World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Tensions between France and Germany intensify over foreign and economic policy

பிரான்ஸ் ஜேர்மனிக்கு இடையேயான வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கை மீதான பதட்டங்கள் தீவிரம் அடைகின்றன

By Francis Dubois
13 March 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஐரோப்பிய ஒன்றியத்தின் இரு பெரும் பொருளாதாரங்களான ஜேர்மனி, பிரான்ஸ் --முன்பு "ஐரோப்பாவின் இயந்திரம் என்று அழைக்கப்பட்ட பொதுப் பொருளாதார கொள்கைகளை கொண்டிருந்தவை-- இப்பொழுது கடந்த சில மாதங்களாக அழுத்தங்களை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த அழுத்தங்கள் இன்னும் கூடுதலான முறையில் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி அதிகாரத்தை எடுத்துக் கொண்ட பின் பார்வைக்கு வந்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நிலைமை மோதலுக்கு வந்தது; இரு நீண்ட காலமாக திட்டமிடப்பட்டிருந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் இரத்து செய்யப்பட்டன; ஒன்று பிரெஞ்சு ஜனாதிபதிக்கும் ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெலுக்கும் இடையே நடப்பதாக இருந்தது, மற்றொன்று இரு நாடுகளின் நிதி மந்திரிகளுக்கும் இடையே நடப்பதாக இருந்தது. ஜேர்மனிய நிதி மந்திரி Peer Steinruck க்கும் பிரெஞ்சு பொருளாதார மந்திரி Christine Legarde க்கும் இடையே நடப்பதாக இருந்த கூட்டத்தை பிரான்ஸ் இரத்து செய்தது ஜேர்மானிய செய்தி ஊடகத்தால் ஒரு அவமதிப்பு என்று கருதப்பட்டது. மேற்கு ஐரோப்பா முழுவதும் ஏராளமான கருத்துக்கள் வெளிவருவதற்கும் இது வழிவகுத்தது.

இந்த அழுத்தங்களுக்கு இடையே இரு அரசாங்கத் தலைவர்களும் ஒன்றாக வந்து கடந்த வாரம் ஹனோவரில் Cebit 2008 ல் அதிகம் விளம்பரப்படுத்தப்பட்ட அரசியல் விவாதத்திற்கு கூடினார்கள். அங்கு அவர்கள் ஒற்றுமையாக இருப்பது போல், ஒருவரை ஒருவர் தட்டிக் கொடுத்து காட்டிக் கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பெரும் பூசல்கள் பற்றி "ஒற்றுமையான நிலைப்பாடு" பற்றி கருத்துத் தெரிவித்தனர்: அதாவது சார்க்கோசியினால் சொந்தமாக தயாரிக்கப்பட்டு, ஜேர்மனிய அரசாங்கத்தில் தீவிரமாக எதிர்க்கப்படும் "மத்தியதரை கடல் ஒன்றியம்" என்பது பற்றியதாகும்.

இக்கூட்டத்தில் சார்க்கோசி ஜேர்மனி உட்பட அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் "பார்வையாளர்" என்ற அந்தஸ்திற்கு பதிலாக முழுத் தகுதியுடன் அனுமதிக்கப்படுவர் என்று ஒப்புக் கொண்டவேளை, மேர்க்கெல் மத்தியதரைக் கடல் ஒன்றியத்திற்கு தன்னுடைய எதிர்ப்பைக் கைவிட்டார். ஆனால், மறுநாள் ஹனோவர் உடன்படிக்கை பற்றி ஒரு கேள்விக் குறி பிரெஞ்சு பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோனால் எழுப்பப்பட்டது. ஜேர்மனிக்கு பார்வையாளர் அந்தஸ்து தகுதியைக் கொடுக்க பிரான்ஸ் விருப்புடன் இருப்பதாக அவர் ஒரு வானொலிப் பேட்டியில் கூறினார், இவ்வாறு சம்மதிக்கப்பட்டிருந்தது மாற்றப்பட்டது. ஜேர்மனிய அரசாங்கம் பிய்யோன் உடன்பாடு பற்றிக் கூறிய கருத்தை உடனே மறுத்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை ஜூலை 1ம் தேதி பிரான்ஸ் ஏற்கவுள்ளது. ஜேர்மனிய பொருளாதார மற்றும் அரசியல் நடைமுறையில் பரந்த முறையில் பிரெஞ்சு அரசாங்கம் தன்னுடைய நிலையை பயன்படுத்தி அதன் தேசிய செயல்பாட்டை வளர்க்கக்கூடும், ஜேர்மனியின் இழப்பில் ஐரோப்பாவில் தன்னுடைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை உயர்த்தும் என்ற பரந்த வகையிலான சந்தேகங்கள் உள்ளன.

அதிக விரோதப் போக்கு காட்டும் வகையில் உறவு வந்துவிட்ட நிலையில், இரு நாடுகளின் அதிகாரிகளுக்கும் இடையே தூற்றுதலும் இரைந்து வந்து விட்ட நிலையில், செய்தி ஊடகத் தகவல்கள் இப்பொழுது பிரான்ஸ்-ஜேர்மனி இரண்டும் ஒன்றாக செயல்பட்டுவந்தது இப்பொழுது நடைபெறவில்லை என்று வெளிப்படையாக தெரிவிக்கின்றன.

பேர்லினுக்கும் பாரிஸுக்கும் இடையே ஒலிக்கும் குரல் கடுமையாகப் போய்விட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மோசமாகிவரும் அரசியல் சூழ்நிலை பொதுவாக ஜேர்மனிய அதிபர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இவர்களுக்கிடையிலான "பாணி" பற்றிய வேறுபாடுகள் மீதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் மேர்க்கெலுக்கும் சார்க்கோசிக்கும் இடையே சந்தேகத்திற்கு இடமில்லாமல் உள்ள விரோதப்போக்கு உடைய உறவு மாறுபட்ட பொதுநிலைச் சூழலில் ஒரு சிறிய பங்கைத்தான் கொண்டிருக்கும். மாறாக, இந்த பதட்டங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார, வெளியுறவுக் கொள்கைகளில் இருக்கும் பூசல்களைத்தான் பிரதிபலிக்கின்றன.

மத்தியதரைப் பகுதி ஒன்றியத்திற்கான திட்டம்

மத்தியதரை பகுதி ஒன்றியத்திற்கான திட்டம் கடந்த ஆண்டு மே மாதம் சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே அறிவிக்கப்பட்டது; அப்பொழுதில் இருந்து இது தொடர்ச்சியாக உருப்பெற்று வருகிறது. இது ஒரு புதிய சக்திவாய்ந்த முகாமை தோற்றுவிக்கும் முயற்சியாகும்; தெற்கு ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு இவற்றில் உள்ள நாடுகளை தொலைநோக்கு உடைய பொருளாதார விளைவுகளைக் கொண்டு இணைக்கும் வகையிலான முயற்சி ஆகும்.

மத்தியதரை பகுதி ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு விரிவாக்கத்திற்கு பிரெஞ்சு முதலாளித்துவத்தின் பதிலளிப்பாக இருக்கிறது. இந்த விரிவாக்கமும் ஜேர்மனிய மறு ஐக்கியத்துடன் ஐரோப்பாவில் பிரான்சின் செலவில் ஜேர்மனியின் செல்வாக்கை குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்தியுள்ளன. கிழக்கில், ஜேர்மனிய முதலாளித்துவத்தின் மரபார்ந்த செல்வாக்கு மண்டலத்தில் மாற்று கனம் கொடுக்கும் வகையில் பிரெஞ்சு ஜனாதிபதி ஒரு அமைப்பை ஏற்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் பிரான்சிற்கு ஆதரவாக அதிகார மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறார்.

பிரெஞ்சு ஜனாதிபதி தன்னுடைய திட்டத்தை முடுக்கி விடவேண்டும் என்பது பற்றி பிரெஞ்சு அரசாங்கம் வெளிப்படையான உறுதியை திட்டங்களை செயல்படுத்துவது மூலமாக வெளியிட்டுள்ளது. 1995ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் துவக்க முயற்சியால் ஏற்பட்ட "பார்சிலோனா வழிவகையை" இது தளமாகக் கொண்டுள்ளது. அது மத்தியதரைக்கடல் பகுதியில் ஸ்பெயினின் பெரிய நகரம் ஆகும்; இது ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் வட ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு அண்டை நாடுகள் இவற்றிற்கு இடையே "கூடுதலான ஒத்துழைப்பை" நிறுவும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. உத்தியோகபூர்வமாக, பிரான்ஸ் பார்சிலோனா வழிவகைக்கு "புத்துயிர்" கொடுக்க விரும்புகிறது; ஏனெனில் இது முடங்கி நின்றுவிட்டதாக அது கருதுகிறது.

ஆனால் 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் மத்தியதரை நாடுகள் ஆகியவற்றிற்கு இடையே ஒத்துழைப்பு வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் நேரத்தில், சார்க்கோசியின் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெயரில் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, கிரேக்கம் மற்றும் வட ஆப்பிரக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு என்ற பெயரில் வரும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலைமையில் பிரான்ஸ்தான் முக்கிய பாத்திரத்தை வகிக்கும்.

இந்த விருப்பம் பிரெஞ்சு ஜனமாதிபதியால் கடந்த ஆண்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாதங்களுக்குள்ளேயே தெளிவாக அறிவிக்கப்பட்டது. லிபியாவுடன் நெருக்கமான உறவுகளை ஸ்தாபித்தார், அதில் முன்னோடியில்லாத வகையில் பிரான்ஸிற்கு அதன் தலைவர் முவம்மர் கடாபி உத்தியோகபூர்வ அரசாங்க முறைப் பயணத்தை மேற்கொள்ளுவதும் இருந்தது. சார்க்கோசி மொரோக்கோ மற்றும் அல்ஜீரியாவிற்கும் பயணித்து பல தொழில்துறை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

இந்த திட்டம் பிரெஞ்சு வெளியுறவுக் கொள்கைக்கு மையத்தானம் ஆகும்; இதற்கு பிரெஞ்சு முதலாளித்துவத்தின் பல பிரிவுகளுடைய ஆதரவும் உள்ளது. மத்தியதரை பகுதியிலும் அதைச் சுற்றியும் பிரெஞ்சு செல்வாக்கை அதிகரிப்பது என்பது பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு முக்கியமான பிரச்சினை என்பதோடு பிரான்சை ஒரு பிராந்திய சக்தியாக ஆக்குவதற்கும், தக்க வைப்பதற்கும் ஒரே வழியும் ஆகும். துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் முழு உறுப்பான்மை கொடுப்பதற்கு பதிலாக அதனை இறுக்கமில்லாத பொருளாதார மற்றும் அரசியல் கூட்டில் இணைப்பதற்கான ஒரு முயற்சியாக பரந்த அளவில் பார்க்கப்பட்டது.

1995-97TM Chirac-Juppe அரசாங்கத்தில் வெளியுறவு மந்திரியாக இருந்த, பிரெஞ்சு இராஜதந்திர வட்டங்களில் செல்வாக்கு நிறைந்தவருமான Herve de Charette, மத்தியதரை பகுதியின் மூலோபாய முக்கியத்துவம் பிரான்சிற்கு எப்படிச் சிறந்தது என்பதை Le Monde இல் விளக்கியுள்ளார். "மத்தியதரைக் கடலின் இரு கரைகளையும் நெருக்கமாகக் கொண்டுவருதல் என்பது பிரான்சின் செல்வாக்கு, உலகில் ஐரோப்பாவின் செல்வாக்கு பற்றிய தலையாய பிரச்சினை ஆகும்." என De Charette கூறியுள்ளார்.

திட்டத்திற்கு ஜேர்மனிய எதிர்ப்பு பற்றி De Charrette கடுமையாகக் குறை கூறினார். "ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இத்தாலி, ஸ்பெயின் ஆகியவற்றின் ஆதரவு இருந்த போதிலும்கூட, இத்திடடம் ஐரோப்பியக் குழு மற்றும் ஜேர்மனியிடம் இருந்து வலுவான எதிர்ப்பைச் சந்தித்துள்ளது; இதற்கு உட்குறிப்பான ஆதரவு பெரிய பிரித்தானியா போன்ற மற்ற நாடுகளில் இருந்து வருகிறது; தங்களை அம்பலப்படுத்த முடியாதிருப்பதில் அவை மிக மகிழ்ச்சியாக உள்ளன."

"ஐரோப்பிய-மத்தியதரைக்கடல் திட்டத்தை மறுபடியும் துவக்குதல் என்பது பார்சிலோனா வழிவகையின் வடிவமைப்பிற்குள் பிரத்தியேகமாக அடையப்பட முடியாது; ஏனெனில் ஐரோப்பாவின் அரசியல் விருப்பம் இல்லை; அதன் மைய ஈர்ப்புத்தானம் 1990 களில் இருந்து கிழக்குப் புறம் திரும்பிவிட்டது; விரிவாக்கம் அதிகாமாகவும் தேவையான தீரத் தன்மை உள்ளது என்பதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இக்காலக்கட்டதில் நாம் தெற்கில் இருந்து கவனத்தை அகற்றிக் கொண்டுவிட்டோம்; 2000 மற்றும் 2006க்கு இடையே ஐரோப்பிய ஒன்றியம் கிட்டத்தட்ட 5 பில்லியன் யூரோக்களை தெற்கிற்கும் 50 பில்லியன்களை கிழக்கிற்கும் ஒதுக்கியுள்ளது" என்று De Charette வலியுறுத்திப் பேசினார்.

பேரளவிலான ஆற்றல் வளங்களுடன், மூலப்பொருள் இருப்புக்கள், குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு, சந்தைகள் பெருகும் திறன் இவற்றைத்தவிர வெடிப்புத் தன்மை நிறைந்த அரசியல் சமூகப் பூசல்களுடன் 25 நாடுகளை உள்ளடக்கிய மத்தியதரைக் கடல் பகுதி மீது தன்னுடைய செல்வாக்கை விரிவாக்குவதற்காக சார்க்கோசி அரசாங்கம் அமெரிக்காவின் ஆதரவை நாடியுள்ளது. இது பாரிசிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே சாக்கோசியால் முன்னெடுக்கப்பட்ட சமரச நல்லிணக்கத்தை குறிப்பட்டி அளவுக்கு விளக்குகின்றது.

மத்தியதரைக்கடல் ஒன்றியத்திற்கான திட்டத்தை எதிர்க்கும் வகையில் ஜேர்மனிய அரசாங்கம் சார்க்கோசியின் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டும் என்றும் அது ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர செயல்பாட்டில் இணைக்கப்பட வேண்டும் என்றும் முயன்று வருகிறது. ஹனோவரில் சார்க்கோசி மெர்க்கலுடன் உடன்பாடு கொள்ள வேண்டியது ஆயிற்று; ஏனெனில் ஜேர்மனிய அரசாங்கம் பிரான்ஸ் தலைமை பெற்றிருக்கும் காலத்தில் அந்த திட்டத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடும்.

முதலில் சார்க்கோசி ஜூலை 13ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புநாடுகள், மத்தியதரைப் பகுதி எல்லையில் இருக்கும், ஐந்து வட ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் சிரியா லெபனோன், இஸ்ரேல் மற்றும் துருக்கி ஆகியவற்றை சம்பந்தப்படுத்தி உச்சிமாநாடு ஒன்றை உத்தியோகபூர்வமாக திட்டமிட்டிருந்தார். ஜூலை 14ல் மட்டுமே, பிரெஞ்சு தேசிய விடுமுறைநாளில், மற்றைய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு அரசுகளுக்கு அது அளிக்கப்பட இருந்தது.

பாதுகாப்பு, பொருளாதாரக் கொள்கைகளில் பூசல்கள்

பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கும் இடையிலான பூசல்கள் ஐரோப்பிய பாதுகாப்புக் கொள்கை, ஐரோப்பிய மத்திய வங்கியின் பங்கு, பொருளாதாரக் கொள்கைகள் இன்னும் பல பிரச்சினைகள் மீதாக கூட அபிவிருத்தி அடைந்துள்ளன.

ஐரோப்பியப் பாதுகாப்புக் கொள்கை பற்றிய வேறுபாடுகள் கடந்த ஆண்டு இறுதியிலேயே வெளியாயின; அப்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தின் சக்தி (EUFOR) பணி, கிழக்கு சாட் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு ஆகியவற்றில் நிறுவப்படுதல் பற்றி பிரச்சினைகள் எழுந்தன. EU உறுப்பினர்கள் இடையே பிரான்ஸ் EUFOR பணி வேண்டும் என்று ஆணித்தரமாக கூறுகிறு, இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவின் கீழ் ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் உத்தரவின் பேரில் நடைபெற்று வந்த பணியாகும்.

இப்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைதி காக்கும் படைகள் 3,700 மத்திய ஆபிரிக்க பகுதிக்கு அனுப்பப்படும் துருப்புக்களில் 2,100 ஐ பிரான்ஸ் பங்களிப்பதாகவும் ஜேர்மனி ஒரு வீரரை கூட அனுப்பமறுப்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். ஜேர்மனிய வர்ணனயாளர்கள் பணியின் உண்மையான நோக்கம் பற்றி சந்தேகங்களை எழுப்பி, அப்பகுதியில் பிரெஞ்சு நலன்கள் பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பிய பணிக்குழு சாட்டிற்கு அனுப்பப்படுவது பிரான்ஸ் தன்னுடைய ஆதரவாளரான Idriss Deby ஐக் காக்க என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே EUFOR பாத்திரம் மற்றும் ஏற்கனவே சாட்டில் இருக்கும் பிரான்சின் 1,450 துருப்புக்களின் பங்கு பற்றிய கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பொருளாதார கொள்கையை பொறுத்தவரையில், ஐரோப்பிய உறுதிப்பாட்டு உடன்படிக்கையில் அளவுகோல்களை (பட்ஜேட் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3 சதவீதத்திற்குள் வைத்திருந்தல்) பற்றி பிரான்ஸ் தன்னுடைய இயலாமையை வலியுறுத்தியுள்ளது; மேலும் அது இந்த அரசாங்கப் பற்றாக்குறை குறைப்பு ஓராண்டிற்கு தள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஜேர்மனி இதை எதிர்க்கிறது. கடந்த ஆண்டு ஜூலை 9ம் தேதி இது ஜேர்மனிய நிதி மந்திரி Peer Steinbruck க்கும் சார்க்கோசிக்கும் இடையே Eurogroupe கூட்டத்தில் கடுமையான விவாதத்திற்கு வழிவகுத்தது. மாஸ்ட்ரிக்ட் அளவு கோல்களுக்கு உட்படாமல் இருப்பதற்காக பிரெஞ்சு ஜனாதிபதியை ஸ்டீன்ப்ரக் கடிந்து கொண்டார்.

பிரெஞ்சு ஏற்றுமதிகள் வலுவான யூரோவால் பாதிப்பிற்கு உட்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் பெரும் வணிக பற்றாக்குறையையும் வளர்த்துள்ள நிலையில், ஜேர்மனி நல்ல முறையில் தன் செயற்பாடுகளை நிர்வகித்து ஐரோப்பாவின் ஏற்றமதி நாடுகளுள் முதலாவது இடத்தை பல ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டு வருகிறது. 2007ல் ஜேர்மனியின் வணிக உபரி சேமிப்பு 198 பில்லியன் யூரோக்கள் என்று இருந்தது; ஆனால் பிரான்ஸ் கிட்டத்தட்ட 40 பில்லியன் யூரோக்கள் வணிகப் பற்றாக்குறையை கொண்டிருந்தது; இது அதன் 2006 நிலைமையையும் விடக் கணிசமாக கூடுதல் ஆகும். பெரும்பாலான ஜேர்மனிய ஏற்றுமதிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்லுகின்றன; குறிப்பாக பிரான்ஸ் மற்றும் இத்தாலியை ஒப்பிடும்போது ஜேர்மனிய நிறுவனங்கள் ஒரு சிறந்த போட்டித் தன்மையை கொண்டுள்ளன.

பல ஐரோப்பிய நாடுகளைப் போலவே ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) தன்னுடைய வட்டி விகிதத்தை குறைத்து ஐரோப்பிய நாணயத்தின் மதிப்பையும் குறைக்க வேண்டும் என்று பிரெஞ்சு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இத்தகைய நடவடிகைக்கு ஜேர்மனிய அரசாங்கம் கடும் எதிர்ப்புக் காட்டுவதுடன் ECB சுதந்திரமாக இயங்கவேண்டும், அதாவது இருக்கும் நிதிய கொள்கைகளை மாற்றுதல் பற்றி பிற உறுப்பு நாடுகள் தலையிடுவது தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. ECB தலைவர் Claude Trichet ஐ உயர் வட்டி வீத கொள்கையை தக்க வைத்துக் கொண்டிருப்பது பற்றி பாரிஸ் பல முறை குறைகூறியுள்ளது.

ஒரு தடையற்ற சந்தைமுறைப் போக்கைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, பிரெஞ்சு அரசாங்கம் சமீப மாதங்களில் பல முறையும் மரபார்ந்த வகையில் நடந்து கொண்டு வருகிறது; அதாவது பொருளாதாரத்தில் அரசாங்கக் குறுக்கீட்டைக் கொண்டுள்ளது. இது ஐரோப்பிய அல்லது பூகோள அடிப்படையைக் காட்டிலும் ஒரு தேசிய அளவில் பெரிய தொழில்துறை கூட்டமைப்பை தோற்றுவிக்க முயன்றுள்ளது (சமீபத்தில் Suez, Gaz de France இரண்டும் இணைக்கப்பட்டன); இதன் விளைவாக ஜேர்மனிய பெருநிறுவனக் கூட்டமைப்புக்கள் பிரான்சில் வேரூன்ற முடியவில்லை. இத்தகைய நடவடிக்கைகள் ஐரோப்பிய நிறுவனங்கள் பொது மக்களை ஈர்ப்பதிலும் உலகெங்கிலும் இருக்கும் தங்கள் போட்டியாளர்களுடன், குறிப்பாக அமெரிக்க நிறுவனங்களுடன், போட்டி போட முடியாமல் தடுக்கின்றன. நாட்டில் அவர்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதை அரசு தடுத்து விடும் என்ற அச்சத்தால். மேலும் முதலீட்டாளர்கள் பிரான்சிற்கு வருவதில் ஊக்கம் இழக்கின்றனர்.

பிரான்சின் அரசியல் வாராந்திரப் பத்திரிகையான Nouvel Observateur குறிப்பிட்டுள்ளதாவது: "அரசாங்க ஆதரவு பெற்ற பாதுகாப்பு முறை (பிரான்சில்), உலகந்தழுவிய முறை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்படுவதுடன் மோதல் கொள்ள வைக்கிறது. இதன் தலையீட்டு தன்மை பற்றியும் எந்த விதத்திலும் தேசிய பெருநிறுவனங்களைத்தான் வளர்க்க வேண்டும் என்ற இந்நாட்டின் கருத்து பற்றியும் என்ன கூற முடியும்? அதே போல் பிரெஞ்சு ஆல்ஸ்டாம் மற்றும் சானோபி (Alstom and Sanofi) ஆகியவை சீமன்ஸ், அவென்டிஸ் உடைய வட்டச் சுற்றுக்குள் வைக்கப்பட வேண்டும் என்பது பற்றிய சக்திகளின் உறவு பற்றி என்ன கூறுவது?

முன்பு நிதி மந்திரி என்ற முறையில், சார்க்கோசி பல முறையும் ஆல்ஸ்டாம் அறக்கட்டளையை நிதிய திவால்தன்மை ஆகாமல் பல முறையும் தலையிட்டுக் காப்பாற்றியுள்ளார்; அந்த நடவடிக்கையே ஜேர்மனிய அரசாங்கத்தால் அப்பொழுது குறைகூறலுக்கு உட்பட்டது. பிரெஞ்சு தொழில் துறை கொள்கைக்கு அங்கேலா மேர்கெலின் அரசாங்கம் பிரிட்டனுடன் நெருக்கமாக ஒத்துழைக்கும் விதத்தில் விடையிறுப்பைக் கொடுத்துள்ளது.

ஐரோப்பிய ஆற்றல் சந்தை திறக்கப்பட்ட பின்னர் ஐரோப்பாவில் பெரும் ஆற்றல் அளிப்பவர்களுக்கும் குறிப்பாக இரு நாடுகளிலும் உள்ள ஆற்றல் அளிப்பாளர்களுக்கும் இடையில் ஒரு பலமான பொருளாதாரப் போட்டி அபிவிருத்தி அடைந்துள்ளது. ஜேர்மனிய எரிசக்தி ஆற்றல் அறக்கட்டளை RWE சமீபத்தில் பிரெஞ்சு GDE உடன் வரவிருக்கும் எரிவாயுக் குழாய்த்திட்டம் பற்றி மோதலில் உள்ளது. இந்தக் குழாய்த்திட்டம் Nabucco காஸ்பியன் கடல் பகுதியில் இருந்து எரிவாயுவை ஐரோப்பாவிற்கு கொண்டுவரும் திட்டமாகும். சமீபத்தில் துருக்கிய அரசாங்கம் GDF க்குப் பதிலாக RAW ஐ இத்திட்டத்தில் சேர்க்க விரும்பியது. GDF உடனே ஒரு போட்டி குழாய் திட்டத்தில் சேர இருப்பதாக அச்சுறுத்தியது; அப்போட்டி அமைப்பு ரஷ்ய நிறுவனமான Gasprom ஆல் அமைக்கப்பட உள்ளது.

ஐரோப்பிய பொது விவசாயக் கொள்கை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி திட்டங்களை பிரான்ஸ் உறுதியற்ற அரசாங்கங்கள் இருக்கும் நாடுகளுக்கு பிரான்ஸ் விற்பனை செய்தல் ஆகியவை குறித்தும் பூசல்கள் உள்ளன.

ஐரோப்பிய ஒற்றுமையின் இரு மரபார்ந்த தூண்களுக்கு இடையே உள்ள பதட்டங்கள் ஐரோப்பா முழுவதிலும் மேலாதிக்கம் செய்யத் தொடங்கியுள்ளன. பிரிட்டிஷ் செய்தி ஊடகம் பிரான்ஸ்-ஜேர்மனிக்கு இடையேயான பூசலை ஆர்வத்துடன் கவனித்து வருகிறது. ஜேர்மனிக்கும் பிரான்ஸுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இதில் உள்ளது என்று பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கம் உண்மையில் உணர்கிறது மற்றும் ஜேர்மன் -பிரெஞ்சு கூட்டை பிளக்கலாம் --இதுதான் பிரிட்டிஷ் வெளியுறவுக் கொள்கையின் நீண்ட கால நோக்கம்-- என்று அது நினைக்கிறது.