World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

China's National Peoples Congress haunted by the spectre of social unrest

சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் சமூக அமைதியின்மை பற்றிய அச்சத்தால் அலைக்கழிப்பு

By John Chan
12 March 2008

Use this version to print | Send this link by email | Email the author

பெய்ஜிங்கில் மார்ச் 5ல் ஆரம்பித்த தேசிய மக்கள் காங்கிரசின் (NPC) ஆண்டுக்கூட்டம், தற்போதைய பெரும் வெடிப்புத்தன்மை வாய்ந்த பிரச்சினைகளான சமூக அதிருப்தி, பணவீக்கம், உலகப் பொருளாதார உறுதியற்ற தன்மை போன்றவற்றில் கவனத்தை காட்டியது. 2,999 பொறுக்கி எடுக்கப்பட்டிருந்த பிரதிநிதிகள் முன்னிலையில் பிரதமர் வென் ஜியபாவோவின் "நாட்டின் நிலை" பற்றிய ஆண்டு அறிக்கை, ஏறும் விலைவாசிகளை கட்டுப்படுத்துதல், சமூக நலன்கள் செலவினங்களை அதிகரித்தல் போன்ற உறுதி மொழிகளை கொடுத்த வகையில் தொழிலாளர்களிடையே பெருகிய சீற்றத்தை தணிக்கும் முயற்சியாக இருந்தது.

சீனாவில் சாதாரண மக்களின் "மிகப் பெரிய கவலை" உணவுப் பொருட்களில் இருந்து, பயன்பாட்டு பொருட்கள், வீடுகள் வரை அனைத்தும் விலையுயர்ந்து இருப்பதுதான் என்று வென் ஒப்புக் கொண்டார். "அனைத்து மட்டங்களிலும் அரசாங்கம் விலைவாசியை உறுதியாக வைத்திருப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், ஏனெனில் மக்களுடைய வாழ்க்கைத்தர நலனில் அதுதான் நேரடிப் பாதிப்பை கொண்டிருக்கிறது" என்று அவர் அறிவித்தார். பணவீக்கம் பெப்ருவரி மாதத்தில் ஆண்டு விகிதத்தில் புதிய உயர்ந்த நிலையான 8.7 சதவிகிதத்தை எட்டியது; இது 12 ஆண்டுகளில் மிக அதிகமானது ஆகும். பன்றி இறைச்சி 63.4 சதவிகிதம் விலை உயர்வுடன் உணவுப் பொருட்களின் விலைகள் 23.3 சதவிகிதம் உயர்ந்தன.

கடந்த ஆண்டு நிலையான 4.8 சதவிகிதத்தை விட பணவீக்கம் அதிகமாகக் கூடாது என்று வென் நிர்ணயித்துள்ளார். "விலைகளை உயர்த்தும் காரணிகள் இன்னும் செயல்படுகின்றன" என்று அவர் ஒப்புக் கொண்டார். அடிப்படை பண்டங்களில் ஊக முதலீடு மற்றும் உலகந்தழுவிய ஆற்றல் அளிப்புக்களில் பெருகிய முறையில் அடிக்கடி மாறுதல் இருத்தல், அதைத்தவிர விவசாய உற்பத்தியில் வீழ்ச்சி ஆகியவை உலகம் முழுவதும் பணவீக்கத்தை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன. ஊதிய உயர்வு கோரிக்கைகள் உள்பட சீனாவில் மற்ற காரணிகள் வாழ்க்கைச் செலவினங்கள் உயர்ந்ததாலும், கடந்த மாதம் கடுமையான பனிப்பொழிவினால் விவசாயம் தடைபட்டதாலும் தூண்டிவிடப்பட்டன.

மக்களின் பெரிய அரங்கில் இருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) தலைவர்கள், மற்றும் NPC பிரதிநிதிகள் சீனா முழுவதும் மே-ஜூன்1989ல் பணவீக்கம் தொழிலாளர்களை பெரும் வெகுஜன எதிர்ப்புக்களில் ஈடுபடுத்தியது என்பதை நன்கு அறிவர். இன்றைய பொருளாதார முரண்பாடுகள் 1989 ஐ விட இன்னும் கூடுதலான வகையில் வெடிப்புத் தன்மையும், சிக்கல்களையும் கொண்டுள்ளது. அமெரிக்க பொருளாதாரச் சரிவு, ஐரோப்பாவுடன் பொருளாதார விரிசல் போன்ற ஏனைய தீவிரப் பிரச்சினைகள் சீனாவின் முக்கிய ஏற்றுமதி தொழில்களை பாதிக்கக் கூடும் என்று வென் எச்சரித்தார். "இவை அனைத்தும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கக்கூடும். சீனா இப்பொழுது அதன் சீர்திருத்தம், வளர்ச்சி முறைகளில் ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில் உள்ளது" என்று அவர் அறிவித்தார்.

விலைவாசி உயர்வுகள் "கட்டமைப்பில் உள்ளவை" என்று சீன அரசாங்கம் விவரித்துள்ளது; இதற்குக் காரணம் சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைவூதிய மதிப்பு பெருகிய தொழில்துறைகள் காலனிகள், விளையாட்டு பொம்மைகள் என்று 1990 களில் இருந்ததில் இருந்து, இன்னும் கூடுதலான தொழில்நுட்ப சிக்கல்கள் நிறைந்த பிரிவுகளான கார்த்தொழில், மின்னணுத் துறை மற்றும் இரசாயனப் பொருட்கள் துறைகளுக்கு மாறியுள்ளது என்று அது கூறுகிறது. ஆனால் மிகப் பெரிய விலை உயர்வுகள் பொருளாதாரத்தின் கட்டமைப்பு மாற்றங்களினால் மட்டும் விளையவில்லை என்பது பற்றி பெய்ஜிங்கிற்கு நன்கு தெரியும்.

"பெருவகைப் பொருளாதார" நடவடிக்கைகள் பலவற்றை அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தியுள்ளது; இவை கடந்த ஆண்டு பணவீக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டவை. ஒராண்டு வைப்பு நிதி மற்றும் கடன்களுக்கு விகிதங்கள் ஆறு முறை வட்டிவிகித உயர்வுகளால் அதிகமாயின; இது 4.14, 7.47 என்று முறையே இருந்தன; இவை 9 ஆண்டுகளில் மிக அதிகமானது ஆகும். ஆனால், இந்த நடவடிக்கைகள் குறைந்த அளவு விளைவைத்தான் கொண்டுள்ளன; ஏனெனில் பெய்ஜிங் முக்கிய சர்வதேச காரணிகள்மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை.

அமெரிக்க பெடரல் ரிசேர்வ் அமைப்பு சமீபத்திய மாதங்களில் வட்டி விகிதங்களை குறைத்துள்ளது; இதற்குக் காரணம் கடன் சந்தைகளில் நெருக்கடி நிலையை தளர்த்தி பொருளாதார மந்த நிலைமையை தவிர்ப்பது ஆகும். இது பெய்ஜிங்கின் முயற்சிகளான மிக அதிக முதலீடு நிலையான சொத்துக்களில் இருப்பதை கட்டுப்படுத்துவதற்கு எதிராகும்; அதேபோல் அதிக வங்கிக் கடன் அளிப்புக்கள் பொருளாதாரத்திற்கு "மிகைச்சூட்டை" (பணவீக்கம் தோன்றுமளவுக்கு தேவையை அதிகரிக்கும்) அளிக்கின்றன. சீனாவில் வட்டிவிகித உயர்வுகள் இன்னும் கூடுதலான வகையில் டாலருக்கும் யுவானை அடிப்படையாக கொண்டுள்ள சொத்துக்களுக்கும் இடையே உள்ள பிளவுகளை அதிகரித்துள்ளது; அதுவே டாலருக்கு எதிராக யுவான் மறு மதிப்பீடு செய்யப்பட்டதால் விளைந்தது. இதன் விளைவாக டாலரை அடிப்படையாக கொண்ட குறுகிய கால ஊக நிதியங்கள் சீனாவின் பங்கு மற்றும் சொத்து சந்தைகளில் தொடர்ந்து பெருகி வருகின்றன.

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, சொத்துக்களின் விலைகள் 70 முக்கிய சீன நகரங்களில் ஓராண்டிற்கு முன்பு இருந்ததை விட ஜனவரி மாதத்தில் 11.3 சதவிகிதம் உயர்ந்திருந்தன; இது 2005ல் இருந்து மிக அதிக உயர்வு ஆகும். புதிய வீடுகளின் விலைகள் உரும்கியில் 25 சதவிகிதம், நானிங்கில் 20 சதவிகிதம் என்று உயர்ந்துள்ளன. சீனாவின் பெய்ஜிங்கில் இருக்கும் அமெரிக்க வங்கியின் தலைமை மூலோபாய ஆலோசகரான வாங் டாவோ, ப்ளூம்பெர்க்கிடம் கூறினார்: "சொத்து விலைகள் தொடர்ந்து உயர்ந்தால், அது மக்களை சந்தையிலிருந்து விரட்டும்; நிதிய ஆபத்துக்களை அதிகரிக்கும்; ஏனெனில் நிலம், கட்டிடம் ஆகியவற்றிற்கான கடன் மற்றும் முதலீடு ஆகியவை விரைவில் அதிகரிக்கும்போது, மிகைச்சூடு அதிகமாதல் ஊக்கம் பெற்றுவிடும்." வீடுகளின் அடக்கவிலை உயர்வானது, வென்னை நகர்ப்புற ஏழைகளுக்கு இன்னும் அதிக குறைந்த விலை, உதவித்தொகை அளிக்கப்படும் வீடுகள் கட்டப்படும் என்று உறுதி கூற வைத்தன.

கடுமையான நிதியக் கொள்கையை அரசாங்கம் தொடரும் என்று வென் அறிவித்தார் கடந்த சில ஆண்டுகளில் இருந்ததைப் போல், அவர் இந்த ஆண்டும் வளர்ச்சி விகித இலக்கு 8 சதவிகிதம் என்று நிர்ணயித்துள்ளார். பல பொருளாதார வல்லுநர்களும் இந்த விகிதத்திற்கு மேலாகவே வளர்ச்சி இருக்கும் என்று நம்புகின்றனர். சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2007ல் 11.4 சதவிகிதம் என்று வளர்ந்தது. மோர்கன் ஸ்ரான்லி போன்ற உலகந்தழுவிய அமைப்புக்களால் செய்யப்பட்ட, பொருளாதார கணிப்புக்கள், சீனாவில் வளர்ச்சி விகிதம் 10.5 எனக் குறையும் என்று மதிப்பிட்டுள்ளனர்; இதற்கு முக்கிய காரணம் அதன் ஏற்றுமதிக்கு உலகம் முழுவதும் தேவை சரிந்துள்ளதுதான்.

உற்பத்தியில் செலவினங்கள் அதிகரிப்பும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மந்தப் போக்கும் சீனாவின் உற்பத்திப் பிரிவில் மாபெரும் அழுத்தத்தை கொடுத்துள்ளன; குறிப்பாக இது சிறிய, நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களில் காணப்படுகிறது. நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான என்றும் கூறலாம், ஆலைகள் Guangdong மாநிலத்தில் இருக்கும் ஏற்றுமதி வளாகங்களில் மூடப்பட்டுவிட்டன அல்லது வேறுவிதமாக மாற்றியமைக்கப்பட்டுவிட்டன. புலம்பெயர் தொழிலாளர்கள் புதிய சந்திர வருட விடுமுறைக்கு பின் வேலைக்கு வந்தவர்கள், வேலையில்லா நிலையில் உள்ளனர்.

சமூகநலச் செலவினங்கள்

சீனாவில் NPC மற்றும் இணைந்த சீன மக்கள் அரசியல் ஆலோசனைக் கூட்டம் (CPPCC) ஆகியவை பெருகிய முறையில் பொது ஆய்விற்கு உட்பட்டுள்ளன. அவை எழுப்பிய பிரச்சினைகள் பரந்த அளவில் இணையத்தில் விவாதிக்கப்பெற்றன; இந்த பயன்பாடு சீனாவில் இப்பொழுது பல மில்லியன் மக்களால் கையாளப்படுகிறது. இப்படி ஏராளமானவர் விவாதிக்கின்றனர் என்பதை முற்றிலும் உணர்ந்துள்ள CCP தலைவர்கள் தொழிலாளர்களை எதிர்கொண்டுள்ள பெரும் கடின நிலை பற்றி விரிவாக அக்கறை கொண்டிருப்பதாக காட்டிக் கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். தன்னுடைய அறிக்கையில் கால் பகுதியை வென் கல்வி, சுகாதாரக் காப்பு, வேலைகள், சமூக சமத்துவமின்மை மற்றும் வீடுகள் பற்றியதற்கு ஒதுக்கினார்.

இந்த ஆண்டு சுகாதார செலவினங்கள் 25 சதவிகிதம் உயர்த்தப்படும் என்றும் கல்விக்கு 45 சதவிகிதம் கூடுதலாக இருக்கும் என்றும் பிரதமர் உறுதி கொடுத்துள்ளார். கட்டாய இலவசக் கல்வி சீனா முழுவதும் முதல் ஒன்பது ஆண்டுகளுக்கு விரிவாக்கப்படும். சமூக நலன்கள் திட்டத்திற்கு கணிசமான நிதி உயர்வையும் அவர் உறுதியளித்தார்; தொழில்துறை மாசு பற்றி கடுமையான நிலைப்பாடு எடுக்கப்படும் என்றும் கூறினார். அரசாங்கத்தின் வருமானம் எதிர்பாரா வகையில் 34.2 சதவிகிதம் உயர்ந்து 5.1 டிரில்லியன் யுவானாக உயர்ந்ததை அடுத்து கூடுதலான செலவினங்கள் இயலும் என்றார் அவர்.

இந்த நடவடிக்கைகள் மக்கள் சீற்றத்தை தணிக்கும் நோக்கத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை; முதலீட்டாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதையும் கருத்தில் கொண்டுள்ளது. சீனா இன்னும் சிக்கல் வாய்ந்த உற்பத்தி முறைக்கு நகர்கையில், பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் குறைவாக இருப்பது பெருகிய முறையில் ஒரு தடையாக உள்ளது. சுற்றுச் சூழல் மாசும் சீனாவின் தோற்றத்தை சேதப்படுத்துகிறது; இதுவும் சமூக அமைதியின்மைக்கு ஒரு காரணமாக உள்ளது. மக்கள் பாதுகாப்பு அமைச்சரகத்தின் தகவல்படி 60,000 வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் இருந்ததாக கூறப்படுகிறது; 2005ல் சுற்றுச் சூழல் பற்றிய ஆர்ப்பாட்டங்கள் 51,000 இருந்தன என்பதுடன் இது ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டும்.

சமூகச் செலவினங்கள் இன்னமும் ஒப்புமையில் குறைவாகத்தான் உள்ளது. 66.4 பில்லியன் யுவான் சுகாதாரத்திற்கு, 107.6 பில்லியன் கல்விக்கு என்று மட்டும் கடந்த ஆண்டு பெய்ஜிங் செலவழித்தது; இராணுவச் செலவினம் 348.3 பில்லியன் யுவானோடு இது ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டும். இந்த ஆண்டு இராணுவ பட்ஜெட் 17.6 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 418 பில்லியன் யுவான்கள் அல்லது 58 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று, கடந்த ஆண்டு அதிகரிக்கப்பட்ட 17.8 சதவிகிதத்தையும் விடக் கூடுதலாக்கப்பட்டுள்ளது. சீனா இன்னும் கூடுதலாக அதன் "நீண்ட காலமாக கவனிக்காது விடப்பட்டிருந்த" இராணுவப் படைகளுக்கு செலவழிக்க வேண்டும் என்று வென் அறிவித்தார். இதே கவனிக்காது விடப்பட்டிருந்த பொது சுகாதாரப் பாதுகாப்பு போன்றவை பற்றி அவர் குறிப்பிடவில்லை; இவை 1990 களின் தடையற்ற சந்தை சீர்திருத்தக் காலங்களில் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டன.

2003ல் தொடக்கப்பட்ட கிராமப்புற மருத்துவக் காப்பீட்டு திட்டம் பற்றி பெப்ருவரி 21ம் தேதி Economist தெரிவித்த கருத்தாவது: "இந்தத் திட்டம் ஒரு சிறிய நலனைத்தான் ஏழைகளுக்கு கொடுக்கும். பல நேரமும் வெளி நோயாளிகள் மருத்துவ உதவி பெறுவதற்கு இது உதவுவதில்லை. சராசரியாக செலவழித்த பணத்தில் 30-40% தான் திரும்பப் பெற முடிகிறது. ஆனால் கட்டணங்களோ முதலில் முழுமையாகக் கொடுக்கப்பட வேண்டும். எனவே மருத்துவமனைகள் என்பது பலருடைய வசதிக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. இதைத்தவிர பெரும் ஏமாற்று முறையும் உள்ளது; காப்பீடு செய்திருப்பவர்கள் தங்கள் பகுதிகளில்தான் வசதிகளை பெற முடியும். நாட்டுப் புறத்தில் இருந்து நகரங்களுக்கு வந்து வேலைசெய்யும் பல இளைஞர்கள் தங்கள் மருத்துவச் செலவுகளுக்கு முழுமையாகக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஒரு புதிய தொழிலாளர் ஒப்பந்தச் சட்டம், இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, முதலாளிகள் அத்தகைய தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் குடிபெயரும் தொழிலாளர்கள் முறை சாரா வகையில் தேர்ந்தெடுக்கப்படுவதால், முதலாளிகள் அத்தகைய சட்டங்களை தவிர்க்க முடிகிறது.

இதேபோன்ற வகைகள்தான் ஏனைய பிரிவுகளிலும், ஓய்வூதிய வயது பெற்றவுடனும் நடக்கிறது; இங்கும் முதலாளிகள் பணம் கொடுக்க மறுக்கின்றனர். 15 சதவிகித குடிபெயர்ந்த தொழிலாளிகளுக்குத்தான் ஓய்வூதிய நலன்கள் கிடைக்கின்றன; அதிகமான பேருக்கு வேலை வாய்ப்ப்புக்கள் இல்லாதது அல்லது குறைந்த ஊதியம்தான் இருப்பது என்ற நிலையில் ஓய்வூதியக் காப்பீடு செய்து கொள்ளுவதில்லை. கடந்த ஆண்டு Shenzhen ல் 830,000 மற்றும் Dongguan ல் 600,000 தொழிலாளர்கள் ஓய்வூதிய நிதியங்களில் இருந்து விலகிக் கொண்டனர். வெகுசில குடியபெயரும் தொழிலாளர்கள்தான் ஒரே நகரில் 15 ஆண்டுகள் தங்குகின்றனர்; அந்தக் கால வரையறைதான் ஓய்விற்குப் பின் ஓய்வூதியம் பெறலாம் என்று சட்ட பூர்வமாக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த "சாதனைகள்" பற்றி --சீனப் பிரதமராக இவர் இருந்த முதல் பதவிக்காலம் பற்றி-- வென்னுடைய அறிக்கை புகழாரம் சூட்டுகிறது. சீனா இப்பொழுது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம் என்றும், விண்வெளியில் வீரர்களை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார். "குடும்பங்களுக்கு சொநதமான கார்களின் எண்ணிக்கை பெரிதும் உயர்ந்துள்ளது; செல் போன்கள், கணினிகள், இணையதளச் சேவைகள் ஆகியவையும் உயர்ந்துள்ளன. விடுமுறைக்கு வெளியிடம் செல்லும் மக்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது" என்று அவர் கூறினார். இவருடைய கருத்துக்கள் சீன முதலாளித்துவத்தின் பரந்த விரிவாக்கத்தின் மூலம் செல்வம் கொழிக்கும் நிலைக்கு சென்றுள்ள ஒப்புமையில் ஒரு சிறிய அளவிலான அடுக்குக்குத்தான் நேரடியாகப் பொருந்தும்.

CPPCC செய்தியாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள், தனியார் வணிக உரிமையாளர்கள், சுய வேலை பார்ப்பவர்கள், அவர்களுடைய குடும்பங்கள் ஆகியவை 75 மில்லியன் என்ற எண்ணிக்கையை, அதாவது சீனாவில் 1.3 பில்லியன் மக்கட்தொகையில் 6 சதவிகிதம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றன. இவர்கள் 10 டிரில்லியன் யுவானுக்கும் ($1.4 டிரில்லியன்) அதிகமான மூலதனத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கின்றனர்; அரசாங்கத்தின் வரி வசூலில் மூன்றில் ஒரு பங்கு கொடுக்கின்றனர். ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தில் 40 சதவிகிதம், வெளியீடுகளில் 69 சதவிகிதம் என்று கொண்டிருப்பதுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் இவர்களுடைய பங்கு மூன்றில் ஒன்றாகும்.

பெருகிய முறையில் இந்தச் செல்வம் கொழிக்கும் தட்டானது அரசியல் அரங்கில் தன்னுடைய குரல் ஒலிக்குமாறு செய்துகொண்டிருக்கிறது. சீனாவின் பெரும் பில்லியனர்களில் ஒருவரான Zhang Yin, CPPCC பிரதிநிதியாக இருந்து இந்த அரங்கை தன்னுடைய புகார்களை பற்றிக் கூற பயன்படுத்தினார். நாட்டின் புதிய தொழிலாளர் சட்டங்களில் இருக்கும் முக்கிய பிரிவுகள் அகற்றப்பட வேண்டும் என்று அவர் கோரினார்; உயர்மட்ட வருமானக் குழுவிற்கு வரிகள் 45 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாகக் குறைக்கப்பட வேண்டும் என்றார். மக்கள் எதிர்கொள்ளும் விதத்தை பற்றி கவலைப்பட்ட அதிகாரிகள் இவ்வம்மையாரின் ஆலோசனைகளை ஒதுக்கிவிட்டனர்.

ஆயினும், வென்னின் ஏழைகள் பற்றிய அக்கறையின் வெளிப்பாடுகள் ஒரு புறம் இருந்தாலும், CPPCC JTM Zhang Yin இடம் பெற்றிருப்பதே CCP ஆனது தோன்றிவரும் சீன முதலாளித்துவ வர்க்கங்களின் வர்க்க நலன்களில்தான் தங்கியிருக்கின்றது, அதைத்தான் பிரதிநிதித்துவம் செய்கின்றது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.