World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

As war clouds gather: Democrats back covert US attacks on Iran

போர் மேகங்கள் சூழ்கின்ற நிலையில்: ஈரான்மீது அமெரிக்கத் தாக்குதல்களுக்கு ஜனநாயகக் கட்சியினர் இரகசிய ஆதரவு

By Patrick Martin
30 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஈரானுக்கு எதிரான பரந்த அளவில் அமெரிக்க இரகசிய போர் வகைக்கு ஜனநாயகக் கட்சியின் முக்கிய சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒப்புதலை கொடுத்துள்ளதாக நியூ யோர்க்கரில் வெளிவந்துள்ள முக்கிய ஆய்வு நிருபர் சேமூர் ஹெர்ஷ் கட்டுரையில் வந்துள்ள தகவல் தெரிவிக்கிறது; இந்த இதழின் வலைத் தளத்திலும் ஞாயிறன்று இது வெளிவந்துள்ளது. (பார்க்க: "றிக்ஷீமீஜீணீக்ஷீவீஸீரீ tலீமீ ஙிணீttறீமீயீவீமீறீபீஜிலீமீ ஙிusலீ கிபீனீவீஸீவீstக்ஷீணீtவீஷீஸீ stமீஜீs uஜீ வீts sமீநீக்ஷீமீt னீஷீஸ்மீs ணீரீணீவீஸீst மிக்ஷீணீஸீ")

ஜனாதிபதி புஷ், ஒரு ஜனாதிபதி குறிப்பை வெளியிட்டுள்ளார்; இது உயர்மட்ட சட்டமன்ற தலைவர்களுக்கு ஈரானுக்கு எதிராக நவம்பர் 2006 தேர்தல்களுக்கு பின்னர் செனட் மற்றும் பிரதிநிதிகள் மன்றத்தின் கட்டுப்பாடு ஜனநாயகக் கட்சிக்கு போனபின் அனுப்பப்பட்ட இரகசிய தகவல் ஆகும். இக்குறிப்பின்படி பல தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது; அதில் ஈரானில் உள்ள அரபு, பலுச்சி சிறுபான்மையினர் பிரிவினைக் குழுக்களுக்கு நிதியளித்தல், மற்றும் ஈரானிய புரட்சி காவலர் உறுப்பினர்களை கடத்தி எல்லை தாண்டி ஈராக்கில் விசாரணை நடத்துவதற்கு திட்டம் மற்றும் ஈரானுக்குள்ளேயே தனிநபர்களை படுகொலை செய்தல் ஆகியவை அடங்கியுள்ளன.

பிரதிநிதிகள் மற்றும் மற்றும் செனட்டில் இருக்கும் ஜனநாயக, குடியரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் உளவுத்துறைக் குழுக்கள் தலைவர்கள், உயர்மட்ட உறுப்பினர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்ற சட்டபூர்வ தேவையை புஷ் நிறைவேற்றினார் என்று ஹெர்ஷ் கூறுகிறார். நான்கு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மன்ற அவைத்தலைவர் நான்சி பெலோசி, செனட்டின் பெரும்பான்மை தலைவர் ஹாரி ரீட், செனட் உளவுத்துறைக்குழு தலைவர் ஜே ராக்பெல்லர் மற்றும் மன்ற உளவுத்துறைக் குழுத் தலைவர் சில்வெஸ்டர் ரீஸ் ஆகியோர் ஆவர்.

ஹெர்ஷ் எழுதுகிறார்: "வெள்ளை மாளிகை ஒரு குறிப்பு அனுப்பியபின் தேசிய சட்ட மன்றம் சவால் விடுவதற்கு வழிகொண்டிருக்கவில்லை. எந்த அரசாங்க நடவடிக்கைக்கும் நிதியை நிறுத்தி வைக்கும் அதிகாரத்தை இது கொண்டுள்ளது. குறிப்பை அடையும் திறன் உடைய மன்ற, செனட் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், விரும்பினால், அக்கறையாய் பங்கு கொண்டால், நிர்வாகத்தின் கொள்கையில் அழுத்தம் கொடுப்பதற்கு முன்வரலாம்."

அப்படி எதுவும் நடக்கவில்லை. ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் நால்வரில் எவரும் ஈரானுக்கு எதிராக இரகசிய நடவடிக்கையை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை அமைதியான முறையில் பொதுமக்களுக்கு அறிவிப்பு இல்லாமல் 400 மில்லியன் டாலர்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இந்த நால்வரில் எவரும் நியூ யோர்க்கரில் ஹெர்ஷின் ஜூன் 29ம் தேதிக் கட்டுரைக்காக கருத்துக் கூறவும் தயாராக இல்லை. புஷ் நிர்வாகம் சர்வதேச சட்டங்களை மீறுதல் குறித்து தாங்கள் ஒத்துழைப்பதை இரகசியமாக வைத்துக் கொள்ள ஜனநாயகக் கட்சியினர் விரும்புகின்றனர்.

இந்த வெளிப்பாடு 2006 தேர்தல், 2008 ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றில் ஜனநாயகக் கட்சியினர் ஏற்றிருந்த "போர் எதிர்ப்பு" எனக் காட்டிக் கொள்வதின் முழு போலித்தன்மையையும் நன்கு நிரூபணம் செய்கிறது. ஈராக்கில் நடக்கும் போர், ஈரானில் நடக்கக்கூடிய புதிய போர் இவற்றை எதிர்க்கும் பெரும்பாலான அமெரிக்கர்களிடையே வாக்குகளுக்கு முறையிடும் ஜனநாயகக் கட்சியினர் நவம்பர் தேர்தலில் அவர்கள் வெள்ளை மாளிகையை கைப்பற்றினால் அமைதியான முறையில் போர்க்கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தயார் செய்கின்றனர்.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர் பரக் ஒபாமாவிற்கும் சட்ட மன்ற ஜனநயாகக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே பூசல் இருக்கக்கூடும் என்ற ஹெர்ஷ் கருத்து கூறுகிறார். அவர் எழுதுவது: "போரை விரிவாக்குவதற்கான நிதிக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுவிட்டது. வேறுவிதமாகக் கூறினால், ஜனநாயகக்கட்சி தலைமையின் சில உறுப்பினர்கள்... இரகசியமாக நிர்வாகத்துடன் இரகசிய நடவடிக்கைகள் ஈரானுக்கு எதிராக இயக்கப்பட ஒப்புதல் கொடுத்துள்ளனர் ஆனால் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வரக்கூடிய பரக் ஒபாமா நேரடிப் பேச்சுக்கள் மற்றும் தூதரக நெறிகளைத் தான் விரும்புவதாகக் கூறியுள்ளார்."

ஒபாமாவிற்கும் ஈரானுக்கு எதிரான இரகசிய நடவடிக்கை செயல் பற்றி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் இடையே உண்மையில் பூசல் இருக்கிறது என்பதை நம்புவற்கு காரணம் ஏதும் இல்லை. இது வேலைப் பகுப்பு முறைதான். ஒபாமா தூதரக முறை மற்றும் வேறுபாடுகளை சமாதானமாக தீர்த்தல் என்பதை வலியுறுத்துகிறார்: அதுவும் அமெரிக்க மக்களை ஏமாற்றும் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக. சட்டமன்ற ஜனநாயக உறுப்பினர்கள், அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கை பற்றி புஷ்ஷின் வெள்ளை மாளிகையுடன் பொறுப்பை பகிர்ந்து கொள்ளுபவர்கள், அப்பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை காக்க தேவையானவற்றை செய்கின்றனர்.

இன்னும் கூடுதலான ஆக்கிரோஷமான இராணுவ முறைகள் ஆப்கானிஸ்தானிலும் ஆப்கானிஸ்தான்-பாக்கிஸ்தான் எல்லையிலும் வேண்டும் என்று ஒபாமா ஏற்கனவே கூறியுள்ளார்; ஈராக்கில் இருந்து ஆப்கானிஸ்தானிற்கு தான் படைகளை அனுப்பப் போவதாக அறிவித்து, பாக்கிஸ்தானில் இருப்பதாக கூறப்படும் அல் குவைதா பகுதிகளுக்கு பாக்கிஸ்தானிய அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு ஒப்புதல் தரப்போவதாகவும் கூறியுள்ளார்.

பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸை அதே பதவியில் ஒபாமா நிர்வாகத்திலும் தொடர்ந்து இருக்கும்படி கூறப்போவதாக அவர் கூறியுள்ளதாவும் தெரிகிறது. ஞாயிறன்று டைம்ஸ் ஆப் லண்டன் எழுதியது: "ஒபாமாவின் உயர்மட்ட வெளியுறவுக் கொள்கை, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் பென்டகனில் ரோபர்ட் கேட்ஸை அவர் தன் வேலையை திறம்பட செய்வதற்கு பரந்த வகையில் பாராட்டு பெற்றுள்ளதால் தொடர அனுமதிக்குமாறு அழுத்தும் கொடுக்கின்றனர். இந்த நடவடிக்கை எல்லா திறமைகளும் இருக்கும் மந்திரிசபையை நியமிக்க வேண்டும் எனக் கூறும் ஒபாமாவின் விருப்பத்தை ஒட்டியும் இருக்கும்.

கடற்படை முன்னாள் செயலரும் ஒபாமாவின் உயர்மட்ட இராணுவ ஆலோசகருமான ரிச்சார்ட் டான்சிக் செய்தித்தாளிடம் கூறினார்: "என் தனிப்பட்ட கருத்து கேட்ஸ் ஒரு சிறந்த பாதுகாப்பு மந்திரி, இன்னும் சிறப்பாகக்கூட ஒபாமா நிர்வாகத்தில் இருப்பார் என்பதாகும்." "கேட்ஸை தக்கவைத்துக் கொள்ளுவது தன்னுடைய கொள்கையை சரிசெய்து கொள்ளுவதற்கு ஒபாமாவிற்கு ஈராக்குடன் போர் பற்றிய ஒரு "மறைப்பையும்" கொடுக்கும் அதாவது போரை நிறுத்துவதாக அவர் கொடுத்திருக்கும் உறுதிமொழிகளை தூக்கி எறிவதற்கும், மாறாக ஈராக்கில் காலவரையற்று ஆக்கிரமிப்பை தொடர்வதற்கும் உதவும்.

கேட்ஸ் ஜனநாயகக் கட்சியினருக்கு தன்னுடைய சமாதான வழிவகைகளை அனுப்பும் முறையில் இரு முன்னாள் கிளின்டன் நிர்வாக அதிகாரிகளை பாதுகாப்பு கொள்கைக் குழுவிற்கு கடந்த ஆண்டு நியமனம் செய்தார். அவர்கள், தலைவராக ஆக்கப்பட்ட ஜோன் ஹம்ரே, மற்றும் கிளின்டனுடைய முன்னாள் பாதுகாப்பு மந்திரி பெரி, இப்பொழுது ஒபாமாவின் உயர்மட்ட தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவர் ஆகியோரே. இதன் விளைவு பென்டகனுக்கும் ஒபாமா பிரச்சாரத்திற்கும் இடையே நேரடித் தொடர்பு வழி இருக்கிறது.

ஹெர்ஷ் கட்டுரை மத்திய கிழக்கில் பெருகிவரும் அழுத்தங்களுக்கு நடுவே வருகிறது, ஈரானுக்கு எதிராக பகிரங்கமாக பலமுறை இஸ்ரேல் அல்லது அமெரிக்கா அல்லது இரண்டுமே இராணுவ நடவடிக்கை வேண்டும் என்ற அச்சுறுத்தல்கள், அதற்கு ஈரானிய அதிகாரிகள் அத்தகைய தாக்குதல்களுக்கு தக்க முறையில் விடையிறுக்கப்படும் என்று கொடுக்கும் எச்சரிக்கைகள் ஆகியவற்றிற்கு இடையே இது வந்துள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் இஸ்ரேலிய விமானப்படை ஈரானுக்கு எதிரான விமானத் தாக்குதல்கள் பற்றி ஒரு முழு அளவு ஒத்திகையை மத்தியதரக் கடல் பகுதியில் மாற்று இலக்குகளுக்கு எதிராக 1,500 கிலோ மீட்டர் பறந்து சென்று தாக்கும் வகையில் நடத்தியது. புஷ் நிர்வாக அதிகாரிகள் இராணுவ நடவடிக்கைகள் பற்றி செய்தி ஊடகத்திற்கு தகவல்களை கசிய விட்டனர்; இது ஈரானிய ஆட்சியை மிரட்டும் தெளிவான முயற்சி ஆகும்; மேலும் அமெரிக்கா, உலக மக்களிடையே இத்தகைய தாக்குதல் பற்றி கருத்துத் தயாரிப்பிற்கும் முன்கூட்டி இடம் கொடுக்கிறது.

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் பிரிவு என்னும் நாட்டின் வலிமையான இராணுவத்தில் இருக்கும் மேஜர் ஜேனரல் மகம்மது அலி ஜபாரி சனிக்கிழமையன்று அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்கக் கூடும் பட்சத்தில் ஈரான் ஹார்மஸ் ஜலசந்தியில் இருக்கும் பாரசீகவளைகுடா எண்ணெய் உலகம் முழுவதற்கும் செல்லும் கடல்வழிகள் அனைத்தையும் மூடிவிடும் என்று எச்சரித்தார். "விரோதியை எதிர்கொள்ள ஒவ்வொரு நாடும் அதன் திறன் வாய்ப்பு முழுவதையும் பயன்படுத்தித் தாக்கும்" என்று அவர் ஈரானிய செய்தித்தாளான Jaam-e Jam இடம் கூறியதாக உத்தியோகபூர்வ Fars News Agency தெரிவிக்கிறது.

"ஈரான் பாரசீகவளைகுடா மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தியின் மீது கட்டுப்பாட்டை உறுதியாகக் கொள்ளும். அந்த நடவடிக்கைக்கு பின்னர் எண்ணெய் விலை இன்னும் கணிசமாக உயரும்; விரோதிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்" என்று அவர் கூறினார்.

பிரிட்டிஷ் செய்தித்தாட்கள் ஞாயிறன்று போர்ச் சூழலை தீவிரப்படுத்தும் இவ்வித அறிக்கைகளை வெளியிட்டன.

* முன்னாள் இஸ்ரேல் உளவுத்துறை மொசாத்தின் தலைவரான Shabtai Shavit ä Sunday Telegrap பேட்டி கண்டது. அவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக ஈரான் மீது தாக்கக்கூடும் என்று கூறினார்; குறிப்பாக செனட்டர் பரக் ஒபாமா வெற்றிபெற்றால் இது உறுதி என்றார். தன் முதல் அணுவாயுதத்தை இன்னும் ஓராண்டிற்குள் தயாரிக்கும் நிலையில் ஈரான் உள்ளது எனறார் அவர். இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை அந்த கால அட்டவணையை கருத்திற் கொண்டு செயல்படுத்தப்படும். "எஞ்சியுள்ள கால அவகாசம்... குறைவாகிக் கொண்டிருக்கிறது" என்றார் அவர்.

* இஸ்ரேலிய பிரதம மந்திரி எகுட் ஒல்மெர்ட் தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் 1981ல் இஸ்ரேலிய விமானத் தாக்குதல் மூலம் ஓசிரக்கில் இருக்கும் ஈராக்கிய அணுசக்தி நிலையத்தை தகர்த்த அவியம் சேலா என்பவருடன் பேசினார்; ஈரான் மீதும் அதே போன்ற தாக்குதல் நடத்த விவாதிக்கப்பட்டது.

* இந்த அச்சுறுத்தல்களுக்கு விடையிறுக்கும் வகையில் ஈரான் அதன் சக்திவாய்ந்த தொலைதூர பாலிஸ்டிக் ஏவுகணைகளான Shaha-3B வகை, 2,000 கி.மீ. செல்லக்கூடியவற்றை, இஸ்ரேலில் இருக்கும் இடங்கள்மீது, முக்கியமாக இஸ்ரேலிய அணுசக்தி நிலையமான நெகவ் பாலைவனத்தில் இருக்கும் Dimona மீது செலுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

ஈரானுக்குள் அமெரிக்க இரகசிய நடவடிக்கைச் செயல்கள் என்பது CIA மற்றும் பென்டகனின் கூட்டு சிறப்பு நடவடிக்கைகள் கட்டுப்பாடு இரண்டுடனும் தொடர்பு கொள்ளும்; 40 ஆண்டுகளுக்கு முன்பு My Lai படுகொலைகளில் இருந்து 2004 அபு காரிப் சித்திரவதை வரை முதலில் எழுதிய மூத்த செய்தியாளர் முன்பு அம்பலப்படுத்தலில் கொடுத்தது போல், இவருடைய ஆதாரங்கள் இராணுவம்-உளவுத்துறைகளின் கருவிகளில் குறிப்பாக CIA ல் அதிருப்தி அடைந்த பிரிவுகளில் இருந்து வருபவை ஆகும்.

CIA க்கும் வெள்ளை மாளிகைக்கும் ஜனாதிபதி குறிப்பில் உள்ள சொல்லாட்சி பற்றி கருத்து வேறுபாடு உள்ளதாக ஹெர்ஷ் தெரிவிக்கிறார். CIA ஈரானுக்குள் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் அமெரிக்க ஒற்றர்கள் மரணம் தரும் சக்தியைச் செலுத்த வெளிப்படையான ஒப்புதலைக் கோருகையில், வெள்ளை மாளிகை தலைமைத் தளபதி என்னும் முறையில் புஷ்ஷின் அதிகாரம் போதுமானது என்று கருதுகிறது.

பேட்டி காணப்பட்டவர்களுள் ஒருவர் முன்னாள் மத்தியக் கட்டுப்பாட்டின் தலைவரும் இப்பொழுது ஓய்வு பெற்றுவிட்டுவிட்டவரும் ஆன கடற்படைத் தலைவர் வில்லியம் பாலன் ஆவார்; இவர் இந்த ஆண்டு முன்னதாக பாதுகாப்பு மந்திரி ரொபேர்ட் கேட்ஸால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்; இதற்குக் காரணம் வானிடி பேர் என்ற இதழ் ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க கொள்கைகளுக்கு உள்ளிருந்தே இவர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார் எனக் கூறியதுதான்.

பல முன்னாள் உளவுத்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளின் கருத்துக்களை மேற்கோளிட்டு, ஹெர்ஷ் அமெரிக்க அரசாங்கத்திற்குள் கடுமையான, பெருகிவரும் முறையில் பூசல்கள் இருப்பதாகக் கூறியுள்ளார்; துணை ஜனாதிபதி ரிச்சார்ட் செனியின் அலுவலகம் இன்னும் கூடுதலான தூண்டுதல் பிரச்சாரங்கள், இலக்குகளின் பட்டியல் ஆகியவற்றை கோருவதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. ஒரு முன்னாள் அதிகாரி ஹெர்ஷிடம் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் நடந்த கூட்டம் பற்றிக் கூறியது: "தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே போரை மூட்ட எப்படி வழிவகுப்பது" என்பது தலைப்பாக இருந்தது.