World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Sarkozy television interview seeks to reassure French corporate elite

பிரெஞ்சு பெருநிறுவன உயரடுக்கிற்கு சார்க்கோசியின் தொலைக்காட்சி பேட்டி உறுதியளிக்கிறது

By Kumaran Ira and Alex Lantier
28 April 2008

Use this version to print | Send this link by email | Email the author

பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஏப்ரல் 24ம் தேதி கொடுத்த ஒரு 100 நிமிட தேசிய தொலைக் காட்சி பேட்டி ஒன்றில் உள்நாட்டு, வெளியுறவுக் கொள்கைகளின் பல கூறுபாடுகள் பற்றி பரந்த அளவில் விளக்கம் கொடுத்தார்.

தன்னுடைய அரசாங்கத்திற்கு குறைந்துவரும் பொதுமக்களின் ஆதரவை பழையபடி ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சார்க்கோசி எதிர்மறைப் பொருளாதார செய்திகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பெருகிய எதிர்ப்புக்கள் இவற்றை எதிர்கொள்கையில், பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் கவலைகளை தணிக்கும் வகையிலும் உரையாற்றினார். தான் பொருளாதார "சீர்திருத்தங்களான" சமூக நலன்கள் திட்டங்கள், தொழிலாளர்கள் நிலைமையை தாக்குதல் ஆகியவற்றை கவனமாக தொடர இருப்பதாகவும், அத்தகைய தேவையான வெட்டுக்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் தன்னை அனுமதிக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்களை கேட்டுக் கொண்டார்.

அக்டோபர்-நவம்பர் 2007ல் இரயில்வே மற்றும் ஆற்றல் தொழிலாளர்கள் தங்கள் "சிறப்பு திட்ட" ஓய்வூதியங்களுக்காக நடத்திய வேலைநிறுத்தங்கள் என்று தன்னுடைய சமூக வெட்டுக்களுக்கு எதிராக நடத்திய போராட்டங்களில் இருந்து சார்க்கோசியின் நிலைப்பாடு மாற்றம் எதையும் காணவில்லை. இவருடைய பிரச்சார கோஷமான --"நிறைய உழையுங்கள், நிறைய சம்பாதியுங்கள் -- என்பதில் இருக்கும் வணிக சார்பினால் ஏற்கனவே கசப்பு அடைந்துள்ள நிலையில், தொடர்ந்து வேலையின்மை அதிகரிப்புடன் விரைவான விலை உயர்வும் இருக்கும் நிலையில், பெரும் செல்வந்தர்களுடன் குலாவும் இவருடைய வாழ்க்கைப் பாணி மற்றும் இத்தாலியின் உயர்மட்ட மாடல் அழகி கார்லா புருனியை திருமணம் செய்திருத்தல் ஆகியவற்றால் தொழிலாளர்கள் சீற்றம் அடைந்துள்ளனர்.

அமெரிக்க வீட்டு அடைமான நெருக்கடியின் விளைவாக பிரான்சிலும் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ள நிலையில் சார்க்கோசியின் தனிப்பட்ட விந்தையான செயல்களும் தூண்டுதற் செயலாக பரந்த அளவில் பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு தனியார் துறையில் அசாதாரணமுறையில் வேலைநிறுத்தம் அதிகரித்துள்ளது; தொழிலாளர்கள் பணிவீக்கத்தை சமாளிக்க அதிக ஊதியத்தை கோருகின்றனர். வேலைநிறுத்தங்கள் சில்லறை வியாபார கடைகளான Carrefour, Virgin Megastore, Coca-Cola, பிரான்சின் முக்கிய துறைமுகங்கள் மற்றும் ஆவணமற்ற குடியேறிய தொழிலாளர்கள் நிரம்பிய உணவு விடுதிகள் ஆகியவற்றை பாதித்துள்ளன.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் திட்டமிடப்பட்டுள்ள ஆசிரியர் வேலைகள் வெட்டுக்களுக்கு எதிராக பல வாரங்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்; பொதுப் பணித் துறை தொழிலாளர்கள் மே 15 முதல் வேலைநிறுத்த திட்டங்களை அறிவித்துள்ளனர். 2007ம் ஆண்டு பொதுத் துறை மற்றும் இரயில்வே வேலைநிறுத்தங்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் காட்டிக் கொடுப்பால் தோற்கடிக்கப்பட்டாலும், இத்தொழிலாளர்களில் ஒரு மில்லியனுக்கும் மேலானவர்கள் ஜனவரி கடைசியில் எதிர்ப்புக்களில் கலந்து கொண்டனர்.

கருத்துக் கணிப்பில் சார்க்கோசி பற்றி மக்கள் ஆதரவு கொடுத்திருப்பது கடந்த மாதத்தில் 40 சதவிகிதத்திற்கும் கீழே போயிற்று; சமீபத்தில் இன்னும் குறைந்து போயிற்று. பாரிசில் மார்ச் மாதம் நடைபெற்ற Ifop கருத்துக் கணிப்பின்படி, கருத்துத் தெரிவித்தவர்களில் 72 சதவிகிதத்தினர் சார்க்கோசியின் கொள்கைகளை ஏற்கவில்லை; 65 சதவிகிதத்தினர் அவர் பிரச்சார உறுதிமொழிகளை செயல்படுத்தவில்லை என்று கூறியுள்ளனர்; 53 சதவிகிதத்தினர் அவருடைய நடவடிக்கைகள் தங்கள் வாங்கும் திறனை பாதித்துள்ளதாக கூறினர். கருத்துக் கணிப்பை பற்றி Le Monde ஐந்தாம் குடியரசில் இருந்துள்ள அனைத்து ஜனாதிபதிகளிலும் முதலாண்டிலேயே மிகவும் இகழ்வுற்றவராக சார்க்கோசி உள்ளார் என்று குறிப்பிட்டிருக்கிறது.

வர்க்க அழுத்தங்கள் அதிகரித்து சார்க்கோசி சமூக வெட்டுக்களை தொடர்ந்து செயல்படுத்தினால் அரசியல் நிலைமை கட்டுக்கு அடங்காமல் போய்விடும் என்று முதலாளித்துவ அரசியல் வட்டங்கள் கவலைப்படுகின்றன. ஏப்ரல் 17ம் தேதி முன்னாள் பிரதம மந்திரி Jean-Pierre Raffarin சீர்திருத்தங்களின் வேகம் குறைக்கப்பட வேண்டும் என்றும் "ஒரு ஒழுங்கில் அவற்றை அமைக்குமாறு" சார்க்கோசிக்கு தெரிவித்துள்ளார்; அப்பொழுதுதான் மக்கள் அவருடைய இலக்குகளை புரிந்து கொள்ளமுடியும் என்றும் கூறினார். தற்போதைய பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன் "வரும் வாரங்களிலும் மாதங்களிலும் செயல்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிய வழிகாட்டும் குறிப்புக்களை" எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

ஏப்ரல் 24ம் தேதி சார்க்கோசி கொடுத்த பேட்டி இந்த கவலைகளை பற்றி பேசுவது போல் அமைந்திருந்தது. தன்னுடைய சீர்திருத்தங்களுக்கு செல்வாக்கு இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்ட சார்க்கோசி "ஆம் என்னுடைய சிறந்த தேர்தல் வெற்றி பற்றிய கருத்துக்களை கூறிக் கொண்டே ஐந்து ஆண்டுகள் செலவழிப்பேன் என்று நான் ஒன்றும் நினைக்கவில்லை" கூறினார்.

2003ல் மருத்துவமனைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு செலவினங்களை குறைப்பதற்கான திட்டங்களை கைவிட்டுவிட்ட அரசாங்கத்தின் தலைவராக இருந்த Raffarin ஐ இகழும் வகையில், --ஓய்வுதிய வெட்டுக்களுக்கான எதிர்ப்பினால் மற்றும் 2003 கோடை வெப்ப அலையை கையாண்டதற்கான எதிர்ப்பு ஆகியவற்றால் அது நிலைகுலைந்த பின், சீர்திருத்தங்கள் மெதுவாகச் செய்யப்பட வேண்டும் அல்லது அவற்றைப் பற்றி பரந்த விளக்கமளிக்கப்பட வேண்டும் என்ற கூற்றை எல்லாம் சார்க்கோசி எதிர்த்தார். அவர் கூறியது: "பல ஆண்டுகளாக அரசாங்கங்கள் இச் சீர்திருத்தங்களை படிமுறை அமைப்பில் போட்டுள்ளது. அவர்கள் வருகையில் நாங்கள் சீர்திருத்தம் செய்வோம் என்று கூறுகின்றனர்; பின்னர் அடுத்த கட்டமாக ஒன்றும் நடப்பது இல்லை. தைரியம் இருந்தால் ஒரு சீர்திருத்தம் செய்கின்றனர்; இல்லாவிடின் அதுவும் செய்யப்படுவதில்லை.. நான் 55 சீர்திருத்தங்களை தொடக்கியுள்ளேன், ஏனெனில் இவை அனைத்தும் ஒன்றாகச் செயல்படுத்தப்பட வேண்டும்."

வலதுசாரி நடவடிக்கைகள் சமூக வெட்டுக்கள் அனைத்திற்கும் தன்னுடைய தொடர்ந்த ஆதரவு உண்டு என்பதை அவர் அறிவித்தார். ஓய்வூதியத் திட்டங்களுக்கான வேலை ஆண்டுகள் 41 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறினார்; ஏப்ரல் 28 அன்று இதுபற்றி தொழில்துறை மந்திரி Xavier Bertrand தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்த இருப்பதாகவும் கூறினார். கூடுதலான மருத்துவ கட்டணங்கள் மற்றும் தொழிலாளரின் வீட்டில் இருந்து எவ்வளவு தூரம் இருந்தாலும், ஊதியம் எப்படி இருந்தாலும், பணி நிலைமைகள் எப்படி இருந்தாலும் சரி, இரு தடவை வேலைகளை நிராகரிக்கும் தொழிலாளர்களுக்கு வேலையின்மை நலன்களைக் கடுமையாக குறைக்க ஒரு சட்டம் வேண்டும் என்றும் அவர் வற்புறுத்திக் கூறினார்.

கல்வித்துறையில் வேலை வெட்டுக்கள் குறித்து தான் பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர் அப்பட்டமாக கூறினார்; அதே போல் ஆவணமற்ற தொழிலாளர்கள் அவர்களுடைய அந்தஸ்து பற்றிய பொது ஒழுங்குமுறை தேவை என்ற கோரிக்கைகளுக்கும் தன்னுடைய எதிர்ப்பை வலியுறுத்தினார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது உறுதி கொடுத்திருந்த அவருடைய "பொருளாதார வளர்ச்சி உந்துதல்" ஏன் செயல்படுத்தப்படவில்லை என்று கேட்கப்பட்டதற்கு சார்க்கோசி நான்கு சர்வதேச பொருளாதாரக் காரணிகளை சுட்டிக்காட்டினார்: பெட்ரோலிய விலை இரு மடங்காக ஆகியுள்ளது, அமெரிக்க குறைந்த பிணையுள்ள அடமானச் சந்தையின் நெருக்கடி, டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு உயர்வு, உணவு மற்றும் மூலப் பொருட்களின் விலை மிகப் பெரிதாக உயர்ந்துள்ளது என்பவையே அவை. இந்தக் காரணிகள் தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு மீறியவை என்றும் தன்னுடைய சமூக வெட்டுக்கள் விரைவுபடுத்தப்படுதல்தான் அவற்றை எதிர்கொள்ளும் ஒரே சாத்தியமான பதில் என்றும் கூறினார்.

பொருளாதார நெருக்கடியை விளக்கும் முயற்சியாக, மக்களை திருப்தி செய்யும் வகையில் அவர் முயன்றார்; "நிதி மூலதனம்" அது "தலைகீழாக நடக்கிறது" என்று அதைக் கண்டித்தார். இத்தகைய சொல்லாட்சி பிரெஞ்சு வங்கியாளர்கள் Arnaud Lagardère, Vincent Bolloré போன்றோரிடம் நெருக்கமான தொடர்புடைய ஒரு நபரிடம் இருந்து வரும்போது குறிப்பிடத்தக்கை வகையில் வெற்றுத்தனமாக உள்ளன. பிந்தைய ஒரு பில்லியன் நிதியாளரிடம் இருந்து சார்க்கோசி எகிப்திற்கு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு கார்லா புருனியை அழைத்துச் செல்லுவதற்கு தனி ஜெட் விமானத்தை பயன்படுத்தினார்.

Société Générale (பிரான்சை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரதானமான ஐரோப்பிய நிதி நிறுவனம்) கூறியுள்ளபடி, ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட பல பில்லியன் யூரோக்கள் இழப்பு தவறிழைத்த குறைந்த மட்ட மோசமான உத்தியோககத்தரின் செல்பாடுகளினால்தான் என்பதை தான் நம்புவது கடினம் என்று சார்க்கோசி தெரிவித்தார். பிய்யோன் உட்பட அவருடைய அரசாங்கம் Société Générale கருத்திற்கு அப்பொழுது ஏன் ஆதரவு கொடுத்தது என்பது பற்றியும் அவர் விளக்கவில்லை.

பேட்டியின் எஞ்சிய பகுதிகள் சார்க்கோசி சாதாரண மனிதன் பற்றி கவலைப்படும் ஒரு ஜனநாயக நபர் என்ற முறையில் பாசாங்குத்தனமாக தன்னைக் காட்டிக் கொள்ளும் வகையில்தான் இருந்தது. Active Solidarity Revenue (RSA) திட்டம் ஒன்றை தான் தோற்றுவிக்க இருப்பதாகவும் அது வேலையின்மையில் உள்ள தொழிலாளர்கள் மிகக் குறைந்த ஊதியங்களை எடுத்துக் கொள்ள ஊக்கம் அளிக்கும் என்றும் வேலையின்மையினால் கிடைக்கும் நலன்கள் இழப்பை ஈடு செய்யும் வகையில் இருக்கும் என்றும் கூறினார். ஆனால் இத்திட்டம் மிகவும் செலவு செய்யப்பட வேண்டியதாக உள்ளது என்றும் 2009 வரை நடைமுறைக்கு வராது என்றும் கூறினார்.

வெளியுறவுக் கொள்கை பற்றிய விளக்கத்தில் சார்க்கோசி மீண்டும் ஒரு ஜனநாயக வழிவகையை பின்பற்றுவது போல் காட்டிக் கொண்டார். அவருடைய வெளியுறவுக் கொள்கையின் இரண்டு மத்திய கூறுபாடுகளான - பிரெஞ்சு ஆற்றல், இராணுவம், போக்குவரத்து உள்கட்டுமான நிறுவனங்களுக்கான ஒப்பந்தங்கள் பற்றி மூன்றாம் உலக நாடுகளுடன் கொண்டிருக்கும் பேரத்தின் மீதான கவனக்குவிப்பு மற்றும் புஷ் நிர்வாகத்துடன் அதன் அணிசேர்தல் என்பவையே அவை.

இந்த ஆண்டு பெய்ஜ்ஜிங் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக திபெத்தில் சமீபத்தில் நடைபெற்றுள்ள ஆர்ப்பாட்டங்கள் கலகங்கள் பற்றி குறிப்பிடுகையில், சார்க்கோசி திபெத் "சீனாவின் ஒரு பகுதிதான்" என்று ஒப்புக் கொண்டார்; ஆனால் "திபெத்தில் நடந்துள்ளது பற்றி" தான் "அதிர்ச்சி" அடைந்துள்ளதாகவும் கூறினார். ஒரு பிரெஞ்சு-கொலம்பிய இரட்டை குடியுரிமை பெற்றவராகிய Ingrid Betancourt தற்பொழுது FARC எனப்படும் கொலம்பிய எழுச்சி கொரில்லாக்களால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளார்; அவரை விடுதலை செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட இருப்பதாகவும் சார்க்கோசி கூறினார். ஆப்கானிஸ்தானிற்கு அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஊக்கம் தரும் வகையில் பிரெஞ்சு படைகளை அனுப்ப இருக்கும் தன்னுடைய கொள்கை பற்றியும் தாலிபன் "பிரெஞ்சு மதிப்பீடுகளை" எதிர்ப்பதால் அவை நியாயமானவைதான் என்றும் கூறினார்.

இத்தகைய போலித்தனமான ஜனநாயகம் பற்றிய சொல்விளையாட்டு பிரெஞ்சு காலனித்துவத்தை மீண்டும் பழையநிலைக்கு கொண்டுவரும் சார்க்கோசியின் முயற்சிகளால் அம்பலமாகின்றன. கடந்த ஆண்டு ஒரு மத்தியதரைக்கடல் ஒன்றியத்தை கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது சார்க்கோசி பிரான்சிற்கும் அதன் முன்னாள் காலனியான அல்ஜீரியாவிற்கும் இடையே எப்பொழுதுமே "ஒரு காதல் விவகாரம் போல்" இருந்தது என்றார்.

பிரெஞ்சு புதிய பாசிசத் தலைவர் Jean Marie Le Pen ஐ எலிசே ஜனாதிபதி அரண்மனைக்கு வரவேற்ற ஐந்தாம் குடியரசின் முதல் ஜனாதிபதி தான்தான் என்றும் கூறினார்; Jean Marire Le Pen ஒரு துணை இராணுவப்பிரிவு லெப்டினன்டாக இருந்து, அல்ஜீயேர்சில், சுதந்திரத்திற்கான அல்ஜீரியப் போராட்ட த்தின் போது கைதிகளை சித்திரவதை செய்ய உதவியவர் ஆவார்.

இத்தகைய அலங்கோலமான வகையில் மக்களுக்கு தன்னுடைய ஜனநாயக மதிப்பு பற்றி எடுத்துரைக்கும் அவலமும், தொழிலாளர்களுக்கு அளிக்க உள்ள பொருளாதாரச் சலுகைகள் என்ற பூச்சு வேலைகளும் முக்கியமாக அவருடைய அரசாங்கத்திற்கு முதலாளித்துவ வர்க்கத்திடையே ஆதரவை உறுதிபடுத்தும் வகையை நோக்கமாக கொண்டிருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொழிலாள வர்க்கத்தை பொறுத்தவரையில் சுருக்கமாக ஆனால் தெளிவாக, அவர் பேட்டியில் குறிப்பிட்டபடி, இலக்கு எதிர்ப்பை அடக்குவது ஆகும்; அதற்கு அவர் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் இணைந்து செயல்படுவார்.

பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றி பேசி பேட்டியை முடிக்கையில் சார்க்கோசி கூறினார்: "தொழிற்சங்கங்களுக்கு என்னுடைய மரியாதையை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எமது சமூக ஜனநாயகம் அசாதாரணமான வகைகளில் செல்லுகிறது; இரண்டாம் உலகப் போரில் நாஜி ஆக்கிரமிப்பில் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுபோன்ற நிலையை நாம் கண்டதில்லை. பொறுப்புள்ள தொழிற்சங்க சக்திகள் இல்லாமல் ஒரு நாட்டை ஆள முடியாது."

சார்க்கோசியின் கருத்துக்கள் கவனமான சொல்லாட்சியை கொண்டிருந்தன. போர் இறுதிக் கட்டத்தில் அமெரிக்க படைகளுடன் ஒத்துழைத்து, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடனும் ஒத்துழைத்த வகையில் தொழிற்சங்கங்கள் பங்கு கொண்டிருந்தன; தொழிலாளர்கள் ஆலைகள் குழுக்களில் வேலைநிறுத்த கொள்கைக்கு வாக்களிக்காமலும் கண்காணித்த்துடன் ஆலைக் குழுக்கள் ஒன்றுபட்டு அதிகாரத்திற்கான போராட்டத்தை நடத்த விடாமலும் பார்த்துக் கொண்டன. அந்த நேரத்தில் ஸ்ராலினிஸ்ட்டுக்களின் முழக்கம் "நம்பிக்கையின் ஆயுதம்தான் வேலைநிறுத்தங்கள்" என்பதாக இருந்தது.

தொழிற்சங்கங்கள், குறிப்பாக ஸ்ராலினிச ஆதிக்கத்திற்கு உட்பட்ட CGT கடந்த ஆண்டு அரசாங்கத்திற்கு தங்கள் நம்பகத்தன்மையை 2007 அக்டோபர் இரயில்வே வேலைநிறுத்தங்களின் போது நேரடியாகவும் பின்னர் நவம்பர் வேலைநிறுத்தங்கள் அரசாங்கத்தின் "சீர்திருத்தங்களுக்கு" எதிராக அரசியல் போராட்டங்களாக மாறாமல் இருக்கும் வகையில் செயல்பட்டும் நிரூபித்தன.

இவருடைய செல்வாக்கு சரிகையில், இன்னும் அதிகமான வேலைநிறுத்தங்கள் இவருடைய கொள்கைகளுக்கு எதிராக வெடிக்கையில், தொழிலாள வர்க்கத்தை அரசியலில் தடுத்து நிறுத்தும் வகையில், சார்க்கோசி தொழிற்சங்கங்களில் இருக்கும் தன்னுடைய உற்றவர்களின் நெருக்கமான ஒத்துழைப்பை மிகவும் நம்பியுள்ளார்.

"ஏப்ரல் 18 அன்று Le Monde இல் "பலமான தொழிற்சங்கங்களுக்காக" என்ற தலைப்பில் வந்த தலையங்கம் பற்றி ஒப்புக் கொண்டார். அவர் எழுதியது: "ஜனாதிபதி தேர்தல்களுக்கு பின்னர் (மே 2007), அதற்கும் முன்பு எலிசேக்கு செல்வதற்கு முன்பு நான் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் வணிக குழுக்களை சந்தித்து, அவர்கள் கூறியதைக் கேட்டு, நான் திட்டமிட்டிருந்த முதல் நடவடிக்கைகள் பற்றி அவர்களுடைய நிலைப்பாட்டைக் கேட்டேன். அப்பொழுதில் இருந்து நான் முறையாக அவர்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரையும் சந்தித்து வருகிறேன். அவர்களை நான் நன்கு அறிவேன்; சில நேரங்களில் எங்களிடையே கருத்து வேறுபாடு உண்டு; ஆனால் எங்கள் பேச்சு வார்த்தைகள் வெளிப்படையாக இருந்தன."

"சிறப்பு ஓய்வூதிய திட்ட சீர்திருத்தம் கடந்த இலையுதிர்காலத்தில் வெற்றிகரமாக, தேசிய அளவில் ஆழ்ந்த ஒருங்கிணைப்பினால் செயல்படுத்தப்பட்டது; ஒவ்வொரு நிறுவனத்திலும் பேச்சுவார்த்தைகள் சீர்திருத்தத்தால் பாதிக்கப்பட்டன."