World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பர்மா

Death toll in Burma rises, as major powers press to intervene

தலையிடுவதற்கு முக்கிய நாடுகள் அழுத்தம் கொடுக்கையில் பர்மாவில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது

By Peter Symonds
8 May 2008

Use this version to print | Send this link by email | Email the author

இராவடி நதிப்படுகையின் பாதிக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களை நோக்கி உள்ளூர் மற்றும் சர்வேச நாடுகளின் மதிப்பீடு மற்றும் உதவி குழுக்கள் சென்றிருக்கும் வேளையில் பர்மாவில் நர்கிஸ் சூறாவளியால் உண்டான முழு அளவிலான பேரழிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை தற்போது 23,000 மாகவும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 41,000 ஆக அதிகரித்திருக்கும் நிலையில், உதவி அதிகாரிகள் மற்றும் அமைப்புகள் உயர்ந்தளவிலான மதிப்பீடுகளை முன்வைத்திருக்கிறார்கள்.

இறந்தவர்களின் எண்ணிக்கை 80,000 அல்லது அதற்கு மேலாக இருக்கலாம் என்று நேற்று World Vision ஆலோசகர் Kyi Minn ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்திடம் (ABC) தெரிவித்தார். "எங்களுக்கு நேரடி தொடர்பு இல்லை.... ஏனென்றால் சாலைகள் தடுக்கப்பட்டு இருப்பதாலும், சில பகுதிகளில் இன்னும் வெள்ளப்பெருக்கு இருப்பதாலும் அங்கு தொலைபேசி இணைப்புகள் மற்றும் போக்குவரத்து மிகவும் குறைவாக உள்ளது, நம்மால் அங்கு போக முடியாது, எனவே அங்கு நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கும் தகவல்களை மட்டுமே நாம் நம்ப வேண்டியிருக்கிறது." என்று அவர் தெரிவித்தார்.

Minn ஆல் கூறப்படும் 60,000 காணாமல் போனவர்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் இறந்திருக்க கூடும் என ஊகிக்கலாம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை மிக மோசமாக இருப்பதாக நேரில் பார்த்தவர்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. "அங்கு நிறைய சடலங்களை அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள் மற்றும் அவற்றை அங்கு சுகாதாரம் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது."

இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என இரங்கூனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஷாரி வில்லாரோசா நேற்று தெரிவித்தார். ஒரு சர்வதேச அரசுசாரா நிறுவனம் அளித்த புள்ளிவிபரத்தின் அடிப்படையில், அப்பெண்மணி தெரிவித்ததாவது: "இறப்பு எண்ணிக்கை 100,000 த்திற்கும் மேலாக இருக்கலாம் என எங்களுக்கு கிடைக்கும் தகவல் குறிப்பிடுகிறது." படுகை பிராந்தியத்தில் இருந்த சுமார் 95 சதவீத கட்டிடங்கள் அழிந்துவிட்டதாகவும், தாழ்ந்த நிலப்பகுதிகளில் ஏற்பட்ட சூறாவளியால் எழுந்த பெரியளவிலான புயல் பேரலைகளால் பெருமளவில் இந்த பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக வில்லாரோசா தெரிவித்தார்.

தங்குமிடம், உணவு, சுத்தமான குடிநீர் அல்லது மருந்துகள் ஆகியவற்றின் பற்றாக்குறையுடன், படுகை பகுதியில் பிழைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்கொண்டு வரும் அதிர்ச்சியூட்டும் நிலைகளை பல்வேறு உதவி அமைப்புகள் எடுத்துக்காட்டி வருகின்றன. ஐக்கிய நாடுகளின் உதவிக்குழு அதிகாரி ரிச்சார்ட் ஹோர்சி கூறுகையில்: "அடிப்படையில் தாழ்வான படுகை பகுதிகள் முழுவதும் தண்ணீரால் நிரம்பியுள்ளன. சடலங்கள் தண்ணீரில் மிதப்பதாக குழுக்கள் தெரிவிக்கின்றன." என்றார். சூழ்நிலை மிக மிக அழிவுமிக்கதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

90,000 மக்கள் வாழும் 50 க்கும் மேலான கிராமங்களால் சூழப்பட்ட ஒரு உள்ளூர் மையமாக விளங்கும், படுகை நகரமான லாபுட்டாவின் காட்சிகளை ஒரு பிரெஞ்சு பத்திரிகை செய்தி விவரித்தது. "பிழைத்திருப்பவர்கள் தங்களின் சோகத்தை சமாளித்துக்கொள்ளும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களை கண்டறிவதற்காக மட்டுமே தங்களின் அடித்துச் செல்லப்பட்ட கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி வெள்ளப்பெருக்கினூடாக பயணிக்கின்றனர். நகரத்தில் உணவு வினியோகம் ஏற்கெனவே பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதால், மோசமான அரிசியின் அரைகுறை வினியோகத்தை புதிதாக வருவொருடன் நகரங்களில் குடியிருப்போர் பகிர்ந்து கொள்கிறார்கள்." என அச்செய்தி முகாமை குறிப்பிட்டது.

நம்பிக்கையற்று பிழைத்திருப்பவர்களில் ஒருவர் கூறுகையில்: "மக்களின் முகங்களில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. இதுபோன்று ஒன்றை அவர்கள் ஒருபோதும் பார்த்ததில்லை. அவர்கள் தங்களின் குடும்பங்களை இழந்திருக்கிறார்கள், அவர்களுக்கு தங்க இடமில்லை, மேலும் அவர்களுக்கு சாப்பிடவும் எதுவும் இல்லை. எதிர்காலம் அவர்களுக்கு என்ன கொண்டு வந்து தரும் என்று அவர்களுக்கு தெரியாது." என்றார். "குடிநீர் கூட அங்கு கிடையாது. அவர்கள் தேங்காய் பாலைக் குடிக்கிறார்கள், பின்னர் உயிர் வாழ்வதற்கு தேங்காய்களை சாப்பிடுகிறார்கள்." என மற்றொருவர் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும், தேங்காய்கள் கிடைப்பதில் கூட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

உணவு மற்றும் அடிப்படை பொருட்களின் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு போராட்டங்களை உருவாக்கி வருகிறது. சர்வதேச உணவு திட்டத்தின் செய்தி தொடர்பாளர் போல் ரிஸ்லே நேற்று ஊடகத்திடம் கூறியதாவது: "திறந்திருந்த சில கடைகளைச் சுற்றி மிகவும் அமைதியின்மை இருந்ததாக (ஐக்கிய நாடுகளின்) மூன்று மதிப்பீட்டு குழுக்கள் தெரிவித்தன. உணவு மற்றும் நீர் விற்பனைக்கு வந்தபோது, நிறைந்திருந்த கூட்டத்தால் எதுவும் பெற முடியவில்லை என்பதுடன் விலையும் மிகவும் அதிகமாக இருந்தது." என்று தெரிவித்தார்.

சூறாவளியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முன்னாள் தலைநகரான இரங்கூன் மீண்டும் நாளாந்த நிலைக்கு திரும்பிவிட்டதாக CNN னிடம் World Vision ஆலோசகர் Minn தெரிவித்தார். சாலைகள் திருத்தப்பட்டுவிட்டன, மின்சாரம் மற்றும் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. உள்ளூர் செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் குடிநீர், பிளாஸ்டிக் கூடாரம், உடை மற்றும் கொசுவலை ஆகியவைகளின் வினியோகத்தை கையாண்டு வருகிறார்கள். எவ்வாறிருப்பினும், உயர்ந்து வரும் விலைவாசி மற்றும் மக்கள்வரிசைகள் கோபத்தை தூண்டி வருவதாக Reuters செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. "மக்கள் கடைக்காரர்கள் மீது கோபப்படவில்லை, அவர்கள் அரசாங்கத்தின் மீது கோபமாக இருக்கிறார்கள்." என ஒருவர் கூறியதாக அந்த செய்தி குறிப்பிட்டிருந்தது.

பர்மாவின் மோசமான இன்சீன் சிறைச்சாலை அதிகாரிகள் சூறாவளியின் போது ஒரு கலகத்தை கொடூரமாக ஒடுக்கியதாக அரசியல் கைதிகளின் உதவி அமைப்பு (AAPP) தெரிவித்தது. வேகமாக வீசிய சூறாவளி சிறைச்சாலை கட்டிடத்தை நொறுக்கிக் கொண்டிருந்த போது 1,500 க்கும் மேலான கைதிகள் அதில் பூட்டி வைக்கப்பட்டிருந்தனர். "கதவைத் திறந்து தங்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லும்படி கைதிகள் சிறைகாவலர்களைக் கேட்டுக் கொண்ட போதினும், அதிகாரிகள் அவர்களின் கோரிக்கையை நிராகரித்தனர். சிறையின் முன்வளாகத்திற்குள் சில கைதிகள் நெருப்பு வைத்ததை தொடர்ந்து கலகம் உருவானது." என அரசியல் கைதிகளின் உதவி அமைப்பு குறிப்பிட்டது. காவலர்களின் துப்பாக்கி சூட்டில் 36 கைதிகள் கொல்லப்பட்டதுடன், மற்ற 70 பேர் காயமடைந்தனர்.

சர்வதேச தலையீட்டிற்கான அழைப்பு

தாய்லாந்தில் இருக்கும் ஒரு முன்னாள் பிபிசி செய்தியாளர் லேரி ஜகன், ஏபிசி இன் Lateline நிகழ்ச்சிக்கு செவ்வாயன்று கூறும் போது, "உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 250,000 ஆக இருக்கலாம்" எனத் தெரிவித்தார். பர்மாவினுள் தொடர்ந்துகொண்டிருக்கும் சோகத்தின் அளவினை குறைக்காமல், சர்வதேச தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக பர்மா ஜன்டாவை இழிவுபடுத்த ஒரு தவறுக்கிடமளிக்காத ஊடக பிரச்சாரத்திற்கிடையில் இதுபோன்ற மதிப்பீடுகள் மிகவும் எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டும். பேட்டியின் போது, ஜகனின் முன்னாக்கிரமிப்பு என்பது முதன்மையாக சூறாவளியால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கல்ல, ஆனால் இந்த சூறாவளி "இராணுவ ஆட்சியின் சவப்பெட்டிக்கு கடைசி ஆணியை அடிக்குமா என்பதாகும்",

எவ்விதமான அரசியல் எதிர்ப்பையும் ஒடுக்குவதற்கு பலாத்காரத்தை பயன்படுத்தும் அதன் விருப்பத்தை ஒவ்வொரு தடவையும் எடுத்துக்காட்டிய பர்மாவின் இராணுவ ஆட்சிக்கு உலக சோசலிச வலைத் தளம் எவ்வித ஆதரவையுக் கொடுக்கவில்லை. அனைத்திற்கும் மேலாக, தற்போதைய இயற்கை பேரழிவுக்கு மத்தியில், தளபதிகள் தங்களின் அதிகார பதவிகளை காப்பாற்றிக் கொள்வதில் முனைப்பாக இருக்கிறார்கள்.

அதே நேரத்தில், எவ்வாறிருப்பினும், அமெரிக்கா மற்றும் முக்கிய நாடுகளிடம் இருந்து வெளிவிடப்படும் கவலைகளுக்கு எவ்வித நம்பகத்தன்மையும் வழங்கமுடியாது. அவை பர்மாவில் மற்றும் எல்லை பிராந்தியத்தில் அவற்றின் நலன்களுக்காக மேலும் அத்துயரத்தை தன்னலப்படுத்த நோக்கம் கொண்டிருக்கின்றன. சர்வதேச உதவி அமைப்புகளை எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் அனுமதிக்க மற்றும் அமெரிக்க இராணுவத்தை உள்நுழைய இராணுவ ஆட்சிக்கு அழுத்தம் அளித்து வரும் புஷ் நிர்வாகம், பர்மா ஆட்சியை அழிக்க விரும்புகிறது. ஏனென்றால் அது அமெரிக்காவின் போட்டியாளரான சீனாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.

நேற்றைய சூழ்ச்சிகரமான ஒரு நடவடிக்கையில், இராணுவ ஆட்சியின் அனுமதியுடனோ அல்லது இல்லாமலோ "பாதுகாப்பதற்கான அதன் பொறுப்புணர்வை" முன்னிறுத்தி பர்மாவிற்கு உதவிகளை வழங்க ஐக்கிய நாடுகள் சபை ஆலோசிக்க வேண்டும் என பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி பேர்னார்ட் குஷ்னேர் வலியுறுத்தினார். பிரெஞ்சு, பிரிட்டிஷ் மற்றும் இந்திய போர்கப்பல்கள் பர்மாவிற்கு அருகில் இருப்பதைக் குறிப்பிட்டு, குஷ்னேர் அறிவித்ததாவது: "பிரெஞ்சு படகுகள் மற்றும் பிரெஞ்சு ஹெலிகாப்டர்கள் இயற்கை சீற்றத்திற்குள்ளான பகுதிகளை அடைய வெறும் அரை மணி நேரம் மட்டும் ஆகும், நமது பிரிட்டிஷ் நண்பர்களுக்கும் இதே கால அவகாசம் தான் எடுக்கும் என்று நான் ஊகிக்கிறேன். பர்மா அதிகாரிகள் மீது நாங்கள் தொடர்ந்து அழுத்தம் அளித்து வருகிறோம், ஆனால் இதுவரை எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை." என்று தெரிவித்தார்.

பர்மாவின் தேசிய அதிகாரத்தை மீற வேண்டும் என்ற, குறிப்பாக 2006 இல் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையால் நிறைவேற்றப்பட்ட "பாதுகாப்புக்கான பொறுப்புணர்வு" தீர்மானம் குறித்த கருத்து குஷ்னேரின் ஆலோசனை ஆத்திரமூட்டுவதாகும். அத்தீர்மானம் இனப்படுகொலை, யுத்தம், இனச்சுத்திகரிப்பு மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களை குறிக்கிறதே தவிர இயற்கை பேரழிவுகளை குறிப்பதில்லை. பால்கனில் நேட்டோவின் தலையீட்டை தொடர்ந்து இந்த தீர்மானம் ஒரு நீண்ட வரலாற்றை கொண்டிருக்கிறது, அதில் அமெரிக்க மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் சேர்பிய நகரங்கள் மீதான விமானத் தாக்குதலை நியாயப்படுத்தவும் மற்றும் யூகோஸ்லாவியாவின் மாகாணத்தின் ஆக்கிரமிப்பை நீடிக்கச் செய்ய கொசோவாவின் மனிதாபிமான பேரழிவை தன்னலப்படுத்திக் கொண்டன.

அமெரிக்கா ஏற்கனவே USS Essex ஐ மற்றும் மூன்று பிற கப்பற்படை கப்பல்களை அருகிலுள்ள கடலில் கொண்டிருக்கின்றது. USS Essex என்பது 1,800 கப்பற்படையினரை கொண்ட நீரிலும் நிலத்திலும் தாக்கும் கப்பலாகும். ஆறு சரக்கு ஹெலிகாப்டர்களை தாய்லாந்தின் இராணுவத் தளத்திற்கு நகர்த்தியிருக்கும் பெண்டகன் பர்மாவிற்குள் நுழைவதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறது. இந்த நிலையில், புஷ் நிர்வாகத்திற்கு குஷ்னேரின் ஆலோசனையை ஆதரிக்கும் நோக்கம் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான துறைக்கான இணை செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் பின்வருமாறு கூறி இந்த கோரிக்கையை நிராகரித்திருக்கிறார்: "மியான்மர் (பர்மா) மீது ஆக்கிரமிப்பது என்பது ஒரு சிறந்த யோசனையாக இருக்காது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்." என்றார்.

பர்மாவின் இராணுவ ஆட்சி "அதன் மக்களுக்கு உதவ தவறியதை" கண்டிக்கும் வளர்ந்து வரும் சர்வதேச ஊடக பிரச்சாரத்திற்கு பின்னால் இருக்கும் உண்மையான அரசியல் முனைவுகளை குஷ்னேரின் கருத்துக்கள் குறிக்கிறது. ஆசே மாகாணம் ஒரு சுனாமியால் சீரழிக்கப்பட்ட போது, 2004 இல் இந்தோனேஷிய அரசாங்கம் இருந்தது போல அந்நாட்டு (பர்மா) அரசாங்கம் வாஷிங்டனுக்கு கூட்டாளியாக இருந்திருந்தால், பாதிக்கப்பட்டிருக்கும் மில்லியன் கணக்கானவர்களுக்கான அதன் இயலாத்தன்மையும் மற்றும் இரக்கமற்றதன்மையும் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாதிருந்திருக்கும். அதற்குப்பதிலாக, பர்மாவின் மீட்பு முயற்சிகளின் வெளிப்படையான அனைத்து பலவீனங்களும் பெரிதுப்படுத்தப்பட்டது என்பதுடன் சில விடயங்களில் கற்பனையாகவும் கூறப்படுகிறது.

சூறாவளி குறித்து சரியான நேரத்தில் தெரிவிக்க தவறியது அமெரிக்க ஜனாதிபதியின் மனைவியான லோரா புஷ் உட்பட பலரால் தீவிரமாக குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறது. எவ்வாறிருப்பினும், உலக காலநிலை ஆய்வு அமைப்பின் பேரழிவு ஆபாய தவிர்ப்பு பிரிவின் இயக்குனர் Dieter Schiessl இன் கருத்துப்படி, சூறாவளி தாக்குவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக பர்மா அதிகாரிகள் எச்சரிக்கைகளை வழங்கத் தொடங்கியிருந்தனர். சர்வதேச அமைப்பின் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தகவல் சூறாவளியின் போக்கு மற்றும் காற்றின் வேகத்தை துல்லியமாக கணக்கிட்டது. "புயலின் பேரலைகள் தான் பேரழிவுக்கான முக்கிய காரணம்." âù Schiessl தெரிவித்தார்.

இதுபோன்ற திடீர் பேரலைகளை கணிக்க சிறப்பு இராடார் தேவைப்படுகின்றன, இவை பர்மாவில் இல்லை. 2004 பேரழிவுக்கு முன்னால் இந்திய பெருங்கடலில் ஒரு சுனாமி எச்சரிக்கை திட்டத்தை நிறுவ எந்தவொரு முக்கிய நாடும் உதவி செய்யாததுபோல், தற்போது தான் உலக காலனிலை ஆய்வு அமைப்பு ஒரு நிரந்தர ராடர் நுட்பத்தை (நிதி கிடைத்தால் மட்டும்) உருவாக்க திட்டமிட்டுள்ளது. பர்மாவின் மீது அனுதாபம் கொண்டு 3 மில்லியன் டாலரை அளித்த புஷ் நிர்வாகம், நிச்சயமாக இந்த செலவை ஏற்றுக்கொள்ள தயாரென அறிவிக்கவில்லை.

ஒரு தன்னிகரில்லா கவலையுடன், இரங்கூன் விமான நிலையத்தில் கனரக வாகனங்களை பயன்படுத்தி ஒரு தாய்லாந்து இராணுவ விமானத்திலிருந்து உதவிப் பொருட்களை இறக்க இராணுவ ஆட்சி தவறியதை நேற்று ஏபிசி செய்தியாளர் பீட்டர் லாய்டு குற்றம்சாட்டானர். "பல ஆண்டுகளாக ஆட்சியின் இரக்கமற்ற நடவடிக்கைகளால், இந்த அளவிலான நெருக்கடியை சமாளிக்க பர்மாவிற்கு தேவையான உள்கட்டமைப்பை ஏற்படுத்தாமல் அந்நாட்டை திவாலாக்கி, அந்நாடு தற்போது ஒரு ஆரம்ப உள்கட்டமைப்பையே கொண்டிருக்கின்றது." என அவர் தெரிவித்தார்.

சந்தேகத்திற்கிடமின்றி, பர்மிய மக்களின் அடிப்படை தேவைகளை கூட அளிக்க தவறியது உட்பட பல குற்றங்களுக்காக இராணுவ ஆட்சி குற்றம்சாட்டப்படவேண்டிய ஒன்றாகும். ஆனால் ஹூரிகேன் காத்ரீனா பேரழிவை வியக்க வைக்கும் அளவிற்கு மோசமாக கையாண்ட விதம் போன்ற இதைமாதிரியான பிரச்சனைகள் புஷ் நிர்வாகத்தில் வந்தபோது இல்லாமல், தற்போது பர்மா மீது குற்றஞ்சாட்டுவது பாசாங்கின் உச்சக்கட்டமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பர்மாவின் விடயத்தில், அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் ஒரு பொருளாதார தடையையும் நிலைநிறுத்தி வருகின்றார்கள். அதுவும் நாட்டின் தொடர்ச்சியான பின்தங்கிய பொருளாதார நிலைக்கு நிச்சயமாக பங்கு வகிக்கிறது.

பர்மாவில் ஒரு சர்வதேச தலையீட்டிற்கான தற்போதைய அழுத்தமானது பொருளாதார தடைக்கு பின்னால் இருந்த அதே அரசியல் நோக்கத்தை முன்வைத்து முன்னெடுக்கப்படுகிறது. அதாவது இராணுவ ஆட்சி அகற்றிவிட்டு அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு ஆதரவான ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதேயாகும். இந்த அரசியல் கணிப்பீடுகளில் கடைசியில் கவனத்திற்கு எடுக்கப்படுவதே பர்மா மக்களின் விதியாகும்.