World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan journalists protest against abduction and torture of colleague

ஊடகவியலாளர் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதற்கு எதிராக இலங்கை ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

By our correspondents
28 May 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஆங்கில வாரப் வெளியீடான நேஷன் பத்திரிகையின் துணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதற்கு எதிராக, சுமார் 200 ஊடகவியலாளர்கள் மே 23 அன்று கொழும்பில் ஒரு சுறுசுறுப்பான சந்தியில் நடந்த நன்பகல் மறியல் போராட்டம் ஒன்றில் பங்குபற்றினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வசிப்பிடமான அரலி மாளிகை நோக்கி செல்வதை தடுப்பதற்காக உயர் மட்ட அதிகாரிகள் உட்பட 100 பொலிசாருக்கும் அதிகமானோர் அணிதிரட்டப்பட்டிருந்தனர்.

இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் சுதந்திர ஊடக அமைப்பு உட்பட ஐந்து ஊடக அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் நொயாரை கடத்தி தாக்கியது யார் என்பதை கண்டுபிடிக்க முழு விசாரணை நடத்துமாறு கோரியதோடு நொயாரின் கடத்தல் உட்பட ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மீண்டும் மீண்டும் நடத்தப்படும் தாக்குதல்களில் அரசாங்கம் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர்.

நொயாரை சித்திரவதை செய்தமைக்குப் பொறுப்பாளிகள் யார் என இன்னமும் அடையாளங் காணப்படாத போதிலும், இலங்கை இராணுவம் அல்லது அதனுடன் இணைந்து செயற்படும் துணைப்படைகள் மற்றும் குண்டர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தின் வெடிப்புடன் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை நசுக்குவதற்காக அரசாங்கத்தின் மெளன ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களில் நொயாரின் கடத்தல் புதியதாகும்.

நேஷன் பத்திரிகையின் பாதுகாப்பு தொடர்பான நிருபரான நொயர், கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருந்தவாறே உலக சோசலிச வலைத் தளத்துடன் சுருக்கமாக பேசினார். அவர் கொழும்புக்கு அருகில் உள்ள தெஹிவலையில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் வைத்து மே 22ம் திகதி இரவு 10 மணியளவில் கடத்தப்பட்டார். வேன் ஒன்று அவரை வீடுவரை பின்தொடர்ந்து வந்திருந்தது. மூவர் அவருக்கு கைவிலங்கு மாட்டி, அவரது கண்களை கட்டி வேனுக்குள் இழுத்துப் போட்டுக்கொண்டனர். அந்த வாகனம் ஒரு மணித்தியாலமாக பயணித்துள்ளது.

நொயர் மரப் பொல்லுகளால் கடுமையாக தாக்கப்பட்டார். அடுத்த நாள் விடயற்காலை 4 மணியளவில் அவரது வீட்டுக்கு அருகில் அவர் வீசப்பட்டுக் கிடந்தார். அவரது தலைக்குப் பின்னும் காதிலும் இன்னமும் காயமும் வலியும் உள்ளதோடு வலது கண்ணுக்குப் பக்கத்திலும் தாடையின் இரு பக்கமும் கன்றிப்போயுள்ளது. அவரது கால்களிலும் பின்புறமும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். விலங்குகளால் அவரது மணிக்கட்டுகளில் காயமேற்பட்டுள்ளது.

அவர், அவரது வீட்டுக்கு அருகில் வீசப்பட்டிருந்தமையானது பாதுகாப்பு படையினரின் தொடர்பை சுட்டிக்காட்டுகின்றது. பொலிசாரும் இராணுவத்தினரும் கொழும்பு மற்றும் அதை சூழ உள்ள பகுதிகள் பூராவும் ஏறத்தாழ ஒவ்வொரு பிரதான சந்திகளிலும் சோதனைச் சாவடிகளை ஸ்தாபித்துள்ளனர். குறிப்பாக, விடியற்காலை நேரங்களில் வழமையாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனையிடப்படுவதுண்டு. கடத்தல்காரர்கள் அகப்படாமல் போனமை, உயர் மட்ட பொலிஸ் அல்லது பொலிசாரின் தலையீட்டை இதில் பலமாக குறிக்கின்றது.

நொயர் குறிப்பிட்டதன்படி, அவரை விசாரித்தவர்கள் இராணுவ விவகாரங்கள் தொடர்பான அவரது கட்டுரைகளுக்கு அவர் தகவல் பெறுவது எப்படி என்பதை தெரிந்துகொள்ளவே முயற்சித்துள்ளனர். நொயர் யுத்தத்தின் ஆதரவாளராக இருந்த போதிலும், அவர் உயர் மட்ட அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்கும் முறை தொடர்பாகவும் விமர்சித்திருந்தார். கடத்தியவர்கள் தெரிந்துகொள்ள விரும்பியது என்ன என்பது பற்றி பகிரங்கமாக வெளிப்படுத்தினால், மோசமான பழிவாங்கலுக்கு உள்ளாவார் என அவர் எச்சரிக்கப்பட்டார்.

நொயர் மே 11 எழுதிய பக்கமே அவரது கடத்தலுக்கு காரணமாக இருக்கலாம் என கடந்த வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் இருந்த ஊடகவியலாளர்கள் கருதினர். "இராணுவம் அதன் தளபதியின் தனியார் சொத்து அல்ல" என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரை, இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வழிகாட்டல் தொடர்பாக விமர்சித்திருந்தது. அந்தக் கட்டுரை வெளியானதில் இருந்து அவருக்கு பல அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் அவர் முன்னெச்சரிக்கையாக நடந்துகொண்டதாகவும் நொயாரின் குடும்பத்தினர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.

இராஜபக்ஷ அராசங்கமும் மற்றும் அவரது இராணுவமும் பாதுகாப்புப் படைகள் தொடர்பான எந்தவொரு விமர்சனத்தையும் தாங்கிக்கொள்ளத் தயாராக இல்லை. அது எந்தளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் சரி. அரசிற்கு சொந்தமான தொலைக்காட்சியில் இந்த மாத முற்பகுதியில் கருத்துத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோடாபய இராஜபக்ஷ, "பாதுகாப்புப் படைகளுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் பாதகமான" செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்களை "ஊடக துரோகிகள்" என திட்டினார். அத்தகைய ஊடகங்களை தடைசெய்யவேண்டும் எனவும் அவர் கோரினார்.

ஜனவரியில் இரிதா லங்காதீப பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில், இராணுவ விவகாரங்கள் தொடர்பான செய்திகளை முழுமையாக தணிக்கை செய்ய வேண்டுகோள் விடுத்த பாதுகாப்புச் செயலாளர், "இராணுவம் தொடர்பான எந்த விடயம் பற்றியும் செய்தி வெளியிட வேண்டிய தேவை இல்லை" என வாதிட்டார். ஜனவரி 2 வெளியான FùIù பத்திரிகையில் இராணுவத் தளபதி பொன்சேகா, அரசாங்கத்தின் வழியைப் பின்பற்றத் தவறும் ஊடகங்கள் "தேசபக்தி இல்லாதவை" மற்றும் இராணுவத்தின் யுத்த முயற்சிகளுக்கு "பெரும் தடையாக இருப்பவை" எனத் தெரிவித்தார்.

புலிகளின் கட்டுப்பாட்டிலான பிரதேசங்களை கைப்பற்றுமாறு 2006 ஜூலையில் ஜனாதிபதி இராஜபக்ஷ கட்டளையிட்டதை அடுத்து, இராணுவம் கிழக்கில் சில துரித வெற்றிகளைப் பெற்றது. ஆயினும், கடந்த ஆண்டு பூராவும், வடக்கில் எஞ்சியுள்ள புலிகளின் கோட்டைகளைக் கைப்பற்றுவதற்கான இராணுவத்தின் முயற்சி சகதிக்குள் புதைந்துள்ளது. முகமாலைக்கு அருகில் கடந்த மாதம் முன்னெடுத்த தோல்விகண்ட தாக்குதலில் இராணுவம் பெரும் உயிரிழப்புக்களை சந்தித்தது. யுத்தச் செலவானது வாழ்க்கைத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, வெகுஜன அதிருப்தியை கிளறியுள்ளது.

மே 11 வெளியான நொயரின் கட்டுரை, பதவி உயர்வில் தமது விருப்பத்தை முன்னிலைப்படுத்துவதாகவும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்குவதாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா மீது குற்றஞ்சாட்டியது. அதற்கு பிரிகேடியர் சமந்த சூரிய பண்டார ஒரு உதாரணமாகும். அவர் "அவசியமான அனுபவங்கள் இன்றி" யாழ்ப்பாணத்தில் 53வது பிரதான தாக்குதல் டிவிஷனுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளதோடு முகமாலையில் உயிரிழந்த துருப்புக்களையும் வழிநடத்தியுள்ளார்.

தனிப்பட்ட விரோதங்கள் மற்றும் போட்டிகள் சந்தேகத்திற்கிடமின்றி சம்பந்தப்பட்டுள்ள அதே வேளை, யுத்தம் இழுபடுகின்ற நிலையில் இராணுவ உயர்மட்டத்தினருள் கூர்மையான பதட்ட நிலைமை தெளிவாகத் தோன்றுகிறது. புலிகளுக்கு எதிரான துரித வெற்றியில் பெருமளவில் சார்ந்துள்ள இராஜபக்ஷ அரசாங்கம், யுத்தத்தை ஆதரிப்பவர்கள் கூட இராணுவத்தை வெளிப்படையாக விமர்சிப்பதையிட்டு நுன்ணுணர்வுடன் உள்ளது.

ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு கொல்லப்படுதல் மற்றும் அச்சு நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட ஊடகங்கள் மீதான அரச அடக்குமுறையானது இராஜபக்ஷ 2005 நவம்பரில் குறுகிய வெற்றியைப் பெற்றதில் இருந்தே அதிகரிந்து வருகின்றது. உத்தியோகபூர்வமான தணிக்கை விதிக்கப்படாவிட்டாலும் இராணுவத்தால் வெளியிடப்படும் பிரச்சாரத்தில் இருந்து ஊடகங்கள் விலகிச் செல்லக்கூடாது என அரசாங்கம் மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றது.

2007 மே முதல் 2008 மே வரையான காலப்பகுதியில் ஊடக ஊழியர்கள் அல்லது பத்திரிகையாளர்கள் சம்பந்தப்பட்ட இரு கொலைகள், இரு கடத்தல்கள் (நொயர் உட்பட) மற்றும் 15 கைதுகள் இடம்பெற்றிருப்பதாக சுதந்திர ஊடக அமைப்பு அறிக்கை செய்துள்ளது. இதே காலப்பகுதியில் ஐந்து வானொலி சேவைகளின் அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டன. ஊடகவியலாளர்களின் சர்வதேச சம்மேளனத்தின் படி, 2007ம் ஆண்டில் இலங்கையில் ஆறு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மிகவும் இழிபுகழ்பெற்ற சம்பவங்களாவன:

* இந்த ஆண்டு மே 19ம் திகதி, கொழும்பு புறநகர் பகுதியான கிரிபத்கொடையில் வெசாக் கொட்டாட்டங்களில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த சிரச டீ.வி. ஊழியர்கள் குழுவொன்றை குண்டர்கள் தாக்கினர். கிரிபத்கொடை பிரதேசத்தின் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) அமைப்பாளர் தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா ஆவார். மற்றும் அவரது குண்டர் வழிமுறைகளை செய்தியாக்கியமைக்காக குறிப்பாக அவர் சிரச டீ.வி. யின் எதிரியாவார்.

* மார்ச் 17 அன்று, அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சி சேவையான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தபான ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை நசுக்குமாறு ஜனாதிபதி இராஜபக்ஷ இராணுவத்திற்குக் கட்டளையிட்டார். கடந்த டிசம்பரில் தான் ஆற்றிய உரை ஒளிபரப்பப்படாதது ஏன் எனக் கேட்டுக்கொண்டு ரூபவாஹினி நிலையத்திற்குள் அடாவடித்தனம் செய்த தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியமையினாலேயே இந்த வேலை நிறுத்தம் வெடித்தது. அதில் குண்டர்கள் செய்தி ஆசிரியர் ஒருவரை தாக்கினர். இரண்டு நாட்களின் பின்னர், ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் ஒருவரை ரூபவாஹினியை மேற்பார்வை செய்ய ஜனாதிபதி நியமித்ததை அடுத்து இந்த வேலைநிறுத்தம் நசுக்கப்பட்டது.

* மார்ச் 17ம் திகதி, சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பத்தி எழுத்தாளரும் மற்றும் அவுட்ரச் வலைத் தளத்தின் ஆசிரியருமான ஜே.எஸ். திஸ்ஸநாயகம், இழிபுகழ்பெற்ற பொலிசாரின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு இரு மாதங்கள் கடந்துள்ள போதிலும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்றி இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுளார்.

* டிசம்பர் 21, கொழும்பு தெற்கில் உள்ள லீடர் வெளியீட்டாளர்கள் நிறுவனத்திற்குள் பாய்ந்த ஒரு ஆயுதக் குழு அதற்கு தீமூட்டியது. இராஜபக்ஷ அரசாங்கத்தின் மோசடி, ஜனநாயக உரிமைகள் மீதான வன்முறை மற்றும் அரசாங்கத்திற்குச் சார்பான துணைப்படைக் குழுக்களின் நடவடிக்கைகள் தொடர்பாக, இந்த வெளியீட்டு நிறுவனத்தால் வெளிவரும் பல பத்திரிகைகள் விமர்சித்துள்ளன.

* கடந்த ஆண்டு, சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பாதுகாப்பு எழுத்தாளர் இக்பால் அத்தாஸ், அவருடைய பாதுகாப்பை இராணுவம் குறிப்பாக அகற்றியதை அடுத்து அவர் தலைமறைவாகுவதற்குத் தள்ளப்பட்டார். விமானப்படைக்கு மிக் ரக விமானங்களை கொள்வனவு செய்ததில் இராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் உட்பட உயர்மட்ட மோசடிகள் பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டதை அடுத்து அவருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. நொயரைப் போல் அத்தாஸும் யுத்த ஆதரவாளர் ஆவார். இவர்களின் விமர்சனங்கள் பாதுகாப்பு நிறுவனத்திற்குள்ளேயே கடுமையான நிலைமை இருப்பதை பிரதிபலிக்கின்றன.

நொயரின் கடத்தல் தொடர்பான விமர்சனங்களை ஒதுக்கித் தள்ளும் முயற்சியாக, விசாரணை ஒன்றை முடுக்கிவிடுமாறு பொலிஸ் அதிபருக்கு ஜனாதிபதி இராஜபக்ஷ கட்டளையிட்டுள்ளார். ஆனால், அரசாங்கத்தின் கடந்த கால சாதனைகள் இதனை வழிநடத்துமானால், இந்த விசாரணை ஒரு சுண்ணாம்பு பூசும் நடவடிக்கையாகும். ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் கொல்லப்பட்டமை, கடத்தப்பட்டமை மற்றும் தாக்கப்பட்டமை தொடர்பான இதுபோன்ற "விசாரணைகளில்" இதுவரையும் எவரும் கைது செய்யப்படவோ அல்லது குற்றஞ்சாட்டப்படவோ இல்லை.