World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Labour refuses to answer Davis's by-election challenge

பிரிட்டன்: டேவிஸின் இடைத் தேர்தல் சவாலை தொழிற்கட்சி ஏற்க மறுக்கிறது

By Julie Hyland
21 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

நிழல் அமைச்சரவை உள்துறை மந்திரி டேவிட் டேவிஸின் இராஜிநாமாவால் ஏற்பட்டுள்ள இடைத் தேர்தலில் தொழிற்கட்சி போட்டியிடாது; ஜனநாயக உரிமைகள் மீது அரசாங்கத்தின் தாக்குதல் பற்றி ஒரு பொது விவாதம் வேண்டும் என்பதற்காக தான் இராஜிநாமா செய்ததாக டேவிஸ் கூறியுள்ளார்.

இந்த முடிவு தொழிற்கட்சி அரசாங்கம் 42 நாள் வரை குடிமக்களை காவலில் நீட்டித்து வைக்கலாம் என்று கொண்டுவந்துள்ள சட்டத்திற்கு உரிய வாதத்தை முன்வைக்க முடியவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது --இந்த நடவடிக்கைதான் பாராளுமன்றத்தில் ஜனநாயக ஒன்றிய கட்சியின் 9 உறுப்பினர்களுடைய ஆதரவுடன் இயற்றப்பட்டுவிட்டது; வட அயர்லாந்து பகுதிக்கு நிதிய நலன்கள் கொடுப்பதாக கூறியதின் மூலம் அவர்கள் சாதகமாக "வாக்குப் போடுமாறு" கோரப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்னும் அடிப்படைரீதியாக, எவ்விதமான ஜனநாயக வடிவத்திற்கும் தொழிற் கட்சி கொண்டுள்ள விரோதப் போக்கையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; 2003 ல் அமெரிக்கா தலைமையிலான ஈராக் மீதான படையெடுப்பிற்கு, மக்கள் கருத்தையும் மீறி ஆதரவு கொடுக்க முடிவெடுத்ததுடன் இருந்தே கோட்பாடாக அது கொண்டுவிட்டது.

ஆரம்பத்தில் டேவிஸின் அறிவிப்பு செய்தி ஊடகத்தின் எல்லா புறத்தில் இருந்தும் இகழ்வு, ஏளனம் இவற்றை எதிர்கொண்டது; இது அவருடைய "தன்முனைப்பு தந்திரம்" என்று கூறப்பட்டது; இது தோல்வி அடையும் என்றும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு மக்களிடையே பரந்த ஆதரவு இருப்பதாகவும் கூறப்பட்டது.

தொழிற்கட்சியும் இத்தகைய கூற்றுக்களுக்கு ஆதரவு கொடுக்கையில், ஆரம்பத்தில் இருந்தே தான் தேர்தலில் போட்டியிடுமா என்பது பற்றி அது கூற மறுத்துவிட்டது. மாறாக, லண்டன் மேயர் போட்டியில் கன்சர்வேடிவ் போரிஸ் ஜோன்சனிடம் தோற்றபின், கருத்துக் கணிப்புக்களில் மிகக் குறைந்த ஆதரவை பெற்றுள்ள நிலையில் அது அதன் நெருக்கமான ஆதரவாளரான ரூபர்ட் மர்டோக்கை உதவிக்கு அணுகியது.

டேவிஸ் இராஜிநாமா செய்த சில மணி நேரத்திற்குள் Sun இன் முன்னாள் ஆசிரியரான கெல்வின் மெக்கன்சி, டேவிசுடன் போட்டி போடுவதற்கு பிரபுவின் ஆசியை தான் பெற்றுள்ளதாக பீற்றிக் கொண்டார்; மேலும் "Sun எப்பொழுதும் 42 நாட்கள் என்ன 420 நாட்கள் காவலுக்குக் கூட ஆதரவுதான்" என்றும் தெரிவித்தார்.

தன்னுடைய வேட்புத் தன்மையை முன்னதாக மாலையில் மர்டோக்குடனும் சன் ஆசிரியர் ரேபக் வேடுடனும் விவாதித்தாக கூறிய மெக்கென்சி லேபர் போட்டியிடவில்லை என முடிவெடுத்தால் "90 சதவீதம் உறுதியாக" தான் டேவிசுக்கு சவால் விட இருப்பதாகக் கூறினார். பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் மற்றும் டோனி பிளேயர் இருவரும் விருந்தில் கலந்த கொண்டதாகக் கூறினார்; இதன் உட்குறிப்பு லேபருடைய ஆதரவு அதன் சார்பாக நிற்பதற்கு தனக்கு உள்ளது என்பதை இவர் காட்டுவதாகும்.

ஆனால் செய்தி ஏடுகளுக்கும் ஊடகங்களுக்கும் ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல்கள் மற்ற தகவல்கள் டேவிஸின் நிலைப்பாடு மக்களிடையே ஆதரவை கொடுத்துள்ளது என்பதைக் காட்டின; இதன் பின் மெக்கென்சியிடம் இருந்து அல்லது Sun இடம் இருந்து பல நாட்களுக்கு தகவல் ஏதும் இல்லை.

மர்டோக் தன்னுடைய வேட்புத் தன்மைக்கு நிதியளிப்பார் என்னும் முன்னாள் ஆசிரியரின் கூற்று --அதுவும் தேர்தல் சட்டத்தின்படி சட்டவிரோதம் ஆகும்-- "தெருவில் இருக்கும் மனிதனை" பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் சாத்தியத்துடன் இணைந்து, ஒரு செல்வாக்கற்ற அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக இருப்பதாக அது காட்டிக் கொண்டால், மெக்கென்சி வேட்புக்காக செய்திருப்பதாகத் தோன்றும்.

மர்டோக் ஒன்றும் காட்சியில் இருந்து போய்விடவில்லை. "சன் 7/7 தாக்குதலில் தப்பித்த Rachel North, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்று பிரச்சாரம் செய்தவரையும் பரிசீலிக்கும்" என்று கார்டியன் கூறியது. அவருடைய மற்றொரு செய்திப் பதிப்பான Sky News தொழிற் கட்சி தனது இடத்தில் John Smeaton ஐ நிறுத்துவது பற்றி பரிசீலிப்பதாக தெரிவித்தது. இந்த பயணிகளின் பெட்டிகளை கையாள்பவர் கிளாஸ்கோ விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஒரு பயங்கரவாதத் தாக்குதலை போலீசார் தடுத்து நிறுத்தும் முயற்சியில் உதவிய இராணியாரின் காலன்ட்ரி பதக்கம் பெற்ற Rachel North ஆவார். இந்தத் தகவல் உத்தியோகபூர்வமாக இருக்கலாம்; ஏனெனில் Sky TV இன் அரசியல்பிரிவு ஆசிரியர் அடம் போல்டனிடம் இருந்து வந்ததாகும்; மேலும் Anji Hunter என்னும் பிளேயரின் முன்னாள் உரை தயாரிப்பவர் மற்றும் நெருக்கமான நண்பரின் மனைவி ஆவார்.

ஆனால் கார்டியனிடம் நோர்த் தான் "டேவிஸின் நிலைப்பாட்டை பாராட்டுவதாகவும்", "சிவில் உரிமைகள், சுதந்திரம், ஜனநாயகம்" ஆகியவற்றின் ஆதாரவாளர் என்றும் தெரிவித்துவிட்டார். வாரக் கடைசியில் ஸ்மீடன் தான் நிற்பது பற்றி விருப்பம் கொண்டிருக்கவில்லை என்றும் எங்கிருந்து இத்தகைய வதந்திகள் கிளம்புகின்றன எனப் புரியவில்லை என்றும் கூறினார்.

இறுதியாக வியாழனன்று மெக்கென்சி Haltemprice, Howden இடைத் தேர்தலில் தான் ஒரு வேட்பாளராக நிற்கவில்லை என்றும், நிதிக் காரணங்களை காட்டி உறுதிபடுத்திவிட்டார்.

"எனக்கு தேவைப்படுவது பணம் ஆகும். ஆனால் Sun இதைக் கொடுக்க முடியாது --எனவே அதிகபட்சம் 100,000 பவுண்டுகளை நான் பிரச்சாரம் நடத்த சேகரிக்க வேண்டும்" என்றார்; நிகழ்ச்சிகளை மாற்றி எழுதிய விதத்தில் அவர் தன் வேட்பு மனுப் பிரச்சினை ஒரு தனி விருப்பம்தான் என்றும் கூறினார். சன் வாசகர்கள் நோர்த்தாம்டன் சந்தையில் வணிகராக உள்ள Eamonn Fitzpatrick க்கு ஆதரவு தரவேண்டும் என்றும் அவர் 42 நாட்கள் காவலுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் சுயேச்சையாக நிற்பார் என்றும் கூறினார்.

தற்பொழுது எவரும் அறியாத, பழம், கறிகாய்கள் விற்பனையாளர் பல சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவராவார்; இவர்களுடைய பிரச்சாரம் அரசாங்கத்தின் பிரச்சினைகளில் ஏதேனும் ஒன்றை பற்றியதாக இருப்பதுடன் அரசாங்கத்தின் காவல் அதிகாரங்களை காக்கும் வகையிலும் உள்ளது.

ஜனநாயகப் பொறுப்புக்கூறலுக்கு தொழிற்கட்சியின் விரோதப் போக்கு

இடைத் தேர்தல் "ஒரு கேலிக்கூத்து" என்ற காரணத்தை காட்டி தொழிற் கட்சி தான் போட்டியிடாததை நியாயப்படுத்த பார்க்கிறது. தொழிற் கட்சியின் துணைத் தலைவர் Harriet Harman, டேவிஸை ஒரு "இடைத் தேர்தலுக்கு 80,000 பவுண்டுகள் வீணடிக்க காரணமாக உள்ளார் என்று குற்றம் சாட்டினார்; இதை நகரமன்ற வரி செலுத்துபவர்கள் கொடுக்கின்றனர்" என்றார்; பண்பாட்டுப் பிரிவு செயலாளரான ஆண்டி பேர்ன்ஹாம் டேவிஸ் சொந்தத்தில் இச்செலவை ஏற்கக் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

இத்தகைய கோரிக்கைகள் தேர்தல்களுக்கு புதிய நெறிகாட்டிகளை நிறுவுகின்றன --பதவியில் இருக்கும் அரசாங்கம் அதை அரசியல் அளவில் தேவையா, நிதி அடிப்படையில் நியாயமானதா எனத் தீர்மானிக்க வேண்டும் போலும். தொழிற் கட்சி ஏற்கவே தன்னுடைய அறிக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் லிஸ்பன் ஒப்பந்தம் பற்றிய வாக்கெடுப்பு இல்லை என்று கூறிவிட்டது; ஐரிஷ் வாக்காளர்கள கடந்த வாரம் அதை நிராகரித்தனர்; அது தேவை என்று நினைப்பதாக தான் கருதவில்லை என்று காரணம் கூறியுள்ளது.

உண்மையில் தொழிற் கட்சி பகிரங்கமாக அதன் கொள்கைகளை காத்திட முடியாது; ஏனெனில் அது பெருவணிகம் மற்றும் பெரும் செல்வந்தர்களின் விளையாட்டுப் பொருள் ஆகும்; அவர்களின் நலன்கள் மக்களின் பெரும்பாலனவர்களுடைய நலன்களுக்கு எதிரிடையானவை ஆகும்.

எனவேதான் டேவிசுக்கு தன்னுடைய மறுப்பை தெரிவிக்க, பிரெளன் தொழிற் கட்சி ஆதரவு சிந்தனைக் குழுவிடம், Institute for Publc Policy Research என்னும் 50 பேர் மட்டும் இருந்த அழைப்பாளர்கள் கூட்டத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

ஜூன் 17 அன்று அவருடைய பேச்சின் முக்கிய இலக்கு "தற்கால பாதுகாப்புத் தேவைகள்", "தற்கால சவால்கள்", "புதிய அச்சுறுத்தல்கள் பழைய பயன்படுத்தப்பட்டுவிட்ட வழிவகைகள் அணுகுமுறைகள் மூலம் எதிர்கொள்ளப்பட முடியாது" என்ற வகையில் இருந்தன.

பயங்கரவாதம், திட்டமிடப்படும் குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல்கள் ஆகியவை உலகெங்கும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.

பழைய உலகில் போலீசார் "கைரேகையைப் பதிவு செய்தனர், இப்பொழுதோ அவர்கள் மரபணு DNT தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்" என்றார்.

"முந்தைய உலகம் ரோந்திற்கு வந்த போலீசாரின் கண்களை மட்டும்தான் நம்பியிருந்தது; இப்பொழுது CCTV உடைய துணையும் உள்ளது.

"முன்பு உலகம் நிழற்படத்தை மட்டும்தான் மக்களை அடையாளம் காண பயன்படுத்தியது, இப்பொழுது Biometric உள்ளது."

வேறுவிதமாகக் கூறினால், தொழில்நுட்ப முன்னேற்றம் அரசாங்கம் மகத்தான புதிய அதிகாரங்களை எடுத்துக் கொள்ளுவதை --தேசிய DNA தகவல் தளங்களை ஏற்படுத்தும் திட்டம், அடையாள அட்டைகள் மற்றும் பரந்த கண்காணிப்பை மேற்கொள்ளுதல் (குறுகிய இடத்தை கண்காணிக்கும் நிழற்படக் கருவிகள் போன்றவை) ஆகியவற்றை நம்பியுள்ளது --இந்த வாதம்தான் ஓர்வெல்லின் 1984 ஐ தூண்டியது.

பிரெளனுடைய கூற்று தொழில்நுட்ப வளர்ச்சிகள் "தனிநபரின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் பயன்படுத்தலாம்" என்பதாகும்; இதற்கு அவருடைய உரையில் சான்றுள் ஏதும் இல்லை; அதில் இருந்தது எல்லாம் அரசாங்கத்தை வலுப்படுத்தும் முயற்சிகள்தான். சுதந்திரம் என்பது "குடிமகனை தன்னிச்சையான நடவடிக்கைக்கு உட்படுத்தாது" என்னும் அவருடைய உறுதிமொழி, "சுதந்திரங்களின் அடிப்படை உரிமைகள் எப்பொழுதும் மதிக்கப்படும்" என்று கூறுவது, அரசாங்கம் 42 நாட்கள் குற்றச் சாட்டு இன்றி காவலில் இருக்கலாம் என்ற சட்டத்தை இயற்றியதின் மூலம், அதன் முந்தைய 90 நாட்கள் வைக்கலாம் என்ற திட்டம் போன்றவற்றால் எள்ளி நகையாடப்படுகின்றது.

தொழிற் கட்சி மற்றும் "இடது" அம்பலப்படுத்துவது பற்றிய கவலை

தொழிற் கட்சி மற்றும் "இடது" என அழைக்கப்படுபவை அழுகி நிற்கும் நிலையின் அளவு ஒரு வலதுசாரி டோரி, தன்னை சிவில் உரிமைகளின் காவலன் என்று காட்டிக் கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது.

42 நாட்கள் காவலில் வைக்கலாம் என்று தொழிற் கட்சி கொண்டு வந்துள்ள சட்டம் 2001ல் இருந்து இயற்றிய 200 பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களில் மிகச் சமீபத்திய, கடுமையானதாகும். இவை அடிப்படை சிவில் உரிமைகளை அகற்றி ஒரு போலீஸ் அரசாங்கத்திற்கான வடிவமைப்பை சட்டமாக இயற்றியுள்ளன.

இக்காலக்கட்டம் முழுவதும் கன்சர்வேட்டிவ் கட்சி "பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு" ஆதரவு கொடுத்துள்ளது. டேவிஸே 28 நாட்கள் குற்றச் சாட்டு இல்லாத காவல், ஈராக் போர் ஆகியவற்றிற்கு வாக்களித்துள்ளார். ஆனால் அவர் "தைரியம் அற்றவர்கள்" என்று தொழிற் கட்சியை கூறுவதற்கு காரணம் ஒரு தொழிற் கட்சி "இடது" கூட அரசாங்கத்துடன் உடைத்துக் கொண்டு சவால்விடத் தயாராக இல்லை என்பதால்தான். 42 நாட்கள் காவல் பற்றி இரு தொழிற் கட்சி "எதிர்ப்பாளர்கள்", டேவிஸுக்கு ஆதரவு தருவதாகக் கூறியுள்ள பொப் மார்ஷல் ஆண்ட்ரூஸ் மற்றும் இயன் கிப்சன் இருவரும் அரசாங்கம் தேர்தலில் நிற்காது என்று தெரிந்த பின்னர்தான் அவ்வாறு கூறினர்.

இன்னும் ஆச்சரியம் கொடுக்கும் வகையில், அரசாங்கத்தை குறைகூறுபவர்கள் இதுவரை டேவிஸின் பிரச்சாரத்திற்கு ஆதரவு தருபவர்களாக உள்ளனரே அன்றி தாங்களே சொந்தத்தில் எதிர்ப்பைக் கொடுக்கவில்லை. மூத்த தொழிற் கட்சிக்காரரான டோனி பென், தான் டேவிசுக்கு ஆதரவு கொடுப்பதாக கூறியுள்ளார்; ஒப்சேர்வரின் கட்டுரையாளர் ஹென்ரி போர்ட்டர் மற்றும் மனித உரிமைகள் அமைப்பான லிபேர்ட்டியின் இயக்குனர் Shami Chakrabarti ஆகியோரும் இவ்வாறு கூறியுள்ளனர்.

இது தொழிற் கட்சி சார்புடைய New Stastesman இதழிற்கு எச்சரிக்கையை கொடுத்துள்ளது; பிரிட்டனில் இருக்கும் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் போலவே இதுவும் டேவிஸின் இராஜிநாமா வெளிப்படுத்தியுள்ள அரசியல் அதிருப்தியின் பரந்த தன்மை பற்றி திடுக்கிட்டுப் போய் உள்ளது.

ஜூன் 12ம் தேதி New Statesman ஆசிரியர் Martin Bright டேவிசின் "தைரியம் மிகுந்த" இராஜிநாமா பற்றி பாராட்டினார். தன்னுடைய கட்டுரையில் "I Salute David Davis" -- "டேவிட் டேவிசுக்கு என்னுடைய மரியாதை" என்று எழுதிய அவர், நிழல் உள்நாட்டு மந்திரி "கெளரவமான செயலைச் செய்துள்ளார்" என்றும் தேர்தலில் டேவிசுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஒரு வாரத்திற்குள் அவருடைய நிலைமை மாறியது. அரசாங்கம் பேசாமல் இருந்ததும், அதன் "தாராளவாத" திறனய்வாளர்கள் ஒரு டோரி வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க முன்வந்ததும் பிரைட்டை கவலைக்கு உட்படுத்தியதுடன் தொழிற் கட்சியின் இடது கருவிகள் அரசியல் அளவில் ஆபத்து கொடுக்கக் கூடிய வகையில் சமரசத்திற்கு உட்பட்டன.

பிரைட், ஒரு பெரும் திகைப்பில் கேட்டார்: "இடதின் டேவிட் டேவிஸ் இராஜிநாமா செய்து அரசாங்கத்தின் அதிகாரத்துவ செயற்பட்டியலை சவால்விடத் தயாரா?... அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பட்டியலை ஒரு முற்போக்கான முன்னோக்கைக் கொண்டு சவால் விடக்கூடிய அரசியல்வாதி அல்லது பொது நபர் எங்கே? சுருங்கக்கூறின், Haltmeprice, Howden ஆகிய இடங்களில் நிற்கக் கூடிய தாராளவாத வேட்பாளர் எங்கே உள்ளார்?

"டேவிட் டேவிசுக்கு எதிராக நிற்கக்கூடிய உண்மையான தாராண்மைவாதி" க்கான அழைப்பு விடப்படுகிறது என்று கூறிய அவர், அத்தகைய வேட்பாளர் "New Stastesman உடைய முழு ஆதரவையும் பெறுவார்" என்று உறுதியளித்தார்.