World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The state of Iraq as it enters 2008

2008ல் நுழைகையில் ஈராக்கின் நிலை

By James Cogan
2 January 2008

Use this version to print | Send this link by email | Email the author

பாக்தாதின் சில பகுதிகளில் புத்தாண்டுக் களிப்புக்களை பற்றிய செய்தி ஊடகத் தகவல்கள் 2007ஐ கொண்டாடுவதற்கு ஒன்றும் இல்லை என்பதோடு, 2008 ஐ ஈராக்கியர்கள் ஒன்றும் ஆவலோடு எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவிக்கிறது என்ற உண்மையை மறைக்க முடியாது. இறப்பு, அழிப்பு, இடர்பாடுகள் ஆகியவை நிறைந்திருந்த மற்றொரு ஆண்டாகத்தான் ஈராக்கியர்களுக்கு கடந்த ஆண்டு இருந்தது. அசோசியேட்டட் பிரஸ் தொகுத்திருந்த முற்றுப்பெறாத தகவல் தொகுப்புகூட -- இதிலும் பதிவு செய்யப்பட்ட மரணங்கள் மட்டுமே அடங்கியிருந்தன; அமெரிக்க, ஈராக்கிய அரசாங்கப் படைகளுடன் மோதலில் கொல்லப்பட்ட எழுச்சியாளர்கள் இறப்பு எண்ணிக்கை சேர்க்கைப்படவில்லை-- குறைந்தது 18,610 குடிமக்களாவது வன்முறையினால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கிறது. மேலும் பல பத்தாயிரக்கணக்கான இறப்புக்கள் ஊட்டச்சத்து இல்லாத உணவு, பாதுகாப்பற்ற குடிநீர், அடர்த்திக் குறைவான யூரேனியத்தின் மூலம் தொற்று மற்றும் செயல்படாத சுகாதாரப் பாதுகாப்பு முறை ஆகியவற்றின் விளைவுகளால் நேர்ந்தன.

பிரிட்டனை தளமாகக் கொண்டுள்ள ORB கணிப்பு நிறுவனம், அமெரிக்க ஆக்கிரமிப்பின்கீழ் 1.2 மில்லியன் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர் என்று மதிப்பீடு செய்த ஒரு ஆண்டாக 2007 நினைவில் வைத்துக் கொள்ளப்படும். இது முன்னதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கணக்கிட்டுக் காட்டியிருந்த இறப்பு எண்ணிக்கையை உறுதி செய்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கையினால் வளரவிடப்பட்டு, தூண்டுதல் பெற்ற குறுகிய குழுவாத வன்முறையில் இருந்து தப்புவதற்காக ஒரு மில்லியன் மக்களுக்கும் மேலாக தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியதற்காகவும் இந்த ஆண்டு நினைவில் வைத்துக் கொள்ளப்படும். மார்ச்சுக்கும் ஜூனுக்கும் இடையில் நாட்டிற்குள் 30,000 கூடுதல் அமெரிக்க துருப்புக்களின் 'அலைப்பெருக்கம்', ஈராக்கின் தற்கால வரலாற்றிலேயே, மிக மோசமான இனவெறி-வகுப்புவாதக் கொலைகள் என வாதிடக்கூடியதால் சேர்ந்து கொள்ளப்பட்டது.

டிசம்பர் 21ம் தேதி UNICEF புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டது; இது சமூக அழிவின் அளவை வெளிப்படுத்துகிறது. ஈராக்கில் உள்ள 17 வயதுச் சிறுவர்களில் 28 சதவிகிதத்தினர்தாம் 2007ம் ஆண்டு பள்ளி இறுதித் தேர்வை எழுதினர். வன்முறையோ, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் சிறார்களை ஆரம்ப பள்ளிகளுக்கு செல்லுவதை கூட தடுத்து விட்டது.

இத்தகைய எண்ணிக்கை, அமெரிக்கப் பெருநிறுவன அமைப்பின் நலன்களுக்காக நாட்டின் நிலப்பகுதி மற்றும் எண்ணெய்வளம் ஆகியவற்றை கைப்பற்றுவதற்கு, ஈராக் படையெடுப்பிற்கு உருக் கொடுத்தவர்கள் சமூக இன அழிப்பை - "வேண்டுமென்றே ஒரு முழு சமூகத்தையும் கொலை செய்தலை" நடத்தியிருந்தனர் என்று மே 24, 2007ல் WSWS ஆல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டை கோடிட்டுக்காட்டுகிறது. இந்தப் போர்க்குற்றங்களுக்காக, இதைச் செய்த புஷ் நிர்வாகத்தில் உள்ளவர்களும், அதன் நட்பு அரசாங்கங்களும் நீதிக்கு முன் பொறுப்புக் கூறவேண்டும்.

ஆயிரக்கணக்கான அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் இராணுவக் குடும்பங்களும் மிகக் கசப்பான விலையை கொடுத்துள்ளன. மார்ச் 2003 படையெடுப்பு காலத்தில் இருந்து நிகழ்ந்த இறப்புக்களை காட்டிலும் 2007ல் மிக அதிகமான ஆக்கிரமிப்புப் படையினர் கொல்லப்பட்டனர். 901 அமெரிக்க, 47 பிரிட்டிஷ், 9 மற்ற ஆக்கிரமிப்பு நாடுகளின் துருப்புக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். இந்தச் சட்ட விரோதப் போரில் மொத்தமாக இதுவரை இறந்த அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை 3,904, காயமுற்றவர்கள் 28,661; பிந்தையவரில் பலரும் மூளைச் சேதத்தை அடைந்துள்ளனர்; உறுப்புக்களை இழந்தனர் அல்லது வேறு நிரந்தரக் காயங்களை அடைந்தனர். மற்றொரு 30,185 துருப்புகள் "போரில்லாத" காயங்களுக்காக, அதாவது நோய்கள், உளரீதியான சீர்குலைவு ஆகியவற்றிற்காக மருத்துவரீதியில் நாட்டிற்குத் திரும்ப அனுப்பப்பட்டனர். குறைந்தது 132 துருப்புகள் போரினால் பீடிக்கப்பட்டுள்ள நாட்டில் தற்கொலையும் செய்து கொண்டனர்.

கொலைகளும் உறுப்புச் சிதைவுகளும் தொடர்வதைத்தான் 2008 காணும். டிசம்பர் 29 அன்று ஆண்டின் கடைசி செய்தியாளர் கூட்டத்தில், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளின் தளபதி, ஜெனரல் டேவிட் பெட்ரீயஸ், அமெரிக்கப் படைகளின் "அதிகரிப்பு" நாட்டை அமெரிக்க கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டது என்ற அறிவிப்புக்கள்மீது குளிர்ந்த நீரை ஊற்றும் வகையில் பேசினார். முந்தைய மூன்று மாதங்களோடு ஒப்பிடும்போது அமெரிக்க வீரர்கள் இறப்பு எண்ணிக்கை குறைந்து விட்டது என்று குறிப்பிட்ட அவர் --2004 முதல் பகுதிக்கு பின்னர் எண்ணிக்கை மிகக் குறைவு ஆகும் --" இன்னும் கடுமையாக சண்டைகள் இருக்கும், மிகக் கடினமான நாட்கள், வாரங்கள் வரும், ஆனால் ஆண்டவன் விருப்பப்படி, அவை குறைந்த அளவு உடையதாக இருக்கும்" என்றார்.

அமெரிக்க துருப்புக்களுக்கு ஆபத்து சற்றே குறைந்துள்ள தெளிவான தற்காலிக தன்மையில் இருந்துதான் பெட்ரீயஸின் எச்சரிக்கை வெளிவந்தது. ஆக்கிரமிப்பு படைகள் மீது நடக்கும் தாக்குதல்கள் குறைந்துள்ளது அமெரிக்கர்கள் இருப்பதற்கு பெரும்பான்மையான ஈராக்கியர்கள் உள்ளங்களில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்பதாலோ, ஈராக்கியர்களில் பெரும்பாலானவர்கள் கொண்டுள்ள பேரழிவு தரும் வாழ்க்கை நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்பதால் அல்ல; மாறாக, பெட்ரீயஸ் ஊக்குவித்ததின் பேரில் நிகழ்ந்த பல உடன்பாடுகள், தொடர்ச்சியான பெருந்திகைப்புடன் வந்த பல உடன்படிக்கைகள், பெரும்பாலும் சுன்னி அரபு தளத்தைக் கொண்ட கிளர்ச்சிக் குழுக்களுக்கு விலை கொடுக்கப்பட்டது மற்றும் ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்து வந்த முக்கிய ஷியைட் அடிப்படைவாதிகள், மத குரு மொக்தாதா அல்சதரின் மெஹ்தி இராணுவம் ஆகியவற்றுடன் செய்யப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஆகியவற்றில் இருந்து இது தோன்றியுள்ளது.

இந்த உடன்பாடுகள் பற்றிய விவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அமெரிக்க இராணுவத்தால் மேற்கு ஈராக் மற்றும் பாக்தாத்தினுள்ளும் அதைச் சுற்றியும் இருக்கும் சுன்னிப் பகுதிகளில் உள்ள குறைந்தது 77,000 சுன்னி குடிப்படையினர் பணம் பெற்று வருகின்றனர். முந்தைய சதாம் ஹுசைனின் பாத்திஸ்ட் ஆட்சியுடன் தொடர்பு கொண்டிருந்த அவர்களுடைய தலைவர்கள், பாக்தாதிலுள்ள அமெரிக்க கைப்பாவை அரசாங்கத்தில் மேலாதிக்கம் செய்யும் ஷியைட் அடிப்படைவாத, குர்திஷ் தேசியக் கட்சிகளுடன் இழிந்த, குறுகிய குழுவாத முறையில், அதிகாரப் பகிர்வு உடன்பாடு ஒன்றின் மூலம் இன்னும் கூடுதலான வகையில் அரசியல் பங்கை ஆற்றுவதற்கு முயல்கின்றனர். இந்த வழிவகையில் அனைத்துப் பிரிவு (கன்னை) களுமே சாதாரண ஈராக்கிய உழைக்கும் மக்களின் நம்பிக்கைகள், விழைவுகளுக்கு நேரடியான எதிர்ப்பில் தங்களை இருத்திக் கொண்டுள்ளனர்.

ஏற்கனவே சிரியாவிலும், ஜோர்டானிலும் இருக்கும் இரண்டு மில்லியன் ஈராக்கிய அகதிகள் அவர்கள் ஒன்றும் தாயகத்திற்குத் திரும்பத் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளனர். அவர்கள் திரும்ப முடியுமா அல்லது முடியாதா என்பது அவர்கள் வீட்டுப்பகுதிகளை எந்தப் போராளிகள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனரோ, அந்தப் பிரிவை அவர்கள் சேர்ந்தவர்களா இல்லையா என்பதைப் பொறுத்து இருக்கும். ஆயிரக்கணக்கான ஷியைட்கள் இப்பொழுது சுன்னி குடிப்படையினர் பகுதியில் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது; எப்படியும் இவற்றுள் பல அமெரிக்கா எழுப்பியுள்ள 12 அடி காங்க்ரீட் தடுப்புச் சுவர்களை கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஷியைட் குடிப்டைகளால் விரட்டியடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சுன்னிக்களும் கிறிஸ்துவர்களும் அனைத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மஹ்தி இராணுவம், சதரின் பெட்ரீயஸுடன் ஏற்படுத்திய உடன்பாட்டின் ஒரு பகுதியாக பாக்தாத்தின் பெரும் பகுதிகளை எடுத்துக் கொண்டு மத குருவின் சார்பில் அதை ஒரு குழு வெறி பற்று வட்டாரமாக ஆட்சி செய்து வருகிறது.

அமெரிக்கா பேச்சு வார்த்தையின்படி நகரம் துண்டாடப்பட்டதிலும், குடிப்படைகளை உயர்த்தியதிலும் ஏற்பட்டுள்ள சீற்றமானது, மக்களுக்கு வேலைகளையோ அடிப்படைப் பணிகளையோ ஆக்கிரமிப்பு கொடுக்கும் திறனின்மையால் கூடியுள்ளது. சதர் நகரம் போன்ற பகுதிகளில் வேலையின்மை, தக்க வேலையின்மை கிட்டத்தட்ட 70 சதவிகிதமாக உள்ளது; புதிய எதிர்ப்புப் போராட்டங்கள் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன.

ஷியைட் மக்கள் நிறைந்த தெற்கு ஈராக் முழுவதும் நிலைமை இதேபோல்தான் கொந்தளிப்பாக உள்ளது. ஆக்கிரமிப்புடன் சதர் கொண்டுள்ள ஒப்பந்தமானது, நடைமுறை அர்த்தத்தில், அமெரிக்க இராணுவம் மற்றும் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவான ஷியைட் கட்சியும் மிக சக்தி வாய்ந்த ஷியைட் வணிகம் மற்றும் மதகுருமார்களின் உயரடுக்குகளின் பிரதிநிதியுமான தலைமை இஸ்லாமிய ஈராக்கிய சபைக்கு (SIIC) தொழிலாள வர்க்கம் மேலாதிக்கம் செய்யும் அவரது ஆதரவாளர்களை கைவிட்டது போல் ஆகிவிடும். இதன் விளைவாக நூற்றுக்கணக்கான சதரிய குடிப்படையினர் "போக்கிரிக் கூறுபாடுகள்" என்று முத்திரையிடப்பட்டு வேட்டையாடப்படுகிறார்கள், காவலில் அடைக்கப்படுகின்றனர், அல்லது கொலை செய்யப்படுகிறார்கள்.

ஈராக்கிய அரசியல் நோக்கர்கள், அமெரிக்கப் படைகளுடன் சதரின் பேரம், ஒத்துழைப்பு ஆகியவற்றின் விளைவாக சதரின் தளத்திற்குள்ளேயே ஏற்பட்ட அதிருப்தியின் வளர்ச்சி பற்றி கவனித்து வருகின்றனர். International Crisis Group இன் பீற்றர் ஹார்லிங் மக்கிலாட்சி செய்தித்தாட்களிடம் கடந்த மாதம் கூறினார்: "இது எந்த அளவிற்கு தாக்குப்பிடிக்கக்கூடியது என்று எனக்குத் தெரியாது. அவர்கள் [சதரின் ஆதரவாளர்கள்] மிகவும் விரக்தியடைந்து, மொக்தாதாவின் முடிவுடன் [போர்நிறுத்தம்] ஒத்துப்போக விருப்புக்கொள்வது போல் தோன்றுகின்றனர், ஆனால் இது நீண்ட காலத்திற்காக அல்ல."

வாஷிங்டன் போஸ்ட்டில் டிசம்பர் 26 அன்று வந்த கட்டுரை ஒன்றின்படி, நஜப், கார்பலா, ஹில்லா மற்றும் திவானியா ஆகிய பகுதிகளில் ஏராளமானவர்கள் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். SIIC க்கும் விசுவாசமாக இருக்கும் ஈராக்கிய அரசாங்க சக்திகளுடன் சேர்ந்து அமெரிக்க இராணுவம் சதரிய மற்றும் சதரியத் தொடர்பு உடைய கட்சிகள், குடிப்டைகள் மற்றும் எண்ணெய் வளம் கொழிக்கும் பஸ்ராவில் இருக்கும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிற்கு எதிரான தாக்குதலை தயாரிக்கிறது என்ற குறிப்புக்கள் உள்ளன. இந்த நடவடிக்கையானது புத்தாண்டின் முதல் பெரும் குருதி கொட்டுவதற்கான ஆற்றலைக் கொண்டிருக்கிறது மற்றும் தெற்கு ஈராக் முழுவதும் ஆக்கிரமிப்பிற்கு எதிரான கிளர்ச்சிகளைக் கட்டவிழ்த்துவிட இருக்கிறது.

கொலைகள் தொடரும் நிலையில், அமெரிக்க ஆளும் உயரடுக்கின் பல பிரிவுகளும் "ஜனநாயகத்திற்கான" சூழ்நிலையை ஏற்படுத்தும் வரை அமெரிக்கப் படைகள் ஈராக்கில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று வாதிடுவதற்கு, தாங்கள் ஏற்படுத்தியுள்ள பெரும் நாசம் விளைவிக்கும் செயல்களையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய பிரச்சாரம் இருபத்தியோராம் நூற்றாண்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதல் பெரிய போருக்காக வெட்கம் கெட்டதனமாக பரிந்துபேசுதல் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆக்கிரமிப்பானது குறுகிய பற்றுக்கொண்ட பிளவுகளை முன்னேற்றுதல், அதன் இருப்பிற்கு எதிரான எதிர்ப்பை அன்றாடம் ஒடுக்குதல் மூலம் அதிகாரம் செலுத்தி வருகிறது. அமெரிக்கா தலைமையிலான போரினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள சமூக, அரசியல் பேரழிவுகர விளைவுகளில் இருந்து மீண்டு வருவதற்கு அனைத்து அமெரிக்க, வெளிநாட்டுத் துருப்புக்களும் உடனடியாக, நிபந்தனையற்ற முறையில் திரும்பிச்செல்ல வேண்டும் என்பதுதான் முன்னிபந்தனை ஆகும்.