World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்ா : பிரான்ஸ்

France: unions collaborate with employers, government to deregulate working hours

பிரான்ஸ்: வேலை நேரங்களைத் தளர்த்துவதற்கு முதலாளிகள், அரசாங்கத்துடன் தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு

By Antoine Lerougetel and Pierre Mabut
16 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஜூன் 17ல் நடவடிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தினம் என்று CGT, CFDT தொழிற்சங்க கூட்டமைப்புக்களால் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது ஏப்ரல் 9 அன்று அவர்கள் நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாள வர்க்க காட்டிக் கொடுப்பையும், அவர்கள் அன்று முதலாளிகளுடன் "பொது நிலைப்பாடு" என்பதில் கையெழுத்திட்டதையும் மூடி மறைப்பதற்கான ஒரு முயற்சி ஆகும். அரசாங்கம் பின்னர் இதனை தொழிற்சங்க பிரதிநிதித்துவம் மற்றும் பணி நேரங்கள் பற்றிய மிகப் பிற்போக்கான சட்டத்தை இயற்றுவதற்கு ஒரு அடிப்படையாக எடுத்துக் கொண்டது.

இச்சட்டம் "சோதனை முறையில்" தளர்த்தப்பட்ட பணி நேரங்கள் பற்றிய நடைமுறையை முன்மொழிந்துள்ளது; இதையொட்டி முதலாளிகள், தேசிய மற்றும் தொழில்துறையின் சட்டபூர்வ கட்டுப்பாடுகளில் இருந்து சுதந்திரம் பெறுவர். முதலாளிகள் அமைப்புக்களுடன் இப்பிரச்சினை பற்றி விவாதங்களில் சம்பந்தப்பட்டிருந்த ஏனைய சிறிய, ஆறு தொழிற்சங்க அமைப்புக்கள், கோட்பாடு என்பதைவிட அதிகாரத்துவ போட்டிகளின் காரணமாக ஆவணத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டன.

அரசாங்க பணி ஆய்வாளரும் தொழிலாளர் சட்ட வல்லுனரும் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினருமான Gérard Filoche, சட்ட வரைவு பற்றி கீழ்க்கண்ட மதிப்பீட்டை கூறியுள்ளார்: "கூடுதல் நேரத்திற்கு ஊதியம் உட்பட, [தொழில் சட்டத் தொகுப்பில்] இருக்கும் அனைத்து விதிகளையும் அது கருத்தில் கொண்டுள்ளது; இவை அனைத்தும் ஜனவரி 1, 2010க்குள் பழையபடி பேச்சுவார்த்தைகளுக்கு உட்படும் ... ஒவ்வொரு தொழிலாளியின் பணிநேரமும் எந்த முந்தைய உடன்பாடு ஏதும் இன்றி ஒரு தனி வாரந்திர, மாதாந்திர பணி நேரம் பற்றிய உடன்பாடுகள் மூலம் நிர்ணயிக்கப்பட்டுவிட முடியும்."

அவர் மேலும் கூறினார்: "முதலாளிகள் இவ்விதத்தில் கூடுதல் பணி நேரத்திற்கு அதிக ஊதியம் கொடுப்பதை தவிர்க்கலாம்; வேலை ஆண்டு இப்பொழுது இருக்கும் 1,607 மணி நேரத்தைவிட அதிகம் ஆகலாம். இதையொட்டி முன்பு கூடுதல் பணி நேரம் என்று இருந்தவை இப்பொழுது பணிநேரத்திலேயே சேர்ந்துவிடும்... ஊதியங்களை ஆண்டு முறையில் கணக்கிடுவதற்கான பொருளாதார காரணம் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம், வாரம் 48 மணிகள் என்றிருக்குமாப்போல் நசுக்கப்பட்டுவிடும்.... நாம் பணி நேரம் மற்றும் தொழிலாளர்கள் அவற்றிற்கு பணிவது இவற்றைப் பொறுத்தவரையில் 19ம் நூற்றாண்டிற்கு திரும்பிவிடுவோம்."

இந்த மாறுதல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆளும் அங்கங்களில் தற்பொழுது விவாதிக்கப்படும் ஒரு வேலைநேரத்திற்கான பொதுநெறிமுறைக்கான முன்மொழிவுகளுடன் இணைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளில் பிரதிநிதிகள் லுக்ஸம்பேர்க்கில் தயாரித்துள்ள ஆவணம் வாரத்திற்கு 60 அல்லது அதற்கும் அதிகமான நேரத்தை அனுமதிக்கிறது.

தொழிற்சங்கங்கள் இப்பொழுது இந்த சட்ட வரைவிற்கு எதிராக எதிர்ப்புக்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. இதில் மோசடி என்னவென்றால், CGT (ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக இருக்கும் தொழிலாளர் பொது கூட்டமைப்பு), மற்றும் CFDT (சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக இருக்கும் பிரெஞ்சு தொழிலாளர் ஜனநாயகக் கூட்டமைப்பு) இரண்டும் தாங்களே தொடக்கி பெரிதும் ஆதரவு கொடுத்த கொள்கைகளுக்கு எதிராக, தொழிலாளர்களை அணிதிரட்டுவதுதான்.

மே 29 Liberation பதிப்பிற்கு கொடுத்தபேட்டி ஒன்றில், CGT தலைவர் பேர்னார்ட் தீபோ, "எங்களுக்கு ஒரு முக்கிய சலுகை என்பதை ஏற்றுக் கொண்டோம்; அதாவது ஒரு தனிப்பட்ட நிறுவனத்தில் பெரும்பான்மையினர் உடன்பாடு என்ற கட்டமைப்பின் வரையறைக்குட்பட்ட கூடுதல் நேரங்களின் அளவு பற்றிய கோட்பாடானது கைவிடப்பட முடியும். ஆனால் இரு நிபந்தனைகள் இருந்தன: ஒன்று, இது சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், பெரும்பாலான தொழிலாளர்களின் பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களால் கையெழுத்திடப்பட்ட ஒரு உடன்பாட்டில் இருக்க வேண்டும்." அப்பேட்டியில், "அரசாங்கம் இப்பொழுது கூடுதல் நேரம் பற்றிய சட்டத்தை தனிப்பட்ட நிறுவனத்தின் மட்டத்திற்கு விட்டுவிட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறது" என்று திபோ குறைகூறினார். இதுதான் ஒப்புக்கொள்ளப்பட்ட "பொது நிலைப்பாட்டின்", "சோதனைப் பகுதி."

வேலைபார்க்குமிடத்தில் அல்லது நிறுவனத்தில் சக்திகளின் உறவுகள் எப்படி இருந்தாலும், தொழிலாளர்கள் மட்டுபாடற்ற வகையில் சுரண்டப்படுவதற்கு எதிரான தேசிய மற்றும் தொழில் ரீதியான சட்டரீதியான பாதுகாப்புக்கள் புறக்கணிக்கப்பட முடியாதவை என்று, 19ம் நூற்றாண்டில் கடுமையான நீடித்த போராட்டங்களுக்கு பின்னர் நிறுவப்பட்ட கோட்பாட்டை இது கைவிடுகிறது.

இது முதலாளிகளுக்கு கொடுக்கும் நன்மையை திபோ விளக்கினார்: "ஒரு துறையில் பெரும்பான்மை உடன்பாட்டின் கட்டமைப்பில் (குறிப்பிடப்பட்ட) கூடுதல் பணி நேர அளவு பற்றிய கோட்பாட்டை இரு நிபந்தனைகளின் கீழ், கைவிடுவதை இது சாத்தியமாக்கும்... இரு நிபந்தனைகளில், ஒன்று இது சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்; இரண்டாவது, இது பெரும்பாலான தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்களுடன் கொள்ளும் உடன்பாட்டின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்," எனவே தொழிற்சங்கங்களின் பெரும்பான்மை என்பது தேவைப்படாது.

தொழிற்சங்கங்கள் மற்றும் ஆளும் வர்க்கத்திற்கு இடையே இருக்கும் நெருக்கமான ஒத்துழைப்பு தொழிற்சங்கங்கள், MEDEF (முதலாளிகள் சங்கம்) கன்சர்வேட்டிவ் UMP பாராளுமன்ற குழு ஆகியவை ஜூன் 10 அன்று நடத்திய கூட்டு நெருக்கடிக் கூட்டத்தில் உயர்த்திக் காட்டப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள், பிரான்சில் இருக்கும் தற்போதைய சமூக வெடிப்பு தன்மை நிறைந்த நிலையில் விரைவாக செயல்படுத்த நினைக்கும் வகையில், அரசாங்கம் பிரச்சினையை தட்டிக் கழிப்பதுடன், முதலாளித்துவ ஆட்சிக்கு தொழிற்சங்கம் முண்டுகோலாக இருக்கும் வகையில் அவற்றை குறைமதிப்பிற்கும் உட்படுத்துகிறது என்ற தங்கள் கவலையை பெரிதும் தெரிவித்தனர்.

CFDT யின் தலைவர் பிரான்சுவா சேரேக் கூறினார்: "தொழில் மந்திரி எங்களை ஏமாற்றிவிட்டதாக நாங்கள் உணர்கிறோம்; பேச்சுவார்த்தைகளை பயன்படுத்தி வேறு எதையோ செய்துவிட்டார்." "பணி நேரம் பற்றிக் குறிப்பிட்டுள்ள சட்ட வரைவின் இரண்டாம் பகுதியில் உள்ள வழிமுறை மற்றும் உள்ளடக்கம் இரண்டுடனும் தமது உடன்பாடின்மையை" தெரிவித்த்துடன்...'. இவை தொழில் விதித் தொகுப்பில் இருக்கும் 60க்கும் மேற்பட்ட விதிகளை மீறி உள்ளது" என்றும் திபோ சுட்டிக் காட்டி எதிர்த்துள்ளார்.

MEDEF தலைவர் லோரன்ஸ் பாரிஸோ இந்த சட்டவரைவிற்காக UMP ஐ கண்டிப்பதை மிகவும் வலியுறுத்தினார். "நாங்கள் முதுகில் குத்தப்பட்டோம்" என்று இந்த அம்மையார் கூறினார், "உடன்பாட்டின் உணர்வில் சட்டவரைவு இயற்றப்படவில்லை. வேலை நேரம் பற்றிய குறிப்பிடத்தக்க மாறுதல்கள், பொதுநிலையில் வெளியிடப்பட்டவை, மற்றும் தொழிற்சங்க பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலும் கூறப்பட்டன. இந்த புதிய விளைவுகளை பாதிக்கும் வகையில் அரசியல் முடிவுகள் இப்பொழுது எடுக்கப்படக்கூடாது; பிரான்சில் சமூக உறவுகளின் வளர்ச்சி இணக்கம் ஆகியவற்றிற்கு அவை முக்கியமாகும்."

ஒரு குறிப்பிடத்தக்க வகையில் பதட்டம் என்பது ஆளும் UMP (மக்கள் இயக்கத்திற்கான ஒன்றியம்)- யில் இருக்கும் நிதான கூறுபாடுகளால் வெளியிடப்பட்டுள்ளது; இத்தகைய நிலைப்பாட்டிற்கு முன்னாள் பிரதம மந்திரி Jean-Pierre Raffarin சட்டவரைவில் இருக்கும் சட்டபூர்வ கூடுதல் பணிநேரத்திற்கு வெளிப்படையான சவால் கொடுப்பதற்கு முன்னணியில் உள்ளார்.

இதற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் Le Monde மே 30 அன்று சார்க்கோசியை குறைகூறி தலையங்கம் எழுதியுள்ளது: "CGT மற்றும் CFDT உடன் உண்மையான நம்பிக்கை உடைய உறவை அவர் கட்டமைத்தது போல் தோன்றியது.... CGT மற்றும் CFDT கூறுவதைப் பார்த்தால் இது தவறு போல் தெரிகிறது. UMP 35 மணி நேரத்தை தகர்க்க வேண்டும் என்பதை சமாதானப்படுத்துவதற்கு சார்க்கோசி CGT, CFDT ஆகியவற்றுடன் கொண்ட "ஒப்பந்தத்தை" முறிக்கிறார். சமூக மாறுதல்கள் குவியக்கூடிய ஆபத்து இருக்கும் நிலையில் இது தவறு என்பதையும்விடக் கூடுதலாகும்."

CGT மற்றும் CFDT ஆகியவற்றிற்கும் முதலாளிகளுக்கும் இடையே பணி நேரம் பற்றிய உடன்பாடு என்பது இரு தொழிற்சங்கங்களுக்கும் தொழிற்சங்க பிரதிநிதித்துவத்தில் ஆதரவு கொடுத்ததற்கு அளித்த வெகுமதி எனலாம். சட்டப்படி உத்தியோகபூர்வ அங்கீகாரம், நிதி இவற்றை அரசாங்கத்தில் இருந்து பெறுவதற்கு தொழிற்சங்கங்கள் குறைந்தது பிரதிநிதிகள் தேர்தலில் 10 சதவீத வாக்குளையாவது அடைய வேண்டும்; இது CGT மற்றும் CFDT என்னும் இரு பெரும் தொழிற்சங்கங்களுக்கும் அவற்றின் போட்டியாளர்களைவிட உறுதியான ஆதரவை பெற்றுத் தருகிறது. இப்படி நுழைவிலேயே ஆதரவு என்பது CGT, CFDT இரண்டு அமைப்புக்களின் உத்தியோகபூர்வ அலுவலர்களுக்கும் கூட்டு நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க குழுக்கள் இவற்றில் மத்தியஸ்தர்கள் மற்றும் பங்குபெறுவோர் என்ற வகையில் பெரும் பங்கை கொடுக்கிறது; இதைத்தவிர தேசிய முதலாளிகள்-தொழிற்சங்க கூட்டு அமைப்புக்களில், தொழிலாளர் உறவுகளை கட்டுப்படுத்தும் அமைப்புக்கள், ஓய்வூதியங்கள், வேலையின்மை பிற சலுகைகளை ஒழுங்குபடுத்தும் அரசு அமைப்புக்களில் இலாபகரமான ஸ்தானங்களை கொடுக்கும்.

சார்க்கோசியின் பெருநிறுவனக் கருத்தாய்வான வலுவான தொழிற்சங்கங்களுடன் ஒத்துழைப்பு அல்லது CGT அதிகாரத்துவம் கூறுவது போல், "எதிர்ப்புக்களுக்கு பதிலாக கருத்துக்களை முன்வைக்கும் தொழிற்சங்கங்கள்" என்ற நிலையில், ஆவணங்கள் தொழிற்சங்கங்களின் சரியும் உறுப்பினர் எண்ணிக்கையை கட்டமைக்க உதவியை கோருகிறது. "தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு சில ஏற்கப்பட்ட நலன்களை ஒதுக்கீடு செய்தல் என்பது, பல்வேறு வடிவங்களில் தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கையை வளர்க்கக் கூடிய பாதையை கண்டறிவதை ஏற்படுத்தும்."

இந்த உடன்பாட்டில் தொழிற்சங்க அதிகாரிகளுக்கான லஞ்சங்களும் உள்ளன. "பங்கு பெற்றவர்களை அங்கீகரித்தல்" என்ற துணைப் பிரிவு, "சமூக உரையாடலை சிறப்பிக்க, வளர்க்கும் முறையில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தையும் வசதிகளையும் அதிகரிக்கும் வகையில், தொழிற்சங்க பொறுப்புடைய தொழிலாளர்களுக்கு நலன்கள் இருக்கும். நிறுவனங்கள், "தொழிற்சங்க அலுவலர் என்னும் முறையில் பெறப்படும் அனுபவத்தையும்" கணக்கில் எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு வேலையில் முன்னேற்றம் கொடுக்க வேண்டும். "நீண்ட கால தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் நலனுக்காக ... சமூக உரையாடல் அறக்கட்டளை தோற்றுவிக்கப்படும்... குறிப்பாக இது திறமையுடன் தொழில் நேர்த்திக்கு வழிவகுக்கும்; தொழிற்சங்க பொறுப்புக்களை நடத்தியதற்கு அளிப்பையும் கொடுக்கும்."

பொது நிலைப்பாட்டில் கையெழுத்திட்டவர்கள், CGT ஓய்வூதியங்கள் பற்றிய சிறப்பு பேச்சுவார்த்தையாளரும், கடந்த ஆண்டு அக்டோபர் நவம்பரில் இரயில் மற்றும் பாரிஸ் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் தங்களின் சிறப்பு ஓய்வூதியங்களுக்காக நடத்திய வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுப்பதில் காரணகர்த்தாவாக இருந்தவருமான Jean-François Le Duigou, வாழ்க்கைத் தொழிலில் முன்னேற்றம் கண்டிருந்ததை மனதில் கொண்டிருந்தனர் என்பதில் எந்த ஐயமுமில்லை. இந்த ஆண்டு ஜனவரி மாதம் WSWS எழுதியது: "மைய இடது நாளேடான Le Monde கொடுத்துள்ள கருத்துக்களின்படியும், L'Express இதழின்படியும் Le Duigou தன்னுடைய முன்னாள் பதவியான உயர்மட்ட வரிவிதிப்பு அதிகாரி என்பதற்கு திரும்புவார் எனத் தெரிகிறது. அடைமான பத்திரங்களின் இயக்குனர் என்ற முறையிலும் அவர் சம்பளம் பெறுவார். இப்பதவிகளுக்காக அவருடைய நிகர வருமானம் 9,000 யூரோக்கள் மாதம் என்று இருக்கும் -- இது பேர்சியில் இருக்கும் நிதி அமைச்சகத்திலேயே சிறந்த ஊதியங்களுள் ஒன்று" என்று Le Monde குறிப்பிட்டுள்ளது."