World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பால்கன்

Deep divisions in Europe over Kosovo independence

கொசோவோ சுதந்திரம் பற்றி ஐரோப்பாவில் ஆழ்ந்த பிளவுகள்

By Stefan Steinberg
19 February 2008

Use this version to print | Send this link by email | Email the author

பிரஸல்ஸில் திங்களன்று கூறிய ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில், ஞாயிறன்று கொசோவோ பிரதம மந்திரியின் சுதந்திரம் பற்றிய அறிவிப்பு தொடர்பான ஆழ்ந்த பிளவுகள் காரணமாக ஒரு ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை அடைவதற்கு முடியாத நிலைதான் ஏற்பட்டது.

ஒரு சுதந்திரமான கொசோவோவை தான் அங்கீகரிக்காது என்று இந்த அறிவிப்பிற்கு முன்னரே ஸ்பெயின் கூறிவிட்டது; திங்களன்று ஸ்பெயின் வெளியுறவு மந்திரியான Miguel Angel Moratinos செய்தி ஊடகத்திடம் "ஸ்பெயின் அரசாங்கம் இந்த ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்கு அங்கீகாரம் தராது." என வலியுறுத்திக் கூறினார்.

கொசோவோவின் சுதந்திரத்தை பகிரங்கமாக எதிர்க்கும் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கிரேக்கம், சைப்ரஸ், ஸ்லோவாக்கியா, போர்த்துகல், மால்டா, பல்கேரியா, ருமேனியா மற்றும் சேர்பியா ஆகியவை அடங்கியுள்ளன. இதில் சேர்பியா புதிய சிறு நாட்டிற்கு தன்னுடைய பகுதிகளில் பலவற்றை இழக்கும் நிலையில் உள்ளது. இதன் பொருள் குறைந்தது ஒன்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அதாவது மூன்றில் ஒரு பகுதி நாடுகள், தாங்கள் கொசோவோவிற்கு அங்கீகாரம் வழங்கவில்லை என்பதை தெளிவாக்கியுள்ளன.

ஆனால், மறுபுறத்தில் முக்கிய ஐரோப்பிய நாடுகள் பிரிஸ்டினாவுடன் தங்கள் ஒற்றுமையை விரைவாக வெளிப்படுத்தின. கொசோவோவை அங்கீகாரம் செய்யும் முயற்சி பிரெஞ்சு வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெரால் மேற்கோள்ளப்பட்டது; திங்களன்று அவர் அறிவித்ததாவது: "கொசோவோவிற்கு நாங்கள் அங்கீகாரம் கொடுக்க விரும்புகிறோம்." பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஏற்கனவே கொசோவோவின் ஜனாதிபதிக்கு பிரான்சின் முடிவு பற்றி கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய சிறு நாட்டிற்கு பிரான்ஸ் கொடுத்துள்ள அங்கீகாரத்தை தொடர்ந்து பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி டேவிட் மிலிபாண்ட் மற்றும் ஜேர்மனியின் வெளியுறவு மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் ஆகியோருடைய அறிக்கைகள் வெளிவந்தன; அவர்கள் தங்களுடைய அரசாங்கங்களும் கொசோவோவை அங்கீகரிப்பதாக நிருபர்களிடம் கூறினர். இத்தாலியும் புதிய நாட்டை அங்கீகரிக்கும் திட்டத்தை கொண்டிருப்பதாக கூறியது.

கொசோவோ சுதந்திரம் பற்றிய விவாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் உறுப்பு நாடுகள் உடன்காண்பதற்கு தந்திரம் செய்துள்ளனர். ஞாயிறன்று பிரகடனம் செய்யப்பட்ட கொசோவோ பாராளுமன்றம் சுதந்திர அறிக்கையை நேட்டோ படைகளால் 1999ல் சேர்பியா பாரிய குண்டுவீச்சுக்குள்ளான பின்னர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவால் ஜூன் 1999ல் இயற்றிய எண்.1244 இன்படி கொசோவோ மானில ஆட்சி பற்றிய தீர்மானத்தை மீறும் வகையில் இருப்பதாக சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர். தீர்மானம் 1244 யூகோஸ்லோவிய படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது: ஆனால் யூகோஸ்லோவியாவின் "பிராந்திய ஒருமைப்பாடு" பற்றித்தான் குறிப்பிட்டதே அன்றி சுதந்திரம் பற்றி ஏதும் பேசவில்லை.

ஐரோப்பிய நாடுகள் கொசோவோவை அங்கீகரிப்பதை எளிதாக்குவதற்கும், ஞாயிற்றுக்கிழமை வந்துள்ள அறிவிப்பின் அப்பட்டமான சட்டவிரோத தன்மையைக் கடக்கும் வகையிலும், வெளியுறவு மந்திரிகள் திங்களன்று ஒரு தப்பிக்கும் விதியை இயற்றினர்; இதன்படி 1990 களில் இம்மானிலத்தின் "மோதல், இனச்சுத்திகரிப்பு மற்றும் மனிதப் பேரழிவு" ஆகியவற்றின் வரலாறு காரணமாக, சர்வதேச எல்லைகள் அனைத்துத் தரப்பினரின் உடன்பாட்டின் பேரில்தான் சேர்பியா மாற்றப்பட முடியும் என்பதற்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த முற்றிலும் ஜனநாயகவிரோத முயற்சி கொசோவோவின் சுதந்திரத்தை சர்வதேச சட்டத்தின் கீழான "பிராந்திய ஒருமைப்பாடு" என்பதற்கு விதிவிலக்காக அங்கீரிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அனுமதிக்கிறது.

அமெரிக்க ரஷ்யாவுடனான நெருக்கடிகளை தீவிரப்படுத்துகிறது

சர்வதேச நெறிகளின்படி, ஐரோப்பிய ஒன்றியம் முதலில் கொசோவோ பற்றிய அதன் கொள்கையை அறிவிக்கும் என்றும் "இது ஒரு ஐரோப்பிய பிரச்சினை" என்ற வாதத்தை அடிப்படையாக கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் சுதந்திரத்தை ஒப்புக் கொள்ளும் முதல் அறிக்கை அட்லான்டிக்கின் மறுபறுத்தில் இருந்து வெளிவந்தது. திங்களன்று NBC க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் கொசோவோவின் சுதந்திர அறிக்கையை விரைவாக அங்கீகரித்தார். "கொசோவோ மக்கள் இப்பொழுது சுதந்திரம் பெற்று விட்டனர். என்னுடைய அரசாங்கம் இதைத்தான் வாதிட்டிருந்தது." என்று அவர் கூறினார்.

புஷ்ஷின் அறிக்கை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டானா பெரினோ ஆல் விரைவாக திருத்தப்பட்டது; அமெரிக்கா சுதந்திரத்தை அங்கீகரித்துவிட்டது என்பதாக புஷ்ஷின் கருத்துக்கள் உள்ளன என்பதை அவர் மறுத்தார். "அவர் அப்படிக் கூறவில்லை" என்று இவ்வம்மையார் கூறினார். "அவர் கருதியது, கொசோவோவினர் தங்கள் சுதந்திரத்தை அறிவித்துள்ளனர் என்பதேயாகும்." அமெரிக்க வெளிவிவகாரத்துறைதான் உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பை அறிவிக்கும் பணியைக் கொண்டது என்றும் பெரினோ நினைவுபடுத்தினார்.

திங்களன்று அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ், வாஷிங்டன் பொதுவாக கொசோவோவை "ஒரு இறைமையுள்ள சுதந்திர நாடு" என்று அங்கீகரித்துள்ளதாக கூறினார். ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில் ரைஸ் "இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட வேண்டும் என்னும் கொசோவோவின் வேண்டுகோளுக்கு ஜனாதிபதி புஷ் சாதகமான முறையில் விடையிறுத்துள்ளார்." என அறிவித்தார்.

கொசோவோவின் சுதந்திரத்திற்கு அமெரிக்க ஒருதலைப்பட்சமாக ஆர்வத்துடன் அங்கீகாரத்தை புஷ் கொடுப்பது வெள்ளை மாளிகைக்கு இப்பிரச்சினையில் இருக்கும் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; இது கொசோவோ பிரச்சினையை பயன்படுத்தி ரஷ்யாவை தனிமைப்படுத்தவும் மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் பிளவுகளை ஆழ்மைப்படுத்தவும் முற்படுகிறது.

கொசோவோ சுதந்திரம் என்பது கடந்த ஆண்டில் புஷ்ஷிற்கு ஒரு முக்கிய முன்னுரிமையாக இருந்து வந்துள்ளது. கடந்த கோடையில் ஜேர்மனியில் நடைபெற்ற G8 உச்சிமாநாட்டைத் தொடர்ந்து புஷ் நேரடியாக அல்பேனியாவிற்கு சென்றார்; அங்கு திரானாவில் இருக்கும் கொசோவோ அல்பேனியர்களுக்கு அவர்கள் ஒரு சுதந்திர நாட்டின் குடிமக்களாவர் என்று உறுதியளித்தார். "முடிவில்லாத பேச்சுவார்த்தைகளுக்கு" முடிவு கட்டுமாறும் புஷ் அழைப்பு விடுத்தார். அவற்றில் பயன் ஏதும் இல்லை என்றும் கொசோவோ ஆண்டு இறுதிக்குள் சுதந்திரம் பெற்றுவிடும் என்றும் கூறினார். இப்பொழுது புஷ்ஷால் அறிவிக்கப்பட்ட இறுதிக் காலக்கேட்டின் ஆறு கிழமைகளுக்கு பின், ஞாயிறன்று அறிவிக்கப்பட்ட கொசோவா சுதந்திரத்தை கொண்டாடிய ஆதரவாளர் மத்தியில் பலரும் அல்பேனிய தேசியக் கொடியையும், அமெரிக்க கொடியையும் அசைத்தனர்.

சமீபத்திய ஆண்டுகளில் வெள்ளை மாளிகளை பெருகிய முறையில் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு ஆக்கிரோஷ நிலைப்பாட்டை எடுத்துள்ளது; உக்ரைன் மற்றும் ஜோர்ஜியாவில் "வண்ணப் புரட்சிகள்" என்று அழைக்கப்பட்ட அமெரிக்க நடவடிக்கைகள் மூலம் இது வெளிவந்தது. கொசோவோவிற்கு அமெரிக்க ஆதரவு என்பது ரஷ்யாவை அமெரிக்க, நேட்டோ சக்திகள் சூழ்ந்திருந்தல் என்பதின் மற்றொரு முக்கிய நடவடிக்கையை பிரதிபலிக்கிறது; இது பனிப்போரை புதுப்பிக்கும் நோக்கத்தை அமெரிக்கச் சிந்தனைக் குழுக்கள் கொண்டு தொடங்கியுள்ள புதிய பிரச்சாரத்துடன் இணைந்து நிற்கிறது --முன்பு சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக இருந்தது போல் இப்பொழுது ரஷ்யாவிற்கு எதிரான பனிப்போர் வந்துள்ளது.

ரஷ்யாவுடன் விரோதப் போக்குகளை புதுப்பித்தல் என்பது ஜேர்மனியில் ஒரு வாரத்திற்கு முன் நடந்த மூனிச் பாதுகாப்பு மாநாட்டின் மத்திய கருத்தாக இருந்தது; மாநாட்டிலும் அதையொட்டியும் வந்த அறிக்கைகள் பல ரஷ்யாவை பெருகிய முறையில் எதிரியாக சித்தரித்தல் என்பது வெள்ளை மாளிகையின் கொள்கைத் தளத்தில் மையமாக இருக்கும் என்பது மட்டுமில்லாமல் பரந்த அரசியல் வட்டங்களின் ஆதரவையும் கொண்டது என்பதைத் தெளிவாக்கியது.

மாநாட்டிற்கு ஒரு நாள் முன்னதாக Süddeutsche Zeitung பத்திரிகை குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோன் மக்கெயினுடைய அறிக்கை ஒன்றை அச்சிட்டது; அதில் அவர் ரஷ்யா G8 ல் இருந்து அகற்றப்பட்டு கொசோவோவின் சுதந்திரத்திற்கு ஆதரவு கொடுக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கத் தலைமையின்கீழ் ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு ஒரு மாற்றீடாக "ஜனநாயகவாதிகளின் கழகம்" ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் மக்கெயின் கோரியிருந்தார்.

ரஷ்யாவிற்கு எதிரான ஒரு கடுமையான வழிவகை வேண்டும் என்னும் மக்கெயினின் வாதம் ஒரு நாளைக்குப்பின் மிக முக்கியமான அமெரிக்க வலதுசாரி சிந்தனையாளர், ரொபேர்ட் காகனால் எடுக்கப்பட்டது; இதே செய்தித்தாளில் அவர் "புவியியல் ரீதியாக பார்க்கும் போது ரஷ்யாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இரண்டும் அருகருகில் இருக்கின்றன, ஆனால் பூகோள-அரசியல் ரீதியாக அவைகள் வெவ்வேறு நூற்றாண்டுகளில் வாழ்கின்றன." என அறிவித்தார்.

இதன் பின் காகன் ஐரோப்பிய-ரஷ்ய போர்ச் சித்திரம் ஒன்றை கோடிட்டுக் காட்டினார்; "கொசோவோ, உக்ரேன் மற்றும் ஜோர்ஜியா ஆகியவைகளுடன் எஸ்தோனியாவிலும் உள்ள அரசியல் நெருக்கடிகளிலும்; எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய்களின் மீதான பிரச்சனைகளிலும்; ரஷ்யா மற்றும் பிரிட்டனுக்கு இடையே கடினமான இராஜாங்க ரீதியான பரிமாற்றத்தினிலும்; பனிப்போரின் முடிவில் இருந்த வரலாற்றில் முன்னொருபோதுமில்லாதவாறு ரஷ்யாவின் இராணுவ பலம் கட்டவிழ்த்து விடப்படல்". என்று இதற்கான காரணங்களை அவர் கூறினார்.

கொசவோவிற்கு அமெரிக்க ஆதரவு என்பது ஆசிய நாடுகளிலும் மத்திய கிழக்கிலும் வணிக, வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றில் ரஷ்யாவை ஒதுக்கி வைக்கும் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது; அதே நேரத்தில் வாஷிங்டனின் முக்கிய போட்டியாளர்களில் ஒன்றான ஐரோப்பாவில் உறுதியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

ஜேர்மனி போன்ற சில ஐரோப்பிய நாடுகள், மத்திய ஆசியா (ஆப்கானிஸ்தான்) மற்றும் மத்திய கிழக்கில் (ஈரான்) அமெரிக்க இராணுவக் கொள்கை பற்றி எச்சரிக்கையான, ஆனால் பெருகிய முறையில் விமர்சனரீதியான அணுகுமுறையைக் கொண்டுள்ள போதிலும், முக்கிய ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் முன்னாள் யூகோஸ்லாவியாவின் பொருளாதார, அரசியல் வளர்ச்சிகளை அமெரிக்கா தனது ஏகபோகமாக பெற்றுவிடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளன. எனவேதான் முன்னாள் யூகோஸ்லாவிய நாட்டுப் பகுதிகளில் நெருக்கமான வணிக உறவுகளையும், அப்பகுதியில் நீண்ட கால அரசியல் தொடர்பு என்ற மரபைக் கொண்டுள்ள ஜேர்மனி இப்பொழுது அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு கொசோவோ சுதந்திர பிரகடனத்திற்கு ஆதரவைக் கொடுத்துள்ளது.

பால்கன் வெடிக் கிடங்கு

அதே நேரத்தில் பல வர்ணனையாளர்கள் ஐரோப்பாவின் இதயத்தானத்தில் ஒரு புதிய சிறு நாட்டை நிறுவுவதில் இருக்கும் மிகப் பெரிய ஆபத்து தன்மைகளையும் சுட்டிக் காட்டியுள்ளனர். 1990ல் இருந்து முன்னாள் யூகோஸ்லாவிய பகுதியில் இருந்து உருவாகியுள்ள ஏழாம் நாடாக கொசோவோ வந்தாலும், பொருளாதாரவகையில் முற்றிலும் தன்னிறைவுடன் செயல்பட முடியாத தன்மையைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட வேலையின்மை விகிதம் 50 என்று அங்கு உள்ளது; மின்சாரத்தை அப்பகுதி முழுவதும் கொடுப்பதற்குத் தக்க கட்டுமானமும் அங்கு இல்லை. CIA ஆல் முன்னர் ஆதரவிற்குட்பட்ட கொசோவோ விடுதலை இராணுவத்தை (UCK- Kosovo Liberation Army) அடித்தளமாக கொண்டிருக்கும் கொசோவோ ஆட்சிக்குள் ஊழல் மிக அதிகமாக இருந்தாலும், இப்பொழுதுள்ள ஐரோப்பிய ஒன்றிய, நேட்டோ ஆகியவற்றின் பாதுகாப்புப் பகுதியில் நாட்டின் ஆளும் உயரடுக்கின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த ஏதும் செய்யமுடியாது.

ஸ்பெயினின் செய்தித்தாளான ABC "இந்த நாடு தயாரானதோ அல்லது சாத்தியமானதோ இல்லை. கொசோவோவிற்கு பொருளாதாரம், இராணுவம், போலீஸ் மற்றும் நிர்வாகம் என்று ஒவ்வொரு துறையிலும் சர்வதேச உதவி தேவைப்படுகிறது; அப்பொழுதுதான் அது உயிர்வாழ்வதற்கும், ஒரு நாடு என்ற பெயருக்கு பெறுமதியானதாகவும் இருக்க முடியும்... இறுதிவரை எப்படிப் பார்த்தாலும் இந்த சுதந்திரம் ஒரு ஐரோப்பிய தோல்வியாகும்; ஏனெனில் முன்னாள் யூகோஸ்லாவியாவின் நீண்ட இரத்தம் சிந்திய உடைவுடன் தொடர்புபட்ட பல பிரச்சினைகளை தீர்க்ப்படவில்லை. அதன் தனித்தனியான பகுதிகள், விந்தையான முறையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டதாக இருக்க விரும்புகின்றன; ஒரு தனி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு ஐரோப்பிய ஒன்றியமே சிறிய, இனவழியில் தனித்துவமான சிறு நாடுகளால் நிரம்பி வருகிறது... எனவே ஒரு புதிய சுதந்திரமற்ற நாடு ஐரோப்பாவில் பிறந்துள்ளது. இதில் ஒன்றும் பெருமைப்படுவதற்கு இல்லை." என கூறுகிறது.

ஜேர்மனியின் Frankfurter Rundschau பத்திரிகை இதே போன்ற ஒரு மதிப்பீட்டிற்குத்தான் வந்து சுதந்திர அறிவிப்பில் மகிழ்ச்சியடைவதற்கு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளது. "எப்படியோ இறுதியில் அடையப்பட்டுவிட்ட சுதந்திரம், அப்படிக் கூறத் தகுதியில்லை என்றுதான் உள்ளது. அரசியலமைப்பு, கொடி, இராணுவ சின்னங்கள் மற்றும் அறிவிப்புதினம் ஆகியவை கூட அவர்களுடைய தேசியம் அடையாளம் கூட பொருட்படுத்தப்படாது முக்கிய மேலைநாடுகளின் மேற்பார்வையில் கொசோவோ மக்கள் மீது சுமத்தப்பட்டது. இப்பொழுது புதிய நாட்டின் பிறப்பு என்று களிப்படையப்படுவது பால்கன் பகுதிகளில் மற்றொரு அரைகுறை ஐரோப்பிய ஆளுமைக்குட்பட்ட பகுதி நிறுவப்பட்டுள்ளது என்பதுதான் பொருள்."

கொசோவோவில் இருக்கும் உறுதியற்ற அரசியல் நிலைமை கிட்டத்தட்ட 3,000 ஐ.நா. மற்றும் 3,000 நேட்டோ தலைமையிலான துருப்புக்கள் அங்கு நாட்டின் சேர்பிய சிறுபான்மையினரை பாதுகாக்கும் பணியில் நிறுத்தப்பட்டுள்ளதால் எடுத்துக்காட்டப்படுகின்றது. சுதந்திர அறிவிப்பை தொடர்ந்து இந்த படைப்பிரிவுகள் மிக அதிகமாக பெருக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வன்முறைமிக்க மோதல்கள் தொடங்கிவிட்டன. திங்களன்று ஆயிரக்கணக்கான சேர்பியர்கள் வடக்கு கொசோவோவில் "இது சேர்பியா", "அமெரிக்கா வீழ்க!:" என்று கோஷமிட்டனர். கூட்டங்கள் கொசோவோ மிட்ரோவிகா நகரத்தைப் பிரிக்கும் பாலத்தை நோக்கிச் சென்றன; ஆனால் நேட்டோ படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அதே நேரத்தில் சேர்பிய அரசாங்கம் கொசோவோவின் சுதந்திரம் பற்றிய தன்னுடைய எதிர்ப்பு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. திங்களன்று சேர்பியாவின் உள்துறை மந்திரி, பிரதம மந்திரி ஹாசிம் தாசி உட்பட, மூன்று கொசோவோ அல்பேனியத் தலைவர்களுக்கு எதிரான அவர்கள் "அரசியலமைப்பு ஒழுங்கு மற்றும் சேர்பியாவின் பாதுகாப்பு" இவற்றை மீறிய வகையில் "ஒரு தவறான நாட்டை அறிவித்துள்ளனர்" என்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

இதற்கிடையில் பெல்கிரேட் அரசாங்கம் வாஷிங்டனில் இருந்து தன்னுடைய தூதரைத் திருப்பி அழைத்துள்ளது; இது அமெரிக்கா கொசோவோ சுதந்திரத்திற்கு அங்கீகாரம் கொடுத்துள்ளதற்கு பதிலடியாகும். சேர்பிய பிரதம மந்திரி Vojislav Kostunica தூதர் திரும்பப் பெறப்பட்டுள்ளதை அறிவித்து, கொசோவோவிற்கு அங்கீகாரம் கொடுக்கும் நாடுகளுக்கு எதிராக இது "முதல் அவசர நடவடிக்கை" என்றும் அறிவித்தார். "அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கை ஒரு தவறான நாட்டை சரியான நாடு என ஆக்கிவிடாது" என்றும் ஆனால், "இது உலகம் முழுவதற்கும் அமெரிக்க மிருகத்தன சக்தியின் கொள்கையின் வன்முறை முகத்தை நிரூபணம் செய்துள்ளது" என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில் திங்களன்று பேசிய சேர்பிய ஜனாதிபதி Boris Tadic ஒருதலைப்பட்ச சுதந்திரப் பிரகடம் சர்வதேச சட்டத்தை மீறிய ஒரு செயல் என்றும் சர்வதேச உறுதிப்பாட்டை குறைக்கும் அச்சுறுத்தல் என்றும் கூறினார். "இந்த சட்டவிரோத செயலைப் பற்றி பொருட்படுத்தாமல் இருந்தால், உங்கள் நாடுகளிலும் இதே சட்ட விரோத வகையில் சில பகுதிகள் சுதந்திரத்தை அறிவிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது" என்று அவர் வினவினார். "ஐக்கிய நாடுகளின் பட்டயம் மீறப்பட்டால் அதற்கும் பொருட்படுத்தாத தன்மை காட்டப்பட மாட்டாது என்று எவர் உறுதியளிக்க முடியும்? ஒவ்வொரு நாட்டின் இறைமை, உறுதிப்பாடு ஆகியவை ஐக்கிய நாடுகளின் சாசனத்தால் உறுதி செய்யப்படுகின்றன; ஆனால் உங்கள் நாட்டில் மீறப்படும்போது எவர் கேட்பர்?"

15 உறுப்பினர்கள் அடங்கிய குழுவிடம் அவர் "இங்கு நடப்பதில் உள்ள முன்னோடித் தன்மை பற்றி அனைவரும் அறிந்துள்ளோமா? இதன் பேரழிவு தரக்கூடிய விளைவுகள் எங்கு இட்டுச்செல்லும் என்பதை நாம் அறிந்துள்ளோமா?" என கேட்டார்.

ஐக்கிய நாடுகளுக்கு ரஷ்யாவின் தூதரான Vitaly Churkin சேர்பிய நிலைப்பாட்டிற்கு வலுவான ஆதரவை கொடுக்கும் வகையில் கொசோவோ சுதந்திர அறிவிப்பு என்பது "சர்வதேச சட்டத்தின் கொள்கைகள் நெறிகள் ஆகியவற்றை அப்பட்டமாக மீறுதல் ஆகும்" என்றார். இதற்கிடையில் சீனத் தூதர் வாங் குவாங்யா இதே போன்ற அறிக்கையை வெளியிட்டு இந்த நடவடிக்கை "சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு ஒரு தீவிர சவாலாக உள்ளது" என்றும் கூறினார். பாதுகாப்புக் குழுவில் இந்த இரு தடுப்பாதிகார (veto) சக்தி உடைய நாடுகள் புதிதாக சுதந்திரம் அறிவிக்கப்பட்ட நாடு ஐ.நா.வின் முறையான அங்கீகாரத்தைப் பெறாமல் தடுக்கின்றன.

கிட்டத்தட்ட முதலாம் உலகப் போர் தொடங்கிய ஒரு நூற்றாண்டிற்கு பின்னர் முக்கிய ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளும் அமெரிக்காவும் கொசோவோ சுதந்திரத்திற்கு ஆதரவு கொடுப்பதின் மூலம் மீண்டும் "பால்கன் வெடிமருத்து கிடங்கில்" தீக்குச்சிகளை ஏற்றுகின்றன; இதன் விளைவுகள் அப்பகுதியிலும் அப்பாலும் பெரும் விளைவுகள் என்ற ஆபத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தலைக் கொண்டவை.