World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

War threats against Iran overshadow US elections

ஈரானுக்கு எதிரான போர் அச்சுறுத்தல்கள் அமெரிக்க தேர்தல்களின் மேல் நிழல் கவிந்துள்ளது

By Bill Van Auken
24 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க மக்களுக்கு ஈராக்கில் போர் மற்றும் ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கு ஒரு உண்மையான வாய்ப்பைத் தருவதற்கு முற்றிலும் மாறாக அமெரிக்க தேர்தல்கள் பெருகிய முறையில் ஈரானுக்கு எதிரான புதிய இராணுவ ஆக்கிரோஷ அச்சுறுத்ததல்களினால் நிழல் கவிந்துள்ளன.

வாஷிங்டன் மற்றும் டெல் அவிவில் இருந்து சமீபத்திய நாட்களில் வெளிவரும் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள், அறிக்கைகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் இப்படித்தான் உள்ளது.

ஈரானிய அணுசக்தி நிலையங்களுக்கு எதிரான தவிர்க்க முடியாத விமானத் தாக்குதல்கள் பற்றிய ஊகங்கள் வெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸில் வெளிவந்த அறிக்கை ஒன்றினால் உயர்த்திக் காட்டப்பட்டன; அதில் இம்மாதம் முன்னதாக மத்தியதரைக்கடல் பகுதியில் நடந்த தொலைதூர பயிற்சி ஒன்றைப் பற்றிய விவரம் அளிக்கப்பட்டிருந்தது; அதில் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய F -15, F -16 ஜெட் விமானங்கள் பற்றியும் மீட்பு ஹெலிகாப்டர்கள் பற்றியும் எழுதப்பட்டிருந்தது.

"இம்மாதம் முன்னதாக இஸ்ரேல் ஒரு பெரிய இராணுவப் பயிற்சியை மேற்கொண்டது; அமெரிக்க அதிகாரிகள், இது ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட இருக்கும் குண்டுத் தாக்குதலுக்கு ஒத்திகை போல் இருக்கிறது என்று கூறினர்" என டைம்ஸ் எழுதியுள்ளது.

இந்த இராணுவ அச்சுறுத்தலுக்கு விடையிறுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் IAEA சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் மகம்மது எல்பரடேய், ஈரானிய அணுசக்தி திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பை கொண்டவர், இது எந்த விதத்திலும் "தற்பொழுதைய தீவிர அல்லது உடனடி ஆபத்து" என்ற முறையில் நியாயப்படுத்தப்பட முடியாது என்றும் அத்தகைய தாக்குதல் நடந்தால் தான் தன்னுடைய பதவியை விட்டு விலகிவிட இருப்பதாகவும் அச்சுறுத்தினார்.

ஈரானுக்கு எதிரான விமானத் தாக்குதல்கள் "அப்பகுதியை நெருப்புக் கோளமாக்கிவிடும்" என்று எச்சரித்த அவர் அது "அனைத்து ஈரானியர்களுடைய ஆசியுடனும் ஒரு அவசர நடவடிக்கையை அணுசக்தி ஆயுத வசதியைக் கட்டமைக்கும் வழிவகையை ஏற்படுத்திவிடும்" என்றும் கூறினார்.

இந்த அறிக்கை பரந்த அளவில் வாஷிங்டன் மற்றும் இஸ்ரேல் வேண்டுமேன்றே கசிய விட்ட தகவல் என்று கொள்ளப்படுகிறது; இதன் நோக்கம் தன்னுடைய யுரேனிய அடர்த்தித் திட்டத்தை கைவிடுமாறு தெஹ்ரானுக்கு அழுத்தம் கொடுப்பது ஆகும். ஈரானிய அரசாங்கம் மேலைநாடுகளின் கோரிக்கையான இம்முயற்சிகளை நிறுத்த வேண்டும் என்பதை நிராகரித்தது; அவை உள்நாட்டு அணுசக்தி விசை வளர்ச்சிக்காகத்தான் பிரத்தியேகமாக இருப்பதாகவும் அணுவாயுதப்பரவல் உடன்படிக்கையை மீறவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஈரானுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் Javier Solana பயணித்து ஒரு வாரத்திற்குள்ளாக டைம்ஸ் அறிக்கை வந்துள்ளது; அவர் ஈரானிய அரசாங்கத்திற்கு பொருளாதார, அரசியல் ஊக்கங்களின் தொகுப்பு ஒன்றை அடர்த்தி திட்டத்தை ஈரான் நிறுத்திக் கொள்ளுவதற்கு ஈடாக தருவதற்கு முன்வந்துள்ளார். இந்த வார தொடக்கம் வரை ஈரானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அந்த கோரிக்கைக்கு பதில் கூறவில்லை.

இதற்கிடையில், ஐரோப்பி ஒன்றியம் திங்களன்று ஒரு தீர்மானத்தை ஏற்றது; அதன்படி ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகள் உள்ளன; நாட்டின் மிகப் பெரிய வங்கியான மெலி வங்கி ஐரோப்பாவில் செயல்படக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேலிய செய்தி ஊடகம் ஈரான் மீது விமானத் தாக்குதல்களுக்கு ஒத்திகை எனக் கூறப்படுவது பற்றிய அறிக்கை ஒன்றை அழுத்தம் தரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெளியிட்டது.

"பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்கள் விளைவுகளை கொடுப்பதில் தோல்வி அடையும்போது, துப்பாக்கிமுனை தூதரக நெறிக்கு மாற்றாக வந்துள்ளது" என்று இஸ்ரேலின் மிகப் பெரிய செய்தி ஏடான Yedioth Ahronoth ன் இராணுவ விவகாரங்கள் கட்டுரையாளர் எழுதியுள்ளார்.

"ஈரானிய ஆட்சி ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியுடைய மிகச் சமீபத்திய கருத்தான அணுசக்தி திட்டத்தை பரந்த நலன்களுக்கு ஈடாக நிறுத்தவேண்டும் என்பதை விவாதிக்கையில், அமெரிக்கர்கள் இன்னும் கூடுதலான அழுத்தத்தை இஸ்ரேல் விமானப் படைத் தாக்குதல் என்ற வகையில் கொடுக்கின்றனர்" என்று அவர் எழுதியுள்ளார்.

பெயரிட விரும்பாத இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் ஞாயிறன்று டைம்ஸ் ஆப் லண்டனில் இன்னும் அப்பட்டமாக மேற்கோளிடப்பட்டார். "சுவரிலே எழுதப்பட்டுள்தை ஈரான் படிக்கவேண்டும்" என்று அவர் கூறியதாக தெரிகிறது. அவர் தொடர்ந்தார்: "இது ஒரு ஒத்திகைதான்; ஈரானியர்கள் அணுசக்தி பற்றிய தங்கள் திட்டத்தை தொடருமுன் இருக்கும் நிலை பற்றி நன்கு உணர வேண்டும். தூதரக நெறி விளைவுகளை கொடுக்கவில்லை என்றால், இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகளை எடுத்து தெஹ்ரான் குண்டு தயாரிக்கும் தரமுடைய யுரேனிய அடர்த்தி உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்கும்."

பெயரிடப்படாத ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரியை மேற்கோளிட்டு, ேவால் ஸ்ட்ரீட் ஜேர்னல், "அமெரிக்க கொள்கை இயற்றுபவர்கள் இந்த ஒத்திகைக்கான காரணம் பற்றி மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். சிலர் இந்த உத்தியை ஈரான் மீது பின்னர் நடத்தப்பட இருக்கும் தாக்குதலுக்கு நடைமுறைப் பயிற்சி எனவும், வேறு சிலர் அது இஸ்ரேல் கவலை பற்றி தெஹ்ரான் வாஷிங்டன் இரண்டிற்கும் நினைவுபடுத்தும் வலிமை செயல்தான் என்றும் கருதுகின்றனர்" என்று எழுதியுள்ளது.

இத்தகைய பயிற்சி -- இதைப்பற்றி அமெரிக்க செய்தி ஊடகத்தில் வந்த பரபரப்பு செய்திகள்-- மற்றொரு முக்கியமான இலக்கை கொண்டுள்ளது. அமெரிக்க மக்கள் மற்றொரு ஆக்கிரமிப்பு போரில் ஈடுபடுத்தப்படலாம் என்பதற்கான தயாரிப்புத்தான் இது.

இஸ்ரேலிய தாக்குதல் மட்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி அதன் அணுசக்தித் திட்டத்தை அழிக்கும் மூலோபாயத் திறனைக் கொண்டது அல்ல என்று இராணுவ பகுப்பாய்வாளர்கள் கூறியுள்ளனர்; ஏனெனில் ஈரானின் திட்டங்கள் பலவும் கோட்டை போல் இருக்கும் நிலவறைகளுள் அமைந்துள்ளன. இத்தகைய அச்சுறுத்தலுக்கு ஒரே நோக்கம் அமெரிக்காவுடனான ஒரு கூட்டு நடவடிக்கையின் பகுதியாக அமைப்பதற்கோ அல்லது வாஷிங்டனையும் இத்தகைய தாக்குதலில் இழுப்பதற்கோ ஆகும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய நடவடிக்கைக்கு நல்ல ஆதரவுத் தளம் ஒன்று குடியரசுக் கட்சி வலதின் செல்வாக்கு மிகுந்த கூறுபாடுகளுள் உள்ளது; அவர்கள் வெளிப்படையாக ஒரு அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் ஈரான் மீது நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர் --வாஷிங்டன் விரைவில் செயல்படாததற்காக அதன்மீது ஏமாற்றத் திகைப்பையும் கொண்டுள்ளனர்.

இந்தத் தகவல்தான் தெளிவாக ேவால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் திங்களன்று வந்த தலையங்கத்தில் உள்ளது; தற்போதைய நிர்வாகத்தை தன் ஆதிக்கத்திற்குள் வைத்துள்ள வலதுசாரி அடுக்குகளின் தொடர்ச்சியான குரலாக இது உள்ளது. "ஈரானை விளிம்பிற்கு தள்ளும் இஸ்ரேல்" என்ற தலைப்பில் தலையங்கம் கூறுகிறது:

"தாங்கள் கஷ்டத்திற்கு உள்ளாக கூடிய போரை இஸ்ரேலியர்கள் வரவேற்க மாட்டார்கள். இருப்பினும்கூட தங்களை அழித்துவிட உறுதிபூண்டிருக்கும் ஒரு விரோதியில் இருந்து காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்கு வேறு விருப்புரிமையும் இல்லை; ஈரான் அணுவாயுதத்தை கொண்டால். கடந்த ஆறு ஆண்டுகளில் சோகம் நிறைந்த புதிர் என்னவென்றால் ஈரானுடன் போரைத் தவிர்ப்பதற்காக கொடுக்கப்படும் தூதரக, உளவுத்துறை நடவடிக்கைகள் நம்மை இத்தகைய ஆபத்தின் விளிம்பில் நிறுத்தியிருப்பதுதான். திருப்தி செய்ய வேண்டும் என்று நினைப்பது போரில்தான் முடியும் என்பது பலமுறையும் வரலாற்றில் காட்டப்பட்டுள்ளது."

இதற்கிடையில் நிர்வாகத்தின் இரு முக்கிய ஆதரவாளர்கள் --ஈராக்கிற்கு எதிராக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதே போலிக்காரணங்களான பேரழிவு ஆயுதங்கள், பயங்கரவாதப் பிணைப்பு என்ற கருத்தை வளர்த்தவர்கள்-- கடந்தவாரம் உறைய வைக்கும் வகையில் ஈரான் மீது தாக்குதல்கள் பற்றிய அரசியல் கணக்குகள் மற்றும் நேரம் ஆகியவற்றை பற்றிப் பேசினர்.

ஒரு தொலைக்காட்சி பேட்டியில், "Fox News Sunday" யில் பேசிய வலதுசாரி Weekly Standard ன் பதிப்பாளரான Bill Kristol, ஜனாதிபதி புஷ் ஈரான் மீது அத்தகைய போரை தொடக்க கட்டாயப்படுத்தப்படலாம் என்று எச்சரித்தார்; நவம்பர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பரக் ஒபாமாவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றால், இது நிகழக்கூடியது.

"ஜோன் மெக்கெயின் அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடும் என்று ஜனாதிபதி நினைத்தால், அவர் தான் பதவியை விட்டு வெளியேறும் முன் செய்வதற்குப் பதிலாக அடுத்த ஜனாதிபதி இதைச் செய்வது பொருத்தம்" என்று நினைக்கலாம்.

ஆனால் "செனட்டர் ஒபாமா வெற்றிபெறக் கூடும் என்று ஜனாதிபதி புஷ் நினைத்தால், அக்கொள்கையை ஒருவேளை ஒபாமா பின்பற்ற மாட்டார் என்று நினைக்கிறாரா, கருதுகிறாரா?" என எச்சரித்தார்.

Fox ன் Chris Wallace னால் புஷ் தேர்தலுக்கு முன்போ பின்போ "ஒரு இராணுவத் தாக்குதலை நடத்துவாரா" என வினவப்பட்டதற்கு கிறஸ்டல் கூறினார்: "எனக்குத் தெரியாது. நான் நினைப்பது அவர் அதைப் பற்றிக் கவலைப்படுவார் என்பதுதான். மாறாக, தேர்தல் முடிவுகளை பற்றி அனுமானங்களை வைத்து வெளியுறவுக் கொள்கைகளை நிர்ணயிப்பது கடினம். இஸ்ரேலும் கவலையில்தான் உள்ளது என்று நினைக்கிறேன். அதாவது நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகள் என்ற விதத்தில் ஒபாமா வெற்றி பெற்றால், இராணுவ வலிமையை பயன்படுத்துவது பற்றி பேசுவது கூட வெளிப்படையான தயக்கம் ஆகும். அந்த நிலையில் அஹ்மதிநெஜாட்டிற்கு எத்தகைய அடையாளத்தை இது கொடுக்கும்?"

இதற்கிடையில் ரூபர்ட் மர்டோக்கிற்கு சொந்தமான, வலதுசாரி இணையமான Fox ல் ஞாயிறன்று தோன்றிய முன்னாள் ஐக்கிய நாடுகளில் அமெரிக்க தூதராக இருந்த ஜோன் போல்டன், இஸ்ரேலிய தாக்குதல் பற்றி இன்னும் துல்லியமான கணிப்பை கொடுத்தார்.

"இதை அவர்கள் செய்ய உள்ளனர் என்றால், மிக உகந்த காலம் எமது தேர்தல்களுக்கு பின்னர், புதிய ஜனாதிபதி பதவி ஏற்பதற்கு முன்பு செய்ய வேண்டும். நம் தேர்தலுக்கு முன் எதையும் செய்வார்கள் என்று நினைக்கவில்லை; ஏனெனில் தேர்தலில் பாதிப்பை அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஜனாதிபதி புஷ் பதவிக் காலம் முடிவதற்குள் செய்யவேண்டுமா அல்லது அவருக்குப் பின்வருபவருக்கு விட்டுவிடலாமா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்."

பிரிட்டிஷ் Daily Telegraph க்கு இதற்கு பின் கொடுத்த பேட்டியில், நீண்ட காலமாக ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலுவாகக் கூறும் போல்டன், ஒரு இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு "உகந்த நேரம்" நவம்பர் 4 தேர்தலுக்கு பின்னர், புதிய ஜனாதிபதி பதவி ஏற்கும் ஜனவரி 20, 2009 க்கு முன்பு என்று மீண்டும் கூறினார்.

"நாள்காட்டியின் மீது இஸ்ரேலியர் பார்வையை கொண்டுள்ளனர்; ஏனெனில் தங்கள் அணுவாயுத திறனை வளர்த்துக் கொள்ளும் வேகம் மற்றும் தங்கள் பாதுகாப்பிற்கு புதிய ரஷ்ய விமானமுறை-எதிர்ப்புக்களை வாங்கும் கருத்தையும், அணுநிலையங்களை கூடுதலாக காக்கும் திறனையும் நோக்கும் போது அந்த வேகத்தைப் பற்றி இஸ்ரேலியர் கவலை கொண்டுள்ளனர்" என்று டெலிகிராப்பிடம் அவர் கூறினார்.

"அமெரிக்கத் தேர்தல் நடப்பது பற்றியும் அவர்கள் வெளிப்படையாக பார்க்கின்றனர். என்னுடைய தீர்மானம் அவர்கள் தேர்தலுக்கு முன்பு அவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள்; ஏனெனில் தேர்தலில் அதன் பாதிப்பு இருக்கும்."

"அக்டோபர் வியப்பு" பற்றி கணிசமான ஊகம் உள்ளது; அதாவது, ஒரு இராணுவ நடவடிக்கை அல்லது பயங்கரவாதத் தாக்குதல் தேர்தலுக்கு முன்பு நடக்கலாம் என்று; இது அமெரிக்க மக்களை அதிர்ச்சியடையச் செய்து குடியரசு நிர்வாகத்திற்கு ஆதரவு கொடுக்கக் கட்டாயப்படுத்தும். ஆனால் போல்டன் கூறுவது போல் புஷ்ஷின் சில நெருக்கமான ஆதரவாளர்கள் அத்தகைய நிகழ்வு விரும்பும் விளைவைத் தரும் என்பதில் அதிக நம்பிக்கை கொள்ளவில்லை.

மார்ச் 2004ல் ஸ்பெயினில் தேர்தல் என்ற முன்னுதாரணம் இவர்களுக்கு உள்ளது; அப்பொழுது இவர்களின் வலதுசாரி நண்பர் பிரதம மந்திரி ஜோஸ் மரியா அஜ்நர் ஒரு பயங்கரவாதத் தாக்குதலை சுரண்டிக் கொண்டு திரித்து அரசியல் நலனுக்காக பயன்படுத்தப் பார்த்தார்; ஆனால் அது மக்களை பதிலடி கொடுக்கும் வகையில் தூண்டுதல் கொடுத்து அவரைப் பதவியில் இருந்தே அகற்றியது.

ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியினர் ஈரான் பற்றிய அணுகுமுறையில் நம்பகத் தன்மை அற்றவர்கள் என்று குடியரசுக் கட்சி முரசு கொட்டியபோதும், இராணுவவாதம் மற்றும் தூண்டுதல் இரண்டும் இரு கட்சிகளின் ஆதரவையும் கொண்டுள்ளன என்பது மிகத் தெளிவு.

காங்கிரசில் இருக்கும் ஜனநாயகக் கட்சியினர் ஈரானுக்கு எதிரான ஒரு பொருளாதாரத் தடையை விதிக்க வாஷிங்டனின் நடவடிக்கை வேண்டும் என்று தீர்மானத்தின் மூலம் கோரியுள்ளனர்; இது ஒரு போர்ச் செயல் --அணுசக்தி பிரச்சினையில் இது அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். பிரதிநிதி காரி ஆக்கர்மன் (நியூ யோர்க் ஜனநாயகக் கட்சி), பிரதிநிதிகள் சபையிலும் செனட்டர் ஈவான் பேயா (இந்தியானா, ஜனநாயகக் கட்சி) செனட் மன்றத்திலும் கொண்டுவந்துள்ள தீர்மானத்தின்படி "ஜனாதிபதி சர்வதேச முயற்சி ஒன்றை உடனடியாகத் தொடக்கி பொருளாதார, அரசியல், தூதரக நெறி ஆகியவற்றை ஈரான் மீது பெரும் அழுத்தம் கொடுப்பதற்கு கோரப்படுகிறது" என்று உள்ளது; அதில் "கடுமையான கண்காணிப்பு தேவைகள் மக்கள்மீதும், வாகனங்கள், கப்பல்கள், விமானங்கள், இரயில்கள், சரக்குகள் என்று ஈரானுக்குள் வரும், அங்கிருந்து செல்லும் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்." என்றும் உள்ளது.

இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கை ஒரு போர்ச் செயல் என்று சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ளது; இது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு இராணுவ மோதலுக்கு தூண்டுதல் கொடுக்கும்.

தன்னுடைய பங்கிற்கு ஒபாமா கடந்த வெள்ளியன்று புளோரிடாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இத்தகைய அச்சுறுத்தும் இராணுவப் பயிற்சியை இஸ்ரேல் நடத்துவது சரி என நம்புகிறாரா என்று வினவப்பட்டார்; அவர் கொடுத்த பதில்:

"இஸ்ரேலுக்கு அசாதாரணமான முறையில் ஈரான் ஆபத்தைக் கொடுக்க உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை; தன்னுடைய பாதுகாப்பிற்காக எடுக்கும் முடிவுகளுக்காக இஸ்ரேல் எப்பொழுதும் நியாயப்படுத்தப்படும்."

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரிடம் இருந்து வந்துள்ள இத்தகைய கருத்தில் இருந்து, ஈராக்கில் போரை இருட்டடிப்பு செய்யும் பேரழிவுத்தீயில் அமெரிக்காவையும் இழுத்தல் என்பது, ஈராக் மீதான இஸ்ரேலிய விமானத் தாக்குதலை, நியாயப்படுத்தி விடும் என்றுதான் கருத முடியும்;