World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US: Republicans prepare to play terror card in 2008 election

அமெரிக்கா: குடியசுக்கட்சியினர் 2008 தேர்தலில் பயங்கரவாத அச்சத்தை பயன்படுத்தத் தயாராக உள்ளனர்

By Bill Van Auken
4 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

குடியரசுக் கட்சி மற்றும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர் ஜோன் மக்கெய்ன் 2008 பிரச்சாரத்திற்கு, கடந்த மூன்று தேசிய தேர்தல்களில் குடியரசுக் கட்சியினர் பயன்படுத்திய அதே முக்கியமான பிரச்சினையை அதாவது பயங்கரவாதம் பற்றிய பிரச்சினையை முன்வைப்பதற்கு தயாரிப்பு செய்து வருகின்றனர்.

இதில் வியப்பு ஏதும் இல்லை; ஏனெனில் "பயங்கரவாதத்தின் மீதான உலகந்தழுவிய போர்" என்று அழைக்கப்படுவது மற்றும் செப்டம்பர் 11, 2001 நிகழ்வுகள் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள் அனைத்திற்கும் அடிப்படை கருத்தியல் கட்டமைப்பைக் கொடுத்துள்ளது. இந்த கட்டமைப்பை பெயரளவிற்கு எதிர்க்கட்சி எனக் கூறிக்கொள்ளும் ஜனநாயகக் கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளது; வெளிநாடுகளில் நடத்தப்படும் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு நிதியளிக்க வாக்குகளை அளிக்கிறது; உள்நாட்டில் உளவுவேலை செய்வதற்கும், ஜனநாயக உரிமைகளைக் குறைப்பதற்கும் அனுமதி அளிக்கிறது.

குடியரசுக் கட்சியினர் நவம்பர் மாதம் நடந்த தேர்தல்களில் பேரழிவு தரக்கூடிய தோல்வியை எதிர்கொள்ள இருக்கின்றனர் என்ற பரந்த கணிப்புக்களுக்கு இடையே இப்பிரச்சாரத்திற்கு ஒரு புத்துயிர் கொடுக்கும் வகையிலும், அமெரிக்க மக்களை எங்கும் பரவியிருப்பதாகக் கூறப்படும் பயங்கரவாத அச்சுறுத்தலைக் காட்டும் வகையிலும் பிரச்சாரத்தில் அது ஒரு வெறிபிடித்த தன்மையை எடுக்க இருக்கிறது..

மான்ஹட்டன் நகரமையத்தில் நடந்த நபர் ஒன்றுக்கு $1,000 கொடுத்து இரவு விருந்துண்ணும் குடியரசுக் கட்சி நன்கொடையாளர் கூட்டத்தில் துணை ஜனாதிபதி டிக் செனி கடந்த வியாழனன்று இந்த பயங்கரவாத கருப்பொருள் பற்றி முழங்கினார்.

"இந்தத் தேர்தல் ஆண்டு தேசிய பாதுகாப்பு பற்றிய அடிப்படை வினா ஒன்றை எழுப்பியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், ஒவ்வொரு முனையிலும் போரிட்டு வெல்ல வேண்டும் என்பதில் எவர் அக்கறையாக உள்ளனர்? செனி அப்படி ஒரு வினாவைக் கேட்டுள்ளார். "விருப்பத்தேர்வு மிகத் தெளிவாகத்தான் உள்ளது. ஒரு புறத்தில் ஜனநாயகக் கட்சி -- செனட்டர் ஹாரி ரீட் போன்றவர்கள் தலைமையில் உள்ளது; அவரோ ஓராண்டிற்கு முன்னரே போரில் தோற்றுவிட்டோம் என்று கூறியவர். காங்கிரசில் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் ஒரு முக்கியமாக கண்காணிப்பு சட்டம் காலாவதியாக விட்டு விட்டனர்; இது அமெரிக்காவை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மிகவும் ஆபத்திற்கு உட்படுத்தியுள்ளது."

"இந்தப் பிளவின் மறுபுறத்திலோ குடியரசுக் கட்சி இருக்கிறது -- இதன் தலைவர்கள் கருத்துக் கணிப்பு என்ன கூறினாலும், பண்டிதர்கள் என்று பகன்றாலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்" என்று துணைஜனாதிபதி செனி கூறினார்.

"9/11ல் இருந்து எமது நிர்வாகம் தேசிய பாதுகாப்பு பற்றி கடினமான முடிவுகள் பலவற்றை எடுத்துள்ளது. இதன் விளைவாக நம் நாட்டின் விரோதிகள் நிலைகுலைந்து போயினர். 9/11 தாக்குதலுக்கு பின்னர் பயங்கரவாதிகள் "நாம் அமெரிக்காவை மீண்டும் 01, 02, 03, 04, 05, 06 அல்லது 07 ல் தாக்க வேண்டாம் என்று கூறியதாக நான் ஒன்றும் நினைக்கவில்லை. அவர்கள் எம்மை தாக்க விரும்புகின்றனர். அதை அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் அதில் தோல்வியுற்றனர்."

செனி ஏழு ஆண்டுகளை குறிப்பிடுகிறார்; ஆனால் "எம்மை தாக்க முயற்சி" செயதது பற்றி ஒரு நிகழ்வைக் கூடக் குறிப்பிடவில்லை. கடந்த ஆறரை ஆண்டுகளாக அரசாங்கத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ள பயங்கரவாத சதி என்று கூறப்படும் ஒவ்வொரு திட்டமும் ஒரு பொதுக் கூறுபாட்டை கொண்டுள்ளது: சதித்திட்டம் என்று கூறப்படுவது இரகசிய தகவல் கொடுப்பவர்களின் செயலூக்கமான தலையீடு ஏதும் இல்லாமல் இருந்திருக்க முடியாது என்பதுதான் அது.

இஸ்ரேலுக்கு செல்வாக்கு தேடும் மிகப் பெரும் அமெரிக்க அமைப்பான AIPAC ல் திங்களன்று தோன்றிய செனட்டர் மெக்கெயின் பயங்கரம், பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதிகள் என்ற சொற்களை அவருடைய குறுகிய உரையில் குறைந்தது 15 தடவைகளாவது பயன்படுத்தினார். ஈராக்கிற்கு எதிரான போரின்போது கூறப்பட்ட பழைய போலிக் காரணங்களை மீண்டும் முன்வைத்தார் -- அதாவது "பேரழிவு தரும் ஆயுதங்களை" கொண்டுள்ள ஆட்சியினால் ஏற்படக்கூடிய ஆபத்து, பயங்கரவாதத்துடன் பிணைப்புக்கள் என்று -- ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போர்க் கொள்கையை நியாயப்படுத்துகையில் இவ்வாறு பேசினார்.

அதே நேரத்தில் அவர் பயங்கரவாத அச்சுறுத்தலை ஈராக்கின் மீதான ஐந்து ஆண்டு கால தொடர்ந்த போர், ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் வாதமாகவும் முன்வைத்தார். அமெரிக்கா இப்பொழுது படைகளை திரும்பப் பெறுதல் என்பது "ஒரு பயங்கரவாதிகளின் புகலிடத்தை" ஏற்படுத்தி விடும் என்றும், "அது அமெரிக்காவின் பாதுகாப்பை ஆழ்ந்த முறையில் பாதித்துவிடும்" என்றும் கூறினார்.

பயங்கரவாதம் பற்றி இப்படி முரசு கொட்டுவதற்கு ஒரு உறுதியான நோக்கம் உள்ளது. 2008 தேர்தல்கள் அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள்ளேயே அமெரிக்க கொள்கை பற்றிய கடுமையான பிளவுகள் இருக்கும் சூழ்நிலையில் நடைபெறுகின்றன. புஷ் நிர்வாகத்தால் வகுக்கப்பட்ட பாதையைத் தொடர்வது பற்றி ஆளும் வட்டங்களுக்குள்ளேயே தீவிர எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளது; குறிப்பாக அதன் மத்திய கிழக்கு கொள்கை பற்றி. இது ஜனநாயகக் கட்சியின் பரக் ஒபாமாவிற்கு வெளிநாட்டுக் கொள்கை நடைமுறை மற்றும் வோல் ஸ்ட்ரீட்டில் நிறைந்த ஆதரவுத் தளத்தை கொடுக்கும் அரசியல் வெளிப்பாடாக வந்துள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றி தொடர்ந்து கூறுதல், ஜனநாயகக் கட்சியினர் "பயங்கரவாதம் பற்றி மிருதுவாக உள்ளனர்" என்ற குற்றச்சாட்டு இரண்டும் ஜனநாயகக் கட்சியினரை மிரட்டும் நோக்கத்தை கொண்டவை; இது செல்வாக்குடைய செய்தி ஊடகம், கொள்கை வகுக்கும் வட்டங்களில் நடக்கும் விவாதத்தில் செல்வாக்கு பெறும் நோக்கம் மற்றும் பொதுமக்கள் கருத்தைத் தகர்க்கும் நோக்கம் இரண்டையும் கொண்டது.

இந்த மூலோபாயம், ஜனநாயகக் கட்சியை பொறுத்தவரையில் திறமையாக செயல்படுத்தப்பட்டாலும், அவர்களை இன்னும் வலதிற்கு தள்ளி ஈராக் போருக்கு பின்னே அவர்களுடைய அரசியல் செயல்களை பிணைக்கும் வகையில் தள்ளத் தூண்டினாலும், அமெரிக்க மக்களை பொறுத்த வரையில் மொத்தமாக குடியரசுக் கட்சியினர் ஒரு சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

இடைவிடாமல் கூறப்படுவதால், பயங்கரவாதம் என்ற பல்லவி அதன் அரசியல் தாக்கம் பலவற்றை இழந்துவிட்டது. இப்பொழுது, முன்னாள் வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலர் Scott McClellan கூட பயத்தை தூண்டிவிடும் தன்மைதான் ஈராக் போருக்கு முன்பு பயன்படுத்தப்பட்டது என்றும் அது ஒரு "போலித்தன அரசியல் பிரச்சாரம் என்றும்" கூறியுள்ளார்.

2008 தேர்தல் நடக்க இருக்கையில், "பயங்கரவாதம் என்ற துருப்புச்சீட்டை" திறமையுடன் பயன்படுத்தும் நம்பிக்கைகொண்டுள்ள வகையில், குடியரசுக் கட்சிக்கு வெறும் அலங்காரச் சொற்களைவிட கூட ஏதேனும் ஆதாரங்கள் தேவை.

கியூபாவில் உள்ள குவாண்டனாமோ குடா, அமெரிக்க சிறைமுகாமில் இருந்து வந்துள்ள பயமுறுத்தும் சொற்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் அவர்கள் வேலைசெய்து கொண்டிருக்கின்றனர் என்பது ஒரு அறிகுறி ஆகும். செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை திட்டமிட்ட சதியாளர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட காவலில் உள்ள ஐவரின் வழக்கறிஞர்கள் ஒரு 20 பக்க சட்ட ஆய்வை பதிவு செய்துள்ளனர்; அதில் பென்டகன் அவர்கள் வாதிடுபவர்களின் வழக்குகளை இராணுவக் குழுவின் முன் வைப்பதற்கு காரணம், வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலின் உச்சக் கட்டத்தின் போது அந்த நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து வருவதற்காகத்தான் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்தக் கருத்தாய்வு குற்றச் சாட்டு சுமத்தும் அரசாங்க வக்கீல்களில் ஒருவர் செப்டம்பர் 15, நியூ யோர்க் மற்றும் வாஷிங்டன் மீது நடந்த தாக்குதல்களின் ஏழாம் ஆண்டு நிறைவு வரும் திங்களுக்கு மறு திங்கள் நடத்தப்படலாம் என்று மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார் என்று சுட்டிக் காட்டுகிறது. "இது செப்டம்பர் நடுவில் விசாரணை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும்; பொதுத் தேர்தல்களுக்கு ஏழு வாரங்களுக்கு முன்பு என்பது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல" என்று அறிக்கை கூறுகிறது.

McClatchy செய்தித்தாட்கள் வாடிக்கையான முறையில் சில காலமாக இராணுவக் கைதிகளுடைய வழக்கறிஞர்கள் "அமெரிக்க மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அல்லது அரசியல் ஆதாயம் பெறுவதற்காக குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படலாமா என்ற உள்விவாதங்களை கொண்டுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த "விவாதம்" அமெரிக்க மக்களுக்கு முதுகுப்புறம்தான் நடக்கும் என்பது வெளிப்படை. இதன் உட்குறிப்புக்கள் மிகவும் கவனமாக ஆராயப்பட வேண்டும். அமெரிக்க அரசாங்கத்திற்குள் இருக்கும் கூறுபாடுகள், ஐந்து பேர் மீது இருக்கும் விசாரணையை விரிவுபடுத்தினால் கிடைக்கக் கூடிய அரசியல் ஆதாயங்கள் பற்றி விவாதிக்கின்றன; இதுவோ ஐந்து பேர் மரணதண்டனைக்கு வழிவகுக்கும்.

இன்னும் உளைச்சல் கொடுக்கக்கூடிய கருத்துகள், கடந்த ஏப்ரல் மாதம் நியூ யோர்க்கில் முன்னாள் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தேசிய மன்றத்தின் அவைத்தலைவரான Newt Gingrich கூறியிருப்பது ஆகும். நவம்பர் மாதம் ஒரு "தைரியமான பாதையை" மேற்கொள்ளாவிட்டால் அவருடைய கட்சி "ஒரு உண்மையான பேரழிவு" மற்றும் "உறுதியான இழப்புக்களை" சட்ட மன்றத்தில், அடையும் என்ற பகிரங்க எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

நியூ யோர்க்கில் கூட்டத்தில் ஒருவரால் செப்டம்பர் 11, 2001 தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் ஏன் இல்லை என்று கேட்கப்பட்டதற்கு முன்னாள் அவைத் தலைவர் தனக்கு விடை தெரியவில்லை என்றும், ஆனால் அது அவருடைய கட்சியை எதிர்கொண்டிருக்கும் அரசியல் பிரச்சினைகளில் ஒன்று என்றும் குறிப்புக் காட்டினார்.

"இது... புஷ் நிர்வாகத்தின் மிகப் பெரிய துன்பியல்களில் ஒன்றாகும்" என்று Gingrich அறிவித்தார். "தீயவர்களை குறுக்கிட்டுத் தடை செய்வதில் அவர்கள் அதிக வெற்றி அடையும்போது, நாம் ஆபத்தில் இருக்கிறோம் என்பதற்கு குறைந்த சான்றுகள்தான் உள்ளன. எனவே தாக்குதல் இல்லாத அளவிற்கு அவர்கள் சிறந்த முறையில் செயல்புரிகையில், இப்படிப்பட்ட தாக்குதல் இருக்கப் போவதில்லை என்று கூறுவது எளிதாகி விடுகிறது. அதாவது அது நமக்கு அவ்வப்பொழுது பலவற்றையும் நினைவூட்டுவதற்கு கிட்டத்தட்ட எப்பொழுதாவது அவர்கள் எவரையேனும் தாக்குவதற்கு அனுமதித்திருக்க வேண்டும் போலும்."(வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது).

இப்படி ஏதோ தற்செயலான Gingrich கூறுவது புஷ் நிர்வாகம், குடியரசுக் கட்சி ஆகியவற்றின் உயரடுக்கிற்குள் இருக்கும் சிந்தனை, விவாதங்கள் பற்றி அவர்களே கொடுக்க விரும்பாத பார்வையை அளிக்கிறது. இதன் தர்க்கத்தில் தவறுக்கு இடமில்லை. அமெரிக்க மண்ணின் மீதான மற்றொரு பெரிய பயங்கரவாதத் தாக்குதல் அமெரிக்க மக்களுக்கு பயங்கரவாதத்தின் நிறைந்திருக்கும் அச்சுறுத்தல் பற்றி "நினைவுறுத்தியிருக்கும்"; அதையொட்டி அரசியல் அளவில் அவர்கள் அதிர்ச்சிக்கு உட்படுத்தி மிகக் கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு வழியை கட்சி முன்வைப்பதற்கு வாக்களித்திருக்கவும் வைத்திருக்கும்.

குடியரசுக் கட்சியின் முன்னாள் மன்றத் தலைவரின் சுருக்கமான கருத்து உள்ளத்தை உறைய வைக்கும் வெளிப்படையான வினாவை எழுப்புகிறது: தற்போதைய நிர்வாகத்திற்குள் இருக்கும் கூறுபாடுகள் ஒரு "அக்டோபர் வியப்பை" சிந்திக்கிறார்களா --இன்னும் துல்லியமாக அக்டோபர் வெடிகுண்டு ஒன்றை கருத்திற் கொண்டுள்ளனரா; மக்கெய்ன் மற்றும் அவருடைய சக குடியரசுக் கட்சியினருக்கு தேர்தலை எதிர்கொள்ளும் சுமையான வருங்காலத்தில் சற்று மாற்றம் கொடுக்கும் வழிவகையைத் தருமா? அல்லது அவர்கள் தேர்தலில் ஒரு ஆதரவைக் கொண்டு வருவதற்காக, ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டம் அல்லது நடக்கக்கூடியதற்கு வசதி அளிக்கும் திட்டத்தை கொண்டுள்ளனரா?

ஆபத்தைப் பற்றி சிந்திக்காதவர்கள் மிகவும் ஆபத்தான செயல்களைச் செய்வர். அமெரிக்க ஆளும் உயரடுக்கு ஜனநாயகக் கட்சியின் பரக் ஒபாமா அதன் நலன்களை உள்நாட்டிலும் வெளியேயும் காக்கும் என்று அதிகமாக நம்பினாலும், புஷ்-- செனி மற்றும் பலருக்கும் ஒரு ஜனநாயகக் கட்சியின் பெரும் வெற்றி என்பது ஆழ்ந்த முறையில் அவர்களை நிலைகுலைய வைக்கும் நிகழ்வாகும்.

இந்த நிர்வாகம்தான் ஆக்கிரமிப்புப் போர், சித்திரவதை, படுகொலைகள், சட்டவிரோத தடுப்புக்காவல்கள் ஆகிய போர்க் குற்றங்களைச் செய்துள்ளது. முக்கிய அரசாங்க அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக மாற்றப்படுதல் என்பது இன்னும் கூடுதால வகையில் புஷ் நிர்வாகத்தின் குற்றம் சார்ந்த செயல்கள் வெளிப்படுவதைக் காட்டும்; அதையொட்டி ஒபாமா எப்படி விரும்பினாலும், சில குற்ற விசாரணைகளுக்கு வழி ஏற்படும். இதில் மிகவும் ஆபத்திற்குறிய திறன் உடைய வெளிப்பாடு 9/11 நிகழ்வு பற்றிய தகவல்களாகவே இருக்கக்கூடும்.

"தாக்குதல் நடத்த அனுமதித்திருக்க வேண்டும்" என்னும் Gingrich இன் கருத்து, மற்றொரு வினாவை எழுப்புகிறது: இதைத்தான் அவர்கள் செப்டம்பர் 11, 2001ல் செய்தனரா? "இது நடக்கட்டும்" என்று அவர்கள் அனுமதித்தனரா, அதையொட்டி இரு போர்களுக்கான நியாயத்தைத் தோற்றுவித்தனரா? அப்போர்களோ மில்லியன் கணக்கான இறப்புக்களை ஏற்படுத்தின, பல பிற்போக்குத்தன கொள்கைகள் செயல்படுத்தப்பட காரணமாக இருந்தன.

9/11 தாக்குதல்களின் ஏழாம் ஆண்டு நிறைவு நாள் நெருங்கிக் கொண்டிருக்கையில், அந்த நாளின் சோகம் நிறைந்த நிகழ்வுகள் இன்னமும் புதிரில் ஆழ்ந்துள்ளன. அமெரிக்க வரலாற்றில் இராணுவ உளவுத்துறையின் மிகப் பெரிய ஒற்றைத் தோல்விக்கு காரணம் என்று ஒரு அமெரிக்க அதிகாரிகூட பெயரளவிற்கேனும் பொறுப்புக் கூறப்படவில்லை. உத்தியோகபூர்வ விசாரணைகள், காங்கிரசாலும், 9/11 குழுவினாலும் நடத்தப்பட்டவை அரசியல் அளவில் உந்தப்பெற்ற மூடிமறைக்கும் தன்மையைத்தான் கொண்டிருந்தன.

ஆனால் இந்த தாக்குல்களில் தொடர்பு உடையவர்கள் பற்றி வெளிவந்துள்ள சான்றுகள் அவர்கள் அமெரிக்க அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டங்களுக்குள் பாதுகாப்பை பெற்றிருந்தனர் என்பதை காட்டுகின்றன; அவர்கள் அமெரிக்க மண்ணில் ஒரு பயங்கரவாத தாக்குதல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்ட கால மூலோபாய இலக்குகளை தொடர இராணுவ நடவடிக்கைகளை தொடக்குவதற்கு தவிர்க்க முடியாத போலிக்காரணங்களை கொடுக்கும் என்று நம்பினர்.

இன்று 9/11 மீண்டும் ஏதேனும் ஒருவிதத்தில் பழையபடி நடக்கக்கூடும் என்பது நிர்வாகத்தின் நோக்கங்களை உறுதியற்றதாகவே ஆக்கி விடும். புஷ், ஷெனி, பிறர் ஆகியோருக்கு ஸ்பெயினில் நடந்த மகிழ்ச்சியற்ற முன்னோடிதான் இருக்கிறது. இவர்களுடைய வலதுசாரி நண்பர் பிரதம மந்திரி ஜோஸ் மரியா அன்ஜர், 2004 பயங்கரவாதத் தாக்குதல்கள் மாட்ரிட்டில் நடப்பதற்கு திரித்தல் வேலை செய்து தேர்தலில் ஆதரவு பெறுதல் என்பது தப்புக் கணக்காகப் போய், மக்கள் பெருமளவில் சீற்றம் பெற்று அவரை தோற்கடிக்கவும் காரணமாயிற்று.

"ஒரு தாக்குதல் வெற்றி பெறுவதற்கு அனுமதிப்பது" என்பது மற்றொரு நோக்கத்திற்கு உதவியிருக்க முடியும். 2004ல் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஒரு பெரிய பயங்கரவாத நிகழ்வு ஏற்பட்டால் விரிவான திட்டங்களை தேசியத் தேர்தல்களை நிறுத்திவைப்பதற்கு கொண்டிருந்தது என்பது வெளியாயிற்று என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வெண்டும்.

இப்படித் திரைக்குப் பின்னால் குவான்டனாமோ குடா இராணுவ விசாரணைகள் திரித்தல் மற்றும் Gingrich இன் கருத்துக்கள் பயங்கரவாதத் தாக்குதல்களின் தீர்மான விளைவுகள் பற்றியவை, அமெரிக்க முதலாளித்துவ ஜனநாயகத்தில் இருக்கும் ஆழ்ந்த நெருக்கடி பற்றி குறிப்பிடுகின்றன; இங்கு மீண்டும் தேர்தல்கள் ஆத்திரமூட்டுதல், குற்றத்தன்மை ஆகிய சூழ்நிலையில் விரிந்து வருகின்றன; இதில் இரு முக்கிய கட்சிகளும் தொடர்பு உடையவை. இத்தகைய வளர்ச்சித் தன்மை அமெரிக்க அரசாங்கத்தின் உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; அதாவது இது அதிகாரத்தின்மீது தங்கள் பிடிப்பை நிலைநிறுத்திக் கொள்ள எதையும் செய்யத் தயார் என்று இருக்கும் கூறுபாடுகள் மேலாதிக்கம் நிறைந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

தற்போதைய நிலைமையில் அரசியல் மெத்தனத்திற்கோ ஜனநாயகக் கட்சி அல்லது அதன் தற்போதைய பதாகையை சுமக்கும் பரக் ஒபாமா பற்றியோ ஆதாரமற்ற போலித் தோற்றங்களுக்கு இடம் இல்லை. அடிப்படை ஜனநாயக உரிமைகளை காப்பதற்கு தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக ஒழுங்கமைக்கப்படுதலும், அமெரிக்க நிதிய, பெருநிறுவன தன்னலக்குழுவின் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்ற இரு கட்சிகள் முறைக்கு ஒரு உண்மையான சோசலிச மாற்றீடு தோற்றுவிக்கப்படலும் தேவையாகும்.