World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Switzerland: Defeat for right wing on immigation referendum

ஸ்விட்சர்லாந்து: குடியேற்றம் பற்றிய சர்வஜனவாக்கெடுப்பில் வலதுசாரிக்குத் தோல்வி

By Marianne Arens
13 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

தொழில்துறை கோடீஸ்வர முதலாளி கிறிஸ்டோப் ப்ளோக்கர் தலைமையில் இருக்கும் வலதுசாரி ஸ்விஸ் மக்கள் கட்சி (SVP) ஜூன் 1ம் தேதி நடைபெற்ற தேசிய சர்வஜன வாக்கெடுப்பில் ஒரு குறிப்பிடத்தக்க தோல்வியை அடைந்தது. SVP இன் சமீபத்திய முன்முயற்சியான குடியேறுபவர்கள், இயல்பான ஸ்விஸ் குடிமக்கள் உரிமை பெறுவதற்கு புதிய விதிகள் கொண்டுவருவதற்கான முயற்சி வாக்காளர்களில் கிட்டத்தட்ட 63.8 சதவீதத்தினரால் நிராகரிக்கப்பட்டது.

ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் கூட்டாட்சியின் 26 கன்டோன் பிரிவுகளில் Schwyz ஐ தவிர மற்றவை அனைத்திலும் வாக்கெடுப்பு தோல்வியை அடைந்தது. "வேண்டாம்" வாக்கெடுப்பு கருத்துகணிப்புக்களையும் விஞ்சிய முறையில் இருந்தது; இரு வாரங்களுக்கு முன்பு வாக்கெடுப்பு 56 சதவீதத்தினர் எதிர்த்து வாக்களிக்கும்வகையில் தோற்றுவிடும் எனக் கருத்துகணிப்புக்கள் இருந்தன. குறிப்பாக பிரெஞ்சு மொழி பேசும் ஸ்விட்சர்லாந்து பகுதியும் பெரிய நகரங்களும் அதிக அளவில் ''எதிராக'' வாக்களித்தனர்.

பிளோச்சரின் வார்த்தைஜால முயற்சியான "ஒரு ஜனநாயக ரீதியான குடியுரிமை முறை" என்பதின் கீழ் நகராட்சிகளுக்கு ஸ்விஸ் குடியரிமை மனுக்கள் பற்றி இறுதி முடிவெடுக்கும் உரிமை கொடுக்கப்பட்டிருக்கும்; இதில் அத்தகைய மனுக்கள்மீது உள்ளுர் வாக்கெடுப்பு நடத்தும் உரிமையும் அடங்கியிருந்தது. இது முற்றிலும் ஒருதலைப்பட்ச முறையை ஏற்படுத்த வழிவகுத்திருக்கும்; ஏனெனில் ஒரு வெளிநாட்டவரின் குடியுரிமை விண்ணப்பம் ஒரு வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டால், அவரால் எந்தவித நீதிமன்ற சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கவியலாமல் போயிருக்கும்.

2003ல் கூட்டாட்சி தலைமை நீதிமன்றம் குடியுரிமை பற்றி வாக்கெடுப்புக்கள் அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும், குடியுரிமையை நிராகரிக்கும் வாக்கெடுப்புக்கள் பற்றி முறையீடுகள் செய்யவும் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்படலாம் எனவும் கூறியிருந்தது; இதை எதிர்த்த வகையில் SVP யின் முயற்சி இருந்தது. அப்பொழுது ஒருதலைப்பட்சமாக நடந்த வாக்கெடுப்பு பற்றி நீதிமன்றம் விடையிறுத்தது என்பது வெளிப்படை. லூசேர்ன் கான்டனில் எம்மன் நகராட்சிசபை இத்தாலியில் இருந்து வரும் மனுக்கள் அனைத்தையும் ஏற்று பால்கனிடம் இருந்து வந்த விண்ணப்பங்களை நிராகரித்திருந்தது.

ஸ்விஸ் மட்டும் சர்வதேச செய்தி ஊடகம் இந்த ஜூன் 1 வாக்கெடுப்பு முடிவை SVP இற்கும் ப்ளோக்கருக்கு பெரும் தோல்வி எனக் கருதுகின்றன. ஆஸ்திரிய நாளேடான Der Standard தெளிவான "வேண்டாம்" என்ற வாக்கெடுப்பு "பழைமைவாத வலதுசாரி SVP க்கு ஒரு தீவிரத் தோல்வி என்று எழுதியுள்ளது. ஜேர்மனியில் Spigel.online இந்த முடிவை "மக்கள் மன்ற ப்ளோக்கருக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது" என்று எழுதியுள்ளது; பல ஸ்விஸ் செய்தித்தாட்களும் SVP க்கு இது ஒரு "வாட்டர்லூ" (இறுதி முடிவு) என்று கூறியுள்ளன. இந்த முடிவு "அரசியல் உணர்வுகளில் ஒரு முழுத்திருப்பத்தை அடிக்கோடிட்டு" காட்டுகிறது என்று Neue Luzerner Zeitung எழுதியுள்ளது.

"பழுப்புநிறக் கைகள் ஸ்விஸ் கடவுச்சீட்டை அடைய முயலுகையில், போதுமான வாக்காளர்களை திரட்டுவது அல்லது அவர்களுடைய உணர்வுகளுக்கு முறையீடு என்பது ஒன்றும் போதுமானது அல்ல" என்று Die Aargauer Zeitung, SVP யின் வாக்கெடுப்பு முயற்சி பற்றி எழுதியது: இப்பத்திரிகை SVP பிரச்சாரத்தில் மத்தியில் அதற்கு ஆதரவாக ஒரு சுவரொட்டியில் கறுப்புநிற கரங்கள் ஒரு ஸ்விஸ் கடவுச்சீட்டை பிடிக்க முயலுவது போல் காட்டியிருந்தது.

அதே நேரத்தில் குடியுரிமை பற்றிய முன்னெடுப்பு தோல்வி அடைந்தபோதே, இரு மற்ற SVP முன்னெடுப்புகளும் நிராகரிக்கப்பட்டன; ஒன்று "இன்னும் சிக்கனமான" பொது சுகாதாரக் கொள்கை பற்றியது, மற்றது "குறைந்தபட்ச உத்தியோகபூர்வ பிரச்சாரம்தான் வேண்டும்" என்று கூறியது. இந்த மூன்று முன்னெடுப்புகளும் தோற்கடிக்கப்பட்டது SVP க்கு வெளிப்படையான நெருக்கடியை கொடுத்துள்ளது.

வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த மறுநாளே, பிளோச்சர் கட்சியில் பிளவுகள் ஏற்பட்டன. பாதுகாப்பு மந்திரி Samuel Schmid (SVP) பேர்னில் உள்ள 36 முக்கிய SVP உறுப்பினர்களுடன் வட்டார அமைப்பு SVP யில் இருந்து விலக வேண்டும் என்று கோரினார்; ப்ளோச்சரைச் சுற்றியிருக்கும் கட்சித் தலைமை SVP யின் இரண்டாம் மந்திரிசபை உறுப்பினர் Eveline Widmer-Schlumpf இடம் நடந்து கொள்ளும் முறையைச் சுட்டிக் காட்டினார்; Widmer, Graubunden என்னும் ஸ்விட்சர்லாந்தின் மிகப் பெரிய கீழைக்கோடியில் இருக்கும் கான்டனில் இருந்து வருபவர் ஆவார்.

வாக்கெடுப்பிற்கு முன் Widmer மற்றும் Graubunden ல் இருக்கும் SVP அமைப்பு முழுவதும் SVP யில் இருந்து நீக்கப்பட்டனர். ஸ்விஸ் பாராளுமன்றம் ப்ளோக்கருக்கு பதிலாக Widmer இனை நீதி மந்திரியை தேர்ந்தெடுத்திருந்த பின்னர், கடந்த டிசம்பர் மாதம் Graubunden வட்டாரக் கட்சி Widmerரிடம் இருந்து விலகிக் கொள்ள மறுத்துவிட்டது.

செவ்வாயன்று தேசிய சபையில் (ஸ்விஸ் பாராளுமன்றத்தின் கீழ்மன்றம்) SVP உறுப்பினராக இருக்கும் பீட்டர் ஸ்பூலர், ப்ளோச்சர் இராஜிநாமா செய்யவேண்டும் என்று கோரினார். "சரியான நேரத்தில் இராஜிநாமா செய்யும் முடிவை" ப்ளோச்சர் எடுப்பார் என்று தான் நம்புவதாக அவர் செய்தி ஊடகத்திடம் கூறினார். மற்ற இடங்களில் Samuel Schmid மற்றும் பேர்ன் "எதிர்ப்பாளர்களும்" ஒரு புதிய கட்சியில் சேரத் தயார் என்றும் அதற்குக் காரணம் பேர்ன் வட்டார அமைப்பில் அவர்கள் சிறுபான்மை ஆதரவைத்தான் கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

அரசியல் பின்னடைவு

ஆறு மாதங்களுக்கு முன்பு பாராளுமன்ற தேர்தல்களில் மிக அதிக வாக்குகள் பெற்று வெற்றி அடைந்த SVP யின் நெருக்கடி அரசியல் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் தெளிவான அடையாளம் ஆகும். ப்ளோச்சரின்கீழ் முன்பு நான்கு அரசாங்கக் கட்சிகளில் மிகச் சிறியதாக இருந்தது, குறிப்பாக புரொட்டஸ்தாந்து கிராமப் பகுதியில் இருந்தது, மிகச்செல்வாக்கு உடைய ஸ்விஸ் கட்சியாக வளர்ந்தது; இதற்குக் காரணம் சமூக அச்சங்களை வெளிநாட்டவருக்கு எதிரான திசையில் திருப்பியது ஆகும். இப்பொழுது முதல் தடவையாக வெளிநாட்டவருக்கு எதிரான முயற்சி ஒன்று தோற்றுவிட்டது.

இம்மாறுதலைக் கொண்டுவந்தது எது?

இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்தே, குறிப்பாக சர்வதேச வங்கிகள் நெருக்கடியின் பின்னர், நீண்டகாலம் தேசியவாத பிரச்சாரத்தின் பின் மறைந்திருந்த சமூக முரண்பாடுகள் மிகவும் வெளிப்படையாக வந்துள்ளன.

USB வங்கி ஊழல், பெரிய ஸ்விஸ் வங்கிகளின் நடைமுறைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. ஸ்விஸ் வங்கி இரகசிய சட்டங்களினால் பாதுகாக்கப்பட்ட நிலையில், USB பல நாடுகளிலும் இருக்கும் பெரும் செல்வம் கொழித்தவர்கள் வரிகளை ஏய்ப்பதற்கு உதவியுள்ளது. ஒரு சலுகை பெற்ற உயரடுக்கு ஸ்விஸ் வரிச்சலுகை முறையைப் பயன்படுத்தி உலகின் வறியவர்களின் இழப்பில் தங்கள் செல்வங்களை பெருக்கிக் கொள்ளுகிறது என்ற உண்மையை பொதுமக்கள் நன்கு அறிந்தனர். கிறிஸ்டோப் ப்ளோக்கர் USB தலைவரான Marcel Ospel உடைய நல்ல நண்பர் என்பது தற்செயல் நிகழ்வு அல்ல; Ospel சமீபத்தில் இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உள்ளானர்.

ஒப்புமையில் நீண்டகால அமைதிக்குப் பின்னர் வர்க்கப் பூசல்களும் வெளிப்படையாக வந்தன. மார்ச், ஏப்ரல் மாதங்களில், பெல்லிஜோனாவில் (Tessin) இருக்கும் SBB சரக்குப் போக்குவரத்தின் இரயில்வே பொறியியல் தொழிற்சாலைகள், நிரந்தர மூடல், ஏராளமானவர்களை வெளியேற்றல் ஆகியவற்றை தடுப்பதற்காக வேலைநிறுத்த நடவடிக்கைகளினால் மூடப்பட்டு நான்கு வாரங்களுக்கு ஆக்கிரமிக்கிப்பட்டிருந்தன. வேலைநிறுத்தம் செய்தவர்களுடைய நடவடிக்கை மக்களிடம் இருந்து பெரும் ஆதரவைப் பெற்றது. இதே நேரத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடத் தொழிலாளர்கள், ஸ்விட்சர்லாந்தில் பல பெரும் கட்டுமான இடங்களில் தங்கள் ஒப்பந்தத்தை பாதுகாப்பதற்கு வெளிநடப்பு செய்தனர்.

ஓரளவிற்கு வாக்கெடுப்பின் முடிவு "நடந்தது போதும்! இதுவரை சென்றது போதும், இனித் தேவையில்லை" என்ற விதத்தின் அடையாளத்தைத்தான் காட்டுகிறது. ஆனால் அதே நேரத்தில் சற்றே மெத்தனமாக இருந்துவிடுவதும் தவறாகி விடும். ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் எதுவும் இல்லை; அவர்களுடைய தேவைகளை வெளியிடவோ, அவர்களுடைய ஜனநாயக உரிமைகள் வாழ்க்கை தரங்கள் ஆகியவற்றைக் காக்கவும் அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை.

சமூக ஜனநாயகக் கட்சி (SP) , சரியாக 120 ஆண்டுகளுக்கு முன் ஒரு தொழிலாளர்கள் கட்சியாக நிறுவப்பட்டது, முதலாளித்துவ கட்டமைப்புடன் முற்றிலும் இணைக்கப்பட்டுவிட்டது. சமீபத்திய வேலைநிறுத்த இயக்கங்கள் சமூக ஜனநாயகக் கட்சிக்கு வியப்பை கொடுத்தன. இறுதியில் Bellizona ஆக்கிரமிப்பு போக்குவரத்து மந்திரி Mortitz Leuenberger (SP) இன் தலையீட்டால் நசுக்கப்பட்டது; அவர் இதுகாறும் நிறைவேற்றப்படாத உறுதிமொழிகளைக் கொடுத்தார்.

தொழிலாள வர்க்கத்தின் நலன்களை சுயாதீனமாக காக்கும் வகையில் தாக்குதலை தொடங்குவதற்கு பதிலாக இன்று சமூக ஜனநாயகக் கட்சியின் முக்கிய பணி ஸ்விட்சர்லாந்தின் "ஒற்றுமை நிறைந்த ஜனநாயகத்தை" காப்பது என்று கருதுகிறது. இது குறிப்பிடத்தக்க வகையில் ஸ்விஸ் வகையிலான சமூக சமரசம் ஆகும்; இது 50 ஆண்டுகளாக அனைத்துக் கட்சி அரசாங்கங்களின் இதயத்தானமாக உள்ளது; இதில் சமூக ஜனநாயகவாதிகள், தாராளவாதிகள் (FDP), கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் (CVP) மற்றும் ஸ்விஸ் மக்கள் கட்சி (SVP) என ஒவ்வொரு முக்கிய பாராளுமன்ற குழுவில் இருந்தும் பிரதிநிதிகள் இருப்பர்.

Samuel Schmid SVP யில் இருந்து இராஜிநாமா செய்தபின், கட்சிக்கு அரசாங்கத்தில் பிரதிநிதி ஒருவரும் இல்லை. இதன் பொருள் நடைமுறையில் "ஒற்றுமை ஜனநாயகம்" முடிந்துவிட்டது என்பதாகும்.

"ப்ளோச்சருக்கு எதிராக ஒற்றுமை" என்ற பெயரில், SP, SVP யின் வலதுசாரி அச்சுறுத்தலுக்கு இன்னும் கூடுதலான நெருக்க உறவை தாராளவாதிகள், கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் மற்றும் SVP பிளவுற்றவர்கள் ஆகியோருடன் கொள்ள விழைகிறது. சமூக ஜனநாயகவாதிகளின் காக்கும் வாதம் மற்றும் வலதுசாரி அணுகுமுறை அவர்கள் வாக்கெடுப்பு பற்றிக் கூறிய கருத்துக்களில் வெளிப்படுகிறது. சமூக ஜனநாயக கட்சியின் பிரதிநிதியான Daniel Jositsch விளக்கினார்: "இது ஒன்றும் குடியுரிமை பற்றி மட்டும் அல்ல. ஒருவரும் குடியேற்ற உரிமை பற்றி எவரும் பேசவில்லை."

சமூக ஜனநாயக கட்சிக்கும் பிற முதலாளித்துவக் கட்சிகளுக்கும் இடையே உள்ள உடன்பாடு கோரமான வடிவமைப்பைக் கொள்ளுகிறது. ஏப்ரல் நடுப்பகுதியில் வெளியுறவு மந்திரி Micheline Calmy-Rey (SP) புதிய நீதி மந்திரியான Widmer-Schlumpf ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்ற பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுத்தார்; புதிய நீதி மந்திரி ப்ளோச்சரால் மிரட்டப்படுகிறார்; அவ்வம்மையாரோ ப்ளோச்சரின் கொள்கைகளைத் தொடர்வதாகவும் தேவையானால் இன்னும் கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தப்போவதாக கூறியும் இந்த நிலை ஆகும்.

100 நாட்கள் பதவியில் இருந்தபின், Widmer-Schlumpf தான் வெளியுறவு, தஞ்சம் பற்றிய கொள்கைகளின் இன்னும் கடுமையான வழியைப் பின்பற்ற இருப்பதாக தனக்கு முன்பு பதவியில் இருந்த ப்ளோச்சரை போல் கூறியுள்ளார்; முந்தைய கொள்கையையே நீதித்துறை, போலீஸ் துறைகளில் அடிப்படையில் தொடரப் போவதாகவும் கூறியுள்ளார். அவருடைய முக்கியத்துவம் கொடுப்பது "இளைஞர் வன்முறைக்கு எதிரான போராட்டமாகவும், "குற்றம் சார்ந்த வெளிநாட்டவரை பற்றியதாகவும்" இருக்கும்; மேலும் பயங்கரவாதம், வன்முறைத் தீவிரவாதம் இவற்றிற்கு எதிராகவும் இருக்கும். குற்றம் புரியும் வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவர்; இளைஞர்கள் தங்கள் பெற்றோர்ளுடன் வெளியேற்றப்பட்டு விடுவர்.

நீதி மத்திரி என்னும் முறையில் Widmer-Schlumpf ப்ளோச்சர் கணிசமாக கடுமையாக்கி இருந்த எந்தக் கட்டுப்பாட்டையும் அகற்றிவிடவில்லை; மாறாக அவர் நியாயமற்றவை என் கருதப்படும், வெளியேற்றப்படுவதற்கு இருக்கும் நெறிகளை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

ஆயினும்கூட, சமூக ஜனநாயகவாதிகள் Widmer-Schlumpf இற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் தீவிரமாக பங்கு பெறுகின்றனர்; இது ஏப்ரல் 12 அன்று பேர்னில் 12,000 க்கும் மேலானவர்கள் பங்கு பெற்ற ஆர்ப்பாட்டத்தில் உச்சக் கட்டத்தை அடைந்தது. "ஸ்விஸ் முறையற்ற, SVP யின் ஜனநாயக நெறியற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம் என்று சமூக ஜனநாயக கட்சி செய்தித் தொடர்பாளர் Peter Lauener கூறினார்.

SP, CVP, FDP மற்றும் SVP இருந்து "பிளவுற்றவர்கள்" என்னும் அரசாங்கக் கூட்டணி ஒன்றும் தற்பொழுது எதிர்க்கட்சியாக இருக்கும் ப்ளோச்சரின் எஞ்சிய SVP ஐ விட முற்போக்கானது அல்ல. ஸ்விஸ் ஆளும் உயரடுக்கிற்குள் தந்திரோபாய கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஸ்விஸ் பொருளாதார, அரசியல் வாழ்வை அச்சுறுத்தும் தற்போதைய ப்ளோச்சரின் கூட்டணியின் ஆக்கிரோஷமான, முரட்டுத்தனமான கொள்கைகளை கண்டு அஞ்சி சில "திருத்தங்களை" மேற்கொள்ள அவை திட்டமிட்டுள்ளன.

உதாரணமாக, ப்ளோச்சருக்கு எதிராக தனிநபர்கள் சுதந்திரமான ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லல், வசித்தல் ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுப்பதுடன் அது பல்கேரியா, ருமேனியா ஆகியவற்றையும் உட்படுத்த வேண்டும் என்றும் அரசாங்கக் கட்சிகள் கூறுகின்றன; ஏனெனில் இது பொருளாதார நிலைமை உறுதியடையச் செய்வதற்கு முக்கியமாகும். தடையற்ற முறையில் பொருட்களும் மனிதர்களும் செல்லவது என்பது ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொண்ட முக்கியமான இருபுறத்து பொருளாதார உடன்பாடு என்று Widmer-Schlumpf அறிவித்துள்ளார்.

அரசாங்கம் ஒரு புதிய தாராளவாதக் கொள்கையான கட்டுப்பாடுகளை தளர்த்துதல், வங்கிகள் நிறுவனங்கள் ஆகியவற்றை தனியார் மய நலனுக்கு உட்படுத்துல் என்று செய்துவருகிறது. இரயில் சரக்கு போக்குவரத்திதை SBB சரக்கு துணை நிறுவனமாக மாற்றியுள்ளது நன்கு அறியப்பட்டுள்ள உதாரணங்களில் ஒன்று ஆகும்; மற்ற உதாரணங்கள் அஞ்சல், தொடர்புத்துறை, முதியோர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை ஆகியவை ஆகும்.

ஐரோப்பாவிற்குள்ளும் சர்வதேச அளவிலும், ஸ்விட்சர்லாந்து தன்னை தடையற்ற சந்தையில் இருந்து அகற்றிக் கொள்ளுவதற்கு வழியில்லை. சந்தைப் பிணைப்பில் இருந்து தளர்த்திக் கொள்ள முற்படும் எந்த முயற்சியும் நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒதுக்கி விடும் அபாயத்தைக் கொடுத்து விடும். வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கும், உதாரணம் கட்டிடத் தொழில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இயக்கு நெறி தடையற்ற வணிகம் பற்றியது, இது ஒரு நாட்டைச் சேர்ந்தவர்களை மற்றவர்களுக்கு எதிராக மோத வைக்கும் தன்மையைக் கொண்டிருப்பதுடன் குறைவூதிய தொழிலாளர்களை அமர்த்தவும் முடிகிறது.

ப்ளோச்சரின் SVP இப்போக்கை தன்னுடைய வார்த்தைஜாலத்திற்காக பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. இரசாயனத் தொழில் முதலாளி கோடீஸ்வர ப்ளோச்சர் பொருளாதார அளவில் பூகோளமயமாக்கலில் இருந்து பயன் பெற்றாரே ஒழிய அவர் தொழிலாளர்களைத் தேசிய கோஷங்கள் மூலம் பிரிக்கவும் மிகப் பிற்போக்கான உணர்வுகளைத் தூண்டிவிடவும்தான் செய்தார்.

ஆனால் இன்று ஊதியக் குறைவு மற்றும் பொதுநலச் செலவினக் குறைப்புக்களுக்கு எதிராக ஒரு பொது ஐரோப்பிய அளவிலான தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கட்டிடத் தொழிலாளர்கள், இரயில்வே தொழிலாளர்கள், பால்பண்ணை விவசாயிகள் என்று ஒரே நேரத்தில் பல ஐரோப்பிய நாடுகளிலும் வேலைநிறுத்தங்களை செய்துள்ள நிலையில் இது நன்கு புலப்படுகிறது.

இத்தகைய போக்கிற்கு ஒரு புதிய தொழிலாளர் கட்சி கட்டமைக்கப்படுவது தேவையாகும்; அது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தி, வலதுசாரிக் கட்சிகள், ஜனரஞ்சகவாத அரசியல்வாதிகளுக்கு விளைநிலமாக உள்ள தற்போதைய சமூக நெருக்கடிகளுக்கு ஒரு முற்போக்கான தீர்வை அளிக்கும்.