World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பால்கன்

The case of Kosovo: "Self-determination" as an instrument of imperialist policy

கொசோவோ விவகாரம்: ஏகாதிபத்திய கொள்கையின் ஒரு கருவியாக "சுயநிர்ணய உரிமை"

By Peter Schwarz
20 February 2008

Use this version to print | Send this link by email | Email the author

சேர்பியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் கடுமையான எதிர்ப்பிற்கு இடையே அமெரிக்காவும் முக்கிய ஐரோப்பிய சக்திகளும் கொசோவோவிற்கு, ஒருதலைப் பட்சமாக சேர்பியாவில் இருந்து பிரிந்து செல்வதற்காக கொடுத்துள்ள ஆதரவானது, சர்வதேச அரசியலில் ஒரு திருப்புமுனையை குறிக்கிறது.

இந்த நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவின் அனுமதியின்றி, 1999ல் அமெரிக்க,நேட்டோ வான்வழித் தாக்குதல்களை சேர்பியாமீது நடத்தியதை அடுத்து இயற்றப்பட்ட ஐ.நா. தீர்மானங்களுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ளது. இதனை ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள பிரிவினை இயக்கங்கள் (ஏகாதிபத்திய சக்திகளின் தேவைக்கு ஏற்ப) தமக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளப்படலாம் என்ற முன்னோடியை கொடுக்கிறது; இது சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு கவலையை கொடுத்துள்ளது; அவை ஒரு சுதந்திர கொசோவோவிற்கு அங்கீகாரம் கொடுக்க மறுத்துள்ளன; இதில் ஸ்பெயின் (பாஸ்க் பகுதியில் இதன் தாக்கம் வரும் என்று அஞ்சுகிறது), கிரேக்கம் (இன்னும் கூடுதலான வகையில் சைப்ரசிற்கு வடக்கே சுதந்திர துருக்கிய நாடு என்ற அச்சுறுத்துல் அதிகரிக்கக்கூடும் எனக் கருதுகிறது) ஆகியவை அடங்கியுள்ளன.

புஷ் நிர்வாகமும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தக் கவலைகளை கடக்கும் வகையில் கொசோசவோ ஒரு "பிரத்தியேகத் தன்மையுடைய" ("sui generis'') விவகாரம், அதாவது அரசியல், வரலாற்றளவில் பிரத்தியேகத்தன்மை கொண்டு மற்றவற்றிற்கு முன்னோடியாக இருக்க முடியாது என்று கூற முற்படுகின்றன. ஆனால் இவை இந்த நிலைப்பாட்டிற்கு ஆதாரம் கொடுக்க முடியவில்லை; அது ஒரு வெற்றுக் கூற்றாகத்தான் உள்ளது.

ஐரோப்பிய வெளியுறவு மந்திரிகள் பிரஸ்ஸல்ஸில் திங்களன்று கூடி, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸின் கருத்துக்களை எதிரொலிக்கும் வகையில் அல்பேனிய கொசோவா மக்கள் பிரத்தியேகமானவர்கள், வேறு எந்த விதத்திலும் உள்ளூர் மக்கட்பிரிவினரும் இந்த அளவிற்கு மிருகத்தனமான முறையில் அதன் உரிமைகளை இழக்கவில்லை என்று அறிவித்தனர்; இந்தக் கூற்று மிருகத்தனமான முறையில் அடக்கப்பட்ட அமெரிக்க பழங்குடி மக்கள் உட்பட பல இனவழிச் சிறுபான்மையினரை எடுத்துக்காட்டி நிராகரிக்கப்பட முடியும்.

உண்மையில், 1999 ஆரம்பத்தில் அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆகியவை சேர்பிய துருப்புக்கள் மற்றும் குடிப்படையினரால் நூறாயிரக்கணக்கான கொசோவோ மக்கள் கொல்லப்பட்டனர் என்ற போருக்கு முந்தைய கூற்றுக்கள், மூன்றுமாத வான்வழித் தாக்குதலுக்கு பின்னர் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டவை என்று அம்பலப்படுத்தப்பட்டன. தங்கள் பங்கிற்கு அமெரிக்கா மற்றும் நேட்டோவினால் இருத்தப்பட்ட கொசோவோவில் இருந்த ஆட்சியாளர்கள், அம்மாநிலத்தில் இருக்கும் சேர்பிய சிறுபான்மையினர் மீது நடத்திய தாக்குதல், பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஸ்லோபோடன் மிலோசெவிக் ஆட்சி இனவழி அல்பேனியர்கள் மீது நடத்திய தாக்குதலின் மிருகத்தன்மையைவிடக் குறைவாக இருக்கவில்லை.

அமெரிக்க மற்றும் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற ஐரோப்பிய சக்திகள் ஒரு சுதந்திர கொசோவோவிற்கு ஆதரவு கொடுப்பதை நியாயப்படுத்தல் பெல்கிரேட் மற்றும் மாஸ்கோ இரண்டும் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்று விலகிச்சென்றுவிட்டதுதான் என்ற புகாருடன் தொடர்கிறது. எனவே கொசோவோ மக்களின் விருப்பமான தேசிய விடுதலையை அங்கீகரிப்பது தவிர்க்க முடியாதது என விவாதம் செல்கின்றது.

உண்மையில், மேலை ஏகாதிபத்திய சக்திகள், முன்னாள் யூகோஸ்லேவியா மீது தங்கள் சொந்த நலன்களை பெருக்கிக் கொள்ளுவதற்காக வேண்டுமென்ற இனவழிப் மோதல்களை தூண்டிவிட்டன. கொசோவோவின் நிலைமை முக்கியமாக அவர்களின் சொந்த கொள்கைகளின் விளைவுதான்.

1991 ம் ஆண்டு ஜேர்மனி யூகோஸ்லாவிய நாட்டை இரத்தம் தோய்ந்த வகையில் உடைப்பதை தூண்டிவிடும் வகையில் ஸ்லோவேனியா, குரோஷியா ஆகியவற்றின் சுதந்திரத்திற்கு ஆதரவும் ஒப்புதலும் கொடுத்தது. அமெரிக்கா இதைப் பின்தொடர்ந்து பொஸ்னியா, ஹெர்சிகோவினா ஆகியவற்றின் சுதந்திரத்தை வலிந்து செயற்படுத்தியது. இதன் விளைவு பொஸ்னியாவில் ஒரு நான்கு ஆண்டு காலப் போர் ஆகும்; இதில் பெருத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டது; அதைத் தொடர்ந்து பெரிய சக்திகள் தங்களின் சொந்த படைகளுடன் தலையிட்டன.

இறுதியில், நேட்டோ தான் உருவாக்கிய கொசோவோ சுதந்திர இயக்கத்தை பயன்படுத்தி சேர்பியாவிற்கு எதிராக நடவடிக்கைக்கு முயன்றது. 1999ல் Rambouillet ல் நடந்த "சமாதான" மாநாட்டில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மாடலின் ஆல்பிரைட் சேர்பிய அரசாங்கத்திற்கு அது ஏற்கமுடியாத இறுதி எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். சேர்பிய அரசாங்கம் அதை நிராகரித்தபோது, நேட்டோ இராணுவத் தாக்குதலுடன் எதிர்கொண்டது.

அந்த நேரத்தில் ஆல்பிரைட்டும் அவருடைய சக வெளிநாட்டு மந்திரிகளான ஜேர்மனியின் ஜோஸ்கா பிஷ்ஷர் மற்றும் கிரேட் பிரிட்டனின் ரொபின் குக்கும் தற்போதைய கொசோவோவின் பிரதம மந்திரி ஹாசிம் தாசியின் தலைமையில் கீழ் இருந்த கொசோவோ விடுதலை இராணுவத்தை (KLA) நம்பினர். ஒரு ஆண்டுக்கு முன்னர்தான் அமெரிக்க அரசாங்கம் கொசோவோ விடுதலை இராணுவத்தை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்திருந்த போதிலும் இந்த நிலைமை ஏற்பட்டது. ஹாசிம் தாசி பாதுகாப்புப் படைகள் மீது நடத்திய தாக்குதலுக்காக சேர்பிய அதிகாரிகளால் தேடப்பட்டுவந்தவர்; இவர் தன்னுடைய இயக்கத்திலேயே பல எதிர்ப்பாளர்களை கொலைசெய்துவிட்டதாக சந்தேகிக்கப்படுவதுடன், போதைப் பொருள் குற்றக் கும்பலுடன் நட்புறவு கொண்டிருப்பதாக கருதப்படுபவர்.

1999 போர் முடிந்த பின், கொசோவோ ஐ.நா. நிர்வாகத்தின் கீழ் வந்தது; அதாவது போரை தொடக்கிய நாடுகளின் இராணுவ, அரசியல் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. முதல் 1999ல் இருந்து 2001ல் வரை ஐ.நா.நிர்வாகியாக இருந்தவர் பேர்னார்ட் குஷ்நெர் ஆவார். இப்பொழுது பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் என்ற முறையில் கொசோவோ குடியரசிற்கு இராஜதந்திர அங்கீகாரம் கொடுத்த முதல் நபர்களில் ஒருவர் ஆவார்.

ஐக்கிய நாடுகள் நிர்வாகம், தீவிர தேசியவாதிகளுக்கு தடையற்ற சுதந்திரத்தை கொடுத்தது. அண்மையில் சர்வதேச மன்னிப்பு சபையால் (Amnesty International) வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று பெரும் இழிந்த முறையிலான இருப்புநிலை குறிப்பை வழங்குகிறது; "ஐக்கிய நாடுகள் பணிக்குழு பொதுமான அளவு விசாரணை நடத்தவில்லை அல்லது கொலைகள், கற்பழிப்புக்கள், கடத்தல்கள், வெளியேற்றங்கள் போன்றவற்றை முற்றிலும் விசாரிக்கத் தவறிவிட்டது" என்று மன்னிப்பு சபையின் கொசோவோ பிரிவு வல்லுனர் Jan Digel எழுதியுள்ளார்.

புடாபெஸ்ட்டில் இருக்கும் ஐரோப்பிய ரோமாக்களின் உரிமை நிலையம்(European Roma Rights Centre) எழுதிள்ளபடி, கொசோவோவில் வசிக்கும் 120,000 ரோமா மற்றும் அஷ்கலிகள் மக்கள் நேட்டோ குண்டு வீச்சு தாக்குதலை தொடர்ந்து அம்மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இது மிக விரிவான முறையில் ரோமாக்களை இரண்டாம் உலகப் போருக்குப் பின் இனரீதியாக சுத்திகரிப்பு செய்துஅழித்த செயலாகும். பல ஆயிரக்கணக்கான சேர்பியர்களும் கூட கொசோவோவில் இருந்து வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்; எஞ்சியிருந்த 120,000 பேர்தான் தனிமைப்படுத்தப்பட்ட சேர்பிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

பிரிஸ்டினாவில் இருக்கும் அரசாங்கம் இப்பொழுது சிறுபான்மை உரிமைகளை மதிப்பதாக கூறினாலும் --இதில் துருக்கியர்கள், போஸ்ன்ஜாக்குகள் மற்றும் சேர்பிய, ரோமாவினரின் சிறு குழுக்களுடன் மற்றவர்களும் உள்ளனர் -- மாநிலத்தில் இருக்கும் தேசிய சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களில் குறைவு ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை.

கடந்த ஞாயிறன்று வந்த சுதந்திர அறிவிப்பு அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகியவை அடங்கியிருந்த Contact Group என்று அழைக்கப்படும் குழுவின் நெருக்கமான ஒத்துழைப்புடன் வந்தது. இது ஒரு நீண்ட காலமாக தயாரிக்கப்பட்டதாகும்.

ஏற்கனவே ஓராண்டிற்கு முன்பு முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி மார்ட்டி அஹிடிசாரி சுதந்திரத்திற்கு ஒரு திட்டத்தை அளித்தார்; சேர்பியா, மற்றும் ரஷ்யாவில் இருந்து இது கடுமையான எதிர்ப்பை பெற்றது. அஹிடிசாரியின் திட்டம் அப்பொழுது நிராகரிக்கப்பட்டாலும், அதுதான் சுதந்திரத்திற்கு வடிவமைப்பு, ஒரு கால அட்டவணை ஆகியவற்றை அளிக்க உதவியுள்ளது. சுதந்திரத்திற்கான தேதி உட்பட இந்த நிகழ்போக்கிற்கான ஒவ்வொரு நடவடிக்கையும் கொசோவோ பிரதம மந்திரி தாசி மற்றும் Contact Group இற்கும் இடையில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

கொசோவோ குடியரசு என வெளிவந்துள்ளது பொருளாதாரரீதியிலோ அல்லது அரசியல்ரீதியிலோ சாத்தியமான தன்மை கொண்டது அல்ல; இது பெரிய சக்திகளால் நிறுவப்பட்டுள்ள அவர்களின் ஆளுமைக்குட்பட்ட ஒரு பகுதியை தவிர வேறொன்றுமில்லை. சுதந்திரத்திற்கான தயாரிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் 2,000 போலீசார், நீதிபதிகள், சிறை அதிகாரிகள், சுங்க அதிகாரிகள் என்ற தொகுப்பைத் தயாரித்திருந்தது; இது கிட்டத்தட்ட 1,000 உள்ளூர் அதிகாரிகள் உதவியுடன் நிர்வாகத்தை நடத்தும். Eulex என அழைக்கப்படும் பணிக்குழு பிரான்சின் நான்கு நட்சத்திரத் தளபதி Yves de Kermabon கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது; இவருக்கு பல ஆண்டுகள் ஆபிரிக்கா, பால்கன் பகுதிகளில் இராணுவப் பணிபுரிந்த அனுபவம் உண்டு. Eulex பணிக்குழு ஏற்கனவே கொசோவோவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 16,000 துருப்புகளினால் ஆதரிக்கப்பட இருக்கிறது.

கொசோவோவில் சமூக நிலைமை பேரழிவு தரக்கூடிய வகையில் உள்ளது. 2 மில்லியன் மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் வேலையற்றவர்கள்; ஒவ்வொரு ஆண்டும் இல்லாத வேலைகளைத் தேடி 30,000 இளைஞர்கள் புதிதாக வருகின்றனர். மக்களில் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேலானவர்கள் நாள் ஒன்றிற்கு 1.50 யூரோவிற்கும் குறைவானதில் வாழ்க்கை நடத்துகின்றனர். சராசரி ஊதியம் மாதம் ஒன்றிற்கு 220 யூரோக்களாக(கிட்டத்தட்ட $320) உள்ளது.

பால்கன் பகுதிகள் மீதான கட்டுப்பாடு என்பது அமெரிக்க ஐரோப்பிய சக்திகளுக்கு மூலோபாய வகையில் பெரும் முக்கியத்துவம் உடையது; இந்தக் கட்டுப்பாட்டிற்கு முக்கிய முன்நிபந்தனை யூகோஸ்லாவியாவை தகர்த்தல் ஆகும்; அதுதான் இப்பொழுது கொசோவோ சுதந்திரத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்கா அதன் ஐரோப்பிய மண்ணில் இருக்கும் மிகப் பெரிய இராணுவதளங்கள் ஒன்றை கொசோவோவில் நிறுவியுள்ளது. Urosevac க்கு அருகில் இருக்கும் Bondsteel என்ற இடத்தில் இது உள்ளது. Bondsteel முகாம் பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை கடத்திச் சித்திரவதை செய்வதற்கு தொடர்புடைய தளங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. பால்கன், மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் வாஷிங்டனுடைய இராணுவத் தளங்கள் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கு மண்டலங்களில் ஊடுருவுவதன் மூலம் ரஷ்யாவை சுற்றி வளையம் அமைக்கும் அமெரிக்க மூலோபாயத்தின் ஒரு பகுதி ஆகும். அதே நேரத்தில் இவை ஐரோப்பாவில் அமெரிக்கச் செல்வாக்கை வலிமைப்படுத்தவும் உதவும்.

ஐரோப்பிய சக்திகள், எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனி, பால்கன்களில் தங்கள் தலையீடு ஐரோப்பாவில் தம் செல்வாக்கை பெருக்கிக் கொள்ள முக்கியமானது என்று கருதுகின்றன. ஐரோப்பாவின் "கொல்லைப் புறத்தில் அமெரிக்கா இத்தகைய முக்கிய பங்கை கொள்ள முடிந்தது ஐரோப்பிய செய்தி ஊடகத்தால் இது கண்டத்தின் இயலாமையின் வலிகொடுக்கும் நிரூபணம் என்று கருதப்படுகிறது.

கொசோவோ மற்றும் பால்கன் பகுதிகள் முழுவதுமே கருங்கடலை அடைய முக்கிய வழியாக உள்ளன; காஸ்பியன் பகுதியில் இருக்கும் ஆற்றல் அளிப்புக்களை அடையவும் இவை முக்கியமானவை ஆகும். தற்போது போட்டியிடும் எரிவாயு, எண்ணெய் குழாய்கள் கட்டுமானத் திட்டங்கள் உள்ளன; அவற்றில் கொசோவோ ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. மேலும் கொசோவோவிலேயே தங்கம், ஈயம், தகரம் மற்றும் பழுப்பு நிலக்கரி ஆகியவற்றைக் கொண்ட வளங்கள் உள்ளன.

தங்களுடைய நலன்களை இரக்கமற்ற வகையில் தொடர்வதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கூறுபாடுகளை தூக்கி எறிந்துள்ளன.

சர்வதேச ஒழுங்கில் இதன் தாக்கங்கள் பற்றிய ஒரு ஆய்வில், பிரிட்டிஷ் கார்டியன் (பெப்ருவரி 19 பதிப்பு), "கொசோவோ சுதந்திரத்தை அங்கீகரித்தமை என்பது இன்னும் கூடுதலான வகையில் சர்வதேச அமைப்புமுறையின் இரண்டு அடிப்படை தூண்களான இறைமையின் சமத்துவம் மற்றும் எல்லைகள் மீறப்படக்கூடாது ஆகியவற்றை மேலும் அரித்தலுக்கு துணை நிற்கும்."

இக்கட்டுரை மிலோசெவிக்கின் கீழ் சேர்பியாவில் நடந்த மனித உரிமைகள் தாக்குதல் தற்போதைய சுதந்திரத்தை நியாயப்படுத்தும் வகையில் இருக்கிறது என்ற கூற்றை மறுக்கிறது; ஏனெனில் "முதலில் இது சேர்பியர்கள் மற்றும் அல்பேனியர்கள் அல்லாதவர்கள்மீது 1999ல் இருந்து நடத்தப்படும் கணக்கிலடங்கா மனித உரிமைகள் மீறலை அசட்டை செய்கிறது; குறிப்பாக 2004 மார்ச்சில் நடந்த வன்முறை வெடிப்புக்களை." மேலும், "இரண்டாவதாக, கணிசமான தன்னாட்சி தீர்வுகள் போன்றவற்றை சுதந்திரத்திற்கு மாற்றீடானவை என்று கொள்ளப்பட்டால். கொசோவோ சுதந்திரத்திற்கு நியாயப்படுத்திக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல் மீண்டும் வராது என்று சொல்வதற்கு இல்லை."

இன்னும் ஆபத்தான வகையில் கார்டியன் கருத்தின்படி, "சர்வதேச நிர்வாகத்தின் கீழ் 1999ல் இருந்து இருக்கும் சேர்பியாவின் கொசோவோ மீதான ஆக்கபூர்வ கட்டுப்பாட்டின் இழப்பு, மாநிலத்தின் மீதான இறைமையின் இழப்பிற்கு ஒப்பாகும்" என்று கூறும் வாதம் உள்ளது; இது ஆபத்தானது.

"இந்த முன்னோடியை ஏற்பது இதேபோன்ற சமாதான முயற்சிகிளை மேற்கொள்ளும் நாடுகளில் ஆபத்தான தாக்கங்களை கொள்ளும்; அவை பெருகிய முறையில் பணிக் குழுக்களுக்கு ஒப்புதல் கொடுப்பதில் எச்சரிக்கையாக இருக்கும்; ஏனெனில் இது பின்னர் அவற்றின் பகுதியின் மீதே செயற்திறன்மிக்கவகையில் கட்டுப்பாட்டை இழப்பதற்கு வகை செய்துவிடும்."

"மேலும், ஐக்கிய நாடுகள் பணிக்குழு இங்கு இருப்பது என்பது நேட்டோ சட்டவிரோத வகையில் வலிமையை பயன்படுத்தியதில் இருந்து விளைந்தது; எல்லைகள் மாற்றம் இத்தகைய செயற்திறன்மிக்கவகையில் கட்டுப்பாட்டு இழப்பின் மூலம் ஏற்படுத்துவது என்பது நியாப்படுத்தப்பட்டால், இராணுவ வலிமையை ஒட்டி, இது வெளிப்படையாக ஐ.நா. வரைவுகளில் சட்டவிரோதமாக்கப்பட்டது என்றது அறியப்பட வேண்டும்; போருக்குப் பிந்தைய காலம் முழுவதும் சர்வதேச சமூகம் இதற்கு ஒப்புதல் கொடுத்ததில்லை" என்று கார்டியன் மேலும் கூறியுள்ளது.

கட்டுரை முடிவுரையாக கூறுகிறது: "இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்தும் முக்கிய கொள்கைவழிகளை ஒதுக்கி வைத்தல் என்பது கொசோவோ சுதந்திரத்திற்கு அங்கீகாரம் கொடுப்பதின் மூலம் ஆபத்தான முன்னோடி ஆகிறது. இறைமைச் சமத்துவம் மற்றும் எல்லைகள் மீறக்கூடாது என்ற கொள்கைகள் இரண்டையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவது என்பது சர்வதேச சட்டம் மற்றும் அரசியலுக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாட்டை சரிவடையச் செய்யும்; இதையொட்டி உலக சமாதானம், பாதுகாப்பு ஆகியவற்றிற்கு தீமை பயக்கும் தாக்கங்கள் ஏற்படும்."

ரஷ்யா மற்றும் சேர்பியா இரண்டும் கோசோவோ சுதந்திரம் பற்றிய அறிக்கையை கடுமையான எச்சரிக்கைகளுடன் எதிர்கொண்டுள்ளன.

சேர்பியா கொசோவோ மீது பொருளாதாரத் தடைகளை சுமத்துவதாக அச்சுறுத்தியுள்ளது; தன்னுடைய வருடாந்த செய்தியாளர் கூட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின்மீது தாக்குதலை அறிவித்தார்: "அரசியல் தேவைக்கு ஏற்ற வகையில் கொள்கைகளை தொடர்வது என்பவற்றை சில நாடுகள் தொடருமேயாயின், தனிப்பட்ட நாடுகளின் நலன்களுக்காக செய்யுமே ஆனால், சர்வதேசச் சட்டம் மற்றும் உலக ஒழுங்கு என்பவை அழிக்கப்பட்டுவிடும்."

அதே நேரத்தில், போலந்து மற்றும் செக் குடியரசில் அமெரிக்கா ஏவுகணை பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தினாலோ, உக்ரைன் நேட்டோவில் சேர்ந்தாலோ, ரஷ்ய அணுசக்தி ஏவுகணைத்திட்டங்கள் ஐரோப்பாவின் பக்கம் திரும்பும் என்றும் அவர் அச்சுறுத்தினார்.