World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்ா : பிரான்ஸ்

Undocumented workers occupy CGT union hall in Paris

பாரிசில் CGT தொழிற்சங்க கட்டிடத்தில் ஆவணம் இல்லாத தொழிலாளர்கள் ஆக்கிரமிப்பு

By Kumaran Ira and Antoine Lerougetel
6 May 2008

Use this version to print | Send this link by email | Email the author

மே 2 முதல் நூற்றுக்கணக்கான ஆவணப்படுத்தப்படாத தொழிலாளர்கள், முதன்மையாக ஆபிரிக்கர்கள், பாரிசில் உள்ள CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) தொழிற்சங்க கட்டடத்தினை ஆக்கிரமித்துள்ளனர். ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமான தொடர்புடைய இந்த தொழிற்சங்க கூட்டமைப்பு கட்டிடமானது பாரிசின் 3வது நிர்வாக வட்டாரத்தில் உள்ள République மெட்ரோவிற்கு அருகே உள்ளது.

போலீஸ் நிர்வாகம் (préfecture) தங்களது நிலைமையை வரன்முறைப்படுத்த (Regularize) வேண்டும் என்று கோரி வரும் இந்த தொழிலாளர்கள், CGT ஆனது ஆவணப்படுத்தப்படாாத தொழிலாளர்களின் போராட்டத்தை 'பணயக் கைதியாக' பிடித்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். புலம்பெயர்ந்த ஒருவர் செய்தியாளரிடம், "CGT ஆவணப்படுத்தப்படாத தொழிலாளர் இயக்கத்தை பணயக் கைதியாய் பிடித்து வைத்துள்ளது. நாங்கள் தொழிற்சங்க அரங்கை பணயமாக பிடித்திருக்கிறோம்" என்று தெரிவித்தார். CGT தங்களது விவகாரத்தை கையிலெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகிறார்கள்.

ஏப்ரல் 15 முதலே, பாரிஸ் பிராந்தியத்தில் (Ile-de-France) துப்பரவு, கட்டடத் தொழில், சில்லறை வணிகம், பாதுகாப்பு மற்றும் சமையல் போன்ற துறைகளில் இருக்கும் ஏராளமான ஆவணம் இல்லாத தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களையும் ஆக்கிரமிப்பு போராட்டங்களையும் தொடக்கியிருக்கிறார்கள். வேலை நிறுத்தத்தில் CGT மற்றும் மக்கள் உரிமை சம்மேளனமான Droits Devant ஆகியவை முன்னணி பாத்திரங்களை ஏற்றுள்ளன.

பாரிஸ் போலிஸ் நிர்வாகத்திடம் சங்கத்தின் ஆவணம் இல்லாத உறுப்பினர்களை சட்டப்பூர்வமானதாக்குவதற்கான 900 கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்திருக்கும் CGT, இந்த கோரிக்கைகள் ஒவ்வொரு ஆளாக தனித்தனியாக பரிசீலிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் செயல்நிலை முடிவினை ஏற்றுக் கொண்டுள்ளது.

இது அனைத்து ஆவணப்படுத்தப்படாத தொழிலாளர்களையும் சட்டபூர்வமானதாக்க வேண்டும் என்கின்ற ஆவணம் இல்லாதவர்களின் இயக்கத்தின் அடிப்படை கோரிக்கையை காற்றில் பறக்க விடுவதாக இருந்தது.

ஒவ்வொரு ஆளாக பரிசீலிப்பது என்பது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளும் தேவைகளும் சார்க்கோசி நிர்வாகம் மற்றும் குடியேற்றத்திற்கான அவரது அமைச்சர் Brice Hortefeux இவர்களால் திணிக்கப்படும் அடக்குமுறை அளவுகோல்களில் தான் இருக்கிறது என்கிற நிலையை ஏற்றுக் கொள்வதாகும். தொழிலாளர்கள் ஈர்க்கப்படுவதற்கு கடினமான குறைந்த சம்பளம் மற்றும் மோசமான வேலை நிலைமைகள் கொண்ட வேலைகளில் தொழிலாளர்கள் முதலாளிகளால் விரும்பப்படுகின்றனர் என்பது இந்த தேவைகளுள் ஒன்றாகும்.

பிரான்சில் 400,000 ஆவணம் இல்லாதவர்களின் வளர்ச்சிகண்டுவரும் இயக்கத்தை ஒவ்வொரு ஆளாக பரிசீலிக்கும் நடைமுறைக்கு ஒத்துக் கொண்டு CGT மற்றும் பிற ஆதரவுக் குழுக்கள் சமர்ப்பித்திருப்பது என்பது, பிரான்சின் உழைக்கும் வர்க்கத்தின் மிகவும் குறைவான சம்பளம் பெறுவதும் மிகவும் சுரண்டப்படுவதுமான பிரிவுகளின் வளரும் கிளர்ச்சியின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கும் ஆவணம் இல்லாதவர்களின் போராட்டத்தை அடக்குவதற்கு, இந்த அமைப்புகளுக்கும் முதலாளிகள் மற்றும் அரசாங்கத்திற்கும் இடையே ஏற்கனவே இருக்கும் ஒரு கூட்டணி நடவடிக்கை ஆகும். இந்தக் கிளர்ச்சியானது சில்லறை வணிக தொழிலாளர்களின், குறிப்பாக சூப்பர்-மார்க்கெட்டுகளிலும் இதர விற்பனை மையங்களிலும் உள்ள பெண்களின், முன்கண்டிராத போராட்ட அலையாலும் விளங்கப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதுவரை, CGT சமர்ப்பித்த 900 தனிநபர் கோரிக்கைகளில், Neuilly Restaurant இன் 3 தொழிலாளர்களுக்கு மட்டும் தான் சட்டபூர்வ அந்தஸ்து பெற்ற, அதுவும் தற்காலிகமான, குடியிருப்பு உரிமங்கள் வழங்கப் பெற்றுள்ளன.

CGT சங்க ஆக்கிரமிப்பு போராட்ட நடவடிக்கையானது, ஆவணங்கள் இல்லாதவர்களின் கோரிக்கைகள் பாரிஸ் காவல் நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டதன் அடுத்து நடவடிக்கையாக, Coordination sans papiers 75 (75 என்பது அவர்களின் பாரிஸ் பிராந்தியத்தின் துறை எண்) அமைப்பினால் தொடங்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 10 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த Coordination 75 நான்கு பாரிஸ் ஆவணங்கள் இல்லாதவர்களின் கூட்டு அமைப்புகளால் உருவானது. இவற்றில் மிகப்பெரியதான 19வது நிர்வாகப் பிரிவில் 2,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

ஏப்ரல் 30 அன்று தனது சொந்த முன்முயற்சியிலேயே ஆவணம் இல்லாத தொழிலாளர்களின் சட்ட அங்கீகாரத்துக்கான சுமார் 1,000 கோரிக்கைகளை பாரிஸ் காவல் அதிகாரத்திடம் வழங்க முயற்சித்ததாக. Coordination 75 குறிப்பிடுகிறது. "CGT தொழிலாளர்கள் போலவே எங்களுக்கும் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற வேண்டிய தொழிலாளர்கள் இருக்கிறார்கள்" என்று பாரிஸ் 75 ஒருங்கினைப்புக் குழு செய்தித் தொடர்பாளர் மமடு டயலோ விளக்கினார். அங்கீகாரம் கோரும் தனது ஆவணம் இல்லாதவர்களின் பட்டியலின் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுமாறு இது CGT ஐ அணுகியது. இந்த கோரிக்கை CGT அதிகாரிகளால் திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டது.

Coordination 75 மேலும் கூறுகையில், "CGT அலுவலகங்களை ஆக்கிரமித்து போராட்டம் நடத்துவதன் நோக்கமானது, CGT மற்றும் Droits Devant (மக்கள் உரிமைகள் அமைப்பு) இரண்டும் போராட்டத்தில் ஈடுபடும் ஆவணங்கள் இல்லாத தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் Hortefeux உடன் செய்து கொண்டிருக்கும் இரகசிய பேச்சுவார்த்தைகளைக் கண்டனம் செய்வதற்காகும்".

ஆக்கிரமிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் Libération செய்தியாளரிடம் சென்ற ஞாயிறு பதிப்பில் தங்களது கருத்துக்களைக் கூறினர். "நாங்கள் CGT உடன் நான்கு முறை சந்தித்தோம், காரணம் சில வேலையிட ஆக்கிரமிப்பு போராட்டங்களையும் நடத்துவதற்கு நாங்கள் விரும்பினோம்", என்று Coordination 75 இன் தலைவர்களில் ஒருவரான சிசோகோ அன்சூம் தெரிவித்தார். "ஆனால், அவர்கள் எங்களை தோட்டப் பாதைக்கு அழைத்துச் சென்று, சார்க்கோசி பேசும் வரை நாங்கள் காத்திருந்தாக வேண்டும் என்று கூறினர். அவர்கள் குடியேற்ற அமைச்சரின் அலுவலகத்தில் சந்திப்பு நிகழ்த்திய போது, எங்களிடம் அதுபற்றி தெரிவிக்கக் கூட இல்லை".

சிசோகோ தொடர்ந்தார்: "CGT போலவே நாங்கள் எல்லாவற்றையும் செய்திருக்கிறோம். இவையெல்லாம் ஜனவரி 7 அரசாங்க சுற்றறிக்கையின்படி Métiers en Tension (விரும்பாத தொழில்கள் அல்லது சிரமமான தொழில்கள்) இன் தொழிலாளர்களை குறித்த விண்ணப்பங்கள்".

தாபோ மன்காமா அறிவித்தார்: "Hortefeux அலுவலகம் 1000 தொழிலாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க அவர்களிடம் (CGT) சம்மதம் தெரிவித்து விட்டது. பதிலுக்கு இந்த இயக்கத்தை அமைதிப்படுத்தும்படி அவர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்களது தொழிற்சங்க உறுப்பினர் அட்டையை கொண்டிருக்கும் ஆவணமற்றவர்களின் குறித்த கவலை மட்டும் தான் CGT க்கு இருக்கிறது".

ஆவணமற்றவர்களின் ஒரு தொண்டரும், SOS ஆதரவாளருமான Solange, கூறுகையில்: "நாங்கள் மிகவும் வெறுப்புற்றுள்ளோம். ஞாயிறன்று நடந்த சந்திப்பில், 'இந்த இயக்கத்தை நாங்கள் நிறுத்துகிறோம்' என்று CGT எங்களிடம் தெளிவாகக் கூறி விட்டது. ஒரு 'ஒப்பந்தம்' நடந்திருக்கிறது என்பது தெளிவாகி விட்டது. அதே சமயத்தில் நாளின் வெளிச்சத்துக்குள் அடியெடுத்து வைக்கும் இந்த ஆவணமற்றவர்களை பொறுத்த வரை இது உண்மையிலேயே முதன் முறையானதாகும், குறிப்பிடத்தக்கதாகும்."

பல ஒப்புதல் மின்னஞ்சல்களை பெற்ற Libération பத்திரிகையானது அதனை அம்பலப்படுத்தியது. அதில் பின்வருவது ஒரு சிறந்த உதாரணமாகும்: "ரயில்வே தொழிலாளர்களை ஏமாற்றியதை போலவே, மீண்டும் ஒருமுறை CGT வேலைநிறுத்த உடைப்பு வேலையை செய்திருக்கிறது...."

CGT இன் ரேமண்ட் சவோ செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: "இந்த ஆக்கிரமிப்பு போராட்டத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை. ஏனென்றால் சங்கத்தை ஏராளமான கோரிக்கைகளை கொண்டு மூழ்கடிப்பது என்பது சூழ்நிலையை முன்செலுத்த எந்தவகையிலும் உதவாது. அவர்களை CGT இன் பக்கம் தள்ளி விடும் காவல் அதிகாரத்தின் நடவடிக்கைகள் பெரும் ஆத்திரமூட்டல் நடவடிக்கை ஆகும், ஏதோ CGT காவல் அதிகாரத்தின் வரவேற்பறை என்பது போல..... நாங்கள் ஆவணங்கள் இல்லாதவர்களின் போராட்டத்தினரை சட்டப்படி அங்கீகரிக்க கோருகிறோம்.... போராடும் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் உரிய பதிலை அளிக்க வேண்டும் என்கிறோம்".

"வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு" மட்டும் என்று கோரிக்கையை வரைமுறைப்படுத்தியிருப்பதை கவனமாகப் பாருங்கள்.

திங்களன்று காலை Coordination 75 பிரதிநிதிகள், பாரிசின் சோசலிஸ்ட் கட்சி (PS) மேயரும் கட்சியின் தலைமைப்பதவிக்கான போட்டியாளருமான Bertrand Delanoë வை சந்திப்பதாக இருந்தது. இவரும் ஆக்கிரமிப்பு போராட்டத்திற்கான தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விவகாரம் குறித்து தனது வலைத் தளத்தில் சமீபத்தில் பதிலளித்த சோசலிஸ்ட் கட்சி, "வேலை ஒப்பந்தம் மேலதிகார இடத்தைப் பெற்றிருக்க வேண்டும்" என்றும் "பொதுமைப்படுத்தி, சட்ட அங்கீகாரம் அளிப்பதற்கான கதவைத் திறந்து விடும் எந்த ஒரு கொள்கையையும்" எதிர்ப்பதாகவும் கூறியிருந்தது.

மே 4, உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த CGT வளாகங்களை பார்வையிட்டனர்.

ஆவணம் இல்லாதவர்களின் ஒரு பெரிய குழு நுழைவாயிலில் "கொலை இலக்குகளாகி இருக்கிறோம். அபாயத்தில் ஆவணம் இல்லாதவர்கள்'' என்னும் பதாகையைத் தாங்கி நின்றிருந்தது. இது Hortefeux மூலம் காவல் அதிகாரத்திற்கு, 2008ம் ஆண்டுக்கான வெளியேற்றப்பட வேண்டிய இலக்காக கூறியிருக்கும் 25,000 பேர் இலக்கினை குறிப்பிடுகிறது. கட்டிடத்தின் உள்ளே, பல ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்கள் குழந்தைகளுடன் பெண்கள் உள்பட, தரையில் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் கோஷங்களை எழுப்பினர், "சார்க்கோசி, பியோன், ஹோர்த்போ, அலியட்-மேரி (உள்துறை அமைச்சர்), காவல் துறை, CRS [கலகத் தடுப்பு போலிஸ்] என... நாங்கள் ரொம்பவே வெறுப்புற்று விட்டோம்", "எல்லா ஆவணங்கள் இல்லாதவர்களுக்கும் சட்ட அங்கீகாரம் வழங்குங்கள்", "ஒவ்வொரு ஆளாக பரிசீலிப்பது என்பது எங்களுக்கு வேண்டாம்".

சுவரில் வாசகங்கள் ஒட்டப்பட்டிருந்தன, "ஆவணங்கள் இல்லாதவர்கள் சுற்றி வளைக்கப்படுகிறார்கள் - ஆவணங்கள் இல்லாதவர்கள் கொல்லப்படுகிறார்கள்", "தோல் நிறத்தால் எல்லா இடங்களிலும் சுற்றி வளைக்கிறார்கள் - சார்க்கோசி வெறுப்பு விஷமி", "ஆவணங்கள் இல்லாதவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், உதைக்கப்படுகிறார்கள், அடக்கப்படுகிறார்கள், அவமதிக்கப்படுகிறார்கள்- போதும் நிறுத்துங்கள்!". மற்றொன்று கூறுகிறது: "அப்பா வெளியேற்றப்பட்டு, குடும்பம் சிதைக்கப்பட்டு, குழந்தைகள் அபாயத்தில்".

ஆக்கிரமிப்பு போராட்டக்காரர்கள் உலக சோசலிச வலைத் தளத்துக்கு தெரிவிக்கையில், "தொழிற்சங்கம் அனைத்து ஆவணங்கள் இல்லாத தொழிலாளர்களின் போராட்டத்தையும் எடுத்துச் செல்வதற்கு மறுக்கிறது. ஒரே காரணம் நாங்கள் இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் இல்லை என்பது தான்". கரமோகோ சுட்டிக் காட்டினார்: "CGT எங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது... நாங்கள் உறுப்பினர்களாக வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதோடு ஒரு வருட தொகையாக சுமார் 120 யூரோக்களை செலுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்".

டன்ஃபகா கூறினார்: "அரசாங்கத்தின் கொள்கை மொத்தமாய் சட்டப்பூர்வமாக்குவது அல்ல... இங்கே 15 வருடத்திற்கும் அதிகமாக வசித்து வரும் மக்கள் இருக்கிறார்கள். அரசாங்கம் இந்த அந்தஸ்தை மதிக்கவில்லை. 10 வருடங்களுக்கும் அதிகமாக இங்கு வசித்து வரும் மக்களுக்கு சட்ட அந்தஸ்து வழங்கவில்லை என்றால் அரசாங்கத்தில் தான் எங்கோ பிழை இருக்கிறது என்பது பொருள்."

அவர் தொடர்ந்து கூறுகையில், "CGT, Droits Devant மற்றும் Coordination 75, நாங்கள் எல்லோரும் சேர்ந்து, ஏப்ரல் 15 வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்புகளை செய்தோம். முதல் முற்றுகை La Grande Armée உணவகத்தில் நடந்த போது எங்களிடம் தகவல் தெரிவிக்கப்படக் கூட இல்லை. நாங்கள் சுத்தமாக மறக்கப்பட்டோம். அங்கே ஆக்கிரமிப்பு போராட்டம் நடப்பதாகக் கேள்விப்பட்டு அங்கு பார்ப்பதற்காக நாங்கள் சென்றோம்... கடைசி நேரத்தில் அதில் நாங்கள் விடுபட்டதன் காரணத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை".

அவர் மேலும் கூறினார்: "CGT குடியேற்ற அமைச்சருடனான சந்திப்பில் என்ன நடந்தது என்பதை கூற மாட்டார்கள். CGT சமர்ப்பித்த விண்ணப்பங்களின் மீது ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. பிரான்சில் ஆவணங்கள் இல்லாத ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். வெறும் 1,000 கோரிக்கைகளை மட்டும் எடுத்துச் செல்ல சம்மதிக்கும் CGT தொழிற்சங்கம் எப்படி பிரெஞ்சு தொழிலாளர்களின் உரிமைகளுக்கான பாதுகாவலராக பறைசாற்றிக் கொள்ள முடியும் என்று எனக்குத் தெரியவில்லை".