World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama's response to financial meltdown: Deception and subservience to Wall Street

நிதிய உருகிஅழிதலை ஒபாமா எதிர்கொண்டுள்ள விதம்: மோசடித்தனமும், வோல்ஸ்ட்ரீட்டிற்கு அடிபணிந்து நிற்றலும்

By Bill Van Auken, SEP vice presidential candidate
19 September 2008


Use this version to print | Send this link by email | Email the author

பல நூறு மில்லியன் கணக்கான மக்கள் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் 1930 களின் பெருமந்த நிலைக்குப் பின்னர் உலகின் மிக மோசமான நிதிய நெருக்கடி வரவை எதிர்கொள்ளுகையில், தங்கள் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள், தங்கள் குழந்தைகளுடைய எதிர்காலம் இவற்றைப் பற்றிய உட்குறிப்புக்களுடன், ஜனநாயகக் கட்சியும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் பாரக் ஒபாமாவும் வோல் ஸ்ட்ரீட் வெடித்து நிற்கும் தன்மையை தங்கள் தடுமாறும் பிரச்சாரத்திற்கு உற்சாகம் கொடுக்கும் வழிவகையாக நினைக்கின்றனர்.

பல தொடர்ச்சியான உரைகளைக் கொடுத்து ஒரு புதிய பிரச்சாரத்தையும் ஏற்படுத்திக் கொண்டு, பொருளாதார உருகிஅழிதலை "அமெரிக்காவின் தொழிலாளர் குடும்பங்களுக்காக இல்லாமல் பெருவணிகச் சிறப்பு நலன்களுக்கு எடுக்கப்பட்ட பிழையான முடிவுகளின் விளைவுகள்" என்று ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் திங்களன்று அவருடைய குடியரசுக் கட்சி போட்டியாளர் ஜோன் மக்கெயின் கொடுத்த வெற்று அறிக்கை ஒன்றை பயன்படுத்திக் கொண்டார். லெஹ்மன் பிரதர்ஸ் திவாலான பின், மெரில் லிஞ்ச் கட்டாயமாக விற்கப்பட்ட நிலை வந்தபின், வோல் ஸ்ட்ரீட்டில் தடையற்று பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்த பின் வந்த அந்த அறிக்கையில் அவர் "எமது பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக உள்ளன" என்று குறிப்பிட்டிருந்தார்.

இக்கருத்துக்களின் மடத்தனம் பின்னர் தெளிவாகியதும், மக்கெயினின் பிரச்சாரம் ஒலிக் குறிப்பை மாற்றிக் கொண்டு வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான ஜனரஞ்சகவாதத்தை அபத்தமான முறையில் அதேபோல் ஏற்றுக் கொண்டு பேசியது. புதனன்று மிச்சிகனில் லேக் ஒரியனில் ஜெனரல் மோட்டார் ஆலையில் உள்ள தொழிலாளர்களிடம் பேசிய மக்கெயின் வோல் ஸ்ட்ரீட்டின் "சூதாட்ட கலாச்சாரத்தை" கண்டித்து அறிவித்தார்: "வாஷிங்டனில் உள்ள சிறப்பு நலன்கள் மற்றும் ஊழலை எதிர்த்து நாங்கள் போராடப் போகிறோம். வோல் ஸ்ட்ரீட்டின் பேராசை மற்றும் பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றை எதிர்த்து போராட உள்ளோம்." வியாழனன்று Securities and Exchange குழுவின் தலைவர், "மக்களின் நம்பிக்கையைக் காட்டிக் கொடுத்துள்ளதால்" பதவி நீக்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

மக்கெயினின் போலித்தன, ஜனரஞ்சகவாத வனப்புரையை கேலி செய்யும் வகையில் ஒபாமா உரையாற்றினார். மக்கெயின் பிரச்சாரத்தில் இருக்கும் பெருநிறுவனச் செல்வாக்காளர்களின் மேலாதிக்கம் மற்றும் வலதுசாரி முன்னாள் குடியரசுக் கட்சி செனட்டரும் முக்கிய நிதியக் கட்டுப்பாட்டுத் தளர்த்தல் சட்டத்திற்கு வடிவமைப்புக் கொடுத்த Phil Gramm உடன் அவருக்கு உள்ள நெருக்கமான உறவுகளையும் சுட்டிக்காட்டினார்.

"இந்த விதத்தில் சென்றால், வார இறுதிக்குள் ஜோன் மக்கெயின் நம்மிடம் அவரும் பில் கிராமும் ஏழு செல்வாக்காளர்களும் கருவூல துறையை தீவர்த்திகளுடனும், கவர்கோல்களுடன் முற்றுகையிட திட்டமிடுவதாக கூறினாலும் கூறுவார்" என்று ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கூறினார்.

இத்தகைய எள்ளி நகையாடல் மிகப் பொருத்தமானது, ஆனால் இருவருக்கும் பொருந்தும்.

கடந்த வாரத்திய மிக அதிர்வு தரும் நிகழ்வுகள் எதையேனும் புலப்படுத்தின என்றால், அது அமெரிக்க அரசாங்கம் மற்றும் இரு பெரிய அரசியல் கட்சிகளும் எந்த அளவிற்கு வங்கிகள் மற்றும் மிகப் பெரிய முதலாளித்துவ நலன்களுக்கு முற்றிலும் அடி பணிந்து நடக்கின்றன என்பதைக் காட்டுவதே ஆகும். அமெரிக்க ஜனநாயகம் என்ற திரைக்கு பின் இருப்பது ஒரு நிதிய மூலதனத்தின் சர்வாதிகாரம் ஆகும்; நெருக்கடிக் காலங்களில் அது தன்னுடைய அதிகாரத்தை நேரடியாகவும், அப்பட்டமாகவும் செலுத்துகிறது.

இவ்விதத்தில் இரண்டு வார காலத்தில், கூட்டாட்சி அரசாங்கம் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் வரி செலுத்துவோர் பணத்தை நிதிய அமைப்புக்கள் காப்பாற்றப்படவும் அவற்றின் கடன்களுக்காகவும் செலவழித்துள்ளது. முன்னோடியில்லாத வகையில் பாரிய American International Group (AIG) ஐ தேசியமயமாக்கியுள்ளது $85 பில்லியன் உடனடி விலை கொடுக்கப்பட்டது என்றுதான் பரந்த முறையில் காணப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் கிட்டத்தட்ட அரை டிரில்லியன் டாலர்கள் மதிப்புடைய, ஆனால் சந்தேகத்திற்கு உரிய நிதிய பத்திரங்களை தன் கணக்கில் காட்டியிருக்கிறது.

அமெரிக்க தேசிய சட்ட மன்றத்தின் இரு பிரிவுகளிலும் ஒரு வாக்கெடுப்பு கூட இதற்காகப் நடாத்தப்படவில்லை; அமெரிக்க மக்களுக்கு கருத்துக் கூறுவது ஒரு புறம் இருக்கட்டும். மாறாக பேர்ன் ஸ்டேர்ன்ஸ் மற்றும் பானி மே, பிரெட்டி மாக் ஆகியவற்றை தப்பிப் பிழைக்க விட்டது, AIG ஐ எடுத்துக் கொண்டது போல், அனைத்தும் திரைக்குப் பின்னால் நிதி அமைச்சர் ஹென்ரி பெளல்சன், கூட்டாட்சி மத்திய வங்கி குழுக்களின் தலைவர் பென் பெர்னான்கே மற்றும் வோல் ஸ்ட்ரீட் நிர்வாகிகள் ஆகியோரால் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றதற்கு பின் ஏற்பட்ட நிகழ்வுகள் ஆகும்.

வியாழானன்று அவசர அவசரமாக AIG தப்பிப் பிழைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது பற்றி உடன்பாடு முடிந்தபின் சட்ட மன்றத் தலைவர்களுக்குக் கூறப்பட்டது என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை அறிவித்தது.

"மன்றத்தின் இருபுறமும் உள்ள சட்டமியற்றுபவர்கள் நேற்று கூட்டாட்சிப் பணம் எப்படி வோல் ஸ்ட்ரீட் நெருக்கடியைக் குறைக்க தங்கள் கட்டுப்பாடு இல்லாமல் பயன்படுத்தப்பட்டது பற்றி கவலையைத் தெரிவித்துள்ளனர்." என்று வாஷிங்டன் போஸ்ட் தகவல் கொடுத்துள்ளது. "இன்னும் பரந்த நிதியக் அழிப்பிற்கு இதுகாறும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தேவை என்பதைப் பலரும் நம்பினாலும், ஒரு சிலரின் கைகளில் பாரிய முடிவுகள் பற்றிய அதிகாரம் குவிக்கப்பட்ட போது தாங்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க வேண்டியதாயிற்று என அவர்கள் கூறினர்."

காங்கிரஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியின் செயலற்ற தன்மை இன்னும் அப்பட்டமாக செனட் பெரும்பான்மைக் கட்சித் தலைவர் ஹாரி ரீடினால் (நெவடா-ஜனநாயகக் கட்சியாளரால்) கூறப்பட்டது; புதனன்று அவர் நிதிய பேரழிவு வந்துள்ள நிலையில் செனட் திட்டமிட்ட தேர்தலுக்கு முன்பு தனது கூட்டத்தொடரை ஒத்திவைக்கலாம் என்றார். வாஷிங்டனில் தங்கியிருப்பதில் ஒரு பொருளும் இல்லை என்றும், "அங்கு என்ன செய்வது என்று எவருக்கும் தெரியவில்லை" என்றும் சொன்னார். ஜனாயகத் தலைமை பெளல்சன், பெர்னான்கே அல்லது வோல் ஸ்ட்ரீட்டினால் அழைக்கப்படால் ஒழிய ஜனவரி வரை கூட்டம் ஒருவேளை இருக்காது என்று குறிப்புக் காட்டியுள்ளது.

அதே நேரத்தில் முக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் -- சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்ற நிதியப்பணிக் குழுவின் தலைவரான பார்னி பிராங்க், செனட் நிதியக் குழுவின் தலைவர் கிறிஸ்டோபர் டோட், கூட்டுப் பொருளாதாரக் குழுவின் தலைவர் செனட்டர் சார்்ல்ஸ் ஷ்யுமெர் ஆகியோர் பாரியளவில் முற்றிலும் வோல் ஸ்ட்ரீட்டை தப்ப வகைக்கும் முயற்சிக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்; இதற்காக ஒரு புதிய கூட்டாட்சி நிறுவனம் ஒன்றைத் தோற்றுவித்து, அனைத்து வங்கிகளின் பயனற்ற அடமான ஆதரவு உடைய இருப்புக்களை வாங்கலாம் என்றும் தங்கள் ஆதரவைக் காட்டியுள்ளனர்.

இத்திட்டம் மிகப் பரந்த முறையில் RTC எனப்படும் Resolution Trust Corporation என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட நிறுவனத்துடன் ஒப்பிடப்படுகிறது; அப்பொழுது 1980 களின் சேமிப்புக்கள் மற்றும் கடன்கள் நெருக்கடியை சமாளிக்க அது தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் சில முக்கியமான வேறுபாடுகள் உண்டு. அடைமான ஆதரவு உடைய பத்திரங்களைக் பாதுகாக்க செலவு செய்யப்படும் பணங்கள் வானிலுள்ள விண்மீன்கள் எண்ணிக்கை போல் மிக அதிகமாகும். மேலும் RTC ஏற்கனவே தோற்றுவிட்ட சேமிப்பு வங்கிகளில் இருந்து தீய விளைவுகள் கூடாது என்பதற்காக அது நிறுவப்பட்டது; புதிய அமைப்போ "நச்சுத்தனமான" ஊகமுதலீட்டுகளை ஒட்டி இலாபம் அடைந்து பின்னர் பெரும் சரிவில் உள்ள நிதிய அமைப்புக்களை தப்ப வைக்கும் நோக்கத்தை கொண்டது ஆகும்.

அத்தகைய திட்டம் தவிர்க்க முடியாமல் வரவுள்ளது என்ற தகவல்கள் பங்குகளை 410 புள்ளிகளை இலாபம் பெற வைத்தன. வியாழனன்று ஏற்பட்ட இந்த உயர்வு ஆறாண்டுகளாக சந்தையில் இல்லாதவகையில் மிகப் பெரிய உயர்வு ஆகும். பங்குப் பரிவர்த்தனை தளத்தில் வளங்கொழித்தலானது, ஈவிரக்கமற்ற ஊகவாணிகம் மற்றும் ஒரேயடியான குற்றத்தன்மை வழிகளின் மூலம் வோல் ஸ்ட்ரீட்டின் செல்வந்தர்களால் பெரும் இலாபம் திரட்டப்படுவது தனியார் கைகளில் இருக்கையில், அவர்களின் இழப்புக்கள், அமெரிக்க உழைக்கும் மக்கள் பணம்கொடுத்து தீர்க்கும் வகையில் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளதுபோது அவ்வமைப்பை கொண்டாடுவதற்கான கூட்டத்தை பங்குசந்தை கூட்டியது.

ஒபாமாவும் ஜனநாயகக் கட்சியினரும் இந்த முறையில் முழுப் பங்காளிகள் ஆவர். ஜனநாயகக் கட்சி வேட்பாளரின் வோல் ஸ்ட்ரீட் "கடையை ஒழுங்காக கவனிக்கவில்லை", "தலைமை நிர்வாகிகள் பேராசை பிடித்து அலைந்தனர்" போன்ற வண்ண உரைக்குப் பின், இவருடைய பிரச்சாரம் நிதிய ஊகத்தின் முழு ஆதரவையும் பெற்றுள்ளது; இவருடைய நிர்வாகமும், குடியரசுக் கட்சி நிர்வாகம் போல் நிதிய மூலதனத்தின் அடிப்படை நலன்களைக் காக்கும்.

ஒபாமாவின் பிரச்சாரம் வோல் ஸ்ட்ரீட் முதலீட்டு நிறுவனங்களில் இருந்து கிட்டத்தட்ட $10 மில்லியன் பெற்றுள்ளது; இது குடியரசு மக்கெயினுக்குக் கொடுத்த பணத்தை விட 50 சதவிகிதம் அதிகமாகும். இப்பொழுது திவாலாகிவிட்ட லெஹ்மன் பிரதர்ஸின் மூன்று மூத்த நிர்வாகிகள் ஜனநாயகக் கட்சிக்காக $1.5 மில்லியனுக்கு மேல் வசூலித்துக் கொடுத்தனர்.

The Center for Responsive Politics எனப்படும் பிரச்சார நிதிவழங்குதல்களை கண்காணிக்கும் அமைப்பு கோல்ட்மன் சாக்ஷ் தான் ஒபாமா பிரச்சாரத்திற்கு மிக அதிகமான நிதியை அளித்ததாக பட்டியலிட்டுள்ளது. இந்தக் கண்காணிப்புக் குழு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவதில் வால்ஸ்ட்ரீட் கொண்டுள்ள அக்கறை இன்னும் அதிகமானது எனக் கூறியுள்ளது. "அவருடைய பிரச்சாரம் பல வேண்டுகோள்களையும் புறக்கணிக்கிறது ...அதாவது அவருக்கு உதவி செய்பவர்கள் யாருடைய ஊழியர்கள், அவர்கள் பணி என்ன" என்பதை சுட்டிக் காட்டாததுடன், "இந்த புள்ளிவிவரங்களும் குறைவான மதிப்பிற்கு உட்படுத்தப்பட்டவை" என்றும் கூறியுள்ளது.

வோல் ஸ்ட்ரீட்டை தவிர, ஒபாமாவின் பிரச்சாரம் கிட்டத்தட்ட $13.4 மில்லியனை நிதிய, காப்பீட்டு, நிலவிற்பனை பிரிவில் இருந்தும், $2 மில்லியனை வணிக வங்கிகளில் இருந்தும் பெற்றுள்ளது; இவையும் மெக்கெயின் பெற்றதைவிட அதிகம் ஆகும்.

இத்தகைய நிதிய ஆதரவைக் கொண்ட நிலையில், "முக்கிய தெருவின்" முன்னேற்றத்திற்கு நிற்பவர் என்று ஒபாமா காட்டிக் கொள்ளுதல், "சிறப்பு நலன்களை சாடுபவர்" என்று காட்டிக் கொள்ளுவது, மக்கெயின் வோல் ஸ்ட்ரீட் "பேராசையை" எதிர்த்துப் போராடுகிறேன் என்று சொல்லுவது போல் அபத்தமானதுதான்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பலமுறையும் தற்போதைய நெருக்கடி கடந்த எட்டு ஆண்டுகளில் தொடரப்பட்டுள்ள கொள்கைகளின் விளைவு ஏன்று கூறுவதும் சமமான முறையில் நேர்மையற்றதுதான். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜனநாயகக் கட்சியின் கார்ட்டர் நிர்வாகம்தான் தற்போதைய பொருளாதார முறை அமெரிக்காவில் செயல்படுத்தப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் மீது நேரடியான தாக்குதலை நடத்த முற்பட்டதை தொடங்கியது என்ற உண்மையை இது புறக்கணிக்கிறது. அதன்பின் மிக அதிகமான நிதியச் சந்தைகள் மீதான கட்டுப்பாட்டு தளர்த்தல்கள் ஜனநாயகக் கட்சியின் கிளின்டன் காலத்தில் நடந்தேறின.

இந்த வழிவகையின் விளைவுகள், அமெரிக்கப் பொருளாதாரம் பெருகிய முறையில் தொழில்துறையில் இருந்து அகன்றதைக் கண்டது; பெருகிய முறையில் நிதிய ஒட்டுண்ணித்தனத்தின் வளர்ச்சி ஏற்பட்டது; முன்னோடியில்லாத வகையில் சமூகச் சமத்துவமின்மை பரந்து நின்றது; இவை ஒன்றும் சில ஜனநாயக வாதிகள் முன்வைக்கும் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் என்ற நிதானப் போக்கினால் குணமாக்கப்பட முடியாதவை ஆகும்.

தன்னுடைய ஆதரவை ஒபாமா இன்றுவரை தப்பிப் பிழைத்தலுக்கு கொடுத்துள்ளார்; அதே நேரத்தில் அரசாங்கம் அடைமான தொடர்புடைய முதலீடுகளை எடுத்துக் கொள்ளும் திட்டம் பற்றி மெளனமாக உள்ளார். இந்தப் பேரழிவிற்கு காரணமாக இருந்து இலாபம் அடைந்தவர்கள் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது பற்றி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஏதும் கூறவில்லை; இலாபங்கள் பறிமுதல் செய்யப்ப வேண்டும் என்பது போன்ற கருத்தையும் வெளியிடவில்லை.

புதனன்று நெவடாவில் உரையாற்றய ஒபாமா வோல் ஸ்ட்ரீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பரபரப்பான நிகழ்வுகள் மக்கெயின் மற்றும் குடியரசுக் கட்சியின் மீது "இறுதித் தீர்ப்பை" பிரதிபலிக்கிறது என்று அறிவித்தார்; அதே நேரத்தில் "எமது சுதந்திரமான சந்தை முறை அமெரிக்காவின் மிகப் பெரிய முன்னேற்றத்தின் இயக்கக் கருவி. இச்சந்தை வளங்களை தோற்றுவித்துள்ளது; உலகின் பொறாமையை தூண்டிவிட்டுள்ளது" என்றும் அறிவித்தார்.

எந்த "சுதந்திரமான சந்தையை" பற்றி இவர் பேசுகிறார்? சமூகம் அதன் கொள்ளை முறை மற்றும் சமூக அழிவுதரும் வகையில் செலவழித்தல், தொழிலாள வர்க்கத்தால் தோற்றுவிக்கப்படும் செல்வத்தை தவறாக பயன்படுத்துவது ஆகியவற்றின்மீது கட்டுப்பாடு கொள்ளவில்லை என்பதால் "சுதந்திரமானது" என்ற பொருளா?

ஒரு தீவிர நெருக்கடியின்போது, "பெரிய அரசாங்கத்தின்" தீமைகள், "சுய சார்பு", "தனியார் முன்முயற்சிகளில்" உயர் சிறப்புக்கள் ஆகியவற்றைப் பற்றிய பேச்சுக்கள் ஒதுக்கப்பட்டு மிகப் பரந்த அளவில் அரசாங்க அதிகாரம் செயல்படுத்தப்பட்டு "சுதந்திரமான சந்தையில்" குறுக்கீடு செய்யப்பட்டு, நிதிய பிரபுத்துவத்தை காப்பாற்றும் முயற்சிகள், அமெரிக்க மக்கள் அதற்கான செலவை கொடுக்கும் விதத்தில், நடைபெறுகின்றன.

அமெரிக்க செல்வக் கொழிப்பு "உலகின் பொறாமையாக" உள்ளது என்று கூறுவதை பொறுத்த வரையில், உலகெங்கிலும் இருக்கும் மக்கள் பீதியுடனும் நம்பிக்கையிழந்தும் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் தங்கள் வீடுகளில் இருந்து துரத்தப்படுவதையும், வறுமை, வேலையின்மை மோசமாவதையும், நாட்டின் அடிப்படைக் கட்டுமானம் சரிவதையும் காண்கின்றனர்; இதே நேரத்தில் பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள் எட்டு இலக்க ஊதியங்களை பெறுகின்றனர்.

வோல் ஸ்ட்ரீட் மற்றும் உலகின் நிதியச் சந்தைகளை பீடித்துள்ள பேரழிவு தரக்கூடிய நெருக்கடி இந்த "தடையற்ற சந்தை" மீதான தீர்ப்பு ஆகும். உற்பத்தி சக்திகள் மீதும் இலாப உற்பத்தி மீதும் தனியார் உடைமையை தளமாகக் கொண்டிருக்கும் முதலாளித்தவ முறை, தனியார் செல்வக் குவிப்பிற்கு அனைத்து சமூக தேவைகளும் தாழ்த்தப்படுதல் ஆகியவை அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் மீது மிகப் பேரிய அழிவைக் கட்டவிழ்க்கும் அச்சுறுத்தலை கொண்டுள்ளன.

ஒன்று மட்டும் உறுதி; வோல் ஸ்ட்ரீட்டை காப்பாற்றும் திட்டங்கள் இப்பொழுது ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடனும் நடைபெற்று வருகிறது; இவை பின்னர் தொழிலாள வர்க்கத்தின் செலவாக மாறும்; அவர்களுடைய வேலை, வாழ்க்கைத்தரங்கள் தகர்ப்பு ஆகியவற்றின் மூலம் பணம் திரட்டப்படும்; சமூகப் பாதுகாப்பு நலன்கள், மருத்துவ உதவிகள் மற்றும் அமெரிக்காவில் எஞ்சியிருக்கும் சமூக நலன்கள் அனைத்தும் இதற்காகத் தூக்கியெறியப்படும்.

ஜனநாயகக் கட்சியுடன் உடைத்துக் கொண்டு, ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கு போராடுவதின் மூலம்தான் பெருமந்த நிலையையும் விடப் பெரிய ஒரு புதிய சமூகப் பேரழிவுதவிர்க்கப்பட முடியும்; இத்திட்டம் பொருளாதாரம் தனியார் இலாப நலன்களின் ஆணைகளுக்கு தாழ்த்தப்படுவதிற்கு முற்றுப் புள்ளி வைக்கும். இந்த விதத்தில்தான் உழைக்கும் மக்கள் தோற்றுவித்த பரந்த செல்வம் அனைவருடய நலனுக்கும் பயன்படுத்தப்பட முடியும். இந்த வேலைத்திட்டத்திற்காகத்தான் சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது.

See Also:

1930களுக்கு மீண்டும் திரும்ப வேண்டாம்! வங்கிகள் பொதுவுடைமை ஆக்கப்பட வேண்டும்!

வோல்ஸ்ட்ரீட் நெருக்கடியும் அமெரிக்க முதலாளித்துவத்தின் தோல்வியும்