World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Immigrants' occupation of CGT hall in Paris under immense pressure from unions

பாரிசில் CGT கட்டிட ஆக்கிரமிப்பு தொழிற்சங்கங்களில் இருந்து பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளது

By Antoine Lerougetel
9 July 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் பாரிஸ் ஒருங்கிணைப்புக்குழு 75 (CSP 75) ஏற்பாட்டின் பேரில், பாரிஸ் CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) தொழிற்சங்க கட்டிடமான, Bourse du travail ஐ 800 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் ஆக்கிரமித்துள்ளமையானது, இப்பொழுது அதன் பத்தாவது வாரத்தில் உள்ளது. எதிர்ப்பாளர்கள் பிரான்சில் அவர்கள் வசிக்கும் உரிமைக்கான விண்ணப்பங்களுக்கு தொழிற்சங்கங்களின் ஆதரவை நாடியுள்ளனர்.

ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக உள்ள CGT தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருடைய மனுக்களை மட்டும்தான் ஏற்கத் தயாராக இருக்கிறது. பாரிஸ் பாரிஸ் Préfecture (உள்ளூர் காவல் நிர்வாகம்) அனைத்து மனுக்களும் CGT மூலம் வரவேண்டும் என்று வலியுறுத்துகிறது; இது CGT ஐ அரசாங்கத்திற்கும் ஆவணம் அற்றவர்களுக்கும் இடையே ஒரு இடைத்தரகு அமைப்பு போல் மாற்றுகிறது.

தொழிற்சங்கம் மூலம் வரவேண்டும் என்று பாரிஸ் Préfecture (உள்ளூர் காவல் நிர்வாகம்) கூறியபின், CSP75 பிரதிநிதித்துவம் செய்யும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் மனுக்களை CGT ஏற்க மறுப்பது, அவர்களை ஒரு நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது; இதையொட்டி அவர்கள் Bourse du Travail ஐ ஆக்கிரமிப்பதின் மூலம் தகர்த்து எறிய முற்பட்டுள்ளனர்.

மே 2ல் தொடங்கிய ஆக்கிரமிப்பின் முதல் மூன்று வாரங்களுக்கு CGT ஆக்கிரமிப்பாளர்களை தனிமைப்படுத்தி வைத்தது; இயக்கத்தை புறக்கணிக்க வேண்டும் என்று உதவிக்கு வந்த அமைப்புக்களிடம் கூறியது. CGT கட்டிடம் இருக்கும் 13வது பிரிவு மேயரைக்கூட பால் மற்ற அடிப்படை தேவைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதாக கூறிய அவரது உறுதிமொழியை பின்வாங்குமாறு வலியுறுத்தியது.

ஆக்கிரமித்துள்ளவர்களில் நான்கு பட்டினிப் போராட்டக்காரர்களுள் ஒருவர் வந்து பார்த்தபோது மருத்துவ உதவி அமைப்பான Médecins du monde அவரிடம் அவர்கள் முதலில் CGT ஐ பார்த்த பின்னர்தான், அவ்வமைப்பின் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்பவர்களை கவனிப்பர் என்று கூறினார்.

CSP75 ன் பிரதிநிதிகள் மே 28 வரை போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த ஒரே இடதுசாரி அமைப்பு WSWS தான் என்பதை ஒப்புக்கொள்கின்றனர்..

இந்த ஆண்டு "புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி" யை தொடக்குவதற்கு CGT யின் ஆதரவு கிடைக்கும் என நம்பியிருக்கும், "அதி இடது" அமைப்பு என அழைக்கப்படும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (Ligue Communiste Révolutionnaire), ஸ்ராலினிச தலைமையில் உள்ள தொழிற்சங்கத்தின் உறுதியான ஆதரவாளர்களுள் ஒன்றாகும். LCR இன் வாராந்திர ஏடு Rouge உடனடியாக CGT அதிகாரத்துவத்தினருடைய உதவிக்கு வந்து, "ஒருங்கிணைப்பு 75, Bourse de travail ஐ சேதமுறும் வகையில் ஆக்கிரமித்திருப்பதை" தாக்கி எழுதியது; "பிளவு என்ற விஷத்தை" கொடுப்பதாகவும் குற்றம் சாட்டியது.

LCR அறிக்கை ஒன்று, அதன் வலைத் தளத்தில் வந்தது, CSP75 ன் நடவடிக்கை சார்க்கோசி அரசாங்கத்திற்கு உதவுகிறது என்ற உட்குறிப்பை காட்டியது: "இயக்கத்தை பிளவுபடுத்தி செயலற்றதாக்குவதற்கு அரசாங்கம் ஒரு வழிவகை கண்டுவிட்டது போலும்" என்று எழுதியது.

செய்தி ஊடகத்தில் ஆக்கிரமிப்பு பற்றி இருந்த சதித்தன்மை நிறைந்த மெளனத்தில் LCR ம் பங்கு பெற்றது. இதற்கிடையில் CGT -ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட, ஆவணமற்ற தொழிலாளர்களின் வேலநிறுத்தங்கள், பணியிடங்களில் ஆக்கிரமிப்பு ஆகியவற்றின் மூலம் சட்டரீதியானதாக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு இது விமர்சனமற்ற பாராட்டை கொடுத்தது. இந்த ஆக்கிரமிப்புக்கள்கூட, தங்கள் வணிகங்களான உணவு விடுதிகள், சுத்திகர பணிகள், கட்டமைப்பு பணிகள் ஆகியவை இலாபத்துடன் செயல்பட இந்த தொழிலாளர்களை நம்பியுள்ள முதலாளிகளுடனான ஒத்துழைப்பில்தான் பெரும்பாலும் நடைபெறுகின்றன.

வேலை கொடுத்தல் மூலம் சட்டபூர்வமாக்குதல்

மே 2007ல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபின் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியினால் இயற்றப்பட்ட மிகவும் கட்டுப்பாடுகளை கொண்ட குடியேற்றச் சட்டங்கள், ஆவணங்களை நன்கு ஆராயாமல் சட்டவிரோத குடியேறுபவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள வணிக முதலாளிகள் தங்களிடம் வேலை செய்பவர்களுடைய வசிக்கும் உரிமை சான்றுளை போலீசுக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவ்வாறு செய்யாவிட்டால் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர் அல்லது வேலையாட்களை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டனர்.

ஜூலை 4ம் தேதி Le Monde ஒரு தீர்வு வந்துவிட்டதாக விளக்கியது: "குடியேற்றக் கட்டுப்பாடு பற்றிய 20 நவம்பர் 2007 சட்டத்திற்கு ஒரு திருத்தம் கொண்டுவந்ததில் இறுதியாக ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; இது திரு.சார்க்கோசியின் ஆதரவாளர், ஆளும் UMP இன் Hauts-de-Seine தொகுதிப் பிரதிநிதி Frédéric Lefebvre மூலம் அளிக்கப்பட்டுள்ளது.... இதன்படி ஒரு முதலாளி சட்டவிரோத குடியேறியவரை தெரியாமல் வேலைக்கு அமர்த்தியிருந்தால், அவரை சட்டபூர்வமாக்குவதற்கு Préfecture (உள்ளூர் காவல் நிர்வாகம்) ஐ அணுகலாம் எனத் தெரிவிக்கிறது... இதை ஒட்டி ஜனவரி 7 சுற்றறிக்கை வெளிவந்தது... வேலை கொடுப்பதின் மூலம் சட்டபூர்வமாக்குதல் என்பது சட்டப்படி செய்யப்பட்டது."

பெருவணிகத்திற்கு செல்வாக்கு தேடுபவரான Lefebvre, வேலை கொடுப்பதின் மூலம் சட்டபூர்வமாக்குவதை அனுமதிக்கும் கருத்தை கூறியதற்கு அவருடைய பரந்த மனிதாபிமான உந்துதல் ஒன்றும் காரணம் அல்ல. ஆவணமற்ற 41 வயது துனீசிய பெல்காசெம் செளலி, குடியேறுபவர்களுக்கு ஆதரவாக இருக்கும், ஆனால் சூனிய வேட்டையாடப்படும் அமைப்புக்களால் Vincennes தடுப்புக்காவல் மையத்தில் இருந்து மோசமான நிலையில் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, மாரடைப்பினால் இறந்துவிட்ட நிகழ்ச்சியை பயன்படுத்துகையில், அவர் புலம்பெயர்ந்தோர் பால் உள்ள தீவிர வெறுப்புணர்வை எடுத்துக்காட்டினார். இறப்பிற்கு விடையிறுக்கும் வகையில் மையத்தில் இருந்த ஆவணமற்றவர்கள் கட்டிடத்தையே எரித்தனர். "RESF போன்ற அமைப்புக்களுக்கு இதில் பொறுப்பு இருப்பதாகத் தெரிய வந்தால் அனைத்து விளைவுகளும் ஏற்கப்பட வேண்டும், சட்டபூர்வ நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும்," என்றுதான் Lefebvre கூறினார்.

இப்படி மோசமான பாரபட்ச ஏற்பாடானது Lefevre திருத்ததால் உண்டுபண்ணப்பட்டது; அது முதலாளிகளுடைய நலன்களை, குடியேறியவர் தன்னுடைய நாட்டிற்கு திரும்புவதால் ஏற்படும் ஆபத்து, இங்கு குடும்பங்கள் ஒன்றுபடுவது, கல்வித்தேவைகள், சுகாதாரம் போன்ற ஏனய மனிதவகை அளவுகோல்களுக்கும் மேலானதாக வைத்தது.

இந்த வாய்ப்பை CGT பயன்படுத்தி ஒரு நபர்களை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது; அதையொட்டி தொழிற்சங்கம் தன் செல்வாக்கை பிரான்சில் இருக்கும் 400,000 ஆவணமற்ற தொழிலாளர்களிடம் பெருக்கிக் கொண்டது; 2008 ல் 25,000 சட்டவிரோத குடியேறியவர்களை வெளியற்றுவது என்ற அரசாங்கத்தின் நடவடிக்கையினால் ஏற்பட்ட சமூக, அரசியல் நெருக்கடியை தவிர்க்கவும் உதவியது.

CGT உதவி அமைப்புக்களையும், தொழிற் சங்கங்களையும் CS75 ன் மீது அழுத்தம் கொடுக்குமாறு அணிதிரட்டுகிறது.

மே 28ம் தேதி தங்கள் தலைமையகத்தை உறுதியுடன் ஆக்கிரமித்துள்ளவர்களை எதிர்கொண்ட நிலையில், தன்னுடைய உத்தியை மாற்றி CSP 75 பிரதிநிதிகளை ஒரு கூட்டுத் தொழிற்சங்கக் குழுக் கூட்டத்திற்கு (Intersyndicale) வருமாறு அழைத்தது; அதில் CGT, CFDT, FSU (மிகப்பெரிய அரசுப்பணியாளர் சங்கம், பிரதானமாக பொதுக்கல்வி பணியாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது) ஆகியவற்றின் பிரதிநிதிகளும் சிறிய FO, SUD (ஐக்கியம்- ஒற்றுமை -ஜனநாயகம்) ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இருந்தனர்.

CSP75 ன் பிரதிநிதிகள் Sissoko, Dabo, Djibril இன்னும் பலரும் கையெழுத்திட்ட அறிக்கை, le Journal de la Bourse du travail occupée ல் ஜூன் 28 வெளியிடப்பட்டது, இக்கூட்டத்திற்கு பின் பல கூட்டங்கள் நடந்ததாகவும், அவற்றில் MRAP (Mouvement contre le racisme et pour l'amitié des peuples -இனவாதத்திற்கெதிரான மற்றும் மக்களுக்கு இடையிலான நட்புறவு) GISTI (Immigrants Information and Support Group-புலம்பெயர்ந்தோர் தகவல் மற்றும் ஆதரவு அமைப்பு, UCIJ (United Against Disposable Immigration), LDH (League for the Rights of Man- மனித உரிமைக் கழகம்), RESF ஆகிய குடியேறுவோர் பாதுகாப்பு அமைப்புக்கள் அடங்கியிருந்தன என்றும் கூறப்பட்டுள்ளது; இவை அனைத்தும் CGT புறக்கணிப்பை அவதானித்திருந்தன, CSP75 இடம் முன்னதாக கலந்து ஆலோசிக்கவில்லை.

இந்த அமைப்புக்கள் CGT வளாகத்தை விட்டு நீங்க உடன்படுமாறு CSP75 தலைவர்கள் மீது பெரும் அழுத்தத்தை கொடுத்தன மற்ற முக்கிய கோரிக்கைகள் மற்றும் CSP 75 ன் கொள்கைகளிலும் "வளைந்து கொடுக்க வேண்டும்" என்றும் கூறின; அதாவது அனைத்து ஆவணமற்றவர்களையும் சட்டபூர்வமானதாக்குல் மற்றும், அதிகாரிகளால் வழக்கு வழக்காக நிராகரித்தல் என்பது பிரான்சில் வாழத் தகுதியுடையவர்கள் எவர் என்பதை நிர்ணயிக்கும் என்பதை சட்டரீதியானதாக ஆக்குவதாகும்.

CSP75 பிரதிநிதிகளுடைய அறிக்கை சுட்டிக் காட்டுகிறது: "தொழிற்சங்கங்கள் வேலைப் பின்னணியில் எமது விண்ணப்பங்களை பரிசீலிக்க விரும்பின ஆனால் Bourse ஐ ஆக்கிரமித்துள்ள அனைவருக்கும் ஏற்க முடியாதது ஆகும்; வேலையில் இல்லாத பெண்கள், குழந்தைகள், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோரும் உள்ளனர்."

தொழிற்சங்கங்களின் அழுத்தம் மற்றும் Préfecture (உள்ளூர் காவல் நிர்வாகம்) இன் வேண்டுகோள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆபத்தான சலுகைகள் கொடுக்கப்பட்டதையும் அறிக்கை வெளிப்படுத்துகிறது. கூட்டுத் தொழிற்சங்க குழு (Intersyndicale) மற்றும் பிற அமைப்புக்களின் கூட்டம் மே 28ல் நடந்ததை அடுத்து, "மனுக்கள் அனத்தும் அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செய்யும் வேலையை ஒட்டியும், அதைத்தவிர சட்டபூர்வ, சமூக அந்தஸ்து அடிப்படையிலும் ஒரு பட்டியல் தயாரிக்கப்படுவதும்...... என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்டது."

CGT இன்னும் பிற தொழிற்சங்கங்கள் ஜூலை 2 பாரிஸ் Préfecture (உள்ளூர் காவல் நிர்வாகம்) வசிப்பிட உரிமை கோரும் மனுக்களை அளிப்பதில் பங்கு பெறுவதற்கு ஈடாக, CSP75, Bourse ல் முதல், மூன்றாம் மாடிகளில் இருக்கும் அலுவலகங்களுக்கு CGT திரும்பிவருவதை அனுமதிக்கிறது. அனைத்து மனுக்களையும் ஒரே நேரத்தில் Préfecture (உள்ளூர் காவல் நிர்வாகம்) எடுத்துக் கொள்ள மறுத்தால், முதலாளிகள் மனுதாரர்களுக்கு வேலை உண்டு என்று எழுதியிருக்கும் மனுக்களை மட்டும் கொடுக்க கடப்பாடுடையவராக இருந்தனர்.

CSP75 ஐ தனிமைப்படுத்த வேண்டும் என்ற உறுதியில் CGT பாரிஸ் பகுதியில் அவர்கள் ஏற்பாடு செய்த ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் நூற்றுக்கணக்கானவர்களை திரட்டவில்லை; அதே போல் தாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மற்றவர்களையும் ஜூலை 2 அன்று திரட்டவில்லை.

CSP75 பிரதிநிதிகள் சுட்டிக் காட்டுவது: "தவிரவும், வேலையில்லாதவர்கள், இல்லத்தரசிகள், குழந்தைகள், வயதானவர்கள் என மற்ற ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்களும் உள்ளனர். இதைத்தவிர வேலை பார்க்கிறார்கள் என்றாலும் ஆவணம், சம்பளசீட்டு இவற்றை சமர்ப்பிக்க முடியாமல் உள்ளனர், ஏனெனில் பல தசாப்தங்களாக சிலர் சட்டவிரோத நிலையில், மிக மோசமான சுரண்டப்பட்ட நிலையில் பணி புரிந்து வந்துள்ளனர்."

பேராளர்கள் பிரான்சில் உள்ள அனைத்து ஆவணமற்றவர்களையும் ஒன்றாகக் கொண்டுவந்து அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வலுவான நிலையை ஏற்படுத்த விரும்புகின்றனர்; அதுதான் அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கும் என்று கருதுகின்றனர். "ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் முழு இயக்கமும் இனி உதவி அமைப்புக்களை மட்டும் நம்பி இருக்கக்கூடாது, தொழிற்சங்கங்களையும் நம்பி இருக்கக்கூடாது; அவர்கள் தங்கள் சொந்த வழியைக் கண்டுபிடிக்க வேண்டும், தங்களையும் தங்கள் வலிமையையும் நம்பத் தொடங்க வேண்டும்."

சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, CGT இன்னும் உத்தியோகபூர்வ இடதில் எஞ்சி இருப்பவை அனைத்தும் ஆவணமற்றவர்கள் நிலை பற்றியும், அப்படிப்பார்த்தால் ஆவணம் வைத்திருக்கும் குடியேறியவர் நிலைபற்றியும் பல தசாப்தங்களாக பொருட்படுத்தா நிலையில்தான் உள்ளன. இந்த "இடது", பிரெஞ்சு நடைமுறையின் துணையுறுப்பு என்பதைத் தவிர வேறு எந்த சிறப்பும் இல்லாதது, அது இலாபமுறை, தேசிய வெறி இவற்றிற்கு முழு ஆதரவு கொடுப்பது ஆகும். அரசாங்கத்தில் இருந்தபோது, இடது கட்சிகள் குடியேறுபவர்களுக்கு எதிராக விதிகளை சுமத்தின இப்பொழுது எதிர்க்கட்சியில் இருந்தாலும் அவற்றை தங்கள் தேர்தல் வேலைத்திட்டங்கள், பொது அறிக்கைகளில் பராமரித்துக் கொண்டுதான் உள்ளன.

ஒரு இடது அரசாங்கத்தின் கீழ்தான் தடுப்புக் காவல் மையங்கள் நிறுவப்பட்டன; ஏனெனில் UMP ஐ போல சோசலிஸ்ட் கட்சியும் தெரிந்தெடுக்கும் வகையில் (Selective) குடியேற்றத்தை அனுமதிக்கலாம் என்ற கருத்தைக் கொண்டதாகும்.

இவர்கள் போக்கின்படி விட்டுவிட்ட நிலையில், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் குழுக்கள் தேவாலையங்கள் மற்றும் பிற பொதுக் கட்டிடங்களை ஆக்கிரமித்தல் என்று வந்து, பலமுறையும் பட்டினிப் போராட்டம் நடத்தி அதிகாரிகளுடைய அறிநெறி மனச்சாட்சிக்கு அழைப்பும் விடுத்தனர்.

Bourse du Travail ல் ஜூன் 28ல் நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஆசிரியர் சுட்டிக் காட்டியபடி, இது அதிகாரிகள் அறநெறி அடிப்படையில் மனச் சாட்சியை பெற்றிருக்க வேண்டும் என்பதை புனைவாகக் கொள்கிறது. மாறாக இருக்கும் அதிகார சக்திகள் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையின் கீழ், இன்னும் கூடுதலான உடனடி அரசியல் செயற்பட்டியலை கொண்டுள்ளன: அதன்படி உலகளாவிய பொதுச் சந்தையில் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கு அவை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை அழிக்க வேண்டும். மனிதாபிமானத்துடன் கூடிய அறநெறி மனச்சாட்சி என்பது ஆளும் உயரடுக்கு கொள்ள முடியாத ஒரு ஆடம்பரம் ஆகும்; இதைத்தான் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பெருகிய முறையில் கண்டு வருகின்றனர்.

CSP75 போன்ற இயக்கங்கள் முதலாளித்துவத்தின் இந்த முண்டுகோல்களில் இருந்து சுயாதீனம் அடைவது என்பது, அரசாங்கம் மற்றும் ஆளும் உயரடுக்கு ஆகியவற்றின்மீது அழுத்தம் கொடுக்கலாம் என்ற முன்னோக்கிலிருந்து முறித்துக் கொண்டால் அன்றி, இயலாத செயல் ஆகும். இல்லாவிடில், எவ்வளவு குமட்டல் ஊட்டினாலும்கூட அவர்கள் தொழிற்சங்கம் மற்றும் இன்னும் ஏனைய அமைப்புக்களின் கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்க நேரிடும்.

பிரான்ஸ், ஐரோப்பாவில் உள்ள தொழிலாள வர்க்கத்திடம் அவை கட்டாயம் திரும்ப வேண்டும். புலம்பெயர்ந்தோர் உரிமைகள் மீதான தாக்குதல் என்பது ஐரோப்பா முழுவதும் இருக்கும் அனைத்து தொழிலாளர்களின் பணி நிலைமைகள், வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றின்மீது பெரு வணிகம் நடத்தும் தாக்குதல்களின் இணைந்த ஒரு பகுதியே ஆகும். ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் முழு பிற்போக்கு கொள்கைகளுக்கும் எதிரான ஒரு சோசலிச முன்னோக்கை கொண்ட ஒரு கூட்டுப் போராட்டத்தை நடத்துவதின் மூலம்தான் இதனைச் சாதிக்க முடியும்.