World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

NATO security conference: US demands more European troops in Afghanistan

நேட்டோ பாதுகாப்பு மாநாடு: ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா கூடுதல் ஐரோப்பிய துருப்புகளைக் கோருகிறது

By Ulrich Rippert
13 February 2008

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ரொபர்ட்ஸ் கேட்ஸ் நேட்டோவில் அங்கத்துவம் வகிக்கும் ஐரோப்பிய கூட்டு நாடுகளின் மீது தமது அழுத்தத்தை தீவிரப்படுத்த 44ஆவது மூனிச் பாதுகாப்பு மாநாட்டை பயன்படுத்தினார்.

ஆப்கானிஸ்தான் யுத்தத்தைக் குறிப்பிட்டு, அட்லாண்டிக்கிடையிலான நாடுகளின் கூட்டணிக்குள் "சுமைகளின் ஒரு முறையான பகிர்வை" கேட்ஸ் கோரினார். அவர் கூறியதாவது, "அதே நேரத்தில், நேட்டோவில் உள்ள சில நேச நாடுகள் ஸ்திரப்படுத்தல் மற்றும் உள்நாட்டு செயல்பாடுகளை செய்வதை மட்டும் செளகரியமாக எடுத்துக் கொண்டு, அதன் மூலம் யுத்தம் மற்றும் உயிரிழப்புகளை பிற கூட்டு நாடுகளின் மீது திணிக்க விரும்பக்கூடாது." என்றார்.

இரண்டு பிரிவாகவுள்ள கூட்டணியில் சிலர் ஆர்வமுடன் யுத்தம் செய்கிறார்கள், ஆனால் பிறர் அதற்கு எதிர்மாறாக செய்வதை அனுமதிக்க முடியாது என கூறிய பாதுகாப்பு செயலாளர், "அவ்வாறான ஒரு நிகழ்வு அதனது கூட்டு பாதுகாப்புக்கான அனைத்து விளைவுகளுடன் நிச்சயமாக கூட்டணியை சிதைத்துவிடும்." என்று அறிவித்தார்.

நேட்டோவை சிதைப்பதன் மீதான தமது எச்சரிக்கை நிச்சயமாக கூட்டணியின் எந்த தனி அங்கத்துவ நாட்டையும் குறிப்பதாகாது என கேட்ஸ் குறிப்பிட்டு, அனைத்து உறுப்பினர்களை நோக்கி கூறுவதாக அறிவித்தார்.

எவ்வாறிருப்பினும், சந்தேகத்திற்கிடமின்றி, அவரின் கருத்துக்கள் குறிப்பாக ஜேர்மனியை நோக்கி இருந்தன. தீவிரமாக சண்டை நடந்து வரும் தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதிகளில் ஜேர்மன் படைப்பிரிவை விரிவாக்கவும் மற்றும் ஜேர்மன் யுத்த துருப்புக்களை நிலைநிறுத்தவும் வலியுறுத்தி, ஜனவரியின் இறுதியில், கேட்ஸ் பழமைவாத ஜேர்மன் கிறிஸ்துவ ஜனநாயக யூனியனின் (CDU) உறுப்பினரும் பாதுகாப்பு அமைச்சருமான பிரன்ஸ் ஜோசப் யுங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஜேர்மனி எடுத்துள்ள நிலைப்பாடு அமெரிக்காவை வெறுப்படைய செய்திருப்பதை அக்கடிதத்தின் தொனி தெளிவாக வெளிப்படுத்தியது.

கடந்த வெள்ளியன்று லித்துவேனியாவின் தலைநகரான வில்னியஸில் நடந்த நேட்டோ மாநாட்டில், அமெரிக்க பிரதிநிதிகள் ஜேர்மன் மீது தங்களின் கண்டனங்களை தொடர்ந்ததுடன், ஜேர்மன் அரசாங்கத்திற்கும் நெருக்கடி அளித்தனர்.

பெண்டகனின் தலைமை ஆப்கானிஸ்தானில் இரத்தம் சிந்துவதில் பங்கேற்க ஐரோப்பியர்களை, குறிப்பாக ஜேர்மனியர்களை, அகங்காரத்துடன் அழைக்கும் விதம் குறிப்பிடத்தக்கதாகும். ஜேர்மனியால் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவ படைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், "சண்டை மற்றும் உயிரிழப்புகளின் பொருத்தமற்ற பங்கினை பிற நேட்டோ நேச நாடுகள் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக" அவர் குறிப்பிடுவது ஆத்திரமூட்டுவதாக உள்ளது.

முன்னாள் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் (சமூக ஜனநாயக கட்சி - SPD) மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜொஸ்கா பிஷ்ஷர் (பசுமைக்கட்சி-Green Party) ஆகியோரால் ஈராக்கில் அமெரிக்க இராணுவ கொள்கைகளின் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான காரணங்கள் வேறாக இருந்தபோதிலும், முன்னாள் அரசாங்கம் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளால் உருவாகும் விளைவுகள் தொடர்பாக எச்சரித்திருக்கிறது. ஆறு வருடங்களுக்கு முன்னர் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் ''நான் அதில் நம்பிக்கை கொள்ளவில்லை'' என பிஷ்ஷர் அப்போதைய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரான டொனால்ட் ரம்ஸ்பெல்டிடம் தெரிவித்திருந்தார்.

அந்த நேரத்தில் ஐரோப்பிய சக்திகளால் எழுப்பப்பட்ட மோசமான பயங்கள் ஈராக்கில் இப்போது உறுதிப்பட்டுள்ள நிலைமையில், ஈராக்கின் இராணுவ தோல்விக்கு அதற்கு எதிராக எச்சரித்தவர்களை கேட்ஸ் தற்போது குற்றஞ்சாட்டி வருகிறார். அதே நேரத்தில், தமது மக்கள் எத்தனை இறந்த படையினரை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார்கள் என்பதை திணிப்பதன் அடிப்படையிலேயே கூட்டணி அரசாங்கங்கள் மதிப்பிடப்படுவார்கள் என ஓர் இராணுவ ஆட்சியாளர் போல் அவர் வாதாடுகிறார்.

ஆப்கானிஸ்தான் யுத்தம் குறித்த ஐரோப்பிய மக்களின் கருத்தை அவர் அறிந்திருப்பதாகவும், ஜேர்மன் இராணுவத்தை ஹிந்துகுஷ்ஷில் நிலைநிறுத்த ஜேர்மன் மக்களில் பெரும்பான்மையினர் விரும்பவில்லை என்பதையும் கேட்ஸ் மாநாட்டில் தெரிவித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, மட்ரிட் மற்றும் இலண்டனில் நடந்தது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடப்பதைத் தடுப்பதில் வெற்றி பெறுவதற்காகவே ஆப்கானிஸ்தானில் இராணுவம் நிறுவப்படுகிறது என்பதை அதிகமான மக்கள் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என கேட்ஸ் அறிவித்தார்.

ஒரு வெற்று விவாத வகையில், உண்மை நிலையை மாற்றுவதில் பொறுப்புக்களை ஏற்றிருக்கும் அதே வேளையில், யுத்தத்திற்கு எதிரான மக்களின் பரந்த எதிர்ப்புகளைக் கண்டு ஜேர்மன் அரசாங்கம் பின்வாங்கக் கூடாது என கேட்ஸ் கேட்டுக்கொண்டார். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவினதும் மற்றும் அதன் கூட்டு நாடுகளின் யுத்த கொள்கைகளுக்கு ஐரோப்பிய மக்கள் செலுத்தவேண்டிய விலையின் ஒரு பகுதியே மார்ச் 2004ல் ஸ்பெயின் தலைநகரிலும் மற்றும் 2005 கோடையில் இலண்டனிலும் நடந்த பயங்கரமான குண்டுவெடிப்புக்களாலான இரத்தம் சிந்திய உயிரிழப்புகளாகும்.

அமெரிக்காவின் ''பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்'' ஐரோப்பாவை எவ்வகையிலும் பாதுகாப்பான சூழலுக்கு கொண்டு வரவில்லை - இதற்கு எதிர்மறையாகவே நடந்துள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தங்களுக்கு எதிரான ஐரோப்பாவின் உள்ள எதிர்ப்பின் அளவிற்கு காரணம் ஐரோப்பிய மக்களில் பெரும் பிரிவினர் இந்த தொடர்பு குறித்து அறிந்திருக்கிறார்கள் என்ற உண்மையின் ஒரு பகுதியாகும்.

முக்கிய யுத்த குற்றங்களால் மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க இராணுவ பின்வாங்கல்களாலும் பாதிக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தின் பிரதிநிதியாக கேட்ஸ் மூனிச்சில் உரையாற்றினார். ஆப்கானிஸ்தானில் தெளிவாக எதிர்ப்புகள் வலுத்துள்ளன. ஐரோப்பிய அரசாங்களின் ஆதரவுக்கான வேண்டுகோளுடனேயே கேட்ஸ் முனீச் வந்தார்.

ஆனால் உண்மை என்னவென்றால், பாதுகாப்பு மாநாட்டில் நேட்டோவில் ஒரு உடைவை அச்சுறுத்தி ஒரு மூர்க்கமான உரையை அவரால் அளிக்க முடிந்ததற்கான காரணம், ஐரோப்பிய அரசாங்கங்களின், குறிப்பாக ஜேர்மனியின் கோழைத்தனத்தை அவர் நன்கு அறிந்திருந்ததாலாகும்.

அமெரிக்க இராணுவ கொள்கைகளின் பேரழிவுமிக்க விளைவுகளுக்கு சவால் விட அல்லது ஒரு நெருக்கடி அறிக்கையை வரையறுக்க எந்த ஐரோப்பிய பிரதிநிதிகளும் இந்த மாநாட்டை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, அட்லாண்டிக்கிற்க்கு இடையிலான இரு பக்கங்களில் உள்ள ஒத்துழைப்பும் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

அதே நேரத்தில், இந்த வசந்த காலத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்கள், குறிப்பாக ஜனநாயகக் கட்சி வெள்ளை மாளிகையினுள் நுழைந்தால், அட்லாண்டிக்கிற்கு இடையிலுள்ள சூழலை மேம்படுத்துமென பல ஐரோப்பிய தலைநகரங்கள் நம்பிக்கை கொண்டுள்ளன.

இதுபோன்ற கற்பனையான நம்பிக்கை, மூனிச்சில் கேட்ஸை அடுத்து பேசிய, அமெரிக்க செனற்றில் யுத்த எதிர்ப்பு "சுயாதீனமான ஜனநாயகவாதியான" ஜோசப் லீபர்மேனால் விளக்கப்பட்டது. புஷ்ஷின் நிர்வாகத்தின் நிலையை மட்டும் கேட்ஸ் பிரதிபலிக்கவில்லை, அவர் "கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அமெரிக்க நிலையை" குறிப்பிடுகிறார் என ஆப்கானிஸ்தான் குறித்து லீபர்மேன் வலியுறுத்தினார். ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களான ஹிலாரி கிளிண்டன் மற்றும் பாரக் ஓபாமா ஆகியோரில் யார் வெற்றி பெற்றாலும் கூட ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அவர் அதே கொள்கையைக் கொண்டிருப்பார் என்பதை ஐரோப்பா உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என லீபர்மான் தெரிவித்தார்.

பனிப்போரை புத்துயிர்ப்பித்தல்

பிரிட்டனைத் தவிர, வேறெந்த ஐரோப்பிய அரசாங்கத்தையும் ஈடுபடுத்தாமல் இருந்தது புஷ்ஷின் யுத்த கொள்கைகளில் உள்ள மிகப் பெரிய தவறுகளில் ஒன்றாகும் என அமெரிக்க ஆளும் மேற்தட்டின் செல்வாக்குள்ள பிரிவுகள் தெளிவாக புரிந்து கொண்டிருக்கின்றன. இதை எதிர்காலத்தில் அடையும் பொருட்டு, ரஷ்யாவுடனான பிரச்சனை தீவிரப்படுத்தப்பட வேண்டும். ரஷ்யா ஐரோப்பாவிற்கு மீண்டும் ஓர் அச்சுறுத்தலாக கருமப்பட்டால், பனிப்போரின் போது இருந்ததுபோன்று, ஐரோப்பிய நேட்டோ கூட்டாளிகள் அமெரிக்காவின் பின்னனியில் ஒன்று திரள்வார்கள் என அமெரிக்கா கணிப்பிடுகின்றது.

முன்னதாக மூனிச் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மெக்கெயின், இந்த கண்ணோட்டத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த மாநாடு தொடங்கப்படுவதற்கு முதல்நாள், "ஒரு பழைய நட்பு" என்ற தலைப்பில் மெக்கெயினால் Süddeutsche Zeitung பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதப்பட்டது. அதில், G-8 நாடுகளில் இருந்து ரஷ்யா தூக்கி எறியப்பட வேண்டும் என்றும், கொசவோவிற்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு மாற்றாக அமெரிக்க தலைமையின் கீழ் "ஜனநாயகவாதிகளின் கழகம்" (league of democracies) ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் அதில் வலியுறுத்துகிறார்.

அவர் மேலும் குறிப்பிடுவதாவது: "ரஷ்யாவை பழிவாங்க ஓர் ஐக்கியப்பட்ட மேற்கத்திய அணுகுமுறை தேவைப்படுகிறது. அதன் தலைவர்கள் மேற்கத்திய ஜனநாயக அமைதி பாதையில் இணைவதை விட ஒரு முன்னைய மோதல்கள் நிறைந்த பாதையில் நடைபோட விரும்புகிறார்கள். G-8 என்பது ஜனநாயகத்தின் முன்னணி சந்தைகளின் அமைப்பாக மாறுவதை உறுதிப்படுத்துவதன் மூலம் நாம் இதை தொடங்க வேண்டும்: அது இந்தியா மற்றும் பிரேசிலை சேர்த்துக் கொள்ள வேண்டும், ஆனால் ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும்."

''ஜனநாயகம் மற்றும் அதன் சட்ட அதிகாரம்'' பின்தங்கி உள்ள நாடுகளுக்கு உதவியாக ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அதன் திட்டங்களின் ''வலிமை மற்றும் ஒருங்கிணைப்பை'' மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் எழுதுகிறார். சான்றாக, ஒரு சர்வாதிகாரம் அதன் ஒடுக்குமுறையைத் தொடரும் ரஷ்யாவில் அல்லது பெலாருஷில், இது போன்ற திட்டங்கள் மிகவும் அவசியமாகும் என அவர் வலியுறுத்துகிறார். "எவ்வாறிருப்பினும், ஜோர்ஜியா, உக்ரேன் மற்றும் பால்கன் நாடுகளின் இடைமருவு ஜனநாயகத்திற்கு உதவுவதும் மிக முக்கியமாகும்." என்றும் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவிலுள்ள மிகவும் பிரபலமான வலதுசாரி கருத்தியல் கொள்கையாளர்களில் ஒருவரான ரொபேர்ட் காகன், அதே பத்திரிகையில் அதற்கடுத்த நாளில் இதை மேலும் தெளிவாக எழுதியிருந்தார். அமெரிக்காவின் புதிய நூற்றாண்டு சிந்தனை குழுவின் நவீன-பழமைவாத திட்டங்களின் ஸ்தாபக உறுப்பினரான அவர், வழக்கமாக Washington Post பத்திரிகைக்கு எழுதி வருகிறார். Süddeutsche Zeitung இதழில் "நூற்றாண்டுகளின் யுத்தம்" எனும் தலைப்பில் எழுதிய அவரின் கட்டுரையைப் பின்வரும் அறிவிப்புடன் அவர் தொடங்குகிறார்: "புவியியல் ரீதியாக பார்க்கும் போது ரஷ்யாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இரண்டும் அருகருகில் இருக்கின்றன, ஆனால் பூகோள-அரசியல் ரீதியாக அவைகள் வெவ்வேறு நூற்றாண்டுகளில் வாழ்கின்றன." என்று குறிப்பிடுகின்றார்.

ஐரோப்பிய ஒன்றியம் பழைய அதிகார அரசியலை விட்டு வெளியே வந்து நாடுகளின் ஒரு நவீன கூட்டமைப்பை உருவாக்க முயலுகையில், ரஷ்யா இன்னும் 19ம் நூற்றாண்டின் பெரும் அதிகார ஆசைகளின் பிடியில் மாட்டிக் கொண்டிருக்கிறது என காகன் குறிப்பிடுகிறார். "ஆனால் 21ம் நூற்றாண்டின் நாடுகளின் கூட்டமைப்பை 19ம் நூற்றாண்டின் ஒரு பெரிய சக்தி எதிர்த்து நின்றால் என்ன நடக்கும்?" என வினவும் காகன், ஐரோப்பிய-ரஷ்ய யுத்தத்திற்கான விபரணங்களையும் வரையறுக்கிறார்.

பின் அவர் முரண்பாடுகளின் காரணங்களை வரையறுக்கிறார்: "கொசோவோ, உக்ரேன் மற்றும் ஜோர்ஜியா ஆகியவைகளுடன் எஸ்தோனியாவிலும் உள்ள அரசியல் நெருக்கடிகளிலும்; எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய்களின் மீதான பிரச்சனைகளிலும்; ரஷ்யா மற்றும் பிரிட்டனுக்கு இடையே கடினமான இராஜாங்க ரீதியான பரிமாற்றத்தினிலும்; பனிப்போரின் முடிவில் இருந்த வரலாற்றில் முன்னொருபோதுமில்லாதவாறு ரஷ்யாவின் இராணுவ பலம் கட்டவிழ்த்து விடப்படல்".

ஆரம்ப நடுக்கங்களால் முன்கூட்டியே வெளிப்படும் ஐரோப்பா-ரஷ்யாவின் முரண்பாடுகள் வெளிப்படையாகவே வெடித்தெழுவது சாத்தியமானது என காகன் எழுதுகின்றார். "நேட்டோவில் இணைய விரும்பும் உக்ரேனின் நெருக்கடி, ரஷ்யாவின் நேரடி விரோதத்திற்கு இட்டு செல்லும். மேலும், ஜோர்ஜியா அரசாங்கத்திற்கும் ரஷ்யாவினால் ஆதரிக்கப்பட்டுள்ள அப்காஜியா மற்றும் தெற்கு ஒடிசியாவில் உள்ள பிரிவினைவாத குழுக்களுக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் திப்லிஸ் மற்றும் மாஸ்கோவிற்கு இடையே ஓர் இராணுவ பிரச்சனையாக வளரலாம்." இதனால் ஒரு பெரிய மோதல் முன் கூட்டியே தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி ஆகியவைகளை கொண்ட பேர்லினிலுள்ள ஜேர்மனியின் பெரிய கூட்டணி அரசாங்கம், அமெரிக்காவினால் அதிகரிக்கப்படும் அழுத்தத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக அடிபணிந்து, அதன் வெளிநாட்டு இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் தொடங்கி இருக்கிறது. இருப்பினும், இந்த முடிவுகளை பொதுமக்களிடம் இருந்து மறைக்க முயன்று வருகிறது. பாதுகாப்பு மந்திரி யுங் அவரின் மறுதரப்பில் இருக்கும் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி கேட்ஸ் மற்றும் நேட்டோ பொது செயலாளர் ஜாப் டி ஹூப் ஸ்கெப்பருடன் இரகசியமாக விவாதித்ததாகவும், ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள 3,500 ஜேர்மன் துருப்புக்களை 4,500 ஆக உயர்த்த ஒப்புக் கொண்டதாகவும், மூனிச் மாநாட்டின் போது, Der Spiegel பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டது.

மேலும், அவர்களின் செயல்பாட்டு பகுதிகளை மேற்கில் விரிவுபடுத்தவும் மற்றும் இலையுதிர்காலத்தில் அவர்களின் உடன்பாட்டினை வழக்கமான 12 மாதங்களில் இருந்து 18 மாதங்களுக்கு உயர்த்தவும் மற்றும் இந்த "பிரச்சனைக்குரிய விடயத்தை" 2009 பாராளுமன்றம் தேர்தலில் கொண்டு வராமல் வைக்கவும் ஒத்துக் கொள்ளப்பட்டது. ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், யுங் "என்னால் எதிர்கால படைப்பிரிவுகளை பற்றி எவ்வித தகவலும் அளிக்க முடியாது என்பதை உங்கள் புரிந்துகொள்ளலை நான் கேட்கிறேன்." என்றார்.