World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan election: SEP campaigns among railway workers

இலங்கை தேர்தல்: சோ.ச.க. ரயில் ஊழியர்கள் மத்தியில் பிரச்சாரம்

By W.A. Sunil
30 March 2009

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சி, மேல்மாகாண சபைக்கான தேர்தலில் கொழும்பு மாவட்ட பிரச்சாரத்தின் ஒரு பாகமாக ரத்மலானையில் உள்ள ரயில் ஊழியர்களின் தங்குமிடத்திற்கு சென்றது. இது கொழும்பு நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள ஒரு பிரதான கைத்தொழில் வலயமாகும். ஏப்பிரல் 25 நடக்கவுள்ள தேர்தலில் சோ.ச.க. 46 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

1930களின் கடைப் பகுதியில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கடைசி காலகடத்திலேயே ரத்மலான புகையிரத வேலைத் தளம் கட்டியெழுப்பப்பட்டது. அப்போது ரயில் ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட ஒரு சில தங்குமிடங்கள் பின்னர் 500 வீடுகள் வரை விஸ்தரிக்கப்பட்டது. இந்த கட்டிடங்களில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.

போர்க்குணம் மிக்க போராட்டங்களின் நீண்ட வரலாறு ஒன்று ரத்மலானை ரயில் தொழிலாளர்களுக்கு உண்டு. அவர்கள் ட்ரொட்ஸ்கிச லங்கா சமசமாஜக் கட்சியின் (ல.ச.ச.க.) தலைமையில் 1953ல் நடத்தப்பட்ட ஹர்த்தாலில் -பொது வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு- பங்கெடுத்துக்கொண்டனர். இந்த ஹர்த்தால் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) அரசாங்கத்தை பொறிவின் விளிம்புக்கே கொண்டு சென்றது. ஆயினும், ல.ச.ச.க. பின்னர் 1964ல் முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) அரசாங்கத்தினுள் நுழைந்துகொண்டதன் மூலம் ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை காட்டிக்கொடுத்தது.

ரத்மலான ரயில் தொழிலாளர்கள் 1976 பொது வேலை நிறுத்தத்தில் ஒரு முன்னணி பாத்திரம் வகித்ததோடு அப்போது ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான கூட்டணி கவிழ்க்கப்பட்டது. அவர்கள் யூ.என்.பி. அரசாங்கத்தின் சுதந்திர சந்தை வேலைத்திட்டம் வாழ்க்கைத் தரங்களில் ஏற்படுத்திய தாக்கங்களுக்கு எதிராக 1980 ஜூலையில் வெடித்த பொது வேலை நிறுத்த இயக்கத்திலும் பங்குபற்றினர். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, பத்தாயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததன் மூலமே அந்த வேலை நிறுத்தத்தை நசுக்கினார்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.) ரத்மலான ரயில் ஊழியர்கள் மத்தியில் 1968ல் பு.க.க. ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே பிரச்சாரம் செய்துவந்துள்ளன. அந்தப் பிரதேசத்தில் உள்ள பல தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தவர்களும் சோ.ச.க. உடனும் அதன் சோசலிசத்துக்கான நீண்ட போராட்டத்துடனும் பரீட்சியமானவர்கள்.

சோ.ச.க. பிரச்சாரத்தில் ஈடுபட்ட சனிக்கிழமை ஒரு சில தொழிலாளர்களே வீட்டில் இருந்தனர். தேவையான வருமானத்தை அடைவதற்காக பெரும்பாலானவர்கள் இப்போது வேலைத் தளத்துக்கு வெளியில் பகுதி நேர தொழில்களை செய்ய அல்லது மேலதிக நேரம் உழைக்கத் தள்ளப்பட்டுள்ளனர். பெரும்பாலான இளைஞர்களும் வீட்டில் இருக்கவில்லை. பலர் மேலதிக வகுப்புகளுக்கு சென்றிருந்தனர் அல்லது வாரக் கடைசியில் தற்காலிக தொழில்களுக்கு சென்றிருந்தனர்.

ரயில் திணைக்களம் தரங்குறைந்து வருவது போலவே, ரயில் ஊழியர்களின் தங்குமிடங்களும் கேட்பாரற்று உள்ளன. தமது வீடுகளின் மோசமான நிலைமை குறித்து தொழிலாளர்களும் குடும்பப் பெண்களும் சீற்றத்துடன் பேசினர்.

Nimalஅந்த வேலைத் தளத்தில் 29 ஆண்டுகளாக தொழில்புரிந்து வரும் பம்ப் இயக்குபவரான நிமால் சுவாரிஸ், சீரழிவைச் சுட்டுக்காட்டினார்: "சுவர்களில் வெடிப்பைப் பாருங்கள். தரை உடைந்து போயுள்ளது. எங்களது தளபாடங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது. சில துண்டுகளை நாம் எங்களது உறவினர்களின் வீடுகளுக்கு அப்புறப்படுத்தியுள்ளோம். கழிவு வாய்க்கால் அடைத்துப் போயுள்ளதால் மழை பெய்யும் போது எங்களது கொல்லைப்புறம் ஆறாக மாறிவிடும். சுற்றியுள்ள வீடுகளின் சாக்கடைகளும் கூட கொல்லைப்புறத்துக்குள் வரும்."

ஒரு தொழில்நுட்பவியலாளரான பிரியன்த, "எங்களது வீடுகளை திருத்தி தருமாறு கேட்டால், பணம் இல்ல, வேலை செய்ய ஆட்கள் இல்லை அல்லது தேவையான பொருட்கள் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்," என்றார்.

வீடுகள் சிறியவை. பிள்ளைகள் வளர்ந்து இப்போது அவர்களுக்கு சொந்தக் குடும்பங்கள் இருந்தாலும் போவதற்கு இடமின்றி இருக்கின்றனர். கூட்டம் அதிகமாக இருந்தாலும், நிலம் இருந்த போதிலும் அவர்களது வீடுகளை விரிவுபடுத்திக்கொள்ள அனுமதிப்பதில்லை.

கொசுத் தொல்லையும் சரியாக குப்பைகள் அகற்றப்படாமையும் பிரதான சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

ஒரு குடும்பப் பெண்ணான அசோகா ஜயந்தி மாநகர சபை மீது குற்றஞ்சாட்டினார்: "கொசுக்கள் எங்களுக்கு பெரிய தொல்லை. தொலைக்காட்சி செய்திகளில் டெங்கு காய்ச்சல் பரவுவது பற்றி சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். தமது நிலங்களை சுத்தம் செய்துகொள்வதில்லை என அரசாங்க மற்றும் மாநகரசபை அதிகாரிகளும் மக்களைக் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் இந்த வீட்டுத் திட்டத்தில், தண்ணீர் கசிவுகளையும் அதிகளவு கொசுக்களை பரப்பும் துப்புரவு செய்யப்படாத இடங்களையும் நீங்கள் காணலாம் [இவைகளை அதிகாரிகள் துப்புரவு செய்வதில்லை]."

ஏனைய உழைக்கும் மக்களைப் போல், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவையும் ரயில் தொழிலாளர்களால் சமாளிக்க முடியவில்லை. இரு பிள்ளைகள் கொண்ட ஒரு வேலைத்தள மெக்கானிக்கான ஆரியரத்ன விளக்குகையில், "எங்களது வருமானத்துடன் எங்களது மாத செலவை சமாளிப்பது சிரமம். கடன்கள் மற்றும் ஏனையவற்றுக்கு வெட்டிக்கொண்ட பின்னர், எங்களுக்கு மாதம் 15,000-20,000 ரூபா (131-175 அமெரிக்க டொலர்) மட்டுமே கிடைக்கும். எனது மனைவிக்கு தொழில் கிடையாது. அதனால் சகலதும் எனது சம்பளத்திலேயே செய்ய வேண்டும்.

"உணவுக்கு மட்டும் நாங்கள் மாதம் 10,000 ரூபாவுக்கு மேல் செலவிட வேண்டும். எங்களது இளைமைக் காலத்தைப் போல் எங்களால் மீனோ அல்லது இறைச்சியோ சாப்பிட முடியாது. சில சமயங்களில் சிறிய, இலாபகரமான மீனில் 500 கிராம் வாங்குவதற்கு கூட 80 ரூபா செலவிட வேண்டும். மரக்கறி விலைகள் அனைத்தும் ஏறிவிட்டன. எங்களது பிள்ளைகளுக்கு கொடுக்கும் பாலின் அளவையும் குறைக்கத் தள்ளப்பட்டுள்ளோம்."

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் தீவின் வடக்கில் பிரிவினைவாத தமிழழீ விடுதலைப் புலிகள் மீதான இராணுவ வெற்றியை தூக்கிப் பிடித்துக்கொண்டு தேர்தலுக்கு பிரச்சாரம் செய்கின்றனர். "புலி பயங்கரவாதிகள்" தோற்கடிக்கப்பட்ட பின்னர் உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகம் மற்றும் சுபீட்சமான எதிர்காலத்தை வழங்குவதாக பெரும் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. மோதல்களில் சிக்கியுள்ள பத்தாயிரக்கணக்கான சிவிலியன்களின் பயங்கரமான நிலை அரசாங்கத்தாலும் இராணுவத்தாலும் மூடி மறைக்கப்படுகின்றன.

புலிகளின் தோல்வியானது தீவு பூராவும் உள்ள தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான புதுப்பிக்கப்பட்ட தாக்குதல்களை மட்டுமே கொண்டுவரும் என சோ.ச.க. எச்சரித்துவந்துள்ளது. நாட்டை வங்குரோத்தின் விளிம்புக்கே கொண்டுவந்துள்ள அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெரும் கடனை எதிர்பார்த்துள்ளது. அத்தகைய கடன் மிகக் கொடூரமான நிபந்தனைகளையும் தவிர்க்க முடியாமல் இணைத்துக்கொண்டிருக்கும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகவும் சோசலிச கொள்கைகளுக்காகவும் முன்னெடுக்கும் போராட்டத்தில் உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்தும் வழிமுறையாக தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து சகல பாதுகாப்பு படைகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும திருப்பியழைக்குமாறு சோ.ச.க. பிரச்சாரம் செய்கின்றது.

அரசாங்கத்தின் பிரச்சாரம் சந்தேகமின்றி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 25 ஆண்டுகால அழிவுகரமான யுத்தத்தின் பின்னர், பெரும்பாலான மக்கள் மோதல்களுக்கு முடிவு வரும் என்றும் தமது வாழ்க்கையில் சில முன்னேற்றம் ஏற்படும் என்றும் எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர். ஆயினும், அந்த எதிர்பார்ப்பில் கணிசமானளவு சந்தேகமும் அவநம்பிக்கையும் கலந்துள்ளது.

எங்களுடன் பேச ஆரம்பித்த வீரரட்ன என்ற ஒரு மெக்கானிக், "யுத்தம் விரைவில் முடிவடைந்தால் நல்லது. நாட்டில் சமாதானம் நிலவும். யுத்தத்துக்காக [அரசாங்கம்] செலவிடும் பணம் நாட்டின் அபிவிருத்திக்காக செலவிடப்படும்" எனத் தெரிவித்தார். ஆனால் பிரமாண்டமான இராணுவச் செலவு மற்றும் பூகோள பொருளாதாரப் பின்னடைவால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியை நாம் சுட்டிக் காட்டிய போது அவர் கவனிக்கத் தொடங்கினார். சர்வதேச நாணய நிதிய கடனின் உள்ளடக்கத்தைப் பற்றி சிந்தித்த அவர், "ஆம், நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது," என்றார்.

L.S De Soysaஒரு வயதான தொழிலாளி எல்.எஸ். டி சொய்சா தெரிவித்ததாவது: "யுத்தம் விரைவில் முடிந்துவிடும், வடக்கு கிழக்கிலும் தெற்கிலும் உள்ள மக்கள் பீதியின்றி வாழமுடியும் என்று அரசாங்கம் சொல்கின்றது. இந்த நாட்டின் ஆட்சியாளர்களாலேயே யுத்தம் உருவாக்கப்பட்டது. புலிகள் தோற்றுவிட்டால் யுத்தம் முடிவடையலாம், ஆனால், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை.

"தற்போதைய அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்களுமே யுத்தத்திற்கு பொறுப்பாளிகள். 1983ல் [தமிழர்கள் மீதான இனப் படுகொலை] என்ன நடந்தது என்று எனக்கு நினைவிருக்கிறது. யூ.என்.பி. குண்டர்களே தமிழ் மக்களைக் கொன்றதோடு அவர்களின் சொத்துக்களுக்கும் தீ மூட்டினர். சாதாரண மக்கள் அல்ல."

பழைய இடதுசாரி கட்சிகள் எவற்றுக்கும் யுத்தத்துக்கு முடிவுகட்டவும் உழைக்கும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் எந்தவொரு வேலைத் திட்டமும் கிடையாது என டி சொய்சா தெரிவித்தார். புதிய சோசலிச இயக்கத்தை தொழிலாளர்கள் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் உடன்பாடு கொண்ட அவர் மேலும் இலக்கியங்களை பெற்றுக்கொள்ள முன்வந்தார்.

1970களில் ரத்மலான வேலைத் தளத்தில் 5,000 தொழிலாளர்களுக்கும் மேல் இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை 3,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஓய்வுப் பெற்றவர்களின் இடைவெளி புதிய தொழிலாளர்களால் நிரப்பப்படவில்லை. புதிதாக இணைக்கப்பட்டவர்களுக்கும் ஓய்வூதிய உரிமையோ அல்லது அவர்களது மின்சாரக் கட்டணத்தில் சலுகையோ கிடையாது.

தனியார்மயமாக்கம் மற்றும் தொழில், நன்மைகள், சம்பளம் மற்றும் பதவி உயர்வு போன்றவற்றை வெட்டிக்குறைப்பதற்குமான முதற் படியாக, ரயில் திணைக்களத்தை மறுசீரமைக்கும் திட்டங்களுக்கு எதிராக கடந்த இரு தசாப்தங்களாக ரயில் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். சிறந்த சம்பளம் கோரி 2006 மற்றும் 2008ல் ஏனைய அரசாங்க ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தங்களில் ரயில் ஊழியர்களும் இணைந்துகொண்டனர். தொழில் நிலைமைகள் தொடர்பாக கடந்த ஆண்டு லுக்கோமோட்டிவ் தொழிலாளர்களும் சாரதிகளும் இருமுறை பிரச்சாரத்தில் குதித்தனர். வேலை நிறுத்தங்கள் "புலி பயங்கரவாதிகளுக்கு" ஆதரவானவை என அரசாங்கம் கண்டனம் செய்ததை அடுத்து, வளைந்து கொடுத்த தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு முடிவுகட்டின.

ரயில் திணைக்களத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இருந்து போதிலும், எந்தவொரு சங்கத்தின் மீதும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை கிடையாது. பெரும்பாலானவர்கள் அதிருப்தியால் சங்கங்களில் இருந்து விலகியுள்ளனர். தொழிற்சங்கங்கள் தமது உறுப்பினர்களில் 50 வீதமானவர்களை இழந்துவிட்டன என பலர் தெரிவித்தனர்.

Jayalathடபிள்யு. ஏ. ஜயலத் தெரிவித்ததாவது: "தொழிற்சங்கங்கள் முற்றிலும் பயனற்றவை. அவை எங்களது உரிமைகளை பாதுகாப்பதில்லை. இரண்டு தொழிற்சங்க முன்னணிகள் உள்ளன. ஒன்று அரசாங்கத்தை ஆதரிக்கும் தொழிற்சங்கத்தின் தலைமையிலானது. மற்றையது மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைமையிலானது. எங்களது உரிமைகளுக்காக போராடுவதாக கூறிக்கொண்டதால் நான் உட்பட பல தொழிலாளர்கள் ஜே.வி.பி. சங்கத்தில் சேர்ந்துகொண்டோம். ஆனால் அவர்களுக்கும் அரசாங்க சார்பு தொழிற்சங்களுக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது."

எங்களுடன் பேசிய பலர், தேர்தல் தமது வாழ்க்கை நிலையில் எதாவது மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்பிக்கை கொள்ளாததோடு அனைத்து பிரதான கட்சிகள் மீதும் தமது வெறுப்பை வெளிப்படுத்தினர். சிலர் தாம் வாக்களிக்கப் போவதில்லை எனத் தெரிவித்தனர்.

ஒரு தொழில்நுட்பவியலாளரான கே. ஜி. ரன்ஜித், "நான் எந்தவொரு அரசாங்கத்தையும் அல்லது அரசியல் கட்சியையும் நம்புவதில்லை. கடந்த பல தேர்தல்களில் நான் வாக்களிக்கவில்லை. இந்த தேர்தலோ அல்லது எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் எந்தவொரு அரசாங்கமோ எமது பிரச்சினைகளைத் தீர்க்கும் என நான் நம்பவில்லை. மாறாக, எங்களது பிரச்சினைகள் மட்டுமே மோசமடையும்," என்றார்.

ஜே.வி.பி. பற்றி கருத்துத் தெரிவித்த ரஞ்சித் விளக்கியதாவது: "அவர்களது அரசியல் சோடா போத்தல் ஒன்றைத் திறப்பது போன்றது. பல ஆண்டுகளாக அவர்களது கட்சி ஊதிப் பெருத்தது. தமது பிரச்சினைகளைக் குறைக்க ஜே.வி.பி. ஏதாவது செய்யும் என சிலர் நம்பினர். ஒன்றும் நடக்காததோடு இப்போது அது காற்றுப் போன பலூன் போன்றுள்ளது."

ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்கள் பற்றி அவர் விமர்சித்தார். "நீங்கள் யுத்தத்துக்கு எதிராகப் பேசினால் நீங்கள் துரோகியாக நடத்தப்படுவீர்கள். பின்னர் வெள்ளை வான் வரும் நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள். கடந்த காலத்தில் எத்தனைபேர் காணாமல் போயுள்ளனர்?" தனியார்மயமாக்கத்துக்கு எதிராக மின்சாரசபை ஊழியர்கள் ஊர்வலம் செல்ல முற்பட்ட போது பொலிஸ் அதை தடுத்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பிடத்தக்க வகையில், தொழிலாளர்கள் வரலாறு பற்றி பேசுவதிலும் அக்கறை காட்டினர். சிலர் இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் கடந்தகால போராட்டங்கள் பற்றி தெரிந்திருந்த போதிலும், அவர்கள் அதைப்பற்றி விபரமாக அறிந்திருக்கவில்லை அல்லது தொழிலாளர்கள் எவ்வாறு காட்டிக்கொடுக்கப்பட்டனர் என்பதை அறிந்திருக்கவில்லை. இந்த அக்கறையானது அதிருப்தி கண்டுள்ள மற்றும் அந்நியப்பட்டுள்ள தொழிலாளர்கள், தாம் எதிர்கொள்ளும் ஒடுக்கப்பட்ட நிலைமைக்கு ஒரு புரட்சிகர பதிலீட்டைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளதற்கான இன்னுமொரு அறிகுறியாகும்.