World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

ISSE demonstrates in New York to demand release of jailed Iranian students

கைது செய்யப்பட்ட ஈரானிய மாணவர்களை விடுவிக்க கோரி சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு நியூயோர்க்கில் ஆர்பாட்டம் நடத்துகிறது

By Bill Van Auken
18 February 2008

Use this version to print | Send this link by email | Email the author

பெப்ரவரி 16 சனியன்று, நாற்பதுக்கும் மேலான இடதுசாரி மாணவர்களை கைது செய்த ஈரானிய அரசாங்கத்தை எதிர்த்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு ஓர் ஆர்பாட்டத்தை நடத்தியது.

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஈரானிய மாணவர்களின் ஒரு குழுவுடன் இணைந்து சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், மன்ஹாட்டன் நகரின் மையத்தில் உள்ள அமெரிக்காவிற்கான ஈரானிய இஸ்லாமிக் குடியரசு அமைப்புக்கு வெளியே பேரணி நடத்தினர். கைது நடவடிக்கையை கண்டித்து பதாகைகளை ஏந்திச் சென்ற ஆர்பாட்டக்காரர்கள், ஈரானிய அரசாங்கத்தால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களின் புகைப்படங்கள் ஒட்டிய அட்டைகளையும் கொண்டிருந்தனர். இந்த மாணவர்கள் ஒரு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை உருவாக்கி, மன்ஹாட்டனில் உள்ள Third Ave அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு முன்பாக, "ஈரானிய மாணவர்களை விடுதலை செய், ஈரானுக்கு எதிரான யுத்தம் வேண்டாம்" என உரக்க சத்தமிட்டுக் கொண்டிருந்தனர்.

ஆர்பாட்டத்திற்கு பின்னர், சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பும் ஒரு கூட்டத்தை நடத்தியது, அதில் ஈரான் மற்றும் அமெரிக்காவிலுள்ள தற்போதைய அரசியல் நிலை, ஈரானிய மாணவர் அமைப்பின் முன்னேற்றத்திற்கான அரசியல் பிரச்சனைகள் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டம் ஆகியவை குறித்த ஒரு ஆர்வமிக்க விவாதம் நடந்தது.

சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கான மாணவர் குழுவின் ஒரு பிரிவினரான ஈரானில் கைது செய்யப்பட்டவர்கள் தீவிர இடதுசாரி என்றும் அழைக்கப்படுகின்றனர். டிசம்பரில், அமெரிக்காவின் யுத்த திட்டங்களை நிராகரிக்கவும், அத்துடன் ஈரானிய அரசாங்கத்தின் அனைத்து பிரிவுகளை எதிர்க்கவும் இந்த குழு சுயாதீனமான ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த ஆர்பாட்டத்திற்கு பின்னர் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டதுடன், ஜனவரி 15ல் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சில மாணவர்கள் பிணையில் வெளியில் விடப்பட்டனர், ஆனால் மற்றையவர்கள் 100,000 டாலர் வரையிலான மிக உயர்ந்த பிணைத்தொகையை செலுத்த முடியாமல் உள்ளனர். குற்றம்சாட்டப்பட்டுள்ள அக்குழுவின் தலைவர்கள் உட்பட, மற்ற மாணவர்களை விடுதலை செய்ய மறுக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியில் உள்ள அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனும் எவ்வித தொடர்பும் இன்றி வைக்கப்பட்டுள்ளனர். தொலைக்காட்சியில் ஒத்துக்கொள்ளச் செய்வதை காட்டுவதற்காக, குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி இந்த கைதிகள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என தாங்கள் சந்தேகிப்பதாக சில மாணவர்கள் கூறி இருக்கிறார்கள். (பார்வையிடவும்: "Iranian government intensifies crackdown on left-wing opposition")

சனியன்று நடந்த போராட்டத்தில், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான ஜோ கே ஆர்ப்பாட்டக்காரர்களின் முன்னிலையில் உரையாற்றும் போது, கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை உடனடியாக விடுவிக்க கோரி ஈரானிய ஜனாதிபதி முஹ்ம்மது அஹ்மதினிஜாதுக்கு எழுதப்பட்ட கடிதத்தை படித்துக் காட்டினார். நமது வாசகர்களால் அனுப்பப்பட்ட பிற கடிதங்களுடன் இந்த கடிதத்தையும் சேர்த்து சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு ஈரானிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் அளிக்கும். அமெரிக்காவில் உள்ள ஈரானிய நலன்கள் பிரிவுக்கு, requests@daftar.org எனும் மின்னஞ்சலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு கடிதங்களை அனுப்புமாறு உலக சோசலிச வலைத்தளம் அதன் வாசகர்களை கேட்டுக் கொள்கிறது. தயவுசெய்து உலக சோசலிச வலைத் தளத்திற்கும் அதன் ஒரு நகலை அனுப்பவும்.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பின் ஆர்பாட்டம் குறித்த ஒரு முழுமையான அறிக்கையை உலக சோசலிச வலைத் தளத்தில் விரைவில் நாங்கள் வெளியிடுவோம்.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பின் கடிதத்திலுள்ள செய்திகள் பின்வருமாறு:

ஜனாதிபதி மஹ்மது அஜ்மதினிஜாத்

முன்னனி தலைவர் அயாதொல்லாஹ் அலி ஹாமினி

ஜனாதிபதி அஜ்மதினிஜாத் மற்றும் அயாதொல்லாஹ் காமினி:

தற்போது ஈரானிய அரசாங்கத்தால் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆஜாதி பாராபரி (சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கான மாணவர்கள் அமைப்பு) குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் உடனடியாக விடுவிக்க கோரி நாங்கள் இந்த கடிதத்தை எழுதுகிறோம். இந்த மாணவர்களின் மீதான குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட வேண்டும். அமெரிக்காவின் யுத்த திட்டங்களுக்கும், உங்கள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் எதிராக நியாயமான முறையில் போராடியதை தவிர இவர்கள் வேறெந்த குற்றமும் செய்யவில்லை. விடுவிக்கப்பட்ட மாணவர்களுக்கு போராடுவதற்கும், வளாகங்களில் வெளிப்படையாக தங்களின் அரசியல் கருத்துக்களை எடுத்துரைப்பதற்குமான உரிமை வழங்கப்பட வேண்டும்.

கைது செய்யப்பட்ட அந்த மாணவர்களின் ஒரு பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அல்லர், ஆனால் நாங்கள் சர்வதேச அளவிலுள்ள மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் இணைந்து அவர்களின் மீதான நடவடிக்கைகளை கவனமாக கவனித்து வருகிறோம். அவர்கள் விடுவிக்கப்படும் வரையிலும் மற்றும் அவர்கள் மீதான நியாயமற்ற குற்றச்சாட்டுக்கள் முடியும் வரையிலும் நாங்கள் அவர்களின் பிரச்சனைகளை தொடர்ந்து கவனிப்பதுடன் பகிரங்கப்படுத்தவும் செய்வோம்.

இந்த மாணவர்கள் உடலியல் மற்றும் உளவியல்ரீதியான விசாரணையில் சொல்ல முடியாத வடிவங்களில் சித்திரவதைப்படுத்தபடுவதாக செய்திகள் மூலம் நாங்கள் அறிந்தோம். தொலைக்காட்சி காமிராக்கள் முன்பாக செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள அவர்கள் நிர்பந்திக்கப்படலாம்.

இந்த முறைகள் ஷா ஆட்சியின் கொடுமைகளை மீண்டும் ஞாபகப்படுத்துகின்றது. 1953 இல் அப்போதைய அமெரிக்க துணை ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனின் வருகையின் போது ஷாவால் கொல்லப்பட்ட நான்கு மாணவர்களின் நினைவுநாளை மாணவர்கள் தினம் என குறிப்பிட்டு, டிசம்பரில் நடந்த ஓர் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, மாணவர்கள் மீதான முதல் கைது நடவடிக்கை நடந்தது குறிப்பிடத்தக்கதாகும். அமெரிக்க ஆதரவுடனான சதியில் முஹம்மது மொசதேக்கின் அரசாங்கத்தை தூக்கி எறிந்த சில காலத்திற்குப் பின்னர் இந்த படுகொலை நடந்தது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க அரசாங்கத்தின் கடந்த கால மற்றும் தற்போதைய யுத்தம் நாடும் கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்காவிலும் மற்றும் உலகளவிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் சார்பாக சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு குரல் கொடுக்கிறது. உங்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். அவர்கள் மீதான கைது நடவடிக்கை அப்பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் யுத்தத்திற்கு எதிரான போராட்டத்தையே பாதிக்கச் செய்யும்.

இந்த தைரியமான மாணவர்கள் மீதான உங்களின் கைது நடவடிக்கை மற்றும் தவறான செயல்பாடுகளானது, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மீதான ஒரு வன்மையான தாக்குதலாகும். ஈரானுக்கு எதிராக ஒரு தாக்குதலுக்கான திட்டங்களை நியாயப்படுத்த ஏகாதிபத்திய இராணுவவாதிகள் உங்கள் அரசாங்கத்தால் செய்யப்படும் அநியாயத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்வதால், இது அவர்களின் கரங்களுக்கு உதவி செய்கிறது.

பின்வரும் மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் மற்றும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை கைவிடவும் நாங்கள் மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறோம்:

அமின் காஜய், பிஜன் ஷபாஹ், செளரஷ் தஸ்தெஸ்தானி, அனாஹிடா ஹோசினி, மொர்டிஜா எஸ்லாஹ்சி, பிடா சமிமிஜாத், பெஹ்ஜத் பாஹ்ரி, மோர்தெஜா கேட்மட்லூ, செளரஷ் சபெட், மொஹமது பெளரப்தொல்லாஹ், மொஹமது ஜிராடி, பர்ஜத் ஹசன்ஜாதெஹ், சயத் ஹபீபி, பேமன் பிரன், மெஹதி ஜரைலூ, நடேர் எஹ்சானி, பெஹ்ரூஜ் கரிமிஜதெஹ், அலி சலீம், அலி கொலி, அபெட் தாவன்செஹ், சாத்ரா பிர்ஹயாதி, சையத் அக்ஹாமாலி, கேவன் அமீரி எல்யாசி, ஹாடி சதாரி, அமீர் அக்ஹாய், செளரஷ் ஹசீம்பூர், மெஹ்தி அல்லாஹ்யாரி, மஜீத் அஷ்ரப்னிஜாத், ரேஜா அரப், மொஹம்மத் சலேஹ் அபோமன், செளரப் கரிமி, பர்ஷித் தோஸ்திபூர், ஜாவத் அலிஜாதேஹ், அனுஷேஹ் ஆஜாத்பார், இனாஜ் ஜாம்ஷீதி, ரூஜ்பெஹ் ஷாப்ஷெகன், ரூஜ்பெஹன் அமீரி, பர்ஷித் பர்ஹாதி அஹன்கரன், மிலத் ஓம்ராணி, மொஹ்சென் காமின், நாசிம் சொல்தான்பீகி, அமீர்ஹோசன் மெஹர்ஜத், மஹ்சா மொஹபி, சையத் அகாஹானி, ஒடாஹ்னி ஹோசைனி, அராஷ் பக்ஜத்.