World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

IMF and OECD: Europe will be hit hard by US recession

சர்வதேச நாணய நிதியமும், பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பும் அமெரிக்க தேக்கநிலையால் ஐரோப்பா கடினமான பாதிப்புக்குள்ளாகும் என்கின்றன

By Chris Marsden
19 April 2008

Use this version to print | Send this link by email | Email the author

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (OECD) ஆகியவை விடுத்துள்ள அறிக்கையில் அமெரிக்கா ஒரு தேக்கநிலைக்குள் அடியெடுத்து வைக்கிறது என்று எச்சரித்துள்ளது. அத்துடன் மோசமாகும் அமெரிக்காவின் நிலைமையின் விளைவாக நிகழத்தக்க கடுமையான பொருளாதார பிரச்சினைகளை ஐரோப்பா தவிர்த்து விடவும் தப்பித்து விடவும் முடியும் என்கிற கருத்தை நிராகரித்துள்ளது.

இந்த வாரம் பாரிசில் நடைபெற்ற OECD கூட்டத்தில் அமெரிக்க வீட்டு அடமானக் கடன் நெருக்கடியால் விளைந்த உலகளாவிய இழப்புகள் 440 பில்லியன் டாலரை தாண்டும் என்று கணிக்கப்பட்டது. இதன் முந்தைய கணிப்பான 200 - 300 பில்லியன் டாலர் என்பது மேல்நோக்கி கூரிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பலர் நினைத்ததை விடவும் உலகளாவிய நிதிசந்தைகள் நெருக்கடிக்கு ஐரோப்பா மிகவும் பாதிக்கத்தக்க சூழ்நிலையில் இருக்கிறது என்றும், பிரச்சினை பாதுகாப்பற்ற பரிமாற்ற சந்தைகளுக்கும் (Equity Derivatives Markets) பரவுமானால் குறிப்பாக இந்நிலை தொடரவே செய்யும் என்றும் அதிகாரிகள் ஏப்ரல் 15 அன்று தெரிவித்தார்கள்.

வங்கி இழப்புகள் குறித்த OECD இன் கணிப்பு 350 பில்லியன் டாலரில் இருந்து 420 பில்லியன் டாலர்களுக்குள் என மதிப்பிடப்பட்டு, சொத்துக்களின் அளவு குறித்து வேறுபட்ட அனுமானங்கள் அடித்தளமாக கொண்டு வங்கிகள் அதிலிருந்து மீண்டுவிட முடியும் என கருதுகின்றது. 40 சதவீதத்தை மீட்டு விட முடியும் என்கிற அனுமானத்தின் பேரில், 422 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை இழப்பினை OECD மதிப்பிட்டது. இதில் 87 பில்லியன் டாலர் தொகையை அமெரிக்க வங்கிகளும், 60 பில்லியன் டாலர்களை வர்த்தக வங்கிகளும், மற்றைய முதலீட்டு வங்கிகளும் ஏற்றுக் கொள்ளும் .

இந்த இழப்புகளின் தாக்கம் உலகெங்கிலும் பிரதிபலிக்கும். கூட்டு கடன் பிணைகளில் (CDO) மூன்றில் ஒரு பங்கும், மற்றும் குறைந்த பிணையுள்ள சந்தைகளுடன் (Subprime Market) இணைக்கப்பட்ட அமெரிக்க குடியிருப்பு அடமான ஆதரவு பத்திரங்களின் அடிப்படையிலான (RMBS) பிற நிதி சாதனங்களும் வெளிச்சந்தைகளுக்கு, குறிப்பாக ஐரோப்பாவுக்கு சென்று விட்டதாக, OECD தெரிவித்தது.

OECD அறிக்கை மீது கருத்து தெரிவித்த Forbes இதழ் பின்வருமாறு கூறியது: "சென்ற ஆகஸ்டில் குறைந்த பிணையுள்ள சந்தைகளிலிருந்து வெளிவந்த நெருக்கடியால் இதுவரை பாதிப்புக்குள்ளாகாத இன்னும் கூடுதலான அபாயமுள்ள இன்னொரு பகுதி இருக்கிறது - அது பங்குகளை விட அபாயமான மற்றும் சிக்கலான நடவடிக்கைகள்- நகலாக்க திட்டங்களை அடித்தளமாக கொண்ட மூலதன உறுதிப்படுத்தப்பட்ட நிதி பத்திரங்களாகும்".

இந்த பத்திரங்கள் அடிப்படையிலான 1 டிரில்லியன் டாலர் பாதுகாப்பற்ற பங்கு சந்தை 2003க்கும் இந்த ஆண்டின் தொடக்கத்திற்கும் இடையில் அபிவிருத்தி பெற்றுள்ளதாக OECD தெரிவித்தது.

ஏராளமான சில்லறை வர்த்தக வங்கிகள் மற்றும் கட்டிட சங்கங்களால் வழங்கப்படும் சேமிப்பு பத்திரங்கள் பலவற்றிற்கு இந்த நிதி சாதனங்கள் தான் அடிப்படையாகும். இந்த மாறாத விகிதாச்சார கூட்டு காப்பீடு (CPPI) பத்திரங்களில் ஐரோப்பா தான் ஆதிக்கமுள்ள ஒரு சக்தியாக திகழ்ந்து வருகிறது.

OECD -இன் தோமஸ் வெய்ஸர் கூறும் போது தற்போதுள்ள பெரிய அபாயங்களில் ஒன்று பரந்த பொருளாதாரத்தில் முக்கியமான பங்கினை ஆற்றிய வங்கி மூலதன இழப்பால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படக் கூடும் என்பது தான். உலகின் மத்திய வங்கிகள் பெருமளவில் பணத்தினை முதலீடு செய்ய அவர் அழைப்பு விடுத்தார்.

நிதிச் சந்தைகளில் சென்ற கோடையின் நெருக்கடியை, "பெரும் தேக்கத்திற்கு பிந்தைய மிகப்பெரிய நிதி அதிர்ச்சி" என்று IMF குறிப்பிட்டது. உலக வங்கிகள் 1 டிரில்லியன் டாலர் நச்சுக் கடன்கள் கொண்ட ஒரு தடாகத்தை உருவாக்கியிருக்கின்றன, இது முந்தைய மதிப்பீடுகளில் கணித்திருந்த தொகையை விட இருமடங்காகும்.

இத்தகையதொரு விவரிப்பைக் கொண்டு பார்க்கும்போது, IMF இன் முடிவுகள் பழமைவாதம் உள்ளதாக இருக்கிறது. புஷ் நிர்வாகத்தின் பொருளாதார உந்துசக்தி திட்டம் மற்றும் வட்டி விகிதங்களில் பெருமளவு குறைப்புக்கு பின்னரும் கூட இந்த ஆண்டு அமெரிக்கா சுமார் 0.5 சதவீத வளர்ச்சியுடன் "மெதுவான தேக்கநிலைக்குள்" அடியெடுத்து வைக்கும் என்று இது கணித்துள்ளது. அடுத்த 12 மாதங்களில் ஒரு முழு-அளவிலான உலகளாவிய தேக்கநிலைக்கு நான்கில் ஒரு பங்கு வாய்ப்பிருப்பதாக இது எச்சரித்துள்ளது. சிறந்ததாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சி 3.7 சதவீதமளவுக்கு சரியும் என்றும் இது மதிப்பிட்டுள்ளது.

வீட்டு மதிப்புகள் 30 சதவீதம் மிகைப்படுத்தப்பட்ட மதிப்பு கொண்டிருப்பதாக கூறப்படும் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளின் வீட்டு விலை பணவீக்கமானது உலகளாவிய வீழ்ச்சியால் இன்னும் அபாயமுள்ளதாகும் என்று IMF குறிப்பாக எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் கட்டவிழ்ந்துள்ள பொருளாதார குழப்பங்களால் மிகவும் பாதிப்புக்குள்ளாக தக்கதாகவும் உலக நிதி சந்தைகளை மிகவும் கனமாக சார்ந்ததாகவுமான ஐரோப்பிய நாடாக இங்கிலாந்து நீண்டகாலமாக அறியப்பட்டு வந்துள்ளது. இங்கிலாந்தின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 2 சதவீதம், அடுத்த ஆண்டுக்கு 2.5 சதவீதம் என்று செய்திருந்த மதிப்பீட்டை கருவூலம் 2008 மற்றும் 2009 இரண்டு ஆண்டுகளுக்குமே 1.6 சதவீதம் என கீழ்நோக்கி திருத்தியுள்ளது. 1992ல் முடிந்த கடைசி தேக்க நிலைக்கு பின்னரான மோசமான நிகழ்வாக இது இருக்கும்.

Northern Rock வங்கியை தேசியமயமாக்கி பின் 50 பில்லியன் ஸ்டேர்லிங் பவுண்டுகளை சந்தைக்குள் திணித்த பின்னர், பாதுகாப்பான அரசாங்க பத்திரங்களை கொடுத்து திருப்பி செலுத்தாத வீட்டுக் கடன்களை எடுத்துக்கொள்வதில் அமெரிக்க மத்திய வங்கி கூட்டமைப்பை மிஞ்சும் விதமாக பிரவுண் அரசாங்கமும் இங்கிலாந்து வங்கியும் இன்னும் கூடுதலான பில்லியன்களை அபாயத்திற்குள்ளாக்க திட்டமிடுகின்றன.

இங்கிலாந்தில் வீட்டு விலைகள் சென்ற மாதத்தில் மட்டும் 2.5 சதவீதம் சரிந்திருக்கிறது, இந்த ஆண்டுக்குள் இது 10 சதவீதம் வரை சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தில் விலைகள் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கும் வீட்டு சொத்து முகவர்களின் எண்ணிக்கை ஆதாயமளித்துள்ளதாக கூறிய முகவர்களின் எண்ணிக்கையை விட 78.5 சதவீத புள்ளிகள் அதிகமாக இருந்தது, இது 1978க்கு பின்னர் மிகவும் ஒரு மோசமான சாதனையாகும் என்று பிரிட்டனின் Royal Institution of Charted Surveyors தெரிவிக்கிறது.

தனிநபர் மற்றும் பிணையற்ற கடன்களின் தடுமாறும் நிலைகளுக்கு கீழும் பிரிட்டன் சிக்கலுற்றுள்ளது.

இங்கிலாந்தின் மொத்த பிணையற்ற கடன் 1.3 டிரில்லியன் பவுண்டுகளாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த பிற பகுதிகளினுடையதை விடவும் அதிகமானதாகும். ஒரு ஆண்டுக்கு 78,000 மறுஉரிமை கொள்தல்களை கொண்டதாக இருந்த 1990களின் வீட்டுச் சந்தை நெருக்கடியை விடவும் நடப்பு நெருக்கடி மோசமானதல்ல என்ற கூற்றை Citywire க்கு எழுதும் லோர்னா போர்கே நிராகரித்துள்ளார், ஏனென்றால் வேலையில்லா திண்டாட்டம் குறைவாக இருக்கிறதென்கிறார். "90களின் ஆரம்பத்தில் 1987ம் ஆண்டின் கடன் சந்தை சரிவு மற்றும் ஏறியிருந்த பணவீக்கம் இவற்றால் உருவாகியிருந்த அதிகமான வேலையில்லா திண்டாட்டத்தால் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் அடமானக் கடன்களை செலுத்த முடியாதிருந்தது. அதே நிலை பழக்கமான ஒன்றாக தோன்றுகிறதா?" என்று அவர் குறிப்பிடுகிறார்.

கடன் அட்டை கடனானது 1990 இல் இருந்ததை விடவும் மிக அதிகமாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பிரிட்டனில் அடமான செலவுகள் மும்மடங்காகியிருப்பதாக தெரிவிக்கும் Mintel நிதி ஆய்வு நிறுவனம் நுகர்வோர் செலவினத்தில் 25 சதவீதத்தை இது ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கிறது, ஒரு தசாப்தத்திற்கு முன்பு இது 14 சதவீதமாகவே இருந்தது. கடன் மேலாண்மை நிறுவனமான TDX குழுமம் கடனால் சிரமப்படுவோரின் எண்ணிக்கை 2008 இல் இரட்டிப்பாகும் என்று மதிப்பிட்டுள்ளது. ஒரு மில்லியன் மக்கள் 25 பில்லியன் பவுண்டு அளவுக்கு பிணையற்ற கடன்களை கொண்டுள்ளனர், சராசரியாக ஒருவருக்கு 25,000 பவுண்டுகள் என்ற நிலையில். சுமார் 60 சதவீதம் கடன் அட்டைகள் மீதும், மற்றவை முக்கியமாக தனிநபர் கடன்கள் மீதும் இருக்கின்றன.

ஒரு நிதி மையமாக லண்டனின் பங்கு உலகளாவிய பொருளாதார சரிவு நிலையில் இருந்தான பெரும் மற்றும் ஒப்பீட்டளவில் உடனடியான தாக்கத்திற்கு வழிவகுப்பதாக இருக்கும். கடன் நெருக்கடியின் காரணமாக 40,000 லண்டன் நகர வேலைகள் இழப்பு ஏற்படலாம் என்று JP Morgan Chase ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர், இது பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வுக்கான மையத்தின் கணிப்பை விட இருமடங்காகும்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வெட்டுகளில் கடன் நெருக்கடியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதான ஐரோப்பிய வங்கி UBS இல் 900 வேலை இழப்புகளாகும். (இது அந்த வங்கியின் லண்டன் பணியாளர்கள் எண்ணிக்கையில் 10 சதவீதமாகும்) லண்டனில் உடனடியாக 450 வேலை இழப்புகள் நேரக் கூடும் என்று Merrill Lynch எச்சரித்துள்ளது.

வேலையில்லா திண்டாட்டத்தில் இருப்போரின் எண்ணிக்கை நடப்பு 1.6 மில்லியன் என்பதிலிருந்து அதிகரிக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் எழுந்திருக்கின்றன. மார்ச் மாதத்திற்குரிய வேலை இல்லாததாக கூறப்படுவோரின் எண்ணிக்கை 1200 ஆகக் குறைந்தது என்றாலும், முந்தைய மாதத்தின் 2,800 என்னும் சரிவு எண்ணிக்கையில் 600 அதிகரிக்குமாறு 2006ம் ஆண்டுக்கு பின்னர் முதல் திருத்தமாக திருத்தப்பட்டது.

யூரோவுக்கு எதிராக அனைத்து கால மிகக்குறைந்த மதிப்பை ஸ்டேர்லிங் தொடர்ந்து எட்டி வருகிறது, நடப்பில் இது 80 பென்ஸ்களுக்கும் அதிகமாக இருக்கிறது. வங்கிகள் மற்றும் கட்டிட சங்கங்கள் அதிக கடன்களை வழங்குவதை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக இங்கிலாந்து வங்கி தனது வட்டி விகிதத்தை 5 சதவீதமாகக் குறைத்திருக்கிறது.

ஐரோப்பாவின் பொருளாதார சக்திமையமான ஜேர்மனி, இத்தகையதொரு அபாயமான நிலையில் இருப்பதாக முதலில் தோன்றவில்லை. டாலருக்கு நிகராக யூரோவின் மதிப்பு பெருமளவில் உயர்ந்திருக்கும் போதிலும், ஜேர்மனியின் ஏற்றுமதிகள் தொடர்ந்து அதிகரித்தே வருகின்றன.

ஆனால் பிரச்சினைகள் எதிர்நோக்குவதன் தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றன. பவேரியன் ஸ்டேட் வங்கி (Bayern LB) அமெரிக்காவின் வீட்டு அடமானக் கடன் சந்தையுடனான தனது வர்த்தகங்கள் மூலம் 4.3 பில்லியன் யூரோக்களை இழந்ததும், Saxony LB மற்றும் West LB பல பில்லியன்களை இழந்ததும் ஒரு உதாரணம் தான். மத்திய அரசாங்கம் மற்றும் பல்வேறு ஜேர்மன் மாநில அரசாங்கங்களுக்கு சொந்தமான இந்த வங்கிகள், வரி கட்டுவோர் செலவில் 30 பில்லியன் யூரோக்களை செலவழித்து மீட்கப்பட வேண்டியதாய் இருக்கிறது.

Der Spiegel இதழின் கூற்றுப் படி, ஒரு பனிமலையின் உச்சிதான் இது. இது ஏப்ரல் 2 இல் எழுதியது, "இந்த நெருக்கடியின் முடிவு கண்ணுக்கு தெரியவில்லை: ஒரு ஆய்வின் படி (Ernst and Young வர்த்தக ஆய்வு குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டது) மொத்தமாக சுமார் 200 பில்லியன் யூரோக்கள் மறைவான கடன் தொகையை தங்கள் கணக்குகளில் இருந்து ஜேர்மன் வங்கிகள் மறைத்திருக்கின்றன.

இந்த வாரம் நான்கு ஜேர்மன் சிந்தனை குழுத் தலைவர்கள் இந்த ஆண்டு வளர்ச்சி விகிதத்தை அவர்கள் சென்ற அக்டோபரில் கணித்திருந்த 2.2 சதவீதம் என்பதிலிருந்து குறைத்து 1.8 சதவீதமாக திருத்தினர். அத்துடன் அடுத்த ஆண்டுக்கு இன்னும் குறைந்த வளர்ச்சி விகிதமாக 1.4 சதவீதத்தை அவர்கள் மதிப்பீடு செய்தனர். ஜேர்மன் அரசாங்கம் கூடுதலாக நம்பிக்கையின்றி இருக்கிறது, அது இந்த ஆண்டுக்கான வளர்ச்சி விகிதத்தை 1.7 சதவீதமாகவே மதிப்பீடு செய்திருக்கிறது.

கடன் நெருக்கடிகளின் மோசமான விளைவுகள் ஆறு மாதங்களுக்கு உணரப்படாது என்ற பல முன்னணி ஐரோப்பிய தொழில்துறையினரின் கருத்துக்களை ஏப்ரல் 14 அன்று Financial Times வெளியிட்டிருந்தது.

Siemens தலைமை நிர்வாகி பீட்டர் லோஷர், "இந்த தருணத்தில் எந்த தாக்கத்தையும் நான் காணவில்லை. ஆனால் அது வந்து கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனாறார். Linde தொழிற்துறை வாயுக்கள் குழுவின் தலைமை நிர்வாகி வொல்ஃப்காங் ரெய்ட்ஸ்ல "இது ஒரு கால இடைவெளியுடன் நிகழும்... அநேகமாக ஒரு வருடம் இடைவெளியில் நிகழும்... தசாப்தங்களில் மிகவும் பிரச்சனைக்குரியதொரு வர்த்தக சூழலில் நாம் இருக்கிறோம்" என கூறினார்.

ING Financial Markets இன் கரேத் வில்லியம்ஸ் கூறினார், "இந்த [நிதி] காலாண்டு பயங்கரமான ஒன்றாக இருக்கப் போகிறது. ஆனால் மிகவும் மோசமானது நான்காவது காலாண்டில் வர இருக்கிறது". Morgan Stanley இன் டூன் டிராய்ஸ்மா ஆண்டு வருவாயில் 16 சதவீத சரிவு இருக்கும் என்றும் "ஐரோப்பாவில் வருவாய் தேக்கநிலையும்" இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறார்.

ஸ்திரத்தன்மை மற்றும் செலவின இலக்கின் அடிப்படையிலான நிதிஅமைப்பை கொண்ட ஜேர்மனியும் ஐரோப்பாவும் குறிப்பாக பிடி கொடுக்காத பணவீக்கத்தின் தாக்கம் குறித்து அச்சமுற்றுள்ளதுடன், பொருளாதாரத்துக்குள் அமெரிக்க மத்திய வங்கி கூட்டமைப்பு பணத்தை செயற்கையாக வாரியிறைப்பது குறித்து கோபமுற்றுள்ளன.

Der Spiegel இல் வந்த "பென் பெர்னான்கேயின் மடைத்தனம்" என்ற தலைப்பிலான ஒரு கட்டுரை இந்த பதட்டங்களுக்கு முழுமையான வடிகாலை அளித்தது. மத்திய வங்கி கூட்டமைப்பின் முன்னாள் மற்றும் நடப்பு தலைவர்களான அலன் க்ரீன்ஸ்பான் மற்றும் பென் பெர்னான்கே ஆகியோரை சீக்ஃப்ரெட் மற்றும் ராயுடன் ஒப்பிட்ட இந்த கட்டுரை "அமைப்புக்குள் எளிய கடன்களை செலுத்தும் இந்த கொள்கையை" "நெருக்கடியை மோசமாக்கும் ஒரு பைத்தியக்காரத்தனமான கொள்கை" என்று வர்ணித்தது.... நோக்கமானது நுகர்வோர் செலவினத்திற்கு தொடர்ந்து நிதி ஆதாரமளிப்பதாகும், தேசப்பற்று காரணங்களால் அதனை மேலும் தூண்டி விடுவதுமாகும். இந்த கொள்கைக்கு ஒரு வார்த்தை இருக்கிறது-பைத்தியக்காரத்தனம்".

வலிமையான யூரோ ஐரோப்பிய பொருளாதாரத்திற்கு இதுவரை பெரிய அளவிலான சேதாரம் எதனையும் ஏற்படுத்தவில்லை, குறிப்பாக இதன் காரணம் இது டாலரில் விலை கொண்ட எண்ணெய் இறக்குமதியின் செலவை குறைத்துள்ளது தான். ஆனால் டாலர் விற்பனையை சார்ந்துள்ள Airbus போன்ற நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன, "வலி உச்சநிலை" இறுதியாக உடைந்து விடும்.

தொலைநோக்கில், வட்டி விகிதங்களை நிலையாகப் பராமரித்து வரும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) கொள்கை இடையிலான வேறுபாடு உலக பொருளாதாரத்தை நிலையற்றதாகவே செய்யும். டாலரின் சரிவானது ஐரோப்பாவிலும் மற்ற எங்கிலும் கடனளித்துள்ள அமெரிக்க கடன் வழங்குநர்களை தண்டிக்கும் விதமாக கடன்களை திரும்ப செலுத்தியும் மதிப்பில்லாமல் செய்து விடுகிறது.

பணவீக்கம் என்பது ஐரோப்பாவுக்கான ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. இது ஐரோப்பிய மண்டலத்தில் சாதனை அளவாக 3.6 சதவீதமாக இருக்கிறது. ஐரோப்பிய மத்திய வங்கி தனது முக்கிய வளர்ச்சி விகிதக் கொள்கையை 4 சதவீதம் எனக் கொண்டிருக்கிறது, ஆனால் பணவீக்க வளர்ச்சி இந்த விகிதத்தை பராமரிக்க இயலாததாக்கி விடும் என்று அஞ்சுகிறது. உணவு மற்றும் எரிசக்தி விலை உயர்வுகள் மட்டும் மார்ச்சின் பணவீக்க எண்ணிக்கைகளுக்கு 1.6 சதவீத புள்ளிகளை சேர்த்திருக்கிறது.

பிராங்க்பேர்டில் Commerz Bank இன் தலைமை பொருளாதார நிபுணர் ஜோர்க் கிரேமர் International Herald Tribune இதழிடம் கூறும்போது, "நடப்பில் பணவீக்கம் மீது அமெரிக்க மத்திய வங்கி கூட்டமைப்பு அதிக ஆர்வமின்றி இருக்கிறது. அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது: தேக்கநிலை." ஆனால் "இந்த நெருக்கடி ஒரு நாள் தீரும்" என்று எச்சரித்த அவர் பணவீக்கத்திற்கு எதிரான உடனடி நடவடிக்கை தேவை என தெரிவித்தார்.

அமெரிக்க மத்திய வங்கி கூட்டமைப்பின் இலக்கு அளவு நடப்பில் 2.25 சதவீதம் என இருக்கிறது, ஒரு கூடுதலான வெட்டும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூனுக்குள்ளாக அமெரிக்க மத்திய வங்கி கூட்டமைப்பு நிதிவழங்கல் விகிதங்களை 1.25 சதவீதமாக பெர்னான்கே குறைக்க எதிர்பார்ப்பதாக கிரேமர் கூறினார்.

"பணவீக்கத்திற்கு எதிரான போர்" என்பதே உழைக்கும் வர்க்கத்தின் சம்பளங்களை குறைப்பதான நடவடிக்கைகளின் ஒரு சங்கேத வார்த்தை தான். ஜேர்மனிய அரசாங்கமும் வங்கி அதிகாரிகளும் இரண்டு வருடங்களில் சாதிக்கப்பட்டதும் அதிகாரபூர்வமான பணவீக்க விகிதத்துடன் நிகராக நிற்க சிரமப்படுவதுமான ஜேர்மனியின் வேதியியல் துறையின் சராசரியான 8 சதவீத ஒப்பந்தம் உள்பட சமீபத்திய உயர் சம்பள ஒதுக்கீடுகள் பராமரிக்க இயலாததாக இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.

பிரிட்டனில், அரசுத் துறைகள் முழுவதிலும் 2.5 சதவீத சம்பள வரம்பு நிலையை பிரதமர் கோர்டன் பிரவுண் அமலாக்கியிருக்கிறார். இது ஏற்கனவே நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தினைத் தூண்டியுள்ளது.

பிரான்சில் மூர்க்கமான தாக்குதல்களுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாட்டின் பொருளாதார செயல்திறன் குறித்து ஆளும் வட்டாரங்களுக்குள்ளான அதிருப்தி மிகவும் கடுமையானதாக இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான அதிக்காரபூர்வ மதிப்பீட்டினை முந்தைய மதிப்பீடான "சுமார் 2 சதவீதம்" என்பதில் இருந்து 1.7-2.0 சதவீதமாக பிரதமர் ஃபிரான்சுவா ஃபிய்யோன் குறைத்துள்ளார். நிக்கோலா சார்க்கோசியின் வலதுசாரி நிர்வாகமானது 6-7 பில்லியன் யூரோக்கள் அளவுக்கு பொதுச் செலவின குறைப்பினை 2009-2011 வரையிலான காலத்திற்கு அறிவித்துள்ளது. ஆனால் 2007ல் பொதுப் பற்றாக்குறை 1.2 டிரில்லியன் யூரோக்கள் என்பதை அடையும்போது, இன்னும் பெரிதான தாக்குதல்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.