World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Hundreds of thousands displaced by severe Sri Lankan floods

இலங்கையில் பெரும் வெள்ளத்தால் இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

By Kapila Fernando
5 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் பருவகால மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் சுமார் 400,000 மக்கள் இடம்பெயரத் தள்ளப்பட்டுள்ளனர். உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை புதன் கிழமை 20 வரை அதிகரித்திருந்தது. வானிலை ஆராய்ச்சி அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் மேலும் மழையும் வெள்ளமும் இருக்கும் எனத் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆயினும் பெரும்பாலானவர்கள் குறைந்தளவு உதவிகளை பெற்றுள்ளனர் அல்லது பெறவில்லை. உலக சோசலிச வலைத் தளத்திற்கு (WSWS) கருத்துத் தெரிவித்த மக்கள் அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் அதன் நிவாரண நடவடிக்கைகளின் போதாமை பற்றி ஆத்திரமடைத்திருந்தனர்.

மேல் மாகாணத்தில் களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் தென் மாகாணத்தில் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மத்திய மலையக பிரதேசங்களில் இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழ்பவர்களே பாதிக்கப்பட்டவர்களாவர். பல பிரதேசங்களில் மண் சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் வீதிகள் தடைப்பட்டுள்ளதோடு போக்குவரத்து இடை நிறுத்தப்பட்டுள்ளன. தொலைத் தொடர்பு மற்றும் மின்சார சேவைகளும் தடங்களுக்கு உள்ளாகியுள்ளன.

மோசமாகப் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தில் 63,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு பல பிரதேசங்கள் இன்னமும் துண்டிக்கப்ட்டுள்ளன. களுகங்கை, குகுளேகங்கை மற்றும் குடா கங்கை ஆகிய ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன. திங்களன்று, இரண்டு பிள்ளைகள் உட்பட நான்கு பேர் அடங்கிய குடும்பமொன்று, வெல்கம என்ற பிற்படுத்தப்பட்ட கிராமத்தில் மணி சரிவில் புதையுண்டு போனது. இந்த மாவட்டத்தில் மேலும் பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, அதே போல் வீடுகள் மற்றும் பயிர்கள் சேதமடைந்த தொகை போன்றவற்றை வெள்ளம் வடியும் வரை சரியாக அறிந்துகொள்ள முடியாது. வறியவர்களே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கை ஒன்று, நிவாரண நடவடிக்கைகளுக்காக 22 மில்லியன் ரூபா (220,000 டொலர்களுக்கும் குறைவு) ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது. இது ஒரு நபருக்கு 50 ரூபாவை விட குறைவான தொகையாகும் (அமெரிக்க டொலர் 50 சதம்). இராணுவத்தை அணிதிரட்டியுள்ளதாக அரசாங்கம் அறிவித்த போதிலும், உதவிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு ஹெலிகொப்டர் மாத்திரமே அனுப்பப்பட்டுள்ளது. சில பிரதேசங்களில், பெருக்கெடுத்துள்ள வெள்ளத்தால் படகுகளில் செல்லவும் வழியில்லை.

2004ல் இலங்கையில் 40,000 உயிர்கள் சுனாமிக்கு பலியானதை அடுத்து, புதிய அனர்த்த முகாமைத்துவ திட்டங்களை தீட்டியிருப்பதாக அரசாங்கம் பிதற்றிக்கொண்டது. அண்மையில் பெருக்கெடுத்த வெள்ளமானது அதே ஆற்றலின்மை, நிதி பற்றாக்குறை மற்றும் அலட்சியத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. 2004 பேரழிவின் போதும் அரசாங்கத்தின் பிரதிபலிப்பு இதவேயாகும். சுனாமியால் பாதிக்கப்பட்ட பலர், இன்னமும் இழிநிலையிலான முகாம்கள் அல்லது உறவினர்களுடன் வாழ்கின்றார்கள் அல்லது கதியற்றுத் தள்ளப்பட்டுள்ளனர்.

WSWS நிருபர்கள் பல பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கினால் இடம்பெயர்ந்தவர்களை சந்தித்தனர். தங்களுக்கு போதுமானளவு உணவும் குடி தண்ணீரும் கிடைக்கவில்லை என பலர் தெரிவித்தனர். பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் உறங்குவதற்கு சரியான இடங்கள் இருக்கவில்லை. போதுமான வசதிகள் இன்றி பலர் நெருக்கம் மிக்க அகதி முகாங்களில் தங்கியிருக்கின்றனர்.

இறப்பர் தோட்டமான குளுகஹாவத்த, வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு சுமார் 100 குடும்பங்கள் அங்கு சிக்கியுள்ளன. அவர்களில் காய்ச்சலில் அவதிப்படும் இரு பிள்ளைகளும் கர்ப்பிணி ஒருவரும் அடங்குவர். தோட்ட முகாமையாளர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்திருந்த போதிலும், ஆதரவற்ற தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு படகுகளோ அல்லது ஹெலிகொப்டர்களோ வழங்கப்படவில்லை.

அருகில் உள்ள தம்பலவத்த பெருந்தோட்டத்தில் மேலும் 40 குடும்பங்கள் சிக்கியுள்ளன. மக்கள் தங்கியிருப்பதற்காக உயர் நிலங்களுக்கு சென்றுள்ளதோடு இரண்டு நாட்களாக அவர்களுக்கு சாப்பாடு கிடைக்கவில்லை. கடந்த நாட்களாக தொழிலாளர்களுக்கு சம்பளமும் கிடைக்கவில்லை.

கொழும்பு மாவட்டத்தில், களனி ஆற்றுக்கு இரு புறமும் வாழும் சுமார் 25,000 சேரி வாசிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வீடற்றவர்களில் பெரும்பாலானவர்கள் குறைந்த கூலிக்கும், நாள் சம்பளத்துக்கும் உழைப்பவர்கள் மற்றும் தெரு வியாபாரிகள். அவர்கள் பயங்கரமான நிலைமைகளின் கீழ் இடம்பெயர்ந்து முகாம்களில் கூட்டமாக தங்கியுள்ளனர். மலசல கூடங்கள் நிரம்பியிருப்பதோடு தொற்றுநோய்கள் பரவுவதற்கான அபாயமும் உள்ளது.

கொலன்னாவை குரின்ஞாவத்தையில் மேலும் 245 பேர் தமது தங்குமிடங்களுக்கு அருகில் உயர் நிலங்களில் கூடாரங்களை அமைத்துள்ளனர். இந்த குடியிருப்பின் முழு பரப்பளவு ஒன்றரை ஹெட்டேயர் மட்டுமே. மற்றும் அதில் பெரும் பகுதி ஒரு மீட்டர் உயர தண்ணீரில் மூழ்கியுள்ளது. கொலன்னாவையில் இத்தகைய பல குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

லொறியில் வேலை செய்யும் சம்பத் WSWS க்குத் தெரிவித்தாவது: "இன்னமும் எங்களுக்கு போதுமான உதவி கிடைக்கவில்லை. கிராமசேவகர் வந்து எங்களுக்கு 40 கிலோ அரிசி, 5 தேங்காய்கள், ஒரு போத்தல் தேங்காய் எண்ணெய் ஒவ்வொரு அவரையின காய்களிலும் ஐந்து கிலோ, கருவாடு மற்றும் உப்பும் கொடுத்தார். மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். எங்களுக்கு சமைக்க இடம் கிடையாது. அந்தப் பொருட்களின் தொகையும் எங்களுக்கு போதுமானதல்ல. எங்களுக்கு சமைத்த உணவு கிடைக்கவில்லை. எங்களை முகாம் ஒன்றுக்கு இடம்மாறக் கோரினாலும் அங்கு போதுமான இடம் கிடையாது. எப்பொழுதும் நிலைமை இப்படித்தான்.

"நான் 8ம் வகுப்பு வரை மட்டுமே பாடசாலை சென்றேன். நான் மணம் முடித்து இரு பிள்ளைகள் உள்ளனர். இப்பொழுது பிள்ளைகளுக்கு காய்ச்சல். ஏப்பிரலிலும் நாங்கள் வெள்ளத்தை எதிர்கொண்டோம். கடந்த ஆண்டும் இதே நிலைமை இருந்தது. எங்களால் உயர்ந்த வாழ்க்கைச் செலவில் வாழ முடியவில்லை. அவர்கள் (அரசாங்கம்) யுத்தத்தால் அனைத்துப் பொருட்களின் விலைகளையும் உயர்த்துகின்றனர்." சம்பத் யுத்தத்தை நிறுத்த விரும்பினாலும், அரசாங்கமோ அல்லது எதிர்க் கட்சியோ மோதல்களை நிறுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை.

இடம் பெயர்ந்தவர்களுக்காக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வித்யாவர்தன என்ற பாடசாலை முகாமாக மாற்றப்பட்டுள்ளது. அமிலா ஜானகி இதுபற்றி தெளிவுபடுத்துகையில்: "நாங்கள் இங்கு திங்கட் கிழமை வந்தோம். தண்ணீர் எங்கள் முழங்காலை எட்டும் வரை நாங்கள் வீட்டில் தங்கியிருந்தோம். இங்கு சுமார் 1,200 பேர் உள்ளனர். கிராம சேவகர் எங்களுக்கு சில பொருட்களை தந்தார். ஆனால், அது இரண்டு சாப்பாடுகளுக்குக் கூட போதாது. நாங்கள் பகல் சாப்பாட்டுக்கும் இரவு சாப்பாட்டுக்குமாக ஒரே உணவை தயார் செய்யத் தள்ளப்பட்டுள்ளோம்.

"என்னுடைய கணவர் சாலை விபத்தொன்றில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார். நான் இடியப்பம் அவித்து விற்று வாழ்க்கையை ஓட்டுகிறேன். எனது இரு மகள்களுக்குமான கல்வி செலவுகளை எனது சகோதரர் தாங்குகிறார். எனது வீடு பலகையில் கட்டப்பட்டது. எனது கனவர் வேலை செய்த அரச திணைக்களத்தில் அவரை நிரந்தரமாக்காததன் காரணமாக நாங்கள் மிகவும் வறிய நிலையில் வாழ்கிறோம். முன்னர் உங்களால் 100 ரூபாவுக்கு எதையாவது வாங்க முடியும். ஆனால், அவற்றுக்கு இன்று 300 ரூபா வேண்டும். நாங்கள் கடன் வாங்கி வாழ்கிறோம்," என்றார்.

வித்யாவர்தன பாடசாலைக்கு இடம்பெயர்ந்திருப்பவர்களில் காமினி, சமிந்த மற்றும் திலங்க ஆகிய தூர கிராமப்புற பிரதேசங்களை சேர்ந்த இளம் தொழிலாளர்களும் அடங்குவர். அவர்கள் நிவாரண பற்றாக்குறை தொடர்பாக ஆத்திரமடைந்திருந்தனர். கொழும்பில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிபில பிரதேசத்தைச் சேர்ந்தவரான திலங்க, "ஒரே ஒரு கிராமசேவகர் மட்டுமே இங்கு வந்தார் (பாடசாலைக்கு). அனர்த்த முகாமைத்துவத்தில் இருந்து எவருமே வரவில்லை. நாங்கள் இன்னமும் இளைஞர்கள் மற்றும் எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்கிறோம். ஆனால், வயது முதிர்ந்தவர்களும் ஏனைய யுவதிகளுக்கும் உதவி தேவை. நாங்கள் அவர்களை இங்கு கொண்டுவர உதவினோம்," என்றார்.

எவரிடமும் பணம் இருக்கவில்லை என திலங்க தெளிவுபடுத்தினார். "சுமார் 80 வீதமானவர்கள் நாளுக்கு நாள் சம்பாதித்து வாழ்கின்றார்கள். ஒருவர் 6,000 ரூபாய்கள் மாதம் சம்பாதிப்பார். நான் மேலதிக நேரம் வேலை செய்தால் கொஞ்சம் கூடுதலாக எடுப்பேன். எங்களது கிராமங்களில் வாழும் மக்களின் நிலைமையும் இதுவே. எங்களது நிலைமைகளை முன்னேற்ற எங்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. ஆட்சியில் இருக்கும் எல்லா அரசாங்கங்களும் யுத்தத்தைப் பற்றியே பேசுகின்றன. அவர்கள் யுத்தத்தை தவிர வேறு எதையும் செய்வதில்லை."

வெள்ளத்தால் வீடற்றவர்களாக்கப்பட்ட இலட்ச்கணக்கான மக்களின் நிலைமை, தீவு பூராவும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பதன் வெளிப்பாடாகும். அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கான பிரமாண்டமான இராணுவச் செலவும் சர்வதேச ரீதியிலான எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றமும் நாட்டில் பணவீக்கத்தை குவியச் செய்துள்ளன. எப்போதாவது காட்டும் அக்கறைக்கு மேல், அரசாங்கத்தின் அரசியலினால் உருவாக்கப்பட்டுவரும் சிரமங்கள் மற்றும் கடும் துயரங்களை அணுகுவதற்கு எதுவும் செய்யப்படுவதில்லை.