World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: government crisis deepens over US nuclear deal

இந்தியா : அமெரிக்கவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான அரசாங்க நெருக்கடி முற்றுகிறது

By Kranti Kumara
3 July 2008

Use this version to print | Send this link by email | Email the author

இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கம் இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை எப்படியும் முடிக்க வேண்டும் என்ற உறுதியினால் எழுந்துள்ள அரசியல் நெருக்கடியில் இன்னும் ஆழமாகத் தள்ளப்பட்டுவிட்டது. 2004 ல் காங்கிரஸ் கட்சி மேலாதிக்கம் செய்யும் கூட்டணி அரசாங்கம் பதவிக்கு வந்ததில் இருந்து அதற்கு ஆதரவு கொடுத்து வரும் ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணியிடம் இருந்து உடன்பாடு எதிர்ப்புக்களை எதிர்கொண்டு வருகிறது.

தற்போதைய நெருக்கடிக்கு காரணம் இந்திய பிரதம மந்திரி மன்மோகன்சிங் மற்றும் அவரை சுற்றியிருக்கும் அமெரிக்க ஆதரவு உயர்மட்ட அதிகாரிகள், சர்வதேச அணுசக்தி அமைப்பான IAEA இடம் அதன் ஒப்புதலுக்காக இந்தியா தொடர்புடைய "பாதுகாப்பு விதிகள் அடங்கிய" ஒப்பந்தம் பற்றிய விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியபின் எழுந்த அரசியல் தாக்குதல் ஆகும்.

கட்சித் தலைவரும் இறுதியாக முடிவெடுப்பவருமான சோனியா காந்தியின் இசைவுடன் காங்கிரஸ் கட்சி இந்த நெருக்கடியை முற்ற வைத்து தன்னுடைய அரசியல் தப்பிப் பிழைத்தலைக்கூட ஆபத்திற்கு உட்படுத்திக் கொண்டு விட்டது.

இருபுறத்திற்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் வரை இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றித் தொடராது எனக் கூறியிருந்த அரசாங்கத்தின் உறுதி மொழியை மீறி காங்கிரஸ் கட்சி செயல்படவுள்ளது என்பது பற்றி ஸ்ராலினிச தலமையிலான இடது முன்னணி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. ஒரு அரசியல் முறிவு காங்கிரசுடன் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கருத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளுக்கு ஸ்ராலினிஸ்ட்டுக்கள் முயற்சியை மேற்கொண்டனர்; ஆனால் இவை பலனளிக்கவில்லை.

UPA-இடது குழு என இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு பற்றி அழைக்கப்பட்டிருந்த குழு ஜூன் 25 அன்று கருந்து வேறுபாடுகளை களைவதற்கு கூடியது; ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக கூட்டம் பெரும் பகைமை உணர்வுடன் முடிந்துவிட்டது. இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுவிட்ட அரசியல் தேக்க நிலை இப்பொழுது சீர்செய்ய முடியாமல் போய்விடும் போல் தோன்றுகிறது.

ஸ்ராலினிச இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியற்குழு புது தில்லியில் ஜூன் 29 அன்று இப்பொழுது இருக்கும் அரசியல் நெருக்கடி பற்றி விவாதித்தது, கூட்டத்தை தொடர்ந்து அரசியல் காட்டிக் கொடுப்பில் ஈடுபட்டுவிட்டதாக காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகக் குற்றம் சாட்டி அது ஒரு அறிக்கையை வெளியிட்டது.

"IAEA நிர்வாகக் குழுவிடம் பாதுகாப்பு உடன்பாட்டின் ஒப்புதலுக்காக செல்வது என்பது அணுசக்தி ஒப்பந்தம் பற்றி ஐமுகூ - இடது குழு நடத்திய நவம்பர் 16, 2007 கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வை முற்றிலும் மீறுவது ஆகும் என்று அரசியற்குழு சுட்டிக் காட்ட விரும்புகிறது. குழு முடிவிற்கு வரும் வரை இந்த விஷயத்தில் ஈடுபடுவதில்லை என்று ஐமுகூ உறுதி அளித்திருந்தது; அதில் பாதுகாப்புக்கள் உடன்பாடு பற்றிய வாசகமும் அடங்கியிருந்தது" என்று அறிக்கை தெரிவிக்கிறது.

ஸ்ராலினிஸ்ட்டுக்களின் எதிர்ப்பையும் மீறி உடன்பாட்டை செய்துகொள்ள ஐமுகூ விரும்பினால் இடது முன்னணி அதற்கு கொடுத்துவரும் ஆதரவு விலக்கிக் கொள்ளப்படும் என்றும் அறிக்கை அச்சுறுத்தியுள்ளது.

"ஒருவேளை அரசாங்கம் இத்தகைய தீமை பயக்கும் உடன்பாட்டை செயல்படுத்த முடிவெடுத்தால், பாராளுமன்றத்திலும் அதற்கு பெரும்பான்மை ஆதரவு இல்லாத நிலையில், சிபிஐ(எம்) மற்ற இடது கட்சிகளுடன் சேர்ந்து ஐமுகூ அரசாங்கத்திற்கு கொடுத்து வரும் ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்."

அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை இடது முன்னணி மிகக் கடுமையாக எதிர்க்கிறது; இதற்குக் காரணம் இந்த ஒப்பந்தத்தை வாஷிங்டனுடைய வெளிநாட்டுக் கொள்கையுடன் இந்திய வெளியுறவுக் கொள்கையை பிணைப்பதற்கு காங்கிரஸ் மேற்கொள்ளும் மறைமுக முயற்சி என்று அது கருதுகிறது. அதற்கு பதிலாக அமெரிக்க செல்வாக்கை எதிர்சமபலநிலையாக ஸ்ராலினிஸ்ட்டுக்கள் ரஷ்யா, சீனாவுடன் உடன்பாட்டை ஆதரிக்கின்றனர்.

ஒப்பந்தத்தில் உள்ள ஒரு விதி இந்தியா அணுவாயுத சோதனை நடத்தினால் அமெரிக்கா தான் கொடுத்த கருவிகள் எரிபொருள் அனைத்தையும் திரும்பக் கோரலாம் என அச்சுறுத்துவதால் எதிர்க்கட்சியான வகுப்புவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) இந்த உடன்பாட்டை எதிர்ப்பதாகக் கூறுகிறது.

அணுசக்தி உடன்பாடு இந்தியாவிற்கு அமெரிக்க அணுசக்தி சட்டங்கள் மற்றும் உலக அணுசக்தி உடன்பாடுகளில் இருந்து விதிவிலக்கு கொடுக்கிறது; மற்ற நாடுகளோ அதற்கு இணங்க வேண்டும். இப்பொழுது NPT எனப்படும் அணுவாயுதம் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் தாம், அணுவாயுதம் அற்றவை அல்லது சோதனை செய்யாதவை (ஐந்து அணுசக்தி நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் தவிர) அணுசக்தி தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் இராணுவம் அல்லாத விசை உற்பத்திக்கு தேவையாள எரிபொருள் வாங்குதல் ஆகியவற்றை IAEA கண்காணிப்புடன் செய்ய முடியும்.

ஆனால், இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின்கீழ் அணுவாயுதங்களை கொண்டிருந்தாலும், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடவில்லை என்றாலும், இந்தியா முன்னேற்றமான அணுசக்தி கருவி, எரிபொருள் ஆகியவற்றை வாங்க அனுமதிக்கப்படும்; இவை இந்திய விசைத் திட்டத்திற்கு மிகவும் தேவைப்படுகின்றன.

இதற்கு ஈடாக இந்தியா தன்னுடைய இராணுவ சார்பு உடைய அணுசக்தி நிலையங்களை மற்றும் IAEA யின் கண்காணிப்பின் கீழ் அடையாளம் காணப்படும் இராணுவம் அல்லா அணுசக்தி நிலையங்களில் இருந்து பிரிக்க வேண்டும்; அதற்காக ஐ.நா.அமைப்புடன் குறிப்பான பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும். மேலும் அணுசக்தி வணிகத்தைக் கட்டுப்படுத்தும் அணுசக்தி பொருள் அளிப்புக் குழுவுடன் பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும்.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை காங்கிரஸ் கட்சி எப்படியும் முடிக்க வேண்டும் என்ற உந்துதல் பல காரணிகளின் இணைப்பினால் ஏற்பட்டுள்ளது.

முதலாவது இந்தியாவில் இருக்கும் ஐமுகூ அரசாங்கத்தின் மீது புஷ் நிர்வாகம் கொண்டுவரும் மகத்தான அழுத்தம் ஆகும். இது நவம்பர் மாதம் வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல்களை அடுத்து கூடுலான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது; தற்போதைய அமெரிக்க காங்கிரசிற்கு, அக்டோபரில் கூடவிருக்கும் சிறப்பு கூட்டத்தில், 123 உடன்பாட்டிற்கு இசைவு தருவதற்குப் போதுமான கால அவகாசம் இல்லை; அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்த ஒத்துழைப்பு 123 உடன்பாடென அப்படி அழைக்கப்படுகிறது.

இந்தியாவிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பது பற்றி அமெரிக்க காங்கிரசில்கூட எதிர்ப்புக்கள் இன்னும் நீடித்துள்ளன; அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்றாலும் கூட ஈரானின் சிவிலிய அணுசக்தித் திட்டத்திற்கு புஷ் நிர்வாகம் காட்டும் தாக்குதலின் பின்னணியில் இது கவனிக்கப்பட வேண்டும்.

அரசாங்கம் IAEA உடைய பாதுகாப்பு விதிகள், ஜூலை மாதம் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்றால், குறைந்தபட்சம் செப்டம்பருக்குள் NSG யினால் ஒப்புதல் பெறப்படவில்லை என்றால், ஒப்பந்தம் புதிய அமெரிக்க நிர்வாகத்தின்கீழ் உறுதியற்ற நிலையைத்தான் எதிர்கொள்ள நேரிடும் என்பது இந்திய உயரடுக்கிற்கு நன்கு தெரியும்.

இரண்டாவது காரணம் மன்மோகன்சிங்கை சுற்றியுள்ள அமெரிக்கச் சார்பு உடைய குழு ஒன்று அமெரிக்காவுடன் மூலோபாய உறவிற்கு ஏங்குகிறது; அது இந்தியாவிற்கு பெரும் வல்லரசு என்ற அந்தஸ்தை பெறுவதற்கு உதவும் என்று நம்புகிறது. தற்போதைய ஐமுகூ பதவிக்காலம் இன்னும் 10 மாதங்களுக்கும் குறைவாக உள்ளது என்ற நிலையில், இந்தக் குழு உடன்பாட்டை அமெரிக்காவுடன் நிறைவு செய்வதற்காக இடது முன்னணியை சவாலுக்கு உட்படுத்த வேண்டும் என்று கருதுகிறது.

இதைத்தவிர, பெருநிறுவன உயரடுக்கில் கணிசமான பிரிவு, அமெரிக்காவுடன் வணிகத்தில் இலாபம் அடைந்துள்ளது, இந்த ஒப்பந்தத்தை தன் நலனில் காண்கிறது; ஏனெனில் அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் இராணுவ தளவாடங்களில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டால், அது பெறக் கூடிய பங்கு மகத்தானதாக போகக்கூடும். அத்தகைய வணிகம் அடுத்த சில ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக ஆகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக, ஆனால் முக்கியத்துவத்தில் சிறிதும் குறையாத வகையில் உள்ள, இந்திய உயரடுக்கின் ஒரு கணிசமான பகுதி ஐமுகூ அரசாங்கம் இன்னும் கடுமையான வணிக சார்புடைய கொள்கைகளை செயல்படுத்துவதற்கு ஸ்ராலினிஸ்ட்டுக்கள் பலமுறையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் தடைகளை எதிர்க்கிறது. ஆனால் மக்களை திருப்திபடுத்தும் கோஷங்களை காங்கிரஸ் கூறினாலும், முனைப்போடு வணிகச் சார்பு மற்றும் தொழிலாள விரோத கொள்களைகளைத்தான் ஏப்ரல் 2004ல் பதவிக்கு வந்ததில் இருந்து அது செயல்படுத்தி வருகிறது. இக்கொள்கைகள் இந்தியாவின் உழைக்கும் மக்களில் பெரும்பாலனவர்கள் வாழ்வில் சமூக பேரழிவைத்தான் கொண்டு வந்துள்ளன.

இந்தக் குழு இந்திய முதலாளித்துவத்திற்கு அதன் விசுவாசமான "விரும்பத்தகுந்த" எதிரிடை அமைப்பாக பணிகளை செய்துவருவதை கருத்தில் கொள்ளவில்லை. முதலாளித்துவ அரசியலில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் முழுமையாக இணைந்துள்ளனர்; உண்மையில் 2007ல் மேற்கு வங்க மாநிலம் என்ற இதன் கோட்டையில் தொழில்துறை உபயோகத்திற்காக விவசாய நிலங்களை அபகரிக்கையில் எழுந்த விவசாயிகளின் எழுச்சியை அடக்குவதற்கு மக்களை படுகொலை செய்யவும் தயங்கவில்லை. (See: "West Bengal Stalinist regime perpetrates peasant massacre")

ஐமுகூ இன் வலது சாரிக் கொள்கைகளுக்கு எவ்வித எதிர்ப்பை கொடுத்திருந்தாலும், அதாவது அரசாங்க ஓய்வூதியங்கள் பகுதி தனியார்மயமாக்கப்படுதல் போன்றவற்றிற்கு, அவை அதிக பட்சம் வேகத்தைத்தான் குறைத்துள்ளது. 2004 ல் இருந்து இடைவிடாமல் ஐமுகூ தொடரும் முதலீட்டாளர் சார்புக் கொள்கை எதையும் மாற்றுவதில் அது வெற்றி பெறவில்லை. இப்படி எதிர்த்த போதிலும்கூட, ஸ்ராலினிஸ்ட்டுக்கள் பலமுறையும் பகிரங்கமாக ஐமுகூ கூட்டணிக்கு விசுவாசத்தை வலியுறுத்தும் வகையில் ஏப்ரல் 2009 வரை பதவிக்காலம் முடியும் வரை ஐமுகூ அதிகாரத்தில் நிலைநிறுத்தப்பட உறுதிமொழியைத்தான் கொடுத்து வந்துள்ளனர்.

தொழிலாள வர்க்கத்தை அதிக தீமை அளிக்காத எதிர்ப்புக்கள் தெரிவிக்குமாறு அழைப்பு விடுவதன் மூலம் மற்றும்; இந்திய முதலாளித்துவ அரசுடன் தொழிலாளர்களை உறுதியாக பிணைப்பதன் மூலம், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இந்திய தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் வளர்ச்சிக்கு எப்பொழுதும் ஒரு தடையாகத்தான் இருந்துவந்துள்ளனர்.

இவ்வாறு இருந்தபோதிலும்கூட, இந்திய ஆளும் உயரடுக்கின் தீவிர வலதுசாரி இத்தகைய மிகக் குறைந்த ஸ்ராலினிச எதிர்ப்பிற்கு கூட விரோதப் போக்கு காட்டுவதுடன் இந்த அரசியல் உறுத்தலை இறுதியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும் விரும்புகிறது.

தற்போதைய அரசியல் கொந்தளிப்பு ஒரு தீவிர பொருளாதார நெருக்கடிக்கு நடுவே வந்துள்ளது; இதன் வடிவமைப்பு மக்களின் பரந்த பிரிவினரிடேயே பெரும் பாதிப்பை, பேரழிவு தரக்கூடிய வகையில் ஏற்படுத்துகிறது. அரசாங்கப் புள்ளிவிவரங்களின்படி பணவீக்கம் 11 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துவிட்டது இதில் அடிப்படை உணவுப் பொருட்கள், அரிசி, கோதுமை ஆகியவற்றின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன.

இந்திய முதலாளித்துவத்தின் மரபார்ந்த ஆளும் கட்சி என்னும் முறையில் அதன் முன்னுரிமைகள் என்ன என்பதை உணர்த்தும் வகையில், மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் தலைமையில் உள்ள காங்கிரஸ் கட்சி இந்த நெருக்கடியை முன்கூட்டியே விரைவுபடுத்த பார்க்கிறது.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசியல் கோட்டையைக் கொண்டுள்ள வட்டார சமாஜ்வாதிக் கட்சி (SP) என்னும் அமைப்பின் தயவை நாடுவது என்று காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. இது ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி UNPA என அழைக்கப்படும் வட்டாரக் கட்சிகளின் கூட்டமைப்பில் ஒரு பகுதியாகும்; இரு பெரும் அரசியல் கூட்டணிகளையும் எதிர்க்கும் அமைப்பாக இது உள்ளது; அதாவது காங்கிரஸ், BJP இவற்றின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அமைப்புக்களுக்கு எதிராக. இது முன்பு இடது முன்னணியுடன் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதில் இணக்கமாக இருந்தது.

சமாஜ்வாதி கட்சி தன்னுடைய முந்தைய எதிர்ப்பை துறந்து அரசியல் ஆதாயங்களுக்காக காங்கிரசை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய செய்தி ஊடகத்தில் பரவலாகக் கூறப்படுகிறது. இக்கட்சி பகிரங்கமாக எதையும் திட்டவட்டமாக கூறவில்லை; ஆனால் சமாஜ்வாதி கட்சி (SP), காங்கிரஸ் கட்சிகளின் தலைமைகளுக்கு இடையே பரபரப்பான கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. UNPA நடத்தவிருக்கும் ஜூலை 3 கூட்டத்திற்குப் பிறகு தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறுவதாக சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ராலினிச சிபிஐ-எம் ஐ சமாஜ்வாதிக் கட்சி கைவிட்டுவிடக் கூடும் என்றுதான் அனைத்துக் குறிப்புக்களும் காட்டுகின்றன; பல ஆண்டுகளாக இத்துடன் சமாஜ்வாதிக் கட்சி சுமுகமான உறவுகள் கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தின் கீழ் பிரிவில் சமாஜ்வாதி கட்சி உடைய 39 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முடியும், மற்றும் சில சிறிய கட்சிகளின் ஆதரவையும் கொண்டு மன்றத்தில் 272 எண்ணிக்கை என்ற பெரும்பான்மையைப் பெற முடியும் என்று நம்புகிறது.

புதிய அரசியல் இணைப்புக்களை ஏற்படுத்துவதின்மூலம் அத்தகைய வெறும் பெரும்பான்மையைப் பெறுதல் என்பது உறுதியளிக்கப்படவில்லை. தேவையான பெரும்பான்மை அடையப்படாவிட்டால், காங்கிரஸ் கட்சி இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை தொடர்வதில் ஆர்வம் காட்டினால், அது அரசாங்கம் கலைக்கப்படுவதற்கு உத்துதல் கொடுத்து புதிய தேர்தல்களுக்கு வழிவகுக்கும். அத்தகைய விளைவை எதிர்பார்த்து BJP ஏற்கனவே பல வேட்பாளர்களை தேர்தலுக்காக அறிவித்துவிட்டது; அவர்களில் சிலர் இப்பொழுதுள்ள பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் ஆவர்.

ஆயினும்கூட, காங்கிரஸ் கட்சி இந்த அதிகப் பொறுப்புக்கள் இருக்கும் விளையாட்டை தொடர விரும்புகிறது; அமெரிக்காவுடன் மூலோபாய கூட்டு ஒன்றைக் காணவேண்டும் என்பதைப் பெரும் குவிப்புடன் இது புலப்படுத்தியுள்ளது.