World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : மலேசியா

Malaysian police crack down on protest over price rises

விலைவாசி உயர்வு மீதான போராட்டத்தின் மீது மலேசிய போலீஸ் கடும் நடவடிக்கை

By our correspondent
1 February 2008

Use this version to print | Send this link by email | Email the author

விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் மீதான போலீசாரின் கடும் நடவடிக்கையில், சென்ற சனியன்று மலேசியாவின் எதிர்க்கட்சிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட ஐம்பத்தாறு பேர் கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் அதில் கலந்து கொண்டனர் மற்றும் அது இஸ்லாம் ஸே-மலேசியா கட்சி (PAS), தேசிய நீதிக் கட்சி அல்லது கீதிலான், ஜனநாயக நடவடிக்கைக் கட்சி (DAP) மற்றும் மலேசிய சோஷலிசக் கட்சி (PSM) ஆகியவை கொண்ட, பணவீக்க எதிர்ப்பு கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக, நீதிமன்ற தடை உத்தரவு ஒன்றினைப் பெற்ற போலீசார், மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு எதிராக எச்சரித்தனர். போலீஸ் சட்டம் பிரிவு 27(8) இன் படி, போலீசார் அனுமதியின்றி பொது இடம் ஒன்றில் ஐந்து பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். நாட்டின் அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சுதந்திரமாகக் கூடுவதற்கான உரிமையில் நேரடியாக முரண்படுகின்ற இச்சட்டமானது, கூடஅரசாங்கத்துடன் தொடர்புள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகள் தவிர்த்த வேறு எதனாலும் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களை தடை செய்வதற்கு வழக்கமாக பயன்படுத்தப்படுகிறது .

போராட்டத்தை எதிர்பார்த்து பெடரல் ரிசர்வ் படை மற்றும் ஒரு தன்னார்வ படையான RELA -இல் இருந்து சுமார் ஆயிரம் அதிகாரிகளை போலீஸ் திரட்டியிருந்தது. ஆர்ப்பாட்டம் பிற்பகல் 3.00 மணிக்குத் தொடங்கவிருந்த நிலையில், முன்னதாகவே கைதுகள் ஆரம்பித்துவிட்டன. ஆறு பேர், அனைவரும் PAS உறுப்பினர்கள், பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களுக்கு அருகே கோலாலம்பூர் சிட்டி சென்டருக்கு (KLCC) முன்னால் கைது செய்யப்பட்டார்கள்.

KLCC மற்றும் அம்பாங்க் பூங்கா LRT ஸ்டேஷனில் நிறைய பேர், இன்னும் கூடியே இருக்காத நிலையிலும் கூட காரணமின்றி கைது செய்யப்பட்டார்கள். கீதிலான் செய்தித் தொடர்பாளர் டியான் சுவாவும் மற்றும் PAS பொருளாளர் டாக்டர் ஹட்டா ராம்லியும் ஆஸ்திரேலிய தூதரக அலுவலகத்தின் அருகே உள்ள சாலையோர உணவகம் ஒன்றில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டிகளை அளித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர். வழக்கறிஞர் ஜோன்சன் சோங்கும் போலிசார் ஆட்களை பிடித்துத் தள்ளுவதை தடுக்க முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

3.30 மணிக்கு, சுமார் 200 PAS உறுப்பினர்கள் அம்பாங் பூங்காவிலிருந்து KLCC-க்கு நகரத் தொடங்கினர், ஆனால் போலிசாரால் தடுக்கப்பட்டனர். சில நிமிடங்களுக்குள்ளாகவே கைதுப் படலம் தொடங்கியது. மலேசியகினி என்னும் சுதந்திரமான ஊடக அமைப்பு ஒன்றிலிருந்து வந்திருந்த பத்திரிகையாளர் ஒருவர் ஒரு போலிஸ் அதிகாரியைக் கேள்வி கேட்க முயற்சித்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மற்றவர்களில் PSM செயலாளர் அருட்செல்வம் சுப்ரமணியம், DAP தலைவர் ரோனி லியூ, PSM தலைவர் டாக்டர் முகமது நாஸர் மற்றும் மலேசிய இளைஞர் மற்றும் மாணவர் ஜனநாயக இயக்க தலைவர் சைமன் ஓய் ஆகியோரும் அடக்கம்.

கைதுகளின் தினத்தில் வழக்கறிஞர்கள் தங்களது கட்சிக்காரர்களுடன் கலந்து பேச அனுமதி மறுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 56 பேரில் பத்து பேர் சனியன்று நள்ளிரவில் விடுவிக்கப்பட்டனர். மீதி 46 பேர் போலிசாரால் குற்றம் சாட்டப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு இறுதியாக 1000 ரிங்கிட் (RM) அல்லது சுமார் 309 அமெரிக்க டாலர் பிணையத்தில் விடுவிக்கப்பட்டனர்.

தேசிய தேர்தல்கள் மார்ச்சில் நடத்தப்படலாம் என்று ஊகம் இருக்கின்ற நிலையில், எந்த எதிர்க்கட்சி போராட்டங்களையும் அடக்கி விட வேண்டும் என்பதில் அரசாங்கம் தெளிந்த தீர்மானத்துடன் இருக்கிறது. பிரதமர் அப்துல்லா அகமது படாவி மீதான டிசம்பர் மாதத்தின் 61 சதவீத ஒப்புதல் தரமதிப்பீடு என்பது நவம்பர் மாதத்தில் இருந்ததை விட 10 சதவீதம் குறைவாகும், மற்றும் இது அவர் பதவிக்கு வந்த 2004ம் ஆண்டு முதல் மிகக் குறைந்த தரமதிப்பீடு ஆகும். இந்த ஆர்ப்பாட்டம் சிறிய அளவினதாக இருந்தாலும், அத்தியாவசியப் பண்டங்களுக்கான ஏறும் விலைவாசி மீதான அதிருப்தியும் கோபமும் மிகவும் பரவலானதாக இருக்கிறது.

PAS பாராளுமன்ற உறுப்பினர் டாடக் கமாருதீன் ஜாபர், ரேடியோ ஆஸ்திரேலியாவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்: "உணவுப்பொருட்கள், எரிபொருள், கோலாலம்பூர் நெடுஞ்சாலை சுங்கச்சாவடி நுழைவாயில் கட்டணங்கள் மற்றும் பள்ளிக்கட்டணங்கள் உள்ளிட பொருள்களின் விலை உயர்வானது அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள பொதுவான வெறுப்பு கூடிக் கொண்டிருக்கிறது ....சென்ற செப்டம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் அரசு இனி கூடுதல் கல்விக் கட்டணமே இருக்காது என்று கூறியது, ஆனால் ஜனவரியிலோ பெற்றோர்கள் கண்டதெல்லாம் தாங்கள் - அசோசியேசன் கட்டணம், நூலக கட்டணம், கழிவறைக் கட்டணம், மற்றும் இது வகையான அனைத்து பிற கட்டணங்கள் என எல்லா இதர கட்டணங்களையும் கட்ட நேர்ந்ததே என்பதைத் தான்".

எரிபொருள் விலையேற்றங்கள் முக்கியமான கவலைக்குரியதாக இருக்கிறது. அரசாங்கத்திற்கு ஆலோசனை அளிக்கும் மலேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் (MIER) பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 0.80 RM வரையிலும், 1.92 RM இல் இருந்து 2.72 RM க்கு உயரக் கூடும் என்று சமீபத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறது. தற்போது அரசாங்கம் எரிபொருளுக்கு மானியம் அளிக்கிறது. உணவு மற்றும் போக்குவரத்து செலவுகள் உயர்வின் காரணமாக நாட்டின் பணவீக்க விகிதம் 10 மாதத்தில் உயர்ந்த அளவாக டிசம்பரில் 2.4 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. பணவீக்க விகிதம் இன்னமும் மோசமாகும் என்றும் உழைக்கும் மக்களுக்கு கூடுதல் சுமையாகும் என்றும் MIER கணிப்பீடு செய்துள்ளது.

அதிகரிக்கும் விலை உயர்வுகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அத்தியாவசியப் பண்டங்கள் பற்றாக்குறையால் மேலும் சிக்கலாகியுள்ளது. சமையல் எண்ணெயின் தீவிரத் தட்டுப்பாடு சமீபத்தில் சில மாநிலங்களை பாதித்துள்ளது. இதேபோல் மாவு தட்டுப்பாட்டையும் இந்நாடு சந்தித்தது. சில சமயங்களில், சில பொருட்களின் மீது அரசாங்கத்தின் நிர்ணய விலையை உயர்த்த நெருக்கடி அளிக்கும் நோக்கில் சில வர்த்தகங்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தவும் செய்தன.

அதிகரிக்கும் விலையேற்றங்களின் தாக்கத்தை தணிப்பதற்கு எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதை அரசாங்கம் நிராகரித்திருக்கிறது. இரண்டாவது நிதி அமைச்சர் நோர் முகமது யாகூப், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலர்கள் என்ற நிலையிலேயே தொடருமானால், எரிபொருள் மானியச் செலவு சுமை சென்ற ஆண்டில் இருந்த 20 பில்லியன் RM என்ற நிலையில் இருந்து, 2008ம் ஆண்டில் 35 பில்லியன் RM என்ற நிலைக்கு உயரக் கூடும் என்று எச்சரித்துள்ளார். மானியங்கள் நிறுத்தப்பட நேரலாம் என்று நவம்பரில் பிரதமர் அப்துல்லா படாவியும் எச்சரித்துள்ளார். சென்ற முறை பிப்ரவரி 2006ல், அரசாங்க மானியத்தை குறைத்த போது, பணவீக்க விகிதம் ஏழு வருட உயர்ந்த நிலையை தொட்டது.

பணவீக்கத்திற்கு எதிரான கூட்டணியில் இணைந்துள்ள எதிர்க்கட்சிகள் சமூக நெருக்கடிக்கு தீர்வு எதனையும் கொண்டிருக்கவில்லை. கீதிலானின் உண்மையான தலைவரான அன்வர் இப்ராஹிம், ஆழமான சந்தை சீர்திருத்தங்களை "ஒரு மனிதாபிமான அணுகுமுறையுடன்" மேற்கொள்ள உறுதியுடன் இருக்கிறார், இது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான பிளவினை பெரிதாக்கவே செய்யும். சமூக ஜனநாயக DAP மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத PAS கட்சிகளும் வரம்புக்குட்பட்ட நலச் சீர்திருத்த திட்டங்கள் மூலம் சந்தைக்கான தங்கள் உறுதிமொழியை சரிசெய்துகொண்டிருக்கின்றனர். இந்த கூட்டணியை ஆதரிப்பதன் மூலம், தங்களை சோசலிஸ்ட் எனக் கூறிக் கொளும் PSM ஆனது, இந்த முதலாளித்துவ கட்சிகளுக்கு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் கீழ்ப்படியச் செய்கின்றது.

சென்ற வார இறுதியில் நடைபெற்றுள்ள ஆர்ப்பாட்டம் எதிர்க்கட்சியினரால் நடத்தப்பட்டுள்ள தொடர்ச்சியான போராட்டங்களில் சமீபத்தியதாகும். நவம்பர் 10ம் தேதி, சுமார் ஒரு தசாப்த காலத்தில் நடைபெற்ற நாட்டின் மிகப்பெரும் பேரணியான, ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்ட, தேர்தல் சீர்திருத்தத்தை வலியுறுத்தி கோலாலம்பூரில் நடைபெற்ற பேரணியில் போலீஸ் மூர்க்கமாகத் தாக்குதல் நடத்தியது. நவம்பர் 25 அன்று, தசாப்தங்களாக பேதத்துடன் நடத்தப்பெறுவதற்கு தீர்வு கோரி போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான வம்சாவளி இந்தியர்களுடன் கலவர கட்டுப்பாட்டு போலிசார் மோதலில் ஈடுபட்டனர். ஜனவரி ஆரம்பத்தில், விசாரணையின்றி காலவரையின்றி சிறையில் வைத்திருக்க அனுமதிக்கும் நாட்டின் பயங்கரமான உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தை வெளிப்படுத்தும் வண்ணம் ஒரு சிறு மெழுகுவர்த்தி வெளிச்ச கண்காணிப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.

சமீபத்திய போலீஸ் நடவடிக்கைகள் அரசியல் அதிருப்தி எதனையும் நசுக்கும் நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ளவை, இவை சமூக கிளர்ச்சியின் சாத்தியம் குறித்து ஆளும் கூட்டணியில் தோன்றியுள்ள அச்சத்தை சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றன.