World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Congress Party delivers "populist" budget with a view to coming elections

இந்தியா: வரவிருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி "மக்களைக் கவரும்" பட்ஜெட்டை அளிக்கிறது

By Deepal Jayasekera and Keith Jones
15 March 2008

Use this version to print | Send this link by email | Email the author

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைமையின் கீழ் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) இந்திய பாராளுமன்றத்தின் கீழ் பிரிவான லோக் சபாவிடம் அதன் 2008 நிதி ஆண்டிற்கான வரவு-செலவிற்கு தொடக்க ஒப்புதலை நேற்று பெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) தலைமையில் இருக்கும் இடது முன்னணி, மே 2004 தேர்தல்களில் இருந்து சிறுபான்மை UPA அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து வரும் கட்சியும் வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது; மக்களுடைய முக்கிய கவலைகளான விவசாயிகள் பிரச்சினை, வேலையின்மை, ஏறிவரும் உணவுப் பொருட்களின் விலைகள், பெட்ரோல், மண்ணெண்ணெய் விலைகள் என்பன பற்றி "திறமையுடன்" கவனிக்கத்தவறிவிட்டது என்று விமர்சித்தும்கூட, இந்த முடிவை அது எடுத்தது.

பெப்ருவரி 29ம் தேதி நிதி மந்திரி பழனியப்பன் சிதம்பரத்தினால் வழங்கப்பட்ட பட்ஜெட் மக்களுடைய பட்ஜெட் என்று அரசாங்கத்தால் மொழியப்படுகிறது. சிதம்பரம் அளித்த பட்ஜெட் உரையின் மையப் பகுதி ஒரு கடன் நிவாரணத் திட்டம் ஆகும்; இதன்படி அரசாங்கம் 30 மில்லியன் ஏழை விவசாயிகளுடைய கடன்களை அகற்றுவதாகவும் மற்றும் 10 மில்லியன் பேருக்கு உதவி கொடுப்பதாகவும், இவற்றிற்கு 600 பில்லியன் ரூபாய்கள் (15 பில்லியன் அமெரிக்க டொலர்) ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது. பொது மற்றும் சமூகப் பணிச் செலவுகளுக்கும் கூடுதலான உதவியை சமூகத்தில் பின்தங்கிய தலித் போன்ற பிரிவுகளுக்கு (முன்பு தீண்டத் தகாதவர்கள்) மற்றும் பழங்குடி மக்களுக்கு கொடுக்க இருப்பதாகவும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பறையறிவித்துள்ளது.

சில செலவீனங்கள் விகித அளவில் அதிகமாக தோன்றுகின்றன என்றாலும், கிராமப்புற இந்தியா மற்றும் அதன் நகர்ப்புற மையங்களில் இருக்கும் சேரிகளில் இருக்கும் சமூக நெருக்கடியுடன் ஒப்பிடும்போது உண்மையில் அவை மிகக் குறைவுதான்; இதைத்தவிர பொது சுகாதாரக் காப்பும் கல்வியும் அற்பமான மற்றும் சிதைந்த நிலையில், நாட்டின் உள்நாட்டு நிகர உற்பத்தியில் மிகப் பெரிய உயர்வு ஏற்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டு வளர்ச்சி ஒன்பது சதவிகிதத்திற்கும் சற்று அதிகம் என்று இருக்கும் நிலையில் இவ்வாறுதான் கூறமுடியும்.

1991ல் இருந்து இந்தியாவின் ஆளும் உயரடுக்கு தொடர்ந்துவரும் புதிய தாராளவாத செயற்பட்டியலின் அடிப்படையைத்தான் பட்ஜெட் உறுதியாக கொண்டுள்ளது. ஆனால் எப்படியும் 2009 வசந்த காலத்திற்குள் நடத்தப்பட வேண்டிய தேசிய தேர்தல்களை கருத்திற் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்க சக்தி பெருநிறுவன செய்தி ஊடகத்தால் நன்கு அறியப்பட்டுள்ளது; அனைத்துமே இதை "தேர்தல் பட்ஜெட்" என்று விவரித்துள்ளன; "மக்களை ஈர்க்கும்" திட்டங்கள் பல இருப்பதாகவும் கூறியுள்ளன.

சிதம்பரத்தின் உரையை தொடர்ந்த நாட்களில் காங்கிரஸ் கட்சி இடது முன்னணி நட்புக் கட்சிகளுடன் முறித்துக் கொள்ளத் திட்டமிட்டு ஒரு விரைவான தேர்தலுக்கு ஏற்பாடு செய்யக்கூடும் என்று செய்தி ஊடகத்தில் அதிக ஊகங்கள் வெளிப்பட்டிருந்தன.

காங்கிரஸ் தலைமையின் முக்கிய இலக்கு அமெரிக்காவுடன் ஒரு சிவிலியன் அணுசக்தி வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துவிட வேண்டும் என்பதாகும்; இந்த ஒப்பந்தம் புஷ் நிர்வாகத்தால் இந்திய அமெரிக்க "உலகந்தழுவிய" மூலோபாய பங்காளித்தனத்திற்கு முக்கியமான முதற்படி என்று பாராட்டப்பட்டிருந்தது. ஆனால் இடது முன்னணியானது ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் அரசாங்கத்திற்கு அது கொடுத்து வரும் ஆதரவை நிறுத்திவிடுவதாக உறுதியாக இருந்தது. தன்னுடைய பங்கிற்கு வாஷிங்டனானது, UPA அரசாங்கத்தை உடன்பாட்டை செயற்படுத்தும் "தைரியத்தை" பெறுமாறு வலியுறுத்தி, தற்போதைய அமெரிக்க சட்டமன்ற காலத்தில் முடிவு செய்யப்படாவிட்டால், அது வலுவிழக்கக்கூடும் என்றும் கூறியிருந்தது.

"பட்ஜெட் வாக்குச் சீட்டை குறிவைக்கிறது" என்ற தலைப்பில் வந்த கட்டுரை ஒன்றில் டைம்ஸ் ஆப் இந்தியா கூறியது: "ஆண்டு இறுதியில் வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களை" கருத்தில் கொண்டு மட்டும் காங்கிரஸ் பட்ஜெட்டில் "வாக்காளர் நட்பு நடவடிக்கைகளை" கொள்ளவில்லை; தேசிய தேர்தல் வரக்கூடிய தன்மையையும் கருத்திற் கொண்டிருக்கிறது; "ஏனெனில் பட்ஜெட் 2008ல் ஒருவேளை இடதுடன் பூசல் ஏற்பட்டால் வரக்கூடிய விளைவும் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளது."

ஆனால் காங்கிரஸ் கட்சி தலைமைக்கும் இடது முன்னணிக்கும் பெருகிய முறையில் சில நாட்கள் பிளவு இருந்த பின்னர், வெளியுறவு மந்திரி பிரணாப் முக்கர்ஜி விரைவில் தேர்தல் வரும் என்ற எண்ணத்தை தகர்க்கும் வகையில் மார்ச் 8ம் தேதி தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "எவரும் முன்கூட்டிய தேர்தல் பற்றி நினைக்கிறார்கள் என்று நான் கருதவில்லை. எமது கூட்டணி பங்காளிகள் தேர்த்ல ஆதரவாளர்களும் முன்கூட்டிய தேர்தல் பற்றிப் பேசவில்லை" என்றார். அணுசக்தி ஒப்பந்தம் அரசாங்கத்தையே பாதிப்பிற்கு உட்படுத்தினாலும் தொடரப்பட முடியுமா எனக் கேட்கப்பட்டதற்கு முக்கர்ஜி கூறினார்: "இப்பொழுது எவரும் தேர்தல் நடத்துவது பற்றி பேசவில்லை ...அரசாங்கத்தை எதற்காகவும் தியாகம் செய்யும் பேச்சும் இல்லை."

முக்கர்ஜியின் கருத்துக்களுக்கு வலிமை கொடுக்கும் விதத்தில் நேற்று பிரதம மந்திரி மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் கூறினார்: "குறைந்த பட்சம், இந்த ஆண்டு தேர்தல்கள் ஏதும் இராது."

இந்த அறிக்கைகள் ஒரு பிந்தைய நாளில், போக்கை விரைவில் மாற்றும் நோக்கத்தை காங்கிரஸ் கட்சி தலைமை கொள்ளும் என்பதை ஒதுக்கிவிடவில்லை; அதே போல் இடது முன்னணியுடன் ஒரு மோதல் வரக்கூடும் என்பதையும் தவிர்க்கவில்லை. ஆனால் அத்தகைய நடவடிக்கை மகத்தான அரசியல் ஆபத்துக்களை விளைவிக்கக்கூடும். இடது முன்னணி காங்கிரஸ் 2004 தேர்தல்களில் பெற்ற வெற்றியில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்து அரசாங்கத்திற்கும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் விலைமதிப்பிட முடியாத ஆதரவைக் கொடுக்கும் வகையில் பரந்த வறுமை பொருளாதார பாதுகாப்பு ஆகியவை பெரும் முதலாளித்துவ வளர்ச்சிக்கு நடுவே இருப்பதால் விளைந்த மக்களுடைய அதிருப்தியை திசை திருப்பும் வகையில், UPA ஒரு "மக்கள் சார்பு" கொள்கைகளை ஏற்குமாறு அழுத்தம் கொடுப்பதில் கவனத்தை செலுத்தியது. அவை வீணாயின.

தேசிய தேர்தல்கள் எப்பொழுது என்னும் தற்போதைய செய்தி ஊடக விவாதத்தில், உலக நிதியச் சந்தைகளின் கொந்தளிப்பு நிலையின் பாதிப்பு பற்றியோ இந்திய பொருளாதாரத்தில் அமெரிக்க பெரு மந்த நிலையின் பாதிப்பு பற்றியோ குறிப்புக்கள் ஏதும் இல்லை. தன்னுடைய பட்ஜேட் உரையில், சிதம்பரம் இந்தியா தொடர்ந்து விரைவான வளர்ச்சியை பெறும் என்ற நம்பிக்கையில் திளைத்தார். ஆனால் பெருகிய முறையில் பொருளாதார பிரச்சினைகள் இருக்கக் கூடும், நாட்டின் முழு வேலைத் தொகுப்பில் பாதியைக் கொண்டுள்ள விவசாயத் துறையை பிடித்திருக்கும் நெருக்கடியை ஒருவர் தள்ளுபடி செய்து பார்த்தாலும் அவ்வறிகுறிகளே உள்ளன. தொழில்துறையில் வளர்ச்சி கணிசமாகக் குறைந்து விட்டது; பணவீக்கம் இப்பொழுது ஐந்து சதவிகிதத்தில் உள்ளது; மிக முக்கிய பங்குச் சந்தை குறியீட்டெண்ணாகிய சென்செக்ஸ் ஜனவரி மாதத்தில் மிகப்பெரிய அளவில் 21,000 புள்ளியை தொட்டது, 15,800க்கு இப்பொழுது சரிந்து விட்டது.

அதனுடைய தேர்தல் மூலோபாயத்தை கருதுகையில், காங்கிரஸ் கட்சி அதற்கு முன்பு பதவியில் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் இருந்த தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் அனுபவத்தை கருத்திற்கொண்டு சிந்திக்கிறது. 2004ல் இந்தியா விரைவான பொருளாதார வளர்ச்சியை அனுபவிக்கத் தொடங்கியபோது, BJP நம்பிக்கையுடன் மறு தேர்தலை "இந்தியா ஒளிர்கிறது" என்ற கோஷத்தின் கீழ் எதிர்கொள்ள முற்பட்டது; ஆனால் பெரும் சங்கடத்தில் தள்ளப்பட்டது. இந்தியாவின் உழைப்பாளிகள் வாய்ப்பை தேர்தலில் பயன்படுத்தி தங்கள் எதிர்ப்பை NDA வின் புதிய தாராளக் கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படுத்தினர்.

காங்கிரஸ் கட்சியும் சமீபத்திய மாநிலத் தேர்தல் முடிவுகளில் இருந்து நம்பிக்கையை பெற முடியாது. சமீபத்தில் பல தேர்தல்களில் காங்கிரஸ் அதிகம் ஆதாயம் பெறவில்லை; இது இந்தியாவில் அதிக மக்கள் இருக்கும் மாநிலமான உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராஞ்சல் ஆகியவற்றில் வெளிப்பட்டது. குஜராத்திலும் அது இழிவான இந்து மேலாதிக்க வாதி நரேந்திர மோடியின் கீழ் இருந்த BJP அரசாங்கத்தை அகற்ற முடியாமல் தோல்வியுற்றது.

எனவே 2008 பட்ஜெட் முயற்சிகள், UPA ஐ அடுத்த தேர்தலில் போட்டியிட வலுவாக வைக்கும் விதத்தில் உள்ளன; அது இந்த ஆண்டு நடைபெற்றாலும் அடுத்த ஆண்டு ஆரம்ப மாதங்களில் நடைபெற்றாலும் இப்படித்தான் தன்னை ஆம் ஆத்மியின் அல்லது பாமர மனிதனின் நட்புக் கட்சியாக காட்டிக் கொள்ளும் முயற்சி இருக்கிறது. அப்படிப்பட்ட காட்டிக் கொள்ளும் தன்மைதான் நிதி அமைச்சகத்தின் ஆண்டு பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டது; சிதம்பரம் அதை பட்ஜெட்டிற்கு ஒரு நாள் முன்பு அளித்திருந்தார். இது பொருளாதார "சீர்திருத்தங்கள்" விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது. அவற்றில், இலாபமாக நடக்கும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் PSU என்பவற்றை தனியார் மயமாக்குதல், அனைத்து நஷ்டத்தில் இருக்கும் PSU க்களை ஏலத்தில் விடுதல், சில்லறை விற்பனையின் பல பிரிவுகளையும் அயல்நாட்டு முதலீட்டிற்கு அனுமதித்து, "100 சதவிகிதம் வெளிநாட்டு பங்குகள் வெளிநாட்டு முத்திரை இருக்கும் சிறப்பு சில்லறை விற்பனைக் கூடங்களில் அனுமதிக்கப்படும்", ஆலைகள் சட்டத்தை திருத்தி வார வேலை மணியை 48ல் இருந்து 60 மணி நேரங்களாக செய்வது ஆகியவை அடங்கியிருந்தன.

பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையானது காங்கிரஸ் செயல்படுத்த இருக்கும் செயற்பட்டியல் தேர்தலில் மறு வெற்றி பெற்ற பின் எப்படி இருக்கும் என்பதை பெரு வணிகத்திற்கு அடையாளம் காட்டும் வகையில் இருந்தது.

சில கூடுதலான வரிச் சலுகைகள் பெரு வணிகத்திற்கு என்றும் பட்ஜெட் கொடுத்தது; அதே போல் நடுத்தர வர்க்க வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் நடவடிக்கைகளும் இருந்தன --தனிநபர் வருமான வரி விலக்குகள், உற்பத்தி வரிகள் வாகனங்கள் மீது குறைக்கப்படல், மற்றும் அதிக விலை உடைய நுகர்பொருட்கள் மீது வரி குறைப்பு ஆகியவை இருந்தன.

இதில் மற்றொரு இராணுவச் செலவினத்திற்கு பெரும் ஆக்கமும் அடங்கியுள்ளது; பாதுகாப்பிற்கான ஒதுக்கீடு 10 சதவிகிதம் கூடுதலாக்கப்பட்டு 1,087 பில்லியன் ரூபாய்கள் ($27.2 பில்லியன்) என்று பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 14 சதவிகிதம் இருக்கிறது. BJP தலைமையிலான அரசாங்கம் முன்பு செய்ததை போலவே UPA அரசாங்கமும் இந்தியாவின் இராணுவச் செலவுகளை மத்திய ஆசியா, மற்றும் முழு இந்திய பெருங்கடல் பகுதியில் அது கொண்டுள்ள அரசியல் விழைவுகளுக்கு ஏற்பட மகத்தான அளவில் விரிவாக்கம் செய்துள்ளது. UPA ன் கீழ் இராணுவச் செலவினம் 40 சதவிகிதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. ஆயினும்கூட பாதுகாப்பு அமைச்சரக அதிகாரிகள் இந்த ஆண்டு அதிகரிப்பு "போதுமானது இல்லை" என்று குறைகூறியுள்ளனர். அதற்கு சிதம்பரம் இந்தியாவின் ஆயுதப் பிரிவு நவீனப்படுத்தப்படுவதற்கு பணம் தடை இல்லை என்று கூறிவிட்டார்.

அப்படிக் கூறியும் இந்த பட்ஜெட் முந்தைய UPA பட்ஜெட்டுக்களைவிட மக்கள் மீது காட்டும் குவிப்பில் வேறுபாட்டை கொண்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்க முன்முயற்சிகள் நெருக்கமாக கவனிக்கப்பட்டால் கூறப்படுவதை விட குறைந்த தன்மையைத்தான் கொண்டிருக்கின்றன.

உதாரணமாக, UPA அரசாங்கம் தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வரும் மாவட்டங்கள் இரு மடங்காக்கப்படும் என்று அறிவித்தது; இது கிட்டத்தட்ட குறைந்த அளவு ஊதியம் (நாள் ஒன்றுக்கு 1 அமெரிக்க டாலர்) குறைந்தது கிராமப்புற இல்லம் ஒவ்வொன்றுக்கும் கொடுக்கப்படும் என்று இருந்தது. ஆனால் பட்ஜெட்டில் இதற்கான ஒதுக்கீடு 20 சதவிகிதம்தான் அதிகரித்துள்ளது.

கல்விச் செலவு 20 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறினாலும், இந்த அதிகரிப்பில் பெரும்பகுதி உயர் கல்விக்குத்தான் செல்லும்; சமூகத்தில் அதிக சலுகை பெற்றுள்ள பிரிவுகள், தகவல் துறை தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் செல்லும்; அவை ஏற்கனவே பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் குறைவாக இருப்பது பற்றிக் குறை கூறியுள்ளன. ஆரம்பக் கல்விக்கான செலவினம்-- அதுவும் ஒரு நாட்டில் மக்கள் தொகையில் ஏராளமானவர்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருக்கும் நிலையில்-- வெறும் பெயரளவிற்கு 7 சதவிகிதமே உயர்த்தப்பட்டுள்ளது. பணவீக்க காரணியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்போது, இது ஒரு அதிகம் என்றே கூறமுடியாது. கல்விக்கு அதிகம் செலவழிக்கப்படுகிறது என்று மத்திய அரசு கூறியிருக்கும் நிலையில் மொத்த பொதுச் செலவு (மத்திய, மாநில அரசாங்கங்களுடையது) கல்விக்காக என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதிம்தான் உள்ளது.

இப்படி அரசாங்கத்தின் பரபரப்பான அறிக்கைக்கும் உண்மைக்கும் இடையே இருக்கும் கொடூரமான இடைவெளி கடன் நிவாரணத் திட்டத்தில் இன்னும் தீவிரமாக உள்ளது. அரசாங்க புள்ளி விவரங்களின்படி, 500 பில்லியன் ரூபாய்கள் செலவில் ($12.5 பில்லியன்), 2 ஹெக்டேர்கள் அல்லது அதற்கும் குறைவாக கொண்டுள்ள 30 மில்லியன் விவசாயிகள், நிறுவனக் கடன் அளிப்பவர்கள், வங்கிகள், கூட்டுறவு அமைப்புக்களின் மூலம் பெற்ற கடன்கள் அரசாங்கத்தால் ஏற்கப்படும். புது டெல்லி மற்றும் ஒரு 100 பில்லியன் ரூபாய்களை (அமெரிக்க 2.5 பில்லியன் டாலர்கள்) கடன் நிவாரணத்திற்கென இன்னும் 10 மில்லியன் விவசாயிகளுக்குக் கொடுக்கும்.

ஆனால் விவசாய கடனில் 70 சதவிகிதத்திற்கும் மேலானவை நிதிய அமைப்புக்களில் பெறப்படவில்லை; தனியார் கடன் கொடுப்பவர்களிடம் வாங்கப்பட்டவை ஆகும்; அவர்களோ பல நேரமும் 30 சதவிகிதம், அதற்கும் கூடுதல் என்று வசூல் செய்கின்றனர். மேலும் மிக வறிய விவசாயிகள்தாம் இத்தகைய கடன் கொடுப்பவர்களிடம் வேறு வழியின்றிச் செல்லுபவர்கள் ஆவர்.

நிலத்தின் உற்பத்தி தன்மையில் இருக்கும் வேறுபாடுகள் பற்றியும் அரசாங்கத் திட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்தியாவின் பல பகுதிகள் தற்போதைய விவசாய நெருக்கடியால் பாதிக்கப்பட்டவை ஆகும் --இதில் விதர்ப்பா பகுதியும் உள்ளது; அது விவசாயிகள் தற்கொலை நிகழ்வுகளுக்கு பெயர்பெற்றதாகி வருகிறது; அதைத் தவிர பல பகுதிகளில் நில அளவு அதிகமாக இருந்தாலும், அவை மழை குறைவாகப் பெய்யும் பகுதிகள் ஆகும்.

கடன் நிவாரணத் திட்டத்திற்கு அதிக பணம் ஒதுக்கியிருப்பது பற்றி அரசாங்கம் அதிகம் கூறியுள்ளது. ஆனால் அரசாங்கம் செய்ய இருப்பது என்னவென்றால் --அது அதிக விவரங்களையும் கொடுக்கவில்லை-- நிதி நிறுவனங்களுக்கு அரசாங்க பத்திரங்களை கடனுக்கு பதிலாக கொடுக்கக்கூடும். இதன் விளைவு அரசாங்கம் பத்திரங்கள்மீது வட்டி கொடுக்க வேண்டும் என்பது மட்டுமில்லாமல், முழு நிலுவையில் இருக்கும் கடன்களும் தீராது.

நிதிய அமைப்புக்களுக்கு இது உண்மையில் ஒரு வரமாக இருக்கும்; ஏனெனில் ஏழை விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட கடன்கள் தொகை அரசாங்க பத்திரமாக மாறிவிடும்.

இன்னும் கூடுதலான முக்கியத்துவம் வாய்ந்த உண்மை கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் விவசாய நெருக்கடியின் மூலங்களை கவனிக்கவில்லை; விலை ஆதரவு கொடுக்கும் முறை அகற்றுதல், விவசாயத்துறையில் அரசாங்கம் செய்துள்ள குறைவான செலவுகள், உரங்கள் மற்ற விவசாயத்திற்கு தேவையான பொருட்களின் விலை உயர்வு, நிலங்கள் துண்டு துண்டுகளாக இருந்தல் போன்றவை கவனிக்கப்படவில்லை. உண்மையில் அரசாங்கம் இத்தகைய நெருக்கடியை தோற்றுவித்துள்ள புதிய தாராளக் கொள்கைகளைத்தான் முழுமையாக செயல்படுத்தும் என்று கூறுகிறது.

"இந்திய எழுச்சி" என்பதை இந்திய முதலாளித்துவம் கொண்டாடுகையில் உண்மையோ இந்தியா மிகப் பெரிய அளவில் ஒரு முன்னணி எழுத்தாளர் கூறியிருப்பதுபோல், "ஒரு பட்டினிக் குடியரசு" ஆகத்தான் உள்ளது. 1993-94 மற்றும் 2004-05 க்கு இடையில் வந்த அரசாங்கப் புள்ளிவிவரங்கள் தனிநபர் துணி நுகர்வு, உண்மை உணவுச் செலவினம், கலோரி உட்கொள்ளல் ஆகியவை இந்தியாவில் சரிந்துள்ளதாகத்தான் கூறுகிறது 2004-05 அளவில், இந்தியாவின் 87% சதவிகித கிராமப்புற மக்கள் நாள் ஒன்றுக்கு 2,400 கலோரிகள் கூட பெறவில்லை; அதே போல் 69.6 சதவிகிதத்தினர் 2,200 கலோரிகள் பெறவில்லை.