World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Global financial storm hits Australian economy

உலக நிதியாதார புயல் ஆஸ்திரேலிய பொருளாதாரத்தை தாக்குகிறது

By Mike Head
19 September 2008


Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் ஆழமாகும் நிதித்துறை குழப்பம் ஆஸ்திரேலிய வங்கி அமைப்பு மற்றும் பங்குச் சந்தை முழுவதிலும் அதிர்வுகளை அனுப்புகிறது. இது உள்நாட்டு முதலாளித்துவ பொருளாதாரமானது சீனா மற்றும் பிற ஆசிய சந்தைகளுக்கான வளம்பெற்று வரும் ஏற்றுமதிகள் மூலம் பாதுகாக்கப்படும் என்பது போன்ற எஞ்சிய கூற்றுகளையும் இல்லாதொழித்துள்ளது.

பில்லியன்கணக்கான டாலர்கள் பங்கு விலைகளில் இருந்து, குறிப்பாக வங்கிகளில் இருந்து காலியாக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய டாலர் கீழ் நோக்கி வீழ்ச்சியடைந்தமை உலகளாவிய சரிவுநிலைக்கு ஆஸ்திரேலிய பொருளாதாரத்தின் பலவீனமான நிலையை பிரதிபலிப்பதாக இருந்தது. இதன் காரணம், மூலப் பொருட்கள் ஏற்றுமதியில் இது சார்ந்திருப்பதும் மற்றும் பாவனைப்பொருள்களின் நடப்பு உயர் விலைகளுமாகும்.

கடந்த இரண்டு வாரங்களின் நிகழ்வுகளை நிதித்துறை நிபுணர்கள் எல்லாம் "நிலநடுக்கங்கள்", "புவியடுக்கு அதிர்வுகள்" மற்றும் "கற்பனை செய்ய முடியாதவை" என்றெல்லாம் வர்ணித்துள்ளனர். நியூயோர்க் பங்கு சந்தை ஒரு நெருக்கடியில் இருந்து மற்றொரு நெருக்கடி என தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், ஆஸ்திரேலிய சந்தைகளிலும் விலைகள் பின்தொடர்ந்து, மூன்று ஆண்டுகளில் அதன் மிகத் தாழ்ந்த நிலைக்கு சரிந்தன. இந்த வாரத்தில் மட்டும் 80 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. ஒரு வருட காலத்தில், அமெரிக்காவை விடவும் விலைகள் அதிகமாக சரிந்திருக்கின்றன - முன்னணி குறியீடுகள் சென்ற நவம்பரில் அவை இருந்த உச்ச நிலையில் இருந்து மூன்றில் ஒரு பங்கை விடவும் அதிகமாக இழந்துள்ளன.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தான், ஆஸ்திரேலிய டாலர் உயர்வான நிலையில் சென்று கொண்டிருந்தது. அமெரிக்காவின் காகித பண மதிப்புக்கு நிகரானதொரு நிலைக்கு ஏறக்குறைய சென்று விட்டிருந்தது. சீன, ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்திய கொள்முதலாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்த நிலக்கரி, இயற்கை வாயு மற்றும் இரும்பு தாது விலைகள் அதிகரித்ததே இதன் முக்கிய காரணமாக இருந்தது. அப்போது ஆரம்பித்து, ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு அமெரிக்க நாணயத்திற்கு எதிரான தனது மதிப்பில் 20 சதவீதத்துக்கும் அதிகமாக இழந்திருக்கிறது. யூரோ மற்றும் யென்னுக்கு எதிராக இன்னும் அதிகமாகவும் இழந்துள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு பெரிய பொருளாதாரமும் பொருளாதார மந்தநிலையை நோக்கி சென்றுள்ளது, மற்றும் சீனா மற்றும் இந்தியாவில் வளர்ச்சி மெதுவாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அதிகாரிகள் பொருளாதாரத்தின் அடிப்படைகள் "வலிமையாக" இருப்பதாக திரும்ப திரும்ப கூறி அமைதிப்படுத்தும் குரல்களை கலக்கத்துடன் கூறி வருகிறார்கள். இந்த வாரம் ஆற்றிய ஒரு முக்கிய உரையில், ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் (RBA) ஆளுனர் கிலென் ஸ்டீவென்ஸ் உள்நாட்டு வங்கிகள் இந்த உலக நிதி குழப்பத்தை நன்கு உணர்ந்திருந்ததாகக் கூறினார். வங்கி அமைப்பு வலுவான வடிவத்தைக் கொண்டிருந்தது என்று உறுதி கூறிய அவர் இது "உலகெங்கிலும் பிற வங்கி அமைப்புகளில் நடந்து கொண்டிருப்பதற்கு பல ஒளி ஆண்டுகள் தூரத்தில் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதாக" தெரிவித்தார்.

பிரதமர் கெவின் ரூடும் நிதித்துறை செயலர் வேய்ன் ஸ்வேனும் ஸ்டீவனின் கருத்துகளை பாதுகாத்து பேசினர். இன்னும் உலகளாவிய நெருக்கடி வெகு தூரம் செல்ல வேண்டியிருப்பதாகவும், லெஹ்மன் பிரதர்ஸ், மெரில் லிஞ்ச் மற்றும் அமெரிக்க காப்பீட்டு குழுமம் (AIG) ஆகியவற்றின் பொறிவுகளாலான பாதிப்பு மிக குறைவு தான் என்றும் அவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்தனர். இருப்பினும், திரைக்கு பின்னால் ரூடும் ஸ்வேனும் நெருக்கடி நிலை கூட்டங்களை RBA, கருவூலம் மற்றும் நிதி கட்டுப்பாட்டாளர்களுடன் நடத்தினர். கடனளிப்பது பெருமளவில் இல்லாமல் போய்விடுவதை தடுக்கும் முயற்சியாக நிதிச் சந்தைகளுக்குள் பில்லியன்கணக்கான டாலர்களை நிதிச் சந்தைகளுக்குள் வாரியிறைக்கும் உலகெங்கிலுமான மத்திய வங்கிகளின் வழியில் RBA ம் சேர்ந்து கொண்டது.

இந்த அமைதிப்படுத்தும் வார்த்தைகள் எதுவும் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வியாழனன்று Australian Financial Review தெரிவித்தது: "வடக்கு கோளத்தை பீடித்திருக்கும் அதிகரிக்கும் நிதி நெருக்கடியானது உலகெங்கிலும் கடன் சந்தைகளில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. இது பரவல்களில் ஒரு வெடிப்பை ஏற்படுத்தியிருப்பதோடு கடன் நிலைகளில் குறுகிய காலத்தில் மீட்கப்படுவதற்கான கொஞ்ச நஞ்ச நம்பிக்கை எதனையும் இது நொறுக்கியிருக்கிறது.

AIG உடைவு குறித்து கருத்து தெரிவித்த TD Securities இன் ஒரு மூத்த மூலோபாய அதிகாரியான ஜோஸ்வா வில்லியம்சன், "இது தலைமுறையின் மோசமான நிதி நெருக்கடி என்பதான நிலையில் இருந்து 'பெரும் தாழ்வு' காலத்தில் இருந்தான மோசமான நெருக்கடி என்பதான நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது... ஒரு படி முன்னால் சென்று பார்த்தால், இப்போது உண்மையான அபாயம் உலகளாவிய பணப்புழக்கம் இன்னும் வற்றி, உண்மையான உலகளாவிய பெரும்-பொருளாதார நிலையை எதிர்மறையாக பாதிக்கும் என்பது தான்" என்று தெரிவித்தார்.

நடப்பிலிருக்கும் நெருக்கடியை உணர்வதற்கான மற்றொரு கருவியாக, ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வியாபார வங்கியான மெக்குவாரி குழுமத்தில் வாங்கிய (Macquarie Group) தாக்கத்தை குறிப்பிடலாம். சென்ற மே மாதத்தில், இதன் பங்குகள் ஏறக்குறைய 100 டாலர்கள் என்கிற அளவுக்கு உயர்ந்திருந்தன; இந்த வாரம் அவை 30 டாலர்களுக்கும் குறைவாக சரிந்து விட்டன, இது அதன் சந்தை மதிப்பை 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதிலிருந்து 10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக சரித்து விட்டது.

இரண்டு தசாப்தங்களாக, மெக்கரி ஒரு சுதந்திர-சந்தையின் அடையாளச் சின்னம் போல் இருந்து வருகிறது. தனது உயர் அதிகாரிகளுக்கு பல மில்லியன் டாலர்களில் சம்பளம் அளித்து வந்த இந்நிறுவனம் "லட்சாதிபதிகளை உற்பத்தி செய்யும் ஆலை" என்று கூறப்பட்டது. 2006-07 இல், அப்போது மெக்குவாரியின் தலைமை அதிகாரியாக இருந்த ஆலன் மோஸ் சம்பளம், போனஸ்கள் மற்றும் பங்கு வாய்ப்புகளாக 33.5 மில்லியன் டாலர்கள் அல்லது ஒரு நாளைக்கு 92,000 அமெரிக்க டாலர்கள் என்கிற அளவில் சம்பளம் பெற்று உயர்அதிகாரிகளுக்கான சம்பளத்தில் ஒரு புதிய ஆஸ்திரேலிய சாதனையை நிகழ்த்தினார்.

மோஸும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து, "மெக்குவாரி மாதிரி" என்று அழைக்கப்படுமளவுக்கு பிரபலமான ஒரு சிக்கலான போன்ஸி வகை (ஒரு ஏமாற்று முதலீட்டு நடவடிக்கை. இதில் முதலீட்டாளர்களுக்கு உண்மையான வருமானத்தை விட அதிகமான இலாபம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்படும்) போன்றதொரு திட்டத்தின் மூலம் தங்களது வருவாயை ஈட்டினர். இத்திட்டத்தில் அவர்கள் உலகெங்கும் சொத்துக்களை வாங்கி, அவற்றின் மதிப்பை தொடர்ந்து அதிகரித்துக் காட்டும் வித்தைகளைச் செய்து, பின் அதிகரித்த சந்தை விலைகளைக் காட்டி முதலீட்டை திரட்டி அதன் மூலம் முதலீட்டாளர்களுக்கும் தங்களுக்கும் பணத்தை திரும்பப் பெறுவதை மேற்கொண்டனர். இந்த குழு கிளை நிதிகள் மற்றும் டிரஸ்டுகள் மூலமாக சொத்துகளை திரட்டி, அதன் வழியாக அவர்களிடம் இருந்து கட்டணங்களை வசூலித்தது.

இவை அனைத்தும் பெருநிறுவன கட்டுப்பாட்டாளர்களின் முழுமையான ஒப்புதலுடனேயே நடத்தப்பட்டன. உண்மையில், கடன்களுக்கு எதிராக முன்னெப்போதையும் விட அதிகமான பிணையங்களின் மூலம் ஆதாயங்களை உருவாக்குவதில் மெக்குவாரி சாதனை அளவுகளை நிர்ணயம் செய்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு தான், "இந்த வங்கி பங்குச் சந்தையை தனது நிதி மேலாண்மை வித்தை மூலம் வசியம் செய்துள்ளது. வெளிப்படையாக அதனால் உற்பத்தியாகும் முடிவற்ற பண வரவில் முதலீட்டாளர்கள் திளைத்து வருகிறார்கள். இதன் உண்மைத்தன்மையையும் சுறுசுறுப்பையும் நிபுணர்கள், முதலீட்டாளர்கள், உயர்அதிகாரிகள் என அனைவரும் புகழ்கிறார்கள்" என்று Sydney Morning Herald பத்திரிகையின் வர்த்தக பக்கங்கள் புகழாரம் சூட்டியிருந்தன.

கடந்த 12 மாதங்களில், சரியும் உலகளாவிய பங்குச் சந்தையும், சொத்து விலைகளும் அதிகரிக்கும் கடன் செலவுகளுடன் சேர்ந்து மெக்குவாரி மாதிரியை வெளிக்கொணர தொடங்கியுள்ளன. தனது 45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனில் மார்ச் 2009 க்குள்ளாக தான் மறுநிதியாதரவு அளிக்க வேண்டியிருக்கும் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்துவதில் இந்த குழுமத்திற்கு சிரமம் இருக்கும் என்று வந்த அறிக்கைகளின் தொடர்ச்சியாக, இந்த வாரம் Standard and Poor's தனது கணிப்பில் வங்கிக்கு எதிர்மறை புள்ளிகளை அளித்துள்ளது. அத்துடன் அதன் கட்டமைப்பு மீது சந்தேகத்தை தெரிவித்துள்ளது. மெக்குவாரி மாதிரியை பின்பற்றி செயல்பட்டதான மற்றொரு நிறுவனம் பாப்காக் & பிரவுன் இன்னமும் சரிவை எட்டியுள்ளது - இதன் பங்கு விலை சென்ற நவம்பரில் 31 அமெரிக்க டாலர்களாக இருந்து இப்போது 80 சென்டுகள் வரையும் சரிவு கண்டுள்ளது.

இந்த விளைவு இத்துடன் நின்று விடவில்லை. ஆஸ்திரேலியாவின் நான்கு மிகப்பெரிய வங்கிகளும் உலகளாவிய அதிர்வுகளில் இருந்து கூடுதலான பாதுகாப்பு கொண்டவை. லெஹ்மன் பிரதர்ஸ்' பொறிவால் ஒப்பீட்டளவில் தங்களுக்கு அதிக பாதிப்பில்லை (மொத்தம் சுமார் 400 மில்லியன் டாலர்கள்) என்று அறிக்கைகள் விடுத்த பிறகும் கூட, இவற்றின் பங்குகள் பங்குச் சந்தையை சரிவுக்கு அழைத்துச் சென்றன. தேசிய ஆஸ்திரேலிய வங்கி 2000 ஆண்டு முதல் தனது மிகக் குறைந்த விலையை சந்தித்தது.

சென்ற ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்க குறைந்த பிணையுள்ள (sub-prime) கடன் நெருக்கடியால் தூண்டப்பட்ட சர்வதேச கடன் நெருக்கடியே ஏற்கனவே ABC Learning Centres, Centro Properties, finance companies RAMS, Allco and MFS, மற்றும் பங்குச்சந்தை தரகர்களான ஓபெஸ் மற்றும் லிஃப்ட் ஆகியவை உள்ளிட்ட பெரும் அளவிலான நிறுவனங்களின் உயர் நிலை பொறிவுகளை கண்டிருக்கின்றது.

இப்போது ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் காவலர் என போற்றப்படும் அதே சுரங்கத் துறையின் பங்குகளே பாதிப்புக்குள்ளாகி அந்த துறைக்கும் அச்சங்களை சுட்டிக் காட்டியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னதாக, Andrew Forrest சுமார் 10 பில்லியன் டாலர் சொத்துடன் ஆஸ்திரேலியாவின் பணக்கார மனிதராக Business Review Weekly ஆல் காட்டப்பட்டார். அவரது Fortescue Metal Group இன் இரும்புத் தாது விலைகள் மிக உயர்ந்தது தான் இதன் காரணம். ஆனால் அப்போது தொடங்கி, Fortescue பங்கு விலைகள் சுமார் 40 சதவீதம் சரிவு கண்டு, Forrest இன் சொத்து மதிப்பை சரிவு காணச் செய்துள்ளன.

ஓய்வூதிய வருமானங்கள் இல்லாதொழிக்கப்படுகின்றன

உலகின் வேறெந்த பகுதிகளையும் போலவே இங்கும், நிதி அமைப்பின் தோல்வியின் பொருளாதார சுமையை சுமக்க நிர்ப்பந்திக்கப்படுவது சாதாரண மக்களே அன்றி, இதன் பணக்கார மேல் தட்டினர் அல்ல. ஏற்கனவே அதிகரித்திருக்கும் கடன் நிலைகள், அதிகமான அடமான தொகை செலுத்தங்கள் மற்றும் கடன் அட்டை வட்டி விகிதங்கள் மற்றும் அதிகரிக்கும் விலைகள் இவற்றால் கடுமையாக நெருக்கப்பட்டுள்ள உழைக்கும் வர்க்க வீடுகள் இப்போது தங்களது வாழ்க்கைத் தரத்தில் மேலும் ஒரு கூர்மையான சரிவை எதிர்கொள்கின்றன.

இந்த வாரம் தான் ஆற்றிய உரையில், RBA கவர்னரான ஸ்டீவன்ஸ் "ஒரு புதிய கட்டம்" குறித்து பட்டவர்த்தனமாக பேசினார். மக்கள் "தங்களது கடன்நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும், தங்களது நுகர்வு செலவினத்தை தங்களது வருவாய்க்கு நெருக்கமானதொரு அளவில் அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும், பின், நடப்பு வருவாயில் அதிகமான தொகையை சேமிக்க வேண்டியிருக்கும் என்றும்" அவர் கூறினார். இதையெல்லாம் அவர் கூறுவது, மக்கள் கடன் நிலை தாங்கள் செலவழிக்க ஒதுக்கும் வருவாயை விட வரலாற்று உயர்வாக 175 சதவீதம் என்கிற அளவுக்கு அதிகமாக இருக்கிறது (ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்த 75 சதவீதம் என்பதை விட அதிகரித்துள்ளது), ஏனென்றால் உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கைச் செலவுகளுக்காக அதிகமான அளவில் கடன் வாங்க வேண்டியிருப்பதாலாகும்.

மத்திய, மாநில நிலை, உள்ளூர் நிலை என ஒவ்வொரு நிலையிலும் உள்ள அரசாங்கங்கள் சமூக திட்டங்களுக்கும், அடிப்படை சேவைகள் மற்றும் உள்கட்டுமானத்துக்கான செலவினத்தில் கடுமையான வெட்டுகள் குறித்து எச்சரிக்கின்றன. மிக அதிக மக்கள்தொகை கொண்டதான நியூ சவுத் வேல்ஸில், உள்ளூர் சபைகள் நிதியாதாரங்களை சிக்கலான, உயர்-அபாய முதலீடுகளில் முழுகச் செய்து நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை இழந்திருக்கின்றன, இப்போது சாலைகள் போடுவது உள்ளிட்ட அடிப்படை திட்டங்கள் மீது செலவினத்தை குறைக்க தயாராகி வருகின்றன. நியூ சவுத் வேல்ஸ் உள்ளூர்சபைகள் 1 பில்லியன் டாலர் அளவுக்கு கூட்டு கடன் கடப்பாடுகள் மற்றும் மூலதன-வாக்குறுதி பத்திரங்களுடன் கடன்பட்டுள்ளதாக அண்மைய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. லெஹ்மன் பிரதர்ஸ் பொறிவுக்கு முன்னதாக, சுமார் 24 உள்ளூர்சபைகள் அந்நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கையில் இறங்குவதை பரிசீலித்து வந்தன.

அதே சமயத்தில், மில்லியன்கணக்கான மக்கள் தங்கள் ஓய்வூதிய நிதிகள் குறைந்து போயுள்ளதைக் காண்கின்றனர். கடந்த இரண்டு தசாப்தங்களாக, சாதாரண உழைக்கும் மக்கள் முந்தைய மத்திய தொழிற்சங்க அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டாய முதிர்வுத் திட்டத்துக்குள் நிர்ப்பந்திக்கப்பட்டு, உண்மையான சம்பளத்தில் வெட்டுகளை ஏற்கச் செய்யப்பட்டுள்ளனர். அந்த பணம் பெருமளவிலான பெருமுதிர்வு நிதிகளுக்குள் திருப்பி விடப்பட்டு, அனைத்து பணமும் நிதி சந்தைகளின் ஊக வணிகத்துக்குள் அகப்பட்டுக் கொண்டுள்ளது.

இந்த வருடத்தில் மட்டும், சமநிலைப்பட்ட பெருமுதிர்வு நிதிகள் சுமார் 11 சதவீத இழப்பை சந்தித்திருப்பதாக SuperRatings நிர்வாக இயக்குநர் ஜெஃப் ப்ரஸ்னஹான் தெரிவித்தார். நிதிகளின் பெரும்பகுதி முதலீடு செய்யப்பட்டதான உள்ளூர் மற்றும் சர்வதேச பங்குச்சந்தைகளிலான இழப்புகள் சென்ற நிதி ஆண்டின் நிறைவான ஜூன் 30 முதல் மோசமடைந்து இருக்கின்றன. இக்காலத்தில் நிதிகள் சராசரியாக 6.5 சதவீத இழப்பினைச் சந்தித்திருக்கின்றன. "பலர் ஒன்று அல்லது இரண்டு வருடம் கூடுதலாக பணிபுரிய வேண்டியிருக்கலாம்" என்றும் "ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்.....உண்மையாகவே தங்களது ஓய்வூதிய மூலோபாயங்கள் குறித்து தெளிவாக மறுசிந்தனை செய்ய வேண்டும்" என்றும் ப்ரஸ்னஹான் தெரிவித்தார்.

சமீப ஆண்டுகளாக, சாதாரண மக்கள் தங்களது ஆயுள் காப்பீடு சேமிப்புகள் உள்ளிட்ட கூடுதலான பணத்தை பெருமுதிர்வு நிதிகளுக்குள் இறைக்க அதிகமான அளவில் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதோடு வரிச் சலுகைகள் வழியாக இழுக்கப்படவும் செய்கின்றனர். இந்த நிதிகள் 1992 ஆம் ஆண்டு சுமார் 80 பில்லியன் டாலர்களாக இருந்ததில் இருந்து இந்த ஆண்டு ஜனவரியில் சுமார் 1.2 டிரில்லியன் டாலர்கள் என்கிற அளவுக்கு உயர்வு கண்டிருக்கிறது. தனிநபர் முதலீட்டாளர்கள் ஜூன் 2007 காலாண்டில் மட்டும் 22.4 பில்லியன் டாலர்களை ஹோவார்டு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கூடுதல் வரிச் சலுகைகளின் அனுகூலங்களைப் பெறும் பொருட்டு இந்த நிதிகளுக்குள் வாரி இறைத்துள்ளனர். இது முந்தைய சாதனையை விடவும் மும்மடங்கு அதிகமாகும். பலர் இந்த வரிச் சலுகையால் அனுகூலம் பெறுவதற்கு கடனும் வாங்கி கடுமையான இழப்பினைச் சந்தித்துள்ளனர்.

பெருமுதிர்வு நிதியங்களின் மிகப்பெருமளவிலான வளர்ச்சி ஆஸ்திரேலிய பெருநிறுவன மேல்தட்டு வர்க்கத்தின் அதிகரிக்கும் நிதிரீதியான ஒட்டுண்ணித்துவத்தின் அங்கமாக இருக்கிறது. இது நிதி மேலாண்மையின் கீழான நிதியங்களின் மதிப்பை முன்கண்டிராத அளவுகளுக்கு - 1990 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதமாக இருந்து இந்த ஆண்டின் துவக்கத்தில் 160 சதவீதத்துக்கு, அல்லது 1.7 டிரில்லியன் டாலர் அளவுக்கு - உயர்த்தியிருக்கிறது. அதே சமயத்தில் தொழில்துறையின் பெரும்பகுதி மறுகட்டமைக்கப்பட்டுள்ளது, ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது அல்லது மூடப்பட்டுள்ளது.

பெருமுதிர்வு நிதியங்களின் சீரழிவு தொழிலாளர் மற்றும் தொழிற் சங்க தலைமைகளை கூண்டில் நிறுத்துவதாய் உள்ளது. இவை தான், வயதானோர் ஓய்வூதியங்கள் வறுமைக் கோட்டிற்கும் கீழ் சரிந்த நிலையில் தங்களது சொந்த ஓய்வூதியத்திற்கு தாங்களே வழி செய்து கொள்ளும் வகை என்பதாக தொழிலாளர்களை இந்த நிதிகளுக்குள் நிர்ப்பந்தப்படுத்தின. பல பெரிய நிதிகள் சங்கம்-பணியமர்த்துவோர் கூட்டுகளுக்கு உரிமையானவையாக இருக்கின்றன. இவை தங்களது சொந்த உறுப்பினர்களின் நலன்களைப் பலியிட்டு ஆதாய விகிதங்களை அதிகரிக்க முயலும் வகையில் சங்கங்களுக்கு குறுகிய நலன் சிந்தனைகளை அளித்து அவற்றை இப்போது விரியும் பேரழிவு என்னும் குற்றத்தில் சம்பந்தமுடையவர்களாக்குகின்றன.