதிபதிகளின் ஆசியைப் பெற ஞாயிற்றுக் கிழமை கண்டிக்குச் சென்றார். அதன் பின்னர் பேசிய அவர், தனது எதிரிகள் புலிகளுக்குத் துணை போவதாக மேலும் உரத்த குரலில் கண்டனம் செய்தார். "நாட்டின் தேசிய தலைமைத்துவத்தை அழிப்பதற்காக சதி நடக்கின்றது. புலிகள் அதை முன்கொண்டு செல்கின்றனர். பிரிவினைவாதத்தை முன்னணிக்குக் கொண்டு வருபவர்களே ஜே.வி.பி. யின் பிளவுக்கு பங்களிப்புச் செய்துள்ளனர். நாட்டில் பிரிவினைவாதத்தை முன்நிறுத்துவதை ஆதரிக்கும் சக்திகள் இன்று மகிழ்ச்சியடைகின்றன," என அவர் தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைவர்கள்

ஜே.வி.பி. தலைமைத்துவத்தில் உள்ள வீரவன்சவின் எதிரிகள் சிங்களப் பேரினவாதத்தில் ஊறிப்போனவர்களாவர். அதே சமயம், கட்சி அரசாங்கத்துடன் இணைந்தால் கட்சிக்கு எஞ்சியுள்ள ஆதரவும் ஆவியாகிவிடும் என்பதையிட்டு அவர்கள் பெரும் கவலையில் உள்ளனர். கட்சியின் அரசியல் வழியைப் பின்பற்றத் தவறியமைக்காகவும் இராஜபக்ஷ அரசாங்கம் தொடர்பாக மிகவும் விமர்சனப் போக்கைக் கடைப்பிடிக்கத் தவறியமைக்காகவும் வீரவன்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க ஏப்பிரல் 9ம் திகதி பத்திரிகையாளர் மாநாட்டில், வீரவன்ச அரசாங்கத்தை விமர்சிக்கத் தவறிய ஒரு தொகை விவகாரங்களை பட்டியலிட்டார். இவற்றில், 2007 ஜூன் மாதம் பொலிஸார் கொழும்பில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழர்களை பலாத்காரமாக வெளியேற்றியது, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் சண்டே லீடர் பத்திரிகையை வெளியிடும் லீடர் அச்சகத்திற்கு தீ வைத்ததும் அடங்கும்.

ஏப்பிரல் 20ம் திகதி வெளியான ஜே.வி.பி. வெளியிடும் லங்கா பத்திரிகையில் வெளியான பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவின் பேட்டியில், வீரவன்ச "கட்சியை மஹிந்த இராஜபக்ஷவோடு கட்டிப்போட" முயற்சித்ததாக குற்றஞ்சாட்டினார். அரசாங்கம் "கட்சியை அதன் பைக்குள் போட்டுக்கொள்ள விரும்புகிறது... அவர்கள் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விமலை (வீரவன்ச) பயன்படுத்தி வந்துள்ளனர்... அவர்கள் தோல்விகண்டதை அடுத்து அவர்கள் அவரை வெளியே எடுத்துவிட்டுள்ளனர் என நாம் சந்தேகிக்கின்றோம்," என அவர் தெரிவித்தார்.

வீரவன்சவைப் போலவே ஜே.வி.பி. யும் யுத்தத்திற்கு ஆதரவளிப்பதில் உறுதியாக உள்ளது. "நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. தேசியப் பிரச்சினை எல்லாவற்றுக்கும் முதலானது. இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தி மேற்கத்தைய சூழ்ச்சிகளும் இந்திய தலையீடும் இடம்பெறுகின்றன. இலங்கையை கொசோவோ ஆக்குவதற்கான சதி நடைபெறுகின்றது... நாட்டில் பொருளாதார நெருக்கடி உண்டு... இராஜபக்ஷ அரசாங்கத்திடம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது. இதற்கு (நாட்டுக்கு) தேசப்பற்றுள்ளவர்களதும் முற்போக்கானவர்களதும் புதிய தேசப்பற்று முன்னணி ஒன்று அவசியமாகும்," என சில்வா லங்கா பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

சில காலமாகவே புகைந்துகொண்டிருந்த இந்த முரண்பாடுகள் இப்போது அம்பலத்திற்கு வந்தது தற்செயலானது அல்ல. ராக்கட் வேகத்தில் அதிகரிக்கும் பணவீக்கமானது கிராமப் புறங்களில் ஜே.வி.பி. யின் நீண்டகால ஆதரவுத் தளம் உட்பட பரந்த மக்கள் மத்தியில் அதிருப்தியை எரியச் செய்துள்ளது என்பதைப் பற்றி ஜே.வி.பி. தலைவர்கள் அதிகம் முன்னுணர்வு கொண்டுள்ளனர். உணவுப் பொருட்களுக்கான ஆண்டு பணவீக்க வீதம் மார்ச் மாதத்தில் தாங்க முடியாத 37 வீதத்தை எட்டியுள்ளது. நாட்டின் முக்கிய உணவுப் பொருளான அரிசி உட்பட உணவுப் பொருட்கள் பற்றாக்குறையில் இது பிரதிபலித்துள்ளது.

கடந்த ஆண்டு கிழக்கில் புலிகளுக்கு எதிராக சில துரித வெற்றிகளைப் பெற்ற பின்னர், வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் சேற்றில் புதைந்து போயுள்ளன. இராணுவத்தில் உள்ள பெரும்பான்மையானவர்கள் நாட்டின் பெரும்பகுதியான சிங்கள மக்கள் வாழும் தெற்கில் உள்ள வறிய கிராமங்களைச் சேர்ந்தவர்களாவர். ஜே.வி.பி. யின் மாணவர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களும் யுத்த முயற்சிக்கு அர்ப்பணிக்குமாறு அழைப்புவிடுக்கின்ற நிலையில், பல்கலைக்கழக மாணவர்களும் அரசாங்கத் துறை ஊழியர்களும், நிதி வெட்டு மற்றும் சம்பள மட்டம் மேலும் மேலும் சரிந்து வருவதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். குறிப்பிடத்தக்க வகையில், ஜே.வி.பி. தனது பலத்தை காட்சிப்படுத்துவதற்காக வழக்கமாக பயன்படுத்தி வரும் மேதின ஊர்வலத்தை இந்த ஆண்டு நடத்தாமல் இருக்க முடிவு செய்துள்ளது.

ஜே.வி.பி. கொழும்பு மற்றும் சர்வதேச ஊடங்களில் "மார்க்சிஸ்டுகளாக" காட்டிக் கொண்ட போதிலும், அந்தக் கட்சிக்கும் மார்க்சிசத்திற்கும் அல்லது சோசலிசத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அது எப்பொழுதும் வறிய கிராமப்புற இளைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளதே அன்றி தொழிலாளர் வர்க்கத்தை அல்ல. 1960களில் அது ஸ்தாபிக்கப்பட்டது முதல், ஜே.வி.பி. யின் கொள்கை மாவோவாதம், குவேராவாதம் மற்றும் சிங்கள இனவாத அரசியலின் கலவையை அடிப்படையாகக் கொண்டதாகும். சிங்கள இனவாத அரசியலானது நாட்டின் உள்நாட்டு யுத்தத்தின் தாக்கத்தின் கீழ், துரிதமாக வலதுசாரி பக்கம் திரும்பியுள்ளது.

1980களின் பிற்பகுதியில், இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக "தேசப்பக்தி" பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்த ஜே.வி.பி., வடக்கில் புலிகளை நசுக்கி சமாதான உடன்படிக்கை ஒன்றைத் திணிப்பதற்காக இந்திய "அமைதிப்படையை" அனுமதிக்க உடன்பட்டதன் மூலம் யூ.என்.பீ. அரசாங்கம் நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியது. ஜே.வி.பி. யின் இனவாத எதிர்ப்பை ஆதரிக்க மறுத்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை பாசிச ஜே.வி.பி. கும்பல் கொன்று தள்ளியது. 1989ல், ஜே.வி.பி. யுடன் கூட்டணி ஒன்றை அமைக்கும் பாதையில் அடியெடுத்து வைத்திருந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாச, கட்சிக்கு எதிராகத் திரும்பியதோடு, அதன் தலைவர்களை படுகொலை செய்ததுடன் நாட்டின் தென்பகுதி பூராவும் கொலைப் படைகளை கட்டவிழ்த்துவிட்டார். இதன்போது பத்தாயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

1994ல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பின்னர் ஜே.வி.பி. மீண்டும் அரசியல் நீரோட்டத்திற்குள் வந்தது. யூ.என்.பி., குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) ஆகிய இரு பிரதான கட்சிகளுக்கும் எதிராக எதிர்ப்பு வளர்ச்சி கண்ட அளவில், ஜே.வி.பி. ஆளும் கும்பலுக்கு ஒரு அரசியல் பாதுகாப்பு குழாயாக பெறுமதியான பாத்திரத்தை இட்டு நிரப்பியது. எவ்வாறெனினும், அது 2004ல் ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டு வறியவர்களுக்கு உதவுவதாக கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றத் தவறிய நிலையில் ஜே.வி.பி. யின் ஆதரவு வீழ்ச்சி காணத் தொடங்கியது.

வெகுஜன ஆதரவு சரிந்துகொண்டிருந்த நிலைமையின் கீழ், 2004 டிசம்பரில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட சர்வதேச நிதி உதவியை கையளிப்பதற்காக புலிகளுடன் கூட்டமைப்பொன்றை குமாரதுங்க அரசாங்கம் ஸ்தாபித்ததை கசப்புடன் எதிர்த்த ஜே.வி.பி., 2005 நடுப்பகுதியில் அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்டது. நிதி உதவி கூட்டமைப்புக்கு எதிரான அதன் கண்டனமானது, புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தின் பேரில் இனவாத உணர்வைத் கிளறிவிடும் பிரச்சாரத்துக்கு சமிக்ஞையாக விளங்கியது. தமக்குள்ள ஆதரவு பற்றி நிச்சயமில்லாமல் இருந்த ஜே.வி.பி. 2005 நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் சொந்த ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தவில்லை. மாறாக, அது குமாரதுங்கவிற்கு பதிலாக ஸ்ரீ.ல.சு.க. தலைவராகிய இராஜபக்ஷவிற்கு, யுத்தத்திற்கான பாதையை அமைக்கும் ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்தது.

தொடர்ந்து சரிந்துவரும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் எண்ணிக்கையும் வெகுஜன ஆதரவும், இப்போது அதன் சொந்த உறுப்பினர்களுக்குள் நெருக்கடியை தூண்டிவிட்டுள்ளதுடன் ஒரு பிளவை நோக்கியும் தள்ளியுள்ளது. ஞாயிற்றுக் கிழமை கண்டியில் கருத்துத் தெரிவித்த வீரவன்ச, "கட்சிக்குள் ஒட்டுப்போடும் சாத்தியம் மிகத் தொலைவில் உள்ளதாக" சுட்டிக்காட்டினார்.