World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Hillary Clinton threatens to "obliterate" Iran

ஈரானை "துடைத்தழித்து விடுவதாக" ஹில்லாரி கிளின்டன் அச்சுறுத்தல்

By Joe Kay
24 April 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹில்லாரி கிளின்டன் இஸ்ரேலை ஈரான் தாக்கினால் அதை "துடைத்தழித்துவிடுவதாக" எடுத்துக் கொண்ட உறுதிமொழி அந்நாடு, அதன் முழு மக்கள் மீதான அச்சுறுத்தல்கள் பற்றிய கடும் தீவிரத்தை குறிக்கிறது.

செவ்வாயன்று பென்சில்வேனியா ஆரம்ப தேர்தல்கள் நடந்த தினத்தன்று கிளின்டன் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்தார். ABC நிகழ்ச்சியான "Good Morning America" வில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்கள் நடத்தினால் "மகத்தான முறையில் பதிலடி கொடுக்கப்படும்" என்று அவர் முன்பு கூறியதை பற்றிய கருத்துக்கள் பழையபடி கேட்கப்பட்டன. அதற்கு விடையிறுக்கையில் அவர் இன்னும் கூடுதலான இராணுவ முழக்கத்தை கொடுக்கும் வகையில் பேசினார்.

ஈரானிய அணுவாயுத தாக்குதல் இஸ்ரேல் மீது வரக்கூடிய திறன் இருப்பது பற்றிய வினா வேறுவிதமாக கேட்கப்பட்டபோது, கிளின்டன் கூறினார்: "நான் ஜனாதிபதியாக இருந்தால் ஈரான் மீது நாங்கள் தாக்குவோம் என்பதை ஈரானியர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதை அவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்; ஏனெனில் தங்கள் சமூகத்தை நன்கு அவர்கள் கவனித்தால், அடுத்த பத்து ஆண்டுகளில் அணுவாயுதங்கள் பற்றி எத்தகைய வளர்ச்சியை பெற்றிருந்தாலும், இஸ்ரேல் மீது மடத்தனமாக தாக்குதல் நடத்தலாம் என்று கருதினால், நாங்கள் அவர்களை முற்றிலும் துடைத்தழிக்கக் கூடியவர்களாக இருப்போம்."

இஸ்ரேல் மீது ஒரு ஈரானிய தாக்குதல் என்ற வகையில் தன்னுடைய கருத்துக்களை ஒரு காட்சியாக கிளின்டன் வெளியிட்டிருப்பது மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு அணுவாயுதங்கள் உட்பட மகத்தான இராணுவ வலிமையை பயன்படுத்தத் தான் தயாராக இருப்பதற்கான போலிக்காரணத்தை தயாரித்திருப்பதை உறுதிபடுத்தும் வகையில்தான் தெரியப்படுத்தியுள்ளது.

கிளின்டன் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியுள்ள சொற்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. Merriam-Wesbster அகராதி "Obliterate", (துடைத்தழித்தல்) என்பதை "அடையாளம் காணலில் இருந்து அல்லது நினைவிலிருந்து முற்றிலும் அகற்றிவிடுதல்", "இருப்பில் இருந்தே தகர்த்தல்; அனைத்து தடையங்கள், குறிப்புக்கள், முக்கியத்துவம் அனைத்தையும் அழித்துவிடுதல்" எனப் பொருள் தரும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் "ஈரான்", "ஈரானியர்கள்" முழு துடைத்தழிப்பை எதிர்கொள்ளுபவர்கள் என்று கிளின்டன் கூறினார். இவர் சொற்களை அப்படியே எடுத்துக் கொண்டால், இஸ்ரேல் மீது ஈரானிய அரசாங்கம் தாக்குதல் நடத்தினால் இவர் ஈரானிய மக்கள், அவர்களுடைய வரலாற்றை அப்படியே முழுதும் அழித்துவிடுவதாகக் கூறுகிறார்; அதாவது கிட்டத்தட்ட 71 மில்லியன் மக்களை இனவெறித் தாக்குதலில் அழித்து விடுவதாகக் கூறுகிறார்.

கிளின்டனுடைய கருத்துக்கள் ஒரு இஸ்ரேலிய அதிகாரி, தேசிய உள்கட்டுமான மந்திரி பெஞ்சமின் பென்-எலிஜெர் இதே போன்ற எச்சரிக்கை கொடுத்த இரு வாரங்களுக்குள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். அந்த அதிகாரி கூறியதாவது: "ஈரானியர்கள் தாக்குதல் நடத்தினால் அது இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுப்பதற்கு வகை செய்யும்; ஈரானிய தேசத்தையே அழிக்க அது வகை செய்துவிடும்." தன்னிடத்தில் அணுவாயுதங்கள் குவிந்து கிடப்பது பற்றி ஒருபோதும் பகிரங்கமாக இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் (பல நூறு என்ற எண்ணிக்கையில் இருப்பதாகக் கருதப்படுகிறது), பென் எலிஜெர் உட்குறிப்பாக ஈரான் இஸ்ரேலுடன் மோதினால் இந்த கிடங்கை கட்டவிழ்த்து விடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.

கிளின்டனுடைய கருத்துக்கள் அமெரிக்க செய்தி ஊடகத்தில் இருந்து குறைந்த விமர்சனத்தையே பெற்றன மிக அதிகமாக இது பற்றி ஒபாமா கூறக்கூடியதே இது "தேவையில்லாமல் கூரிய பெரும் கத்தியை சுழற்றி சப்தம் செய்வதுதான்" என்று கூறியது; அதே நேரத்தில் அவர், ஈரானிய தாக்குதல் ஏதேனும் வந்தால் "அது விரைவில் வலுவுடன் எதிர்கொள்ளப்படும்" என்ற உறுதியையும் கொடுத்துள்ளார்.

புதனன்று, கிளின்டன் MSNBC உடைய "Morning Joe" நிகழ்ச்சியில் தன்னுடைய கருத்துக்களை தெளிவுபடுத்துமாறு கோரப்பட்டார். NBC நிருபர் Andrea Mitchell கடந்த ஆண்டு கிளின்டன் ஈரான் அணுசக்தி ஆயுதங்கள் பெற்றிருக்கும் திறன் பற்றிய வினாக்களுக்கு பதில் கூற மறுத்துள்ளதாகவும், அத்தகைய வினாக்கள் "நாமாக கருதும் நிலைப்பாடுகள்" என்றும் கூறியிருந்தார். அப்போதைய நிலைமைக்கும் தற்போதைய நிலைக்கும் எப்படி மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன என்று கிளின்டனை மிட்செல் கேட்டார்.

"காணக்கூடிய உண்மைகள் நிலைமையை மாற்றியுள்ளன" என்று கிளின்டன் பதிலளித்தார். தூதரக முறையில் ஈடுபடும் உறுதியை கொடுத்தாலும், கிளின்டன் வலியுறுத்திக் கூறியதாவது: "ஈரானியர்கள் உலகில் தங்கள் வலிமையை காட்ட விரும்புகின்றனர் என்பது தெளிவு. ஒரு அணுவாயுதம் பெற முடிதல் எப்படி என்ற நோக்கத்தை அவர்கள் தொடர்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை... ஆனால் ஆரம்பத்தில் இருந்தே அது மிகப் பெரிய, மிக மிகப் பெரிய தவறு என்பதை அவர்கள் அறியவேண்டும்." தான் முன்னர் கூறியிருந்த முழுத்துடைத்தழிப்பு அச்சுறுத்தல் என்பதை அவர் திருத்திக் கூறவில்லை.

கிளின்டனுடைய கருத்துக்கள் அவரும் செனட்டர் பராக் ஒபாமாவும் கடந்த வாரம் ஜனநாயகக் கட்சி விவாதத்தின் போது உரைத்த கருத்துக்களின் தொடர்ச்சியாகத்தான் இருந்தன. இஸ்ரேல் மீது ஈரானிய தாக்குதலை அமெரிக்கா மீதான தாக்குதல் என்று கருதப்படுமா என்று வினவப்பட்டதற்கு, ஒபாமா ஈரானுடன் நேரடிப் பேச்சு வார்த்தைகளுக்கு உத்தரவாதம் கொடுத்தாலும், "அவர்கள் அணுவாயுதத்தை பயன்படுத்துவதை தடுத்தல், அவர்கள் அணுவாயுதத்தை பெற முயல்வதை தடுத்தல் என்று அனைத்து விருப்புரிமைகளும் பயன்படுத்தப்படும்" என்று வலியுறுத்திப் பேசினார்.

"அப்பிராந்தியத்திலேயே எமது வலுவான நட்பு நாடான இஸ்ரேல் மீதான தாக்குதல், எதைப் பற்றி நாம் மிக முக்கியம் என்று கருதுகிறோமோ அதன் மீதான தாக்குதல் என்பதை ஈரான் அறிய வேண்டும்.." என்று ஒபாமா கூறினார். எந்த தாக்குதலுக்கும் "தக்க நடவடிக்கையை" அமெரிக்க எடுக்கும் என்றும் அவர் தொடர்ந்து கூறினார்.

தன்னுடைய எதிர்ப்பாளரை வலதுபுறுத்தில் இருந்து மடக்கும் வாய்ப்பை கிளின்டன் எடுத்துக் கொண்டார். ஈரானுக்கு எதிரான "மகத்தான பதிலடி" இருக்கும் என்று அவர் உறுதியாகக் கூறினார். இஸ்ரேல் என்று இல்லாமல் மற்ற நாடுகளுக்கும் எதிராக தாக்குதல் நடந்தாலும் இதே கொள்கை ஏற்கப்படும் என்றும் அவர் கூறினார். "ஆம், இஸ்ரேல் மீதான தாக்குதல்... மகத்தான பதிலடிக்கு வழிவகுத்துவிடும் என்று ஈரானியர்களை தெரிந்து கொள்ள வைப்போம். ஆனால் மற்ற நாடுகள் மீதான தாக்குதலும் [இங்கு அவர் செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் மற்றும் குவைத் முடியாட்சிகளையும் குறிப்பிட்டார்] தங்களுக்கு அணுவாயுதம் வேண்டாம் என்று கூறியுள்ள மற்றும் எங்கள் பாதுகாப்புக் குடையின்கீழ் வர விருப்பம் உடையவற்றின் மீதான தாக்குதலும் கருதப்படும்."

இதன் விளைவு கிளின்டன் அமெரிக்காவிற்கும் பல அரை நிலமானித்துவ முறை ஷேக் ஆட்சிகளுக்கும் இடைய இராணுவ உடன்படிக்கை மேற்கொள்ள இருக்கும் தன்னுடைய விருப்பத்தையும் கிளின்டன் அறிவித்துள்ளார். அப்பகுதியில் கூடுதலான அமெரிக்க இராணுவ குறுக்கீடு பெருக்கும் என்பது இதன் பொருளாகும். அவர் வலதில் இருந்து புஷ் நிர்வாகத்தை குறைகூறும் வகையில் "நிர்வாகம் உலகின் மற்ற பகுதிகளுக்கு ஈரான் ஒரு ஆபத்து, நமக்கு மட்டும் அல்ல, இஸ்ரேலுக்கு மட்டும் அல்ல, அப்பகுதிக்கும் அப்பாலும் என்பதை உணர்த்த தவறிவிட்டது" என்றும் குறைகூறினார்.

கொள்கையை பொறுத்த வரையில் கிளின்டனுக்கும் ஒபாமாவிற்கும் இடையே கணிசமான வேறுபாடுகள் ஒன்றும் கிடையாது. இருவருமே ஈராக்கில் தொடர்ந்த அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு கொடுக்கின்றனர். இருவருமே மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை பாதுகாக்கின்றனனர். ஆயினும், மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கை மீதாக தந்திரோபாய முறையில் இருவருக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு; ஜனநாயகக் கட்சி அமைப்பின் பிரிவுகள் சில இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பது பற்றி விமர்சனத்தைக் கொண்டிருக்கின்றன.

கிளின்டன் உறுதியாகக் கூறுபவை, ஒபாமா இஸ்ரேலை காப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்த தயங்குவார் என்று கவலை கொண்டிருப்பவர்களுக்கு முறையீடு செய்யும் வகையில்தான் தெளிவாக உள்ளது. மேலும் இவர் தன்னுடைய பிரச்சாரம், அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தை இன்னும் விசுவாசமாக உறுதியாக்கும் என்பதையும் ஆளும் உயரடுக்கின் முன் வைக்கும் நிலைப்பாடு ஆகும்.

இந்த வாதத்தை முன்வைக்கையில் கிளின்டன் முன்பே கூறப்பட்ட முக்கிய கருத்துக்களைத்தான் விரிவுபடுத்தியுள்ளார்: இவரும் ஜோன் மக்கெயினும் "தலைமைத் தளபதியாக இருக்க" அனுபவம் படைத்தவர்கள் என்றும் ஒபாமாவிற்கு அந்த அனுபவம் இல்லை என்பதும் வாதிடப்படுகிறது; காலை 3 மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தால், அதாவது உலகின் மற்றொரு பகுதியில் இராணுவ தாக்குதல்களை நடத்துவது பற்றி ஒரு விரைவான முடிவிற்கு வரவேண்டும் என்றால் இவர்கள் இருவராலும் முடியும் என்று சித்தரித்துக் காட்டுகிறது.

பென்சில்வேனிய ஆரம்ப தேர்தல்களுக்கு சற்று முன்பு, கிளின்டன் ஒரு புதிய விளம்பரத்தை தொடக்கினார்; அதில் பேர்ல் துறைமுகம், ஒசாமா பின் லேடன் மற்றும் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜனாதிபதி ஹாரி ட்ரூமனுடைய மேற்கோள் ஆகியவை பற்றி அது இருந்தது: "வெப்பத்தை தாங்க முடியவில்லை என்றால், சமையல் கட்டில் இருந்து வெளியேறிவிடு."

உலகில் போர் சூழலில் அணுவாயுதத்தை பயன்படுத்துமாறு உத்தரவிட்ட ஒரே உலகத் தலைவர் ட்ருமன் என்ற உண்மையானது, இறுதியில் பிரச்சாரம் இலக்கு கொண்டிருந்த இராணுவ, அரசியல் நடைமுறையின் பிரிவுகள் கவனத்தில் இருந்து தப்பவில்லை என்று உறுதியாக நம்பலாம்.

கிளின்டனுடைய கருத்துக்கள், இவருடைய பிரச்சாரத்தை பற்றி என்ன கூறுகிறது என்பது மட்டுமல்லாமல், ஜனநாயகக் கட்சி முழுவதும், ஒபாமா உட்பட என்ன கூறுகின்றனர் என்பதையும் வெளிப்படுத்துகின்றன. ஜனநாயகக் கட்சி அமைப்பில் எவரும் ஈரானுக்கு எதிரான கிளின்டனுடைய அச்சுறுத்தலின் அடிப்படையை சவால் விடவில்லை; அதாவது மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கை ஈரானிய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் நோக்கமுடையது என்பதை. இரு வேட்பாளர்களில் எவரும், ஈரான் ஒன்றும் தூண்டுதல் இல்லா ஆக்கிரமிப்புக் கொள்கையை கொண்டிருக்கவில்லை மாறாக அமெரிக்காதான் என்பதை சுட்டிக்காட்ட மாட்டார்கள்; அந்நாட்டை அப்பகுதியைக் கட்டுப்பாட்டில் கொள்ளுவதற்கான அதன் உறுதிப்பாட்டில், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ஈராக்கியர்களை அது கொன்றதுடன், நான்கு மில்லியன் ஈராக்கியர்களை அகதிகளாகவும் ஆக்கியுள்ளது.

ஈரானுக்கு எதிரான --அல்லது சீனா, ரஷ்யா அல்லது வேறு எந்த நாடாயினும் சரி -- போர் ஆபத்து குடியரசுக் கட்சியிடம் இருந்து மட்டும் வரவில்லை. ஜனநாயகக் கட்சியினர் ஈராக் போரை விமர்சிப்பவர்கள் என்று காட்டிக் கொள்ள முற்பட்டாலும், குடியரசுக் கட்சியினரை போலவே அவர்களும் போரின் இலக்குகள் அமெரிக்க நலன்களுக்கு பாதுகாப்பை கொடுப்பவை, வருங்காலத்தில் அவற்றை அடைவதற்கு இராணுவ வலிமை நிச்சயமாக பயன்படுத்தப்படும் என்று நியாயப்படுத்துபவர்கள்தாம்.