World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India's Stalinists mount innocuous protests as masses confront spiraling food prices

திருகுச்சுருளாய் உயரும் உணவுப் பொருட்களின் விலைகளை மக்கள் எதிர்கொள்ளுகையில் இந்திய ஸ்ராலினிஸ்ட்டுக்கள் பயனற்ற எதிர்ப்புக்களை நடத்துகின்றனர்

By a WSWS Reporting Team
16 May 2008

Use this version to print | Send this link by email | Email the author

இந்தியாவின் முக்கிய ஸ்ராலினிசக் கட்சியும் இடது முன்னணி பாராளுமன்ற முகாமில் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாகவும் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்), வியாழனன்று திருகுச்சுருளாய் உயரும் உணவுப்பொருட்களின் விலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தியா முழுவதும் மாநகரங்கள், நகரங்களில் இருக்கும் மத்திய அரசாங்க அலுவலங்களுக்கு எதிரே ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

ஒரு மில்லியன் மக்கள் நேற்றைய எதிர்ப்புக்களில் கலந்து கொள்ளுவர் என்று CPM அறிவித்திருந்தது. ஆனால் கூறப்பட்டதை விட மிகக் குறைவாக, மிகக் குறைவான அளவில்தான் வந்திருந்ததாக அறிகுறிகள் இருந்தன.

இந்தியாவின் நான்காம் பெரிய நகரமான சென்னையில் (மெட்ராஸ்), ஒரு உலக சோசலிச வலைத்தள செய்தியாளர் குழு வட சென்னையில் தொழிலாள வர்க்க பகுதியான புரசைவாக்கத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான BSNL தொலைபேசி நிறுவனத்திற்கு எதிரே சிபிஎம் மறியலில் ஈடுபட்டதில் 350 பேருக்கு மேல் மக்களை காணவில்லை. கிட்டத்தட்ட 8 மில்லியன் மொத்த ஜனத்தொகை இருக்கும் சென்னையில் சிபிஎம் ஏற்பாடு செய்திருந்த ஒன்பது எதிர்ப்புக்களில் BSNL நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்றதும் ஒன்று ஆகும்.

சிபிஎம் மற்றும் அதன் இடது முன்னணி நட்பு கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றுடன் இணைந்து ஆகஸ்ட் 8, 2007, டிசம்பர் 14, 2006 மற்றும் செப்டம்பர் 29, 2005 ஆகிய நாட்களில் ஒரு நாள் வேலை நிறுத்தங்களை ஏற்பாடு செய்திருந்தன. இதன் கூறப்பட்ட நோக்கம் காங்கிரஸ் தலைமையில் இருக்கும் சிறுபான்மை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) மீது அதன் புதிய தாராளக் கொள்கைகளை கைவிடுவதற்கு அழுத்தம் கொடுப்பதாக இருந்தது.

நேற்றைய எதிர்ப்புக்கள் பெருவணிக ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு "மக்கள் சார்பு கொள்கைகளை இயற்ற வேண்டும்" என்ற இதே திவாலான முன்னோக்கை பகிர்ந்து கொண்டதாக இருந்தது; ஆனால் முந்தைய ஒரு நாள் வேலைநிறுத்தங்களில் பல மில்லியன் அமைப்பு சாரா மற்றும் தொழிற்சங்க மயப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் பங்கு பெற்று நாட்டின் பல பணிகளையும் முடக்கியது போல் இல்லாமல், நேற்றைய எதிர்ப்புக்கள் பயனற்ற ஆர்ப்பாட்டங்களாக இருந்தன. பெரும்பாலும் சிபிஎம் உறுப்பினர்களும் நெருக்கமான அதன் ஆதரவாளர்கள் மட்டுமே பங்கு பெற்றனர். உதாரணமாக சென்னையில் மக்கள் ஆதரவைத் திரட்டுவதற்கான தீவிர முயற்சி ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சில சுவரொட்டிகள் தவிர அதிகம் காணப்படவில்லை, துண்டுப் பிரசுரங்கள் பலவும் முன்கூட்டி வினியோக்கிக்கப்படவும் இல்லை.

இடது முன்னணியானது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தை, அதன் பதவிக்காலம் ஐந்தாண்டு முடியும்பொழுது, அடுத்த வசந்த காலம் வரையில் அதிகாரத்தில் நீட்டித்திருக்க உதவும் என்று பலமுறையும் சிபிஎம் கூறிவந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பெரு வணிக நலன்கள் கொள்கைகளை பின்பற்றி வருகிறது என்பதை உண்மை என்று ஒத்துக் கொண்டாலும், அமெரிக்காவுடனான இராணுவமல்லா துறையில் அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு காங்கிரஸ் தலைமை இடது முன்னணியுடன் முறித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக திரும்பத்திரும்ப சமிக்கை கொடுத்தாலும் சிபிஎம் இவ்வாறு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அமெரிக்காவுடனான அந்த உடன்பாடு "உலகந்தழுவிய", இந்திய-அமெரிக்க மூலோபாய பங்காண்மையை வலுப்படுத்தும் என்று அர்த்தப்படுத்துகிறது.

நாட்டின் தலைநகரான புது தில்லியில் நடந்த சிபிஎம்மின் எதிர்ப்பு மறியலில், அதன் அரசியற் குழு உறுப்பினரும் இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) எனும் அமைப்பின் பொதுச் செயலாளருமான எம்.கே.பாந்தே, இடது முன்னணியின் தயவினால்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, அரசாங்கத்தை தொடர முடிகிறது என்ற நிலையிலும் அவ்வரசாங்கத்திற்கு எதிரான சொற்ஜால வசைமாரிகளை அள்ளிவீசினார்.

Press Trsut of India ஆல் "ஒரு சில நூற்றுக்குள்தான்" என்று மதிப்பிடப்பட்ட கூட்டத்தில் பேசுகையில், பாந்தே, அரசாங்கம் பணவீக்கத்தை தடுப்பதற்கு "திறமையான நடவடிக்கைகளை" எடுக்காததற்காக கண்டனம் தெரிவித்தார். "அரசாங்கம் கஷ்டப்படும் மக்களின் நல்களைக் காப்பாற்றுவதைவிட பொருட்களை பதுக்குபவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் நலன்களை காப்பதில், கூடுதலான அக்கறையை காட்டுவது போல் தோன்றுகிறது" என்று பாந்தே குறிப்பிட்டார்.

மேற்கு வங்கத்தில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடக்கின்றன மற்றும் பிந்தையதில் மாநிலத் தேர்தல் பிரச்சாரங்கள் நடக்கின்றன என்ற அடிப்படையில் இடது முன்னணி தலைமையில் ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்திலும் மற்றும் கர்நாடாகாவிலும் சிபிஎம் நேற்று எதிர்ப்புக்களை கூட நடத்தவில்லை.

இந்தியாவின் பிற அரசியல் ஸ்தாபனங்களை போலவே சிபிஎம்- ம் உணவுப் பொருட்கள் விலைகள் திருக்குச்சுரளாய் ஏறுதல் சமூக அமைதியின்மையை மிகப் பரந்த முறையில் எரியூட்டக் கூடும் என்று அஞ்சுகிறது. ஏற்கனவே கடந்த இலையுதிர்காலத்தில், இடது முன்னணி ஆட்சி நடத்தும் மேற்கு வங்கத்தில் உணவுப் பொருட்கள் பொதுவினியோகத்தை ஒட்டி கலகங்கள் ஏற்பட்டன; மத்திய அரசாங்கத்தால் நிதியூட்டப்பட்டு மாநில அரசாங்கத்தால் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டமான பொது வினியோக முறையில் பெரும் சீர்கேடுகள் இருப்பதாக மக்களால் கூறப்பட்டதை அடுத்து கலவரங்கள் நடந்தன.

உலகெங்கிலும் உணவுப் பொருள்கள் விலை ஏற்றம் அடைந்துள்ள நிலையில், இந்தியாவிலும் வியக்கத்தக்க அளவில் சமீப காலத்தில் உணவுப் பொருட்கள் விலைகள் உயர்ந்துள்ளன. அரசாங்கக் கூற்றின்படி, ஏப்ரல் 26ல் முடிவடைந்த வாரத்தில் ஆண்டின் மொத்த விலைவாசிப் பணவீக்கம் 7.61 சதவிகிதத்தை அடைந்தது. சில்லறை விலைகளில் அதிகரிப்பு, குறிப்பாக உணவுப் பொருட்களில் என்பது, இன்னும் கூடுதலாகும். நுகர்வோர் பிரிவு அமைச்சரகம் இந்தியாவின் நான்கு பெருநகர பகுதிகளிலும் --மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை-- அரிசி, கோதுமை, சர்க்கரை, உணவு எண்ணெய் உட்பட 14 முக்கிய பொருட்களின் விலையேற்றம் மார்ச் 2007 முதல் மார்ச் 2008 க்குள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இத்தகைய விலைவாசி உயர்வுகள் தவிர்க்க முடியாமல் மிக வறிய, மக்களின் நலிந்த பிரிவுகளைத்தான் மிகவும் அதிகமாக பாதிப்பிற்கு உட்படுத்துகின்றன. இந்தியாவில் 1.1 பில்லியன் மக்களில் 800 மில்லியன் மக்கள் அமெரிக்க டாலர் 2க்கும் கீழான தொகையில் ஒவ்வொரு நாளையும் கடத்துகின்றனர்; 300 மில்லியன் மக்கள் நாள் ஒன்றுக்கு 1 டாலருக்கும் கீழேதான் செலவழித்து வாழவேண்டும். UNICEF இந்தியாவின் குழந்தை ஊட்ட உணவுப் பிரிவின் தலைவரான Victor Aguayo புதனன்று கூறினார்: "உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு மற்றொரு பெரும் பாதிப்பைக் கொடுக்கும் பிரிவாகிவிட்டது... உணவுப் பொருட்கள் விலை இன்னும் தொடர்ந்து அதிகரித்தால், அது மக்களை சாப்பாடு இல்லாமல் பட்டினியில் தள்ளிவிடும்."

இது ஏற்கனவே கிராமப்புற இந்தியாவின் பெரும்பகுதியில் நெருக்கடியான இடர்பாடுகள் இருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான கடன் சுமை நிறைந்த விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்யத் தள்ளப்பட்டுள்ள நிலையில் வந்துள்ளது. சமீபத்தில் பிரிட்டனை தளமாகக் கொண்ட சர்வதேசப் புகழ் பெற்ற மருத்து சஞ்சிகையான Lancet இந்தியாவில் ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகளில் 51 சதவிகிதத்தினர், குழந்தை மற்றும் தாயின் ஊட்டமின்மை என்பதால் மிகக் குறைந்த வளர்ச்சியில் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.

இந்தியாவின் நிதி மந்திரி ப.சிதம்பரம் கடந்த வாரம் மாட்ரிட்டில் உணவு நெருக்கடி மற்றும் வளரும் சமூக அமைதியின்மை பற்றி விவாதிக்க ஆசிய வளர்ச்சி வங்கி ஏற்பாடு செய்திருந்த ஆசிய நிதி மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் திரும்பி வந்தபின் உணவுப் பொருட்கள் விலை உயர்வு உடனே குறைவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று எச்சரித்தார். "பணவீக்கம் உலகெங்கிலும் குறையவில்லை; ஏனெனில் தொடர்ந்து எண்ணெய் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது, பீப்பாய் ஒன்று $124 ஐ அடைந்துவிட்டது; மற்றும் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது" என்றார்.

ஏப்ரல் மாதம் உலக வங்கிக் கூட்டம் ஒன்றில் இந்திய நிதி மந்திரி ஒரு எச்சரிக்கை விடுத்தார்: "விலையேற்றம் பற்றி உலகளவில் ஒருமித்த கருத்து கொண்டு நடவடிக்கையை நாம் எடுத்தால் ஒழிய, பல நாடுகளிலும் உணவுப் பொருட்கள் விலையுயர்வால் தூண்டப்பட்டுள் சமூக அமைதியின்மை ஒரு உலகந் தழுவிய தொத்துநோய் போல் பரவி, வளர்ச்சி பெற்றிருந்த நாடு மற்றவை என்று எதையும் தீங்கின்றி விட்டு வைக்காது."

சமீபத்திய வாரங்களில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் தயக்கத்துடன் தைரியமற்ற சில நடவடிக்கைகளை எடுத்தது; இதில் வங்கிகள் வைத்துக் கொள்ள வேண்டிய பண இருப்பு வீதம் உயர்த்தப்பட்டதும் அடங்கியிருந்தது; ஆனால் முதலீட்டாளருக்கு ஆதரவாக இருக்கும், சமீப ஆண்டுகளில் வந்த, எளிய கடன் கொள்கையானது, முறிக்கப்பட்டால் அது பொருளாதார வளர்ச்சியை நெரித்து விடும் என்று அஞ்சுகிறது. ஏற்கனவே பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைவது போல் தோன்றுகிறது; அதிலும் குறிப்பாக உற்பத்திப் பிரிவில் வளர்ச்சி வீதம் குறைந்துள்ளது.

அரிசி வகைகள், (மிக அதிக விலைப் பிரிவை சேர்ந்ததை விட மற்ற) பருப்புக்கள், சிமென்ட் மற்றும் எஃகு ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுவதை அரசாங்கம் தடுத்துள்ளது; மேலும் இறக்குமதி வரிகளை சோளம், எண்ணெய் ஆகியவற்றின் மீது முற்றிலும் அகற்றியுள்ளது. இந்த நடவடிக்கைகள் அரசாங்கத்தின் பயத்தை சுட்டிக் காட்டினாலும், சிதம்பரமும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பரந்த முறையில் பொருளாதாரக் கட்டுப்பாடு வராது என்றுதான் கூறியுள்ளனர்; ஏனெனில் அத்தகைய கட்டுப்பாடு உலக முதலாளித்துவத்திற்கு இந்தியாவை ஒரு குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு கொண்ட சொர்க்கமாக மாற்றும் இதன், மற்றும் முந்தைய அரசாங்கங்களின் முயற்சிகளை கீழறுத்துவிடும் என்பதாகும்.

25 விவசாயப் பொருட்களில் முன்கூட்டிய வணிகம் தடைக்கு உட்படுத்தப்பட வேண்டும், (பாராளுமன்ற நிலைக் குழு கூறியுள்ளபடி) பொதுப் விநியோக முறை (PDS) சீராக்கப்பட வேண்டும், சுங்க வரிகள், உற்பத்தி வரிகள் எண்ணெய் மீது குறைக்கப்பட வேண்டும் ,பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் சில்லறை விலை குறைக்கப்பட வேண்டும் மற்றும் முக்கிய பொருட்களை பதுக்குபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்பது உள்பட இன்னும் கூடுதலான, ஆக்கிரோஷ நடவடிக்கைகள் வேண்டும் என்று சிபிஎம் கோருகிறது.

பெருவணிக UPA அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்பதற்கான அறிகுறிகள் இல்லை; ஏனெனில் ஏழைகளின் நிலையை அரசாங்கம் உண்மையிலேயே உயர்த்த வேண்டுமானால், பெரு வணிகத்தினர், செல்வந்தர்கள் மீது வியத்தகு முறையில் மிக அதிக வரி கொடுப்பதற்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்க வேண்டும்.

அரசாங்கம் அப்படியே செய்தாலும், உலகெங்கிலும் இப்பொழுதுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ் அவை தற்காலிக நடவடிக்கைகளாகத்தான் இருக்கும்.

இதற்கிடையில், 1991ம் ஆண்டு ஏற்றுமதி வழிப்பட்ட வளர்ச்சி மற்றும் இந்திய பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரத்துடன் முழு அளவில் ஒன்றிணைத்தல் ஆகியவற்றிற்கு ஆதரவாக அரசு தலைமையிலான முதலாளித்துவ வளர்ச்சியை கைவிடல் என்ற, இந்திய முதலாளித்துவத்தின் அடிப்படை வர்க்க மூலோபாயத்தை சவால்விடுவதற்கு ஸ்ராலினிஸ்ட்டுக்கள் எதிர்க்கின்றனர். உண்மையில் சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி அரசாங்கம் மேற்கு வங்கத்தில் கருணையற்ற முறையில் இந்திய, சர்வதேச முதலீட்டாளர்களுடைய நலன்களுக்காக அமைக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துகிறது. (See West Bengal: Left Front government rattled by popular outrage over Nandigram massacre)

நேற்றைய சிபிஎம் எதிர்ப்புக்கள், இன்னும் ஆரவாரமான ஒரு நாள் பொது வேலை நிறுத்தங்கள் போல், பொருளாதாரத்தில் இடர்பாடு நிறைந்து சீற்றம் அடைந்துள்ள மக்களை, இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் அதிகாரத்தில் இருக்கும் மரபார்ந்த கட்சியான காங்கிரஸை நிலைநிறுத்தும் ஸ்ராலினிஸ்டுகளின் கொள்கையுடன் பிணைக்கும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளன. இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி அல்லது பிஜேபியை பதவிக்கு வராமல் தடுக்கும் ஒரே வழி இது என்ற அடிப்படையில் சிபிஎம் அவ்வாறு செயல்படுகிறது.

அதே நேரத்தில், அடுத்த ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தல்களை கருத்தில் கொண்டு பல வட்டார, சாதிய கட்சிகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதற்கு ஸ்ராலினிஸ்ட்டுக்கள் உணவுப் பொருட்கள் விலைப் பிரச்சினையை இழிந்த முறையில் பயன்படுத்தி வருகின்றனர். ஏப்ரல் மாதம் இடது முன்னணி UNPA எனப்படும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியுடன்- சமாஜ்வாதி கட்சி, தெலுகு தேசக் கட்சி, இந்திய தேசிய லோக் தளம் மற்றும் அசாம் கண பரிஷத் ஆகியவை கொண்ட கூட்டுடன் - பொது உடன்பாட்டை காண்பதற்காக, உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்திற்கு எதிரான வாரம் முழுவதும் நடைபெறும் அடையாள எதிர்ப்புக்களை ஆதரித்தது.

UNPA வில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் முதலாளித்துவ கட்சிகள் ஆகும்; அவை சிபிஎம் போலவே முதலாளித்துவ புதிய தாராளக் கொள்கை செயல்பட்டியலை செயல்படுத்திவருபவை ஆகும்.

ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இப்பொழுது "மத சார்பற்ற கட்சி" எனப் புகழும் தெலுகு தேச கட்சி, இந்தியாவை 1998ல் இருந்து 2004 வரை ஆண்டுவந்த பாரதிய ஜனதா தலைமையில் கீழ் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் முக்கிய கூறுபாடுகளில் ஒன்றாக இருந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியை நடத்தி வந்த தெலுகு தேச கட்சியானது, உலக வங்கி அங்கீகரித்த அதன் "சீர்திருத்தக் கொள்கைகளை மக்கள் எதிர்த்ததன் காரணமாக "2004 ஆந்திரப் பிரதேச மாநிலத் தேர்தல்களில் படு தோல்வியை அடைந்தது.

UNPA உடன் இணைந்து நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஏப்ரல் 19 அன்று சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் UPA அரசாங்கத்திற்கு, "உணவுப் பொருட்கள் விலைகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், வெடிப்புத் தன்மை நிறைந்த நிலை ஏற்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்திய அதிகாரத்திலுள்ள அமைப்பாக இருக்கும் சிபிஎம் சடங்குத்தனமாக மார்க்சிசம் பற்றிப் பேசினாலும், பெருகிய பொருளாதார பாதுகாப்பு இன்மை, சமூக சமத்துவமின்மை பற்றிய மக்களின் வளர்ந்து வரும் கோபத்தை மக்களின் சமூகத் தேவைகளுக்கு பதிலாக ஒரு சிலரின் இலாப நலன்களை இடம்பெறச்செய்யும் காலாவதியாகிப்போன சமூகப் பொருளாதார ஒழுங்கை சவால் செய்வதற்கு வழிப்பட்டுத்தும் நோக்கத்தை கொண்ட, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைப்பதில் இருந்து தொழிலாள வர்க்கத்தை தடுப்பதில் உறுதியாக உள்ளது.

சென்னை புரசைவாக்கத்தில் சிபிஎம் மறியலை காணச் சென்றிருந்த உலக சோசலிச வலைத் தளத்தின் நான்கு உறுப்பினர்களும் வலைத் தளத்தில் வந்துள்ள கட்டுரைகளை வினியோகித்த போது, சிபிஎம் கட்சி ஊழியர்களால் உடலுக்கு ஊறு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டனர். சிபிஎம் காரியாளர்களில் ஒருவர், "இவர்கள்தான் நந்திகிராம் பற்றியதில் நம்மைத் தாக்கி வந்துள்ளனர்" என்று கூறினார். (இந்தக் குறிப்பு, மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம், நந்திகிராமில் பெருவணிகத்திற்காக வறிய விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரித்த அதன் கொள்கைக்கு எதிராக விவசாயிகளின் எதிர்ப்பை நசுக்க கடுமையான ஒடுக்குமுறையை பயன்படுத்தியதை உலக சோசலிச வலைத் தளம் கண்டித்தது பற்றியதாகும்). மற்றொரு சிபிஎம் காரியாளர் "ஸ்ராலினிசக் கட்சிகள்" என்ற சொற்றடர் கட்டுரை ஒன்றில் இருந்ததை சுட்டிக் காட்டி WSWS, சிபிஎம் பற்றி மக்களிடையே "குழப்ப" முயல்கிறது என்று குற்றம் சாட்டினார்.

சிபிஎம் மறியலைப் பார்த்தவர்கள் சிலருடன் WSWS குழு உரையாடியது. ஒரு ஐம்பது வயதான ஆட்டோ ரிக்ஷா டிரைவர் மோகன் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார்: மத்திய அரசாங்கமே! மாநில அரசாங்கமே! என்று கோஷங்களை எழுப்புவதற்குப் பதிலாக இவர்கள் சிபிஐ, சிபிஎம் இரு கட்சிகளும் டெல்லியில் இருக்கும் மத்திய அரசாங்கம், சென்னையில் இருக்கும் மாநில (தி.மு.க.) அரசாங்கம் ஆகியவற்றிற்கு கொடுக்கும் ஆதரவை ஏன் விலக்கிக் கொள்ளக்கூடாது? டெல்லியில் மத்திய அரசின் கால்களைப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்; இங்கு நம் முன்பு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்."

இரயில்வேயில் பொறியாளராக இருக்கும் அற்புதநாதன் என்பவரும் சிபிஎம் பெரு வணிக அரசாங்கங்களை முண்டு கொடுத்து தாங்கிநிறுத்துவதாக கூறினார்; "இவர்கள் (சிபிஎம்) மக்களை ஏமாற்றுகிறார்கள்" என்றார் அவர். "மத்திய அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பது மட்டும் இல்லாமல் மாநில அரசாங்கத்திற்கும் இவர்கள் ஆதரவு கொடுக்கின்றனர். இவர்கள் UPA அரசாங்கத்தின் நிதி மந்திரி ப.சிதம்பரம் சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட ஆதரவு கொடுத்தனர். அந்த நிதி மந்திரி இப்பொழுது UPA அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளின் மையத்தானத்தில் உள்ளார், சாதாரண மக்களுடைய அடிப்படைத் தேவைகளுக்கு எதிராக பெருவணிகத்திற்கு ஆதரவு கொடுக்கிறார். இவை அனைத்தும் கண்துடைப்பு ஆகும்."