World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்ா : பிரான்ஸ்

France: Sans papiers continue occupation of CGT union hall

பிரான்ஸ்: ஆவணமற்ற தொழிலாளர்கள் CGT தொழிற்சங்க அரங்கை தொடர்ந்து ஆக்கிரமிப்பு

By Antoine Lerougetel
5 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

பாரிசில் 3ம் வட்டத்தில் இருக்கும் Bourse de travail ல் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் (CGT) கட்டிடம் ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இப்பொழுது ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. (CSP 75) எனப்படும் புலம்பெயர்ந்த ஆவணமற்ற தொழிலாளர்களின் பாரிஸ் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பு மே 2ல் இருந்து இரவும் பகலுமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக உறவு கொண்டுள்ள தொழிற்சங்கம் தங்கள் சட்டரீதியான வசிப்பிட உரிமைகளை நாடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் 1,000 விண்ணப்பங்களை எடுத்துக் கொள்ளுமாறு ஆக்கிரமிப்பாளர்கள் கோருகின்றனர்.

ஜூன் 2, திங்கள் கிழமையன்று CSP 75 ன் பிரதிநிதிகள் ஒரூ கூட்டு தொழிற்சங்க குழுவான Intersyndicale ஐ சந்தித்தனர்; இது CGT மற்றும் பிற தொடர்புடைய தொழிற்சங்க பிரதிநிதிகளை கொண்டது ஆகும். CSP75 ன் செய்தித் தொடர்பாளர் Anzoumane Sissoke, உலக சோசலிச வலைத் தளத்திடம், கூட்டமானது ஒருங்கிணைப்பு கோரிக்கை பற்றி பரிசீலிக்க ஒரு குழுவை நியமித்துள்ளாக கூறினார். அவர்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஆக்கிரமிப்பு தொடரும் என்றும் அவர் கூறினார். அதாவது CSP75 பிரதிநிதிகள், தொழிற்சங்கங்களுடைய ஆதரவுடன் அரசாங்கத்தை சந்திக்கும் வரை மற்றும் அவர்களில் விண்ணப்பித்தவர்கள் 1000 பேருக்கும் சட்டபூர்வ உரிமை கொடுக்கும் வரை ஆகும்.

ஆவணமற்ற தொழிற்சங்க உறுப்பினர்களை சட்டபூர்வமாக்குவதற்காக ஏப்ரல் 15ம் தேதி CGT தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் மற்றும் பணியிடங்கள் ஆக்கிரமிப்பு ஆகியவற்றை செய்தது; இவர்களில் பலர் உணவு விடுதிகளிலும் கட்டிட தொழிலிலும் சுத்திகரிப்பு நிறுவனங்களிலும் வேலைசெய்து வருகின்றனர்; பெரும்பாலும் இது அவர்களின் உழைப்பு தேவைப்படும் முதலாளிகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தொழிற்சங்கம் பாரிஸ் Prefecture (உள்ளூர் காவல் நிர்வாகம்) க்கு அதன் உறுப்பினர்கள் சட்டபூர்வ குடியிருப்பு பெறவேண்டும் என்பதற்காக 900 விண்ணப்பங்களையும் கொடுத்தது.

பாரிசில் கிட்டத்தட்ட 2,000 உறுப்பினர்களை கொண்ட CSP75 இதற்குப் பின் தன்னுடைய சொந்த விண்ணப்பங்களை விண்ணப்பிக்க முற்பட்டது, ஆனால் CGT மூலம் இது வரவேண்டும் என்று பாரிஸ் உள்ளூர் காவல் நிர்வாகம் கூறிவிட்டது. தங்கள் நிலையை ஏற்றுக் கொள்ளுமாறு CGT ä CSP75 கேட்டுக் கொண்டபோது, தொழிற்சங்கம் அதைச் செய்ய மறுத்துவிட்டது. பாரிஸ் பகுதியில் CGT அதிகாரி Christian Khalifa மே 8 ம் தேதி LCI TV நிலையத்திடம் கூறினார்: "ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருடைய விண்ணப்பங்களையும் சட்டபூர்வமாக்குவதற்கு CGT பொறுப்பெடுத்துக் கொள்ள முடியாது. நாங்கள் ஒரு தொழிற்சங்க அமைப்பு, ஆவணமற்றவர்களின் சங்கம் அல்ல."

CSP75 ன் முக்கிய உறுப்பினரான Mamoudou Dialo மே 22 அன்று La Croix இடம் கூறினார்: "உள்ளூர் காவல் நிர்வாகங்களிலாவது எங்கள் விண்ணப்பங்களை அளிக்க எங்களை அரசாங்கம் அனுமதிக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். தொழிற்சங்கங்கள் அதைச் செய்யலாம், ஆனால் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் நாங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது நியாயம் இல்லை. தேவையானால், மாதங்கள், ஆண்டுகள் கூட இங்கு தொடர்ந்து இருப்போம்."

CSP75, CGT க்கும் பிரெஞ்சு அரசாங்கத்திற்கும் இடையேயான உடன்பாட்டை நிராகரித்தது; ஏனெனில் அது பெரும்பாலான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை ஒதுக்கிவிட்டு, அதே நேரத்தில் CGT ஒன்றுதான் ஆவணமற்ற தொழிலாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையேயான அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரே இடைத்தரகர் என்றது. CSP75 மே 15 ம் தேதி அறிக்கை கூறுகிறது; "CSP75 ஆனது CGT க்கு வழங்கப்பட்டுள்ளதாக தோன்றும் பிரத்தியேக பாத்திரத்தை ஏற்காது; அதாவது பாரிஸ் பகுதியின் உள்ளூர் காவல் நிர்வாகங்களிடம் விண்ணப்பங்களை கூட்டாக மனுச்செய்தல் என்பதை" ஏற்காது மற்றும் தங்கள் இயக்கம்தான் "தொழிலாளர்கள் உழைக்கும் உரிமைகள் அழிக்கப்படுவதற்கு" எதிரான மற்றும் பொதுவில் "தொழிலாளர்கள் உரிமைகள் அழிக்கப்படுவதற்கு எதிரான" போராட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது என்றும் அது வலியுறுத்துகிறது.

அது தொடர்கிறது: "அனைத்து ஆவணமற்ற தொழிலாளர்கள், ஆண்கள், பெண்கள், புகலிடம் கோருபவர், வேலையற்றவர் என்று அனைவரும் சட்டபூர்வமாக்கப்படுதல் குடியேற்றத்துறை மந்திரி Hortefeux மற்றும் பாரிஸ் நகரப் போலீஸ் தலைவர் Gaudin ஆகியோரால் CGT இன் ஆதரவுடன் பெறப்பட வேண்டும் என்றும் தடுப்புக் காவல் மையங்கள் (வெளியேற்ற ஆணைகளுடன் வெளியேற்றம் நிறைவேறாதிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கானது), இனவெறி தன்மையுடைய குடியேற்ற சட்டங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும், தோலின் நிறத்தை கொண்டு நடத்தப்படும் போலீஸ் சோதனைகள், கைதுகள் ஆகியவை நிறுத்தப்பட வேண்டும் என்றும், பாகுபாடு காட்டும் ஒவ்வொரு வெளிநாட்டினருக்கும் வேலைவாய்ப்புக்காக முதலாளிகளால் கொடுக்கப்படும் சட்டவிரோத ANAEM வரி கைவிடப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்!"

Bourse du travail இல் கடந்த வாரம் பேட்டி காணப்பட்டபோது, CSP75 ன் செய்தித் தொடர்பாளர் Djibril Diaby, WSWS இடம் கூறினார்: "இப்பொழுது எங்களுக்கு நிறைய ஆதரவு உள்ளது. இரவும் பகலும் எங்களை காப்பதற்கும் ஆவணமற்ற தொழிலாளர்களில் நலன் பற்றிக் காக்கவும், ஆவணமற்றவர்கள் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்பதற்கும் ஆதரவு உள்ளது. ஆதரவு கொடுக்கும் அமைப்புக்கள், நல்லெண்ணம் படைத்த மக்கள் கொடுக்கும் நன்கொடைகள் மற்றும் ஆவணமற்ற தொழிலாளிகள் கொடுக்கும் நன்கொடைகள் ஆகியவற்றை கொண்டு நாங்கள் உயிர்பிழைக்கிறோம்."

மற்ற ஆவணற்ற தொழிலாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுக்கள் இருப்பதாகவும் அவையும் இதே போன்ற போராட்டங்களை நடத்துவதாகவும் அவர் கூறினார். "மாவட்டம் 92ல் அவர்கள் ஒரு திருச்சபையை ஆக்கிரமித்துள்ளனர்... நேற்று Montreuil ல் ஆவணமற்ற தொழிலாளிகளின் கூட்டு, மற்ற இடங்களையும் ஆக்கிரமித்தது; இவ்விதத்தில் மற்ற முயற்சிகளும் நடைபெறுகின்றன."

மற்றைய துறைகளில் இருக்கும் ஆவணமற்ற தொழிலாளர்கள் தங்களுடைய மனுக்களுடன் வருகின்றனர்: இங்கு பாரிஸ் பிராந்தியம் முழுவதிலுமிருந்து வரும் ஆவணமற்ற தொழிலாளர்களை பெற்றிருக்கிறோம். எனவே எம்மிடம் 92,93,91 மாவட்டத்திலிருந்து வரும் ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். மே2 முதல் ஆக்கிரமித்ததிலிருந்து ஒவ்வொருநாளும் புதிவர்கள் எம்மைப் பார்க்க வருகின்றனர். இது எங்களது ஆக்கிரமிப்பின் 23வது நாள் ஆகும். எனவே போராட்டம் இப்பொழுதுதான் ஆரம்பித்துள்ளது. எமது கோரிக்கை நிறைவேறாதவரைக்கும், நாங்கள் இங்கேயே இருப்போம்."

"எங்களைப் பொறுத்த வரையில், ஆவணமற்ற தொழிலாளர்கள் அனைவரும் உழைக்கின்றனர். தங்கள் உறவினரின் ஆவணங்களோடு வேலைசெய்யாதவர்கள், மிகக் குறைந்த சம்பளத்திற்கு என்றாலும், திருட்டுத்தனமாக உழைத்து வாழ முற்படுகின்றனர். CGT, CFDT ஆகியவை தொழிற்சங்கங்கள்; அவற்றின் கோரிக்கைகள் தொழிற்சங்கக் கோரிக்கைகள். நாங்கள் ஆவணமற்ற தொழிலாளிகளுக்காக போராடுகிறோம்" என்று வலியுறுத்தினார்.

CGT ஏன் அவர்களுடைய கோப்புக்களின் பொறுப்பை எடுத்துக் கொள்ளவில்லை என்று கேட்கப்பட்டதற்கு அவர் கூறினார்: "அவர்கள் ஏப்ரல் 15 அன்று மறியலை நடத்தியபோது CGT எங்களிடம் பொறுங்கள் எனக் கூறினர். ஆனால் நீங்கள் பார்த்துள்ளபடி, ஆவணமற்ற தொழிலாளர்கள் பொறுமையிழந்துவிட்டனர். அவர்கள் இனியும் காத்திருக்க முடியாது. வேலை கொடுப்பதாக உறுதிமொழியுடன் முதலாளிகளின் பணிச் சான்றுகளை பெறுபவர்களின்- நாங்களும் அவர்கள் விண்ணப்பங்களை எடுத்துக் கொண்டு சென்று உள்ளூர் காவல் நிர்வாகத்தில் கொடுத்துள்ளோம். இனியும் நாங்கள் காத்திருக்க முடியாது; ஏனெனில் இவர்களிடமிருந்து அழுத்தத்தின் கீழ் உள்ளோம்." பேட்டியை கண்டுகொண்டிருந்த ஆவணமற்றவர்களின் குழுவை Djibril சுட்டிக் காட்டிக் கூறினார்: "எனவேதான் நாங்கள் எங்கள் பொறுப்பில் விஷயத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறோம்."

ஒவ்வொருவர் பற்றியும் தனித்தனியாக ஆராய்தல் என்பது தீர்வாகாது என்று அவர் கூறினார். "ஒரே தீர்வு, சரியான தீர்வு இப்பொழுது ஒரு பெரிய அளவில் சட்டபூர்வம் ஆக்குதல் ஆகும்." பொதுவாக அனைவருக்குமா? "பொதுவாக, அனைவருக்கும் பொருந்தும்படி, பிரெஞ்சு சமூகத்தில் குடியேறியுள்ள மற்றும் இங்கு தங்க விரும்பும் அனைத்து ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர், இங்கு தங்க விரும்பும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சட்டபூர்வமாக்கப்பட வேண்டிய உரிமை உள்ளது; ஏனெனில் அவர்கள் ஏனைய பிரெஞ்சு குடிமக்களைப் போல் கெளரமாக வாழ்கின்றனர்."

தொழிற்சங்க வழிவகைகளில் வெற்றி அடையமுடியுமா என்று கேட்கப்பட்டதற்கு, Diaby கூறினார்: "எங்களுடைய, தொழிற்சங்க வழிவகை வேறுபட்டதுதான். ஆனால் நாங்கள் இந்த விஷயங்களில் ஈடுபட்டு இப்பொழுது 11 ஆண்டுகளாகிவிட்டன. CGT இப்போராட்டத்தில் 5 அல்லது 6 மாதங்களாகத்தான் இருக்கிறது."

"தொழிற்சங்கங்களும் குடி உரிமை அமைப்புக்களும் ஒவ்வொருவரது பிரச்சனைகளையும் தனித்தனியாக ஆராய வேண்டும் என்று ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது; ஆனால் ஜனாதிபதி சார்க்கோசி மற்றும் குடியேற்றத் துறை மந்திரி Brice Hortefeux ம் கதவை அடைத்துவிட்டனர்; ஏனெனில் அவர்கள் "நீங்கள் பணிச் சான்று பெற்றிருக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர். எனவே அதன் அர்த்தம் ஒரு முதலாளியால் ஏற்கப்பட வேண்டும் என்று உள்ளது. இது ஒரு பெரிய தடையாகும்" என்று WSWS சுட்டிக் காட்டியது.

Diaby பதில் கூறினார்: "அரசாங்கத்தின் நிலை பற்றி எங்களுக்கு நன்கு தெரியும். ஒவ்வொருவரது பிரச்சனைகளையும் தனித்தனியாக ஆராய்தல் என்பது முதலாளி மற்றும் அரசாங்கத்தின் கைகளில் உள்ளது. அனைத்து ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் சட்டபூர்வமாக்கல் என்பது மற்றவர்களுக்கும் அழைப்பு விடுவதுபோல் ஆகும் என்று அரசாங்கம் கூறுகிறது; தொழிலாளர் தொகுப்பை வைத்திருக்கும் பொருட்டு அவர்கள் பெரிய அளவில் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்று முதலாளிகள் கூறுகின்றனர். இல்லாவிடின் சில நிறுவனங்கள், சில ஆலைகள் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. Hortefeux இன் புதிய ஜூன் சட்டம் ஒவ்வொரு முதலாளியும் இப்பொழுது வேலைக்கு அமர்த்த விரும்பும் ஒவ்வொருவரது குடியிருப்பு அனுமதியின் நகலையும் உள்ளூர் காவல் நிர்வாகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூறுகிறது. போலீசார் இப்பொழுது இந்த அனுமதி செல்லத்தக்கதா இல்லையா எனப் பரிசீலிப்பர். எனவேதான் முதலாளிகள் அனைவரும் மகத்தான அளவில் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்; இல்லாவிடின் இத்தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டு பிரான்சில் ஆலைகள் மூடப்படும்; அது பிரெஞ்சு பொருளாதாரத்திற்கு நலன்களுக்கு உகந்தது அல்ல."

ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேசிய பொருளாதாரத்திற்கு தேவையானவர்கள் என்ற அடிப்படையில் டியாபி, அரசாங்கத்திடம் முறையீட்டை செய்யும்பொழுது இப்பிரச்சினையை நாம் டியாபியுடன் எடுத்தாக வேண்டும். அவர்கள் சுரண்டப்படுகின்ற அளவுக்கு மட்டுமே அவர்கள் அவசியமானவர்கள்; இதுதான் "விருப்பமுறையில் குடியேற்றம்" என்பதின் முழுஅம்சம் ஆகும். இல்லாவிடில் அவர்கள் முற்றிலும் இல்லாது செய்யப்பட்டுவிடலாம்; அரசாங்கம் அவர்களுக்கு உரிமைகள் எதையும் அங்கீகரிக்காது.

உலகச் சந்தையில் பெரிய சக்திகளுக்கு இடையே உலகந்தழுவிய போட்டியின் அழுத்தமானது, தற்போதைய கடன் நெருக்கடி, மிகப்பெரிய பணவீக்கம், உணவு மற்றும் எரிபொருள் விலையேற்ற நெருக்கடி ஆகியவற்றால் அதிகரித்துள்ளமையானது, அனைத்து தொழிலாளர்களுடைய உரிமைகள், வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றை அழிப்பதற்கு முதலாளிகளுக்கு உந்துதல் கொடுக்கிறது. அரசிற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே இருக்கும் உறவை மிருகத்தன்மையாக்குதல் என்பது தொழிலாள வர்க்கத்தின் மிகக் கடுமையாக பாதிப்பிற்கு உட்பட்ட தொழிலாள வர்க்கத்தால், குறிப்பாக ஆவணம் அற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் உணரப்படுகிறது."

கன்சர்வேடிவ் மற்றும் "இடது" அரசாங்கங்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் பிரெஞ்சு, ஐரோப்பிய ஏகாதிபத்தியம், குடியேற்றத்தை பொறுத்தவரையில், எவ்வித உரிமைகளும் இல்லாத ஒரு பணிந்து நிற்கும் ஒரு குறைவூதிய, தொகுப்பை, எதிர்பார்க்கிறது. பிரெஞ்சு முதலாளிகளால் தேவைப்படும் தொழிலாளர்களை மட்டும் குடியேற அனுமதிக்கும் சார்க்கோசியின் கொள்கை, தேர்வு செய்யப்பட்ட குடியேற்றம் (Immigration Choisie) என்று அழைக்கப்படுகிறது; இது நீடித்த அல்லது பொறுத்துக் கொள்ள வேண்டிய குடியேற்றத்திற்கு (Immigration subie) எதிரானது; பிந்தையது பல நூறாயிரக்கணக்கான சட்ட விரோத ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தோற்றுவித்துள்ள, பல ஆண்டுகள் கடினத் தடைகளால் ஆழ்ந்து இருக்கும் நிலையை பிரதிநிதித்துவம் செய்கிறது.

உலகப் போட்டி மற்றும் இதன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் ஆகியோருடைய எதிர்ப்பு இவற்றிற்கு இடையே அகப்பட்டுக் கொண்டிருக்கும் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கமானது மனித உரிமைகள், பிரெஞ்சுப் புரட்சி 1789 காலத்தில் இருந்து அனைவராலும் ஏற்கப்பட்ட மரபுகளை கடைப்பிடித்தல் பற்றிய போலித்தோற்றத்தை கூட முற்றிலும் துறந்துவிட்டது. ஐரோப்பாவில் இந்த உரிமைகளை அழிப்பதில் இது முன்னணியில் நிற்கிறது.

ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர் நாடுகளையும் ஒரு "குடியேற்றம் பற்றி ஐரோப்பிய ஒப்பந்தத்தை" ஏற்குமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இது மிகப் பெரிய அளவில் இராணுவப் படைகள் வரவிருக்கும் குடியேறுபவர்களை "ஐரோப்பிய கோட்டை" எல்லைகளிலும் வழித்தடத்தில் இருக்கும் நாடுகளிலும் தடை செய்வதற்கு வழிவகுக்கும். ஏற்கனவே ஐரோப்பா முழுவதும் வசிக்கும் உரிமை பெறுவதற்கு இருக்கும் கடினச் சட்டங்களை இன்னும் கடினமாக்கி குடியேறுவோர் மீது பெரும் போலீஸ் தாக்குதல்கள், வெளியேற்றங்கள் ஆகியவற்றிற்கு இடைவிடாமல் வழிசெய்யும். இதற்கு பழமைவாத கட்சிகள், அரசியல் மற்றும் தொழிற்சங்க இடது ஆகியவற்றிடம் இருந்து, முழு ஐரோப்பிய அரசியல் வர்க்கத்திடம் இருந்தும் ஆதரவைப் பெற்றிருக்கிறது.

RESF (Education Without Borders Network -- எல்லைகள் அற்ற கல்வி இணையதளம்) போன்ற அமைப்புக்கள் அரசாங்கத்திடம் நோய்வாய்ப்பட்டுள்ள குடியேறியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், சிறுவர்கள் உடன் இருக்கும் பெற்றோர்கள் ஆகியோருக்கு கருணை காட்ட வேண்டும் என்னும் மனிதாபிமான முறையீடுகள் செவிட்டுக் காதுகளில் விழுவதாக கூறுகின்றன; ஏனெனில் அரசாங்கம் குடியேறுவோர் பிற இடர்பாடுகளில் இருக்கும் குடியேறுபவர்களுக்கு அளிக்கப்படும் சமூகப் பணி நிதியங்களுக்கு பணத்தை நிறுத்து விடுகின்றது.

ஆவணமற்ற குடியேறுபவர்களின் நடவடிக்கைக்கு WSWS முழு ஆதரவையும் கொடுப்பதுடன் அவர்கள் கோரிக்கை தொழிற்சங்கங்களால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் கோருகிறது. பிரெஞ்சு தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோர் ஆவணமற்ற தொழிலாளர்களின் உதவிக்கு வரவேண்டும் என்றும் நாங்கள் அழைப்பு விடுகிறோம்.

ஆனால் Djbril Diaby உலக சோசலிச வலைத் தளத்திற்கு கொடுத்துள்ள பேட்டியில் இருக்கும் முன்னோக்கு ஆழ்ந்த முறையில் தவறானது என்று எச்சரிக்க கடமைப்பட்டுள்ளோம். அவர் கூறினார்: "அரசாங்கம் மற்றும் முதலாளிகள் சட்டபூர்வ இசைவு கொடுக்குமாறு அழுத்தம் கொடுப்பதற்கு ஐக்கியம் தேவை." WSWS இடம் அவர் மேலும் கூறினார்; "இந்த அரசாங்கத்தை பின்வாங்கச் செய்ய வலியுறுத்துவதற்கு, அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்கள் ஆகியோரின் கூட்டுத் தொகுப்புக்கள் ஐக்கியப்பட வேண்டும் அத்தோடு அரசாங்கம் மற்றும் முதலாளிகள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் ."

அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்துவதற்கு எந்த தொழிற்சங்கத்தின் மீதும் நம்பிக்கை வைக்க முடியாது. CGT இன் உடன்பாடு, தங்கள் உறுப்பினர்களின் விண்ணப்பங்களை மட்டுமே அளிக்கும் என்பது ஆவணமற்ற தொழிலாளர்கள் இயக்கத்தை பிரித்து வரம்பிற்கு உட்படுத்துவது ஆகும். Hortefeux பல முறையும் "ஒரு சில நூறுபேர்தான் சட்டபூர்வமாக்கப்படுவர்" என்று கூறியுள்ளார்; எனவே CGT உறுப்பினர்கள் பலருடைய விண்ணப்பங்கள் தூக்கி எறியப்படும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கத்தின் காப்பாளர்களாக இனியும் இல்லை, மாறாக முதலாளித்துவ வர்க்கத்தின், தங்களின் அரசியல் கூட்டாளிகளான சோசலிஸ்ட் கட்சி (PS) பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) போன்ற முதலாளித்துவ ஆதரவு அமைப்புகளின் நேரடி முகவர்களாக உள்ளன. இவை அரசாங்கத்திற்கும் முதலாளிகளுக்கும் அழுத்தம் கொடுப்பது இல்லை; அவை பெருமுதலாளிகள் போட்டியிடத்தக்கவாறு செய்வதற்குத் தேவையான "சீர்திருத்ததை" தொழிலாள வர்க்கம் ஏற்குமாறு அழுத்தம் கொடுக்கின்றன. அவற்றின் முக்கிய நோக்கம் தேசிய பொருளாதாரத்தை காப்பது ஆகும்; அதாவது பிரெஞ்சு முதலாளித்துவத்தை அதன் போட்டியாளர்களிடம் இருந்து; விரிவுபடுத்தல் அவற்றின் போட்டியாளர்களான தொழிலாள வர்க்கத்திடம் இருந்தும் விரிவுபடுத்தலாகும். எனவேதான் CGT, CFDT ஆகியவை இரயில்வே தொழிலாளர்கள், ஆசிரியர்கள், பொதுப்பணி ஊழியர்கள், பல்கலைக்கழக, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆகியோரைத் தனிமைப்படுத்தி அவர்கள் போராட்டங்களை நெரித்தனர். அண்மையில் அவை 35 மணி நேர வாரத்தை அழித்த மற்றும் வேலை நிலைமைகளை கட்டுப்பாடு தளர்த்திய முதலாளிகளிடமும் அரசாங்கத்திடமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

எனவேதான் அவை குடியேறும் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் காக்க முடியாதவை ஆகும்.

Diaby உடன் நடத்திய பேட்டியில், WSWS அவரிடம் ஆரம்பத்தில் இருந்து CSP75, CGT கட்டிடத்தை ஆக்கிரமித்ததற்கு LCR ன் ஒலிவியே பெசன்ஸநோ அந்நடவடிக்கையை கண்டித்தார் என்பதை நினைவூட்டியது. அதன் வாராந்திர ஏடான Rouge தாக்கி எழுதியதாவது: "பாரிஸ் தொழிற்சங்க அரங்கை Coordination75 அமைப்பு சேதமுறும் வகையில் ஆக்கிரமித்துள்ளது"; அது "பிளவு என்னும் நச்சை வளர்ப்பதற்கு பொறுப்பானது" என்றும் குற்றம் சாட்டியுள்ளது. LCR வலைத் தளத்தில் அறிக்கை ஒன்று "ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்கள் இயக்கம்: LCR நிலைப்பாடு" என்ற தலைப்பில் இருப்பது Coordination75 இன் நடவடிக்கை அரசாங்கத்திற்கு உதவுகிறது என்று உட்குறிப்பாக கூறுகிறது. "அரசாங்கம் இதையொட்டி இயக்கத்தை பிளவுபடுத்தி ஒன்றும் இல்லாமல் செய்வதற்கு ஒரு வழி கண்டுவிட்டது."

சிறிது கசப்பு தன்மையும் ஓரளவு விந்தையையும் வெளிப்படுத்திய Diaby இன் விடை CGT, மற்றும் LCR இன் இழிந்த சந்தர்ப்பவாதத்தை சவாலுக்கு உட்படுத்தாமல் விட்டுவிட்டது. "இப்பொழுது CGT இடம் நல்ல உறவு கொண்டிருக்கிறோம் என நான் உங்களிடம் கூறமுடியும். இதுவரை அவர்கள் வேலைநிறுத்தம் செய்யும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு Coordination 75 ஆதரவு கொடுத்து வருகிறது. இதுவரை எங்களைப் பொறுத்த வரையில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்கள் ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்கள்தாம். நாங்கள் அவர்கள் அனைவரையும் ஆதரிக்கிறோம்."

LCR, CSP75 க்கு எதிராக CGT க்கு ஆதரவாக இவ்வளவு ஆவேசத்துடன் வந்துள்ளது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். 40 ஆண்டுகள் வாழ்வில் LCR இன் பங்கு யாதெனில் தொழிலாளர்களிடம் அவர்கள் ஒரு கட்சியை முதலாளித்துவத்தின் தூண்களான PS, PCF, தொழிற்சங்கங்கள் இவற்றிடம் இருந்து சுயாதீனமாக கட்டியமைக்க தேவையில்லை என்று கூறி வருவதாகும். பிரான்சில் உத்தியோகபூர்வ இடதின் நெருக்கடி ஒலிவியே பெசன்ஸநோ மற்றும் LCR போன்றவை SP, CP ஆகியவற்றின் இடத்தை அலங்கரிக்கவும் ஒரு போலித்தனமான "முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியை" கட்டியமைப்பதற்கு CGT உடன் இணைந்து வேலைசெய்வதற்கும் செய்தி ஊடகத்தால் கவனமாக ஊட்டி வளர்க்கப்படுவதாகும்.

இந்த அமைப்புக்களின் ஐக்கியம் தொழிலாளர்கள் தங்களுடைய போராட்டத்தில் ஒன்றுபடாமல் தடைசெய்யும் பொருட்டான ஒரு அதிகாரத்துவ ஐக்கியம் ஆகும். தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தின் அடிப்படையில் இந்த அமைப்புக்களில் இருந்து முற்றிலும் முறித்துக் கொண்டால்தான் அனைவருடைய ஜனநாயக உரிமைகளும் சமூக உரிமைகளும் காக்கப்பட முடியும். தாக்குதலுக்கு ஆளாகியுள்ள தொழிலாளர்களுக்கு உதவியாக அனைத்துத் துறை தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை கட்டுவதும் பொருளாதாரத்தின் மீதான சமூக மற்றும் ஜனநாய உடைமை பற்றிய ஒரு வேலைத் திட்டத்தை வளர்த்தெடுப்பது ஆகும்.

இதன் அர்த்தம் தற்போதைய முதலாளித்துவ ஆட்சியை அகற்றி, பொருளாதாரமாகட்டும் சமூக அல்லது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருப்பது போல் புதிய காலனித்துவ முறையிலாகட்டும், தொழிலாளர்களுடைய பிழைப்புச்சாதனங்களின் மீதான பூகோள தாக்குதலகளுக்கு எதிரான அனைத்து நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களுடன் ஒரு அரசியல் ஐக்கியத்தை ஏற்படுத்தல் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கம் இவற்றின் அடிப்படையிலான ஒரு தொழிலாளர் அசாங்கத்தை நிறுவுதலாகும்.

இதற்கு ஒரு புதிய சர்வதேச சோசலிச இயக்கத்தை கட்டியமைத்தல் தேவையாகும்; அந்தப் பணியைத்தான் WSWS தனக்கு முன்வைத்துள்ளது. இந்தப் போராட்டத்தில் அனைத்து தொழிலாளர்களும் இளைஞர்களும் பங்கு பெறுமாறு அழைப்பு விடுகிறோம்.