World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்ா : பிரான்ஸ்

France: Undocumented immigrants strike wins support

பிரான்ஸ்: ஆவணப்படுத்தப்படாத குடியேற்ற தொழிலாளர் போராட்டம் ஆதரவை வெல்கிறது

By Ajay Prakash
2 May 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஏப்ரல் 15 முதல், துப்புரவு பணி, கட்டுமானத்தொழில், சில்லறை வியாபாரம், பாதுகாப்பு மற்றும் உணவக துறையில் சுமார் ஆயிரம் sans papiers [ஆவணப்படுத்தப்படாத தொழிலாளர்கள்], பாரிஸ் மாநகரில் வேலைநிறுத்தத்தில் இறங்கி, பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களை ஆக்கிரமித்து, உடனடியாக சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்கும்படி கோரி போராடி வருகிறார்கள்.

இந்த நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ள குடியேற்றக் கொள்கைகள் மற்றும் சமூக துருவமயப்படுத்தலுக்கு எதிர்ப்பு, மற்றும் சமூக நல தேட்டங்களை குறைக்கும் அரசாங்கத்தின் கெடுபிடி சீர்திருத்தங்களின் உள்ளடக்கத்தில் கடும் உணவுப்பொருள் விலை உயர்வு மீதான எதிர்ப்புக்கள் ஆகிய இரண்டையுமே குறிக்கின்றன.

நீண்டு கொண்டு செல்லும் மற்றும் வளர்ச்சியுற்றுக் கொண்டிருக்கும் காலவரையற்ற போராட்டங்கள் மற்றும் தங்களுக்கு சட்டபூர்வ அந்தஸ்து கோரி பிரான்சு தேசமெங்கும் பரவலாக sans papiers மேற்கொண்டு வரும் வேலையிடங்களின் ஆக்கிரமிப்பு போராட்டங்கள் இவையெல்லாம் இந்த விவகாரத்தைக் கையாளும் CGT (தொழிலாளர்களின் பொதுக் கூட்டமைப்பு) ஐ எச்சரிக்கையுற செய்துள்ளது.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடன் (PCF) நெருங்கிய கூட்டுள்ள CGT, மொத்தமாய் சட்டபூர்வ அந்தஸ்து கோருவதான முக்கிய கோரிக்கையை கைவிட்டு, அதற்கு பதிலாக அந்தந்த பகுதி préfets (நிர்வாக காவல்துறை தலைவர்கள்) உடன் பேச்சுவார்த்தைகள் மூலமாக தனித்தனி நபரின் கோரிக்கையை பரிசீலிப்பது என்னும் கொள்கையை ஏற்றுக் கொண்டதன் மூலம் மக்கள் இயக்கத்தை பெருமளவில் குறைமதிப்பிற்கு உட்படுத்தி விட்டது. இந்த நாசவேலையானது நடைபெற்றுள்ள நிலையில், போராட்டமானது ஏராளமான வேலையிடங்களுக்கு பரவியுள்ளது என்பதுடன் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் நிறவெறிக்கு எதிரான அமைப்புகளிடம் இருந்தும் ஆதரவை வென்று உத்வேகம் கூடப் பெற்றுள்ளது.

ஏப்ரல் 28 முதல், 62 குடியேற்றக்காரர்களின் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வலியுறுத்தி குழந்தைகள் உள்ளிட்ட பல sans papiers பாரிஸ் அருகிலுள்ள நாந்தேர் Saint-Paul தேவாலயத்தை ஆக்கிரமித்து போராடி வருகிறார்கள்.

வேலைநிறுத்தம் வளர்ச்சியுற்றதால் CGT தலைமையிலான ஒரு குழு, குடியேற்றத்துறை அமைச்சர் Brice Hortefeux ஆல் ஏப்ரல் 21 அன்று அழைக்கப்பட்டு, அவர்களிடம் வேலைநிறுத்தத்தால் பாதிப்புற்றிருக்கும் ஐந்து préfectures (உள்ளூர் காவல் நிர்வாகங்கள்) மட்டும் தொழிலாளர்களின் கோரிக்கையை தனிநபர் ரீதியாக "ஒவ்வொருவர் வழக்காக" ஆராயும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

ஒவ்வொருவர் வழக்கு என்ற அடிப்படையில் அந்த பகுதி போலிஸ் தலைவர் (préfet) தான் முடிவு செய்ய வேண்டும்" என்று அமைச்சரின் கேபினட் இயக்குநர் தெரிவித்தார். "ஒட்டுமொத்தமான பேச்சுவார்த்தைகள் இருக்காது".

கூட்டம் முடிந்ததும், "நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கான" வழியை CGT அறிவித்தது, சட்டப்பூர்வமாக்கும் கோரிக்கையை ஒவ்வொரு ஆள் ஆளளாக ஆராயும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இது ஆதரித்தது. CGT இன் தேசிய செயலாளர் Francine Blanche அறிவித்தார்: "நாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியிருக்கிறோம், உண்மையில் நாங்கள் ஒரு தீர்வினைக் கண்டிருக்கிறோம்".

செய்தியாளர்களிடம் பேசிய CGT அதிகாரி ஒருவர் தான் "நிலமையை நன்கு கவனித்து வருவதாகவும், விஷயங்கள் துரிதமாக தீவிரமாகலாம் என்றும் புதிய ஆக்கிரமிப்புகளும் நடைபெறலாம் என்றும் தெளிவாக உணர்ந்திருப்பதாகவும் கூறினார்". இயக்கம் ஆரம்பித்தது முதலே தங்களை சட்டபூர்வமாக்க கோரி தொழிலாளர்களிடம் இருந்து ஏராளமான கோரிக்கைகளை CGT பெற்றுள்ளதாக கூறிய அவர், Euro Disney தொடர்பான - தீம் பார்க்கை சுட்டிக் காட்டி - ஒரு பெரும் பட்டியல் கொண்ட கோப்பே தங்களிடம் இருப்பதாக கூறினார்.

பிரான்சின் தெற்குப் பகுதியில் மொன்பெலியே இன் CGT செயலாளராக இருக்கும் Bruno Gagne, Libération பத்திரிகையிடம் ஏப்ரல் 25 அன்று தெரிவித்தார்: "சில ஆவணப்படுத்தாத தொழிலாளர்கள் பணியமர்த்தியவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளனர் ஆனால் போலியான ஆவணங்களை கொண்டுள்ளனர்... விளையாட்டில் ஈடுபடும் இந்த பணியமர்த்திய முதலாளிகளை மிகவும் கடுமையாகவும் தாக்கி விடாமல் அனைவரையும் சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றவராக்க நாங்கள் கோருகிறோம்... சம்பந்தப்பட்ட எல்லோருமே வெற்றி பெற்றதாக உணரும் வகையிலான ஒரு சமரசத்தையே நாங்கள் காண விரும்புகிறோம்".

லியோனில் இந்த விஷயத்திற்கான பொறுப்பை ஏற்றிருக்கும் CGT பேராளர் குழுவின் Mohamed Brahmi, தொழிலாளர்களிடையே இந்த இயக்கமானது "கற்பனை செய்ய முடியாத ஒரு வடிவத்தை எடுத்திருப்பதாக" குறிப்பிட்டார். "இந்த இயக்கம் பாரிசில் ஆரம்பித்ததில் இருந்து, ஏராளமானோர் எங்களை தொடர்பு கொண்டிருக்கிறார்கள்" என்றார் அவர்.

"அவர்கள் மாலி, செனகல் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளில் இருந்தும் வருகிறார்கள்... பெரும்பாலும் கட்டுமானத்துறை, ஹோட்டல் மற்றும் சுத்தப்படுத்தும் துறைகளில்... சில தற்காலிக ஏஜென்சிகள் ஆவணம் இல்லா தொழிலாளர்களை பணியமர்த்துவதில் நிபுணத்துவம் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு இது தெரியாமல் இருக்க முடியாது. அவர்கள் இதனை தங்களுக்கு அனுகூலமாக்கிக் கொள்கிறார்கள்".

மாலியிலிருந்து வந்துள்ள Abdoulaye லியோனில் கட்டுமானத் தொழிலில் இருக்கிறார், பல வருடங்களாக ஊதியம் உயர்த்தாநிலையிலும் வருமான வரியும் கட்டிக் கொண்டிருக்கிறார். மற்றொரு தெழிலாளியான Dramane தெரிவித்தார், "நான் சாலைகள் மேற்பூச்சில் வேலை செய்கிறேன் ஆனால் என்னுடைய ஊதிய காசோலையில் நான் கட்டிடதாரரின் உதவியாளராக பதியப்பட்டுள்ளேன். இதனால் 11.5 யூரோக்களுக்கு பதிலாக 8.5 யூரோக்களை மட்டுமே நான் பெறுகிறேன்". அநேக மாலி தொழிலாளர்கள் தற்காலிக ஏஜென்சிகள் மூலமாக எந்த ஊதிய உயர்வும் இல்லாமலே ஐந்து ஆண்டுகளாக கட்டுமானத் துறையில் வேலை செய்து வருகிறார்கள்.

CGT பல வருடங்களாகவே ஏஜென்சியின் பங்களிப்பினை, மிகவும் கவனிக்கத்தக்க வகையில் Manpower உடனானதை, ஊக்குவித்து வருகிறது என்பதைக் கவனிப்பது அவசியம். 1972ம் ஆண்டிலேயே தற்காலிக ஏஜென்சி பங்களிப்பை, பிரான்சில் அது சட்டபூர்வமாகும் இரண்டு ஆண்டுகளுக்கும் முன்னதாகவே, அங்கீகரித்து Manpower உடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்ட முதல் சங்கம் CGT தான். இந்த காலம் முதலே, பாதுகாப்பற்ற வேலைவாய்ப்பினை பெருமளவில் துஷ்பிரயோகம் செய்வதற்கான கதவுகள் பிரம்மாண்டமாய் திறந்து விடப்பட்டிருக்கின்றன. 2007ம் ஆண்டு 700,000 தற்காலிக தொழிலாளர்கள் இருந்தனர், இது முந்தைய ஆண்டை விட 4.3 சதவீதம் அதிகமாகும்.

CGT, குடியேற்ற அமைச்சகத்தில் இருந்தான வேண்டுகோளை அடுத்து ஐந்து préfectures èOTM (Paris, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne) ஒவ்வொரு ஆளாய் பரிசீலிப்பதற்கு 800க்கும் அதிகமான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது.

CGT இன் சமரசத்தால் வலிமை பெற்றுள்ள குடியேற்றத் துறை அமைச்சர் Hortefeux Le Figaro வில் ஏப்ரல் 24 அன்று கூறினார், "எந்த ஒரு சமயத்திலும் மொத்தமான சட்ட அங்கீகாரம் வழங்குவது என்பதே இருக்காது, இதனை நான் எந்த குழப்பமும் இன்றிக் கூறுகிறேன். ஸ்பெயினும் இத்தாலியும் இதனைச் சில வருடங்களுக்கு முன்னால் செய்தன, அது முதல் இந்த கொள்கையை கைவிட்டன. முன்முயற்சியின்மைக்கோ, அல்லது தகாத செயல்களுக்கோ இடம் இல்லை... பாராளுமன்றத்தில் நான் வாக்களித்திருக்கும் சட்டமானது தொழிலாளர்களின் தீவிர பற்றாக்குறையால் அவதியுறும் பொருளாதாரத் துறைகளில் தனித்தனி ஆளுக்கான சட்டபூர்வமாக்கல் விண்ணப்பத்துக்கான பரிசீலனையையே அனுமதிக்கிறது".

ஏப்ரல் 24 Le Monde இல் வெளியான ஆசிரிய தலையங்கம் சுட்டிக் காட்டுகிறது, "நடப்பில் ஒழுங்குபடுத்த வேண்டியதாக CGT ஆல் வழங்கப்பட்டிருக்கும் 600 வழக்குகளையும் தாண்டி, இது ஆயிரக்கணக்கான வேலைகள், சொல்லப் போனால் இது பத்தாயிரக் கணக்கிலும் இருக்கலாம், சம்பந்தப்பட்டது. ஹோட்டல் முதலாளிகள் கூட்டமைப்பின் தலைவரான André Daguin - இவர் ஒரு அபாயகரமான இடதுசாரித் தலைவராக தெரியவில்லை- "50,000 தொழிலாளர்களை சட்டப்பூர்வமாக்க" தேவை இருப்பதை வெளிக்கொணரவில்லையா?"

இரண்டு முக்கிய ஹோட்டல் மற்றும் உணவக முதலாளிகள் அமைப்புக்களான, UMIH மற்றும் Synhorcat ஆவணப்படுத்தாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வரன்முறைப்படுத்த (Regularize) அழைப்பு விடுத்துள்ளன, ஏனென்றால் அடிமை ஊதியம் மற்றும் சூழலில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் ஆவணப்படுத்தாத தொழிலாளர்களின் வேலைகளுக்கு ஆட்கள் கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இந்த இயக்கம் முதன்முதலாய் ஆரம்பித்தது முதலே, தங்களது தொழிலாளர்களை என்ன விலை கொடுத்தேனும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியத்தில் இருக்கும் சில முதலாளிகளின் ஆதரவை இது பெற்றுள்ளது. இருப்பினும், கட்டிட தொழில் அபிவிருத்தியாளர் கோஜெடிம் போன்ற மற்றவர்கள் "வேலை செய்யும் உரிமை பற்றிய தடைக்கு" ஒரு நீதிமன்ற உத்தரவினை எதிர்பார்க்கிறார்கள். Seine-Saint-Denis இல் இருக்கும் Casa Nova கடை, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை அழைத்து, வேலைநிறுத்தக்காரர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றினார்கள், பாரிஸ் சில்லரை விற்பனை Fabbio Lucci நிறுவன முதலாளி போலிசாரை அழைத்து வேலைநிறுத்தக்காரர்களை அப்புறப்படுத்தினார்.

வேலைநிறுத்தக்காரர்கள் தங்களது வழக்குகள் தொழில் அமைச்சகத்தால் விசாரிக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்கள், குடியேற்ற அமைச்சகத்தால் அல்ல. 'ஆவணப்படுத்தப்படாத' என்ற வார்த்தைக்கு முன்னதாக 'தொழிலாளர்' என்னும் வார்த்தை தான் முன்னுரிமை பெறப்பட வேண்டும் என்று விளக்கினார் மக்கள் உரிமை ஆதரவாளர்களான Droits Devant (உரிமைகள் முன்னணியில்) இன் Jean-Claude Amara.

ஏப்ரல் 24 அன்று நேரலை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி, 'எந்த பொதுவான சட்டரீதியாக்கலும் 'பேரழிவிற்கு' வழிவகுக்கும், 'புலம்பெயர்ந்தோரை கடத்துபவர்களுக்கு' தான் ஆதாயம் அளிக்கும்" என்றார்.

"பிரான்சின் ஒரு உணவக சமையலறையில் நீங்கள் வேலை செய்கிறீர்கள், மிகச் சிறப்பாக செய்கிறீர்கள் என்பதற்காக நீங்கள் பிரெஞ்சுக்காரர் ஆகி விட முடியாது" என்றார் அவர். இதற்கான வழி வேலைக்கமர்த்துபவர்கள் சட்டபூர்வமாக குடியேறி, வேலையின்றி இருக்கும் குடியேற்றக்காரர்களை வேலைக்கமர்த்துவது தான் என்றார். "சட்டபூர்வமான குடியேற்றக்காரர்களில் 22 சதவீதம் வேலையின்றி இருக்கிறார்கள்" என்று சார்க்கோசி மேலும் தெரிவித்தார். "எமக்கு வெளி நாட்டினர் தேவை தான், எமக்கு தேவை குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்ட ஒதுக்கீடுகளை விடவும், பொருளாதார அடிப்படையில் குடியேற்றத்திற்கான ஒதுக்கீடுகள் தேவை".

சோசலிஸ்ட் கட்சி (PS) சார்க்கோசியின் குடியேற்றக் கொள்கையின் பின்னால் நிற்கிறது. செய்தியாளர்களிடம் பேசிய 2007ம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக தோல்வியுற்ற Ségolène Royal, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பேரளவில் வரன்முறைப்படுத்தல் (Regularize) எதனையும் நிராகரித்தார், இதற்கு அழைப்பு விடுத்திருக்கும் உணவக முதலாளிகளின்' அழைப்புகளுக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

நீண்ட காலமாக பிரான்சின் சோசலிச மற்றும் பழமைவாத அரசாங்கங்கள், ஆவணப்படுத்தப்படாத குடியேற்ற தொழிலாளர்களை பிரான்சின் முதலாளித்துவ வர்க்கத்தினர் சட்டபூர்வமான குறைந்தபட்ச ஊதியத்தில் பாதி அளித்து (மாதத்திற்கு 1,280 யூரோக்கள்) சுரண்டும்படி விட்டு விட்டார்கள். இந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஊதிய காசோலைகள் தான் பெற்றனர், அதில் வரிகள், மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் வேலையில்லாதோர் ஆதாயக் காப்பீடு ஆகியவை தெரிவிக்கப்பட்டிருந்தும், அரசாங்கத்திடமிருந்தோ அல்லது முதலாளிகளிடம் இருந்தோ விபத்து/மருத்துவக் காப்பீடு மற்றும் சமூக ஆதாயங்களைப் பெற முடியவில்லை.

ஜூலை 1, 2007 முதல், முதலாளிகள் வெளிநாட்டு தொழிலாளர்களின் ஆவணங்களின் நம்பகத்தன்மையை préfet உடன் சோதித்துக் கொள்ள வேண்டும். பிரெஞ்சு அரசாங்கம் ஆவணப்படுத்தாத தொழிலாளர்களை வேட்டையாடுவதற்கான பெரும் நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது, அனைத்து அரச நிர்வாக உறுப்புகளும் எந்த ஆவணப்படுத்தாத குடியேற்ற தொழிலாளர்கள் குறித்தும் போலிசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசாங்கம் இந்த ஆண்டு 25,000 குடியேற்றக்காரர்களை வெளியேற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தது, சென்ற ஆண்டு 23,000 பேர் வெளியேற்றப்பட்டிருந்தனர், போலிசார் சுற்றி வளைத்து கைது செய்த நடவடிக்கையில் ஏராளமானோர் கைதாகி இருந்தனர்.

இந்த கொள்கை, பல குடியேற்ற தொழிலாளர்கள் போலிஸ் சோதனையிலிருந்து தப்பிக்க தங்களது உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும்படி செய்திருக்கிறது. குடியேற்ற தொழிலாளர்களின் பொருளாதார தேவை நிலையிலும், பிரெஞ்சு அரசாங்கம் ஆவணப்படுத்தாத குடியேற்ற தொழிலாளர்களுக்கு எதிராக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது, இல்லையென்றால் தனது கடுமையான குடியேற்றக் கொள்கைக்கு இது ஒரு பின்னடைவாக ஆகிவிடும் என்று இது கூறுகிறது. பொது ஐரோப்பிய குடியேற்ற ஒப்பந்தம் ஒன்றை செயலாக்கவும் 'பாதுகாப்பான' ஐரோப்பிய எல்லைகளை ஸ்தாபிக்கவும் பிரெஞ்சு அரசாங்கம் விருப்பம் கொண்டுள்ளது.

நடப்பு இயக்கம், பரந்த மக்கள் இயக்கத்தின் தன்மையை பெற்றுள்ளது என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கும் அரசாங்கம், ஹோட்டல்/உணவக வர்த்தக அமைப்பான Synhorcat உடன் நடக்கவிருந்த ஒரு கூட்டத்தை இரத்து செய்து விட்டது. "பாரிசில் 400க்கு மேல் சட்டபூர்வ அங்கீகாரம் கோரும் கோரிக்கைகள் எதுவும் இல்லை" என்று குடியேற்ற அமைச்சகம் அறிவித்தது. "குறிப்பிட்ட (தொழில்) துறைகளில் நிலவும் இறுக்கமான நிலையையும் கருத்தில் கொண்டு அதன் தகுதியின் அடிப்படையில் préfectures ஒவ்வொரு வழக்காக ஆராய்ந்து முடிவெடுக்கும்... ஆவணப்படுத்தப்படாத தொழிலாளர்களை சட்டபூர்வமாக்குவதன் மூலம் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை. சட்டபூர்வமான குடியேற்றம் என்பதற்கு தான் முதலுரிமை".

இந்த போராட்டங்கள் பிரான்சில் மிகவும் ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் பிரிவினரால் நடத்தப்படுவதான முதல் போராட்டமாகும். இது நெடுந்தொலைவு செல்லத்தக்க சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவம் கொண்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஒரு வாரம் முன்னதாக தான், உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு பள்ளிகளிலும் ஆள் குறைப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். இந்த ஆண்டு ஆரம்பம் முதலே, ஆள் குறைப்பு, சூப்பர்மார்க்கெட்டுகளின் வேலைச் சூழல் மற்றும் சமூக வெட்டுகளுக்கு எதிரான பல போராட்டங்களை பிரான்ஸ் கண்டிருக்கிறது. சென்ற ஆண்டு புகையிரத தொழிலாளர்கள் தங்களது ஓய்வூதியங்களை பாதுகாக்க போராட்டங்களில் இறங்கினார்கள்.

CGT மற்றும் பிற தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு போராட்டத்தையும் கட்டுப்படுத்தவும் அதனை உள்ளூர் அடிப்படையிலானதாக வைத்திருக்கவுமே தங்களது ஆதரவினை வழங்கினார்கள். தொழிலாளர்களின் பரந்து விரிந்த பிரிவினருக்கு இடையே ஆவணப்படுத்தப்படாத குடியேற்ற தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள ஆதரவு, சார்க்கோசி நிர்வாகத்திற்கும் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய பெரு வணிகத்தின் தேவைகளுக்கும் எதிரான ஒரு பெரும் அரசியல் இயக்கமாக அபிவிருத்தியடையாமல் தற்போது தடுக்கப்பட்டிருக்கிறது. CGT மற்றும் பிற தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புக்கள், ஆவணப்படுத்தப்படாத தொழிலாளர்களை மொத்தம் மொத்தமாய் வேட்டையாடவும் வெளியேற்றவும் அரசாங்கத்திற்கு ஊக்கமளித்துள்ளது.

பிரெஞ்சு தொழிலாள வர்க்கமானது பிரான்சு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற கொள்கையையும் ஆவணப்படுத்தப்படாத தொழிலாளர்களை வேட்டையாட பயன்படுத்தப்படும் போலிஸ்-அரச முறைகளையும் எதிர்க்க வேண்டும். இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் வெளியே திருப்பி அனுப்பப்படலை எதிர்கொள்வதைக் காட்டிலும் தங்களது சொந்த வாழ்க்கையை முடித்துக் கொள்வதை விரும்பித் தேர்ந்துகொள்கின்றனர்.

தங்களது ஜனநாயக உரிமைகள், வேலைகள் மற்றும் வாழ்க்கை தரத்தினை காப்பாற்றிக் கொள்ள பாடுபடும் குடியேற்ற தொழிலாளர்களுடன் பிரெஞ்சு தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும். குடியேற்றம் போன்ற ஒரு பெரும் சமூகப் பிரச்சினையை தனித்தனி நபராய் பரிசீலிக்கும் முறை மூலம் தீர்த்து விட முடியாது, அது பிளவுகளை உருவாக்குவதோடு முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் கரங்களில் ஒரு ஆயுதமாகத் தான் உருவெடுக்கும்.

இத்தகைய பெரும் சமூகப் பிரச்சினைக்கான தீர்விற்கு, அனைத்து தொழிலாளர்களும், அவர்கள் ஆவணப்படுத்தப்பட்டவர்களாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, உலகின் எந்த பகுதியிலும் சுதந்திரமாக சென்று வேலை செய்வதற்கான உரிமைகளை காக்கும் சோசலிச சர்வதேசியவாத அடிப்படையிலான ஒரு முன்னோக்கு தேவைப்படுகிறது.