World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

China's milk crisis: another disaster unleashed by the capitalist market

சீனாவின் பால் நெருக்கடி: மூலதன சந்தையால் கட்டவிழ்த்து விடப்பட்ட மற்றொரு பேரழிவு

By John Chan
24 September 2008


Use this version to print | Send this link by email | Email the author

சீன பால் பொருட்களுடன் தொழில்துறை நச்சு இராசாயனமான மெலமைன் சேர்ந்து மாசுபடுத்தப்பட்ட சம்பவம் படிப்படியாக ஒரு தேசிய மற்றும் சர்வதேச ஊழலாக உருவாகி வருகிறது. ஏற்கனவே, கலப்பட பொருட்களை உட்கொண்டதால் சீனாவில் சுமார் 53,000 கைக்குழந்தைகள் பாதிக்கப்பட்டன. குறைந்தபட்சம் 12,892 குழந்தைகள் - அவற்றில் பல சிறுநீரக கல்லுடன் - மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாக ஞாயிறன்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

சீனாவின் மிகப் பெரிய பால் மாவு உற்பத்தி நிறுவனமான சான்லூ குழுமத்தால் உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கான தயாரிப்பை உட்கொண்ட பின்னர் துரதிஷ்டவசமாக, நான்கு கைக்குழந்தைகள் சிறுநீரக கோளாறால் இறந்துள்ளன. சான்லூ நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை நியூஸிலாந்தின் முன்னணி பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஃபான்டெரா கொண்டுள்ளது; மீதி பெருமளவிலான பங்குகளை ஷிஜாழுவாங் (Shijiazhuang) நகர அரசாங்கம் கொண்டுள்ளது.

உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்பதற்காக புரோட்டீன் அளவை அதிகரிக்க, பால் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கும் இடைத்தரகர்களால் வெளிப்படையாகவே இந்த மெலமைன் சேர்க்கப்படுகிறது. டிசம்பர் 2007லிருந்து இந்த பிரச்சனை குறித்து சான்லூ அறிந்திருந்த போதிலும் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது. முதல் உயிரிழப்பு மே 1ல் தெரியவந்தது. இந்த கலப்படம் குறித்து ஆகஸ்டு தொடக்கத்திலேயே தெளிவாக கண்டறிந்திருந்த ஃபான்டெரா பிரதிநிதிகள், உள்ளூர் அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அந்நிறுவனத்தின் தயாரிப்புகளைத் திரும்ப பெற முயற்சி எடுக்கவில்லை. அதிகரித்து வரும் பிரச்சனைகளுக்கு இடையில், இறுதியாக செப்டம்பர் 8ல் நியூஸிலாந்து அரசாங்கம் இப்பிரச்சனையை நேரடியாக பெய்ஜிங்கின் முன் கொண்டு வந்தது.

பொதுமக்களின் கோபத்தை எதிர்கொள்ள, சீன அரசாங்கம் பொறுப்பை திசை திருப்புவதில் மூர்க்கத்தனமாக உள்ளது. கடந்த திங்களன்று, 2001ல் இருந்து பதவியில் இருந்த தர பரிசோதனை, ஆய்வு மற்றும் விதிவிலக்கு அளிக்கும் பொது நிர்வாகத்தின் தலைவர் லீ சாங்ஜியாங் இராஜினாமா செய்தார். அதே நேரத்தில், ஒரு விசாரணைக்கு உத்தரவிட்ட நாட்டின் மந்திரிசபையான ஆட்சிமன்றம், சான்லூவை குற்றஞ்சாட்டி பின்வருமாறு ஓர் அறிக்கையை வெளியிட்டது: "அது (சான்லூ) அரசாங்கத்திற்கு தெரிவிக்காமல், முறையான நடவடிக்கைகளையும் எடுக்காமல் நிலைமையை மிகவும் மோசமாகிவிட்டது" என்றது.

உண்மையில், சாதாரண உழைக்கும் மக்களின் அடிப்படை தேவைக்கு உத்திரவாதம் அளிக்க சீன ஆட்சியால் வளர்க்கப்பட்ட கட்டுப்பாடற்ற சந்தை உறவுகளின் மோசமான திறனின்மையின் மற்றொரு வெளிப்பாடு தான் இந்த நெருக்கடி - இதில் குழந்தைகளுக்கு தேவையான ஆரோக்கிய உணவு என்ற வடிவத்தை அது கொண்டுள்ளது. அனைத்து நிலையிலுமான கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளின் கூட்டுசதியுடன் கூடிய அரசு பெருநிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் அதீத செல்வாக்கானது, மக்களில் பெரும்பான்மையினரின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தின் மீதான விளைவு குறித்து கவலைப்படாமல் இலாபங்களை பெருக்குவதில் உள்ளது.

பாதிக்கப்பட்ட கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை 53,000த்திற்கும் மேலாக இருக்கலாம். பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளைப் பரிசோதிக்க சீனா முழுவதும் மருத்துவமனைகளில் வரிசையில் தொடர்ந்து நின்று கொண்டிருக்கிறார்கள். அனைத்திற்கும் மேலாக, இப்பொழுது சன்லூ குழுமத்திற்கும் அப்பால் நீட்டிக்கப்பட்டுள்ள, பால் பொருள் திரும்ப பெற்று கொள்ளப்பட்டமை, கைக்குழந்தைகளுக்கான மாற்று பால்பொருள் தயாரிப்புநுட்பம் இல்லாமல் கைவிடப்படும் மில்லியன்கணக்கான குடும்பங்கள் மீது இது மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்த கூடும். வேலைக்கு சென்று வரும் அன்னையர் அவர்களின் கைக்குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிக்க வீடுகளுக்கு அவசரமாக செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். பிறநாட்டு பால் பொருட்களை வாங்க எல்லை தாண்டி சென்ற சீன நுகர்வோர்கள் நிரம்பிய ஹாங்காங் கடைகளை பிபிசி காட்டியது.

சந்தையில் 60 சதவீதத்தை பிடிக்கும் Mengniu Dairy, Yili Industrial குழுமம் மற்றும் Bright Dairy ஆகிய மூன்று முன்னணி பிராண்டுகள் உட்பட 22 நிறுவனங்களின் தயாரிப்புகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. பால் திரவம், யோகர்டு (பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவுபொருள்) மற்றும் ஐஸ்க்ரீம் ஆகியவற்றிலும் மெலமைன் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆரோக்கிய கேடு மீதான அச்சம் ஹாங்காங் மற்றும் ஆசிய நாடுகளிலும் பரவியுள்ளது. அங்கெல்லாம் சீன பால் பொருட்கள் கலக்கப்படும் கற்கண்டு மற்றும் உடனடி காபியிலும் மெலமைன் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மிகவும் பிரபலமான சர்வதேச பிராண்டுகளும் கூட தற்போது சந்தேகிக்கப்படுகின்றன. ஸ்விட்சர்லாந்தை மையமாக கொண்ட நெஸ்டைல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பால் பண்ணையின் சுத்தமான பால் கூட மெலமைன், ஆல்பெய்டு ஆகியவை குறைந்தளவில் கலந்திருப்பதாக ஹாங்காங்கின் உணவு பாதுகாப்பு மையம் கண்டறிந்தது. அது குழந்தைகளுக்கானதல்ல; பெரியவர்களுக்கானது என்று கூறி நெஸ்டைல் தனது பால் விற்பனையைக் காப்பாற்ற முயன்றது. அமெரிக்காவின் Mead Johnson போன்ற கைக்குழந்தைகளுக்கான பால் பொருட்கள் உற்பத்தியாளர்கள், சீனாவில் தங்கள் ஆலைகளில் அவர்கள் உள்ளூர் பால் பயன்படுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்ட பாலை பயன்படுத்துவதாக தெரிவித்தனர். இந்த வகை பிராண்டுகள் பெரும்பாலான சீன குடும்பங்களுக்கு மிகவும் செலவு மிக்கதாகும்.

மெலமைன் எனும் வெள்ளை நிற பளிங்கு போன்ற மாவு பொதுவாக பிளாஸ்டிக் உற்பத்தியிலும், தோல் பதனிடுவதிலும் பயன்படுத்தப்படும். கடந்த ஆண்டு, சீனாவிலிருந்து வந்த மெலமைன் கலந்த கலவை அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான நாய்கள் மற்றும் பூனைகளை பலி கொண்டதால், அமெரிக்கா வளர்ப்பு மிருகங்களுக்கான பெருமளவிலான உணவுகளைத் திரும்ப அனுப்பிவிட்டது. சீன தயாரிப்பு பொருட்கள் மீதான தொடர்ச்சியான அவதூறுகளால் குற்றஞ்சாட்டப்பட்ட அரசு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் முன்னாள் தலைவரான Zheng Xiaoyu, பலரை கொன்று குவித்த போலி மருந்தை அங்கீகரிக்க இலஞ்சம் வாங்கியதற்காக குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

ஆனால் தற்போது Zheng ஐ பலியாடாக காட்டியதால் மட்டும் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியவில்லை என்பது வெளிப்படை. சமீபத்திய முறைகேடு மீதான கோபத்தை குறைக்கும் முயற்சியிலும் சீன ஆட்சி அதே அரசியல் முறைகளைத் தான் பயன்படுத்தி வருகிறது. குறைந்தபட்சம் 18 நபர்கள், முதன்மையாக பால்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சான்லூ குழுமத்தின் தலைவர் Tian Wenhua பலவந்தமாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சான்லூ அமைந்துள்ள Shijiazhuang வில், அந்நகர கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் உட்பட பல உள்ளூர் அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும், கோபமான பெற்றோர்களை சமாதானப்படுத்தவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனது குழுந்தையை பரிசோதிப்பதற்கான மருத்துவ செலவுகளை பெற Shjiazhuang நகரிலுள்ள சான்லூ அலுவலகத்தின் வரிசையில் நின்ற ஒருவர் தெரிவித்ததாவது: "இதுபோன்றதொரு பெரிய நிறுவனத்திலேயே குழப்பங்கள் ஏற்பட்டால், பின் உண்மையில் யாரைத் தான் நம்புவது என்று எனக்கு தெரியவில்லை" என்றார்.

ஹூனான் மாகாணத்தைச் சேர்ந்த பெண்மணி Zhou Zhijun, மருத்துவர்கள் சிறுநீரக கல்லை கண்டு பிடிப்பதற்கு முன்னதாக, ஜூன் மற்றும் ஆகஸ்டிற்கு இடையில் குறைந்தபட்சம் மூன்று முறை தனது நோய்வாய்பட்ட மகளை மருத்துவமனைகளுக்கு எடுத்து சென்றதாக தெரிவித்தார். சீன நிலவரப்படி அதற்கான தொகை அதிகளவில் 20,000 யுவான் (2,900 அமெரிக்க டாலர்) செலவானது, ஆனால் அவருக்கு அந்த தொகையை யாரும் அளிக்கவில்லை. "இன்னும் பிரச்சனைகளும், சிக்கல்களும் தொடர்ந்தால் என்ன செய்வது? அதற்கெல்லாம் யார் செலவு செய்வார்கள்?" என்று அவர் கேட்டார்.

South China Morning Post கருத்துப்படி, இணையத்தில் பரவியிருக்கும் வதந்திகளும் இந்த பால் மோசடியுடன் சேர்ந்து கொண்டுள்ளது. தினசரி வாழ்வின் அபாயங்களை ஒரு வலைப்பதிவாளர் பட்டியலிட்டிருந்தார்: "விரைவாக எழுந்துவிடுங்கள், carcinogenic பற்பசை கொண்டு பல் துலக்குங்கள், பின் மெலமைன் கலந்த மற்றும் அதிகளவில் அயோடின் சேர்க்கப்பட்ட நாள் கடந்த ஒரு கிளாஸ் பால் அருந்துங்கள்." என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர் ஒரு நகைச்சுவை துணுக்கொன்றை எழுதியிருந்தார்: ஒரு மனிதர் ரொட்டி வாங்க கடைக்கு செல்கிறார், ஆனால் அதில் பொருள் காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படாமல் இருக்கிறது. "கவலைப்படாதீர்கள். உங்களுக்காக அதை நான் எழுதி தருகிறேன்" என்கிறார் கடைக்காரர்.

ஒழுங்கமைக்கப்படாத பால்பண்ணை தொழில்துறை

அடிப்படை உணவுப் பொருட்களின் தரங்களை உறுப்படுத்த தவறியது, கடந்த 30 ஆண்டுகளாக சீன ஆட்சியால் செயல்படுத்தப்பட்ட "சந்தை சீர்திருத்தத்தின்" நேரடி விளைவாக உள்ளது. இது சீனாவில் பால் பொருட்களில் நடந்திருக்கும் முதல் மோசடி அல்ல. 2004ல், ஊட்டசத்து மதிப்பு இல்லாத போலியான கைக்குழந்தைகளுக்கான பால் பொருட்கள் தயாரிப்புநுட்பங்கள் அளிக்கப்பட்ட பின்னர், 13 கைக்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழந்தன. எவ்வாறிருப்பினும், 2003ல் 1.4 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த கைக்குழந்தைகளுக்கான பொருள் தயாரிப்பு தொழில்துறை, கடந்த ஆண்டு 3.1 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சி அடைந்துள்ளது. பிற பால் பொருட்களின் வருவாயும் இதே காலத்தில் 17.9 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இரட்டிப்பாகியுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் மற்றும் வங்கிகளும் லாபகரமான துறைக்கு மாறி இருக்கின்றனர். இதனால் அது விரிவாக்கம் அடைந்துள்ளது என்பதுடன் உயர்ந்த வருவாய்க்கான அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சீன பாரம்பரிய உணவுகளில் பால் இடம் பெறுவதில்லை. மக்கள் பாட்டாளிகளாக மாற்றப்பட்ட போது பால் பொருட்கள் தொழில்துறை விரிவாக்கம் பெற்றது. பொதுவாக நீண்ட நேரத்திற்கும், கடுமையான சூழல்களிலும் பெரும்பான்மை பெண்கள் தற்போது பணியாற்றுகிறார்கள். இதனால் மருத்துவமனைகள் தாய்ப்பால் அளிக்க கடுமையாக அறிவுறுத்தி வரும் நிலையிலும் கூட, தாய்ப்பால் அளிப்பது அவர்களுக்கு சாத்தியப்படுவதில்லை. பல இளம் அன்னையர் அவர்களின் கைக்குழந்தைகளை அவர்களின் கிராமப்புறங்களுக்கு அனுப்பி விடுகின்றனர். அங்கு அவர்களின் வறுமையான பெற்றோர்கள் மலிவான பால் மாவுகளை கைக்குழந்தைகளுக்கு அளிக்கிறார்கள்.

சீனாவிலுள்ள பெரும்பான்மை பெரிய நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பங்களையும், தானியங்கி பால்பொருட்கள் தயாரிப்பு பண்ணைகளையும் கொண்டுள்ளன என்று செப்டம்பர் 17ல் தி பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது. எவ்வாறிருப்பினும், அந்த பண்ணைகள் தேவையான பால் அளவில் மிக சிறியளவு தான் உற்பத்தி செய்கின்றன. "தனியார் ஈக்விட்டி நிதி மற்றும் மோர்கன் ஸ்டான்லி மற்றும் பிஎன்பி பாரிபாஸ் போன்ற பெரிய வங்கிகள் உட்பட அன்னிய முதலீட்டாளர்களின் நலனுக்காக தான் பெரும்பாலான முன்மாதிரி பண்ணைகள் இருப்பதாக தெரிகிறது. இந்த அன்னிய முதலீட்டாளர்கள் நாட்டின் சில பெரிய பால் உற்பத்தி நிறுவனங்களை கையகப்படுத்தி உள்ளனர் என்பதுடன், இது ஷாங்காய், ஹாங்காங் மற்றும் நியூயார்க் போன்ற பங்கு சந்தைகளில் அவற்றின் பங்குகளை பட்டியலிட உதவியுள்ளது" என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டது.

பல சிறு பால் உற்பத்தியாளர்கள் வருவாய்க்கான புதிய வழியாக பால் உற்பத்தி செய்ய விரைந்தனர். 2000த்தில் 8.6 மில்லியன் டன்னாக இருந்த சீனாவின் பால் உற்பத்தி 2006ல் 32.3 மில்லியன் டன்னாக உயர்ந்தது. உடனடியாக தேவையை குறைத்த இந்த விரைவான வளர்ச்சி, சிறு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை வெட்டுவதில் இட்டுச் சென்றது. பல நிறுவனங்கள் உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் போட்டிருந்தன, பால் தரத்தின் மீதான பெரும் கட்டுப்பாட்டை அந்த நிறுவனங்களுக்கு அளித்திருந்தன. எவ்வாறிருப்பினும், பாலின் தேவை குறைந்த போது உற்பத்தியாளர்களுக்கு பணம் அளிக்க வேண்டியதைத் தவிர்க்க பல நிறுவனங்கள் அவ்வாறு செய்ய மறுத்தன. இன்னும் சில நிறுவனங்கள், பல பண்ணைகளிலிருந்து பால் கொள்முதல் செய்த முகவர்களிடம் இருந்து அவற்றிற்கான பாலை பெற்றன. இது பாலின் தரத்தை மேலும் மோசமாக்கியது. இந்த முகவர்கள், தங்களுக்கு பால் அளிப்பவர்களிடமிருந்து முடிந்த வரை குறைவான விலையில் கொள்முதல் செய்து, யார் அதிக விலை அளிக்கிறார்களோ அவர்களுக்கு விற்பனை செய்தார்கள்.

தேசிய அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் அதிகாரி ஃபாங் யான் ராய்டர்களிடம் கூறியதாவது: "பால் பொருட்கள் தொழில்துறையின் குருட்டுத்தனமான விரிவாக்கத்தால் தரத்தின் மீது அலட்சியம் ஏற்பட்டுள்ளது மற்றும் மெலமைன் பயன்படுத்தவும் தூண்டியுள்ளது." என்றார். படிப்பறிவில்லாத விவசாயிகள், ஆடுமாடுகளிடமிருந்து கறக்கும் பாலை அதிகரிக்க முன்னர் பயன்படுத்திய அதே முறைகளையே தற்போதும் பண்ணை பசு மாடுகளிடமிருந்து கறக்கும் பாலை அதிகரிக்க பயன்படுத்துகிறார்கள். இதனால் குறைந்த புரோட்டீன் உள்ள பால் தான் கிடைக்கிறது என்று அவர் தெரிவித்தார். "அவர்கள் குறைந்த புரோட்டீன் பாலை ஆலைகளுக்கு விற்ற போது, அவர்கள் அதை நிராகரித்தார்கள். அதன் காரணமாக சிலர் பாலில் மெலமைன் கலந்தார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.

பால் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே உணவு பொருட்கள் மோசடி மற்றும் ஸ்திரமற்ற சந்தையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, பலர் அவர்களின் பாலைக் கொட்டி, அவர்களின் பசுக்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே கலப்படத்தால் பிற முக்கிய பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளனவா என்று அறிய, Shijiazhuangவில், சான்லூவிற்கு வினியோகித்த பால் உற்பத்தியாளர்கள் புதிய வாங்குவோரை தேடி செல்கின்றனர்.

இதற்கு மேல் தங்களின் பாலை யாரும் விரும்பவில்லை என்று ஹுபெய் மாகாணத்திலுள்ள Yangjiazhai கிராமத்தின் விவசாயிகள் அசோசியேடட் பிரஸிடம் தெரிவித்தார்கள். "எங்களைப் போன்ற சிறு உற்பத்தியாளர்கள் தான் தற்போதிருக்கும் சான்லூவை பெரிய நிறுவனமாக உருவாக்கினோம். ஆனால் தற்போது சான்லூ வீழ்ச்சி அடைந்தால், யார் எங்களுக்கு உதவி செய்வார்கள்?" என ஒருவர் கேட்டார். மற்றொரு விவசாயி கூறுகையில், அவர் தனது 12 பசுக்களுக்கு உணவளிக்க ஒரு நாளைக்கு 30 டாலர் செலவிடுவதாகவும், ஆனால் ஐந்து நாட்களாக பால் விற்கவில்லை என்றும் தெரிவித்தார். "நான் என் பசு மாடுகளை விற்க தயாராகி வருகிறேன். இது போன்றதை என்னால் மீண்டும் பெற முடியாது என்றாலும் கூட இது இன்னும் எத்தனை நாட்களுக்கு இவ்வாறு போகும் என்று யாருக்கு தெரியும்?" என்று அவர் தெரிவித்தார்.

பரிசோதனையிலிருந்து மூன்று வருட விதிவிலக்கு அளிக்கப்பட்ட 2,125 நிறுவனங்களில் சான்லூவும் ஒன்று என்பதன் அடிப்படையில் அதன் தரக்கட்டுபாடு மிகவும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதால் அதற்கு ஒழுங்கமைப்பு தேவைப்படவில்லை. சீன அதிகாரத்துவத்தினரும் அவர்களுக்கு நிகரான அமெரிக்க நிர்வாகிகளும் மற்றும் பிற நாடுகளைப் போலவே சுய-ஒழுங்கமைப்புக்கு பின்வரும் "கட்டுப்பாடற்ற சந்தை" விவாதங்களையே பயன்படுத்தினார்கள்: நுகர்வோர்களால் ஒரு பொருள் ஏற்று கொள்ளப்படவில்லை என்றால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் போட்டியாளரின் தயாரிப்பை வாங்கலாம். சந்தையில் இடமளித்தது மற்றும் இலாப விதிக்கான உந்துசக்தி ஆகியவை அடுத்த தலைமுறையின் ஆரோக்கியம் உட்பட, தவிர்க்க இயலாத மனித உயிரிழப்புகளுடன், நுகர்வோருக்கும், சிறு உற்பத்தியாளர்களுக்கும் பேரழிவு தரும் விளைவுகளைத் தான் அளித்திருக்கிறது என்பதை இந்த சமீபத்திய பால் பொருள் கலப்படம் தெளிவுபடுத்தியுள்ளது. &ஸீதீsஜீ;