World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The Nation and "socialism"

நேஷன் ஏடும் "சோசலிசமும்"

By David Walsh
2 April 2009

Use this version to print | Send this link by email | Email the author

அறிவார்ந்த மற்றும் அரசியல் திவால்தன்மைக்கு உதாரணங்களாக அமெரிக்காவின் தாராளவாதப் பதிப்பான (Nation) நேஷனின் பக்கங்களைப் படிப்பதை விட வேறு ஏதும் தேவையில்லை. இதழின் தற்போதைய தொடரான "Reimagining Socialism" - "மீண்டும் சோசலிசத்தை கற்பனை செய்தல்" என்பது சிறந்த தொடக்கக் கட்டமாக இருக்கும்.

அமெரிக்காவில் பலவித தாராள மற்றும் "இடது" விமர்சகர்களின் சிறு கட்டுரைகளின் தொகுப்பு உலக முதலாளித்துவ முறிவு மற்றும் தடையற்ற சந்தை பற்றிய கருத்தியல் மதிப்பிழந்து போனமைக்கு விடையிறுப்பு ஆகும்; இந்நிகழ்வை பரந்த வெகுஜன செய்தி ஊடகம் கூட ஒப்புக் கொண்டுள்ளது. பெருநிறுவன நிதிய பிரபுத்துவத்திற்கு மக்கள் வெறுப்பு பெருகிய முறையில் அன்றாட அமெரிக்க வாழ்வின் ஒரு உண்மையாகி வருகிறது.

தன்னுடைய வாசகர்களை நேஷன் முன்கூட்டியே நம்பவைக்கும் முயற்சியாக இருப்பது சோசலிசப் புரட்சி இயலாது என்றும், உலகில் மிகச் சிறந்ததாக வெளிப்பட உள்ளது ஒபாமா நிர்வாகத்தின் மீதும் ஜனநாயகக் கட்சி மீதும் மகத்தான சீர்திருத்தவாத அழுத்தம் வெளிப்பட இருக்கிறது என்றும் கூறியிருப்பது ஆகும்.

இத்தொடர் இவ்வாரம் முதலாளித்துவத்தின் திறனான குரல்களில் ஒன்றான பிரிட்டனின் பைனான்ஸியல் டைம்ஸில் ஒரு அவநம்பிக்கைக் கருத்தை வெளியிடத் தூண்டியது. கட்டுரையாளர் மைக்கேல் ஸ்காபின்கர் ("Dangers in a Worlof Disillusionment" என்று மார்ச் 30ல் வெளிந்த கட்டுரையில்,) "முதலாளித்துவம் தாழ்ந்துள்ள நிலைமை பற்றி களிப்படைய வேண்டியவர்கள் மற்றவர்களை போலவே இழந்த நிலையில் உள்ளது வேடிக்கையானது" என்று குறிப்பிட்டுள்ளார். "இப்பொழுது நேஷன் "சோசலிசத்தை மீண்டும் கற்பனை செய்தல்" என்று தொடர்ச்சியான பல கட்டுரைகளை வெளியிடுகிறது, அதில் ஒவ்வொரு கட்டுரையாளராக மீண்டும் சோசலிசம் பற்றி மறு கற்பனை செய்ய இயலாது என்று கூறியுள்ளனர்."

சீர்திருத்த வாத Democratic Socialists of America வின் பார்பாரா எஹ்ரென்ரிச் மற்றும் முன்னாள் AFL-CIO-ன் தலைவர் ஜோன் ஸ்வீனியின் உதவியாளரும் "Progressives for Obama" வின் இணை நிறுவனருமான பில் பிளெட்சர் ஜுனியர் இருவருடைய ஆரம்ப கட்டுரையில் ஆரம்பித்து, பல கட்டுரைகளும் அதிக ஆர்வமற்ற முறையில் எழுதப்பட்டுள்ளன.

எக்ரென்ரிச் மற்றும் பிளெட்சர் இருவரும் அமெரிக்க சோசலிஸ்ட்டுக்கள் பலரை எள்ளி நகையாடிய பிறகு ("நம்மில் பலரும் காக ஒலி எழுப்பக்கூட திறனற்றவர்கள்"), தற்போதைய பொருளாதார மற்றும் சமூக ஒழுங்கு உயர்ந்த வடிவமைப்பு உடைய சமூக அமைப்பிற்கு போதிய தளத்தைக் கொடுக்காது என்று வாதிட்டுள்ளனர்.

"முதலாளித்துவம் இப்புவியில் 400 ஆண்டுகளுக்கு முன்பு முதலாளித்துவ உற்பத்தி முறை தொடங்கிய பொழுது, நாம் கொண்டிருந்ததைவிட குறைவான நிலையில் வைத்திருக்கலாம்" என்று வியத்தகு முறையில் அவர்கள் எழுதியுள்ளனர். இணை கட்டுரையாளர்கள் தங்கள் சிந்தனைகளை வலைத் தளத்தில் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர், இத்தகைய தொடர்புமுறை கடற்பயணியாளர் ஹென்ரி ஹட்சன் இப்பொழுது நியூ யோர்க் துறைமுகத்தில் வந்து இறங்கிய காலத்தில் அதிகம் அறியப்படவில்லை என்பதைப் பற்றி அவர்கள் பொருட்படுத்தவில்லை.

இத்தகைய வரலாற்றுத் தன்மை அற்ற, மனிதகுலத்தைப் பற்றி நம்பிக்கையற்ற நிலைப்பாட்டின் மூலம் இருவரும் கீழ்க்கண்ட வினா விடைக்கு வருகின்றனர் (இதைத்தான் பைனான்ஸியல் டைம்ஸ் நேஷனின் திகைப்பிற்கு சான்று என சரியாக மேற்கோளிடுகிறது): "இந்த நிலைமையில் நீண்ட கால உயிரியல் ரீதியாகவும், அன்றான பொருளாதார வாழ்வும் ஐயத்திற்கு உட்பட்டிருக்கையில், ஒரே பொருத்தமான வினா இதுதான்: மக்களே, நம்மிடையே ஒரு திட்டம் உள்ளதா?...இதை மேசையில் இருந்து அகற்றுவோம் : இல்லை, நம்மிடம் இல்லை."

மேலும் தங்கள் அரசியல் முன்னோக்கை தெளிவாக்கும் விதத்தில் Ehrenreich, Fletcher இருவரும் ஒற்றுமை உணர்வை மீண்டும் கொண்டுவர வாதிடுகின்றனர், அது "பழைய கருத்து என்றாலும்", அது "ஒபாமா பிரச்சாரத்தின் ஆற்றல் மற்றும் அடையாளத்தில் சிறகடித்து உயிர்த்து எழுந்தது" என்று கூறுகின்றனர்.

மற்ற கட்டுரையாளர்கள் இதுவரை பெரிதும் குழப்பம் அடைந்துள்ள (சமூக அறிவியல் வாதி இமானுவல் வாலெர்ஸ்டின் மற்றும் நகரக் கோட்பாட்டாளர் மைக் டேவிஸ் வரை) வகை முதல் உண்மையில் தெளிவற்று அரசியல் நிலைப்பாட்டில் சந்தேகங்களை கொண்டவர்கள் வரை (முன்னாள் இடதுசாரி டாரிக் அலி) உள்ளனர்.

பெரும்பாலான கட்டுரைகள் சோசலிசம் பற்றி அதிகம் குறிப்பிடவே இல்லை. ஸ்கேபிங்கர் பைனான்சியல் டைம்ஸில் சுட்டிக் காட்டியுள்ளபடி, "மற்றொரு கட்டுரையாளரான Rebecca Solnit "தோட்டங்கள், குழந்தைக் காப்பு இல்லங்கள், சைக்கிள் சந்துகள், உழவர்கள் சந்தைகள்" என்று தெரிவிக்கிறார், ஆனால் இவை செயல்கள், திட்டங்கள் இல்லை. சிலர் நிலத்தடி எரிபொருட்கள் மீது குறைந்த அளவு நம்பியிருக்கும் பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டிய முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிடுகின்றனர்; ஆனால் இப்பொழுது அதை நம்புவதற்கு நீங்கள் ஒன்றும் முதலாளித்துவ எதிர்ப்புவாதியாக இருக்க வேண்டியதில்லை."

நேஷனின் ஆசிரியர்கள் சோசலிசம் பற்றி மறுசிந்தனைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறப்படும் தொடரில், சோசலிசம் பற்றிய சிந்தனையையே அவநம்பிக்கை கொண்டுள்ளவர்களையும் சேர்த்துள்ளனர்.

சுற்றுச் சூழல் ஆர்வலர் பில் மக்கிப்பென், "நான் அதிக சோசலிசவாதி என்று நினைக்கவில்லை" என்று ஒப்புக் கொண்டுள்ளார் பொருளாதார பேராசிரியர் ரோபர்ட் போலின் "என்னுடைய பார்வையில் சோசலிசம் இன்று உருவாகுதல் என்பது உண்மைக்கு புறம்பானது" என்று வாதிட்டுள்ளார். மேலே கூறப்பட்ட சோல்நிட், நமக்கு "அடித்தளத்தில் இருக்கும் பார்வை அரசாங்க சோசலிசமோ, பெருநிறுவன முதலாளித்துவமோ அல்ல; ஆனால் மனிதாபிமானம் உடையதாக, உள்ளூர் சார்ந்த, பொறுப்பு கூற வேண்டிய அமைப்பு ஆகும்" என்று குறிப்பிடுகிறார். Hunffington Post உடைய Saskia Sassen "ஒரு முதலாளித்துவத்திற்கு பிந்ததைய சமூகத்திற்கான திட்டம்.... அநேகமாக முடியாத கருத்து எனலாம்" என்று கூறுகிறார்.

பெரும்பாலான கட்டுரையாளர்கள் ஏதேனும் ஒரு விதத்தில் சமூகச்சீர்திருத்த வாதிகள் ஆவர்; இடது Business Observer ஆசிரியர் Doug Henwood கருத்தால் இலக்கு "பொதுநல அரசு என்பதைவிட கூடுதலான நாகரிகம் கொண்டது" என்பதைப் பகிர்ந்து கொள்ளக் கூடியவர்கள். அதேபோல் கட்டுரையாளர் Christian Parenti தற்பொழுதைய சமூகத்தில் உலவிவரும் பேயுரு "முதலாளித்துவத்தின் புரட்சிக Gotterdammerung அல்ல, வளர்ச்சிமுறை சீர்திருத்த சோசலிச வாதத்தின் தந்தை நயமான எடுவர்டு பெர்ன்ஸ்டைன் உடைய ஆவிதான்." என்று நகையாடும் முறையில் கூறியுள்ளார்.

அதிக "இடது" கட்டுரையாளர்கள், தென்னமெரிக்காவில் உள்ள "புதிய தாராள ஒழுங்கிற்கு அறைகூவல் விடும் சமூக இயக்கங்கள்" தேவை என்கின்றனர் (Tariq Ali): அதாவது பல இடது பேசும் முதலாளித்துவ ஆட்சிகளான வெனிஜூலா, பொலிவியா, ஈக்வடார், பராகுவே போன்றவற்றில் இருக்கும் நிலை. முன்னாள் போலி ட்ரொட்ஸ்கிச ஐக்கிய செயலகத்தின் தலைவரான அலி, அமெரிக்க கார் மற்றும் விமானத் தொழில்கள் சிதைவதை விரும்புகிறார்: "இந்தவழிவகை மில்லியன் கணக்கான மக்களுடைய வாழ்வை பேரழிவிற்கு உட்படுத்தும்" ; அதையொட்டி ஒரு பொது போக்குவரத்து முறை கட்டுமைக்கப்படலாம்; அது சுற்றுச்சூழலுக்கு இயைந்து இருக்கும், இன்னும் திறமையான இரயில் போக்குவரத்து என்றும் இருக்கலாம்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நேஷனில் கட்டுரை அளித்தவர்களில் எவரும் ஒபாமாவைக் குறைகூறவில்லை; ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. தற்பொழுதைய உலக பொருளாதார நெருக்கடி பற்றித் தீவிரப் பகுப்பாய்வை எவரும் கொடுக்கவில்லை. எவரும் "சோசலிசத்தை மறுகற்பனை" செய்வதில் இருக்கும் வரலாற்றுப் பிரச்சினைகளில் முக்கியமானவை பற்றி ஆராயவில்லை; அதாவது ரஷ்ய புரட்சி, ஸ்ராலினிசத்தின் தோற்றம், சீன மற்றும் கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகளின் தன்மை, சோசலிசத்தில் தேசியத்திற்கும் சர்வதேசியத்திற்கும் இடையே உள்ள பிளவு, போன்றவற்றை ஆகும்.

நேஷன் ஒரு உறுதியான சமூக, அரசியல் பிரிவில் இருந்து அதற்காகப் பேசுகிறது: பழைய இடது சாரிகள், முன்னாள் ஸ்ராலினிசவாதிகள், முன்னாள் சீர்திருத்த வாதிகள் --அனைவரும் சீராக ஒன்றில்தான் உள்ளனர்; அமெரிக்க நடைமுறையில் இருந்து உண்மையான அரசியல் சுயாதீனம் அவர்களுக்கு கிடையாது. இந்த ஏட்டில் அவநம்பிக்கையின் துர்நாற்றம், கோழைத்தனம் மற்றும் தீவிரமற்ற தன்மை ஆகியவைதான் உள்ளன.

இதழ் பதிப்பின் தலைக்கட்டு, பெருமையுடன் "1865 முதல்" என்று அறிவிக்கிறது. உண்மையில் நேஷனுடைய வரலாறு வருந்தத்தக்கது ஆகும். ஒரு முதலாளித்துவ பதிப்பாக அது துவக்கப்பட்டது; அமெரிக்கத் தாராளவாதத்தின் குரலாக. இப்பதிப்பு ஒரு சோசலிச தொழிலாளர் இயக்கம் வெளிப்படுவதற்கு ஆழ்ந்த விரோதப் போக்கைக் காட்டியது; பாரிஸ் கம்யூனைக் கண்டித்தது; ஹேமார்க்கெட் அராஜகவாதிகளைத் தூக்கிலட வேண்டும் என்று வாதிட்டது. 1881 முதல் 1918 வரை இந்த ஏடு நியூ யோர்க் ஈவினிங் போஸ்ட்டின் ஒரு இணைப்பு போல் வெளிவந்தது; இதன் "முற்போக்கு" உட்ரோ வில்சன் நிர்வாகத்தில் தன்னைக் களைப்படையச் செய்து கொண்டது.

அமெரிக்க தாராளவாதம் முற்றிலும் இருக்கும் நிலையைப் போல், நேஷனும் பெரு மந்த நிலை வந்தததற்கு முழுவதும் தயாரிப்பற்ற நிலையில் இருந்தது; தன்னுனடைய சுயாதீன திட்டம் ஏதும் இல்லாத நிலையில், தான் உயிர் வாழ்வதற்கு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஸ்ராலினிச சோவியத் அதிகாரத்துவத்திடம் இணைபிரியாமல் நின்றது. Freda Kirchwey உடைய ஆசிரியர் பொறுப்பின்கீழ், நேஷன் மிக இகழ்வுடன் மாஸ்கோ விசாரணைகளை ஆதரித்தது; கணக்கிலடங்கா ஸ்ராலினிசத்தின் குற்றங்களுக்கும் ஆதரவு கொடுத்தது; ஆகஸ்ட் 1936ல் அறிவித்தது: "ரஷ்யாவில் சர்வாதிகாரம் மடிந்து கொண்டிருக்கிறது, ஒரு புதிய ஜனநாயகம் மெதுவாகத் தோன்றிக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை."

1930களில் இது கொண்டிருந்த பங்கை இந்த ஏடு மீண்டும் கொள்ளாது; நேஷனின் மிக நீடித்த புகழுக்கான செயல் அதைப் பற்றி லியோன் ட்ரொட்ஸ்கி கீழே உள்ளதைக் கூறியதாகும்: ("The Priests of Half-Truth"-1938). "அவர்களுடைய தத்துவம் அவர்களுடைய உலகத்தைப் பிரதிபலித்தது. அவர்களுடைய சமூக இயல்பை ஒட்டி அவர்கள் அறிவார்ந்த முறையில் பகுதி முதலாளித்துவத்தினராக இருந்தனர். அவர்கள் அரைகுறை சிந்தனைகளில் வளர்ந்து அரைகுறை உணர்வுகளை கொண்டிருந்தனர். சமூகத்தை சீராக்கவும் அரைகுறை நடவடிக்கைளை விரும்புகின்றனர். வரலாற்று வழிவகையை உறுதியற்ற நிகழ்வு என்று கருதிய நிலையில் அவர்கள் 50 சதவிகித தீவிரம்தான் கொண்டுள்ளனர். இவ்விதத்தில் இம்மக்கள், அரைகுறை உண்மையில் வாழும் நிலையில், அதாவது மோசமான தவறான கருத்தின் அடிப்படையில் வாழ்கையில், உண்மையான முன்னேற்றத்திற்கு, அதாவது புரட்சிகர சிந்தனைக்கு உண்மையான தடையாகிவிட்டனர்."

ஏழு தசாப்தங்களுக்கு முன்பு ட்ரொட்ஸ்கி தெளிவாகக் கூறியதை அடுத்து இது ஒரே சரிவாகத்தான் உள்ளது என்றும் கூறவியலும்!