World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

The European Union's Return Directive strengthens "Fortress Europe" against immigrants

புலம்பெயர்ந்தோருக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் திரும்ப அனுப்பப்படுவதற்கான பொதுநெறிமுறை "ஐரோப்பிய கோட்டையை" வலுப்படுத்துகிறது

By Ajay Prakash
13 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஜூன் 5ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை மந்திரிகள் திரும்ப அனுப்பப்படுதல் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுநெறிமுறைக்கு ஒப்புதல் கொடுத்தனர்; இது உறுப்பு நாடுகளை சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை 18 மாதங்கள் வரை காவலில் வைக்கவும் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மீண்டும் 5 ஆண்டுகள் வருவதற்கு தடையையும் விதிக்கிறது.

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சி முறை தலைமையை கொண்டுள்ள நாடான ஸ்லோவேனிய உள்துறை மந்திரி மற்றும் உள்நாட்டு குழுவின் தலைவருமான Dragutin Mate, ஐரோப்பிய பாராளுமன்றம் ஜூன் 16-19ல் கூடும்போது இதற்கு ஒப்புதல் தரும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். "இது ஒன்றுதான் தற்போது இயலக்கூடிய சமரசம்... எனவே பாராளுமன்றம் இப்பிரச்சினையில் இதற்கு ஒப்புதல் கொடுத்துவிடும் என்று நான் எதிர்பார்க்கிறேன்." என்றார் அவர்.

புதிய மிகக் கடுமையான பொதுநெறிமுறை ஏழை நாடுகளில் இருக்கும் வறிய தொழிலாளர்களையும் குழந்தைகளையும் இலக்கு வைக்கிறது. இது 10 மில்லியனுக்கும் மேலாக உள்ள ஆவணமற்ற குடியேறியவர்களின் வாழ்வை பாதிக்கும்; அவர்கள் ஏற்கனவே தீவிர சுரண்டலுக்கு உட்பட்டிருப்பதுடன் விசாக்கள் இல்லாததால் உரிய சட்டபூர்வ உரிமைகளையும் இழந்து நிற்கின்றனர். Inter-Movement Committee for Evacuees வலைத் தளத்தில் தலையங்கம் அறிவிக்கிறது; "நிறுத்தி வைத்தல் என்பது சிறிதாக காவலில் வைத்தல் என்ற தர்க்கத்திற்கு சென்று வருகிறது; இந்த மையங்கள் முகாம்களாக மாற்றப்பட்டு வருகின்றன."

தற்போது தடுப்புக்காவலில் வைக்கும் உச்சபட்ச காலம் நாட்டிற்கு நாடு மாறுபடுகிறது; பிரான்சை போல் சில 30 நாட்கள் வரம்பு என்று வைத்துள்ளன; பிரிட்டன், டென்மார்க், கிரேக்கம், நெதர்லாந்து போன்றவற்றில் வரம்பே கிடையாது. இப்புதிய விதிகள் ஒரு பொது ஐரோப்பிய ஒன்றிய புகலிடம் மற்றும் குடியேற்றக் கொள்கையை 2010க்குள் கொண்டுவர வேண்டும் என்ற திட்டத்தின் பகுதி ஆகும்.

இந்த பொதுநெறிமுறை முதல் கட்டமாக ஒரு சட்டவிரோத குடியேறும் தொழிலாளி நாடு கடத்தப்படுவதற்கு முன்பு ஆறு மாத காலம் காவலில் இருக்க வேண்டும் என்று கூறுகின்றது. சிலநிலைமைகளில் இது 12 மாதங்கள் என்று போகலாம்; அது அந்த நபருடைய பிறந்த நாட்டின் போதிய ஒத்துழைப்பு இன்மையை பொறுத்து இருக்கும். இறுதியில் இது வெளியேற்றப்படும் வரை கால வரம்பற்ற காவல் இருக்கும் என்றும் அதற்குரிய நடைமுறைகள் முடிவடையும் வரை காவல் என்றும் கூறுகிறது. வயது வந்தவர்களும், குழந்தைகளும் வசிப்பதற்கு தேவையான ஆவணங்கள் இல்லை என்ற ஒரே குற்றத்தின் காரணமாக இப்பொழுது வெளியேற்றப்படும் வரை தடுப்புக் காவல் முகாம்களில் வைக்கப்படுவர்.

ஆயிரக்கணக்கான வறிய சிறுவர்கள் ஐரோப்பாவிற்கு ஆபத்து நிறைந்த பயணத்தை மேற்கொண்டு இறுதியில் அவர்கள் அங்கும் கொடூர நிலைமையைத்தான் எதிர் கொள்கின்றனர். ஸ்பெயினில் 6000க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் உள்ளன; இது மொரோக்கோவுடன் ஒப்பந்தம் ஒன்றைக் கொண்டுள்ளது; இதையொட்டி சில சிறுவர்கள் திருப்பி அனுப்பப்படுவர்; அங்குள்ள மையங்களில் சிறுவர்கள் தீவிர நெறியற்ற மற்றும் உடல்வகை ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும். கடந்த ஆண்டு மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு, ஆபிரிக்காவில் இருந்து ஆபத்தான கடற்பயணத்திற்கு பின்னர் ஸ்பெயினில் கானரித் தீவுகளை அடைந்த சிறுவர்கள் காலவரையற்று அங்கு காவல் மையங்களில் இருத்தப்படுகின்றனர் என்றும் அவை எப்படி மிக அதிக நபர்களை, மட்டமான சூழ்நிலையில் கொண்டுள்ளது என்றும், அதிகாரிகள் எப்படி குழந்தைகளை அடிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தது.

அரசுசாரா அமைப்புக்கள் பலவும் ஆபிரிக்காவில் இருந்து வரும் இளம் குடியேறுபவர்கள் எதிர்கொள்ளும் இந்த மனிதாபிமானமற்ற சூழலைக் குறைகூறியுள்ளனர். IOM எனப்படும் International Organization for Migragtion உடைய மத்தியதரைக் கடல் பகுதியின் வட்டாரப் பிரதிநிதி Peter Schatzer 7,000 சிறுவர்களுக்கும் மேலானோர் இத்தாலிய அதிகாரிகளின் பொறுப்பில் இருப்பதாகவும் இதையொட்டி அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 200 மில்லியன் யூரோக்கள் செலவு ஆவதாகவும் -இது ஒரு அதிக செலவு கொடுக்கும் செயல்" என்று கூறியுள்ளார்.

Amnesty International, European Council on Refugees and Exiles (ECRE) இரண்டும் ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் உறுப்பு நாடுகள் தற்காலிகமாக ஒப்புக் கொள்ளப்பட்ட சட்டத்தை ஏற்கக் கூடாது என்று கூறியுள்ளன.

"இந்த சமரச சட்டத்தை ஏற்பதின் மூலம், ஐரோப்பிய பாராளுமன்றம் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் என்ற தன்னுடைய நெறியை குறைமதிப்பிற்கு உட்படுத்தி ஐரோப்பிய ஒன்றிய சட்டம் இருக்கும் சர்வதேச மனித உரிமைகள் தரங்களை அரிப்பிற்கு உட்படுத்திவிடும்" என்று சர்வதேச பொதுமன்னிப்புச் சபையின் ஐரோப்பிய ஒன்றிய அலுவலக இயக்குனரான Nicholas Beger கூறியுள்ளார்.

"திருப்பி அனுப்பவதற்கு நமக்கு பொது நெறிமுறை தேவை; ஆனால் அது என்னவிலைகொடுத்தாயினும் என்றவாறு இருக்கக்கூடாது. இந்த பொது நெறிமுறையில் இருக்கும் மேலதிக தடுப்புக் காவல் காலத்தை பற்றி நாங்கள் குறிப்பாக கவலை கொண்டுள்ளோம்; புலம்பெயர்ந்தவர்கள் தாங்களே புறப்படுவதற்கு பதிலாக பலாத்காரத்தால் அகற்றப்பட்டுவிடுவர்" என்று ECRE உடைய தலைமைச் செயலாளர் Bjarte Vandvik கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்போதுள்ள குடியேற்ற சட்டங்கள் ஏற்கனவே அதிக தடைகளைக் கொண்டவை. இதில் முக்கிய கூறுபாடு தஞ்சம் கோரும் உரிமை குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது; இது ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் போர் மற்றும் பல நெருக்கடிகளில் இருந்து உயிர் தப்பி ஐரோப்பாவிற்கு திருட்டுத்தனமாக பயணித்து வருகையில் உயிரை இழக்கக் கூடிய ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1993ல் இருந்து UNITED அமைப்பு கொடுத்துள்ள இறந்தவர் பட்டியல் "ஐரோப்பியக் கோட்டை" கட்டியமைப்பதில் ஏற்பட்டுள்ள ஆபத்தான விளைவுகளை கவனித்து வருகிறது. இதுவரை 6,700 க்கும் மேற்பட்ட அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் இறந்தவர் பட்டியலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த இறப்புக்கள் எல்லை, இராணுவக் கட்டுப்பாடு, தஞ்சம் கோருவோர் பற்றிய சட்டங்கள், தடுப்புக்காவல் விதிகள், வெளியேற்ற நடவடிக்கைகள், போன்றவற்றால் ஏற்படுகின்றன. ஐரோப்பிய அரசாங்கங்கள் இதை எதிர்கொள்ளும் முறை இன்னும் பெருகிய முறையில் கடுமையான பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளாகத்தான் இருக்கின்றன. http://www.united.non-profit.nl/pages/info24.htm

திருப்பி அனுப்பப்படுவதற்கான பொதுநெறிமுறை என்பது சமீபத்தில் அபிவிருத்தி அடைந்துள்ள வழிவகை; இதையொட்டி ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய இராணுவ எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு FRONTEX என்பதை நிறுவியுள்ளது; அதில் ஏற்படுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு முறை (Eurosur) புலத்பெயர்ந்தோர்களின் நடவடிக்கையை செயற்கைக் கோள்கள் மற்றும் வான்வழி கட்டுப்பாடு மற்றும் Rapid Border Intervention Teams ஆகியவற்றின் மூலம் கண்காணிப்பதற்கு வசதிசெய்யப்பட்டுள்ளது. No-Racism என்னும் வலைத் தளம் கூறுகிறது: FRONTEX ஒரு இராணுவ பாதுகாப்பு ஆட்சிமுறையை பிரதிபலிக்கிறது; இதில் போலீஸ், எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், குடியேறுபவர் துறை அதிகாரிகள், இராணுவம் மற்றும் உளவுத் துறை பிரிவுகள் இன்னும் கூடுதலான வகையில் இணைந்த வகையில் அடக்கு முறையைக் கையாண்டு உலகத்தை பிளவு செய்கின்றனர்." (See "The EU strengthens ‘Fortress Europe' against migration due to climate change")

இந்த பொதுநெறிமுறையின் சட்டவரைவிற்கு பெரிய வலதுசாரிக் குழுவான European People's Party (EPP-ED), Alliance of Liberals and Democrats for Europe (ALDE) மற்றும் UEN எனப்படும் தேசிய கன்சர்வேட்டிவ் ஆகியவற்றின் ஆதரவு உள்ளது. ஆனால் பொதுநெறிமுறையில் முன்மொழியப்பட்டுள்ள நீண்ட காலத் தடுப்புக் காவலுக்கு PES எனப்படும் சோசலிஸ்ட் குழுக்களிடமிருந்து சிறுபான்மை எதிர்ப்பும் இருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் குடியேறுபவர்களின் உரிமைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றுகின்றன; வலதுசாரி அரசியல் வாதிகள் குடியேற்ற எதிர்ப்பு உணர்வை தேர்தலில் தூண்டிவிட்டு வெற்றி பெற முயல்கின்றனர்.

இத்தாலியில் மே 21ம் தேதி இத்தாலிய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி சமீபத்தில் நியமித்த மந்திரிசபை, குடியேறுபவர்களுக்கு எதிராக கடுமையான புதிய சட்டங்களை இயற்றியுள்ளது. புதிய ஆணைகள் பல வாரங்கள் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த சோதனைகள், வன்முறைகள் என்று இத்தாலியில் உள்ள குடியேறிய சமூகங்களுக்கு எதிராக இயக்கப்பட்ட பின் வந்துள்ளன. (See "Berlusconi government incites racist pogroms")

பிரான்சில் உள்ள நிக்கோலோ சார்க்கோசியின் வலதுசாரி அரசாங்கமும் மிகப் பெரிய போலீஸ் சோதனையை ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துள்ளது; வேலை கொடுப்பவர்கள் மற்றும் அனைத்து அரசாங்க நிர்வாகத்துறைகளும் போலீசாருக்கு ஆவணமற்ற குடியேறியவர்களை பற்றிய தகவலை கொடுக்க வேண்டும் என்றும் உத்திரவிட்டுள்ளது.

இதற்கு விடையிறுக்கும் வகையில் ஆவணமற்று குடியேறுபவர்கள், துப்புரவுப் பணி, கட்டிடத் துறை, சில்லறை விற்பனை, பாதுகாப்பு, உணவு விடுதிகள் துறைகளில் இருப்பவர்கள் பாரிசில் ஏப்ரல் 15 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு ஒரு டஜன் நிறுவனங்களின் தலைமையகங்கள் ஆக்கிரமித்து உடனடியாக சட்டபூர்வ அங்கீகாரத்தை கோரினர். பாரிசிலும் ஆவணமற்ற தொழிலாளர்கள், ஒரு தொழிற்சங்க அரங்கை மத்திய பாரிசில் மே 2 முதல் ஆக்கிரமித்து தொழிற்சங்கம் இக்கோரிக்கைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது.