World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்ா : பிரான்ஸ்


New French labour law attacks workers' rights

பிரெஞ்சு புதிய தொழில் சட்டம் தொழிலாளர் உரிமைகள் மீது தாக்குதல் நடத்துகிறது

By Françoise Thull
2 May 2008

Use this version to print | Send this link by email | Email the author

மரபுரீதியாக தொழிலாளர்களின் போராட்டங்களுக்கென அர்ப்பணிக்கப்பட்ட தினமான மே 1 அன்று, பிரெஞ்சு தொழிலாளர்களின் உரிமைகளின் மீது அடிப்படையாக தாக்குதல் நடத்தும் ஒரு புதிய தொழில் சட்டம் (Code du Travail) அமலுக்கு வந்துள்ளது.

உத்தியோகபூர்வமாக, இந்த புதிய சட்டம் வெறுமனே முந்தைய தொழில் சட்டத்தின் "மறு வேலைப்பாடு" தான் - அதாவது தனித்தனியாக இருக்கும் ஏராளமான சட்டங்களின் உள்ளடக்கத்தை மாற்றாத சுருக்கமும் எளிமைப்படுத்தலும் தான். உண்மையில், ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் அரசாங்கம் இந்த "மறுவேலைப்பாட்டினை" முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான உறவினை அடிப்படையாக மாற்றுவதற்கு பயன்படுத்தியுள்ளது.

பிரான்சின் தொழில் சட்டங்களும் விதிகளும் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான உறவுகளை கட்டுப்படுத்துகிறது, வேலையின் அனைத்து முக்கிய அம்சங்களையும் தீர்மானிக்கிறது. தொழிலாளர் சட்டத்தின் வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்திற்கு செல்கிறது, அதன் இன்றைய வடிவமானது 1920களிலேயே உருவாக்கப்பட்டு விட்டது. பல தசாப்தங்களாக தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தின் விளைவாக விளைந்த பல கட்டுப்பாடுகளை இது உள்ளடக்கியுள்ளது. இது 16 மில்லியன் தனியார் துறை ஊழியர்களுக்கு பொருந்துவதோடு, அரசு துறையில் பணியமர்த்தப்பட்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஊதியம் பெறும் பல மில்லியன் தொழிலாளர்களுக்கும் இது பொருந்தும். வெவ்வேறு வேலை சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் பொதுத் துறைக்கும் பொருந்தும்.

புதிய தொழில் சட்டம் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான உறவினை முழுக்கவும் மறுவரையறை செய்கிறது என்று பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். முந்தைய சட்டம் சார்பு நிலை அடிப்படையில் அமைந்திருந்தது, இது பலவீனமான தரப்பினை சுரண்டலுக்கு எதிராகப் பாதுகாத்தது, அத்துடன் முதலாளிகள் தங்களது தொழிலாளர்களின் நலனுக்கு பொறுப்பேற்கும் கடமைப்பாடு கொண்டிருப்பதையும் அவசியமாக கொண்டிருந்தது. இப்போது இந்த புதிய சட்டத்தில் முதலாளி தரப்பிலான இந்த கடமைப்பாடு பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் (PS) ஒரு பொருளாதார நிபுணரான Alain Vidalies கூறும் போது, புதிய சட்டத்தின் நோக்கமானது தொழில் சட்டத்தின் (Code du Travail) கட்டமைப்பு மற்றும் தத்துவத்தை UMP (ஆளும் Union for a Popular Movement) யின் கொள்கைக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்வதாகும் என்றார். நடப்பு சட்டத்தில் குறுக்கிட இதற்கு [அரசாங்கத்திற்கு] அனுமதியில்லை என்றாலும், இது முக்கியமான நிபந்தனைகளை பலவீனப்படுத்தியுள்ளது, தொழில் சட்டத்தின் ஐக்கியத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது, சமூக உத்தரவாதங்களை மதிப்புகுறைத்து பலவீனப்படுத்தியுள்ளது".

CGT உடனான நேர்முகம் ஒன்றில் University of Panthéon Assas இல் சமூக உரிமைகளுக்கான ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக இருக்கும் Bernard Teyssié அறிவித்தார்: "மறுவேலைப்பாட்டின் விளைவாக சில பத்திகளை பிரித்து புதிய பத்திகள் நுழைக்கப்பட்டுள்ளன, பிற பத்திகள் உரையில் இடம் மாற்றப்பட்டுள்ளன (மற்றொரு அர்த்தம் மற்றம் முக்கியத்துவத்தை அளிக்கும் வண்ணம்), சில பத்திகள் உள்ளடக்கத்தில் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன".

கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதி Roland Muzeau டிசம்பர் 4, 2007 இல் பாராளுமன்றத்தில் நடந்த ஒரு விவாதத்தில் தொழில் சட்டம் தொடர்பான மாற்றங்களின் முக்கியத்துவம் குறித்து எச்சரித்தார். அதே விவாதத்தில், வழக்கறிஞரும் சோசலிஸ்ட் கட்சியின் துணைத்தலைவருமான Marc Dolez விளக்கினார்: "முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான உறவின் சமமற்ற பண்பை மறுக்கும் இது, தொழில் சட்டம் (Code du Travail) உள்ளார்ந்த வகையில் சமமற்றிருக்கும் முதலாளி-தொழிலாளி உறவுகளை கட்டுப்படுத்தி, பலவீனமான தரப்பு பாதுகாக்கப்பட கோருகிறது என்றாலும் கூட, அவர்கள் இருவரையும் சம நிலையில் வைக்கிறது.

தொழில் நிபுணர் Gérard Filoche (PS) கூற்றுப்படி, அரசாங்க திட்டத்தை வெளிப்படையாக எதிர்ப்பதற்கான சில காரணங்களில் ஒன்றாக, புதிய சட்டமானது தொழிலாளர்கள் "முழுக்கவும் பொறுப்பாளிகளாக்கப்படலாம் என்பதோடு அவர்களின் சார்பு நிலைக்கு கட்டாயம் எந்த சலுகையும் அளிக்கப்படக் கூடாது". இந்த தர்க்கத்தின்படி, தத்துவார்த்த ரீதியாக தொழிலாளி அவர் செய்யும் அனைத்துக்கும் சட்டப்படியான பொறுப்பாளி ஆக்கப்படுகிறார் என்பதோடு, அவரது வர்க்கத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு முதலாளிக்கு எதிராக ஒரு வெறும் தனியாளாக நிறுத்தப்படவும் செய்கிறார்.

புதிய தொழில் சட்டமானது சட்டப்படியான விடுமுறை நாட்களை தடை செய்வதற்கு இட்டுச் செல்லக் கூடிய, சில தொழில்களை மற்ற பிரிவுகளாக "பிரிப்பதான" கற்பனை செய்தலையும் கொண்டுள்ளது. இது தவிர, ஆவணத்தின் 500 பத்திகளுக்கும் மேலாக உத்தியோகபூர்வமான கட்டுப்பாடுகள் கொண்ட பிரிவில் இருந்து எந்த சட்டபூர்வமான அந்தஸ்தும் இல்லாத கட்டுப்பாடுகளின் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த பிரிவுகளை அரசாங்கம், மக்களின் முதுகுக்குப் பின்னால் மாற்றுவதற்கும் ஒரு பாராளுமன்ற தீர்ப்புக்கு அவசியமில்லாமலும் செய்து விட அரசாங்கத்திற்கு இது வாய்ப்பினை அளிக்கிறது.

புதிய சட்டத்தின் இன்னுமொரு முக்கிய அம்சம் சிறப்பு தொழில் நீதிமன்றங்கள் (conseils des prud'hommes) குறித்ததாகும். இவை தனியார் துறையில் மோதல்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் சம அளவில் இருக்கும் சமூக நீதிமன்றங்கள் ஆகும். இத்தகைய நீதிமன்றங்களின் இருப்பே அபாயத்தில் இருக்கிறது ஏனென்றால் இப்போது ஒரு சாதாரண தீர்ப்பு அவர்களின் பெரும்பான்மையான அதிகாரத்தை இல்லாது செய்து விட முடியும். இந்த நீதிமன்றங்களை புறக்கணித்து முதலாளி பக்கமே சாதகமான தீர்ப்பு வழங்கும் சாத்தியமுள்ள பிராந்திய நீதிமன்றங்களுக்கு நேரடியாக விண்ணப்பிக்கக் கூடிய அதிகமான வாய்ப்பை இது முதலாளிகளுக்கு அளிக்கிறது.

பொதுமக்களின் முதுகுக்குப் பின்னால்

பிரான்சின் பெரு வர்த்தகத்தின் அமைப்பான Medef நீண்ட காலமாகவே தொழில் சட்டத்தின் மீது ஒரு கண் வைத்திருக்கிறது. இடதுசாரி நிர்வாகங்களாக கூறப்பட்டவை உள்ளிட்ட முந்தைய அரசாங்கங்கள் தொழில் சட்டத்தை திருத்த தலைப்பட்டன என்றாலும், அமைப்புரீதியான முதலாவது முயற்சி ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் அவரது பிரதமராக ஜோன் பியர் ரஃபாரன் இருந்தபோது, 2002 இல் நடைபெற்றது. அன்று முதலே, அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு அரசாங்கமும் அந்த திட்டத்தை முன்னெடுத்து செல்வதை தொடர்ந்தன.

2003 இல், அந்த நேரத்தில் தொழில்துறை அமைச்சரும் தற்போதைய பிரதமருமான பிரான்சுவா பிய்யோன் வர்த்தக கூட்டமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து தொழில் சட்டத்தை "நவீனபடுத்துவது" குறித்த அறிக்கை தயாரிக்க ஒரு சட்டக் கமிஷனை நியமித்தார். இந்த திட்டம் 2004 இல் ஆரம்ப முன்மொழிவு அளித்த Michel de Virville க்கு ஒதுக்கப்பட்டது.

இந்த கேள்விகள் குறித்த விவகாரத்தில் De Virville எந்த வகையிலும் ஒரு சுதந்திரமான அதிகாரம் பெற்றவரல்ல. 1980களில் முன்னணி அரசாங்க பதவிகளை ஆக்கிரமித்திருந்த அவர், 1993 இல் ரெனோல்ட் ஆட்டோ குழுமத்தில் நிர்வாகியாக இணைந்து, அதில் இப்போது பொதுச் செயலாளராக இருக்கிறார். Medef க்கான தொழில் உறவுகளுக்கான கமிஷனின் தலைவர் பதவியையும் அவர் வகித்திருந்தார். ஊழல் மோசடி குற்றச்சாட்டால் பாதிப்புக்குள்ளான UIMM தொழில் கூட்டமைப்பின் முன்னணி உறுப்பினராகவும் இருந்தார். ஜனவரி 31, 2008 அன்று, வேலையில்லாதோர் காப்பீட்டு குழுமமான Unedic க்கின் தலைவராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். UIMM ஊழல் விவகாரம் வெளிவரத் தொடங்கியதை அடுத்து, மார்ச் 1 அன்று இந்த பதவிகளில் இருந்து எல்லாம் விலகி விட்டார்.

De Virvilles இன் அறிக்கையின் அடிப்படையில், கட்டுப்பாடுகளின் மீதான தீர்ப்புகளின் வழி டொமினிக் டு வில்ப்பன் அரசாங்கத்தின் மூலமாக தொழில் சட்ட சீர்திருத்தத்தின் ஒரு பகுதியானது துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய அரசாங்க நெறிப்படுத்தல்கள் பாராளுமன்றத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும், ஆனால் சட்டங்கள் போல இவற்றிற்கும் விவாதம் அவசியமில்லாமல் போய்விட்டது.

புதிய சட்டம் ஜூன் 2006 இல் அமலுக்கு வரும் என்று அனுமானிக்கப்பட்டது ஆனால் அதன் அறிமுகம், முதல் வேலை ஒப்பந்தத்திற்கு (CPE) எதிரான பெரும் ஆர்ப்பாட்ட இயக்கத்தின் வழியாக தடுக்கப்பட்டது. ஜனவரி 21, 2008 அன்று பாராளுமன்றம் புதிய தொழில் சட்டத்தின் உத்தியோகபூர்வமாக கட்டுப்படுத்தப்படும் பகுதியை உறுதிப்படுத்தியது. அதுமுதல், சட்ட அமைச்சர் Xavier Bertrand ம் மே 1 முதல் இந்த சட்டம் முழுமையாக அமலுக்கு வந்து விட்டது என்ற பொருளை வலியுறுத்தும் வகையில் அமலாக்க நெறிமுறைகளை வழங்கினார்.

சுமார் 30,000 பத்திரிகையாளர்களின் நிலையை பாதிக்கும் என்றாலும் கூட தொழில் சட்டத்தின் திருத்திய பதிப்பின் மீது ஊடகங்கள் பெரிய அளவில் கருத்து எதுவும் கூறவில்லை. புதிய சட்டத்தை அமலாக்குவதற்கான முக்கியமான தயாரிப்புகள் சென்ற ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு சில வாரங்கள் முன்னதாகத் தான் செய்யப்பட்டது என்றாலும் பிரான்சின் உத்தியோகபூர்வ இடது அமைப்புகள் இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்து விட்டன.

கடந்த காலத்தில் ஏராளமான பெரிய தொழில் பிரச்சினைகளை கண்டிருந்த போதிலும் தொழிற்சங்க அதிகாரத்துவம் பிரக்ஞையுடனும் இரகசியமாகவும் தொழில் சட்ட மாற்றங்களை ஆதரித்தது.

தொழில் அமைச்சகத்தின் "சீர்திருத்த கமிஷனின்" உறுப்பினர் ஒருவரான Herve Lanouzière ஐ குறிப்பிட்டு revuefiduciaire என்னும் வலைத் தளம், தொழிற்சங்கங்கள் திருத்தப்பட்ட சட்டத்தை விளக்கும் செயலில் ஆழமாக ஈடுபட்டதாக தெரிவிக்கிறது. பிரதான தொழிற்சங்க கூட்டமைப்புகள் எல்லாமே தங்களது இரண்டு உறுப்பினர்களை அனுப்பி சீர்திருத்த கமிஷனில் பங்கேற்றன.

Revuefiduciaire கூறுகிறது: "பதினாறு கூட்டங்கள் நடைபெற்றன. இரண்டு தரப்பும் (முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள்) எல்லா வேலை பற்றியும் முழுமையான கட்டுப்பாடற்ற அணுகலை கொண்டிருந்தன. கடிதங்களின் சுறுசுறுப்பான பரிவர்த்தனை இருந்தது. Lanouzière கூற்றுப்படி 80 சதவீதத்திற்கும் அதிகமான அவர்களது ஆட்சேபனைகள் கருத்தில் கொள்ளப்பட்டன".