World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தோனேசியா

Government leaders pay tribute to Indonesia's former dictator Suharto

இந்தோனேஷியாவின் முன்னாள் சர்வாதிகாரி சுகார்டோவிற்கு அரசாங்க தலைவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்

By Peter Symonds
30 January 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஞாயிறன்று, தமது 86 வயதில் மரணமடைந்த முன்னாள் இந்தோனேஷிய சர்வாதிகாரி சுகார்டோவின் மரணம், உலகளவிலான தலைவர்கள் மற்றும் சர்வதேச பத்திரிகைகளிடமிருந்து தொடர்ச்சியான இரங்கலை பெற்றிருக்கிறது. 1965ல் நடந்த சதியில் ஆட்சியில் அமர்த்தப்பட்டு குறைந்தபட்சம் அரை மில்லியன் மக்களின் படுகொலைக்கும் மற்றும் 1975ல் இந்தோனேஷியாவை கிழக்கு தீமோருடன் இணைத்ததை தொடர்ந்து மற்றுமொரு 2,00,000 மக்களின் உயிரிழப்புக்களுக்கும் பொறுப்பான ஒரு மனிதருக்கு அளிக்கப்படும் பாராட்டு என்பது ஏதோ நெருடலாகவும் மற்றும் தீக்குறியானதாகவும் உள்ளது.

முழு இராணுவ மரியாதையுடன், திங்களன்று, சோலோவின் மத்திய ஜவான் நகரில் சுகார்டோவின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. 1998ல் கட்டாயமாக பதவியிலிருந்து இறங்க அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும் மற்றும் சமீபத்தில் ஜனநாயக சதியில் அகப்பட்டபோதிலும் கூட, சுகார்டோவினால் உருவாக்கப்பட்ட ஆட்சி பெருமளவில் பாதிக்கப்படாமல் இருந்தது. சுகார்டோவின் காலத்தில் இராணுவ தளபதியாக இருந்த இந்தோனேஷிய ஜனாதிபதி Susilo Bambang Yudhoyono ஆடம்பரமான அந்த விழாவிற்கு தலைமையும் தாங்கி, இறந்த சர்வாதிகாரியை "ஒரு கடமை தவறாத போராளி, ஒரு உண்மையான வீரர் மற்றும் ஒரு மதிப்புமிக்க ஆட்சியாளன்" என புகழ்ந்துரைத்தார்.

முக்கிய அமெரிக்க அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாத போதும், "தங்கள் முன்னாள் ஜனாதிபதியை இழந்திருக்கும் இந்தோனேஷிய மக்களுக்கு ஜனாதிபதி புஷ் தமது இரங்கலை" அனுப்பி இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். தென்கிழக்கு ஆசியாவின் நீண்டகால ஒடுக்குமுறை ஆட்சியாளர்களான முன்னாள் மலேசிய பிரதம மந்திரி மஹதிர் முகம்மது மற்றும் சிங்கப்பூரின் மூத்த ஆட்சியாளரான Lee Kuan Yew ஆகிய இருவரும் இராணுவ இரும்பு மனிதருக்கு தங்களின் இறுதி மரியாதையை செலுத்த இந்தோனேஷியா பறந்து சென்றனர்.

ஊடகங்கள் முழுமையாக மறந்துவிடாதளவிற்கு சுகார்ட்டோ ஆட்சியின் கொடுமைகளும் ஊழல்களும் இருந்தன. ஆனால் வெளியீடுகளானது, அவரின் சாதகமான பங்களிப்பைப் பறைசாற்றுவதாகவும், அவரின் பாரம்பரியம் "பாகுபாடில்லாத அணுகுமுறையாக" இருந்ததாகவும் வெளிப்படுத்த மிகவும் முயற்சியெடுக்கவேண்டியதாக இருந்தது. உதாரணமாக, பொருளாதார பிரச்சனையாகவும் இப்பிராந்தியத்தில் பிரச்சனைகளின் உருவாக்கமாகவும் இருந்த இந்தோனேஷியாவை ஆசியாவின் புலி பொருளாதாரமாக முந்தைய ஜனாதிபதி சுகார்னோவின் கீழ் சுகார்ட்டோ மாற்றியதாக வோல் ஸ்ட்ரீட் பத்திரிக்கை புகழ்ந்துரைத்திருந்தது. "அவரின் பிழைகள் எவ்வளவு இருந்தாலும், ஆசியாவின் சிறந்த தலைவர்களில் ஒருவராக நினைவு கூர சுகார்ட்டோ தகுதி உடையவராய் இருக்கிறார்." என்று அது அறிவித்தது.

சுகார்டோவின் வரலாற்றை மிகவும் வெளிப்படையாக பாதுகாப்பது ஆஸ்திரேலிய அரசமைப்பில் இருந்து வந்தது. இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சியை (PKI) உடலியல்ரீதியாக அழித்ததன் மூலமாக நாட்டை "ஸ்திரப்படுத்தியமைக்காகவும்" மற்றும் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஆசியாவில் ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்ததற்காகவும் அரசியல் பிரிவினரும் கடந்தகால மற்றும் நிகழ்கால தலைவர்களும் முன்னாள் சர்வாதிகாரிக்கான அவர்களின் நன்றிக்கடனை பதிவு செய்திருக்கிறார்கள்.

இறுதிச்சடங்கில் நீதி அமைச்சர் ரொபேர்ட் மைக்கிளேலண்ட் உடன் கலந்து கொண்ட முன்னாள் தொழில் கட்சி பிரதம மந்திரி பெளல் கீட்டிங், சுகார்ட்டோவை தமது பழைய நண்பர்களில் ஒருவராக நினைவு கூர்ந்ததாக Australian இதழுக்கு தெரிவித்தார். சுகார்ட்டோவின் வரலாற்றிலுள்ள மனிதஉரிமைகள் மற்றும் ஊழல்கள்கள் மீது கவனம் செலுத்தப்படுவதை "பொருத்தமற்ற கருத்துக்கள்" என்று அவர் நிராகரித்ததுடன், "பிரச்சனையாக இருக்கும் ஒரேயொரு கருத்து என்னவென்றால் [கிழக்கு] தீமோர் மற்றும் இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி மீதானதாகும்" என்று மேற்கொண்டு தெரிவிக்கையில் கூறினார். "சுகார்ட்டோ ஜனாதிபதியாக இருந்திருக்கவில்லை என்றால், நாங்கள் [ஆஸ்திரேலியா] மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) இராணுவத்திற்காக 2 சதவீதமல்ல மாறாக அது 8 அல்லது 9 சதவீதத்திற்கும் மேலாக செலவிட்டிருப்போம்." என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தோனேஷியாவை விட வேறெந்த நாடும் ஆஸ்திரேலியாவிற்கு முக்கியமல்ல என 1994ல் பிரதம மந்திரியாக இருந்தபோது கீட்டிங் அறிவித்ததை அவரின் மேற்கூறிய கருத்து எதிரொலிக்கிறது. சுகார்ட்டோவின் ''புதிய முறையிலான'' அரசாங்க உருவாக்கத்தை குறித்து அவர் அப்போது கூறுகையில், "கடந்த 30 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவையும் அதன் பிராந்தியத்தையும் ஈர்த்த ஒரேயொரு பயன்தரத்தக்க மூலோபாய அபிவிருத்தியாகும்" என குறிப்பிட்டார். கீட்டிங்கின் தொழிற்கட்சியானது, இதற்கு அடுத்த ஆண்டுகளில் இந்தோனேஷிய சர்வாதிகாரத்துடன் கான்பெர்ராவின் நெருங்கிய இராணுவ கூட்டணியை ஒழுங்கமைக்க ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.

இந்த நியாப்படுத்தல்கள் அரசியல் ரீதியாக மிகவும் எடுத்துக்காட்டானதாகும். சுகார்ட்டோவின் அட்டூழியங்களின் பட்டியல் அந்த நூற்றாண்டின் மிக மோசமானவைகளில் அடங்கும் என்பது அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு அல்லது அதை கற்றவர்களுக்குத் தெரியும். ஒரு வருடங்களுக்கு முன்னால், அமெரிக்க ஆக்கிரமிப்பு ஈராக்கில் ஒரு சூழ்ச்சி வழக்கில் சதாம் ஹுசேன் குற்றவாளியாக காணப்பட்டு குற்றங்களுக்காக தூக்கு தீர்க்கப்பட்டார். ஆனால் சதாம் ஹுசேனால் செய்யப்பட்ட குற்றங்கள் 1965ம் ஆண்டு சதியில் சுகார்டோவால் செய்யப்பட்ட இரத்தம் சிந்துதலுடன் ஒப்பிடுகையில் கவனத்திற்கு எடுக்கமுடியாதவையாகும். ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதி சுகார்னோவின் விதவை மனைவி சுகார்டோவின் இரங்கலில் "அவர் இந்தோனேஷியாவின் பொல் போட்" என தெரிவித்தார்.

32 ஆண்டுகளாக, சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகியவற்றின் செல்வாக்குடன் அப்பிராந்தியத்தில் நடக்கும் புரட்சிகரப் போராட்டங்களை ஒடுக்க சுகார்டோவின் சர்வாதிகாரம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் மற்றும் அதன் இணைக் கூட்டாளியான ஆஸ்திரேலியாவுக்கும் ஒரு முக்கிய அச்சாணியாக இருந்தது. 1960களில், அது மிக தீவிரமாக வியட்நாம் யுத்தத்தில் சிக்கி இருந்ததால், ஒரு முதலாளித்துவ தேசியவாதியான இந்தோனேஷிய ஜனாதிபதி சுகார்னோவுடன் வாஷிங்டன் எதிர்ப்பான நிலைப்பாட்டை கொண்டிருந்தது. உள்நாட்டில் நிலவிய ஆழ்ந்த சமூக அமைதியின்மைக்கு இந்தோனேஷிய கம்யூனிட் கட்சியின் உதவியுடன் தன்னை ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும், அவரின் வரையறைக்குட்பட்ட சீர்திருத்தங்களை ஒரு சோசலிச நடைமுறைகள் என முன்வைத்ததே அவரின் அப்போதைய நிலைப்பாடாக இருந்தது.

CIA இன் வெற்றிக் கதைகளில் சுகார்னோவின் வெளியேற்றமும் ஒன்றாகும். ஒரே வீச்சில், வாஷிங்டனுக்கு நம்பிக்கையான, கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானதும், எவ்வித அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவதிலும் இரக்கமின்றி இருந்த கொடியதொரு இராணுவ ஆட்சியை அது உறுதிப்படுத்திக் கொண்டது. இந்தோனேஷிய இராணுவ சதிக்காக கூறப்படும் போலிக்காரணம் என்னவென்றால், இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சியின் தூண்டுதலினால் 1965, செப்டம்பர் 30ல் ஆறு முக்கிய தளபதிகள் கடத்தி கொலை செய்யப்பட்டார்கள் என்பதாகும். ஜெனரல் சுகார்ட்டோ உடனடியாக சுகார்னோவை ஓரம் கட்டியதுடன், அவரின் போட்டியாளர்களின் உயிர்இழப்புக்களை பயன்படுத்தி மிக கவனத்துடன் இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் மற்றும் சோசலிச அனுதாபிகள் என சந்தேகப்பட்ட ஒவ்வொருவருக்கும் எதிராக வன்முறை பிராசாரத்தை கட்டவிழ்த்து விட்டு ஜகார்தாவின் மீது தமது வலிமையான கட்டுப்பாட்டை உருவாக்கிக் கொண்டார்.

இந்தோனேஷியாவிற்கான அமெரிக்க தூதர் மார்ஷல் க்ரீன் தலைமையிலான அமெரிக்க இராஜதந்திரிகள் மற்றும் CIA அதிகாரிகள் அந்த படுகொலையில் மிக நெருக்கமாக இருந்துடன், அதை தொடர்ந்து முக்கிய இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை கொல்வதற்காக மற்றும் விசாரணை செய்வதற்கான ''கொலைப்பட்டியலை'' அவர்கள் இந்தோனேஷிய இராணுவத்திற்கு அளித்தனர். மில்லியன் கணக்கான உறுப்பினர்களை கொண்ட ஒரு கட்சியை உடலியல்ரீதியாக அழிப்பதே இதில் உள்ளடங்கியிருந்தது. கொலைப்படையினர் போதாமையினால் இராணுவம் வலதுசாரி முஸ்லீம் அமைப்பினை நோக்கி திரும்பியது. அது பாரம்பரிய நில உரிமையாளர்களுக்கும் மற்றும் பிற மத நலன்களுக்கும் அச்சுறுத்தலாக தெரிந்த கட்சியை தகர்க்க விருப்பமுடன் பங்கு வகித்தது.

நம்பகரமான கணிப்புகள் இறுதியாக உயிர் இழப்புகளின் எண்ணிக்கையை அரை மில்லியனுக்கும் மற்றும் ஒரு மில்லியனுக்கும் இடையில் இருப்பதாக தெரிவிக்கின்றன. அக்காலத்தைய கட்டுரை ஒன்றை உதாரணம் காட்டுவோமானால், டைம்ஸ் இதழின் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதாவது: "வடக்கு சுமத்ராவில் பிரேதங்களை வெளியேற்றுவது என்பது ஒரு முக்கிய சுகாதார பிரச்சனையாக உருவெடுத்திருத்திருக்கிறது என்கிற அளவில் படுகொலைகளின் எண்ணிக்கை உள்ளது. அங்கு ஈரக்காற்றில் அழுகிப் போன உடல்களின் நாற்றம் வீசுகிறது. சிறிய ஆறுகளும் மற்றும் ஓடைகளும் வெளிப்படையாக இறந்த உடல்களால் தடுக்கப்பட்டு இருப்பதாக இந்த பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் எங்களிடம் கூறுகின்றனர். ஆற்றுப் போக்குவரத்து மிக மோசமாக தடைப்பட்டு இருக்கிறது."

அரசியல்ரீதியாக புரட்சிகரமாக அல்லாமல், "அமைதிப் பாதையில் சோசலிசம்" என்பதை அடிப்படையாக கொண்ட ஸ்ராலினிச இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி, இராணுவத்திற்கு எதிராக அணதிரட்ட எவ்வித முயற்சியும் செய்யவில்லை. அதன் முழுமையான நிலைநோக்கானது, உழைக்கும் வர்க்கம் மற்றும் விவசாய மக்களை சுகார்னோவிற்கு அடிபணிய செய்வதேயாகும். அதன் உறுப்பினர்களை இராணுவம் கொன்று குவித்து கொண்டிருந்தபோது கூட, சுகார்னோவுடன் கட்சி உறவை உடைத்துக் கொள்ள எதுவும் செய்ய வேண்டாம் என அதன் தலைவர்கள் தெரிவித்து வந்தார்கள். எவ்வாறிருப்பினும், அமெரிக்க ஆதரவு இராணுவத்திற்கு தீவிரமாக சவால் விடுவதற்கு சுகார்னோ இயலாதிருந்தார். காலங்கடத்துவதற்கு மாதக்கணக்கில் முயன்ற பின்னர், 1966 மார்ச்சில் அவர் முறையாக அதிகாரத்தை சுகார்ட்டோவிடம் ஒப்படைத்தார்.

ஐரோப்பிய பாசிசத்தின் கூட்டுறவுவாத மனோபாவத்திடம் இருந்து கடன் வாங்கப்பட்டு மனிதகுலத்தின் படுகொலைகளில் இருந்து புதிய முறையிலான ஆட்சி உருவானது. சமூகத்தின் ஒவ்வொரு கூறும், அதாவது அரசாங்க நிர்வாகத்தில் இருந்து போலீஸ், சட்டத்துறை, ஊடகம், தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் வரை அனைத்தும் அரசுக்கும், குறிப்பாக சுகார்டோவின் இராணுவ உயர் கட்டளைக்கும் கீழ்படிய செய்யப்பட்டன. அனைத்து விதமான கருத்து வேறுபாடுகளும் திட்டமிட்டபடி நசுக்கப்பட்டன. 1970களின் பிற்பகுதியில், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவை முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

தற்பெருமையுடன் பேசப்படும் சுகார்ட்டோவின் பொருளாதார அதிசயங்கள் முதலில் பெருமளவிலான அமெரிக்க உதவியை ஆழமாகச் சார்ந்து இருந்தது. பின்னர் 1970களின் தொடக்கத்தில் இருந்து இந்தோனேஷிய எண்ணெய் ஏற்றுமதியின் நான்குமடங்கு அதிகரித்த விலையுயர்வால் அதிகரித்த வருவாயில் தங்கியிருந்தது. குறிப்பாக, கிராமப்புற கொந்தளிப்பு உணர்வுகளின் அபாயங்களுக்காக சுகார்ட்டோ விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்க சில வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால், ஆட்சியின் அதிகாரங்கள் மற்றும் ஆதரவைக் கொண்டு சுகார்ட்டோவால், அவரின் குடும்பத்தினராலும் மற்றும் அவரின் நெருங்கிய வியாபார சிநேகிதர்களால் உருவாக்கப்பட்ட பெருநிறுவன ஆட்சியை விட அதிகரித்த சமூக சமத்துவமின்மை எங்கும் மிகவும் வெளிப்படையாக இருந்தது. சுகார்ட்டோ 35 பில்லியன் டாலரை தன்னகப்படுத்தியுள்ளதாக கடந்த ஆண்டின் ஓர் ஐக்கிய நாடுகள் அறிக்கை கணிப்பு வெளியிட்டது. இறுதியாக, ஒரு பனிப்போர் கூட்டணியில் அவரின் தேவையை பொறுப்புடன் நிறைவேற்றிக் கொண்ட பின்னர், மூலதன உலகமயமாக்கல் யுகத்திற்கு இந்தோனேஷிய பொருளாதாரத்தை திறந்து விட சுகார்ட்டோ ஒரு தடையாக கருதப்பட்டு, 1997-98ன் ஆசிய நிதி நெருக்கடியின் மத்தியில் வாஷிங்டனால் முழுமையாக ஓர் ஓரத்தில் வீசியெறிப்பட்டார்.

அதன் பின்வந்த அமெரிக்க நிர்வாகங்களுக்கு, ஆசியாவில் சுகார்டோவின் ஆட்சி ஒரு முக்கிய கூட்டணியாக இருந்தது. எவ்வாறிருப்பினும், ஆஸ்திரேலிய அரசாங்கங்களுக்கு, கீட்டிங் விவரித்தது போல இந்தோனேஷிய இராணுவ ஆட்சி அப்பிராந்தியத்தில் "ஒரே ஒரு பயன்தரத்தக்க மூலோபாய அபிவிருத்தியாக" இருந்தது. பின்னர் பதவிக்குவந்த தொழிற்கட்சி மற்றும் அதன் கூட்டணியின் பிரதம மந்திரிகள் இந்த சர்வாதிகாரியுடனான மிக நெருங்கிய உறவைப் பயன்படுத்திக் கொண்டனர். 1972ல், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிது காலத்திலேயே, தொழிற்கட்சி சுகார்ட்டோவை கான்பெர்ராவிற்கு முதல் இரண்டு சுற்றுப்பயணங்களுக்கு ஆஸ்திரேலியாவிற்கு வருமாறு வரவேற்றது. அதற்கடுத்த ஆண்டில் பிரதம மந்திரி கோக் விட்டலம் (Gough Whitlam) "அடிப்படையில் இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டும் ஒரே மாதிரியான நோக்கை கொண்டிருக்கின்றன என்பதை நான் கண்டறிந்திருக்கிறேன்." என்று குறிப்பிட்டார்.

விட்டலம் அரசாங்கம் வாஷிங்டனின் போர்ட் நிர்வாகத்துடன் இணைந்து 1975ம் ஆண்டு முன்னாள் போர்த்துக்கல் காலனியான கிழக்கு தீமோர் மீதான இந்தோனேஷிய தாக்குதலுக்கு பச்சைக்கொடி காட்டியது. வியட்நாமில் கொடூரமான மூலோபாய தாக்குதலின் தோல்வியால் பாதிக்கப்பட்டிருந்ததால், இந்தோனேஷியா மற்றும் அதன் பிராந்தியங்களின் கொந்தளிப்பிற்கு வளர்ந்து வரும் தீமோரிய சுதந்திர இயக்கம் ஒரு முக்கிய கிரியாஊக்கியாக இருப்பதாக அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் கருதின. இரண்டு தசாப்தங்களாக, தொடர்ச்சியாக பதவிக்குவந்த ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள், 200,000 உயிர்களை விலையாய் அளித்து தீமோர் எதிர்ப்பின் மீதான இரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறைக்கு தீவிரமாக ஆதரவளித்தன.

இந்தோனேஷிய தாக்குதலுக்கான கான்பெராவின் ஆதரவிற்கான ஒரு காரணம், தீமோர் கடலில் உள்ள ஆதாயந்தரும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களாகும். கிழக்கு திமோர் இந்தோனேஷியாவுடன் இணைக்கப்பட்டதற்கு உலகளவில் முறையாக அங்கீகாரம் அளித்த ஒரே நாடு ஆஸ்திரேலியா மட்டுமே. இதற்கு பிரதியுபகாரமாக அது ஒரு எல்லை தாண்டிய உடன்படிக்கை செய்து கொண்டதுடன், அந்த கடற்படுகை வளங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டது. 1998ல் சுகார்டோவின் வீழ்ச்சியை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களின் விளைவாக, தாராளவாதக்கட்சி தலைவர் ஜோன் ஹோவர்டின் அரசாங்கம் எதிர்சக்திகளை சமாளிக்க (குறிப்பாக போர்த்துக்கல்லை சமாளிக்க) தீர்மானித்து, தீமோரின் சுதந்திரத்திற்கு ஆதரவளிக்க ஒரு உத்தியை கையாண்டது. 1999 மற்றும் 2006ல் ஆஸ்திரேலியாவின் நலன்களுக்கு சாதகமாக ஒரு ஆட்சியை நிறுவவும் மற்றும், அனைத்திற்கும் மேலாக, தீமோர் கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான கட்டுப்பாட்டை தக்கவைக்க அது இராணுவ தலையீடுகளை ஏற்படுத்தியது.

இந்தோனேஷிய சர்வாதிகாரியுடனான மற்றும் அதன் ஆதரவாளர்களுடனான ஆஸ்திரேலியாவின் மிக நெருங்கிய உறவானது தீமோரின் எரிசக்தி வளங்களின் உடனடி பிரச்சனைகளுக்கும் அப்பாற்பட்டு சிறப்பாக நிலைபெற்றது. இந்தோனேஷியாவிற்கு மட்டுமின்றி, வெகுவாக ஆசியாவின் ஸ்திரமின்மைக்கு எதிராகவும் சுகார்ட்டோ ஒரு காப்பாளராக மட்டும் இல்லாமல், ஆஸ்திரேலிய அரசாங்களுக்கும் மற்றும் அதன் பெருநிறுவனங்களுக்கும் தென்கிழக்கு ஆசியாவின் இராஜாங்க மற்றும் பொருளாதார கதவுகளை அவர் திறந்துவிட்டார்.

1998ல் அவரின் அரசியல் வீழ்ச்சிக்கு பின்னரும் கூட, இந்தோனேஷியாவில் மட்டுமின்றி, வாஷிங்டன், கான்பெரா மற்றும் சர்வதேச அளவில் இருந்த அதிகாரங்களிடம் இருந்தும் கூட மறைமுகமான பாதுகாப்பை அவர் பெற்று வந்தார். இந்தோனேஷிய மக்களுக்கு எதிராக அவர் ஏற்படுத்திய இரத்தம் தோய்ந்த குற்றங்களுக்காக ஒருபோதும் தண்டிக்கப்படவில்லை. ஊழல்களுக்காக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளும் அவரின் மோசமான உடல்நலனை போலிக் காரணமாக கொண்டு ஒதுக்கப்பட்டன.

இறந்த சர்வாதிகாரியை அரசாங்கங்கள் அணைத்துக்கொள்ள தயாராகி இருப்பது, அரசியல் அமைப்புகளில் உள்ள எவ்வித ஜனநாயக உரிமைகளுக்கும் உண்மையாக மதிப்பளிக்கும் பொறுப்பு எந்தவொரு நாட்டிலும் இல்லாதுள்ளதையே எடுத்துகாட்டுகிறது. சுகார்ட்டோவின் அட்டூழியங்களை கவனமெடுக்காது தள்ளிவிடுவதற்கு அப்பாற்பட்டு, அவரின் புதிய முறையிலான ஆட்சியின் சாதனைகளை புகழ்ந்துரைக்க விரும்பும் அவைகளின் விருப்பங்களானது, பாரிய படுகொலைகள் என்பது ஆளும் பிரிவினரின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கொள்கைகளில் ஒரு சட்டபூர்வமான கருவியாக இருக்கிறது என்பதற்கான ஒரு அச்சம்தரும் எச்சரிக்கையாக அமைகிறது.