World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Beijing Olympics celebrate the capitalist market and nationalism

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முதலாளித்துவ சந்தையையும், தேசியவாதத்தையும் கொண்டாடுகின்றன

By John Chan
8 August 2008


Use this version to print | Send this link by email | Email the author

சீனா ஒரு புதிய பொருளாதார சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதை காட்ட, சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆட்சியால் பெய்ஜிங்கில் ஒலிம்பிக் விளையாட்டுகளின் இன்றைய தொடக்க விழா மிகவும் கவனத்துடன், கடந்த ஏழு ஆண்டுகளில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முந்தைய ஒலிம்பிக் விளையாட்டுக்களை போலவே, ஆனால் ஒரு பிரமாண்டமான முறையில், இந்நிகழ்வு 43 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிலான ஓர் ஆடம்பரமான நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த முறை, உலக அரங்கில் தங்களின் வருகையை கொண்டாட சீனாவின் புதிய முதலாளித்துவ மேற்தட்டுக்கு இது உதவி இருக்கிறது.

இவ்விழாவின் தொடக்க நேரம் அதிகளவிளான "8க்களை" உள்ளடக்கி இருக்குமாறு திட்டமிடப்பட்டிருந்தது. அதாவது, 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 8.08 என்ற நேரத்தில் தொடங்கியது. இது சீன முதலாளித்துவத்தின் "செல்வந்தராவீர், செல்வந்தராவீர், செல்வந்தராவீர்" என்ற விளம்பர வாசகத்தை வெட்கமின்றி பிரதிபலிக்கிறது. 1978இல் டெங் ஜியோபிங் சந்தை சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய மிக விரைவில், சீன மொழியில் 'பா' என உச்சரிக்கப்படும் எண் '8', செல்வசெழிப்பிற்கான சீன எழுத்தான "ஃபா" என்ற எழுத்தை போன்றே உச்சரிப்பை கொண்டிருப்பதற்காக செல்வத்தை அடைவதற்கான அதிஷ்ட எண்ணாக மாறியிருந்தது. இதன் நோக்கம் வெறும் உள்ளூர் முதலாளித்துவ மேற்தட்டுக்கு ஒரு தெளிவான குறிப்பை உணர்த்துவோதோடு மட்டுமல்லாமல், சர்வதேச பெருநிறுவன தலைவர்களுக்கும் பின்வருமாறு அறிவிப்பதாகும்: நீங்கள் பணக்காரர் ஆகவேண்டுமா, சீனாவிற்கு வாருங்கள், முதலீடு மற்றும் வியாபார வாய்ப்புக்களுக்கு இதுவே சரியான இடம்.

எவ்வாறிருப்பினும், இலையுதிர் கால மாதங்களான செப்டம்பர் மற்றும் அக்டோபருக்கு பதிலாக கோடை கால மாதமான ஆகஸ்ட்டை தேர்ந்தெடுத்ததன் மூலம், கடுமையான புகையை, குறிப்பாக கோடையில் மிக அதிகமாக இருக்கும் புகையை அதிகாரிகள் சமாளிக்க வேண்டியதை எடுத்துகாட்டுகிறது. பெய்ஜிங்கில் ஆலைகளை மூடுவதற்கும் மற்றும் மில்லியன் கணக்கான கார்கள் பயன்பாட்டை தடுப்பதற்கான கடுமையான முறைமைகளுக்கு இடையிலும், நீலவானத்தை அரிதாகவே பார்க்க முடிந்தது. இது சீனாவின் சர்வதேச அந்தஸ்தை உயர்த்துவதற்கு பதிலாக, முதலாளித்துவ சந்தையின் கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளால் கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்தில் உலகின் முதலிடம் சீனாவிற்கே என்ற பட்டத்தை ஏற்கனவே அது கொண்டுள்ளது என்பதை அது உலகிற்கு நினைவுபடுத்துகிறது.

ஓர் ஆண்டுக்கு முன்னதாக, அமெரிக்காவின் இரண்டாம்முறை அடைமான கடன்கள் சந்தை சரிவால் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார வீழ்ச்சிக்கு இடையே, பொருளாதார தேக்கம், பணவீக்கம் மற்றும் வளர்ந்து வரும் சமூக அதிருப்திகளில் இருந்து தற்காலிக திசைதிருப்ப உலக முதலாளித்துவ தலைவர்களுக்கு பெய்ஜிங் ஒலிம்பிக் திசைதிருப்பும் ஒரு நிகழ்ச்சியை அளித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோஜ் புஷ் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி உட்பட 80 உலக தலைவர்களுக்கு குறைவில்லாமல், தொடக்கவிழாவில் பங்கு பெற இருக்கிறார்கள்.

உலகின் முக்கிய பெருநிறுவன தலைமை செயலாளர்களை ஏற்றி வந்திருந்த நிறைய தனியார் விமானங்கள் ஒரே நேரத்தில் தரையிறக்குவதால், அவர்களின் வருகை பெய்ஜிங் விமான கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு பெருந்தொல்லையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் அரசியல் வேலையாட்களைப் போல, சர்வதேச தலைமை செயலதிகாரிகள் சீனாவின் பொருளாதார வெற்றியில் பங்கு பெற விரும்புகிறார்கள்.

உண்மையில், முதலாளித்துவம் சீனாவில் மட்டும் தான் முதலாளித்துவம் வளமுற்றிருப்பது போல் தோன்றுகிறது. பிரபல திரைப்பட இயக்குனர் Zhang Yimou இயக்கிய ஒரு மாபெரும் வாண வேடிக்கை மற்றும் பிரமாண்டமான தொடக்கவிழா, சீனாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை மட்டுமின்றி, நாட்டில் வளர்ந்து வரும் பொருளாதார ஆளுமையையும் காட்ட முற்படுகிறது. சீனாவின் விரைவான விரிவாக்கத்தை எடுத்துகாட்டுவதற்கு, தரையிலிருந்து பல கட்டிடங்கள் மேலெழும்புவது போன்று ஒரு காட்சி தோன்றியது. 1978இலிருந்து 2007க்குள் சீனாவில் ஏற்பட்டிருக்கும் 40 மடங்கு வளர்ச்சி, அதை ஓர் ஏழ்மையான வறிய நாடு என்ற அதன் நிலையிலிருந்து உலகின் நான்காவது மிகபெரிய பொருளாதாரம் என்ற நிலைக்கு எடுத்து சென்றுள்ளது.

நவீனத்துவம் மற்றும் முன்னேற்றத்திற்கான சீனாவின் ஆர்வத்தில் வெளிநாட்டவர்களை ஆச்சரியப்படுத்தும் நோக்கில், முதன்மை "Bird's Nest" மைதானத்திலிருந்து பெய்ஜீங்கிலுள்ள சங்கிலி போன்று இணைக்கப்பட்ட சிசிஜிக்ஷி தலைமையகமான Oval Grand அரசு அரங்கம் வரையிலான அதிநவீன ஒலிம்பிக் கட்டிட அமைப்பு அனைத்தும் முன்னணி சர்வதேச கட்டிட வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டன. பெய்ஜீங் சர்வதேச விமான நிலைய விரிவாக்கமும் பிரமாண்டமானதாகும். அதன் மூன்றாம் தள இறங்குமிடம் மட்டும் லண்டனின் ஒருங்கிணைந்த ஹீத்ரோ விமான நிலையத்தை விட ஐந்து மடங்கு பெரியதாகும்.

உலகெங்கிலுமிருந்து சுமார் 4 பில்லியன் மக்கள் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியில் தங்களின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த, 12 பன்னாட்டு பெருநிறுவனங்கள் ஒலிம்பிக்கின் சர்வதேச விளம்பரதாரராக இருக்க, ஒவ்வொன்றும் 200 மில்லியன் அமெரிக்க டாலர் வரை அளித்துள்ளன. அனைத்திற்கும் மேலாக, 2004 ஏதென்ஸ் விளையாட்டுக்களை விட மூன்றில் ஒரு பங்கு அதிகமாக மொத்தம் 866 மில்லியன் டாலரை விளம்பரத்தொகை எட்டியுள்ளது. இதில் சர்வதேச விளம்பரதாரர்களால் விளம்பர வருவாயாக பெறப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ள 1.5 பில்லியன் டாலரோ அல்லது கூட்டாளியாவதற்கான செலவுகளாக பிற பன்னாட்டு மற்றும் சீன பெருநிறுவனங்களால் அளிக்கப்பட்ட தொகையோ சேர்க்கப்படவில்லை. சீனாவில் விற்கப்படும் Addidas தயாரிப்புகளில் ஒலிம்பிக் லோகோவை பயன்படுத்த அந்நிறுவனம் மட்டும் 80 மில்லியன் டாலரை செலுத்தியுள்ளது.

"ஒரே உலகம், ஒரே கனவு" என்பது பெய்ஜிங் ஒலிம்பிக்கின் விளம்பர வாசகமாகும். ஆனால் சீனாவின் எழுச்சி குறித்து வாஷிங்டன், டோக்கியோ மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களின் உணர்வுகள் மிகவும் சிக்கல் நிறைந்ததாக உள்ளன. ஒருபுறம், உலகெங்கிலும் இருக்கும் முக்கிய பெருநிறுவனங்கள் இப்பொழுது சீன தொழிலாளர் வர்க்கத்தை மிகப்பெரியளவில் சுரண்டுவதை நம்பியுள்ளார்கள். மறுபுறம் மூலப்பொருட்கள், சந்தைகள் மற்றும் புவி-அரசியல் செல்வாக்கில் அதிகாரங்களை கைப்பற்ற வந்திருக்கும் ஒரு புதிய போட்டியாளராக, சீனாவின் விரைவான வளர்ச்சி ஒரு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஒலிம்பிக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற சீன ஜனாதிபதி ஹு ஜின்டோவின் கோரிக்கை இருந்த போதினும், பெய்ஜீங்கின் மனித உரிமைகள் மீறல் மற்றும் திபெத்தில் அதன் அடக்குமுறை ஆட்சி குறித்து சில மேற்கத்திய தலைவர்கள் குரலெழுப்பி உள்ளனர். சீன "ஜனநாயக" இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தலைவர்களை கடந்த வாரம் ஜனாதிபதி புஷ் வெள்ளை மாளிகையில் வரவேற்றார். இதன் பின்னர், சீனா மனித உரிமைகளை மேம்படுத்த வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் குழு ஒருமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.

அமெரிக்காவின் செலவில் சீனா அதன் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள ஈராக் யுத்தம் அனுமதித்திருப்பதாக கூறப்படும் கண்டனங்களுக்கு இடையில், ஆசியாவிலுள்ள அதன் கூட்டினருக்கு அமெரிக்கா பொறுப்பேற்றுள்ளது என்று ஒலிம்பிக் விழாவில் கலந்து கொள்ள புறப்படுவதற்கு முன்னர், வாஷிங்டனில் புஷ் ஆசிய பத்திரிகையாளருக்கு தெரிவித்தார். ஆசிய நாடுகள் பெய்ஜீங் உடன் நெருக்கமாக இருக்க வேண்டாம் என்று எச்சரித்த புஷ் அறிவித்ததாவது: "நீங்கள் ஒருவருக்கு நண்பராக இருந்தால், பலமுறை, மற்றவர்களுடன் நண்பராக இருப்பதை கடினமாக்கி விடுகிறீர்கள்." பெய்ஜீங்கிற்கு செல்லும் முன்னர் பாங்காங்கில் உரையாற்றிய புஷ், பெய்ஜீங் ஆட்சி சீன குடிமக்களுக்கு "சுதந்திரம்" வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அமெரிக்க காங்கிரசின் தீர்மானம் ஒலிம்பிக் விளையாட்டுக்களை "நாசப்படுத்தும்" நோக்கம் கொண்டது என முத்திரை குத்திய சீன அரசாங்கத்தின் ஒரு செய்தி தொடர்பாளர் Liu Jianchao, "சீனாவின் உள் விவகாரங்களில் புஷ் முறையின்றி தலையிட்டார் என்பதுடன் சீன எதிர்ப்பு விரோத சக்திகளுக்கு தவறான தகவல்களையும் அளித்தார்" என்று கூறினார். உள்நாட்டு மக்களை திருப்தி செய்வதற்காக கூறப்பட்ட, இந்த தேசியவாத வனப்புரைகளுக்கு பின்னர், விளையாட்டுக்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்களை புஷ் நிராகரித்தார் என்பதை பெய்ஜீங் நன்கு அறியும்.

உண்மையில், வெளிநாட்டில் நடக்கும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் முதல் அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஆவார். திபெத்தில் பெய்ஜீங்கின் ஒடுக்குமுறைக்காக விழாவை புறக்கணிக்க போவதாக அச்சுறுத்திய பிரான்ஸ் ஜனாதிபதி சார்க்கோசியின் செயல்பாடு இதையும் விட நம்பிக்கையற்றதாய் இருந்தது. சார்கோசி, தாம் தலாய்லாமாவை சந்திப்பதாக இல்லை என்று பின்னர் அறிவித்தார். விளையாட்டுக்களை ஏற்பாடு செய்திருப்பதற்காக சீன அரசாங்கத்திற்கு "ஒரு தங்க பதக்கம் அளிக்கலாம்" என்று தற்போது அவர் அறிவித்துள்ளார். பிரான்ஸ் மற்றும் சீனாவிற்கு இடையிலான நட்புறவு பிரான்சின் வெளியுறவு கொள்கையின் அடிப்படையாக அச்சாக இருக்கிறது," என்று அவர் ஷீன்ஹீவா செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

"இணக்கமான சமுதாயம்"

சீன தேசியவாதத்தை வளர்ப்பதற்கு பெய்ஜிங் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் முதலாளித்துவ சந்தையை வெளிப்படையாக ஏற்று கொண்ட பின்னர், சிசிறி ஒரு சோசலிஸ்ட் கட்சி என்று கூறி கொள்வது அபத்தமானதாகும். இதன் மூலம் இறுதியில் பலனடைந்த மத்திய வர்க்க அடுக்கை முன்வைத்து சீனாவின் வளர்ச்சி மற்றும் கெளரவத்தை ஊக்குவிப்பதில் அந்த ஆட்சி தொடர்ந்து சாதனையளவை எட்டி வருகிறது. வெளிநாட்டு பெருநிறுவன மேற்தட்டுக்கு சீனாவின் ஆதாயங்களை விளம்பரப்படுத்தவும், அத்துடன் உள்நாட்டு பார்வையாளர்களுக்கு ஒரு புள்ளியை அடிக்கோடிடவும் முந்தைய ஐந்து ஒலிம்பிக் நிகழ்வுகளையும் ஒன்றாக இணைத்தால் ஆகும் செலவை விட 1.5 மடங்கு அதிகம் இதில் செலவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சீனாவில் பணக்காரர் மற்றும் ஏழைகளுக்கு இடையில் இருக்கும் சமூக ஏற்றத்தாழ்வின் ஆழத்திலிருந்து கவனத்தை திருப்பவும் தேசியவாதம் பயன்படுத்தப்படுகிறது.

அதிர்ச்சிகரமான சீன சமூக சமத்துவமின்மையை மறைக்க, சுமார் நான்கு மில்லியன் மக்கள், முக்கியமாக ஒலிம்பிக்கிற்கான வசதிகளை உருவாக்கியவர்கள் உட்பட மிக குறைந்த ஊதியம் அளிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நகரத்தை விட்டு துரத்தப்பட்டுள்ளனர். மூத்த அரசாங்க அதிகாரிகளிடம் தங்கள் குறைகளை கூற வந்த ஆயிரக்கணக்கான மனுதாரர்கள் போலீசாரால் இழுத்துத் தள்ளப்பட்டுள்ளனர். பலரும் தடுப்பு காவல் மையங்களில் பூட்டி வைக்கப்பட்டனர். நகர்புற ஏழைகளில் சிலர், நாளொன்றுக்கு 1 டாலருக்கும் குறைவான வாடகையில் அளிக்கப்பட்ட மலிவான தங்குமிடங்களையும் மற்றும் அடுக்குமாடி வீடுகளின் அடித்தளங்களையும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த வசதிகளும் மூடப்பட்டுவிட்டன.

தன்னுடைய தந்தைக்கு ஓய்வூதியம் கோரி மனு கொடுக்க வந்த வாங் லிஜுன் என்னும் மனுதாரர், லிஷீs கிஸீரீமீறீமீs ஜிவீனீமீsசிடம் கூறினார்: "நாங்கள் ஓர் எதிர்மறை தோற்றத்தை உருவாக்குவதாக அவர்கள் கருதினார்கள். எங்களை அகதிகள் போலவும், குற்றவாளிகள் போலவும் நடத்துகிறார்கள்." தனது கணவரை எஃகு ஆலையில் இருந்து நீக்கியதற்காக கடந்த ஏழு ஆண்டுகளாக மனு அளித்து வரும் ஷிலீணீஸீஜ்வீ மாகாணத்தை சேர்ந்த மற்றொரு பெண்மணியான லீ லீ பின்வருமாறு விளக்கினார்: "எப்பொழுதுமில்லாத வகையில் எங்களை அவர்கள் ஒடுக்கி வருகிறார்கள். நாட்டின் உறுதியை சீர்குலைக்கும் விரோதிகள் போல எங்களை மதிக்கிறார்கள்." என்று கூறிய அவர், தொடர்ந்து: "ஒலிம்பிக் விளையாட்டுக்களை விரும்பி வரவேற்குமாறும், நாட்டை நேசிக்குமாறும், கட்சியிடம் அன்பு செலுத்துமாறும் அவர்கள் எங்களிடம் கேட்டு கொள்கிறார்கள். ஆனால் எங்களை அவர்கள் நேசிக்கவில்லை," என்றார்.

பயங்கரவாதத்தை தடுக்கும் பெயரில், உலக தலைவர்களையும் மற்றும் ஒலிம்பிக் நிலைகளங்களையும் பாதுகாக்க போலீஸ்-அரசாங்க கருவி முழுமையாக ஒன்று திரட்டப்பட்டுள்ளது. துணை இராணுவ போலீஸ், துருப்புகள் மற்றும் சிறப்பு படை பிரிவுகள் மூலம் 100,000 வலுவான பயங்கரவாத எதிர்ப்பு படைகளும், அவற்றுடன் பல ஆயிரக்கணக்கான சாதாரண போலீஸ் அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் மற்றும் தன்னார்வ ரோந்து படைகளும் அங்கு உள்ளன.

பாதுகாப்பு படைகளில், ஆறாம் கவச பிரிவு உட்பட மக்கள் விடுதலை இராணுவத்தை சேர்ந்த 34,000 துருப்புகளும் தற்போது பெய்ஜீங்கிற்கு வெளியில் நிறுத்தப்பட்டுள்ளன. இப்பிரிவு தளபதி செய்தி ஊடகத்திடம் தெரிவிக்கையில், "எதிர்பாரா சம்பவங்கள்" ஏதேனும் ஏற்பட்டால் இந்த பெரிய ஆயுதமேந்திய பிரிவுகள் உடனடியாக தலைநகருக்குள் நுழையும் என்று கூறினார். கடந்த முறை 1989இல், Tiananmen சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை நசுக்க டாங்கு படைகள் பெய்ஜீங்கின் தெருக்களில் கொண்டு வரப்பட்டன.

74 போர் விமானங்கள், 48 ஹெலிகாப்டர்கள் மற்றும் 33 கடற்படை கப்பல்களையும்; இத்துடன், விமான தகர்ப்பு ஏவுகணைகள் மற்றும் உயிரிரசாயன பிரிவுகளையும் (biochemical) கூட இராணுவம் நிறுத்தியுள்ளது. பெய்ஜீங்கிற்கு மேல் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் புகுந்து, விமானங்கள் மீது தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் உட்பட, இராணுவ பயிற்சி காட்சிகளை தொலைக்காட்சி நிகழ்ச்சி எடுத்துக்காட்டியது.

ஒலிம்பிக் பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் ஆயுத பிரிவு துறையின் இயக்குனரான Tian Yixiang கருத்துப்படி, ஜிங்ஜியாங்கில் இருந்து வரும் "கிழக்கு துருக்கிஸ்தான்" போராளிகளையும், திபெத்திய பிரிவினைவாதிகளையும், தடைக்குட்பட்ட ஃபாலுன் கோங் (Falun Gong) சமய வழிபாட்டுகாரர்களையும் மற்றும் "ஜனநாயக" இயக்கத்தை சேர்ந்தவர்களையும் பாதுகாப்பு படைகள் கவனிக்கும். திபெத்தில், ஒலிம்பிக் விளையாட்டுக்களின் போது, "முழுமையான பாதுகாப்பை" உறுதிப்படுத்த பாதுகாப்பு படைகள் இரட்டிப்பாக்கபட்டுள்ளன. "விரோத சக்திகள்" மற்றும் பயங்கரவாதிகள், "ஒரு சர்வதேச தாக்குதல் நடத்த, தங்கள் கத்திகளைத் தீட்டி கொண்டு செயல்பட துடித்து கொண்டிருப்பதாக" மக்கள் ஆயுத போலீஸ் செய்தி ஜூலையில் அறிவித்தது.

ஆட்சியின் தீவிர தாக்குதல் அறிக்கைகளுக்கு பின்னால், வியாபாரம் மற்றும் முதலீட்டிற்கான ஒரு நம்பகமான நிலைகளனாக இருக்கும் விளையாட்டுகளில் ஏதேனும் தடை ஏற்பட்டால், சீனாவின் கெளரவத்தை பாதிக்கும் என்ற அதன் பெரியளவிலான அச்சமும் இருக்கிறது. அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை, மற்றும் பொருளாதார மந்ததன்மையின் அறிகுறிகள் சீனாவில் பெருமளவிலான சமூக பதட்டங்களை அதிகரித்துள்ளன. ஜிங்ஜியாங்கிலுள்ள முஸ்லீம் Uighur போன்ற ஒடுக்கப்பட்ட தேசிய சிறுபான்மையினரும், திபெத்திய மக்களும் போராட்டங்களை நடத்தியுள்ளனர். போராட்டகாரர்கள் தங்களின் குறைகள் மீது கவனத்தை திருப்ப சர்வதேச ஊடகங்களை பயன்படுத்த விரும்பினால், விளையாட்டுகளின் போது இந்த அதிருப்திகளில் ஏதேனும் வெடிக்க கூடும்.

விளையாட்டுக்களை தாக்கவிருப்பதாக அச்சுறுத்தி, கடந்த மாதமும் மற்றும் நேற்றும், கிழக்கு துருக்கிஸ்தானின் ஓர் இஸ்லாமிய குழு வீடியோ காட்சிகளை வெளியிட்டிருந்தது. மேலும் சீனாவில் சமீபத்தில் நடந்த தொடர் பஸ் குண்டுவெடிப்புகளுக்கும் அது பொறுப்பேற்று கொண்டிருந்தது. திங்களன்று, காஷ்காரிலுள்ள ஒரு போலீஸ் நிலையத்தின் மீது நடந்த மற்றொரு திட்டமிட்ட "பயங்கரவாத" தாக்குதலில், ஜிங்ஜியாங் எறிகுண்டுகளால் தாக்கப்பட்டது. இதில் 16 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்.

அதன் கடுமையான முறைமைகளை குறைத்து மதிப்பிட, நன்கறிந்த சில முரண்பாட்டாளர்களை பெய்ஜீங் விடுவித்திருந்தது. விளையாட்டு திடல்களிலிருந்து கூடிய வரை தொலைவில், தலைநகரில் அதிகாரிகள் மூன்று "பாதுகாப்பு மண்டலங்களை" உருவாக்கி இருந்தனர், ஆனால் போராட்டங்களுக்கு முன்கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் கேட்க துணியும் சீன குடிமக்கள், தங்கள் அடையாள ஆவணங்களை ஆட்சியிடம் விட்டு வைக்க வேண்டும். ஒலிம்பிக் விளையாட்டுகள் முடிவில் உலக கவனம் மாறிய பின்னர், அவர்கள் கடுமையான தண்டனையை எதிர்நோக்க கூடும். வெளிநாட்டு விமர்சகர்களும் மெளனமாக்கப்பட்டு விடுவார்கள். சீனாவில் திபெத் அல்லது சமய சுதந்திரமின்மை குறித்து போராடிய முயற்சிகளுக்காக குறைந்தபட்சம் ஏழு பிரிட்டன் மற்றும் அமெரிக்க சுற்றுலா பயணிகளை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெய்ஜீங் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான பாரிய போலீஸ் மற்றும் இராணுவ கிடுக்கிபிடியானது, சீனாவில் தொழிலாளர் வர்க்கத்தின் மீது இரக்கமற்ற முதலாளித்துவ சுரண்டலை செயலாக்குவதற்கான அரசியல் நிலைமைகளுக்கான ஒரு துளியாகும். தொடக்கவிழாவில் புஷ் மற்றும் பிற உலக தலைவர்கள் கலந்து கொண்டது, மனித உரிமைகள் மற்றும் தேசிய சிறுபான்மையினர் குறித்த அவர்களின் வாக்குறுதிகள் முற்றிலும் போலித்தனமானவை என்பதை எடுத்துக்காட்டுகிறது. பெய்ஜீங்கில் ஒரு போலீஸ் அரசாங்க ஆட்சி இல்லாமல், சர்வதேச முதலாளித்துவ பொருளாதாரம் தற்போதுள்ளதை விட மிகவும் மோசமடையும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.