World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Bank for International Settlements annual report

World economy may be at "tipping point"

சர்வதேச ஒப்பந்தங்களுக்கான வங்கியின் ஆண்டு அறிக்கை

உலகப் பொருளாதாரம் ''மாற்றங்களை கட்டுப்படுத்தமுடியாத நிலையில்'' உள்ளது

By Nick Beams
1 July 2008

Use this version to print | Send this link by email | Email the author

உலகப் பொருளாதாரம் ஏற்கனவே போருக்கு பிந்தைய காலத்தில் மோசமான நிதியச் சந்தை கொந்தளிப்பு நிலையை அனுபவித்து வருவதுடன், இன்னும் மோசமான நிலையில் விளிம்பில் கூட இது நிற்கக் கூடும். நேற்று சர்வதேச ஒப்பந்தங்களுக்கான வங்கி வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் காணப்படும் ஆய்வு இதுதான்.

மத்திய வங்கியாளர்களின் வங்கி என அடிக்கடி அறியப்பட்டுள்ள BIS (சர்வதேச ஒப்பந்தங்களுக்கான வங்கி), கடந்த தசாப்தத்தில் மிகவும் சிக்கல் வாய்ந்த புதிய கடன் வளர்ச்சிமுறை கட்டமைப்பின் ஆபத்துக்களை பற்றி எச்சரிக்கை கொடுத்திருக்கிறது. இப்பொழுது இந்த வளர்ச்சி "தனது பாதையில் கட்டுப்படுத்தமுடியாத அளவிற்கு சென்றுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க குறைந்த பிணையுள்ள சந்தை நெருக்கடி நிதிய நெருக்கடியின் ஒரு தூண்டுபொறிதான் என்று அறிக்கை வலியுறுத்தியிருப்பதுடன், நிதிய நெருக்கடியின் இறுதிக் காரணம் அல்ல என்றும் கூறியிருக்கிறது. இந்த விடயம் "வேறுவிதக் கருத்துக்கள்" உள்ள வித்தியாசமான சிந்தனைக்கூடம் தொடர்பான வடிவத்தையும் எடுக்கின்றது. அவை வங்கியில் நிதி ஏற்படுத்தி வழங்குதல் (originate-to-distribute) மாதிரியின் விரிவாக்கமே ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு காரணம் என்று வேறு விளக்கங்கள் கொடுக்கின்றன; அதாவது கடன்கள் ஒன்றிணைக்கப்பட்டு பின்னர் விற்கப்படுவதால் ஏற்படும் நெருக்கடி என்று கூறல்; வீட்டுச் சந்தை நெருக்கடிக்கு இது ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. அத்தகைய ஆய்வு சில முக்கியமான உட்பார்வைகளை கொண்டிருந்தாலும் கூட, "என்ன ஒன்றாக இருக்கின்றன" என்பது பற்றியும் எடுத்துக்காட்டுவது மிகவும் முக்கியமாகும். இச்சிந்தனை போக்கின் ஆதரவாளர்கள் தற்போதைய பொருளாதார கொந்தளிப்பிற்கும் முந்தைய கொந்தளிப்புக்களுக்கும் இடையே இணையான தன்மையை காண்கின்றனர்.

"வரலாற்றாளர்கள் 1873ல் தொடங்கிய நீண்ட மந்தநிலையை நினைவு கூர்வர்; அதற்குப் பின்னர் 1920 களின் கடைசியில் உலகம் முழுவதும் ஆரம்பித்த கீழ்நோக்கு சரிவு, 1990 களின் தொடக்கத்திலும் இறுதியிலும் இருந்த ஜப்பானிய மற்றும் ஆசிய நெருக்கடிகள் ஆகியவை நினைவுகூறப்படும். இந்த ஒவ்வொரு காலப்பகுதியிலும், வலுவான நீண்டகால கடன் வளர்ச்சி உண்மையான பொருளாதாரம் மற்றும் நிதிய சந்தைகளில் அதிகரித்த எழுச்சிமிக்க ஏற்றத்தன்மையுடன் இணைந்து இருந்தன; இதைத்தொடர்ந்து எதிர்பாராமல் நெருக்கடியும் கீழ்நோக்கு சரிவும் ஏற்பட்டன. ஒவ்வொரு நிகழ்விலும் புதிய வகைப் பொருளாதாரக் கண்டுபிடிப்பு அல்லது புதிய நிதிய வழிவகை இன்னும் கூடுதலான வகையில் விரைவான கடன் பெருக்கத்தை நியாயப்படுத்தும் வகையில் "புதிய சகாப்தம்" என கூறப்பட்டதுடன், முன்கூட்டி அனுமானித்தபடி கீழ்நோக்கு சரிவிற்கான குற்றச்சாட்டின் மத்திய புள்ளியானது.

கடந்த இரு தசாப்தங்களில் "உலகப் பொருளாதாரத்தில் பலவும் சரியாக இயங்கவில்லை" என்று அறிக்கை சுட்டிக் காட்டுகையில், நிதிய அதிர்ச்சிகள் அடிக்கடி வருதலும் அவற்றின் பெரும் தன்மையும் குறிப்பிடத்தக்கவை ஆகும். 1998 இல் தனியார் முதலீட்டு நீண்டகால மூலதன நிர்வாகத்தில் (Hedge fund Long Term Capital Management) ஒதுக்கு நிதியின் சரிவை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடி உலக நிதியமுறையின் மையம் அதை சுற்றியுள்ள பகுதிகளைவிடக் கூடுதலான ஆபத்திற்கு உட்பட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. கடந்த ஆண்டின் நிகழ்வுகள் அத்தகைய கவலைக்கான காரணங்களைப்பற்றி சிந்தித்தல் உகந்தவையே என்பதைக் காட்டுகின்றன.

"உலகின் நிதிய மையங்களில் இருக்கும் தற்போதைய சந்தைக் கொந்தளிப்பு போருக்குப் பிந்தைய காலத்தில் முன்னோடி இல்லாத வகையில் இருக்கிறது. அமெரிக்காவில் பொருளாதார பின்னடைவு பற்றிய கணிசமான ஆபத்து உள்ள நிலையில், பல நாடுகளில் தீவிரமாக பணவீக்கம் அதற்கு கூடுதல் கெடுதல்களை கொடுக்கும் நிலையில், உலகப் பொருளாதாரம் பேராபத்திற்கு உட்படும் நிலையில் உள்ளது என்ற அச்சங்கள்தான் வளர்ந்துள்ளன. இந்த அச்சங்களுக்கு ஆதாரம் இல்லாமல் போகவில்லை."

எப்படி முன்னைய நெருக்கடியின் போக்கு பற்றி நம்பிக்கை அளிக்கக்கூடிய கணிப்புக்கள் உண்மையற்றவையாக போய்விட்டன என்பதை அறிக்கை குறிப்பிடுகிறது. அமெரிக்க நிதியச் சந்தையில் குறைந்த பிணை கடன் பிரிவில் குழப்பங்கள் தொடங்கியவுடன் அவை கட்டுப்படுத்திவிடலாம், நுகர்வோர் செலவினம் மற்றும் பொருளாதாரம் ஆகியவை பெரிதும் பாதிப்பிற்கு உட்படாது என்று கருதப்பட்டது. ஆனால் இந்த இரு மதிப்பீடுகளும் தவறாகப் போயின; அமெரிக்க வீடுகள் துறை வீடுகளின் விலை சரிவு மற்றும் விற்பனையாகாத வீடுகள் அதிகரிப்பு ஆகியவற்றால் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டது.

இதன்பின், கடந்த ஆண்டுக் கடைசியில் "எழுச்சிபெறும் சந்தைப் பொருளாதாரங்களில்" தொடர்ந்து உள்நாட்டு தேவையை நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கையின்போது, இவை அமெரிக்காவுடன் விடுபட்டு இருக்கும் எனவும் மற்றும் மற்றைய இடங்களின் தொடர்ச்சியான நிதியக் கொந்தளிப்புகளிலிருந்து "பாதுகாப்பைக் கொடுக்கும்" என்றுகூட கருதப்பட்டது. இது இந்த பொருளாதாரங்களுக்கு மூலதன உள்பாய்ச்சலுக்கு இட்டுச்சென்று, உலகின் மற்ற பகுதிகளில் சொத்துக்களின் விலை வீழ்ச்சி அடைந்த போதும் சொத்துக்களின் விலைக்கு தக்க ஆதரவை கொடுக்கும் எனக்கூறப்பட்டது. ஆனால் இப்பொழுது நிலைமை அவ்வாறு இல்லை.

"அமெரிக்க சரிவு பெரிய அளவாக இருக்கலாம் என்ற கவலைகள் பெருகியபோது, உணர்வு மாறத் தொடங்கியது. உண்மையில் உற்று ஆராய்ந்தபோது, எழுச்சி பெற்று வரும் சந்தைகளின் நீண்ட காலத் தன்மை பற்றிய சந்தேகங்கள் ஏற்பட்டன. சீனாவில் அசாதாரண முறையில் நிலையான மூலதன முதலீட்டுப் பெருக்கம், கனரகத் தொழிலில் சமீபத்தில் அதிகமானது, உலக பொருட்கள் விலைகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் பரந்த விளைவுகளைக் கொடுக்குமோ, பொருத்தமற்ற மூதலீடுகளோ என்ற கவலைகளை அதிகரித்தன. மத்திய கிழக்கிலும் இதேபோன்ற வளர்ச்சித் திட்டங்களின் இறுதியில் அளவுக்கதிகமான திறனால் (Excess capacity) ஏற்படக்கூடிய பிரச்சினைகளை உருவாக்குமோ என்றும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பல நாடுகளும் கொண்டிருக்கும் தற்பொழுதைய அதிகரித்துவரும் நிதிய பற்றாக்குறைகள் கட்டுப்படுத்தப்பட முடியாததாக இருக்குமோ என்ற கவலைகளும் வந்துள்ளன.

நிதி கண்டுபிடிப்புகளின் விஷேடமான பங்கு நெருக்கடியை தயாரிக்கும்போது, இவ்வறிக்கை அவை ஆபத்தை பரவலாகச் செய்வதால் வரவேற்கத்தக்கது என்றாலும், உண்மையில் ''அவை பல சந்தைகளிலும் கடன் மதிப்பீடுகளின் தரத்தைக் குறைத்திருப்பதுடன், ஊடுருவாத்தன்மையில் குறிப்பிட்டளவு அதிகரிப்பையும் '' அறிமுகப்படுத்தியுள்ளது என்கின்றது.

"இதன் விளைவு இழப்புக்களின் அளவும் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றி பாரிய உறுதியற்ற தன்மை பின்னர் ஏற்படுத்தலாம். இதையொட்டி புதிய முறையில் புதியசெயற்பாடுகள், மறுபங்கீடுகள் ஊடாக ஆபத்துக்கள் உயர் செலவினங்களாக மாற்றப்பட்டு, தற்காலிகமாகவேனும் குறைவான சாத்தியமுள்ள நிகழ்வுகளாக நினைக்கப்பட்டன. ஆனால் நடைமுறையில், முற்றிலும் எதிர்பாராத உண்மையான இழப்புக்களை தூண்டிவிடுவதற்கு விடையிறுக்கும் வகையில் அவை திடீரென மீண்டும் தோன்றும் வரைக்கும் இந்த புதிய கடன்களில் இருக்கும் இயல்பான ஆபத்துக்கள் திறமையுடன் மறைந்துவிட்டன மற்றும் ஏற்றங்கள் ஏற்பட்டன என்றும் பார்க்கப்பட்டன."

நிதிய முறையை கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றவர்கள் தங்கள் கவலைகளை தெரிவித்திருக்க வேண்டும்; ஆனால் "ஒருவேளை... எவரும் நிகழ்ச்சிகள் செவ்வனே நடைபெற்ற நேரத்தில் இலாபங்கள் எங்கிருந்து வந்தன என்ற கடினமான கேள்வியை கேட்பதற்கான தேவையை பெற்றிருக்கவில்லை."

புதிய நிதிய கண்டுபிடிப்புகள் ஒரு பங்கைக் கொண்டிருந்தாலும், "இன்றைய எழுச்சி பெற்றுள்ள பிரச்சினைகளின் அடிப்படைக் காரணம் மிக அதிகமான பொறுப்பற்ற கடன் வளர்ச்சி நீண்ட காலமாக இருப்பதுதான்'' என அறிக்கை கூறுகின்றது. இது இரு விருப்பமற்ற விளைவுகளை கொடுக்கும் அச்சுறுத்தலை உடையது. எது முதலில் தோன்றும் எனக் கூறுவதற்கு இல்லை. ஒரு சாத்தியப்பாடு, உலகப் பொருளாதாரம் உற்பத்தி முழுமைத் திறனை அடையக்கூடிய நேரத்தில் பணவீக்கம் அதிகமாகலாம்; இரண்டாவது கடன் தொடர்புடைய சமசீரற்ற நிலைமையின் திரட்சி நிதிய, உண்மை பொருளாதாரத்தில் பெருகலாம்; இது ஒரு புள்ளியில் தாங்கிக்கொள்ள முடியாததாகி, குறிப்பிடத்தக்க வகையில் பொருளாதார வீழ்ச்சிக்கு இட்டுச்செல்லலாம். அப்படிப் பார்க்கும்போது, இப்பொழுது உலகப் பொருளாதாரம் வரவேற்கவிரும்பாத இரண்டு இயல்நிகழ்ச்சிகளையும் ஒரே நேரத்தில் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது; ஆனால் வெவ்வேறு நாடுகள் குறிப்பிடத்தக்க வகையில் இந்த பொது அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளன."

உலகப் பொருளாதாரத்தின் வருங்காலம் பற்றியும் மற்றும் பல இடைத் தொடர்பு உடைய வழிவகைகளின் வளர்ச்சியின் பாதிப்புக்கள் பற்றியும் கணிசமாற உறுதியற்ற தன்மை இருப்பதாக அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. "அந்நியமூலதனத்திற்கு பதிலாக சொந்தமூலதனம் என்னும் பேயில்" (Spectre of deleveraging) குறிப்பிடத்தக்க வலியுறுத்தலை வைத்தது. அதாவது, பல ஆண்டுகள் கடன் குவிப்பிற்கு பிறகு கடன்களை குறைக்கும் முயற்சியில் வங்கிகளில் கடன் எடுப்போருக்கான சலுகைகளை வெட்டுவதுடன், கடன் கொடுத்தபோது இருந்த நிபந்தனைகளை கடுமையாக்ககூடும். இதையொட்டி இவற்றை எதிர்கொள்ள முடியாத நிலையில் கடன் வாங்கியவர்கள் இன்னும் கூடுதலான முறையில் சொத்துக்களை "அவசரமாக விற்கும்" நிலை ஏற்படும்.

''கூட்டு தப்புக்கணக்கு'' என்னும் பிரச்சினையை, "தனிபட்ட பொருளாதார செயல்படுவோர்" தங்கள் பிரச்சினைகளை திறைமையுடன் அணுகமுற்படுகையில் மற்றவர்களுடைய பிரச்சினைகளை இன்னும் அதிகமாக்குவதில் சென்று முடியும்.

கடன் வளர்ச்சி என்பது அதிக சேமிப்பின் தேவையைச் சுட்டிக் காட்டுகிறது என்பது அறியப்பட வேண்டும். ஆனால் அனைவரும் ஒரே நேரத்தில் சேமிக்க முடியாது, ஒரு மனிதனின் செலவினம் மற்றவரின் வருமானம் ஆகும். இதன் விளைவாக மொத்தத்தில் சேமிப்பு பெருக்கம் என்ற வழிவகையின் விளக்கம் குறைந்தபட்ச பொருளாதார நடவடிக்கை என்று ஆகும்; இது சேமிப்பு இருக்கும் நாடுகளில் இருக்கும் என்பது இல்லாமல் சேமிப்பை ஏற்றுமதி செய்யும் நாடுகளிலும் இருக்கும். உயர்ந்த முதலீடு என்பது அமெரிக்காவில் நுகர்வோரின் செலவினக் குறைப்பை ஈடு செய்ய முடியாது; ஏனெனில் பெருநிறுவனங்கள் தேவையானது (demand) சிறிது காலத்திற்கு மீளவில்லை என்று மதிப்பிடக்கூடும். இவை செலவினங்களை கட்டுப்படுத்த முதலீடுகளை பின்னடைய செய்யலாம்.

சர்வதேச ஒப்பந்தங்களுக்கான வங்கி, சமீப காலத்தில் அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பு மற்ற மத்திய வங்கிகள் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பதற்காக கையாண்ட வழிவகைகளான நிதியக் கொள்கை தளர்த்தப்படுவது பற்றியும் எச்சரித்துள்ளது; இவை எதிர்பார்க்கும் விளைவுகளை கொடுக்காது என்றும் ஒருக்கால் விலை உயர்வுகளுக்குத்தான் வழிசெய்யும் என்று கூறியுள்ளது.

கொள்கையை பொறுத்தவரையில், கடன்களை கட்டுப்படுத்துவதுடன் நிதிய வழிவகைகளும் செயல்படுத்துவதற்கு ஆதரவாக சர்வதேச ஒப்பந்தங்களுக்கான வங்கி உள்ளது; அதாவது கூடுதலான அரசாங்க செலவினங்கள் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்கிறது. ஒரு நிதிய ஊக்கம் என்பது பணவீக்கத்தை மாற்றலாம்; அதிக வெளிநாட்டு பற்றாக் குறை உள்ள நாடுகள் இதைச் செயல்படுத்த முடியாது; ஏனெனில் மாற்றுவிகிதங்களில் அதன் பாதிப்பு ஏற்படும்.

அமெரிக்காவிலும், "வரவிருக்கும் காலத்தில் மற்ற நாடுகளிலும், துவக்கத்தில் ஒப்புக் கொண்டபடி வட்டி செலுத்துதல், அசல் கொடுத்தல் போன்றவற்றை ஒழுங்காக செய்ய முடியாத நிலையில் கடன்கள் பெருகிய நிலை தோன்றியுள்ளது."

நெருக்கடிக்கு ஒரு பொது உலக அணுகுமுறையை அபிவிருத்திசெய்கையில் "பல நடைமுறைத் தடைகள்" இருப்பதாக அறிக்கை முடிவுரையாகக் கூறியுள்ளது. அதிகமான கடன் முதலில் இதற்குக் காரணமா என்பது பற்றி கருத்து வேறுபாடுகள் உள்ளன; மிக அதிகமான கடன் வளர்சசிக் காலங்களுக்குப் பிறகு "குழப்பத்தை எப்படி சரி செய்வது" என்பது பற்றி அனைவரும் ஏற்கும் வகையில் திட்டங்கள் ஏதும் இல்லை. அதைத் தவிர அதன் எதிரிகளைச் சுட்டிக்காட்டும் வகையில் அறிக்கை கூறுகிறது: "அந்த அளவிற்கு வராது என்று நம்பினாலும், தற்பொழுதைய கொந்தளிப்பின் செலவினங்கள் தொடர்ந்து பெருகி, கொள்கை அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் திறனற்றுப் போனால், இத்தகைய நம்பிக்கைகளும் மறு மதிப்பீட்டிற்கு உட்படும்."

இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஏற்கப்பட்டாலும், "நடைமுறைக்கு ஏற்றவிதத்தில்" எவரும் "கணிசமாக இழப்புக்களை கொடுக்கும் பொருளாதார நடவடிக்கைகள்" அகற்றப்பட்டுவிடமுடியும் என்று எவரும் நினைத்துவிடக்கூடாது என்று சர்வதேச ஒப்பந்தங்களுக்கான வங்கி வலியுறுத்தியுள்ளது.

வேறுவிதமாக கூறினால், சர்வதேச ஒப்பந்தங்களுக்கான வங்கியும் அதேபோல் பிற முக்கிய பொருளாதார, நிதிய அமைப்புக்களும் குறிப்பிடும் விளிம்பில் உலகப் பொருளாதாரம் நிற்கிறது என்றால், பெரு மந்த நிலைக் காலத்தில் இருந்ததற்கு ஒப்பான மிகப் பெரிய அழிவிற்கான திறனை இந்த நெருக்கடியை கொண்டிருக்கின்றது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டால், உலக மக்கள் தங்கள் வாழ்வு வன்முறையில் சிதைக்கப்படுவதை வெறுமே அமைதியுடன் பார்த்துப் பணிந்து போக வேண்டியது போலும்!

உலக முதலாளித்துத்தால் தள்ளப்பட்டுள்ள பொருளாதார பைத்தியக்கார உலகில் இருந்து மனித குலத்தை மீட்டு வழிநடத்த ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான அரசியல் போராட்டத்தை வளர்ப்பதற்கான தேவை சர்வதேச தொழிலாள வர்க்க்திற்கு உண்டு என்பதை இதைவிடத் தெளிவான முறையில் நிரூபிக்க முடியாது.