World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : நேபாளம்

After election landslide, Nepalese Maoists reassure investors and major powers

தேர்தல்களில் பெரும் வெற்றிக்கு பின்னர் மாவோயிஸ்ட்டுக்கள் முதலீட்டாளர்கள், பெரிய சக்திகளுக்கு உத்தரவாதம் அளிக்கின்றனர்

By K. Ratnayake and Peter Symonds
18 April 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஏப்ரல் 10ம் தேதி நடைபெற்ற அரசியலமைப்பு நிர்ணய மன்றத்திற்கான தேர்தல்களில் எதிர்பாராமல் நேபாள-மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPN-M) கிடைத்த மகத்தான வெற்றி நாட்டிலுள்ள சமூக நெருக்கடியின் ஆழ்ந்த தன்மை மற்றும் முடியாட்சிக்கு எதிராக மட்டுமல்லாமல் முழு அரசியல் நடைமுறையிலும் இருக்கும் கட்சிகளுக்கு எதிராக இருக்கும் மக்கள் விரோதப் போக்கின் பரந்த தன்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

சிக்கல் வாய்ந்த தேர்தல் வழிமுறையினால் முழு முடிவுகள் தெரிவதற்குச் சில வாரங்கள் ஆகலாம்; ஆனால் 240 நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மன்றத்தில் மாவோயிஸ்டுகள் தெளிவான பெரும்பான்மையை பெற்று விட்டனர். இதுகாறும் முடிவுகள் தெரிந்துள்ள 218 இடங்களில் CPN-M 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது; அதன் நெருக்கமான போட்டிக் கட்சி நேபாளி காங்கிரஸ் 34 இடங்களிலும் நேபால் கம்யூனிஸ்ட் கட்சி -ஒன்றுபட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி NCP-UML 31 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இனவழி அடிப்படையை கொண்ட Madhese People's Rights Forum 24 தொகுதிகளில் வென்றுள்ளது.

மற்றும் 335 இடங்களுக்கான முடிவுகள் விகிதாசார வாக்கெடுப்பின் மூலம் முடிவு எடுக்கப்படும்; இதில் மகளிர், கீழ்நிலை சாதிகள் மற்றும் இனவழிச் சிறுபான்மையினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் மாவோயிஸ்ட்டுக்களுக்கு கிடைத்த வாக்குகள் 33 சதவிகிதமாக உள்ளது; 601 உறுப்பினர்கள் இருக்கும் அரசியல் நிர்ணய சபையில் CPN-M க்கு மிக அதிகமான இடங்கள் என்ற நிலை உத்தரவாதமானலும் பெரும்பான்மை கிடைக்குமா என்பது கூறவியலாது. எஞ்சியுற்ற 26 இடங்கள் இடைக்கால மந்திரிசபையினால் நியமிக்கப்படுவர்; இதில் CPN-M மேலாதிக்கம் செலுத்தும்.

ஒரு புதிய அரசியல் அமைப்பை இயற்றவும் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கவும் தேர்ந்தேடுக்கப்படும் அரசியல் அமைப்பு நிர்ணய மன்றம் நீடித்த அரசியல் நெருக்கடியின் விளைவு ஆகும். ஏப்ரல் 2006ல் வரம்பிலா முடியாட்சிக்கு எதிரான தொடர்ந்த எதிர்ப்புக்கள் இறுதியில் அரசர் ஞானேந்திராவை ஒதுக்கி வைத்து, நேபாள காங்கிரஸ், NCP-UML இருக்கும் ஏழு கட்சிக் கூட்டணியிடம் அதிகாரத்தை ஒப்படைக்க நிர்ப்பந்திக்க செய்தது. நவம்பர் 2006ல் மாவோயிஸ்ட்டுக்கள் 12 ஆண்டுகால ஆயுதமேந்திய எழுச்சியை முடிப்பதற்கும், மந்திரிசபையில் இடம் பிடிக்கவும் அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத் தேர்தல்களில் பங்கு பெறுவதற்கும் அரசாங்கத்துடன் ஒரு உடன்பாடு செய்து கொண்டனர்.

கடந்த வார தேர்தல்களின் முடிவுகள் அவதானிகள், அரசியல் பண்டிதர்கள் மற்றும் தூதர்களை அதிர்வடையச் செய்தது. வெற்றியின் அளவு குறித்து மிகவும் வியப்பு அடைந்தவர்கள் மாவோயிஸ்டுகளே ஆவர். இக்கட்சி முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் தாம் இத்தேர்தலில் கலந்து கொள்வதில்லை என்று அச்சுறுத்திய அளவில் தேர்தல் இரு முறை தாமதப்படுத்தப்பட்டது. நேரடித் தேர்தல்களில் தாங்கள் வெற்றி பெற முடியாது என்று அஞ்சிய மாவோயிஸ்ட்டுக்கள் கூடுதலான இடங்கள் விகிதாச்சார தொகுதிகளுக்கு தேவை என்று வலியுறுத்தினர்; இறுதியில் சமரசத்திற்கு உட்பட நேர்ந்தது. ஆனால் நேரடித் தேர்தல்களில் CPN-M பாரியளவு வெற்றியைப் பெற்றது. இது அவர்களின் கிராமப்புற ஆதிக்கப்பகுதிகளில் என்று மட்டும் இல்லாமல் காத்மாண்டுவிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் நிகழ்ந்தது.

முடியாட்சிக்கு விரோதம் என்பது முடிவுகளில் ஒரு முக்கியமான காரணி என்பது தெளிவு. ஏப்ரல் அரசர் அரியணையில் இருந்து இறங்க வேண்டும் என்றுகோரி 2006ல் பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பாதுகாப்பு படையினரை ஒவ்வொரு நாளும் எதிர்த்து நின்றதில் எதிர்ப்பின் ஆழ்ந்த தன்மை வெளிப்பட்டது. அவருடைய சர்வாதிகார ஆட்சி வழிவகைகள் மற்றும் சலுகைமிக்க வாழ்க்கை முறைக்காக அரசர் ஞானேந்திரர் குறிப்பிடத்தக்க வகையில் வெறுப்பிற்கு உள்ளானாலும், பல மக்களும் இந்த வரம்பிலா முடியாட்சி முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்ற முடிவிற்கு வந்தனர் என்பதில் சந்தேகம் இல்லை.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே ஒரு குடியரசு நிறுவப்படுவதற்கான நடவடிக்கையை ஏற்கவும் கட்டாயப்படுத்தி, முடியாட்சி அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்ததில் மாவோயிஸ்ட்டுக்கள்தான் மிகவும் உறுதியான கட்சியாக இருந்து வந்துள்ளனர். வரவிருக்கும் அரசியல் நிர்ணய சபையில் ஒரு வாக்கெடுப்பு நடந்துவிட்டால் அத்தீர்மானம் உறுதிப்படுத்தப்படுவதுடன், திருத்தம் ஏதும் இல்லாமல் அது ஏற்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதத்திற்குள் பதவியைத் துறந்து சாதாரண குடிமகனாக வேண்டும் இல்லாவிடின் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று அரசர் ஞானேந்திராவிற்கு, பிரச்சண்டா என்று நன்கு அறியப்பட்ட CPN-M தலைவர் புஷ்பா கமல் தஹால் இறுதி எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

வாக்காளர்கள் கண்ணோட்டத்தில் ஊழல் நிறைந்த மற்றும் பல ஆண்டுகள் அரசருக்கு அடிபணிந்து நின்ற நேபாள் காங்கிரஸும் குறிப்பாகவும் மற்ற இடது NCP-UML போன்ற நடைமுறையில் அரசியல் கட்சிகளும் நாட்டின் அவசர சமூக நெருக்கடிகளை தீர்க்க இயலாதவை என்று உள்ளது. 1990 ல் பெரும் மக்கள் எதிர்ப்புக்கள் முந்தைய அரசர் பிரேந்தாவை பாராளுமன்றத்திற்கு குறைந்த அளவில் அரசியலமைப்பு அதிகாரங்களை கொடுக்கவைத்தன; ஆனால் இறுதி அதிகாரம் இராணுவத்தின் பலம் நிறைந்த முடியாட்சியிடம்தான் இருக்கும் என்று இருந்தது.

நேபாள் காங்கிரஸ் மற்றும் NCP-UML இரண்டும் கடந்த வாரத் தேர்தல்களில் பெரும் அழிவை சந்தித்தன. முன்பு இடைக்கால பிரதம மந்திரியாக இருந்த நேபாள காங்கிரஸ் தலைவர் ஜி.பி. கொய்ராலா தன்னுடைய தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டாலும் கொய்ராலாவின் சகோதரி, முன்னாள் உள்நாட்டு மந்திரி கிருஷ்ண பிரசாத் சிடுவாலா உட்பட பல முக்கியக் கட்சித் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். NCP-UML ஐச் சேர்ந்த மாதவ் குமார் நேபாள் தன்னுடைய தொகுதியில் தோல்வியுற்று பதவியை இராஜிநாமா செய்துவிட்டார். கட்சியும் ஏழு-கட்சிக் கூட்டணியில் இருந்து விலகும் விருப்பத்தை அறிவித்துள்ளது.

இன்னும் அடிப்படையில் முழு நேபாள அரசியல் நடைமுறைக்கும் எதிர்ப்பு என்பது ஆழ்ந்த சமூக நெருக்கடி மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் இல்லாதது ஆகியவற்றிற்கான எதிர்ப்பை பிரதிபலிக்கிறது. நாட்டின் 30 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 31 சதவிகிதத்தினர் உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டின்கீழ் வாழ்கின்றனர். சராசரி தலா தனிநபர் வருமானம் அமெரிக்க $280 ஆண்டிற்கு என்று, உலகில் கடைசி மட்ட 12வது இடத்தில் உள்ளது. எழுத்தறிவின்மை மிக அதிகமாக உள்ளது. பெரும்பாலான மக்கள் கிராமப்புற பகுதியில் வாழ்கின்றனர்; தூய்மையான குடிநீர், சுகாதார வசதிகள், கல்வி வசதிகள் ஆகியவை அற்ற நிலையில் மக்கள் வசிக்கின்றனர்.

உலகில் உணவுப்பொருட்களின் விலைகள் மிக அதிகமாகி இருப்பது மிகவும் வறுமையில் வாடும் மக்களுடைய நிலைமையை மோசமாக்கியுள்ளது. சமையலுக்கு பயன்படும் எண்ணையின் விலை மூன்று மாதங்களில் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அரிசி, மாமிசம் மற்றும் பருப்பு வகைகளில் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. ஒரு மதிப்பீட்டின்படி நேபாளத்தின் நான்கு மில்லியன் "மிக வறியவர்கள்" தாங்கள் செலவழிக்க கூடிய வருமானத்தில் 75 சதவிகிதத்திற்கும் மேலாக உணவுப் பொருட்களுக்கு செலவழிக்கின்றனர். நாட்டின் விவசாயத்துறையில் முதலீடு என்பது குறைந்து வருகிறது. ஏப்ரல் 2ம் தேதி வெளியிடப்பட்ட ஆசிய வளர்ச்சி வங்கியின் அறிக்கை ஒன்றின்படி ஆண்டு வளர்ச்சி விகிதம் 3.8 சதவிகிதம்தான் இருக்கும் என்று தெரிகிறது; இது அப்பகுதியில் உள்ள மற்ற நாடுகளைவிட மிகக் குறைவு என்பதுடன் பணவீக்க வீதமும் 7 சதவீதம் என்று உள்ளது.

ஒரு முதலாளித்துவ நிகழ்ச்சிநிரல்

ஜனநாயக ஆட்சி, அமைதி, வளமை ஆகியவை அடங்கிய ஒரு புதிய காலத்தைக் கொண்டுவருவர் என்ற நம்பிக்கையில் பல வாக்காளர்களும் மாவோயிஸ்டுக்களை ஆதரித்துள்ளனர். ஆனால் இந்தப் போலி நம்பிக்கைகள் விரைவில் சிதைந்துவிடும். எல்லாருக்கும் எல்லாவற்றையும் மாவோயிஸ்ட்டுக்கள் உறுதியளிக்கின்றனர்; ஆனால் அவர்களுடைய வேலைத்திட்டத்தின் மையத்தில் முதலாளித்துவத்தை தக்க வைத்துக்கொள்ளும் உறுதிப்பாடு இருக்கிறது. ஸ்ராலினிச இரண்டு கட்ட தத்துவத்தை பற்றி அறிந்தவர்களுக்கு மாவோயிச தலைவர்களின் அறிக்கை ஏதும் வியப்பை கொடுக்கவில்லை. "முதலாளித்துவ விவசாயப் புரட்சியை" CPN-M தளமாகக் கொண்டுள்ளது; இக்கொள்கை தொழிலாள வர்க்கத்திடம் என்று இல்லாமல் வறிய கிராமப்புற அடுக்குகளிடம் தளத்தைக் கொண்டுள்ளது. அக்கொள்கையின்படி, "முதல் கட்டம்" எனப்படுவதில் கூறப்படும் இலக்கு முடியாட்சி, சாதிமுறை போன்ற நிலப்பிரபுத்துவ முறையின் எச்ச சொச்சங்களை அகற்றுவதாகும்; முதலாளித்துவத்தை அகற்றுவது இல்லை. சோசலிசம் தொலைவிலுள்ள வருங்காலத்திற்கு தள்ளி வைக்கப்படுகிறது.

தேர்தலில் வெற்றி அடைந்த பின்னர், பிரச்சண்டாவும் மற்றொரு மூத்த மாவோயிச தலைவருமான பாபுராம் பட்டாராயும் வணிகத் தலைவர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பெரும் சக்திகளுக்கு அவர்களுடைய நலன்கள் பாதுகாக்கப்படும் என்று உத்தரவாதம் அளிப்பதில் கவனமாக உள்ளனர். "இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில், வளர்ச்சிக்கு எங்களுக்கு அனைவருடைய ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது" என்று ஞாயிறன்று பிரச்சண்டா அறிவித்தார். "எங்கள் அண்டை நாடுகளான இந்தியா, சீனாவுடனும் மற்றும் சர்வதேச சமூகத்தின் மற்ற உறுப்பு நாடுகளுடனும் நாங்கள் நல்ல உறவுகளை விரும்புகிறோம்." என்றும் தெரிவித்தார். ஒரு புதிய அரசியலமைப்பு இயற்றப்படுவதில் "அனைத்துக் கட்சிகளுடனும்" இணைந்து செயல்படுவோம் என்ற உறுதியையும் கொடுத்தார்.

Nepal Times பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் பட்டாராய் "நிலப்பிரபுத்துவ முறைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று நாங்கள் கூறுகையில் தனியார் உடமைக்கு முற்றுப்புள்ளியை விரும்புகிறோம் என்று பொருள் இல்லை. எமது பொருளாதார வளர்ச்சி எங்கள் வார்த்தைகளில் ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி ஆகும்; வேறுவிதமாகக் கூறினால், கூட்டுப் பண்ணை, சோசலிசமாக்குதல், தேசியமயமாக்குதல் ஆகியவை எங்கள் தற்போதைய நிகழ்ச்சிநிரலில் இல்லை... மாவோயிஸ்ட்டுக்கள் அதிகாரத்திற்கு வந்தவுடன் முதலீட்டு சூழல் இன்னும் சாதகமாக இருக்கும் என்று ஒவ்வொருவருக்கும் உறுதி கொடுக்கிறோம். அதைப் பற்றி தேவையில்லாமல் தவறான கருத்துக்கள் இருக்கத் தேவையில்லை." என விளக்கினார்.

பிரச்சண்டாவும் பட்டாராயும் நேபாள வணிக, தொழில்துறைக் குழுமத்துடன் புதனன்று இரண்டு மணிநேரம் விவாதித்து இதே போன்ற தகவலைக் கொடுத்தனர்; "அடுத்த 10 ஆண்டுகளுக்கு நாம் பொருளாதாரப் புரட்சி என்ற சிறப்புத் தந்திரத்திற்கு உழைப்போம்; உலகம் முழுவதையும் மயங்க வைப்போம்." என்று பிரச்சண்டா வணிகத் தலைவர்களிடம் கூறினார். "தனியார் முதலீட்டை அனுமதிப்போம்; வெளிநாட்டு முதலீட்டிற்கும் ஆதரவு கொடுப்போம். நம்பிக்கை இழக்காதீர்கள்; நாங்கள் தொழிற்துறையை கைப்பற்றப் போவதில்லை; பொருளாதார செழிப்பை அடைவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நாடுகிறோம்."

DNA India வலைத் தளம் கொடுக்கும் தகவல்: "இந்த இடைத் தொடர்பு ஒரு இறுகிய விவகாரம் போல் தொடங்கியது; வணிகர்கள் மாவோயிச கொடூரங்கள் பற்றிக் குறைகூறினர் ஆனால் பிரச்சண்டா அவர்களுக்கு எதிர்பாராமல் ஒரு "முதலாளித்துவ உரை" கொடுத்ததுடன் முடிவடைந்தது; அந்த உரை பலமுறையும் கூட்டத்தில் இருந்து கைதட்டு பெற்றது. "நாங்கள் 21ம் நூற்றாண்டு மாவோயிஸ்டுகள்" என்று பிரச்சண்டா பல வணிகர்கள் குறைகள், அக்கறைகள் பற்றித் தெரிவித்தவுடன் அறிவித்ததாவது, "ஊழலை ஒழிப்பதாக உறுதிமொழி கொடுக்கிறோம். ஒரு வலுவான நாட்டைக் கட்டமைக்க வலுவான அமைப்பு தேவைப்படுகிறது."

மலேசியா மற்றும் தென்கொரியா ஆகியவற்றை உதாரணம் காட்டி தாங்கள் எப்படி வெளிநாட்டு முதலீட்டிற்கு ஊக்கம் தருவோம் என்று பிரச்சண்டாவும் பட்டாராயும் கூறினர். சீனாவைப் பற்றிக் கேட்கப்பட்டதற்கு பட்டாராய் "நிலப்பிரபுத்துவ முறையை" மாவோ அகற்றியது பற்றிப் புகழ்ந்து "அது பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியான அஸ்திவாரத்தை கொடுத்தது... நாட்டை மறுசீரமைத்து தனியார் துறையையும் தொடர்புபடுத்தினால், விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும்." என்று கூறினார்.

இந்தக் கருத்துக்கள் CPN-M சோசலிசத்துடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்பதை முற்றிலும் தெளிவாக்குகின்றன; அதேபோல் தொழிலாளர்கள் நலன்கள் மற்றும் கிராமப்புற மக்கள் பற்றிய நலன்களையும் இவை பிரதிபலிக்கவில்லை. மாறாக இதன் வேலைத்திட்டம் முடியாட்சியானது தடையற்ற சந்தை கொள்கைகளை நடைமுறைப்படுத்த தவறியது மற்றும் நாட்டை வெளிநாட்டு முதலீட்டிற்கு திறந்துவிடாதது பற்றிய நேபாளி வணிக அடுக்குகளின் வெறுப்பினைத்தான் வெளிப்படுத்தியுள்ளது.

பெரும்பாலான மக்களை எதிர்கொண்டுள்ள சமூக நெருக்கடிகளை தீர்ப்பதற்குப் பதிலாக, இத்தகைய பொருளாதார நடவடிக்கைகள் ஏழைகள் பணக்காரர்களுக்கு இடையே இருக்கும் சமூக பிளவை அதிகரிக்கத்தான் செய்யும். சீனாவைப் போலவே, பிரச்சண்டாவின் "வலுவான கரம்" தவிர்க்க முடியாமல் ஒரு சில ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக இயக்கப்படும் என்று இல்லாமல் ஜனநாயக உரிமைகள், கெளரவமான வாழ்க்கைத் தரங்களை நாடும் தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள் இவர்களுக்கு எதிராக இயக்கப்படும்.

ஸ்திரப்பாட்டை குலைப்பதாக அச்சுறுத்தல்

எத்தனை காலத்திற்கு மாவோயிச ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள அரசாங்கம் தொடரும், அது அமைக்கப்படுமா என்பது கூட முடிவு காணப்படாத வினாக்கள்தாம். 12 ஆண்டு கால விவசாய எழுச்சியை அடக்குவதற்கு இரக்கமற்ற போரை நடத்தியதில் அரசரும் இராணுவமும் மாவோவாதிகளுக்கு எதிராக ஆழ்ந்த விரோதத்தை கொண்டுள்ளனர். முடியாட்சிக்கு எதிராக இருக்கும் பரந்த எதிர்ப்பை காணும்போது அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத்தை உடனடியாக இழுத்து மூடி இராணுவ ஆதரவு ஆட்சியை திணிப்பது என்பது இயலாததுபோல் தோன்றுகிறது. ஆனால் இத்தகைய வழிமுறைகள் கடந்த காலத்திலும் பலமுறை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன மற்றும் இப்பொழுதும் அதன் சாத்தியத்தை விலக்கிவிடவும் முடியாது..

தங்கள் முன்னாள் கெரில்லாக்களை இராணுவத்துடன் இணைக்க வேண்டும் என்று மாவோவிஸ்ட்டுக்கள் கோரியிருப்பதற்கு இராணுவம் கடினமான எதிர்ப்பை காட்டியுள்ளது. தற்பொழுது கிட்டத்தட்ட 30,000 முன்னாள் CPN-M போராளிகள் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மேற்பார்வையில் இருக்கும் இராணுவக் கூடாரங்களில் வறிய நிலையில் உள்ளனர். மக்களுடைய தீர்ப்பை ஏற்பதாக வெறுமே கூறும் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரமீந்திரா சேட்ரி "அவர்களை இப்பொழுது இராணுவத்துடன் இணைக்க முடியாது. அவர்கள் ஆயுதங்கள் களையப்பட வேண்டும், பிரிக்கப்பட வேண்டும், மறு வாழ்வு கொடுக்கப்பட வேண்டும், பின்னர் சமூகத்துடன் ஒன்றுபடுத்தப்பட வேண்டும்." எனக் கூறினார்.

CPN-M ஐ புஷ் நிர்வாகம் ஒரு "பயங்கரவாத அமைப்பு" என்று முத்திரையிட்டு நேபாள இராணுவம் மாவோயிஸ்டுக்களுக்கு எதிராக நடத்திய போருக்கு ஆதரவையும் ஆயுதங்களையும் பயிற்சியையும் கொடுத்துள்ளது. ஏப்ரல் 2006ல் கடைசியாகத்தான் அரசருக்கான ஆதரவை வாஷிங்டன் விலக்கிக் கொண்டு, அது இடைக்கால அரசாங்கத்தின் பகுதியாக இருந்தபோதிலும் கூட 2006 கடைசி வரையிலும் CPN-M ஐ அதன் பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் பராமரித்துக் கொண்டிருந்தது. தேர்தல்களை வரவேற்ற போதிலும், அமெரிக்கா மாவோயிச தலைமையிலான அரசாங்கம் அமைக்க இருப்பது பற்றி அறிக்கை எதையும் இன்னமும் வெளியிடவில்லை.

2006 தேர்தல்களில் பாலஸ்தீனிய அதிகாரத்திற்கான தேர்தல்களில் வெற்றிபெற்ற பின்னர் இஸ்லாமிய கட்சியான ஹமாசுக்கு எதிரான புஷ் நிர்வாகத்தின் சூழ்ச்சிகள் நேபாள மாவோயிஸ்ட்டுக்களுக்கு எதிராகவும் உறுதி குலைக்கும் நடவடிக்கையை எடுக்கும் திறன் உடையது என்பதை தெளிவான எச்சரிக்கையாக காட்டுகிறது. அமெரிக்க செய்தி ஊடகம் ஏற்கனவே தேர்தல்கள் நெறியற்றவை என்று தான் கருதுவதாக குறிப்புக்களை காட்டியயுள்ளது. திங்களன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வந்த கட்டுரை ஒன்று மாவோவிச தேர்தல் வன்முறை பற்றிக் குறிப்புக் காட்டியது; சர்வதேச பார்வையாளர்களோ வாக்கெடுப்பை பொதுவாக "நியாயமானது" என்று கூறி, கெரில்லாக்கள் போருக்கு மீண்டும் திரும்பாமல் இருப்பதற்காக CPN-M க்கு ஆதரவ கொடுத்து வாக்களித்துள்ளனர் என்ற வினோதமான வாதத்தையும் முன்வைத்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எரிசக்தி வளங்கள் கொழிக்கும் மத்திய ஆசியாவில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நேபாளம் அமைந்துள்ளது. மாவோயிஸ்ட்டுக்களுக்கு எதிரான போருக்கு புஷ் நிர்வாகம் கொடுத்த ஆதரவு அமெரிக்கா இந்தச் சிறிய இமாலய நாட்டில் செல்வாக்கை வளர்க்க வேண்டும், அது போட்டியாளரான சீனாவை சூழும் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்பதுதான். நேபாளத்தில் பெய்ஜிங் செல்வாக்கு பெருகினால் அது மாவோயிஸ்ட்டுக்களை இல்லாதொழிக்க செய்வதற்கு அமெரிக்காவிற்கு ஊக்கம் தரும். அதே நேரத்தில் CPN-M சமரசத்தையும் நாடுகிறது. கடந்த வார இறுதியில் வாக்கெடுப்பிற்கு பார்வையாளராக வந்திருந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டருடன் ஒரு நீண்ட நேர விவாதத்தை பிரச்சண்டா மேற்கொண்டிருந்தார்.

நேபாளம் பற்றிய சீனாவின் கொள்கை முற்றிலும் நடைமுறைத் தன்மையை கொண்டுள்ளது. மாவோயிச எழுச்சிக்கு ஆதரவு தருவதற்கு பதிலாக பெய்ஜிங் எழுச்சியாளர்களை கண்டித்து நேபாள இராணுவத்திற்கு ஆயுதங்களைத்தான் கொடுத்தது. மற்ற நாடுகளை போலவே சீனாவும் இந்த அதிர்ச்சி தரும் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ள நேரிடும். டைம் இதழ் குறிப்பிடத்தக்க வகையில் எழுதியது: "இமாலாய மூலோபாய பகுதியில் எல்லையில் இருக்கும் அமைதியற்ற திபெத்தில் தன்னுடைய நலன்களை சீனா அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சீனாவின் நிறுவனங்கள் நேபாளத்தின் பனிக்கட்டி உருகும் ஆறுகளை மின்விசைக்கு பயன்படுத்திக் கொள்ளும் இலாபம் தரும் உடன்பாடுகளை தீவிரமாக காண விரும்புகின்றன; அதே நேரத்தில் அரசாங்க அதிகாரிகள் காத்மாண்டுவில் மாவோயிஸ்ட்டுக்களுடன் நெருங்கிப் பழகுகின்றனர்."

மற்றொரு முக்கிய பிராந்திய சக்தி இந்தியா ஆகும்; இது நீண்ட நாளாக நேபாளத்தை தன் செல்வாக்கு மண்டலத்தில் ஒரு பகுதியாகத்தான் கருதிவந்துள்ளது. நேபாளத்தில் மாவோயிச பிரச்சாரத்தின் ஒரு பிரிவு எப்பொழுதுமே "விரிவாக்கக் கொள்கை" உடைய இந்தியாவிற்கு ஏதிராகத்தான் இருந்தது. CPN-M முன்பு 1950ம் ஆண்டு இந்திய நேபாள உடன்பாட்டை அகற்ற வேண்டும் என்று உறுதி கூறியிருந்தது: அதன்படி இரு நாடுகளுக்கும் இடைய தடையற்ற வணிகமும் மக்கள் நகர்தலும் அனுமதிக்கப்பட்டு இருந்தன. நேபாளத்தின் ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகள் நீண்ட காலமாகவே இந்த உடன்பாடு புதுதில்லி அதன் அரசியல், பொருளாதார செல்வாக்கை செலுத்துவதற்காக நெம்புகோல் போல் பயன்படுத்துகிறது என்று கருதி வருகின்றன. நாலா புறமும் நிலத்தினால் சூழப்பட்டுள்ள நேபாளத்தில் அதிக போக்குவரத்து வசதிகள் இல்லை.

இந்திய அரசாங்கம் ஏழு கட்சி கூட்டணிக்கும் மாவோயிஸ்ட்டுக்களுக்கும் இடையே சமாதானம் கொண்டுவருவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. ஆனால் ஒரு CPN-M ஆதிக்கத்திற்கு உட்பட்ட அரசாங்கத்தை எதிர்பார்க்கவில்லை. இந்தியாவின் அதிகமான பகுதிகளில் மாவோயிச கெரில்லா இயக்கங்களை எதிர்கொள்ளுவதற்கு நேபாளத்தில் அந்த எழுச்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று புதுதில்லி விரும்பியது. காத்மாண்டுவில் பாக்கிஸ்தான், சீனா என்ற இந்தியாவின் போட்டி நாடுகளின் செல்வாக்கு வளர்வதையும் இந்தியா பொறுக்காக்காது; இது போல் கிராமப்புற இந்தியாவில் அமைதியின்மையை ஊக்குவிக்கும் எந்த நிலைப்பாட்டையும் விரும்பாது.

இந்தியாவின் அச்சங்களை குறைக்கும் வகையில் பிரச்சண்டா விரைவாகச் செயல்பட்டுள்ளார். புதனன்று மாவோயிச தலைவர் இந்தியாவுடன் புவியியல், பண்பாட்டு, வரலாற்றுக் காரணங்களை ஒட்டி நேபாளம் "சிறப்பு உறவு" கொண்டிருப்பதை மறு உறுதி செய்தார். ஏற்கனவே தான் "புது தில்லி அதிகாரிகளுடன் செவ்வாயன்று நீண்டநேரம், அக்கறையுடன்" பேசியதாக கூறினார். இந்திய வெளியுறவு மந்திரி பிரணாப் முக்கர்ஜி ஒரு தொலைபேசி உரையாடலில் பிரச்சண்டாவை புது தில்லிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

இராஜதந்திர களிப்பு உரையாடல்களை தொடர்ந்தும் பதட்டங்கள் தொடர்ந்துதான் உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் பிரச்சண்டா பின்வருமாறு எச்சரிக்கை விடுத்தார்: "இந்த முக்கிய கட்டத்தில் நுகர்வோர் பொருட்கள் மற்ற அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டால் அது பின்னர் நேபாள-இந்திய உறவுகளில் நீண்ட காலப் பாதிப்பை ஏற்படுத்தும்." சீனாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்க நேபாள அரசாங்கம் முயலுகையில் 1988ல் இந்தியா வணிக முற்றுகை ஒன்றை நேபாளத்தின்மீது சுமத்தியதை இந்த கருத்து கூறுகிறது; அந்த நடவடிக்கை நேபாள பொருளாதாரத்தில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்லை ஏற்படுத்தி, பெரும் பணவீக்கத்தையும் கொண்டுவந்தது.

கடந்த வாரத் தேர்தல் முடிவுகள் காத்மாண்டுவை இராஜதந்திர பேச்சுக்களின் முகாமாக மாற்றுவது உறுதி; இது நாட்டின் அரசியல், சமூக உறுதியற்ற தன்மையை அதிகப்படுத்தவே செய்யும்.