World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

McCain's VP pick: A sign of deepening crisis in the Republican Party

மக்கெயினின் துணை ஜனாதிபதி தேர்வு: குடியரசு கட்சியில் நெருக்கடி அதிகரித்திருப்பதன் அடையாளம்

By Bill Van Auken
30 August 2008


Use this version to print | Send this link by email | Email the author

ஆச்சரியப்படும் வகையில் செனட்டர் ஜோன் மக்கெயினின் நெருங்கிய தோழியும் அலாஸ்கா மாகாண ஆளுநருமான சராஹ் பலின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, குடியரசு கட்சிக்குள் நிலவும் ஆழ்ந்த அரசியல் நெருக்கடியின் ஓர் அறிகுறியாக உள்ளது.

நாட்டின் மிக குறைந்த மக்கள்தொகை கொண்ட மாகாணத்தின் கவர்னராக ஒன்றரை ஆண்டுகளாக மட்டுமே செயல்பட்டு வரும் பலின், பொதுவாக முக்கிய வேட்பாளர் தேர்வு பட்டியலில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் Washington Post இடம் கூறுகையில், தான் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய வாய்ப்பு "சிறிதும் இல்லை" என கூறியிருந்தார். வெள்ளியன்று ஓகையோ டேடனில் மக்கெயின் அளித்த அறிவிப்பை செய்தி ஊடகத்தின் பெரும் பகுதி சிறிதும் நம்பாத வகையில் எதிர்கொண்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை பலின் 8,000 மக்களுக்கும் குறைவாக இருந்த ஆங்கோரேஜ் புறநகர் பகுதியில் பகுதி நேர மேயராக இருந்தார். ஐந்து குழந்தைகளுக்கு தாயாரான இந்த 44 வயது பெண்மணி, அதற்கு முன்னர் உள்ளூர் PTAல் இருந்து உயர்நிலை பள்ளியில் சிறப்பான பாஸ்கெட் பந்து விளையாட்டு வீராங்கனை என்ற புகழைப் பெற்றிருந்தார். அலாஸ்கா மாகாண அழகிகள் போட்டியிலும் இவர் பங்கு பெற்றவராவார்.

2006ம் ஆண்டு கவர்னர் தேர்தல்களில் இவர் எதிர்பாரா வெற்றியை கண்டார். ஆனால் தன்னுடைய சொந்த மாகாணத்திற்கு வெளியே குடியரசு கட்சிக்குள்ளேயே கிட்டத்தட்ட அதிகம் அரசியலில் அறியப்படாதவர்.

Fox News பேட்டி ஒன்றில், மக்கெயினும் பலினும் எந்த அளவிற்கு ஒருவரை ஒருவர் அறிந்துள்ளனர் என கேட்கப்பட்ட போது, மக்கெயினின் பிரச்சார செய்தி தொடர்பாளரான நான்ஸி போடன்ஹார் விடையளித்ததாவது: "என்னுடைய அறியாமை சுவரின் மீது சரியாக மோதிவிட்டீர்கள்... அலாஸ்கா கவர்னருடன் எந்த அளவிற்கு உறவு உள்ளது என்பது பற்றி எனக்கு உண்மையில் சிறிதும் தெரியாது." என்றார்.

இதேபோல் குடியரசு கட்சியின் டெக்சாஸ் செனட்டர் கே பெய்லி ஹசின்சன் MSNBC செய்தி அமைப்பிடம் "அப்பெண்மணியை பற்றி எனக்கு அதிகம் தெரியாது" என்று கூறினார்.

இப்படி வெளி நபர் என்னும் பலினுடைய அந்தஸ்து மக்கெயின் தன்னை ஒரு "குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கள் இல்லாதவர்", "சீர்திருத்தவாதி" என காட்டி கொள்ளும் முயற்சியின் நிலைப்பாட்டில் ஒரு ஆதாயமான நிலை என்று கூறப்படுகிறது. ஆனால் வாஷிங்டனிலிருக்கும் செல்வாக்கு முனைவர்களுடன் அவர் கொண்டுள்ள நெருக்கமான உறவுடன் ஒப்பிடும்போது இதை ஏற்பது பெருமளவில் கடினமாகும்.

இன்னும் முக்கியமாக குடியரசு கட்சிக்குள் ஆழ்ந்த பிளவுகளே இவரை தேர்ந்தெடுப்பற்கு உந்துதல் அளித்துள்ளன. மற்ற நன்கு அறியப்பட்ட துணை ஜனாதிபதி திறன் படைத்த வேட்பாளர்கள், மிட் ரோம்னி மற்றும் ரொம் ரிட்ஜ் உட்பட, கட்சிக்குள் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ளுகின்றனர். குறிப்பாக அதன் அரசியலில் சக்தி வாய்ந்த வலதுசாரி கிறிஸ்துவ நற்செய்தி பிரிவிடமிருந்து, அங்கு மக்கெயினுக்கே அதிக செல்வாக்கு கிடையாது.

குடியரசு கட்சிக்கு தேர்தலில் மக்கள் செல்வாக்கு தளத்தை கொடுத்துள்ள அந்த ஒரே பிரிவினுள் பலின் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு பெரும் அரசியல் வெற்றியாக கொண்டாடப்பட்டது.

மக்கெயின் விருப்பம் பற்றிய செய்தி ஊடகத்தின் பரந்த ஊகத்தில் இவருடைய பெயர் அதிகம் குறிப்பிடப்படவில்லை என்ற நிலையில், இவர் கிறிஸ்துவ வலதுசாரியினால் பெரிதும் விரும்பப்பட்டவராவார். CBS Newsக்கு ஆகஸ்ட் 8 அன்று அளித்த பேட்டி ஒன்றில் Southern Baptist அரசியல் தலைவரான ரிச்சார்ட் லாண்ட் மக்கெயின் தேர்ந்தெடுத்துள்ள துணை ஜனாதிபதி வேட்பாளார் "அவருடைய பிரச்சாரம் முழுவதிலும் எடுக்கக்கூடிய முடிவுகளில் இதுவே முக்கியமானதாக இருக்க வேண்டும்" என்று தீவிர எச்சரிக்கையை விடுத்திருந்தார். "இதில் "தவறுக்கு, சந்தேகத்திற்கு இடம் இருக்கக் கூடாது" என்றும் அவர் கூறியிருந்தார்.

கருக்கலைப்பு உரிமைகளுக்கு ஆதரவளித்ததன் நெருங்கிய தோழியை குடியரசு கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுத்தால், "சில நற்செய்தி கூட்டத்தினரிடையே இருக்கும் நம்பிக்கையற்றதன்மை, அமைதியின்மை இவற்றை உறுதிப்படுத்தும், மக்கெய்ன் பற்றி சமூக கன்சர்வேடிவ் கத்தோலிக்கர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்." என்று லாண்ட் எச்சரித்தார்.

அப்பதவிக்கு எவரை நிறுத்த கிறிஸ்துவ வலது விரும்புகிறது என்று கேட்கப்பட்டதற்கு, லாண்ட், பலின் பெயரை குறிப்பிட்டார். அவருடைய "சீரிய வாழ்க்கை நெறிகள்" சிறந்த முறையில் அவர் ஏப்ரல் மாதம் ஒரு Downs Syndrome உடைய குழந்தையை பெற்றதில் சான்றுகளை கொண்டிருக்கிறது என்றும், கருக்கலைப்பிற்கு அவர் ஒரு போதும் உடன்படமாட்டார் என்ற பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டுள்ளார் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் தேசிய ரைபிள் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்தை கொண்டுள்ளதும் அரசியலில் அவருடைய சிறப்பிற்கு அடையாளம் என்றும் சுட்டி காட்டினார்.

இந்த வட்டங்களில் பலின் ஓரின திருமணத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் மற்றும் பொது பள்ளிகளில் உலகம் இறைவனால் படைக்கப்பட்ட கருத்து பற்றிய பிரச்சாரம் ஆகியவற்றிற்காவும் ஆதரவை பெற்றுள்ளார்.

சொந்த அலாஸ்கா மாகாணத்திற்குள் குடியரசு கட்சியின் மிக உயர்ந்த பதவிகளில் இரண்டாவது இடத்திற்கு அவர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது பெரும் வியப்பை அளித்துள்ளது.

நீண்டகாலமாக Fairbanks Daily News-Minerன் அரசியல் கட்டுரையாளராக இருக்கும், Dermot Cole அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் மக்கெயினின் தேர்ந்தெடுப்பு "பொறுப்பற்றது" என்றும், பதவிக்கு பலினின் தகுதிகள் கேள்விக்கு உட்பட்டவை என்றும் தெரிவித்தார்.

"கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சரா பலினுடைய முக்கிய தகுதி அவர் Frank Murkowski ÜTMô என்பதுதான்" என்று கோல் கூறினார். இக்குறிப்பு அவருக்கு முன்பு பதவியிலிருந்த குடியரசு கட்சியை சேர்ந்தவர் பற்றியதாகும். மறு தேர்தலில் பெரும் தோல்வியை அவர் அடைந்ததற்கு காரணம் பட்ஜெட் குறைப்புக்கள் மற்றும் தொடர்ந்த ஊழல், சலுகைகள் பற்றிய புகார்கள் ஆகும். "ஒரு கன்சர்வேடிவ் என்பதால் ஒன்றும் அவரை தேர்ந்தெடுக்கப்படாமல் விட்டுவிடவில்லை. பிரச்சினைகள் பற்றி தெளிவு கிடையாது, அவர் வாசில்லாவில் மேயராக இருந்த போது செயற்பாடு சரியில்லை என்பதால் தான் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை" என்று கோல் தெரிவித்தார்.

பலின் தேர்ந்தெடுக்கப்பட்டதில் உள்ள வியப்பை கூட்டும் வகையில் அலாஸ்கா கவர்னர் அவருடைய நடவடிக்கையிலேயே அறநெறி பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார். கடந்த மாதம் மாகாணத்தின் சட்டமன்றம் ஒரு சுதந்திரமான விசாரிப்பாளரை நியமித்துள்ளது. இது மாகாணத்தின் பொது பாதுகாப்பு ஆணையர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை பொறுத்து வெளிவந்துள்ளது. கவர்னரின் சகோதரியுடன் கசப்பான மணநீக்கத்தில் தொடர்புடைய மாகாண பாதுகாப்பு அதிகாரியை பதவி நீக்கம் செய்ய மறுத்ததால் அவர் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பலினைத் தேர்ந்தெடுத்ததின் ஒரு வெளிப்படையான நோக்கம் அவர் ஒரு பெண்மணி, எனவே அவர் வேட்புத்தன்மை மக்கெயினின் பிரச்சாரத்தில் அதிருப்தி அடைந்துள்ள ஹில்லாரி கிளின்டன் வாக்காளர்களை ஈர்க்க உதவும் என்ற கருத்தில்தான். இவரை தேர்ந்தெடுத்த முடிவை டேடனில் அறிவித்தபோது பலின் இந்த வழிவகைகளை கோடிட்டு காட்டினார். இது குடியரசு கட்சி ஜனநாயக கட்சியுடன் பாலியல் அரசியல் அடிப்படையில் போட்டியிடும் முயற்சியை தான் காட்டுகிறது.

"இந்த பெரும் முயற்சியை 1984ல் Gerandine Ferraroவின் சாதனைகளைப் பெருமைப்படுத்தாமல் தொடங்க முடியாது, அதே போல் செனட்டர் ஹில்லாரி கிளிண்டன் தன்னுடைய ஜனாதிபதி பிரச்சாரத்தில் காட்டிய உறுதி மற்றும் மாண்பு இவற்றை பற்றி பாராட்டாமலும் தொடங்க முடியாது" என்று பலின் குடியரசு கட்சி கூட்டத்தில் தெரிவித்தார். "அமெரிக்காவின் மகளிர் போராட்டம் இன்னும் ஓய்ந்துவிடவில்லை. கண்ணாடி மேல்தளத்தை நாம் ஒரே அடியாக உடைத்து தகர்த்துவிடமுடியும்."

1984ல் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக இருந்தவர் இந்த நன்றியறிதலுக்கு விடையிறுக்கும் வகையில் Fox Newsசிடம் மக்கெயின் தேர்ந்தெடுத்துள்ள முறை "வரலாற்று தன்மை" கொண்டது என்றும், ஒபாமா பிரச்சாரம் மற்றும் செய்தி ஊடகம் "ஹில்லாரியை நடத்திய முறை பற்றி ஏராளமான மகளிர் அதிருப்தி அடைந்துள்ளனர்" என்றும் உறுதிபட கூறினார்.

பலினுடைய கடுமையான கருக்கலைப்பு உரிமைகள் எதிர்ப்பு கருத்துக்கள் இருக்கும் நிலையில், கிளின்டனுக்கு ஜனநாயக கட்சியில் தொடக்க தேர்தல்களில் வாக்குகள் அளித்த பெண்கள் ஏராளமானவர்களை அவர் ஈர்ப்பது என்பது அநேகமாக இயலாத காரியம் தான்.

ஜனநாயக கட்சி பிரச்சார அதிகாரிகள் இந்த விருப்பம் பற்றி களிப்படைந்தனர். பலின் நியமிக்கப்பட்டுள்ளது ஒப்புமையில் அரசியல் அனுபவம் அற்றவர் என்று ஒபாமா பற்றி குடியரசு கட்சியினர் ஒதுக்கி வைக்கும் முயற்சியை இது பலவீனப்படுத்தும் என்றும் அவர்கள் கருதுகின்றனர். "அனுபவம் என்பது விவாதத்திலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. வரலாற்றிலேயே வெளியுறவு கொள்கை பற்றி மிக மிக குறைவான அனுபவம் உடையவரை (ஒரு இதயத்துடிப்புத்தான் ஜனாதிபதி பதிவியில் இருந்து), எந்த நேரமும் ஜனாதிபதியாகலாம் என்ற பதவிக்கு வேட்பாளராக நியமிக்கும்போது" என்று ஒபாமாவின் பிரச்சார செய்தி தொடர்பாளர் பில் பேர்ட்டன் தெரிவித்தார்.

"ஒரு இதயத்துடிப்புத்தான் ஜனாதிபதி பதவியில் இருந்து" என்ற கருத்து பல முறையும் ஒலிக்கக் கூடும். ஏனெனில் மக்கெயின் தன்னுடைய துணை ஜனாதிபதி தேர்வாளர் பற்றி மக்கெயின் அறிவித்த அன்றுதான் அவர் தன்னுடைய 72வது பிறந்த நாளையும் கொண்டாடினார். இவர் பதவிக்கு வெள்ளை மாளிகைக்கு வந்தால் இதுகாறும் அங்கு பதவியேற்றவர்களில் மிக அதிக வயாதானவர் என்ற பெருமையை பெறுவார். அவருக்கு கணிசமாக உடல்நல பிரச்சினைகளும் உள்ளன.

எந்த அனுபவமும் அற்ற, வெளியுறவு கொள்கையில் எந்த குறிப்பிட்ட கருத்தையும் கொண்டிராத, அப்படி பார்த்தால் உள்நாட்டு பிரச்சினைகளிலும் அதிகமான கருத்துக்களை கொண்டிராத பலின் ஜனாதிபதி பதவியை கையில் எடுப்பது என்பது ஆளும் நடைமுறையின் கணிசமான பகுதிக்குள்ளேயே சிந்திப்பதற்கு நிறைய கருத்துக்களை அளித்துள்ளது.