World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

US continues to ratchet up tensions with Russia

ரஷ்யாவுடன் பதட்டங்களை அமெரிக்கா ஒரே போக்கில் தொடர்ந்து அதிகரிக்கிறது

By Barry Grey
26 August 2008

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க ஆதரவு ஜோர்ஜிய ஜனாதிபதி மிகெய்ல் சாகேஷ்விலி பிரிந்து செல்லும் மாநிலமான தெற்கு ஓசேட்டியாவின் மீது படையெடுத்ததை அடுத்து ஏற்பட்ட ஐந்து நாட்களுக்கு பின்னர், ஜோர்ஜிய பகுதியில் இருந்து பெரும்பாலான படைகளை மாஸ்கோ திரும்ப பெற்றுக் கொண்டுவிட்டாலும், அமெரிக்கா ரஷ்யாவுடன் அதன் மோதலை தொடர்ந்து தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஞாயிறன்று அமெரிக்காவினால் இயக்கப்படும் ஏவுகணை தகர்ப்புக் கப்பல் USS McFaul ஜோர்ஜிய துறைமுகமான படுமியை அடைந்தது; ஜனாதிபதி புஷ் மற்றும் பென்டகன் இதை தெற்கு காகசஸ் பகுதியில் இருக்கும் முன்னாள் சோவியத் குடியரசுக்கு உதவும் வகையிலான "இராணுவமுறை மனிதாபிமானச் செயலின்" ஒரு பகுதி என்று அழைத்துள்ளனர்.

Arleigh Burke வகுப்பைச் சேர்ந்த தகர்க்கும் கப்பலான McFaul ஏராளமான ஆயுதங்களை இணைத்துள்ளது ஆகும்; இதில் Tomawak ஏவுகணைகளும் அடங்கும்; இவை மரபார்ந்த அல்லது அணுவாயுத போர்க்கருவிகளை ஏந்திச் செல்லும் என்பதுடன் மிக நவீன ராடர் முறையையும் கொண்டுள்ளன. அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளரான பிறயன் விட்மன், அமெரிக்க கடலோர பாதுகாப்புப் படைப்பிரிவை சேர்ந்த Dallas ம் ஜோர்ஜிய கடலோரப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது; மூன்றாம் கப்பலான கடற்படை கட்டுப்பாட்டுக் கப்பல் USS Mount Whitney ம் இத்தாலியில் இருந்து தயார் நிலைக்கு கொண்டுவரப்படுகிறது.

திங்களன்று ரஷ்ய இராணுவ அதிகாரிகள், அமெரிக்கத் தலைமையில் கடற்படை வலிமை காட்டப்படுவதை கண்டித்தனர்; சில மணி நேரங்களுக்கு பின் ரஷ்யாவின் முன்னணிக் கப்பல் கருங்கடலுள் மீண்டும் நுழைந்தது; ஆயுதச் சோதனைகள் நடத்துவதற்கு என்ற காரணம் முன்வைக்கப்பட்டது. ரஷ்யாவின் இராணுவ தலைமைத் தளபதி அலுவலகத்தை சேர்ந்த அனடோலி நோகோவிட்சின், "ஒன்பது போர்க் கப்பல்கள் கருங்கடலில் இருப்பது கவலையைக் கொடுக்காமல் இருக்க முடியாது. இவற்றில் இரு அமெரிக்க போர்க்கப்பல்களும் உள்ளன; ஒன்று ஸ்பெயினில் இருந்தும் மற்றொன்று போலந்தில் இருந்தும் நான்கு துருக்கியில் இருந்தும் வந்துள்ளன." என்றார்.

பெயரிடப்படாத ஆதாரத்தை மேற்கோளிட்டு ரஷ்ய இராணுவ உளவுத்துறை அது கருங்கடலில் இருக்கும் நேட்டோ கப்பல்கள் 100 டொமஹாக் ஏவுகணைகளுக்கும் மேல் வைத்திருப்பதாகவும், 50க்கும் மேலானவை USS McFaul ல் மட்டும் இருப்பதாகவும் இவை தரையில் இருக்கும் இலக்குகளைத் தாக்கும் திறன் பெற்றவை என்றும் கூறியுள்ளது.

தரைப்பகுதியைப் பொறுத்தவரையில், ஜோர்ஜிய இராணுவம் தெற்கு ஓசேட்டியா எல்லைப் பகுதி முழுவதும் கருவிகள் குவிப்பைக் கொண்டுள்ளது; இவை ரஷ்ய சார்பு உடைய பகுதியைச் சுற்றிலும் இருக்கும் ஐந்து மைல் இடைப்பட்ட பகுதியில் ரஷ்ய துருப்புக்கள் நிலைகொண்டுள்ள ஐந்து சோதனைச் சாவடிகளுக்கு அருகே உள்ளன. செப்டம்பர் 8 வரை ரஷ்யாவுடன் உத்தியோகப்பூர்வ "போர் நிலையை" நீடிப்பதற்கு சனிக்கிழமை அன்று ஜோர்ஜிய பாராளுமன்றம் வாக்களித்தது.

ஜோர்ஜிய இராணுவத்தை மறுகட்டமைக்க அமெரிக்க இராணுவம் எந்த அளவிற்கு இராணுவச் செலவு செய்யுமோ அதே விகிதத்தில் பிரிவினை கோரி கிளர்ச்சி செய்யும் மாநிலங்களான தெற்கு ஓசேட்டியாவிலும் அப்காஜியாவிலும் உள்ள தங்கள் படைகளின் வலிமையைப் பெருக்க ரஷ்ய இராணுவ அதிகாரிகள் இந்த வாரம் உறுதி பூண்டுள்ளனர்.

இந்த ஆத்திரமூட்டல் தன்மையுடைய இராணுவ நடவடிக்கைகளை தவிர, வாஷிங்டன் மாஸ்கோவிற்கு எதிரான அதன் அரசியல், தூதரகத் தாக்குதலையும் அதிகப்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யா இரு வாரங்களுக்கு முன்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி தலையிட்டு ஏற்படுத்தியுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தின் விதிகளை மீறுவதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். சார்க்கோசி இப்பொழுது 27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழர்ச்சி தலைவர் பதவியை வகிக்கிறார்.

மேலும் தீவிர தேசிய, மற்றும் ரஷ்ய எதிர்ப்பு அரசாங்கங்களாக இருக்கும் முன்னாள் சோவியத் குடியரசுகள் மற்றும் இப்பொழுது அமெரிக்காவுடன் உடன்பாடு கொண்டுள்ள வார்சோ ஒப்பந்த நாடுகளுக்கான பயணத்தின் ஒரு பகுதியாக துணை ஜனாதிபதி டிக் செனி ஜோர்ஜிய தலைநகர் டிபிலிசிக்கு அடுத்த வாரம் வரவிருக்கிறார் என்பதை புஷ் நிர்வாகம் அறிவித்துள்ளது. செனி புஷ் நிர்வாகத்தின் ஒரு பகுதிக்கு தலைமை தாங்குகிறார்; இது வெளியுறவு மந்திரி கொண்டலிசா ரைஸ் செயல்படுத்திவருவதை விடவும் கூடுதலாக, நீண்ட நாள் ரஷ்யாவிடம் கூடுதலான போர்வெறி, ஆக்கிரோஷ கொள்கையை கொள்ள வேண்டும் என்று கூறிவரும் பகுதி ஆகும்.

முன்னதாக ஐந்து நாட்கள் நடந்த ஜோர்ஜிய-ரஷ்ய போரின்போது, புஷ் ஒலிம்பிக் பந்தயத்தை பார்க்க பெய்ஜிங்கில் இருந்து பூசல்பற்றி அடக்கமான கருத்துக்களை வெளியிட்டிருந்தபோது, செனி சாகேஷ்விலியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போருக்கான குற்றம் மாஸ்கோவிடம்தான் உள்ளது என்றார். "ரஷ்ய ஆக்கிரமிப்பு ...சரியான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்று அறிக்கையும் விடுத்தார். இப்பகுதிக்கு அவர் வருவது அவருடைய பிரிவானது நிர்வாகத்தினுள் அதிக செல்வாக்கு பெற்றுள்ளதை குறிப்பிடுகிறது.

ஞாயிறன்று செப்டம்பர் 1ம் தேதி சார்க்கோசி ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டு அவசரக் கூட்டத்தைக் கூட்டுவதாகவும் ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவுகளை அது ஆராயும் என்றும் ஜோர்ஜியாவிற்கு உதவியளிப்பது பற்றியும் விவாதிக்கும் என்றும் அறிவித்தார். "சில ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களின்" வேண்டுகோளின் பேரில் கூட்டத்தை அழைப்பதாகக் கூறிய சார்க்கோசி கடந்த வாரம் அத்தகைய உச்சிமாநாட்டைக் கூட்டுவதாக அச்சுறுத்தி, ரஷ்யா போர்நிறுத்த ஒப்பந்த விதிகளைக் கடைபிடிக்கவில்லை என்றால் "தீவிர விளைவுகள்" ஏற்படும் என்றும் எச்சரித்திருந்தார். ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி டேவிட் மிலிபாங்குடன் சேர்ந்து இவரும் அமெரிக்க குற்றச் சாட்டுக்களான உடன்பாட்டை மாஸ்கோ தொடர்ந்து மீறிவருகிறது என்று எதிரொலித்தார்.

தெற்கு ஓசேட்டிய தலைநகரான டிஷிக்ன்வலியை ஜோர்ஜியா தாக்குவதற்கு அனுப்பியிருந்த படைகளை தடுத்து நிறுத்துவதற்கு அனுப்பியிருந்த படைகள் அனைத்தையும் ரஷ்யா வெள்ளியன்று கிட்டத்தட்ட திரும்பப் பெற்று கொண்டுவிட்டது; ஜோர்ஜியப் படைகள் 2,000க்கு மேல் குடிமக்களைக் கொன்றதாகவும் நகரத்தின் 70 சதவிகித கட்டிடங்களை இடித்துவிட்டதாகவும் மாஸ்கோ வாதிடுகிறது. ஆனால் தெற்கு ஓசேட்டியா மற்றும் அப்காஜியா எல்லைகளுக்குள் 500 துருப்புக்களை இன்னமும் நிறுத்தி வைத்து இரு மாநிலத்தை சுற்றியுள்ள "பாதுகாப்பு பகுதியில்" சோதனைச் சாவடிகளையும் நிறுவியுள்ளது.

போர்நிறுத்த விதிகளை, தான் முற்றிலும் கடைபிடித்துள்ளதாக மாஸ்கோ வலியுறுத்துகிறது; இதன்படி ஒரு விதியில் ரஷ்யா குறிப்பிடப்படாத "கூடுதலான பாதுகாப்பு நடவடிக்கைகள்" எடுக்கலாம் என்றும் அமைதி காப்பவர்களையும் பூசலுக்கு உட்பட்ட பகுதிகளில் நிறுத்திவைக்கலாம் என்றும் உள்ளது. சோவியத் ஒன்றியம் 1991ல் சிதைந்தபின் ஏற்பட்ட போர்களில் டிபிலிசி முழுக் கட்டுப்பாட்டை மாநிலங்கள்மீது கொள்ள முடியாமல் போனதில் இருந்தே, ரஷ்யா, அமைதி காக்கும் துருப்புக்களை அவற்றில் வைத்துள்ளது. மாஸ்கோவிற்கும் டிபிலிசிக்கும் இடையே ஏற்பட்ட ஒரு பிந்தைய உடன்படிக்கை, ரஷ்ய அமைதி காப்பாளர்கள் பிரிந்துள்ள குடியரசுகளில் இருத்தப்படலாம் என்று அனுமதிக்கிறது.

ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மேட்வெதேவுடன் கடந்த வார இறுதியில் தொலைபேசி உரை ஒன்றில் சார்க்கோசி இந்த உடன்பாடு ரஷ்ய அமைதி காப்பவர்களை இரு குடியரசுகளின் எல்லைகளுக்கு அருகே "ரோந்துப் பணி" செய்ய அனுமதிக்கிறது என்றும் சோதனைச் சாவடிகள் நிறுவ அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்தார். ரஷ்யா ஜோர்ஜியத் துறைமுகமான போடிக்கு அருகே உள்ள இந்த இராணுவ சோதனைச் சாவடிகளை அகற்றுமாறும், செனாகியில் உள்ள விமானத்தளத்தின் அருகே உள்ள சோதனைச் சாவடிகளை அகற்றுமாறும் கோரினார். இவை அப்காஜியாவிற்கு அருகே இடைப்பட்ட பகுதியில் ஐந்து மைலுக்கு அப்பால் உள்ளவை ஆகும்.

போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, வாஷிங்டன் ரஷ்யா அதன் விதிகளை மீறிவருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. ஜோர்ஜியாவும் அமெரிக்காவும் நடைமுறையில் பூசலுக்கு உட்பட்ட மாநிலங்களின் எல்லைகளுக்கு வெளியே ரஷ்யா சில படைகளை நிறுத்திவைப்பது அனுமதிக்கப்பட மாட்டாது என்று கூறுகின்றன.

திங்களன்று பைனான்ஸியல் டைம்ஸ், "பிரான்ஸின் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி தலையிட்டு வந்துள்ள போர்நிறுத்தத்தின் விதிகள் பற்றி தங்கள் பெரும் ஏமாற்றத்தை அமெரிக்க தூதர்கள் வெளியிட்டுள்ளனர்; இவை மிகவும் தெளிவற்றும், கிரெம்ளினுக்கு மிக ஆதரவாகவும் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்." என்று எழுதியுள்ளது. சாகேஷ்விலியுடன் வார இறுதியில் நடத்திய ஒரு பேட்டியை அடிப்படையாகக் கொண்ட வேறு ஒரு கட்டுரையில், "சாகேஷ்விலி போர்நிறுத்த ஒப்பந்தம் 'தெளிவற்று" இருப்பதாகக் குறைகூறினார்" என்று எழுதியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருக்கும் பிளவுகள், அமெரிக்காவின் மிகத் ஆத்திரமூட்டும் தன்மை உடைய வழிவகைக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது மற்றும் ரஷ்யாவுடன் எந்த அளவுக்கு மோதல் கொள்ளவிருக்கிறது என்பது, பிரெஞ்சு வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெர் வெளியிட்ட அறிக்கையில் பிரதிபலித்தன; அவர் வரவிருக்கும் உச்சிமாநாட்டில் ரஷ்யாவிற்கு எதிராக எந்தவித ஐரோப்பிய பொருளாதாரத் தடைகளையும் பொருத்தமற்றதென தள்ளிவிட்டார்.

ஆனால் கூட்டம் பற்றிய சார்க்கோசியின் அறிக்கை ஜோர்ஜியாவின் "சுதந்திரம் மற்றும் நிலப்பகுதி உரிமைக்கு" ஆதரவு என்ற அமெரிக்க மந்திரத்தை வலியுறுத்துகிறது; இச் சூத்திரம் இரு பிரிந்து செல்ல முயலும் மாநிலங்களின் பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை நிராகரிக்கிறது; அதுவோ தெற்கு ஓசேட்டியாவின் மீது ஜோர்ஜியத் தாக்குதலுக்குப் பின்னர், ஜோர்ஜியாவிடம் இருந்து சுதந்திரம் வேண்டும் என்ற கருத்திற்கு உள்நாட்டில் பரந்த ஆதரவைப் பெற்றுள்ளது.

தெற்கு ஓசேட்டியா மற்றும் அப்காஜியாவின் சுதந்திரப் பிரச்சினை இன்னும் மோதலுக்கு வெடிப்புத் தானமாக உள்ளது. திங்களன்று, ரஷ்யப் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் --Upper Federation Council, the lower State Duma-- கட்டுப்படுத்தாத தீர்மானம் ஒன்றிற்கு ஒருமனதாக வாக்களித்தன; மாநிலங்களின் சுதந்திரத்தை அங்கீகரிக்குமாறு அது மேட்வேதேவிற்கு அழைப்பு விடுத்தது.

ரஷ்ய பாராளுமன்றமும் தெற்கு ஓசேட்டியா மற்றும் அப்காஜியா அரசாங்கங்களும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கொசோவோவை அங்கீகரித்ததை முன்னோடியாக காட்டியுள்ளன; கடந்த பெப்ருவரி மாதம் ரஷ்யா கடுமையாக எதிர்த்தும் கூட, கொசோவோ சேர்பியாவில் இருந்து சுதந்திரமாக போய்விட்டதாக அறிவித்தது; சேர்பியாவோ மாஸ்கோவின் மரபார்ந்த நட்பு நாடு ஆகும்.

மோதலை தீவிரப்படுத்தும் வகையில் அப்காஜியா ஜனாதிபதி செர்ஜீ பாகப்ஷ் திங்களன்று சுதந்திரமான அப்காஜியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே இராணுவ உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்யாவின் துணை வெளியுறவு மந்திரி கிரிகோரி கரசின், Spiegel Online க்கு ஞாயிறன்று கொடுத்த பேட்டி ஒன்றில், அமெரிக்காவை அதன் "ஏமாற்றுத்தன பங்கிற்காக" தாக்கியதுடன், "அமெரிக்கர்கள் ஜோர்ஜியாவிற்கு ஐந்து ஆண்டுகளாக ஆயுதம் கொடுத்து வருகிறார்கள், ஜோர்ஜியா அதன் இராணுவச் செலவை மூன்று மடங்காக ஆக்கியுள்ளது" என்றும் சுட்டிக் காட்டினார்.

நேட்டோவிற்கு ஜோர்ஜியா சேர்க்கப்படுவதற்கு வாஷிங்டன் ஆழ்ந்தமுறையில் செல்வாக்கை பயன்படுத்துவது குறித்து, அவர், "அது மிக ஆபத்தானது ஆகும்... அது நேட்டோ உறுப்பினர்கள் அனைவராலும் எடுத்த முடிவு என்றால், வருங்காலத்தில் அது ரஷ்யாவுடன் எத்தகைய உறவைக் கொள்ள விரும்புகிறது என்ற முடிவாகும்" என்று கூறினார்.

ரஷ்ய அரசாங்கம், அமெரிக்கக் கொள்கையான ஆக்கிரோஷ, தூண்டுதல் கொடுக்கும் கொள்கைக்கு, வாஷிங்டனின் காகசஸ் மற்றும் யுரேசிய கண்டத்தில் மேலாதிக்க உந்துதலுக்கு விடையிறுக்க அதன் தேசியம், இராணுவவாதம் இவற்றை வலியுறுத்திக் காட்டுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

முந்தைய சோவியத் யூனியனின் தேசியமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை கொள்ளை அடித்ததில் இருந்து தன்னை செல்வக் கொழிப்பு ஆக்கிக் கொண்ட புதிதாக வளர்ந்துள்ள முதலாளித்துவத்தின் மேலாதிக்க பிரிவுகளை நம்பியுள்ள நிலையில், ரஷ்ய ஆட்சி முன்னாள் சோவியத் குடியரசுகளான ஜோர்ஜியா மற்றும் உக்ரைனில் இருக்கும் மக்களுக்கு முறையீடு செய்ய இயலாமல் உள்ளது; இவ்விரு நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிராக நிற்கின்றன.

ஞாயிறன்று உக்ரைன் சோவியத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற 17 ஆண்டுகள் நிறைவு தினத்தை கீவில் ஒரு பெரிய இராணுவ அணிவகுப்பு நடத்தியதின் மூலம் கொண்டாடியது. உக்ரைனின் ஜனாதிபதி விக்டர் யுஷ்செங்கோ தொலைக்காட்சி மூலம் நாட்டிற்கு ஆற்றிய உரையில் நேட்டோ உறுப்பினர் அந்தஸ்தும் இராணுவ மறு கட்டமைப்பும்தான் உக்ரைனை ரஷ்ய மேலாதிக்கத்தில் இருந்து காப்பாற்ற முடியும் என்று அறிவித்தார்.

திங்கட்கிழமை வாஷிங்டன் போஸ்ட்டின் ஆசிரியர் பக்கத்திற்கு எதிர்ப்பக்கத்தில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் யுஷ்செங்கோ ரஷ்யா கடற்படை கருங்கடல் துறைமுகமான செவஸ்டாபோலுக்கு வருவதைத் தடை செய்யும் அச்சுறுத்தலை வலியுறுத்தினார். 1997ல் ரஷ்யாவும் உக்ரைனும் 20 ஆண்டு, புதுப்பிக்கக்கூடிய, ஒப்பந்தம் ஒன்றை கிரிமிய துறைமுகத்தில் ரஷ்ய கடற்படைத் தளத்திற்காக கையெழுத்திட்டிருந்தன.

தன்னுடைய ஆதரவு ஜோர்ஜியாவின் "நிலப்பகுதி உரிமைக்கு" உண்டு என்றும் உக்ரைன் நேட்டோவில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் யுஷ்செங்கோ அறிவித்தார்.

புஷ் நிர்வாகத்தின் பொறுப்பற்ற, ரஷ்யாவிற்கு எதிரான ஆக்கிரோஷக் கொள்கைக்கு, அதன் பயங்கரமான உட்குறிப்பான இரு அணுவாயுத சக்திகளுக்கு இடையே இராணுவ மோதல் வரக்கூடிய திறன் இருக்கும் நிலைக்கு இரு கட்சியின் ஆதரவு உள்ளதைக் குறிக்கும் வகையில் நியூ யோர்க் டைம்ஸில் திங்களன்று சாகேஷ்விலி கொடுத்த பேட்டி அமைந்துள்ளது. இக்கட்டுரையின்படி ஜோர்ஜிய ஜனாதிபதி தெற்கு ஓசேட்டியா மற்றும் அப்காஜியா மீது கட்டுப்பாட்டை மறுபடியும் கொண்டுவரும் அவருடைய உந்துதலுக்கு நிபந்தனையற்ற அமெரிக்கா ஆதரவு கிடைக்கும் எனத் தான் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளார். "குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் கூடிய செனட்டர் ஜோன் மக்கெயினுடன் பலமுறை நாளொன்றுக்கு இருமுறை தொலைபேசியில் உரையாடுவதாகவும் அதே போல் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்தலில் நிற்க இருக்கும் செனட்டர் ஜோசப் ஆர்.பிடன் ஜூனியருடனும் தொடர்பு கொண்டிருப்பதாகவும்" அவர் கூறியுள்ளார்.